ஜோதிடர்களின் வாக்கை சித்திக்க வைக்கும் பழனி தொட்டிச்சி அம்மன்..
ஜோதிடர்களுக்கு தேவை ஞானமும் அந்தக் கல்விக்கு தேவையான ஓலைச்சுவடி குறிப்புகளும் தேவை. வலது கரத்தில் ஞானத்தின் வடிவான தாமரை மலரும் இடது கரத்தில் ஓலைச்சுவடியையும் வைத்துக் கொண்டு அருள் பாலித்து கொண்டு இருக்கும் இந்த பழனி தொட்டிச்சியம்மன் வழிபாடு செய்தாலே ஜோதிடர்கள் வாக்கு சித்தி பெறலாம்.
இந்தத் தொட்டிச்சி அம்மாவின் கதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொட்டிச்சி அம்மன் குறி சொல்லும் குலத்தில் பிறந்த ஒரு தெய்வமகள். பழனி அடிவாரத்தில் புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி அருகில் இந்த ஆலயம் உள்ளது.
காலம் கடந்து கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக புலிப்பாணி பெயரும் போகர் பெயரும் மருத்துவம் ஆன்மீகம் ஜோதிடம் என அனைத்து விதத்திலும் இவர்கள் பெயர் காலம் கடந்து நிற்க காரணம் என்ன. எல்லை தெய்வம் என்று சொல்லக்கூடிய இந்த தொட்டிச்சி அம்மன் தான் காரணம்.
திருவாவினகுடியில் முருகன் கோபித்துக் கொண்டு வந்து கோவில் கொண்டது உலகம் அறிந்தது. அன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் யார் அறிவார்கள். வீடு வீடாகச் சென்று குறி சொல்லும் வீட்டு மகளாக பிறந்து முருகனின் பெருமையை சேர்த்தவள் தான் இந்த தொட்டிச்சி அம்மன்.
குறி சொல்லும் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான் ஆவார். இந்தத் தொட்டிச்சி அம்மன் ஆணையிட போகர் அவர்கள் பழனியில் நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்தது குறிப்பிடத்தக்கது என்பது இவை நான் அங்கு அறிந்து கொண்டது.
இன்று நாம் ஜோதிடம் சொல்கிறோம் பலன் சொல்கிறோம் நம்ம ஜோதிடத்திற்கு முன்னோடி குறி சொல்பவர்களே ஆவார்கள். அவர்களுக்கு இந்த ஞான மார்க்கத்தை வழங்கியது முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானை இன்று உலகறிய செய்தது இந்த குறி செல்லும் குல பெண்கள் ஆவார்கள்.
தொட்டிச்சி அம்மனுக்கும் செவ்வாய்க்கும் என்ன சம்பந்தம். பழனி முருகனை செவ்வாய் என்கிறோம். முருகன் கோபித்துக் கொண்டு வந்தது கோபம் என்பது செவ்வாய் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அடர்ந்த வனப்பகுதியில் வேள்வி யாகம் செய்யக்கூடியவர் தான் இந்த செவ்வாய் பகவான். செவ்வாயின் அதிதேவதை துர்க்கை பத்திரகாளி வனதேவதை என்று சொல்லலாம். அதில் ஒருவர் தான் இந்த தொட்டிச்சி அம்மன். ஒரு காலத்தில் அதாவது நவீன வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் பழனி சுற்றிய பகுதி அனைத்துமே வனப்பகுதியாகத்தான் இருந்தது. பெரும்பாலும் குறி சொல்பவர்களுக்க நிரந்தர இடம் என்பது கிடையாது. ஆதிகாலத்தில் இருந்தே எல்லை தெய்வமாக இருந்த இந்த தொட்டிச்சி அம்மன் ஜோதிடத்திற்கும் ஜோதிடர்களுக்கும் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. தொட்டிச்சி அம்மன் சாந்த சொரூபமாக நாம் பழனியில் பார்க்கிறோம். பல ஊர் இடங்களில் இது அம்மன் செவ்வாயின் தன்மை கொண்டு உக்கிரமாக இருப்பதை அறியலாம்.
நம்ம ஒரு பெண்ணை ஊர் பெயருடன் அழைத்துச் செல்லும் பொழுது உதாரணமாக பழங்காவேரி என்ற ஊர் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஊரில் இருக்கும் பெண்களை பழங்காரியான் என்று அழைப்பார்கள். இதே போல பல ஊர்களின் பெயர் மருவி அந்த நபர்களை அழைப்பது வழக்கம். தொட்டிச்சி என்ற பெண் தொட்டியம் மதுரை காளி அம்மன் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்ணும் மதுரையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதன் அடிப்படையில் தொட்டியம் அம்மனை தொட்டிச்சி அம்மன் என்று அழைப்பது மரமாக இருந்திருக்கலாம். காலப்போக்கில் நாளடைவில் மருவி வருவது தானே இன்றைய நிலைமையில் உள்ளது.
நவீன காலத்தில் ஜோதிடத்தில் எவ்வளவு பெரிய ஜோதிட ஞானியாக இருந்தாலும் அக்குவேராக ஆணிவேராக ஜாதகத்தை பிரித்து பலன் கூறினாலும் அடுத்து இன்னது தான் நடக்கப் போகிறது என்று தீர்மானித்து சொல்ல இந்த தொட்டிச்சி அம்மன் கடைக்கண் பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
No comments:
Post a Comment