Wednesday, 25 March 2026

திருக்கொள்ளிக்காடு

 


கல்யாண சுந்தரேஸ்வரர் அச்சுதமங்களம்


 



வழிவிடும் குழந்தை வேலாயுதசாமி மூ

 தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் மலை ஏற்றத்தில் உள்ள அருள்மிகு வழிவிடும் குழந்தை வேலாயுதசாமி மூலவர் தரிசனம்.




Tuesday, 24 March 2026

உதயகிரி குடவரை

 


திருவண்ணாமலை கோவிலில் ஒரு அதிசய விருட்சம்

 திருவண்ணாமலை கோவிலில் ஒரு அதிசய விருட்சம் 



Monday, 23 March 2026

சொல்லும் கொல்லும்

 



அதியமான் கோட்டை கால பைரவர்

 

இந்த கோவில் தட்சிணாசி காலபைரவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது, இது கால பைரவருக்கு ஒரு பழமையான, அரிய ஆலயமாகும், இது ராகு காலத்தின் போது பூசணிக்காய் விளக்குகளை ஏற்றுதல் மற்றும் அதன் சக்திவாய்ந்த ஆசீர்வாதங்களுக்காக பக்தர்களை ஈர்க்கிறது, குறிப்பாக அஷ்டமி நாட்களில்.

முக்கிய விவரங்கள்:
இருப்பிடம்: அதியமான்கோட்டை, தர்மபுரி-சேலம் NH அருகில், தருமபுரியிலிருந்து சுமார் 7-8 கி.மீ.

முக்கியத்துவம்:
இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய காலபைரவர் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது (மற்றொன்று காசியில் உள்ளது), இது தட்சிணகாசி (தெற்கு காசி) என்ற பெயரைப் பெற்றது.

தெய்வம்:
காலபைரவர் (குறிப்பாக மந்திர பைரவர்).

வரலாறு: 1200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில், அதியமான் மன்னர்களால் கட்டப்பட்டது.
தனித்துவமான அம்சங்கள்:
நவக்கிரக சன்னதிக்கு பதிலாக கிரகங்களைக் குறிக்கும் 9 ஜாதக சதுரங்களைக் கொண்ட கூரை.
ராகு காலத்தின் போது ஒருவரின் ராசிக்கு ஏற்ப தெய்வத்தின் வெவ்வேறு உடல் பாகங்களை மையமாகக் கொண்டு, பூசணிக்காய் மற்றும் தேங்காய்ப் பாதிகளில் விளக்குகளை ஏற்றி வைப்பது ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையாகும்.
புனித மரமாக (ஸ்தல விருக்ஷம்) ஒரு 'வில்வ' மரம் இடம்பெற்றுள்ளது.
திருவிழாக்கள்: அஷ்டமி (எட்டாம் நாள்) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக கூட்டத்தை ஈர்க்கிறது, பௌர்ணமி நாட்களில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள், சொர்ண

 குபேர பூஜை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம்.

34GC+QP9, Bypass, Adhiyaman Kottai, Salem, Dharmapuri, Tamil Nadu 636807

https://maps.app.goo.gl/LhsdfDWxHqPixGh7A



திருவண்ணாமலையில் சுவற்றில் கேட்கும் ஓம்கார நாதம்

 




ஆழ்வார் திருநகரி

 






Sunday, 22 March 2026

அன்னி மிஞிலி

 அன்னி மிஞிலி [Anni minjili]: பழிக்கு பழி வாங்க போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]":

 
 
"முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!"[அகநானூறு 262]
 
அன்னி மிஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய பெண். இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார். அந்த நஞ்சை நிலத்தில் பல எருதுகளை ஒன்றாய் பூட்டி உழுவு செய்தார். அப்படி உடல் வலிக்க உழவு வேலை செய்யும் போது, ஒரு நாள் அவருடைய மாடு, பக்கத்து பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள பயிரை மேய்ந்து விட்டது. நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன். மன்னனுக்கு வேண்டியவன். கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்னி மிஞிலியின் வாய்மை தவறாத தந்தை, தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்க்காக ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் . ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு தீர்ப்பளித்து விட்டான். இதனால் அவன் பெரும் குற்றம் [“நவை”] செய்து விட்டான் . கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர்.
 
பார்வை போனது தந்தைக்கு! . அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மிஞிலி துடிச்சாள்; அப்பாவின் கண்ணைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும் சூள் உரைத்தாள்!  சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள்.
 
இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை உறிய முறையில் உண்ண மறுக்கிறா; ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி.. ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க… ஆனா அழகான ஆடை கூட உடுக்க மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது?

சூளை எப்படி நிறைவேற்றுவது? அவளோ எளிய முல்லை நிலப் பெண்; ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால் சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய, பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் திதியனிடம் தன் தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள். அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த சிற்றரசர் திதியன் - அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள் பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்; சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்; கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி… அவளும் தன் வஞ்சினம் முடித்தாள்.

அம்பலப்பாடி மகாகாளி ஆலயம், உடுப்பி, கர்ணாடகம்


Temple maintenance good
Ample parking space nearby
The history of Ambalapadi is older than the Udupi Sri Krishna Matha itself. According to local lore and the Skanda Purana:
​The Protector of the Region: Originally, the region was a dense forest. Goddess Mahakali is said to have manifested here first to protect the land from evil forces.
​The Arrival of Lord Janardhana: Legend says that Lord Janardhana (a form of Vishnu) came to Ambalapadi in search of Goddess Mahakali. Finding her here, he decided to stay to provide "Abhaya" (protection) to his devotees.
​The "Mother-Brother" Relationship: In local tradition, Lord Janardhana and Goddess Mahakali are worshipped with the sentiment of being siblings, working together to safeguard the town of Udupi.




Saturday, 21 March 2026

ஸ்வயம்பு நரசிம்ம ஸ்வாமி சூழகிரி, ஹோசூர்

 https://maps.app.goo.gl/pgBcixohYbAMepii9


Swayambu Narasimha Swamy near soolagiri Tamilnadu... samprokshanam done recently... very powerful narasimhar...located in a calm village... still construction work is going on...

Don't miss to visit the temple if you are nearby Soolakiri




செண்பகத்தோப்பு காட்டழகர் பெருமாள்

 *அதிசியங்கள் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் பெருமா


ள்...!!*💐


பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். 


அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். 


அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது.


பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு காட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. 


இங்கு சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராஜப் பெருமாளைத் தரிசிக்கலாம். 


மலைமீதுள்ள இக்கோவிலுக்கு செல்ல 247 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 


இந்த படிகட்டுகள் தமிழ் எழுத்துகள் 247-ஐ உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.


மேலும் இந்த மலை மீது சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் இருக்கிறது. 


இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும். 


அந்த நீரூற்றின் நீர் கீழ்நோக்கி மட்டுமே செல்கின்றது. அக்காட்சி காண்பவர் மனதை கொள்ளை கொள்கின்றது. 


கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


மலைகளே மாலவனாய்! செண்பகத்தோப்பு காட்டு அழகர் கோயில்!


சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ


பல வண்ணங்களைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், தங்களுடைய சிறகுகளிலிருக்கும் வண்ணங்களைத் தூவியபடி பறந்து திகழும் திருமாலிருஞ்சோலையில் திகழும் இறைவன், மந்தார மலை கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் போன்ற திருமகளைக் கொண்டவர், அழகிய தோள்களையுடைய அழகர். அவர் மீதான காதலில் அகப்பட்டுவிட்டேன். அதிலிருந்து எப்படி மீள்வேன்.


