Thursday, 11 December 2025

தச நாத வித்தை யோகம்

 தச நாத சப்தங்ககளை கேட்கலாம்;


ஒரு சிலருக்கு மணி ஒலிக்கும், சிலருக்கு சங்கு, இப்படி ஏதாவது ஒரு சப்தம் மட்டும் கேட்கும்.

இது 100க்கு 2% மக்களுக்கு 

அதுவும் காலை, மாலை தியானம் செய்பவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக கேட்கும்m


இதை சிலர் மனப்பிரம்மை என்றும் சிலர் காளி, பெருமாள், சிவன் போன்றவர்களின் அருள் என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. உண்மையில் இந்த ஒலிகள் நமக்கு 10 விதமாக கேட்கும். அது எப்படி என்று சித்தர்கள் சொன்ன அந்த மஹா ரகசியங்களை இங்கு சொல்கிறேன்.....


"கேளப்பா கேசரமே அண்டஉச்சி 

     கெட்டியாய்க்‌ கண்டவர்க்கே மெளனம்‌ ஆகும்‌

ஆளப்பா பரப்பிரம்மம்‌ யோகமென்று 

     அடுக்கையிலே போதமுந்தான்‌ உயரத்‌ தூக்கும்‌

வாளப்பா கெவுனமணிவிந்து நாதம்‌ 

     வலுத்திதடா கெட்டியாய்‌ திரண்டுபோகும்‌

நாளப்பா அண்டமெல்லாம்‌ சித்தியோடும்‌ 

     நடனமிடும்‌ சிலம்பொலியும்‌ காணலாமே"


இந்த பாடலில் பிராணவாயு எனும் சுவாசத்தை "ஓம்‌" என்னும்‌ மந்திரத்துடன்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாய்‌ உள்ளுக்குள்‌ இழுத்து நிறுத்தவேண்டும்‌. பிராணயாமம்‌ செய்யும்‌ போது "ஓம்‌ ஓம்‌ ஓம்‌ ஓம்‌ ஓம்‌" என்னும்‌ பிரணவ மந்திரத்தைச்‌ சேர்த்து உள்ளுக்கு  இழுத்து மறுபடியும்‌ சுவாசத்தை வெளிவராத படிக்‌ கண்டத்தில்‌ 

நிறுத்தி விடவேண்டும்‌.


அப்போது அந்தச்‌ சுவாசம்‌ நுரையீரலில்‌ சிலநேரம்‌ தங்கியிருக்கும்‌. பிறகு அந்தச்‌ சுவாசம்‌ நுரையீரலிருந்து வெளிவரும்‌. அப்போது யோகியானவன்‌ கண்டத்திடம்‌ மூடி விடுவதால்‌ அந்தச்‌ சுவாசம்‌ மூக்குத்‌ துவாரத்தின்‌ வழியே வெளிவராமல்‌ தொண்டைக்குப்‌ பின்புறமாய்‌ இருக்கும்‌ 

இரப்பைக்‌ குழியின்‌ வழியாக 22 அடி நீளமுள்ள குடல்‌ முழுமையும்‌ அந்தச்‌ சுவாசம்‌ செல்லும்‌. பிறகு அவ்விடத்திலிருந்து மூலாதாரம்‌ என்னும்‌  குதத்தினிடம்‌ போய்‌ "அச்சுவாசம்‌" எனும் அபானவாயுவாய்‌ வெளியே போக ஆரம்பிக்கும்‌.

அதாவது "குசு" அப்போது யோகியானவன்‌ அந்தச்‌ சுவாசத்தை அபானவாயுவாகப்‌ போகவிடாமல்‌ இரண்டு  பிண்டங்களையும்‌ கெட்டியாய்‌ இடுக்கிப்பிடியாக இழுத்துப்‌ பிடிக்கவேண்டும்‌.


பின்‌ அது வெளியே போகாமல்‌ பின்புறமாக இருக்கும்‌ முதுகெலும்பின்‌ வழியாகப்‌ போகும்‌. முதுகெலும்பில்‌ 33 எலும்புக்‌ கூட்டுக்குள்‌ படிப்படியாய்‌  அமைக்கப்பட்டிருக்கும்‌ துவாரத்தின்‌ மத்தியில்‌ வெள்ளை நரம்பு 

ஒன்று இருக்கும்‌.


இந்த நரம்பிற்கு முதுகுத்தண்டு

(ஸ்பைனல்‌ கார்டு) என்று ஆங்கிலத்தில்‌ கூறுவர்‌கள். அது தாமரைச்‌ செடியிலுள்ள சிறிய நூல்களைப்‌ போன்று சிறு துவாடிங்களால்‌ மேற்படி மூக்குத்துவாரங்களின்‌ வழியாக உள்ளிழுத்து நிறுத்திய சுவாசமானது அப்பியாசமுதிர்ச்சியினால்‌ மெதுவாக அந்த வெள்ளை நரம்பில்‌ ஏறிச்‌ செல்ல வேண்டும்‌.


பிராணயாமம்‌ செய்பவர்களுக்கு மட்டுமே முதுகெலும்பில்‌ இருக்கும்‌ 

வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின்‌ வழியாகச்‌ சுவாசம்‌  மேலேறிச்‌ செல்லும்‌. இதற்கு

காகபுஜண்டர்‌ தன் பாடலில்‌,


"போமடாமுன்‌ சொன்ன நரம்பினூடே 

      பூரித்து ஆவி மதியும்சுடர்தாக்க மூன்றாம்‌

ஆமடாபின்னையுந்தான்‌ கீழே பாயும்‌ 

       அந்தரங்கந்தன்னைப்‌ பார்க்க அடங்கிப்போகும்‌ 

நாமடா வெளியில்‌ திறந்து சொல்லி விட்டோம்‌ 

       நாதாந்த பரப்பிரம்மநாட்டந்தன்னை சன

ஓம்சுடா விந்துந்தான்‌ அண்ட உச்சி 

       உறுதியுடன்‌ சித்தமதை ஊன்றிப்‌ பாரே

           என விவரிக்கின்றார்‌.......


அதாவது;

           பூரித்த இரவி மதியும்‌ சுடர்‌ தான்‌.  மூன்றாம்‌ என்றால்‌ வலதுநாசி, இடதுநாசி இரண்டு நாசிகளிலும்‌  உள்ளிழுத்து நிறுத்திய மூன்று சுவாசத்திற்கும்‌ அதிகளவுக்‌

கோபமுண்டாகும்‌.


அக்கினி சுவாலையைப்‌ போல்‌ கிளம்பி 

தஸ்தானத்திற்கு கீழ்நோக்கிச்‌ சிங்கக்‌குட்டியைப்‌ போல்‌  அதிகவேகமாகப்‌ பாய்ந்து முதுகெலும்பின்‌ வழியாக மேலேறி 

மூலதானத்தைச்‌ சேர்ந்து அங்குள்ள விந்து என்று சொல்லும்‌ அமிர்தத்தைத்‌ தமது வெப்பத்தினால்‌ உருக்கிக்‌ கண்டத்தில்‌ விழச்‌ செய்து, தான்‌ நாதாநந்தத்தில்‌ ஐக்கியமாகி விடும்‌. இதை அடைய வேண்டுமானால் 

திடச்‌ சித்தம்‌ உடையவனாக இருந்து பிராணயாமம்‌ செய்து வரவேண்டும்‌. 

யோகத்‌ தன்மையினால்‌ சுவாசம்‌ முதுகெலும்பின்‌ பின்‌ வழியாக  மேலேற்றிச்‌ சகல நாடிகளையும்‌ கிளப்பியவுடன்‌ நாத சப்தங்கள்‌ 

உண்டாகும்‌.


அப்போது சுவாசமானது, முன்‌ சொல்லிய சுழிமுனை நாடியின்‌ வழியாகச்‌ சென்று பிரம்ம கபாலாத்தைத்‌ தாக்கி அந்த இடத்திலிருந்து, நம் உடலிருக்கும்‌ 72,000 நாடிகளிலும்‌ சென்று அந்தந்த நாடிகளை அந்தந்த இடத்தில்‌ தங்கவிடாமல்‌ அந்தந்த இடங்களைக்‌ கிளப்பி விடுவதால்‌ நாடிகள்‌ யாவும்‌ தத்தம்‌ இடத்தைவிட்டுக்‌ கிளம்பி சர்ப்பம்‌ சீறிக்‌ கொண்டு,


ஓங்காரத்துடன்‌ கிண்கிணி, சங்கு, வீணை, தாளம்‌, கண்டாமணி, பேரிகை, மிருதங்கம்‌, மேளநாதங்கள்‌ முதலான பத்து வகையான வாத்தியங்களும்‌ நாடியின்‌ வழியாகத்‌ தொனித்துக்‌ 

கொண்டு காதின்‌ வழியாகச்‌ சதாகாலமும்‌ கேட்டுக்‌ கொண்டே 

இருக்கும்‌.


ஒரு கிழ அரசன்‌, வேற்றரசன்‌ போர்க்களத்திற்கு வந்த போது கிழ அரசன்‌ தன்‌ குமாரனை அழைத்து அப்பா, குழந்தாய்‌...! வேற்றரசன்‌ நம்‌ மீது படையெடுத்து வந்திருக்கின்றான்‌. நீ சென்று அந்த வேற்றரசனை வெற்றி கொள்வாய்‌ என அனுப்பினான்‌. அந்த ராஜகுமாரனும்‌ சென்று வேற்றரசனை வெற்றி கொண்டு திரும்ப வருகையில்‌,

அவன்‌ தந்தையாகிய கிழவரசன்‌ கேள்விப்பட்டுத்‌ தன்னிடமுள்ள இராச்சியத்தை முன் கூட்டியே அனுப்பி அந்த குமாரனை எதிர்கொள்வது போலாகும்‌. இங்கே கிழ அரசன் என்பது 

மஹா ராஜா என்று பொருள் கொள்ள வேண்டும்.


இது போலவே நமது கடவுளானவர்‌ அவனின்‌ கடினத்தன்மையால்‌ "பிராணாயாமம்‌" செய்து சம்சாரம்‌ என்னும்‌ சமுத்திரத்தைக்‌ கடந்து கரையேற்றி விட்டது போல்‌ ஆனந்தமடைந்து மேற்கூறிய  பத்து வித நாதங்களையும்‌ காதில்‌ கேட்கும்படி

முன்னால்‌ அனுபவித்துத்‌ தந்து பிறகு காட்சியைத்‌ தருகின்றார்‌.


இந்த தேகமென்னும்‌ உடல் என்ற ஆலயத்தில்‌ மேற்கூறிய பத்துவித நாதங்களையும்‌ கேட்டுக்‌கொண்டிருந்து, பிறகு அதைக்கடந்து பிரம்மக்‌ கபாலத்திலிருக்கும்‌ ஆகாச வடிவத்தில்‌ மனம்‌ ஐக்கியமாகி விடும்‌. இவ்வாறு மனம்‌ ஐக்கியமாகி விடுவதால்‌, தன்னுடைய  உண்மை வடிவம்‌ தானாகவே நின்று கொண்டிருக்கும்‌. 

அதாவது தானே தானாவான்‌. 36 தத்துவங்களுக்கும்‌ அதிகப்பட்சம்‌ இந்த ஓசையை யார்‌ கேட்கின்றார்களோ அவர்களே முக்தர்கள்‌. அவர்களே பிரம்மஞானிகள்‌. யார்‌ ஒருவர்‌ சகல எண்ணங்களையும்‌ விட்டுச்‌ சித்த விருத்தியடைந்து அந்நிய சாத்திரங்களிலும்‌ சமத்த போகங்களிலும்‌ இச்சை இல்லாதவர்களாய்‌, "மாயை" என்னும்‌ பிரம்ம வலையில்‌ அகப்படாமல்‌ சுயம்பிரகாசமான பிரம்ம  ஞானத்தினால்‌ "நிர்விகல்பச்‌ சமாதியிலிருப்பவர்கள்‌" அதாவது 

உயிருடன்‌ இருந்து கொண்டு அடக்கமடைவதைக்‌ குறிக்கும்‌

இவ்வாறு இருப்பவர்களே ஜீவன்‌ முக்தர்கள்‌ ஆவார்கள்‌.


