☘சிவ சித்தாந்தம்☘
🍃ஶ்ரீ பேச்சியம்மன் வரலாறு🍃
முன்னொரு காலத்தில் வல்லாளன் என்ற அரசன் தனக்கு சகல வல்லமையும் உலகை ரக்ஷிக்கும் உத்தம பிள்ளை வரம் கேட்க விரும்பி ப்ரமனை நோக்கி தவம் செய்தான் தவத்திற்கிரங்கிய பிரமன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக்கேட்க உலகை ரக்ஷிக்கும் மகன் வேணுமெனக்கேட்க பிரமனும் அப்படியே வரம் தந்தோமென கூறி மறைந்தார். சில காலத்தில் வல்லாளின் மனைவி கருவுற்றாள் இதனையறிந்த தேவர்கள் முனிவர்கள் எல்லாம் கூடி, கருவில் உள்ள சிசு பிறந்து வளர்ந்தால் உலகத்தையும் நம்மையும் அழித்துவிடுவான். என வருந்திட அதனையறிந்த சரஸ்வதி தன் கணவனான பிரமதேவனால் தந்த வரத்திற்கு பரிகாரம் தேட விரும்பி, மிகுந்த கோபத்துடன் சென்று அந்த வல்லாளனை தன் காலினால் மிதித்துக்கொண்டு அவன்
மனைவியை தன் மடியில் கிடத்தி அவள் கர்ப்பத்தில் உள்ள சிசுவை எடுத்து அவள் குடலை மாலையாக அணிந்து பேச்சி காளியாக விளங்கினாள் அதுமுதல் அவள் தீயவர்களை அழித்தும் நல்லவர்களை காத்தும் வரும் பேச்சியாயி ( வாகீஸ்வரி ) என்று மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
வரலாறு இவளை கிராம தேவதையாக ஶ்ரீமாரியம்மன் கோயிலில் தனிக்கோயிலாகவும் வைத்து வழிபட்டு வரலாயினர் இவளுடைய தோற்றம் மிக பயங்கர வடிவத்தில் உள்ளது இவளுடைய வடிவத்தை ஆகம தியான சுலோகம்பின்வருமாறு கூறுகிறது.
🌿ஶ்ரீ பேச்சியம்மன் தியானம்
🌿ரக்த வர்ணாம் த்விபுஜாம் கோரவக்தராம் திரிநேத்ரகாம்
குந்தனம் ஊர்த்துவகேசஞ்ச ஆஸ்யோத் கடந ஸம்யுதாம்
🌿சுஷ்கோதரஞ்ச ஜங்கோர்த்வே ஸூஷ்மவஸ்திராங்க பூஷணாம்
பாதாந்தே வல்லாளேந்திரஸ்ய தத்பத்னீஞ்ச த்விஹஸ்தகே
🌿தத்பூர்ண கர்ப்ப பேதிந்யாம் அந்த சுசிகரோஸ்திதாம்
தஸமாம்ஸஞ்சருதிரம் ஸவ்ய ஹஸ்தேன பக்ஷணீம்
🌿ஸர்யேது க்ஷூ ரிகம் சைவ பத்மம் சக்ரஞ்ச தண்டகாம்
வாமே டமரு கேடஞ்ச ஜம்படம் சங்கரஞ்ச வச
🌿மஹாகண்டா ஸம்யுக்தாம் சூலம் ப்ரஹாரமேவச
இத்யேசம் கோர ரூபந்து பேச்சிகாளிம் விபாவயே
🌿பார்வதியின் கோபவடிவமே காளியாகும்
சரஸ்வதியின் கோப வடிவமே பேச்சி ( காளி ) ஆயி
பேச்சி ( வாக்குக்கு அதிபதி சரஸ்வதி ) க்கு ஆயி (தாய்) பேச்சிஆயி
🌿ஓம் ஐம் க்லீம் ஐம்
வாகீஸ்வர்யை நம
🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🔥🔥
☘சிவ சித்தாந்தம்☘

No comments:
Post a Comment