இப்படி, ஆண்டாள் பாடிச் சிறப்பித்த திருமாலிருஞ் சோலை இறைவன் கள்ளழகரின் மகிமையை எல்லோரும் அறிவோம். 


இவரைப் போன்றே, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் செண்பகத்தோப்பு எனும் பகுதியில் மலை மீது கோயில் கொண்டிருக்கும் காட்டழகரைப் பற்றி அறிவீர்களா?


ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு; மலையடிவாரப் பகுதி. 


அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் மலைப் பாதையில் பயணித் தால் காட்டழகர் கோயிலை அடையலாம். 


அப்படிப் பயணிக்கும்போது,  திருமாலிருஞ்சோலைக்கு எவ்விதத்திலும் இளைத்ததல்ல என்று, தனது வனப்பாலும் இயற்கை எழிலாலும் நிரூபிக்கிறது செண்பகத்தோப்பு மலைப்பகுதி.


பல வண்ணக் கலவையோடு சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், கிளைக்குக் கிளை தாவி குதியாட்டம் போடும் குரங்குகள், கம்பீரமான காட்டு மாடுகள், வானுயர்ந்து நிற்கும் மரங்கள், குளிர்ந்த நீரோடைகள், சுனைகள் ஆகியவற்றை ரசித்தபடியே நாம் மலையேறிக்கொண்டிருக்க, உடன் வந்த அன்பர் ஒருவர், காட்டழகர் கோயிலின் திருக்கதையைக் கூறத் தொடங்கினார்.


முற்காலத்தில், மதுரை அழகர் மலையில் தங்கியிருந்த சுதபா முனிவரைப் பார்ப்பதற்காக துர்வாசர் முனிவர் வந்திருந்தார். 


அவரின் வருகையைக் கவனிக்காமல், நீருக்குள் மூழ்கி பெருமாளைக் குறித்த தியானத்தில் ஆழ்ந்திருந்தார் சுதபா முனிவர். 


வெகுநேரம் காத்திருந்து பொறுமை இழந்த துர்வாசர், ‘‘என்னைக் கவனிக்காமல் நீருக்குள் அமிழ்ந்துகிடக்கும் நீர், மண்டூகமாக மாறக்கடவது’’ என்று சபித்துவிட்டார். 


மண்டூகம் என்றால் தவளை என்று பொருள்.


பின்னர், சுதபா முனிவர் தமது நிலையை விளக்கி விமோசனம் வேண்டினார். அவரிடம், “தர்மாத்ரி பர்வதம் வராக க்ஷேத்திரத்தில் பாயும் நூபுர கங்கையில் நீராடினால் சாபவிமோசனம் பெறுவீர்” என்று கூறினார் துர்வாசர்.


ஆனால்  சுதபா முனிவரோ,  “அழகர் மலையின் அருவியில் நீராடி பெருமாளை வழிபடுவதை எனது ஆயுள் விரதமாகக் கொண்டிருக்கிறேன். 


அப்படியிருக்க, நான் எப்படி நூபுர கங்கைக்குச் செல்வது?’’ என்று வருந்தினார். 


இந்த நிலையில், அழகர் மலையில் வசித்த வசிஷ்டர், பரத்வாஜர், ஆர்ட்டிசேனர் முதலிய ரிஷிகள் அவருக்கு ஒரு வழி சொன்னார்கள்.


“அழகர் மலையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அருவி, நூபுர கங்கையுடன் இணையப்போகிறது. அந்த இடத்துக்குச் சென்று நீராடலாம். 


அதனால், உனது விரதத்துக்கும் பங்கம் ஏற்படாது; அழகரின் திருவருளையும் பரிபூரணமாகப் பெறலாம்’’ என்றார்கள்.


அதன்படியே, சுதபா முனிவர் வராக க்ஷேத்திரம் எனப்படும் இந்தக் காட்டு அழகர் மலைக்கு வான்வழியாகவே வந்துசேர்ந்தார், 


இங்கே நூபுர கங்கையில் நீராடி சாபமும் நீங்கப்பெற்றார்.


அவருக்குக் காட்சியளித்த அழகரும் இங்கேயே கோயில்கொண்டு, காட்டு அழகர் என்று திருப்பெயர் பெற்றார். 


*இப்போதும் கோயிலில், பெருமாளை வழிபட்ட நிலையில் காட்சி தருகிறார் சுதபா முனிவர்.*_🌺


Shared post

Friday, 20 March 2026

கம்பிளி மகாலிங்க மலை

 தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியில் உள்ள மகாலிங்க மலை பற்றிய கூடுதல் சுவாரஸ்யமான தகவல்கள் :


வரலாறு மற்றும் சித்தர்கள் தொடர்பு

• பண்டைக்கால வழிபாட்டு முறை: 

பழங்காலத்தில் சித்தர்கள் இந்த மலையின் உச்சியில் உள்ள ஒரு கல் குகையில், பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை பூஜித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

• அருணாச்சல சித்தர்: தற்போதைய கோயில் அமைப்பு அருணாச்சல சித்தர் வழியில் வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி (பங்குனி உத்திரம் அன்று) இங்கு மகாலிங்க சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

• அரூப வழிபாடு: இன்றும் சுமார் ஆறு சித்தர்கள் இங்கு அரூபமாக (உருவமில்லாமல்) சிவனை வழிபட்டு வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மலைப்பாதையில் காணப்படும் ‘ஆட்டுரல்கள்’ சித்தர்கள் அக்காலத்தில் மூலிகை மருந்து தயாரிக்க பயன்படுத்தியவை என்று சொல்லப்படுகிறது.

மலையின் சிறப்பம்சங்கள்

• ஔவை குகை: மலையில் உள்ள ஒரு குகைக்குள் ஔவை கோவில் உள்ளது. இங்கு பெண்கள் மட்டுமே சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

• இயற்கை லிங்கங்கள்: மலையின் உச்சியில் உள்ள பாறைகள் இயற்கையாகவே லிங்க வடிவில் காட்சியளிப்பது இந்த மலையின் தனிச்சிறப்பு.

• ஜீவசமாதி மற்றும் தீர்த்தம்: மலையின் அடிவாரத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதியும், வற்றாத ஒரு தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளது.

பயணத் தகவல்கள்

• அமைவிடம்: தென்காசி - ஆய்க்குடி சாலையில், ஆய்க்குடியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கம்பிளி கிராமத்தில் இந்த மலை உள்ளது.

• நடைப்பயணம் (Trekking): மலை உச்சியை அடைய பாறைகளால் ஆன படிக்கட்டுகள் மற்றும் கரடுமுரடான பாதைகளில் ஏற வேண்டும். இது ஒரு சிறிய அளவிலான மலையேற்ற அனுபவத்தைத் தரும்.

• சிறப்பு நாட்கள்: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, மகா சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்புப் பூஜைகளும் அன்னதானமும் மிக விமரிசையாக நடைபெறுகின்றன.

• நேரம்: வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், மாலை 6 மணிக்கு மேல் அங்கு இருக்க அனுமதி இல்லை. எனவே காலையிலேயே செல்வது சிறந்தது.

தென்காசி மாவட்டத்தின் இயற்கை அழகையும் ஆன்மீகத்தையும் ஒருசேர அனுபவிக்க விரும்பும் உங்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

.

.