சுவாசம்‌ மூக்கின்‌ வழியாய்‌ இழுத்து நிறுத்தியபோது, வெகு நாட்களின்‌ பழக்கத்தால்‌ அந்தப்‌ பின்புறமாக மேலேறி தலையின்‌ உச்சிக்குப்‌ போய்‌ அவ்விடத்தில்‌ இருக்கும்‌ "நாபி"என்னும்‌ தொப்புளுக்குச்‌ சென்று அங்குள்ள குண்டலி சக்தியைக்‌ கிளப்பிவிடும்‌. அப்போது நெற்றியில்‌ ஒளி 

காணப்படும்‌. இவ்விரண்டையும்‌ முடித்த யோகி, சுவாசம்‌ அடக்கி அமைதியாக அமர்ந்திருந்தால்‌ அந்தச்‌ சுவாசம்‌ தேகமெல்லாம்‌ சுற்றித்‌ திரிந்து உடலில் இருக்கும்‌ 72.000 நாடிகளையும்‌ கிளப்பி விடுவதால்‌ அவற்றுக்குக்‌ கோபமுண்டாகி "ஓம்‌" என்னும்‌ சப்தம்‌

சதா ரீங்காரம்‌ செய்து கொண்டிருக்கும்‌. அப்போது அந்த ஓங்காரத்தில்‌ மனத்தை நாட்டிக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தால்‌ முன்‌ சொல்லியபடி பத்து நாத சத்தங்களையும்‌ கேட்கலாம்‌.


நாத சப்தங்களை ஆனந்தமாய்க்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்‌ தறுவாயில்‌ சிரசிலிருந்து அமிர்தமானது 

"யோகாக்கினி" தீயினால்‌ கரைந்து மண்டையிலிருந்து கண்டத்தின்‌ (தொண்டை) வழியாகச்‌ சொட்டுச்‌ சொட்டாய்‌ இருந்தாற்‌ போலிருந்து குபீரென்று தொண்டையில்‌ விழுந்து வயிற்றிற்குள்‌ செல்லும்‌.


அமிர்தம்‌ மண்டையிலிருந்து வரும்‌ பொழுது நமக்கு நன்றாகத்‌ தெரியம்‌.  யோகியானவன்‌ மேற்‌சொல்லிய நாத சப்தங்களைக்‌ கேட்டு அமிர்தபானம்‌ செய்து கொண்டிருந்து கடைசியில்‌ சூனியமாய் அதாவது ஒன்றுமில்லாத வெற்றிட நிலைக்கு சென்று பிரம்மானந்தப்‌ பதவியை அடைவான்‌.


யோகாப்‌பியாசம்‌ செய்து சித்தியடைந்த மகான்களுக்கு நாபியிலிருந்து யோக அக்கினி உண்டாகும்‌. இந்த யோக அக்கினி, "சஞ்சிதம்‌" என்னும்‌ புண்ணிய பாப இரு வினைகளைச்‌ சாம்பலாய்‌ எரித்துவிடும்‌. அத்தோடு சூரியமண்டலம்‌, சந்திரமண்டலம்‌, நட்சத்திரமண்டலம்‌ யாவும்‌ நம்மில்‌ அடங்கியிருக்கின்றது. சிரத்தை பக்தி, தியானத்தில்‌ இருப்பவர்களுக்குத்‌ தப்பாமல்‌ யோகம்‌ சித்திக்கும்‌.


முயற்சி செய்து பாருங்கள்.....


(விரிவாக திருமூலர் பெருமானின் வழியில் இந்த யோகங்களை முறையாக எளிமையாக பயின்று யோகங்களில் தேர்ச்சி பெற சிவயோகி சித்தர்களின் குரல் சிவசங்கர் ஆச்சாரியர் அவர்கள் நேரடியாக whatsaap மூலம் கற்பிக்கும் திருமந்திர whatsaap சிவயோக வகுப்பில் கற்றுக்கொள்ளவும். உலகில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் இருந்த படியே முழுமையாக அனைத்து சிவயோகங்களையும் திருமூலர் பெருமானின் குருவருளால் கற்கும் வாய்ப்பு. மேலதிக விபரங்களுக்கு சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம்குமார் +918148285865 என்ற எண்ணுக்கு whatsaap மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை நிரப்பி, வகுப்பு கட்டணத்தை செலுத்தி வகுப்பில் இணைந்து முழுமையாக கற்று பயன்பெறவும்.)


Wednesday, 10 December 2025

ஆனந்த விநாயகர்

தகடி என்பது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும், இங்கு புகழ்பெற்ற அழகியநாதேஸ்வரர் கோவில் உள்ளது, இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; மேலும், இங்கு வேத கோஷங்களைக் கேட்கும் ஆனந்த விநாயகரும் உள்ளார், இந்த இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய கிராமங்களில் ஒன்றாகும். 

முக்கிய அம்சங்கள்:

அமைவிடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தகடி.

கோவில்: அழகியநாதேஸ்வரர் கோவில் (சிவன் கோவில்).

சிறப்பு: ஆனந்த விநாயகர் சன்னதி.

அரசியல்: ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 

சுருக்கமாக, தகடி என்பது திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம், அதன் அழகியநாதேஸ்வரர் கோவில் மற்றும் ஆனந்த விநாயகர் சிலைக்கு பெயர் பெற்றது. 



Tuesday, 9 December 2025

பொய்யா மொழி


  

பழைய குருடி கதவைத் திறடி

"பழைய குருடி, கதவைத் திறடி".

இந்தச் சொல்லடைவை(முது மொழி) உருவாக்கியவர்
பொய்யா மொழிப் புலவர் ஆவார். இச் சொல் தொடர்
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது? இதன் பொருள்
என்ன? போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம்.
அதற்குமுன் பொய்யா மொழிப் புலவரின் வரலாற்றை
அறிந்து கொள்வோம்.

காஞ்சிபுரத்தை யடுத்த செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த
அதிகத்தூரில் அமண்பாக்கக் கிழார் மரபில் தோன்றியவர்
பொய்யாமொழிப் புலவர். அவரது இயற்பெயர் சாத்தனார்
என்றும் அம்பலத் தரசன் என்றும் சொல்லப்பட்டன. தொண்டை
மண்டலத்தைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் ஊரில் கல்வி
பயின்றார். கல்வியில் இவரது திறமையைக் கண்ணுற்ற
ஆசான் இவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று அழைத்த
தாகச் சொல்லப்படுகிறது. இவரது வாக்கு சத்திய வாக்காகப்
பலித்ததால் ஆசான் அவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று
அழைத்தார்  என்று  தோன்றுகிறது.இவரது காலம் பதின்மூன்
றாம் நூற்றாண்டாகும்.

குருகுலத்தில் கல்வி கற்கும் பொழுது ஆசானின் சோளக் கொல்லை
யைக் காவல் காக்கும்  கடமை சுழற்சி  முறையில் ஒவ்வொரு மாணவருக்
கும் வரும். அன்றைய முறை அம்பலத்தரசனுக்குரியது. காவல் காத்துக்
கொண்டிருக்கும் போது அங்கே வீசிய இதமான காற்றால் அயர்ந்து உறங்கி
விட்டார். விழித்த பொழுது சோளக் கொல்லையைச் சில குதிரைகள் மேயக்
கண்டார். அவைகளை விரட்ட முயன்றார். முரட்டுக்  குதிரைகளை  அடக்க
முடியாமல் தவித்தார். அருகிலுள்ள காளிகோவூலுக்குச் சென்று மாகாளி
யிடம் முறையிட்டார். அம்மை அவர்மீது பரிவுகொண்டு அவர் சொல்வது
பலிக்குமாறு ஆசீர்வாதம் செய்ததாகச் சொல்வர். கோவிலிலிருந்து
வெளியே வந்த அம்பலத்தரசன் உடனே பாடினார்.
"வாய்த்த  வயிரபுர  மாகாளி  அம்மையே!
ஆய்த்த  மணலில்  அணிவரையிற்---காய்த்த
கதிரைமா ளத்தின்னும்  காளிங்கன்  ஏறும்
குதிரைமா  ளக்கொண்டு  போ"
என்று பாடியவுடனே மேய்ந்து கொண்டிருந்த குதிரை தடாலென்று கீழே
விழுந்து இறந்ததாகச் சொல்லப்படுகிறது. காளிங்கன் அந்த நாட்டுச்
சேனாபதி. அவர் குதிரை மாண்டதால் ஆசான் முதல் மாணவர்கள் வரை
அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும்
வேண்டிக் கொண்டதால் அம்பலத்தரசன் கடைசி அடியை மாற்றிக்
"குதிரைமீ  ளக்கொண்டு  வா" என்று பாடிக் குதிரையின் உயிரை மீட்டுக்
கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து  அம்பலத்தரசன்
பொய்யா மொழிப் புலவராக உருமாறினார். காளிங்கன் தன் மகள் அமிர்தத்
தைப் பொய்யா மொழிப் புலவருக்கு மணம் செய்து கொடுத்தார். சிறிது காலம்
அமைதியாக நடந்த இல்லறம் நாள் செல்லச் செல்லப் பிணக்கும் பூசலுமாகத்
தள்ளாடியது.காரணம், புலவர்களுக்கே உரிய வறுமைதான். ஒருநாள் பொய்யா
மொழிப் புலவர் சினங்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

புலவர்களுக்குச் செல்வச் செழிப்பு  வாய்ப்பது அரிதே; ஆனால் சிறப்புக்கும் பெரு
மைக்கும் எப்போதும் குறை வாராது. பொய்யா மொழிப் புலவர் கால் நடையாக
வந்தாலும் வழிநெடுகிலும் உண்ண உணவும் அருந்தக் குடிநீரும் உறங்கத் திண்ணை
யும் கிடைத்தன. அவர் மனத்தில் பேரவா ஒன்று தோன்றியது. மூன்றாம் தமிழ்ச் சங்கம்
மறைந்த பிறகு நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் மதுரையில் தோற்றுவிக்க விரும்பி
னார். அதற்குப் பொருள் தேடல் வேண்டும். இப்படியான சிந்தனைகளோடு காளை
யார்கோவில் வந்தடைந்தார். அங்கு ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். வெளியே வந்த
பெண் "ஐயா! நான் கண் பார்வையற்றவள். என் தமக்கையும், தாயும், தாய்வழிப் பாட்டி
யும் அரைக்குருடர்கள். எங்களை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்?" என்று கூறினாள்.
புலவர்" பெண்ணே! உன் பெயர் என்ன?" என்று வினவினார்."என் பெயர் கூத்தாள்"
எனப்  பதிலிறுத்தாள். உடனே புலவர் பாடத் தொடங்கினார்.
"கூத்தாள் விழிகளிரு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு."
அவர் பாடியவுடன் கூத்தாளுக்கும் அவள் தமக்கை,
தாய், தாய்வழிப் பாட்டிக்கும் கண்பார்வை கிடைத்த
தாகச் சொல்லப்படுகிறது. கூத்தாள் முதலியவர்கள்
தேவரடியார் தொண்டு செய்பவர்கள். அவர்களும்
அவர்களைப் போலத் தேவரடியார்களும் நான்காம்
தமிழ்ச்சங்கம்  தோற்றுவிக்கப் பொருள் தந்தார்கள்.
எல்லாப் பொருளையும் ஒன்று சேர்த்துக்
ஒப்படைத்து "நான் மதுரைக்குச் சென்றுவரும் வரை
நீயே பத்திரமாக வைத்திரு" என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.