Sri Mahankaleshwara Temple శ్రీ మహంకాలేశ్వర ఆలయం


 https://maps.app.goo.gl/s65FN5mKmrtZ1Ncc8

Sri Mahankaleshwara Temple

శ్రీ మహంకాలేశ్వర ఆలయం

நந்தி பகவான் விலகி நின்ற தலம்


 மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் நந்தி பகவான் விலகி நின்ற தலம் ஆகும். திருநாளைப் போவார் (நந்தனார்) சிவனை தரிசிக்க வந்தபோது, அவருக்கு இடையூறாக இருந்த நந்தியை, இறைவன் அருளால் சிறிது விலகியிருக்கச் செய்த தலமாகக் கருதப்படுகிறது.

  • சிறப்பு: நந்தனார் நாயனார் சிவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, ஈசனின் ஆணையின்படி நந்தி விலகி நின்று வழிவிட்டது.
  • அமைவிடம்: மயிலாடுதுறைக்கு அருகில், திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது.
  • தொடர்புடையவர்: நந்தனார் நாயனார்.
  • திருத்தலம்: இது தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 20-வது தலம் ஆகும்.

திருமீயச்சூர்

 ★★★★ஷேத்ராடணம்★★★★


திருத்தலம் 27


அனைத்து அன்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்    ஷேத்ராடணம் என்னும் பதிவில் இன்று நாம் செல்ல இருக்கும் திருத்தலம் திருமீயச்சூர்


மூலவர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் ), புவனேஸ்வரர்


உற்சவர் : பஞ்சமூர்த்தி


அம்மன்/தாயார் :  லலிதாம்பிகை, 

சவுந்திரநாயகி, மேகலாம்பிகை


தல விருட்சம் :  மந்தாரை, வில்வம்


தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : திருமீயச்சூர்


ஊர் : திருமீயச்சூர்


மாவட்டம் : திருவாரூர்


பாடியவர்கள்: 


அப்பர் திருஞானசம்பந்தர்


தேவாரப்பதிகம்:


பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார் அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே. 

-திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 56வது தலம்.


திருவிழா: 


தைமாத ரதசப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும். 


தல சிறப்பு: 


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 119 வது தேவாரத்தலம் ஆகும். 


பொது தகவல்: 


கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.


பிரார்த்தனை 


        மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.


நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.


நேர்த்திக்கடன்: 


சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 


தலபெருமை: 


இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இது காளிதேவி பூஜித்த தலம்.


அருணனின் கதை:


சூரியனின் தேரோட்டி யார் என்றால் "அருணன்' என்பீர்கள். இவரது கதையை மியச்சூரில் தான் கேட்க முடியும். காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழிபட்டனர். கர்த்துருக்கு 1000 நாகங்கள் பிரந்தது.சிவ பெருமான் வினதையிடம் இரண்டு முட்டையை கொடுத்து பாதுகாக்கும் படி கூறினார் வினதையிடம் இருந்த  முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.


சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் "அருணோதயம்' என வழங்குவர் என்றும் அருள் செய்தார். அருணன் சிவபக்தனாக திகழ்ந்தான். சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து,  சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு "மேகநாதன்' என்ற பெயரில் அருளுகிறார். சுவாமியின் கருவறை விமானம் யானையின் பின் பக்கமான கஜப்பிருஷ்ட வடிவில் உள்ளது. இந்த விமானத்தின் மேல் மூன்று கலசங்கள் உள்ளன. சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் "மீயச்சூர்' என அழைக்கப்படுகிறது.


ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும்  உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர்   மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.


கிளியுடன் துர்க்கை: மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.


சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில், தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் ஆகியவற்றிலும், திருமியச்சூரிலும் உள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது. எட்டு கரங்களுடன் உள்ள இவளை "சுகப்பிரம்ம துர்க்கா தேவி' என்று அழைக்கின்றனர். "சுகம்' என்றால் "கிளி'. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். "சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சுலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று  வருவதைக் காணலாம்.


லலிதா நவரத்தின மாலை:  லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,"லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?''என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்," "பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,''என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,"லலிதா நவரத்தின மாலை' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.


இரண்டு லிங்கம்: இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக தி உண்டு என்பார்கள்.


சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.


கொலுசு காணிக்கை:  இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.


பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும். 


   தல வரலாறு: 


பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள்.  உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக "மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.


அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.


சிறப்பம்சம்: 


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.


திறக்கும் நேரம்: 


காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 


முகவரி: 


அருள்மிகு லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி திருக்கோயில், திருமீயச்சூர் - 609 405. திருவாரூர் மாவட்டம். 


போன்: 


+91-4366-239 170, 94448 36526


இருப்பிடம் :

மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் திருமியச்சூர் உள்ளது. மயிலாடுதுறையிலுருந்து பேரளத்திற்கு அடிக்கடி பஸ்வசதி உள்ளது.


அருகிலுள்ள ரயில் நிலையம் :

மயிலாடுதுறை.


அருகிலுள்ள கோவில்:


கூத்தனூர் சரஸ்வதி கோவில் 5கி.மீ தூரத்தில் உள்ளது.

Thursday, 19 March 2026

பித்ரு வழிபாட்டில் 108 பித்ரு நாமாவளிகள்

 முன்னோர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!


தொன்றுதொட்டு ஒவ்வொரு அமாவாசை தோறும் பித்ருக்களை நினைத்து வழிபடுவது இந்துக்களுடைய மரபு. அமாவாசையில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை.

மேலும் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்தால் தான் அடுத்தடுத்த சந்ததிகளும் தழைத்து ஓங்கும்.

ஒரு மனிதன் பெற கூடாத சாபங்கள் 2, ஒன்று – பித்ரு சாபம்!

இன்னொன்று – குலதெய்வ சாபம்!

இவ்விரண்டு சாபங்கள் நீங்க அமாவாசை பித்ரு வழிபாட்டில் 108 பித்ரு நாமாவளிகள் உச்சரிக்க வேண்டும்.

அவற்றை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் விசேஷ மகாலய  அமாவாசைகளில் மட்டும் கோவில்களில் திதி கொடுப்பது உண்டு. ஆனால் ஒவ்வொரு அமாவாசையும் வழிபட்டால் அதற்குரிய பலன்கள் அபரிமிதமாக இருக்கும்.

நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்க ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் வீட்டிலேயே கூட எளிய முறையில் எள்ளும், தண்ணீரும் முறையாக இறைத்து பித்ரு தர்ப்பணம் செய்து கொள்ளலாம். அப்பொழுது இந்த நாமாவளிகளை உச்சரித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

- ஓம்.

108 பித்ரு நாமாவளிகள்:

1. ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி!

2. ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

3. ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

4. ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

5. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

7. ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

8. ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

9. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

10. ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி! -

ஓம்..

11. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

12. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

13. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

14. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

15. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

16. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

17. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

18. ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

19. ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

20. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

21. ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

22. ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

23. ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

24. ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

25. ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

26. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

27. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

28. ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

29. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

30. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

31. ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

32. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

33. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

34. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

35. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

36. ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

37. ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

38. ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

39. ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

40. ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

41. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

42. ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

43. ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி!

44. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

45. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

46. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

47. ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

48. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

49. ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

50. ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

ஓம்...

51. ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

52. ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

53. ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

54. ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

55. ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

56. ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

57. ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

58. ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி!
59. ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி!

60. ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி!

61. ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி!

62. ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி!

63. ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி!

64. ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி!

65. ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி!

66. ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

67. ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

68. ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

69. ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

70. ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி!

71. ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

72. ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி!

73. ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

74. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

75. ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

76. ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

77. ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

78. ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

79. ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

80. ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

81. ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

82. ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

83. ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

84. ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

85. ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

86. ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

87. ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

88. ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

89. ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

90. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

91. ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

92. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

93. ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

94. ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

95. ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

96. ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

97. ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி!

98. ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

99. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

100. ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி!

பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்

101. ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி!

102. ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி!

103. ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி!

104. ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி!

105. ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி!

106. ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி!

107. ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி!

108. ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி! -

மிகவும் முக்கியம் இந்த சதா நாம வழிகள் கூறி முடித்தவுடன் கடைசியில் சர்வம் சிவார்ப்பணம் என்று முடிக்கவும் ஏனென்றால் சிவபெருமானுடைய அருளால் இந்த சர்வம் சிவார்ப்பணம் என்பது எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உமக்கே என்பதாகும் அவையால் இந்த சர்வம் சிவார்ப்பணம் கூறி இந்த முன்னோர்களுடைய அனுக்கிரகம் பெற்று சகல ஐஸ்வர்யத்துடன் நோய் நொடிகள் இன்றி வாழ்ந்து இவ்வுலகத்தில் நன்மைகள் செய்து பிறருக்கு உதவிகள் செய்து திருமூலர் சித்தர் யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்று வாழ்வோம்.

கோவிந்த செட்டியார்

 விவேகானந்தர் தன்னுடன் வந்த நண்பரின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஜோதிடர் கூறிய படியே, விவேகானந்தர் தன் மனதில் நினைத்திருந்த அத்தனையும் அப்படியே எழுதப்பட்டிருந்தன.


விவேகானந்தரின் தாயார் பெயர் புவனேஸ்வரி என்பது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்து, விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதும், அவர் மகா சமாதி அடைந்து விட்டார் என்பதும், எனினும் அவர் சூட்சம நிலையில் விவேகானந்தரைக் கவனித்து வருகிறார் என்பதும் எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக விவேகானந்தர் நினைத்த திபெத்திய மொழியில் உள்ள புத்த மத மந்திரமான " லாமாலா காப் சேகவா" என்பதும் சரியாக எழுதப்பட்டிருந்தது. கடைசியாக, உரையாடும் போது கூறிய, "ஓம் பகவதே வாசுதேவாயா " என்ற மந்திரச் சொல்லையும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஜோதிடர் காகிதத்தில் எழுதி வைத்திருந்தார்.

விவேகானந்தர் வியப்பின் எல்லைக்கேச் சென்று விட்டார் . மன வலிமை மிக்கத் தன் மனதை ஊடுருவிப் பார்த்ததோடு மட்டுமில்லாமல், ஒரு மணிநேரத்திற்குப் பின் தனக்குத் தோன்றப் போகிற மந்திரச் சொல்லையும் முன்கூட்டியே எழுதுவது என்றால் அது அதிசயமான ஆற்றல்தானே?

கோவிந்த செட்டியாரைப் பாராட்டி விட்டு விடை பெற்றார் விவேகானந்தர்.

இந்த அதிசய நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பரான ' கேத்ரி ' மன்னருக்கு 15- 2 -1893 அன்று ஒரு கடிதம் எழுதி, அதில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் விலாவாரியாக விவரித்திருந்தார். இந்தக் கடிதமும் விவேகானந்தர் மன்னருக்கு எழுதிய மற்றொரு கடிதமும் 'கேத்ரி' அரண்மனையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம்தான் இந்த அரிய செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

இதைவிட வியப்பான ஒரு நிகழ்ச்சி விவேகானந்தர் , ஜோதிடர் இருவரிடையேயும் நடந்த மற்றொரு சந்திப்பில் நடந்தது.

மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா சென்ற விவேகானந்தர், சிகாகோ சர்வமத சபையில் பேசி உலகப்புகழ் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய அவர் 1897 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பகோணம் நகருக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கே நடந்த கூட்டமொன்றில் அவர் வேதாந்தம் குறித்து உரை நிகழ்த்தினார்.

அந்தக் கூட்டத்தில், தான் முன்பு சந்தித்த ஜோதிடரான கோவிந்த செட்டியார் இருப்பதை விவேகானந்தரின் கூரிய கண்கள் கண்டு பிடித்துவிட்டன. சொற்பொழிவிற்கிடையே ஜோதிடருக்குச் சைகை காட்டி , தன்னைத் தனியேச் சந்திக்கும்படி தெரிவித்தார்.

அதேபோல, விவேகானந்தர் சொற்பொழிவாற்றி முடித்தபின், ஜோதிடர் வந்து விவேகானந்தரைச் சந்தித்தார்.

அவரை வரவேற்று உபசரித்த விவேகானந்தர் அவரிடம், "ஐயா, உங்களுக்கு அற்புதமான சக்திகள் இருக்கின்றன. அதன் மூலம் உங்களுக்குப் பேரும் புகழும், செல்வமும் கிட்டுகின்றன. ஆனால், நீங்கள் ஆன்மீகத்தில் ஒரு அடிகூட முன்னேறவில்லையே, எங்கே தொடங்கினீர்களோ அந்த இடத்திலேயேதான் நிற்கிறீர்கள். கடவுளை நோக்கி உங்கள் மனம் சிறிதளவு கூடச் செல்லாமல் இருக்கிறதே. இது சரியா?" என்றார்.

இதுவரை தனக்கிருந்த அதிசய ஆற்றலைப் பணத்திற்கும் புகழுக்கும் மட்டும் பயன்படுத்தி வந்த கோவிந்த செட்டியாரின் உள்ளத்தில் விவேகானந்தர் எழுப்பிய கேள்வி சாட்டையடியாக வந்து விழுந்தது. அது அவருடைய அகக்கண்களைத் திறந்து விட்டது. மறுநொடியே அவர் சுவாமி விவேகானந்தரின் காலில் விழுந்து வணங்கி, " சுவாமி என் தவறை உணர்ந்து கொண்டேன் . என்னைக் கடைத்தேற்றுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.

உடனே அவரைக் கட்டித் தழுவிக் கொண்ட விவேகானந்தர் அவரிடம், "கடவுளை அடையத் தடையாக உங்களிடம் இருந்த அனைத்தும் இப்போது முதல் நீக்கப்பட்டு விட்டன" என்று கூறி வாழ்த்தி அருளினார்.

அந்த நொடி முதல் கோவிந்த செட்டியாரிடம் இருந்த சிறப்புகள் அத்தனையும் அவரிடம் இருந்து மறைந்துவிட்டன. அன்றுமுதல் இறைவனைக் காணும் ஏக்கம்தான் அவருக்கு உண்டாகியிருந்தது. கடவுளைக் காணவேண்டும், அவன் திருவடியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் உள்ளத்தில் இருத்திக் கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.

இந்த நிலையை அடைந்த பின் பழைய அதிசய ஆற்றல் கோவிந்த செட்டியாரிடம் திரும்பியது. இருப்பினும், அதைப் பணத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்தாமல் இறைச் சேவையாக மட்டும் செய்து வந்தார் செட்டியார்.

கணித மேதை ராமானுஜர்

 ஒரு அதி அற்புதமான‌ திரைப்படம் நம்மால் கவனிக்க‌ படாமல்,  பெரிதாக பேசப் படாமல் அமேசான் பிரைம் தளத்தில் நூறோடு நூற்றி ஒன்றாய் நம் பார்வைக்கு காத்துக் கொண்டிருக்கிறது.   அதுதான்  'ராமானுஜன்' எனும் அற்புதமான திரைப்படம்.


வாழும் காலத்தில் மிகப்பெரும் சவால்களை சந்தித்து,  தன்னுடைய அசாத்தியமான திறமை புறக்கணிக்கப் பட்டு,  சக சராசரி இந்தியர்களால் ஏளன படுத்தப்பட்டு,  ஒரு சில உயர்ந்த உள்ளங்களின் உதவியால் உச்சத்தை தொட்டவன் ராமானுஜன்.

இன்றும் கூட அவன் வெளிப்படுத்திய கணித‌ சூத்திரங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறது இன்றைய அதிமேதாவிகள் நிறைந்த அறிவியல் உலகம்.


அவன் வாழ்ந்த காலத்தை சிந்தாமல்,  சிதறாமல்,  உள்ளது உள்ளபடியே,  சுக துக்கங்களை,  சாதனை வேதனைகளை, ஒரு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது இந்த திரைப்படம்.  வெள்ளையர் ஆட்சியில் பிராமண சமூகங்கள் எத்தனை சவால்களை எதிர்கொண்டனர் ? எப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு படித்தனர் ? ஒரு வேலை வாய்ப்பினை பெறுவதற்கு எத்தகைய சிரமத்திற்கு ஆளாகினர் என்பதை இப்படம் உள்ளது உள்ளபடியே வெளி கொண்டு வருகிறது.  


படத்தில் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.  ராமானுஜன் ஆக நடித்திருக்கும் நடிகர் 'அபிநய் வாதி' அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.  (இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரியின் பேரன்) முதலில் இயக்குனர் ஞான சேகரன் நடிகர் மாதவனையோ அல்லது பிரசன்னாவையோ,  ராமானுஜனின் பாத்திரத்திற்கு தேர்வு செய்யலாம் என யோசித்து, பின் அபிநய் வாதியின் தோற்றம் ராமானுஜனின் தோற்றத்திற்கு பொருந்தியதால் அவரை தேர்வு செய்தாராம்.  அந்த தேர்வு மிக மிக சரியானது என படம் முழுதும் மெய்பித்து இருக்கிறார் அபிநய். திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் சுஹாசினி,  நிழல்கள் ரவி, சரத்பாபு, நெடுமுடி வேணு, லிச்சி போர்ன் (ஹார்டி),  தலைவாசல் விஜய், மனோபாலா, டெல்லி கனேஷ் மற்றும் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்மை 20ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்று அசாத்தியமான யதார்தத்தை பிரதிபலிக்கின்றனர்.  திரைப்பட படபிடிப்பை தொடங்குவதற்கு முன்பே,  பல முன்னோட்டங்களை படமெடுத்து நடிகர்களை தயார் படுத்தினாராம் இயக்குனர் ஞானசேகரன்.


கணிதத்தின் மீது தீராத காதல் கொண்ட ராமானுஜன் பாத்திரம் வெகுளித்தனம்,  அசாத்திய அறிவுச் சுடர்,  பக்தி,  ஆன்மீக ஞானம்,  ஒழுக்கம் என  அவனின் மான்பை வெகு நேர்த்தியாக நாம் உணர வைத்துள்ளார் இயக்குனர்.  கணித சூத்திரங்களின் விடைகளை ஆழமாக மனதுள் ராமானுஜம் தேட,  நாமகிரி தாயார் ஒவ்வொரு முறையும் அவனுக்கு அதை ஆழ் மனதில் வெளிப்படுத்தி உதவுகிறாள்.  இன்றும் கூட உலகம் உற்று நோக்கி புரிந்துக் கொள்ள தவமிருக்கும் அந்த சூத்திரங்கள் நாமகிரி தாயார் அவனுக்குள் வெளிப்படுத்தியவை என்பது பாரதத்தின் பக்திக்கும்,  ஆன்மீகத்திற்கும் ஆதாரமாக திகழ்கிறது.  அறிவியல் எங்கே முடிவடைகிறதோ அங்கே ஞானம் தொடங்குகிறது எனும் விவேகானந்தரின் வார்த்தைகளை நமக்கு அது நினைவு படுத்துகிறது.  


கணித‌த்தில் மேதையாக இருந்தும் மற்ற பாடங்களில் மதிப்பெண் குறைவாக பெறும் ராமானுஜன், சமூகத்தால் புறக்கணிப்படும் காட்சிகள்,  மெக்காலே கல்வி இந்த நாட்டை எத்தனை சீரழித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது.  தியாகராஜரை கணிதம் தெரியாது என ஒதுக்குவதும்,  பாஸ்கராச்சாரியரை சங்கீதம் தெரியாது என ஒதுக்குவதும் எத்தனை அபத்தமோ,  அப்படிப்பட்ட அபத்தம் தான் ஒரு துறையில் சிறப்பாக மிளிரும் ஒரு மானவனை பாராட்டி உற்சாகப் படுத்தாமல் இந்த மெக்காலே கல்வி ஒதுக்குவதை காட்டுகிறது.  "எங்களுக்கு தேவை ஒரு பாடத்துல நூறு மார்க் வாங்கிட்டு மத்த பாடத்துல ஃபெயில் ஆகற மாணவன் இல்லை,  எல்லா பாடத்திலயும் ஏவரேஜ் மார்க் வாங்கற மானவனா இருந்தாலே போதும்" என மெக்காலே கல்வி முறைக்கு அடிமையாகி, கடந்த 150 வருடங்களாக‌ பல கோடி மாணவ செல்வங்களின் தனித்திறமையை அழித்த கல்வியாளர்களைதான் பிரதிபலிக்கிறார்கள் ராமானுஜத்தின் காலத்தில் வாழ்ந்த அந்த குறிப்பிட்ட கல்வியாளர்கள். 


உயர் கணிதத்தில் அசாத்திய திறமை படைத்த ராமானுஜன்,  சாப்பாடுக்கு கூட வழியின்றி,  ஒரு கட்டத்தில் கலெக்டர் சரத்பாபுவிடம்,  "சார் எனக்கு இந்த சாப்பாட்டு பிரச்சனையில் இருந்து விடுதலை வாங்கித் தாங்கோ,  நான் நிம்மதியா கணக்கு போட்டுண்டு இருப்பேன்" எனக் கூறுவது, அறிவுத் தேடலில் இறங்கிய ஒரு சமூகம் எத்தனை சவால்களையும் மீறி எப்படி பல உயரங்களை எட்டியது என்பதை உணர்த்துகிறது.   திராவிடம் பிராமண சமூகம் மீது கட்டவிழ்த்த காழ்ப்புணர்வும், அராஜகங்களும் படத்தின் எச்சமாய் நம் மனத்திரையில் தேங்கி நிற்கிறது.  ராமானுஜன் லண்டன் சென்று அங்கு பல இன்னல்களுக்கு இடையே சாதிக்கும் காட்சிகள் அற்புதம்.  கூடவே ஹார்டி போன்ற அற்புதமான திறமைக்கு மதிப்பளிக்கும் வெள்ளையர்களின் குணாதீசியத்தையும் படம் வெளிக் கொண்டு வருகிறது.


படத்தில் ஒரு காட்சியில், எத்தனையோ முயற்சி செய்து அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் ராமானுஜன் மிகுந்த மன வேதனையில் இருக்கிறான்.  இறுதி முயற்சியாக கலெக்டராக வரும் சரத்பாபுவை சந்தித்து தன் உயர் கணித சூத்திரங்களை காட்ட முனைகிறான்.  ஆனால் அவன் தோற்றத்தை கண்டு அவனை புறந்தள்ளுகிறார் கலெக்டர்.  ராமானுஜனை அழைத்து சென்ற மனோபாலா அவனின் கணித சூத்திரங்கள் அடங்கிய நோட்டு புத்தகத்தை கலெக்டர் மேஜையிலேயே வைத்து விட்டுப் போகிறார்.  சற்று நேரம் கழித்து அதை யதார்த்தமாய் பார்க்கும் சரத்பாபு ஆச்சரியத்தின் உச்சத்திற்கு செல்கிறார்.  ராமானுஜனை அவர் மீண்டும் அழைத்து கௌரவிப்பது மிக நெகிழ்வான தருனம்.