பாண்டி மண்டல மாறை நாட்டுத் தஞ்சாக்கூரை அடைந்து
அங்கு மாறவர்மன் குலசேகரபாண்டியனிடம் அமைச்சராக
வும் படைத் தலைவராகவும் விளங்கிய மாவலி வாணர்
குலத்தைச் சேர்ந்த சந்திரவாணன் என்பவரின் நட்பைப்
பெற்றார். அவர்மீது தஞ்சை வாணன் கோவை என்ற நூலைப்
பாடி அரங்கேற்றினார். சந்திரவாணன் மனைவி
யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னாலான தேங்காயைப்
பரிசாகத் தந்தார். ஏனெனில் அந்த அம்மையும் சிறந்த
புலமையும் இரசனையும் உடையவர். சந்திர வாணன்
ஒவ்வொரு தேங்காயின் மூன்று கண்களுக்கும் மூன்று
இரத்தினங்களைப் பொதிந்து புலவர்க்குப் பரிசளித்தார்.
பொய்யா மொழிப் புலவர்க்குக் கிடைத்த அருமையான
அன்பளிப்பு!

இம்மாதிரி தமக்குக் கிடைத்த எல்லா அன்பளிப்பையும்
காளையார் கோவில் கூத்தாளுக்கு அனுப்பி வைத்துப்
பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார். இடையில்
மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்து
நாலாம் தமிழ்ச்சங்கம் தொடங்கப் போதிய உதவிகள்
செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்
பொழுது சோழர்கள் படையெடுத்து வரலாம் என்ற
பேச்சு அடிபட்டதால் தமிழ்ச் சங்க வேலை சுணங்கியது.

பொய்யா மொழிப் புலவர் காளையார்கோவிலை
நோக்கிப் பயணப்பட்டார். ஒருநாள் மாலை வேளை
யில் அவ்வூரை வந்தடைந்தார். கூத்தாள் வீட்டை
நெருங்கிக் கதவைத் தட்டினார். இடையில் கூத்தாள்
மற்றும் அவள் தமக்கை, தாய், தாய்வழிப் பாட்டி
ஆகியோரரின்  நல்ல மனம் திரிந்து கபடச் சிந்தனை
குடிபுகுந்தது. பொய்யா மொழிப் புலவர் அனுப்பி
வைத்த பணமும் பொருளும் பலமடங்கு அதிகரித்
திருந்தன.. எப்படியாவது அதை மோசடி செய்யத்
திட்டமிட்டனர். பொய்யா மொழியார் கதவைத் தட்டி
யதும் "இதற்கு முன்பு இவ்வீட்டில் குடியிருந்தவர்கள்
காலி செய்து வெளியேறிவிட்டனர். நாங்கள்  புதிதாகக்
குடிவந்துள்ளோம்" என்று வீட்டுக்குள் இருந்தவாறே
கதவைத் திறக்காமலேயே சொன்னார்கள்.

புலவர் மிகவும் சினமடைந்தார். பேராசையினால்
தமிழ்ச்சங்கத்துக்காகத் திரட்டிய பணத்தையும் பொருளை
யும் அபகரிக்கத் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டார்.
,கோபத்தோடு "பழைய குருடி, கதவைத் திறடி" என்று  உரத்துக் குரல்
கொடுத்தார். அவர் வாக்குப் பலித்ததோ இல்லை கூத்தாள்
வகையறாக்கள் மிதமிஞ்சிய அச்சத்தில் இருந்ததாலோ
அந்த நாலு நபர்களுக்கும்  கண்பார்வை தெரியாமற் போயிற்று.
நால்வரும் புலவரின் கால்களில் விழுந்து வணங்கி
"பேராசையினால் கபட வேலை செய்தோம். மன்னித்து விடுக"
என்று கண்களில் நீர்வழியக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
புலவரின் பணத்தையும் பொருளையும் அவரிடமே ஒப்படைத்தனர்.

புலவர் அவர்களை மன்னித்து விட்டுத் தமக்குரிய பணத்தையும்
பொருளையும் எடுத்துக் கொண்டு தமது ஊரான அதிகத்தூர்
வந்தடைந்தார். ஆர்க்காட்டுக் கோட்டம் அரசூரைச் சேர்ந்த சீநக்கன்
என்னும் வள்ளலோடு புலவர் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
சீநக்கன் இறந்தபொழுது நம் பொய்யாமொழியார் அவர் சிதையில்
பாய்ந்து  உடன்கட்டை ஏறினார் எனச் சொல்லப்படுகிறது. கோப்
பெருஞ் சோழனுக்காகப் பிசிராந்தையார் என்ற புலவர், வேள்
பாரிக்காகப் புலவர் கபிலர் உடன்உயிர் துறந்தது போலவே
சீநக்கன் என்னும் வள்ளலுக்காக நம் பொய்யா மொழியாரும்
உடன் உயிர்துறந்தார்.


Saturday, 6 December 2025

காதர் பாட்சா

 தோகைமயில் மீதில் ஏறி


வாருடனே காத்தருளும் ஐயா – முருகைய்யா


அவர் பாட ஆரம்பித்ததும், அந்த மூன்று ஆங்கிலேயர்களும் மெய்மறந்து கேட்டிருக்கிறார்கள். காதர் பாட்ஷா அந்தப் பாடலை பாடி முடிக்க முக்கால் மணி நேரம் ஆனது. இதனால் தூக்குக் தண்டனை நிறைவேற்றும் நேரத்தை, ஆங்கிலேய அதிகாரிகள் தவற விட்டனர். தூக்கு தண்டனை நிறைவேற்ற குறிக்கப்பட்ட நேரம் தவறினால், ஒருவரை தூக்கில் போட முடியாது, மீண்டும் நீதிபதியிடம் முன் நிறுத்தி புதிய தேதியை பெற வேண்டும் என்பது சிறை விதி. 


காதர் பாட்ஷாவை அதிகாரிகள் மீண்டும் நீதிபதியிடம் முன் நிறுத்தி, அவரை மீண்டும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை உத்தரவிடுமாறு வேண்டினர். அந்த நீதிபதியும் ஒரு ஆங்கிலேயர். முந்தைய உத்தரவின்படி தூக்கிலிடுவது கால தாமதத்திற்கான காரணத்தை நீதிபதி வினவினார். மூன்று ஆங்கிலேய அதிகாரிகளும்  நடந்ததை அவரிடம் விவரித்தனர். ஆங்கிலேயரான அந்த நீதிபதி தானும் அப்பாடலை கேட்க விரும்புவதாக கூறி, காதர் பாட்ஷாவிடம் ஒரு ஆர்மோனிய பெட்டியை  கொடுக்குமாறு உத்தர விட்டார். 


 காதர் பாட்ஷா மீண்டும் சிறையில் பாடிய அந்த முருகன் பாடலை, நீதிபதி முன் பாடினார். பாடலைக் கேட்ட ஆங்கிலேய நீதிபதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.  அவர் தனது உத்தரவில், மீண்டும் காதர் பாட்ஷாவை தூக்கிலிடுவதை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தர விட்டார்.  அவர் தனது உத்தரவில், இப்படி உள்ளத்தை உருக்கும்  பாடலை பாடும் ஒருவர் நிச்சயம் கொலை செய்யும் அளவிற்கு கொடூர மனம் படைத்தவராக இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.





வீரராகவ முதலியார்

இவர் பாதேயத்தை நாய் கவர்ந்தோடியபோது சீராடை என்ற தனிநிலைக் கவி பாடினவர். அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மற்றும் பிரபுக்கள் சிலர் மீது செய்யுள் கூறிப் பல பரிசில்கள் பெற்றவர்.மேலும் யாழ்ப்பாணம் வந்து பரராசசேகர மன்னவர் முன் செய்யுள் அரங்கேற்றி அரிய பரிசில்களும் பெற்றது மட்டுமில்லாது இப்பெருமையை ஈழ மண்டல மளவுந் திறைகொண்ட கவி வீரராகவன் வீடுக்கு மோலை என்று தனது சிட்டுக் கவியிலுஞ் சுட்டிக் காட்டியவர். மேலும் பரராசசேகர மன்னனால் பாடப்பட்டு புகழ் பெற்றவர். பார்வையற்றவரான இவர் வில்லேந்தி நின்ற பரராசசேகர மன்னவரை வருணித்து அரிய வெண்பா ஒன்று கூறியவர். இவர் பல தனி நிலைச் செய்யுள்களையும் கழுக்குன்றப்புராணம், கழுக்குன்றமாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர்முருகன்பிள்ளைத்தமிழ், கயத்தாற்றரசனுலா முதலிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார். மேலும் சேயூர்முருகன்பிள்ளைத்தமிழ் என்னும் பாவில் ஐயதென் கதிர்காமமென்னும்மலைமுதலாய் என்று கதிர்காமத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.[1].




இவர் பாடிய சில பாடல்களை ஈண்டு தருதும்:-


இவர் கட்டுச்சோற்றை நாய் கவர்ந்த போது, இவர் கூறிய கட்டளைக்கலித்துறை.


சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து 

பாராறு நான்முகன் வாகனந் தன்னைமுன் பறறிக்கவ்வி 

நாரா யணனுயர் வாகன மாயிற்று நமமைமுகம் 

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே


பரராசசேகர மன்னவர் கையில் வில்லும் அம்பும் கொடுத்து, அவர் கோலம் எவ்வாறு என்று வினாவிய அமைச்சர்களுக்கு, பார்வையற்றவரான இவர் வெண்பாவில் கூறிய பதில்.


வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்லை

ஏழு மராமரமோ வீ ங்கில்லை- ஆழி 

அலையடைத்த செங்கை யபிராமா  வின்று 

சிலையெடுத்த வாறேமக்குச் செப்பு   


கழுக்குன்றமாலை பா ஒன்றைக் கீழே காட்டுதும்:-


மாடேறு தாளு மதியேறு சென்னியு மாமறையோன் 

ஓடேறு கையு முடையார் தமக்கிட மூருழவர்

சூடேறு சங்கஞ் சொரிமுத்தை முட்டையென் றேகமலக்

காடேறு மன்னஞ் சிறகா லணைக்குங் கழுக்குன்றமே,, 


இவரின் பிரபந்தம் ஆகிய சந்திரவாணன் கோவையில் இருந்து ஒரு பாடலை கீழே காட்டுதும்


மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே 

பாலேரி பாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண் 

டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன்  

மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு   மெய்யெங்குமே



திரிசிரா நாதர் அற்புதம்



 தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்குக் கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்குப் பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்


கம்பர் நிகழ்த்திய அற்புதங்கள்

 #இது_சத்தியமான_ஒர்_சொல் 


#ஶ்ரீராமனின்_அருள் #இருந்தால்_மட்டுமே #இதை_உங்களால் #தொடர்ந்து_படிக்க_முடியும்!


#கம்பராமாயண #அரங்கேற்றம்:


கம்பர் இராமாயணத்தை அரங்கேற்ற கம்பர் பட்ட பாடு



“பத்தாயிரம் கவிதை முத்தாகப் பாடிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இனி வித்தாக வில்லையென்று பாடு”

-கண்ணதாசன்.