படத்தை முழுமையாக பார்த்துவிட்டு கண்களின் ஓரங்களில் ஒரு காட்சியில் கூட‌

கண்ணீர் தேங்கவில்லை என்றால் அதன் பெயர் Vegetative state   என்பார்கள்.


மொத்தத்தில் அற்புதமான படம். 'அமெசான் பிரைமில்' நீங்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய படம்.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்


Check out this video, "ramanujan movie in tamil" https://share.google/KjaDdeqxUfUksPPen

Tuesday, 17 March 2026

முக்திக்கு வழி சரணாகதி

 முக்திக்கு வழி சரணாகதி 




Monday, 16 March 2026

கர்ணன் கிருட்டினனிடம் கேட்ட வரம்

 




செவிச்செல்வம், செல்வத்துள் எல்லாம் தலை


 

Thursday, 12 March 2026

கனகதாரா ஸ்தோத்திரம்

 கனகதாரா ஸ்தோத்திரம் 


Part-2


நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்

நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!

சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்

சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்

வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்

வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!

தேர்கொண்டேன் புரவி இல்லை செல்வமாம் புரவியாலே

திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே..!


ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி

அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி 

ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்

அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்

தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக

திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்

வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே 

வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே..!


வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி 

சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி 

கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி 

ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி 

பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி 

நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி போற்றி 

பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி  போற்றி 

மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி போற்றி....


அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி 

அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி 

குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி 

குளிர்ந்தமா மதியினோடும் குடி வந்த உறவே போற்றி 

மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி 

மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி 

என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி

எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி போற்றி...!


தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி 

தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி 

தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி 

தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி 

தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்

தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி 

தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி 

தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி போற்றி..!


பெண்ணெனப் பிறந்தாயேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி

பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி

தண்ணளி வேங்கடத்தான் தழுவிடும் கிளியே போற்றி

தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி

சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி

ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி

பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி

பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி போற்றி..!


கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி

கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி

மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி

மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி

விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி

விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி

எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி போற்றி

இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி போற்றி...!


மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி 

வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி 

மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி 

விரித்தமேற் புலனுக்கெல்லாம் விளங்காத பொருளே போற்றி 

கைநிறை செல்வம்யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி 

காக்கையை அரசனாக்கும் கைமலர் உடையாய் போற்றி 

செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி 

சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி போற்றி...!


மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி 

மூவுலகங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி 

தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி 

தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி 

ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி 

ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி 

தாள்களில் பணிந்தேனம்மா தண்ணருள் தருவாய் போற்றி 

தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி போற்றி...!


கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி

காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி

வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி

வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி

பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி

பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி

விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி

வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி...!


மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி

மங்கைக்கு நன்னீராட்ட கங்கை நீர் குடத்தில் மாந்தி

தண்டலக் கூந்தல் ஊற சர்வமங்கள நீ ராட்டி

தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி

மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி

மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்

அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே

அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்...!


பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே

பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ

ஏவுமோர் உலகத்துள்ளே இன்மையோன் ஒருவனே தான்

இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்

தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்

சநிதிரப் பிறைப் பூங்கண்ணி சற்று நீ திரும்பிப் பார்த்தால்

மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்

மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி போற்றி..!


முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி

மூவிரண்டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக

அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி

ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்

இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும்

இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்

நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும் என்றும்

நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை...!

Monday, 9 March 2026

பிறர் வாயை அடக்கக் கற்றுக்கொண்ட நீ, உன் வாயை அடக்க எப்போது கற்றுக்கொள்வாய்

 சதாசிவ பிரம்மேந்திரர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாபெரும் அத்வைத ஞானி, யோகி மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞர் ஆவார். கும்பகோணத்தில் (சில குறிப்புகளின்படி ) தெலுங்கு பிராமண குடும்பத்தில் அவதரித்தவர். 


இவரது ஆரம்பகால பெயர் சிவராமகிருஷ்ணன்.

திருவிசைநல்லூரில் உள்ள வேதப் பாடசாலையில் கல்வி பயின்றார். ஸ்ரீ தர வெங்கடேச அய்யாவாள் மற்றும் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஆகியோர் இவரது சமகாலத்தவர்கள் மற்றும் வகுப்புத் தோழர்கள் ஆவர்.


 காஞ்சி காமகோடி பீடத்தின் 57-வது பீடாதிபதியான பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்து சந்நியாசம் பெற்றார்.


ஒருமுறை விவாதங்களில் பிறரை வென்று கொண்டிருந்த இவரை நோக்கி இவரது குரு, "பிறர் வாயை அடக்கக் கற்றுக்கொண்ட நீ, உன் வாயை அடக்க எப்போது கற்றுக்கொள்வாய்?" என்று கேட்டார். அந்த நிமிடமே அவர் மௌன விரதத்தை மேற்கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் பேசாமல் இருந்தார்.

உடல் உணர்வற்ற நிலையில், ஆடைகளின்றி 'அவதூத' துறவியாக காவிரி ஆற்றங்கரையோரங்களில் சுற்றித் திரிந்தார். 


காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது அதில் அடித்துச் செல்லப்பட்டு மணலில் புதைந்தார். மூன்று மாதங்கள் கழித்து மணல் எடுத்தபோது, அவர் தியான நிலையிலேயே உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டது.

ஒருமுறை ஒரு நவாப்பின் அந்தப்புரத்திற்குள் தெரியாமல் நுழைந்தபோது, கோபமடைந்த நவாப் அவரது ஒரு கையை வெட்டினார். ஆனால், எவ்வித வலியும் இன்றி அவர் தொடர்ந்து நடந்தார். பின்னர் நவாப் மன்னிப்பு கேட்டதும், வெட்டப்பட்ட கையை மீண்டும் உடலில் ஒட்ட வைத்தார்.


புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானுக்கு மணலில் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காட்டி உபதேசம் செய்தார். அந்த மந்திர மணல் இன்றும் புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் உள்ளது.


அவர் அத்வைத தத்துவத்தைப் பரப்ப பல நூல்களையும் கீர்த்தனைகளையும் இயற்றினார்.

ஆத்ம வித்யா விலாசம், பிரம்ம சூத்திர விருத்தி, யோக சுதாகரம் ஆகிய நூல்கள் இவர் இயற்றியவை.

'மானஸ சஞ்சரரே', 'பிபரே ராம ரஸம்', 'புரூஹி முகுந்தேதி' போன்றவை இன்றும் இவரது புகழ்பெற்ற கீர்த்தனைகள். 


புன்னைநல்லூர் மாரியம்மன் முதலில் ஒரு புற்று வடிவில் மட்டுமே இருந்தார். சதாசிவ பிரம்மேந்திரர் அந்தப் புற்றை முறையாகச் செதுக்கி, தற்போது நாம் காணும் அம்மன் திருவுருவமாக மாற்றினார்.


அம்மன் சிலையின் பீடத்திற்கு அடியில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரத்தை (அல்லது ஜன ஆகர்ஷண எந்திரம்) பிரதிஷ்டை செய்தவர் இவரே. இதனால் இக்கோயில் மிகுந்த ஆன்மீக ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது.


புற்று மண்ணால் ஆன திருமேனி என்பதால், சிலைக்கு நீர் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, சதாசிவ பிரம்மேந்திரர் உபதேசித்தபடி புனுகு, ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களைக் (அஷ்டகந்தம்) கொண்டே அம்மனுக்குக் காப்பு சாற்றப்படுகிறது.


தஞ்சை மன்னர் துளஜா ராஜாவுக்கு (அல்லது வெங்கோஜி ராஜா) கனவில் தோன்றிய அம்மன், தான் புன்னைவனக் காட்டில் இருப்பதாகக் கூறினார். அந்த இடத்தைக் கண்டறியவும், அம்மனை முறைப்படி பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பவும் சதாசிவ பிரம்மேந்திரரே மன்னருக்கு வழிகாட்டினார்.


இன்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் உச்சியில், சதாசிவ பிரம்மேந்திரரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது


ஜீவ சமாதி

அவர் கரூருக்கு அருகிலுள்ள நெரூரில் வைகாசி சுத்த தசமி அன்று ஜீவ சமாதி அடைந்தார். இவருக்கு நெரூர் தவிர மானாமதுரை, காசி, பூரி  ஆகிய இடங்களிலும் அதிஷ்டானங்கள் (சூட்சம சமாதிகள்) இருப்பதாகக் கருதப்படுகிறது. 

நெரூர், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. 

ஹரி ஓம் மஹா காளி !

Wednesday, 4 March 2026

Friday, 27 February 2026

நம்பிக்கை தான் வாழ்க்கை


 

மஹாலட்சுமி மந்திரம்

 வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான மஹாலட்சுமி மந்திரம்

...


ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்


அர்ச்சனை


அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்

ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்


இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்.


ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.

லஷ்மி ....எத்தனை லஷ்மி

 லஷ்மி ....எத்தனை லஷ்மி

லஷ்மி ....எத்தனை லஷ்மி !


உதாரணமாக, சுக்கிரன்

அசுவினியில் இருந்தால் வித்யாலஷ்மியாகவும்,

பரணியில் இருந்தால் அன்ன லஷ்மியாகவும்,

கிருத்திகையில் ஜோதி லஷ்மியாகவும்,

ரோஹிணியில் தனலஷ்மியாகவும்,

மிருக சீரிடத்தில் முத்து லஷ்மியாகவும்,

திரு வாதிரையில் வீர லஷ்மியாகவும்,

புனர் பூசத்தில் ராம லஷ்மியாகவும்,

பூசத்தில் குரு லஷ்மியாகவும்,

ஆயில்யத்தில் நாக லஷ்மியாகவும்,

மகத்தில் தான்ய லஷ்மியாகவும்,

பூரத்தில் சந்தான லஷ்மியாகவும்,

உத்திரத்தில் சீதா லஷ்மியாகவும்,

ஹஸ்தத்தில் கான லஷ்மியாகவும்,

சித்திரையில் சுப லஷ்மியாகவும்,

சுவாதியில் தீப லஷ்மியாகவும்,

விசாகத்தில் சுப்பு லஷ்மியாகவும்,

அனுஷத்தில் ஆனந்த லஷ்மியாகவும்,

கேட்டையில் யோக லஷ்மியாகவும்,

மூலத்தில் வசந்த லஷ்மியாகவும்,

உத்திராடத்தில் ராஜ லஷ்மியாகவும்,

திரு வோணத்தில் மகா லஷ்மியாகவும்,

அவிட்டத்தில் அஷ்ட லஷ்மியாகவும்,

சதயத்தில் விஜய லஷ்மியாகவும்,

பூரட்டாதியில் பாக்கிய லஷ்மியாகவும்,

உத்திரட்டாதியில் வேங்கட லஷ்மியாகவும்,

ரேவதியில் கஜ லஷ்மியாகவும்


பெயர் அமைப்புகள் மாறும். குண பாவங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.


Courtesy: Sri krishna ravi @ krishnalaya


...


16 வகை லட்சுமி


மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.


3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.


4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.


5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.


6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.


7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.


8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.


10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.


11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.


12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.


13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.


14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.


15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.


16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.


Courtesy: "தமிழ்மறை"

Monday, 23 February 2026

ஆன்மீக விளக்கம்


 

அஷ்ட நாகங்கள்


 

Thursday, 19 February 2026

ஆன்மீக தகவல் மற்றும் கொடி மர பூஜை காட்சிகள்

 *சிவராத்திரியில் மட்டும் பூக்கும் குங்கிலிய மலர்*


சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது குங்கிலிய மலர் ஆகும். இது ஈசனுக்கு மிக உகந்த சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியம். மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம். இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.


ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன. சிவராத்திரி நாட்களில் மட்டும் இவை பூப்பதால் தெய்வீகத் தன்மை கொண்டவையாக விளங்கும் இந்தப் பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனுக்கு உகந்த மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட இவற்றை வெட்டுவதில்லை.


கன்னடத்தில் குங்கிலிய மரத்தை, ‘தளி’ என அழைப்பர். இந்தப் பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது. இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின்போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.


இந்தப் பூ மிகவும் அபூர்வ நறுமணம் கொண்டவை. இந்த மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு சுற்றளவுக்கு இந்த மலரின் நறுமணம் வீசும். சிவராத்திரியில் மட்டும் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.🌹




Thursday, 5 February 2026

அகத்தியர் ஆலயம் கொடி மரம் பிரதிட்டை

 இன்று நமது பொகலூர் அகத்தியர் ஆலயத்தில் நமது குருஜி அவர்களால் ஓலை சுவடி  மூலம் நமது ஆலயத்தின் கொடிமரம் எப்போது பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அகத்தியர் பெருமானிடம் கேட்கப்பட்டது 


அதற்கு அகத்தியர் அவர்கள் ஓலைச்சுவடி மூலமாக உரைத்த வாக்கு, மாசி மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி அன்று கொடிமரத்தை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு கொடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 


அது சமயம் *அனைவரும் வந்திருந்து கொடிமர பிரதிஷ்டை செய்யும் விழாவில் பங்கேற்று அகஸ்தியரின் பூரண நல் ஆசிகளுக்கு உரித்தாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்*


 *உங்களால் முடிந்த நன்கொடைகளை கொடிமர பிரதிஷ்டை செய்யும் பூஜை காரியங்களுக்கு கொடுத்து உதவவும்* மிக்க நன்றி




Sunday, 1 February 2026

குதிரையும் ஏரியும்: ஒரு சித்தரின் பாடம்

 குதிரையும் ஏரியும்: ஒரு சித்தரின் பாடம்

பொதிகை மலையின் அடிவாரம். மூலிகைகளின் வாசனை நிறைந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் அந்த வயதான சித்தர்.

அவருடைய சீடன் கபிலன், மூச்சிரைக்க ஓடி வந்தான். அவன் முகம் சோர்வாக இருந்தது. கண்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தன.

"குருவே!" என்று வணங்கினான் கபிலன். "எனக்கு ஒரு பெரிய பிரச்சனை. என்னால் என் மனதை ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை. காலையில் எழும்போதே சோர்வாக இருக்கிறது. ஏதோ ஒரு சக்தி என்னை விட்டு வெளியேறிக் கொண்டே இருப்பது போல் உணர்கிறேன். என் ஆற்றலை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது?"

சித்தர் மெல்லக் கண்களைத் திறந்தார். அவர் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

ஓடும் குதிரையும் லகானும்

"கபிலா..." என்று அழைத்தார் சித்தர். "உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு வீரன் குதிரையில் சவாரி செய்கிறான். அந்தக் குதிரை மிரண்டு போய், கண்டபடி காட்டிற்குள் ஓடுகிறது. இப்போது அந்த வீரனால் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியுமா?"