கண்ணதாசன் கூறியதைப் போல பத்தாயிரம் கவிகளில் திருமாலின் இராமாவதாரத்தைப் பாடிய கம்பருக்கு இணையாக யாரும் இதுவரைத் தோன்றவில்லை; தோன்றவும் போவதில்லை. சரஸ்வதிதேவி, காளிதேவி, திருமால் ஆகியோரின் பரிபூரண அருளைப் பெற்ற கம்பர், தனது இராமாவாரத்தை அரங்கேற்றம் செய்வதற்குள் அவர் பட்ட பாடு மிக அதிகம்.


மனிதர்கள் இடைஞ்சலாக இருந்தாலும், இறைவனே அவருக்கு உறுதுணையாக இருந்தார்.


இராமரின் வரலாறான வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி, அதன் வழி நூலாகத் தமிழில் இராமாயணத்தை எழுதினார் கம்பர். ( கம்பராமாயணம் மொழிபெயர்ப்பு நூல் அல்ல; வழி நூல்) அதற்கு “இராமாவதாரம்” என்று பெயரிட்டு அதை ஶ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய நினைத்தாராம் கம்பர்.


திருமாலின் இராமாவதாரத்தைச் சிறப்பித்துச் சொல்லும் நூலானாலும், அதனை அத்தனை சுலபமாக ஏற்கவில்லை வைஷ்ணவர்கள்.


ஏனென்றால் இது அரியதொரு நூல் என்பது அவர்களுக்கும் தெரியும்; இருப்பினும் இந்நூலைச் சைவர்களே ஆதரிக்க வேண்டும்; அப்போது தான் இதன் மகிமை இன்னும் கூடும்! என எண்ணினர் வைஷ்ணவப் பெரியோர்கள்.


எனவே தில்லை மூவாயிரவர்களிடம் சென்று இந்நூலுக்கு நற்சான்று வாங்கி வந்தால் தான், இதை அரங்கேற்ற அனுமதிப்போம்! என்றனராம் ஶ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள்.


சிவபெருமான் நடராஜராக வீற்றிருக்கும் சிதம்பரமே தில்லை. அக்காலத்தில் சைவ, வைஷ்ணவ வேறுபாடுகள் தீவிரமாக இருந்த சமயம்.


ஒருவரையொருவர் தீவிரமாக எதிர்த்துக் கொள்வர். அப்படிப்பட்ட காலத்தில் சிதம்பரம் நகரில் சிவபெருமானுக்குப் பூஜை செய்வதற்கென்றே உரிமைப்பெற்ற தீவிர சைவர்கள் மூவாயிரம் குடும்பத்தார் அங்கே இருந்தனர்.


அவர்களே “தில்லை மூவாயிரவர்கள்” என அழைக்கப்பட்டனர். தீவிர சைவர்களான மூவாயிரவரும் இணைந்து கம்பரது இராமாயணம் அருமையானது! என நற்சான்று! தர வேண்டும்! என்பதே ஶ்ரீரங்கத்து வைஷ்ணவர்களின் கூற்று.


#இதை_எப்படி_சாதித்தார் கம்பர்?


கம்பராமாயணம் அரங்கேற சிவபெருமானே அருள் புரியும் போது, அவரால் சாதிக்க முடியாதா என்ன?


கம்பர் தில்லைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் தில்லை மூவாயிரவர்களில் பலரையும் சந்தித்து, தனது வேண்டுகோளை வைத்தார் ‘நாங்கள் மூவாயிரவர்களும் என்றைக்கு ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கிறோமோ, அன்று வந்து உமது நூலைப் பற்றிச் சொல்லி, நற்சான்று வாங்கிக் கொள்ளும்!’ என தில்லை வாழ் தீட்சிதர்கள் கம்பரிடம் கூறிவிட்டனர்.


ஆனால் ஒருநாளும் மூவாயிரவரையும் ஒருங்கே பார்க்கக் கம்பரால் இயலவில்லை இறைவன் மீது கொண்ட தீவிர பக்தியால் மனம் தளராது, கம்பரும் முயற்சித்துக் கொண்டேயிருந்தார்.


#திருவிளையாடல்களைப் புரிவதில்வல்ல

#சிவபெருமானே கம்பருக்கு உதவ #முன்வந்தார்! எனலாம். அன்று தலைமை தீட்சிதரின் மகனைப் பாம்பு கடித்து, சாகும் தறுவாயில் இருந்தான். பாலகனின் அருகே தில்லை மூவாயிரவரும் கூடியிருந்தனர்.


இந்த சோகமயமான இடத்தில் கம்பர் வந்து #நின்றார்; இவரைக் கண்டதும் சினம் தலைக்கேறியது தீட்சிதர்களுக்கு 

#எங்கே_வந்து உங்கள் நூலுக்கு நற்சான்று பெற #வந்திருக்கிறீர்? என்றனர் தீட்திதர்கள்.


தீட்சிதர்களே! கோபம் வேண்டாம்; எம்பெருமான் அருளால் இந்த பாம்புக்கடி விஷமும் விலகும்! அவ்வாறு விலகி, உங்கள் மகன் #உயிர்ப்பிழைத்தால் எனது 

#நூலுக்குச்சான்றுதருவீர்களா? என்றார் கம்பர்.


#உம்மால்_எப்படி_முடியும்?


புத்திரனைப் 

#பிழைக்க_வைத்தால், நற்சான்று தருகிறோம்! என்றனர் தீட்சிதர்கள்.


இலங்கையில் அரக்கர்களோடு இராமசேனை போர்புரிகையில், இராவணனின் மகன் இந்திரஜித் (மேகநாதன்) முறையானப் போரில் இவர்களை வெல்ல இயலாது ! என மாயப்போர் புரிந்தான்.


இலட்சுமணரும், இந்திரஜித்தும் செய்த போரில் இலட்சுமணரின் தாக்குதலைச் சமாளிக்க இயலாது, தனது மாயவித்தையால் விண்ணில் மறைந்து நின்று கொண்டு, நாகப்பாசத்தைப் போட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான் இந்திரஜித்.


கொடிய நாகங்களே பாணத்தின் வடிவில் அனைவரையும் பிணைத்திருக்கும். இராம, இலட்சுமணர்கள் உட்பட அனைவரும் நினைவிழந்துக் கிடந்தனர்.


அனுமனை எந்த ஆயுதமும் தாக்காதென்பது முன்பு இந்திரன் மற்றும் சிவபெருமான் அளித்த வரமாதலால், சிரஞ்சீவியான அவருக்கு எப்பாதிப்பும் இல்லை.


கரடிகளின் தலைவரான ஜாம்பவானும் சிரஞ்சீவி ஆதலால், அவரும் அனுமனும், இராமரைத் தேடி வந்தனர்.


நாகப்பாசத்திலிருந்து விடுபட்டுவிட்ட இராமர், தம்பி இலட்சுமணன் நினைவிழந்துக் கிடப்பதைக் கண்டு துக்கித்தார்.


இராமர் கலங்குவதைக் கண்டு மனம்பொறாதத் திருமாலின் வாகனமான பெரிய திருவடியாம்! கருடாழ்வார் விண்ணும் , மண்ணும் கலங்கப் பெரியதொரு செம்பொன் மலையே பறந்து வருவதைப் போல, பறந்து வந்தார்.


கருடனைக் கண்டால் நாகங்கள் பயந்தோடிவிடும்! என்பதால், பாணங்களின் வடிவிலிருந்தச் சர்ப்பங்கள், கருடனின் நிழல் பட்டதுமே தெறித்து ஓடிவிட்டன.


கருடன், இராம, இலட்சுமணர்களை வருடிக் கொடுத்துவிட்டு பறந்தது சென்றது. நாக பாசத்திலிருந்து யாருமே தப்ப இயலாது, அப்படியிருக்க இம்மானிடர்கள் எப்படி மீண்டனர்? எனக் கலங்கினான் இராவணனைவிட மாவீரனான இந்திரஜித்.


கம்பர் இதை ‘யுத்தகாண்டத்தில்’

“நாக பாச பலம் ” எனப் பாடியுள்ளார்.


பாம்புகடித்துச் சாகக்கிடக்கும் பாலகனின் அருகில் நின்று

இராம, இலட்சுமணர்களைக் காப்பாற்றிய

நாகபாச படலத்தில் கருடாழ்வார் வரும் பகுதிகளைப் பாட ஆரமாபித்தார்! கம்பர்.


அதுமட்டுமல்லாது, கூடவே ஒரு சில தனிப்பாடல்களையும் பாடி “நச்சரவமே விலகு” என்றார் கம்பர்.


மாசக்தி காளியன்னையே இவர் இராமாயணம் எழுத விளக்கேந்தி நின்றாள்! என்றால், நச்சரவங்கள் இவர் பாடலுக்கு முன் எம்மாத்திரம்?


கம்பர் பாடி முடித்ததும் பாலகனின் உடலில் ஏறியிருந்த விஷத்தை அவனைக் கடித்தப் பாம்பே மீண்டும் வந்து உறிஞ்சிச் சென்றது; பாலகனும் உயிர்பிழைத்து எழுந்தான்.


பன்னிரண்டு பாடல்களில் கருடன், திருமாலைத் துதிப்பதை அழகாகப் பாடியுள்ளார் கம்பர். மனதிற்குள்ளாகவே திருமாலின் மாயையினைத் துதித்தவாறே வந்து நின்றார்! கருடன்! எனப் பாடியுள்ளார்! கம்பர்.


கருடன் வந்ததும் நாகபாசம் விலகியதைக் குறிக்கும் பாடலின் பொருள்:


கொடியவனாகிய இந்திஜித் விட்ட நாகபாசம் வாசனை மிக்க தாமரை மலரின் தண்டிலுள்ள நூலின் தன்மைபோல் மெலிந்தது எனக் கூறுவது எதற்கு? மேகம் என யாரும் நினைக்கக் காரணமான ‘கொடைத் தன்மை மிக்க வலிமையுடைய மேலோனாகிய 

சடையப்ப வள்ளலின் திரு வெண்ணெய் நல்லூரை அடைந்த வேதியர்கள், சொல் வளம் மிக்கப் புலவர்கள் முதலியவர்களை வருத்திய பசி நீங்கியதைப் போல 

அந்நாக பாசம் உருத் தெரியாமல் நீங்கியது’.


இப்பாடலில் தன்னை ஆதரித்தச் சடையப்ப வள்ளலையும் நன்றியோடு புகழ்கிறார் கம்பர்.


அடுத்தப் பாடலின் பொருள்:


பல ஆயிரம் காத தூரம் முடிவு பெறாது பரவியுள்ள இரு பக்கத்தும் அமைந்த சிறகுகளைக் கருடன் வீசுவதால் எழுகின்ற காற்றினால் பூமியில் இதுவரை விலகாதிருந்த இருளானது விலகிச் சென்றது. அப்போது இலட்சுமணர் முதலியோரின் உடம்புகளில் நின்ற நாகக் கணைகள் சிதறி போயின.


அக்கணைகளால் உண்டான தழும்புகளும், எல்லா வகையிலும் பாவத்தை விடுத்து, அறத்தையே போற்றிச் செயல்படுபவனின் மீது, பொய் தகவல்களைப் புனைந்துரைப்பதில் வல்லவன், உண்டாக்கிய பழி நீடித்து நிற்காது அழிவதைப் போல அழிந்தன’ என்கிறார் கம்பர்.


அவரது காலத்திலேயே பொய்தகவல்களைப் பரப்புவோர் இருந்துள்ளனர்! எனத் தெரிகிறது.


“பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவைவீச வந்து படர்கால் செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று…….”


குரங்குச் சேனை வெள்ளங்கள் ஊழிக் காலத்திற்குப் பின் பிரம்மாவால் புதிதாகப் படைக்கப்பட்டதைப் போல உயிருடன் எழுந்து நின்றன! என்கிறார் கம்பர்.