"முடியாது குருவே, அவன் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவான்," என்றான் கபிலன்.

"சரியாகச் சொன்னாய்! இங்கே அந்த வீரன் தான் உன் மனம். அந்தக் குதிரைதான் உன் மூச்சுக்காற்று."

கபிலன் ஆச்சரியத்துடன் பார்த்தான். சித்தர் தொடர்ந்தார்:

"திருமூலர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை...' என்று பாடுகிறார். அதாவது, உன் மூச்சுக் காற்று ஒரு காட்டுக்குதிரை போல எப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறது. நீ கோபப்படும்போதும், பதற்றப்படும்போதும் உன் மூச்சின் வேகம் அதிகரிக்கிறது. குதிரை மிரண்டு ஓடினால், மனமாகிய வீரன் தடுமாறுவான். உன் உடலின் சக்தி வீணாகும்."

"இதற்கு என்ன வழி குருவே?"

"லகானை இழுத்துப் பிடி! உன் மூச்சை நீ எப்போது மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்து விடுகிறாயோ, அப்போதே அந்தக் குதிரை உன் கட்டுப்பாட்டிற்குள் வரும். உன் உடல் அமைதியடையும். குதிரை அடங்கினால், வீரனும் அமைதியாவான். உன் ஆற்றல் உள்ளேயே சேமிக்கப்படும்."

ஏரியும் மதகும்

கபிலன் சற்று யோசித்துவிட்டு கேட்டான், "குருவே, மூச்சைக் கட்டுப்படுத்தினால் அமைதி கிடைக்கும் என்று புரிகிறது. ஆனால், என் உணர்ச்சிகளையும் உடல் வலிமையையும் ஒரே வழியில் சீரமைக்க முடியுமா?"

சித்தர் அவனை அருகில் இருந்த ஒரு அழகான தாமரைக்குளத்திற்கு அழைத்துச் சென்றார்.

"இந்த ஏரியைப் பார் கபிலா. நீர் தளும்பத் தளும்ப நிரம்பியிருக்கிறது. மதகுகள் (Sluice Gates) மூடியிருப்பதால் நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. இந்த நீர் தான் உன் உயிர்ச் சக்தி."

"நீ எப்போதெல்லாம் தேவையல்லாத விஷயங்களைப் பேசுகிறாயோ, அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறாயோ, அப்போதெல்லாம் இந்த ஏரியின் மதகைத் திறந்து நீரை வீணக்குகிறாய். நீர் வற்றிய ஏரி போல, நீயும் சோர்வாகிறாய்."

சித்தர் ஒரு கல்லை எடுத்து நீரில் போட்டார். அலைகள் உருவாயின.

"இங்கே ஒரு ரகசியம் இருக்கிறது. இதை 'ஏகலை' என்கிறார் திருமூலர். அதாவது, உனக்குள் இருக்கும் ஆற்றல் ஒன்றுதான். மின்சாரம் ஒன்றுதான்; ஆனால் அது விளக்கில் ஒளியாகவும், விசிறியில் காற்றாகவும் மாறுகிறது அல்லவா? அதேபோலத்தான் இதுவும்."

• அந்த ஆற்றலை நீ கீழான ஆசைகளுக்குப் பாய்ச்சினால், அது வெறும் உடல் இச்சையாக முடியும்.

• அதைச் செயலில் காட்டினால், அது வீரம் மற்றும் உழைப்பாக மாறும்.

• அதே ஆற்றலை மூச்சின் துணை கொண்டு மேலே (மூளைக்கு) மடைமாற்றினால், அதுவே ஞானமாகவும், பேரறிவாகவும் மாறும்.

"கட்டுப்பாடு என்பது ஆற்றலைத் தடுப்பது அல்ல கபிலா; அதைச் சரியான திசையில் திருப்புவது. மடைமாற்றி விட்டால், அந்த நீர் வயலுக்குப் பாய்ந்து செழிப்பைத் தரும். வீணாக விட்டால் சேறாகும்."

கபிலன் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து மெதுவாக வெளியிட்டான். அவனுக்குள் இருந்த பதற்றம் விலகி, ஒரு தெளிவு பிறந்தது.

"புரிந்தது குருவே! என் மூச்சுதான் அந்தச் சாவி. இனி என் ஏரியின் மதகை நான் வீணாகத் திறக்க மாட்டேன். என் ஆற்றலை அறிவாக மாற்றுவேன்," என்று உறுதியெடுத்தான்.

சித்தர் ஆசிர்வதித்தார். "சென்று வா கபிலா. 


ஓம் திருமூலதேவாய நம🔥

Tuesday, 27 January 2026

*எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம்*

 *எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம்*


எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம். 


🙏🏾அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், குறிப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் அகால மரணம் ஒருக்காலும் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுள் கிட்டும்


*🙏🏼பதிகம்*


துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.


மந்திர நான்மறையாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து

ஏனை வழிதிறந்து ஏத்துவார்க் கிடர்

ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.


நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ

கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.


கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து

அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்

தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை

அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மைவினை அடர்த் தெய்தும் போழ்தினும்

அம்மையிலுந் துணை அஞ்செழுத்துமே.


வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாள்தொறு

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.


வண்டமரோதி மடந்தை பேணின

பண்டை இராவணன் பாடி உய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு

அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.


கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச்

சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு

ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.


புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்துதேறின

வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு

அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.


நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலை ஈரைந்தும்அஞ்செழுத்து

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.


திருச்சிற்றம்பலம்

Monday, 26 January 2026

மேடையில் நடந்த அற்புதம்

 


Wednesday, 21 January 2026

மூன்று சிவரகசியங்கள்

 மூன்று சிவரகசியங்கள்…

இவற்றை தெரிந்தவன் வாழ்வை வென்று விடுகிறான்.


ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்புதான் இறந்து போனான்.

                 

எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி "அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான். இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான்.


நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை வைத்திருக்கிறீர்கள். அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.

ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு சிவலோக ரகசியங்கள் தெரியவில்லை..

கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை... அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.....


அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே என்று அவனைப் பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும்....  "என்னுடன் வா" என்கிறான்.


எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை. தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


         அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று கூப்பிடுவாள்.


அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.


"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".  எமதூதன்  ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள்..... அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.


தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.

எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.


ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம் "இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.


           எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும். இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.


ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான். அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.


முதல் நாள் போய்விட்டது. இரண்டாம் நாள் போய்விட்டது....


தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான். இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான். "என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்பான்.


அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று சொல்வான். இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.

        அப்படியே மேலே போவான்.....


அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்பான்.


அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் சிவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.


"என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று இவன் கேட்டான்.


முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா... அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது. பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார். அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரனாக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். #இதுதான் #சிவரகசியம் #ஒன்று!


மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.


"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...? அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.


நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.


           ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது #இரண்டாவது #சிவ ரகசியம் #புரிந்தது.


கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்......


மூன்றாவது #சிவ_ரகசியம்  மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே..


"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை. அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்". இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை..


அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் #மூன்றாவது #சிவரகசியம்!


அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்.

இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்..


அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்.


இந்த மூன்று ரகசியங்கள்.....


அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.....


இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார். மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.


மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம். இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த #அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.


இவைதான் அந்த மூன்று #சிவ_ரகசியங்கள்.....

எனவே, நாமும் இந்த சிவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!


*ஓம் நமச்சிவாய*