எய்துவிட்டால் உயிரை உறிஞ்சாது செல்லாத நாக பாசங்கள் அனைவரையும் விட்டு விலகியது. எங்களுக்கு உதவிய தாங்கள் யாரென? இராமர், கருடனைப் பார்த்து நன்றியோடு வியந்துக் கேட்க, கருணைக் கடலே! தங்களையே யாரென அறியாத மருட்சி நிலையயாலே, தாங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள்; இராவணனையும் கொன்ற பின்னர், தங்களிடம் வந்து நமக்கிடையேயுள்ள பழைய உறவுமுறையை விளக்குகிறேன்! எனக் கருடாழ்வார் பறந்து சென்றதாகக் கூறுகிறார் கம்பர்.


இனி அவர் பாம்பின் விஷம் விலகப் பாடியப் பாடல்கள்:


“ஆழியான் பள்ளி அணையே அவன்…. கடைந்த ஆழி வரையின் மணித்தாம்பே

பூழியான் பூணே புரமெரித்த பொற்சிலையில்… பூட்டுகின்ற

நாணே அகல நட”.


1.ஆழி=சக்கரம்,

2.ஆழி=கடல்

சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் படுக்கையாக இருப்பவனே!

திருப்பாற்கடலில் மந்தர மலையை மத்தாக இட்டு கடைந்தபோது அதில் கயிறாக இருந்தவனே! (அமுதம் கடைய பயன்பட்டவனே)

பூழியான்= விபூதியைப் பூசிய சிவபெருமான்.

சிவன் முப்புரமெரிக்கப் போனபோது மேருமலையை வில்லாக்கி அதில் பாம்பை நாணாக்கினாராம்.


அத்தகைய சிறப்புடைய பாம்பே நீ இந்த பிள்ளையை விட்டு விலகி நடந்து விடு! என்கிறார் கம்பர்.


“பாரைச் சுமந்த படவரவே பங்கயக்கண் வீரன் கிடந்துறங்கும் மெல்லணையே.. ஈரமதிச் செஞ்சடையான் பூணும் திருவாபரணமே

நஞ்சுடையாய் தூர நட”


பார்=உலகு

உலகையே தாங்கும் ஆதிசேஷனே! தாமரைக்கண்ணனாகிய திருமால் கடலின் மீது படுத்துறங்க மென்மையான அணையாக இருப்பவனே! குளிர்ந்த சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமான் அணியும் ஆபரணமே! இத்தகைய சிறப்புடைய நச்சரவமே! உன் நஞ்சை எடுத்துவிட்டு தூர விலகி நட! என ஆணையிடுகிறார்! கம்பர்.


தெய்வீகக் கவியின் வாக்கை மீறும் சக்தி அந்த விஷப் பாம்பிற்கும் உண்டோ? கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வாக்கைக் கேட்டு பாம்பும் விஷத்தை உறிஞ்சி விலகியது.


தில்லை மூவாயிரவர்களும் கம்பருக்கு நற்சான்று வழங்கினர். 

மகிழ்வோடு கம்பரின் இராமாயணம் ஶ்ரீரங்கத்தில் நரசிங்கர் சந்நதியின் முன்பு அரங்கேற்றமாகியது.


விபீஷணன் , இராவணனுக்குப் புத்தி சொல்லுகையில், இரணியனின் கதையைச் சொல்லி புத்தி சொல்வதாக எழுதியுள்ளார் கம்பர்.


அவ்வாறு நரசிங்கரைப் பற்றி கம்பர் பாடி வருகையில், ஶ்ரீரங்கம் கோயிலில் அருள்பாலிக்கும் மேட்டழகிய சிங்கர் ( நரசிங்கர்) தனது தலையை அசைத்து சிங்கக் கர்ஜனையைச் செய்து, #பிள்ளாய்! #நம்மாழ்வானைப் #பாடினாயா? எனக் கேட்டாராம்.


எனவே இராமாவதாரத்தைப் பாடி முடித்தப் பின்னர், “#சடகோபர்_அந்தாதி” என்ற நூலையும் இயற்றினாராம் கம்பர் (சடகோபர்= நம்மாழ்வார்) #நரசிங்க_மூர்த்தியே சிங்கக் கர்ஜனையைச் செய்து கம்பராமாயணத்தை #அங்கீகரித்தார்! என்றால், அதன் மேன்மையை சாதாரண மானிடர்களால் உணரவும் இயலுமோ?. உயிர் போகும் நிலையில் இருந்தப் பாலகனைத் தன் தெய்வீகப் பாடல்களால் பிழைக்க வைத்தவர், நம் தமிழ்க்கவிஞர், கவிச்சக்கரவர்த்தி கம்பர்.


#எனது மதம்

 #சனாதன தர்மம்

#அற்புதமான வாழ்க்கை

      🐘 ஸ்ரீராமஜயம் 🐘

முசுகுந்தன்




ஒரு சமயம் கயிலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள வில்வ மரங்களில் முசுவின் (குரங்குக்) கூட்டங்கள் தங்கியிருந்தன. அவற்றில் வயது முதிர்ந்த ஆண் முசு (குரங்கு) ஒன்று, வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே அமர்ந்திருந்த பார்வதி - பரமேஸ்வரர் மீது போட்டுக் கொண்டிருந்தது. அம்பிகைக்கு சற்றே கோபம் வந்தது. ஆனால் சிவபெருமான், தேவி ! இங்கே நம்மை அர்ச்சிக்கும் இந்த முசுவை கோபிக்கலாமா? என்று அவளை அமைதிப்படுத்தினார். உமையும் மனமிரங்கி முசுவுக்கு அருள்புரிய எண்ணினாள். அதேகணம், அந்த முசுவின் மனதிலுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ் ஞானத்தை அருளினார் பரமன். ஞானம் பெற்ற குரங்கு விரைவாக கீழே இறங்கி வந்து அம்மையப்பனை வணங்கி, தனது பிழையைப் பொறுத்தருள வேண்டியது. நீ எதுவும் பிழை செய்யவில்லை; சிறந்த வில்வ பத்திரங்களால் (இலைகளால்) எம்மைப் பூசித்தாய். ஆகவே, நீ மனு வம்சத்தில் பிறந்து உலகம் முழுவதையும் அரசாள்வாயாக என்று அருள்புரிந்தார் பரமேஸ்வரன். அதைக்கேட்ட முசு, எப்போதும் தங்களையே தரிசித்துக் கொண்டு, அழியாத அந்தப் பேரானந்தத்துடன் இங்கேயே இருந்து விடுகிறேன். பூமியில் பிறந்தால் செல்வத்தின் வலையில் சிக்கி அழிவே உண்டாகும். மீண்டும் பிழைப்பது எப்படி? என்றது. உடனே சிவனார், முசுவே... உன் மனதில் தோன்றியது சரிதான். ஆனாலும் கவலை வேண்டாம். இப்போது பூமியில் பிறந்து அரசாண்டு, பிறகு நம்மிடம் வருவாயாக! என்றார். அதற்கு தலைவணங்கிய முசு, எம்பெருமானே... மானிடப் பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி, இந்தக் குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி அடியேனுக்கு அருள்புரியுங்கள் என்று வேண்டியது. பெருமானும் அவ்வாறே வரம் தந்தருளினார். சத்தியம் காக்க தமது செல்வம், ஆட்சி, மனைவி, மகன் அனைத்தையும் இழந்த அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில், குரங்கு முகத்துடனும், மற்ற அவயவங்கள் மிக்க அழகுடைய மன்மதனைப் போன்றும் திகழ, அந்த முசு பூமியில் பிறப்பெடுத்தது. அந்தக் குழந்தைக்கு முசுகுந்தன் என்று பெயரிட்டனர்.


முசுகுந்தன் நன்கு வளர்ந்து சோழ நாட்டில் கருவூரில் இருந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். இந்நிலையில், சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, தேவர் பதியை மீட்ட செய்தி முசுகுந்தனுக்கு எட்டியது. கந்தவேளுக்கு, இந்திரன் தன் மகள் தேவசேனாவை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுக்க இருக்கும் செய்தியையும் இந்திர தூதர்கள் முசுகுந்தரிடம் தெரிவித்தனர். அகமகிழ்ந்த முசுகுந்தன், இந்த இனிய செய்தியை சொன்ன உங்களுக்கு என்ன பிரதியுபகாரம் செய்யலாம்? என் செல்வங்கள் அனைத்தையும் தரவா? என் அரசாட்சியைத் தரவா? என்று மகிழ்ச்சிக் களிப்பில் கேட்டார். அவரின் அன்பு பக்தியைக் கண்டு இந்திர தூதர்கள் மகிழ்ந்து, அரசே.. தூதுவராகிய எங்களுக்கு இவை ஏற்கக் கூடியதல்ல! நீங்கள் திருமணத்தில் கலந்துகொள்வதே இதற்குச் சமம் என்றனர். முசுகுந்தனும் அவரது நாட்டு மக்களும் யானை, குதிரை முதலான படைகளோடும், கொக்கரை, படகம், பேரி, குடமுழா முதலான இசைக் கருவிகளை ஒலிக்கச் செய்து கொண்டும் திருப்பரங்குன்றத்தை அடைந்தனர். அங்கு முசுகுந்தர் தங்குவதற்குத் தனி மாளிகையையே அமைத்திருந்தனர். இந்திரன்-இந்திராணி மற்றும் தேவர்களைக் கண்டு வணங்கினார் முசுகுந்தர். அனைவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். தெய்வானை செம்பவள நிறத்தில் புடவை அணிந்து பலவித நகைகளைச் சூடி, திருமகள், கலைமகள், அரம்பையர் புடைசூழ மணப்பெண் கோலத்தில் காட்சியளித்தாள். அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவமாக அமைந்த ஆறுமுகப் பரமன் மயில் வாகனத்தில் அமர்ந்து வீதியில் உலாவர, சூரிய-சந்திரர் வெண்கொற்றக் குடையைத் தாங்கினர். வாயு சாமரம் வீசினான். வருணன் ஆலவட்டம் அசைத்தான். எமன் வாட்படையை ஏவினான். அரம்பையர் ஆடினர். முனிவர்கள் ஸ்தோத்தரித்தனர். பலவித வாத்யங்கள் ஒலித்தன. குமரன் திருமணச் சாலையை அடைந்தார். தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் அழகு முருகனை வணங்கித் துதித்தனர். சிவபெருமான் உமாதேவியோடு ஆகாய விமானத்தில் வந்து திருப்பரங்குன்ற பூமியில் எழுந்தருளினார். தாய்- தந்தையை வணங்கி பாத பூஜை செய்து மகிழ்ந்தார் கந்தவேள். இந்திரன், இந்திராணி மற்றும் தேவர்கள், அரம்பையர் புடைசூழ தெய்வானையும் திருமண மண்டபத்தை அடைந்தாள். பிரம்மன் திருமணச் சடங்குகளைச் செய்ய, முருகனும் - தெய்வானையும் சிவாக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து.. என திருமணச் சடங்குகள் நடைபெற்றன; தெய்வானைக்கு திருமுருகன் மங்கலநாண் பூட்டினார். பிறகு அந்தத் தம்பதி, சிவ - பார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். முருக பக்தரான முசுகுந்தரும் கந்தனை துதித்து வாழ்த்திய பிறகு, நாட்டு மக்களுடன் கருவூர் திரும்பினார்!


முசுகுந்தர் ஒரு நாள் வசிஷ்ட முனிவரைச் சந்தித்து வணங்கி, சுப்ரமணியருக்கு உரிய விரதங்களை விவரமாகச் சொல்லும்படி வேண்டினார். வசிஷ்டரும் விவரிக்க ஆரம்பித்தார்: சுக்ரவார விரதம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் கந்த விரதங்களில் ஒன்று. இதனை அனுஷ்டிப்பவர்கள், மனதில் நினைத்த எல்லாமும் கிடைக்கப் பெறுவர். பகீரதன் எனும் பேரரசன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தையும் அரசாட்சியையும் பெற்றான் என்ற வசிஷ்டர், அடுத்து நட்சத்திர விரதம் பற்றி கூறினார். நாரதர் விநாயகக் கடவுள் அருளியபடி கந்தனுக்குரிய கார்த்திகை நட்சத்திர விரதத்தை 12 ஆண்டுகள் மேற்கொண்டு ஏழு முனிவர்களுக்குள் மேலான பதவியைப் பெற்றார். இதே விரதத்தை மேற்கொண்ட வேதியன் ஒருவன் மறுபிறப்பில் திரிசங்கு என்ற மன்னனாகப் பிறந்து அரசாண்டான். இதைத் தவிர ஐப்பசி மாதத்து வளர்பிறை பிரதமை முதல் ஆறு நாட்கள் காலையில் நீராடி நித்யவழிபாடுகளைச் செய்து முருகனை கும்பத்தில் விதிப்படி ஆவாஹனம் செய்து பூஜித்து, வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) நிவேதித்து அன்று (ஆறாவது நாள்) உபவாசம் இருந்து பாராயணம் செய்து, மறுநாள் சப்தமி (ஏழாவது) திதியன்று கந்தவேளுக்கு விசேஷ பூஜை வழிபாடு செய்து.. இவ்வாறாக சஷ்டிவிரதம் அனுஷ்டித்தவர்களுக்கு எல்லாவிதமான செல்வம், யோகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்று உபதேசித்தார் வசிஷ்டர்.


முசுகுந்தரும் முருகனுக்கு உரிய விரதங்களை கடைப்பிடித்தார். கந்தவேள் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரங்கள் என்ன? என்று வினவினார். ஆறுமுகப் பரமனே! என் அரசாட்சி உலகெலாம் நன்கு நடைபெற, தங்களிடம் உள்ள வீரபாகு முதலான வீரர்கள் எனக்குத் துணைபுரிய அருள வேண்டும் என்று வேண்டினார். கந்தனும் அவ்வாறே வீரபாகு முதலான சேனைத் தலைவர்களை முசுகுந்தனுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் மானுட அரசனுக்குத் தொழில் புரிய மாட்டோம் என்று பதிலுரைத்தனர். எமது விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் மறுத்ததால், நீங்கள் மனிதர்களாகப் பிறந்து, அதே முசுகுந்தனுக்குப் போர்வீரர்களாகக் கடவீர். பிறகு நோன்பிருந்து எம்மிடம் திரும்பிவருக! என்று கட்டளையிட்டார் கந்தன். தமது பிழையை உணர்ந்த அவர்கள் முருகன் திருவடிகளை வணங்கி அவ்வாறே முசுகுந்தனுக்குச் சேனை வீரர்களாக வந்து சேர்ந்தனர். மானுடனாக வந்த வீரபாகு புஷ்பகந்தி என்பவளை மணந்து இல்லறம் நடத்தினார். தான் பெற்ற சித்ரவல்லி என்ற பெண்ணை முசுகுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். முசுகுந்தன் இந்திரனுக்கு துணையாகச் சென்று அரக்கனை அழித்தார். இந்திரன் தாம் பூஜித்த சோமாஸ்கந்தரான விடங்க மூர்த்தியை முசுகுந்தனுக்கு அளிக்க, அவர் அதனை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முசுகுந்தன் தமது மகன் அங்கிவர்மனுக்கு முடிசூட்டி, பிறகு கயிலை சென்று சிவனாரின் திருவடிகளில் இளைப்பாறினார். வீரபாகு தேவர் முதலானோர் தவம் இயற்றி மானுடத் தன்மை நீங்கி மீண்டும் கந்தபுரியை அடைந்தனர். மிகச்சிறந்த முருகனடியாரான முசுகுந்தரது பெருமைகளை கந்த புராணம் இனிது உரைக்கின்றது.


காணரும் தேவசேனை கடிமணம் கண்டுவந்தோன்

மாண் உறும் வீரவாகு துணைவரப் பெற்றோன்; வானோர்

பேணு தியாகர் ஏழுபேரையும் கொண்டு வந்தோன்

ஆணவம் அகற்ற அன்றே முசுமுகன் ஆனோன் வாழி!  (-தணிகை மணியார்)

திருமறைக்காடு திருக்காப்பிடுதல்


சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்

மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா

இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்

கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.   1

     1. பொ-ரை: இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில்

வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே!

உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக்

கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு

நல்லவண்ணம் விடை அருள்வாயாக.



தாயுமானவர்



காயாம்பட்டி குளம்


 

Tuesday, 2 December 2025

திருக்கோளக்குடி

 ஒவ்வொருவரும் கண்டிப்பாக திருக்கோளக்குடி என்ற ஊருக்கு செல்ல வேண்டும்.


பௌர்ணமி அல்லது அமாவாசை அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாள் அன்று பகலில் அல்லது இரவில் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்.


அங்கே  மலை மேலே 3 சிவன் கோயில்கள் உள்ளன.


 மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோயிலும் 


மலையில் இருந்து நடந்து செல்லும் பொழுது பாதி துரத்தில் ஒரு சிவன் கோயிலும் 


மலை உச்சியில் இன்னொரு சிவன் கோயிலும் இருக்கின்றது .


ராமாயண காலத்தை விட மிகவும் பழமையான சிவாலயம் இந்த திருக்கோயில் திருக்கோளக்குடி சிவாலயம் ஆகும் . 

2023 ஆம் ஆண்டு அன்று ராமாயணம் நடைபெற்று 17, 55 , 124 ஆண்டுகள் ஆகின்றன அதைவிட மிகவும் பழமையானது இந்த திருக்கோளக்கூடிய சிவாலயம் ஆகும்.


 இந்த திருக்கோளக்குடி சிவாலயத்தின் வயது குறைந்தது 27 லட்சம் வருடங்கள் இருக்கும் என்று சித்தர்கள் நமக்கு உரைக்கிறார்கள்.


ராமாயணத்தில் ராவணன் தன்னுடைய அரியணை மீது அமரும் முன்பாக 9 படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்று அமர்வது வழக்கம்.


 தன்னுடைய சிவ பக்தியால் நவகிரகங்கள் ஒன்பது பேரையும் அந்த ஒன்பது படிக்கட்டுகளில் ஒவ்வொருவராக குப்புற படுக்க வைத்து அவர்கள்  முதுகை மிதித்தவாறு ஒன்பது படிகளில் ஏறிச் சென்று அரியணையில் அமர்வது வழக்கம். அந்த அளவுக்கு பல கோடி யுகங்களாக சிவ பூஜை செய்து ,தவம் செய்து யாகங்கள் நடத்தி மிகவும் பிரம்மாண்டமான வரங்களை ஈசனிடமிருந்து ராவணன் பெற்று இருந்தான்.


திருக்கோளக்குடியில் உள்ள இந்த மூன்று  சிவாலயங்களை ஒன்பது கிரகங்கள் வழிபட்டு உள்ளன.


 சிவாலயத்தை மலை அடிவாரத்தில் உள்ள சிவாலயத்தை மூன்று கிரகங்களும்


 மலையில் பாதி தூரம் சென்றதும் உள்ள சிவாலயத்தை அடுத்த மூன்று கிரகங்களும் 


மலை உச்சியில் உள்ள சிவாலயத்தை அடுத்த மூன்று கிரகங்களும் முறைப்படி வழிபட்டு வந்தன.


27 நட்சத்திரங்கள் ஒன்பது கிரகங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன!!!


 ஒவ்வொரு கிரகமும் தனக்குரிய மூன்று நட்சத்திர  மண்டலங்களை திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு தான் பெற்றுக் கொண்டன.


அசுவினி ,மகம் ,மூலம் நட்சத்திர மண்டலங்களை கேது பகவான் திருக்கோளக்குடியில் சிவ வழிபாடு செய்து பெற்றுக் கொண்டார்!!!


 பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திர மண்டலங்களை சுக்கிர பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபாடு செய்து பெற்றுக்கொண்டார்!!!


கார்த்திகை, உத்திரம் ,உத்திராடம் நட்சத்திரம் மண்டலங்களை சூரிய பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


ரோகிணி, அஸ்தம் , சிராவணம் நட்சத்திர மண்டலங்களை சந்திர பகவான்  திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


மிருகசீரிடம் ,சித்திரை ,அவிட்டம் நட்சத்திரம் மண்டலங்களை செவ்வாய் பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


திருவாதிரை ,சுவாதி, சதயம் நட்சத்திர மண்டலங்களை ராகு பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


புனர்பூசம் ,விசாகம் ,பூரட்டாதி நட்சத்திர மண்டலங்களை குருபகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர மண்டலங்களை சனி பகவான் திருக்கோளக்குடி ஈசனின் வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


ஆயில்யம் ,கேட்டை ,ரேவதி நட்சத்திர மண்டலங்களை புதன் பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!


ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களையும்  திருக்கோளக்குடி  பைரவர் முன்னிலையில்  நவகிரக நாயகர்கள் திருக்கோளக்குடி ஈசனிடம் இருந்து பெற்றார்கள்!!!


27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 9 கிரகங்கள் அனைத்தும் கால தேவன் என்ற காலபைரவர் பொறுப்பில் ஈசன் சார்பாக காலபைரவர் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்.


நம்முடைய வலது கண் மற்றும் மூளையில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் அனைத்தும் சூரிய பகவானின் சக்தியால் இயங்குகிறது;


 இடது கண் சந்திர பகவானின் சக்தியால் இயங்குகிறது ;


நரம்பு மண்டலம் புதபகவானின் சக்தியால் இயங்குகிறது;


 எலும்பு மண்டலம் சனி பகவானின் சக்தியால் இயங்குகிறது;


 சதை மண்டலம் சுக்கிர பகவான் சக்தியால் இயங்குகிறது;


 இருதயம் குரு பகவான் சக்தியால் இயங்குகிறது;


 பிறப்புறுப்பு ராகு பகவானின் சக்தியால் இயங்குகிறது;


 மல துவாரமும் அதற்கு ஒரு இன்ச் உள்ளே இருக்கும்

 மூலாதாரமும் கேது பகவானின் சக்தியால் இயங்குகிறது.


இதனால்,நாம் வாழ்ந்து வரும் பூமியில் நவக்கிரக சக்திகள் மிகுந்த மலைத்தலமாக திருக்கோளக்குடி இயங்குகிறது.


 ராவணனின் அக்கிரமத்தால் அவனுடைய அரியணை படிக்கட்டில் குறிப்பிட்ட சில காலங்கள் வரை நவ கிரகங்கள்  குப்புறப்படுக்கும் இழிநிலை உண்டானது.


 அதனால் ஒன்பது கிரகங்களும் தன்னுடைய 99 சத கிரக காரகத்துவத்தை இந்த திருக்கோளக்குடி மலைப்பகுதியில் மறைமுகமாக பதித்துவிட்டு சென்றனர்.


 அதனால் பூலோக மக்களின் கரும பரிபாலனத்தை குறைவின்றி நவக்கிரகங்கள் செய்து வந்தார்கள்.


உங்கள் பிறந்த தமிழ் மாதம் அன்று உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும்.


 அந்த நாளில் நீங்கள் பிறந்த நேரம் வரக்கூடிய நேரத்தில் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு கிரிவலம் புறப்பட வேண்டும் .


24 மணி நேரம் திருக்கோளக்குடியில் இருக்க வேண்டும்.


 இப்படி ஆண்டுக்கு ஒரு முறை செய்வதன் மூலமாக உங்களுக்கு பாதகாதிபதி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் வரும்போது அதற்குரிய நோய் அல்லது கடன் அல்லது அவமானம் அல்லது விபத்து பெருமளவு வராமல் மிகச்சிறிய அளவில் குறைந்து விடும்.


 நவக்கிரக நாயகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து அவர்கள் தரவேண்டிய மிகப் பெரிய அளவிலான துன்பத்தை மிகச் சிறிய அளவில் குறைத்து விடுவார்கள்!!!

Wednesday, 26 November 2025

திருமலை சுப்ரபாத சேவை

 *திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு..?*.


"முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?"


திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.

அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.

சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!

தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!

அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!

படித்த மேதைக்கா - இல்லை!

நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!


இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!

கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;


இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு!

எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.

வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.


அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?

திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.

அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?


அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!

மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன;

காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!

இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!

எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத் துடியாய்த் துடிக்க...

அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு! - யாரப்பா அது?


ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!

படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர,

எல்லாரும் வழிவிட்டு ஓரமாக நின்று கொள்கிறார்கள்

யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? - ஒரு மாட்டு இடையனுக்கு!

பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து நிற்க...

மெல்லத் திரையை விலக்கி....அவன் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவனுடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!

பசுவும் கன்றுமாய், வரும் கோனாரின் முகத்தில் தான் திருமலை அப்பன் முதலில் விழிக்கின்றான்!


இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.

கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!

உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"! அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!

அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...

கண்ணாடியைத் தூக்கிப் பிடித்து, இறைவனுக்குக் காட்டியபடியே செல்கிறார்கள்!


 ஸ்ரீ மலையப்பன் திருவடிகளே சரணம்*.

Tuesday, 25 November 2025

நால்வகை யோனி

 🙏🏽////////////// நால்வகை யோனி \\\\\\\\\\\


இயற்கை எனும் இறைவன் படைப்பில் 

பரப்பன, 

ஊர்வன,

நடப்பன, 

மிதப்பன,

என ஜீவராசிகள் நான்காக பிரிக்கப்பட்டு வாழ்கின்றன, மேலும் அந்த ஒவ்வொரு 

ஜீவராசியும் சிற்றின்பம் அனுபவித்து தன் இனத்தை பெருக்கி கொள்ள யோனி 

உள்ளது.


அதில் மனிதர்கள் நடப்பன என்ற ஜீவராசிகள் பிரிவில் வருகிறார்கள், 

ஆனால் மனிதனுக்கு மட்டுமே சிற்றின்பம் மட்டுமின்றி பேரின்பம் அதாவது படைத்த இயற்கை எனும் இறைவனையை அடைய வழிவகை செய்யும் ஐந்தாவது யோனி உள்ளது.


சுவாசம் கீழ் நோக்கி பாய்ந்து கீழ் 

யோனி திறந்தால் சிற்றின்பம்..


சுவாசம் மேல் நோக்கி பாய்ந்து, 

அதாவது தலை பகுதி குறிப்பாக உண்ணாக்கு பின்புறம் மேல் 

யோனி திறந்தால் பேரின்பம்..


சுவாசத்தை செயற்கையாக மேல் 

நோக்கி பாய வைக்க முடியாது, 

அது தானாக மடைமாற வேண்டும் அதற்கு நீ சுவாசத்தை கவனித்து உன் எண்ணத்தை அங்கே குவிக்க வேண்டும் அதனால் சுவாசம் அழுத்தம் அடைந்து அது மடைமாறும் அதுவும் விட்டகுறை தொட்டகுறை உள்ளவர்களுக்கே..


சுவாசத்தை கவனிக்க தொடங்கு,


உனக்கும் 

விட்டகுறை 

தொட்டகுறை 

இருக்கலாம்..


⚛️🙏🏽sv

Monday, 24 November 2025

திருமந்திரம்


 

மஹாபல

 *சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*. 


*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*. 

*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*. 


*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*. 


*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*. 


*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.


*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்*. 


*“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்*. 


*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*. 


*பல ஆண்டுகள் கழிந்தன*. 


*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*. 


*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*. 


*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்*.


*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*. 


*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*. 


*அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்*


*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*. 


*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*. 


*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.


*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.


*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*. 


*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*. 


*ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.


*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.


*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*. 


*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*

                    

*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*. 


*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.


🙏ஓம் நமோ நாராயணாய 🙏🙏

நவபுலியூர்

கார்த்திகை மாதம் என்பது சிவனுக்கும் நரசிம்மருக்கும் உரியது,  கார்த்திகையில் பின்பற்றபடும் நோன்பும் விரதங்களுமே பின்பு மார்கழியில் விழாவாக முடியும் ஸ்ரீரங்க ஆலயமும் சிதம்பரம் ஆலயமும் மார்கழியில் விழாக்காலம் கொண்டு ஜொலிக்கும்.


தனி தனியே அதுவும் சைவம் வைணவம் என தெரிந்தாலும் அடிப்படையில் இரண்டும் ஒன்றே, இதோடு திருபட்டூர் எனும் பிரம்மனின் ஆலயம் என மூன்றும் ஒரே தத்துவத்தில் ஒரே புள்ளியில் இணைகின்றன‌


இந்த மூன்று ஆலயங்களிலுமே கார்த்திகை, மார்கழி மிகசிறப்பாக கொண்டாடபடும் , அவ்வகையில் அவற்றுக்கு இடையான இணைப்பினை மூப்பெரும் தெய்வமும் ஒன்றே என சொல்லபடும் தத்துவத்தினை விளக்கும் தொடர்பு இன்று சிவாலயங்களாக உண்டு


அவற்றுக்குகிடையான சங்கிலிதான் அந்த ஒன்பது ஆலயங்களையும் இணைத்து இந்த மூன்று சிறப்பான ஆலயங்களையும் அதோடு இணைத்து அழகான ஆன்மீக தல மாலையாக,  ஒரே மாலையாக தருகின்றது


சிதம்பரமும் ஸ்ரீரங்கமும்  திருபட்டூரும் வேறு வேறு அல்ல, மூன்றும் ஒன்றே என்பதை தெரிந்து கொள்ள நவபுலியூர் தலங்கலையும் அவற்றின் வரலாற்றையும் காணவேண்டும்


இந்த கார்த்திகையில்  அந்த் தலங்களை காண்பது நன்று, அது முடியாவிட்டால் அதனை தெரிந்துகொண்டு உணர்ந்து கொண்டு மனதால் வழிபட்டாலும் நன்று


நவபுலியூர் எனும் அந்த ஆலயங்களின் வரலாறு புலிக்கால் முனிவர் எனும் விக்யாபாதரர் மற்றும் பதஞ்சலியிடம் இருந்து தொடங்குகின்றது


இது காலத்தால் மூத்த சம்பவம், பல்லாயிரகணக்கான ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம்


இந்துமரபில் இந்துஸ்தானில் ஒரு வழமை உண்டு இமயமலையில் இருந்து ஞானியர் தென்னகம் நோக்கி சிவனால் அனுப்பபடுவார்கள், அப்படியே தெற்கில் இருந்து ரிஷிகள் இமயம் நோக்கி செல்வார்கள்


இமயத்தில் இருப்போர்க்கு கடல் தெரியாது, நீர் சூழ்ந்த பகுதி என சொல்லபடும் தீபகற்பம் எனும் இந்த பக்கம் இருப்போருக்கு ஹிமாலயம் எனும் பிர்மாண்டம் தெரியாது , மலையும் கடலும் எவ்வளவு பிர்மாண்டம் என்பதையும் இரு இடங்களுமே தவம் செய்ய பொருத்தமானவை , பிரபஞ்ச சக்திபெற சரியான இடம் என்பதையும் சொல்லி தெய்வங்கள் இடம் மாற்றி அனுப்பும்


அப்படி தமிழகம் தேடி இயமலயில் இருந்து வந்த அகத்தியர் முதல் பல ரிஷிகள் உண்டு அவர்களில்தான் இந்த வியாக்ரபாதரும் பதஞ்சலியும் மகா முக்கியமானவர்கள்


புலிக்கால் முனிவர் எனு வியாக்ரபாதர் வரலாறு எல்லோரும் அறியவேண்டியது


அவர் மத்யந்தனர் எனும் ரிஷியின் மகன், ஒருவன் பிறப்பின் நோக்கமே இறைவனை அடைந்து முக்தி அடைவது என உணர்ந்து அதை இளம்வயதிலே தேடி அலைந்தார் 


சிவனை தேடுவதும் வழிபடுவதுமே முக்திக்கான வழி என உணர்ந்தவர் கடும் தவம் செய்தார், அதனால் துர்வாசரின் சீடருமானார்

இவரின் அளப்பறிய சிவபக்தியினை கண்டு  அவருக்கு தன் மகள் ஆரோவினை மணமுடித்து வைத்தார் வசிஷ்டர், இவர்களுக்கு பிறந்தவ்ர்தான் உபமன்யு எனும் பெரும் முனிவர், சிவமகா புராணம் அருளியவர் அவர்தான்


மகாபாரத்ததில் கண்ணனுக்கு தீட்சை வழங்கியவரும் அவர்தான்


அப்படிபட்ட உபமன்யுவினை மகனாக பெற்றவர் இந்த வியாக்ரபாதரர், வியாக்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் புலி

இவருக்கு புலிகாலும் புலி கையும் இருந்ததால் அந்த பெயர் உண்டானது, அதனை ஏன் பெற்றார் என்றால் அதுதான் அவரின் பக்திக்கான வடையாளம்


சிவபெருமானுக்கு ஒவ்வொரு பொழுதும் ஒரு மலர் வைத்து வழிபடுவார்கள், அதிகாலை பூஜையில் உயர்ந்த மரத்தின் பூக்களை வைப்பது வழமை


அந்த பூக்கள் தேனியின் எச்சில்படாததாக இருத்தல் வேண்டும், அதிகாலை ஏறினால் தேனிக்கள் எச்சில் பட்டுவிடும்,  அது பூஜைக்கு மிக உகந்ததல்ல‌


இதனால் இரவிலே அவற்றை பறிக்க முயன்றால் இரவில் பார்ப்பதும் மரம் ஏறுவதும் முடியாத விஷயம். இதனால் இரவில் பார்க்கும் புலியின் பார்வை அப்படியே புலியின் கால்கள் கைகள் தனக்கு வேண்டும் என ஆவர் தவமிருக்க அந்த வரம் அவருக்கு கிடைத்தது

இப்படி புலிக்கால்களை கைகளை கொண்டு அதிவிடியலில் மலர் பறித்து சிவனுக்கு பூஜை செய்து அவருக்கு உன்னதமான பக்தராக இருந்தார் வியாக்ரபாதரர், அவருக்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காண விருப்பம் உண்டாயிற்று


புலிக்கால் புலி கை, புலிபார்வை என லவுகீகமாக சொன்னாலும் அதன் பொருள் பற்றிய விஷயத்தை புலிபோல பற்றினார் என்பது

புலி ஒரு பொருளை பற்றினால் விடாது, அப்படி விடாமல் பற்றிகொண்டார் என்பது அவர் கால் கைகளின் பொருள்


புலி இருளிலே பார்க்கும் திறன் கொண்டது, அப்படி ஆத்ம இருளிலும் ஞானத்தை பார்க்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது என்பதே புலிபார்வை


தேனி தொடாத மலரை கொண்டு பூஜித்தார் என்பது, ஆசாபாசம் மாயை எனும் அசூத்தங்கள் ஆத்மாவினை தொடாத அளவு அவர் சுத்தமான மனதால் பூஜித்தார் என பொருளாகும்


அவற்றின் மறைமுக அர்த்தம் இதுதான், அப்படிபட்டவருக்கு சிவநடனம் காணும் ஆவல் எழுந்தது


ஒரு பக்தனின் மனதில் அந்த ஆசையினை சிவன் உருவாக்கினார் என்றால் பெரும் திட்டம் வைத்திருக்கின்றார் என பொருள்

அப்படியே இன்னிரு முனிவர் வந்தார் அவர் பெயர் பதஞ்சலி, இவர் ஆதிசேஷனின் அம்சம்


ஆதிஷேஷன் பாற்கடலில் விஷ்ணுவினை சுமந்துகொண்டிருக்கும் பெரும் நாகம், ஒரு முறை பெருமாள் உடலில் மாறுபாடு வந்தது உடல் கனத்தது, அவர் மூச்சு மாறியது ஒருவித மகிழ்வும் பரவசமும் அவர் முகத்தில் வந்தது


அதுபற்றி ஆதிசேஷன் கேட்டபோது தான் சிவனின் ஆனந்த தாண்டவம் பார்த்ததாகவும் அது அவ்வளவு பரவசமானது என்றார் விஷ்ணு


ஆதிசேஷன் அதனை காணவிரும்பிற்று, விஷ்ணுவும் அது ஒரு முனிவராய் பிறந்து சிவனின் தாண்டவத்தை காண்பாய் என்றும் இன்னும் மூச்சு பயிற்சி யோகங்களையெல்லாம் மக்களுக்கு கற்றுகொடுத்து சிவனை அடைய வழிசெய்வார் எனவும் ஆசிவழங்கினார்


இந்த ஆதிசேஷன் அம்சமாக பிரம்மனின் பிரஜாபதிகளில் ஒருவரான அத்திரி மகரிஷிக்கு மகனாய் பிறந்தார், பதஞ்ச்லி என அவருக்கு பெயர்


இந்த பதஞ்சலிதான் இன்று காணும் எல்லா யோக கலைக்கான இலக்கணங்களை வகுத்தவர், ஆயிரம் தலையுடன் ஆயிரம் சீடர்களுக்கு பாடம் நடத்திய காட்சி எல்லாம் உண்டு


இந்த பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரரும் எப்படிபட்டவர்கள் என்பதற்கு திருமுலரே பட்டயம் தருகின்றார், தன் திருமந்திரத்தில் சொல்கின்றார்


"நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே"


அதாவது நந்தி பெருமான் அருள் பெற்ற குருநாதர்கள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். இவர்களுடன் சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகிய நால்வருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேருமாகும்


இந்த எட்டுபேரில் இருவர்தான் இந்த இரு பெரும் ரிஷிகள்


வியாக்ரபாதரரை போலவே இந்த பதஞ்சலி முனிவரும்  தன் பிறப்பின் நோக்கபடியே சிவனின் ஆனந்த தாண்டவத்தை காண தவமிருந்தார்


இருவரின் அன்பிலும் பக்தியிலும் மெச்சிய சிவன் அவர்களுக்கு தன் ஆனந்த தாண்டவத்தை காட்ட விரும்பினார் அவர்களை தில்லை எனும் தன் சுயம்புலிங்கம் இருந்த இடத்துக்கு வரசொன்னார் தில்லை மரங்கள் சூழ்ந்த அந்த காட்டில் லிங்கம் இருந்தது

வசிஷ்ட முனி அங்கேதான் தவமிருந்தார், அந்த இடத்துக்கு இருவரும் வந்து சிவன் சொன்னபடியே வழிபட்டு காத்திருந்தார்கள்

தை மாதம் பூச நட்சத்திரத்து அன்று வியாழகிழமை அந்த பாக்யம் அவர்களுக்கு கிடைத்தது, பெரும் பாக்யமான ஆனந்த தாண்டவத்தை கண்டார்கள்


சிவநடனம் என்பது என்ன?


சிவ நடனத்தில் ஞான நடனம், ஊன நடனம் என இருவகை சொல்வார்கள். ஞான நடனம் என்பது மானிட உலகில் சிவன் போதிக்கும் ஆத்ம‌ தத்துவம்.


ஊன நடனம் என்பது பிரபஞ்சத்தை ஆட்டி வைக்கும் அந்த அதி உன்னத தத்துவம். ஆக்கம், காப்பு, அழிப்பு என எல்லாம் காட்டும் ஊழி தாண்டவம் என்பதெல்லாம் இவ்வகையே.


இந்த இரண்டும் கலந்ததே சிவநடனம் .சிவனின் நடனம் என்பது இன்று விஞ்ஞானம் சொல்லும் அணுவுக்கும் பிரபஞ்ச இயக்கத்துக்கான தொடர்பு, உயிர்கள் ஜெனித்து மரணிக்கும் தொடர்பு,இந்த பிரபஞ்சம் தொடர்ந்து மின்னல் வேகத்தில் இயங்கிக் கொண்டிருகின்றது, நொடி நேரத்தில் தோன்றலும் மறைதலும் நிகழ்கின்றன என்பதை சொல்லும் தத்துவம்.


அணு நம் கண்ணுக்குத் தெரியாது.  ஆனால் இயக்கத்தை உணர முடியும், பிரபஞ்ச இயக்கத்தை நாம் முழுக்க‌ காண முடியாது இப்பொழுது நாம் காண்பதெல்லாம் உள்வீட்டு காட்சிகள் போன்றது, உலகில் நம் வீட்டு அறையினை மட்டும் காண்பது போன்றது

மிக உச்ச அதி உயரத்துக்கு இன்னும் உயர எழும்பி முழு பிரபஞ்சத்தையும் காண மானிடனால் ஒரு காலமும் முடியாது.


சிவ நடனத்தை கவனியுங்கள் . அது இயக்க ரகசியத்தை சொல்கின்றது, ஒரு கையில் இருக்கும் உடுக்கை என்பது உலகம் ஒலியில் இருந்து உருவாயிற்று என்பதை சொல்லும், அதன் இன்னொரு கையில் இருக்கும் நெருப்பு உலகம் தீயில் முடியும் என்பதை சொல்லும்.


3 கண்கள் முக்காலத்தை சொல்லும், அசையும் நிலையில் இருக்கும் சடைகள் மின்னல் வேகத்தை சொல்லும்.

காலின் கீழ் கிடக்கும் அந்த அரக்கன் இந்த மாய உலகம், அதை காலில் போட்டு அழிப்பது மாயையினை சிவன் அழிப்பது அதாவது யுகமுடிவினை குறிக்கும்.


ஆம் .இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த இயக்கம் அணுவில் இருக்கின்றது.  அண்டத்தில் இருக்கின்றது. பூமி தன்னை சுற்றி சூரியனை சுற்ற சூரியன் பால்வெளியினை சுற்ற பால்வெளி எங்கோ ஓட எல்லாமே ஓட்டம் ஓட்டம் ஓட்டம் மட்டுமே.


ஓட்டமும் மாறுதலும் கொண்டது உலகம், தோன்றியது மறையும், மறைந்தன திரும்பும். ஒருவிஷயம் ஓய  அதனின்று இன்னொன்று எழும். இந்த இயக்கம் நடந்து கொண்டே இருக்கும்.


அந்த இயக்கம் பூமியில் மரம் செடி ,கொடி , மானிட வாழ்வு என இயங்கிக் கொண்டே இருக்கின்றது, தோற்றமும் இயக்கமும் இங்கு இடையறாமல் நடந்துக் கொண்டே இருக்கும் இந்த இயக்கமே சிவம்.


அது மின்னல் வேகத்தில் நடக்கும் இயக்கம், இடையறாது நடக்கும் இயக்கம்.  அது அணுவிலும் உண்டு . அண்டத்திலும் உண்டு . மானிடரின் வாழ்விலும் உண்டு


இதனால்தான் அணுவுக்கும் பிரபஞ்ச இயக்கத்துக்கும் தொடர்பு உண்டு. அதன் இயக்கத்துக்கும் பூலோக அசையும் எல்லா இயக்கத்துக்கும் தொடர்பு உண்டு என்கின்றது விஞ்ஞானம்


( சர்வதேச அணு கழகத்தில் நடராஜர் சிலை வைத்திருப்பதும், அணு சக்தியிலும் விண்ணக பால் வெளியிலும் விஷ்ணுவின் விஸ்வரூபத்தை மேற்கத்திய விஞ்ஞானிகள் காண்பதும் இதனாலே.)


மானிட இயக்கம், தாவரம், அசையும் பொருள், அசையா பொருள், உலோகம், நிலம், நீர்,காற்று, வெளி , பாக்டீரியா என எல்லாவற்றுக்கும் ஒரு ஒப்புமை இருப்பதை இப்போது விஞ்ஞான உலகம் நம்புகின்றது


இறைவன் எல்லாவற்றிலும் இருக்கின்றான் என என்றோ சொன்ன இந்துமதம் சொன்ன தத்துவமே அது. 


அந்த்த தத்துவத்தை மானிடரின் புறக்கண்களுக்கு தெரியப்படுத்தும் காரியமே சிவநடனம்.


இது வைணவத்தில் விஸ்வரூப தரிசனம் என சொல்லப்படும் அதே காட்சி. விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் சர்வ இயக்கத்தையும் பகவான் காட்டும் அற்புத காட்சி.


சிவநடனமும்,  விஸ்வரூபமும் ஒன்றே, தன் பக்தர்களுக்கு தான் யார் என்பதைக் காட்டி அவர்களின் மாயையினை விலக்கும் அற்புத காட்சி.


அது பாரதத்தில் கர்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் கிடைத்தது, இங்கு சிவனடியார்களுக்கு கிடைத்தது


சிவநடனம் என பிரபஞ்ச இயக்க தத்துவத்தையும், எல்லா பொருளில் இறைவன் ஒரு சக்தியாய் இயங்கி கொண்டே இருப்பதையும் , எல்லாமும் இங்கு இயங்குவதில் இயக்கு சக்தியாய் இறைவன் இருப்பதாஈ அறிந்தவர்கள் மனமுருகி பணிந்தார்கள்

அப்படியே மோட்ச பாக்கியமும் கோரினார்கள்


சிவன் புன்னகைத்தார், தாண்டவ கோல நடனத்தை பார்த்ததால் மட்டும் முக்தி அடைய முடியாது, இன்னும் நீங்கள் உணரவேண்டிய தத்துவங்கள் உண்டு


அவ்வகையில் இந்த ஆலயம் தொடங்கி எட்டு தலங்களை வழிபட்டு கடைசியில் ஸ்ரீரங்கம் வந்து வழிபட்டு திருபட்டூருக்கும் வரவேண்டும் அப்போது முக்தி நிலை உங்களுக்கு வாய்க்கும் என அருளினார்


உடனே இருவரும் அங்கிருந்து இதர எட்டு தலங்களையும் தரிசித்தார்கள்


இப்படி இவர்கள் வணங்கிய ஒன்பது கோவில்கள்தான் நவபுலியூர் என்றானது, புலிக்கால் கொண்ட முனிவர் வழிபட்டு ஞானமடைந்த தலங்கள் என்பதால் அவர் பெயரில் புலியூர் என்றானது


அவர்கள் சிவனின் நடனத்தை கண்ட இடம்  தற்போது சிதம்பரம் என்றழைக்கப்படும் பெரும்பற்றப்புலியூர், அதை தொடர்ந்து கடலூருக்கு அருகில் அமைந்த திருப்பாதிரிப்புலியூர், வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர், சிறுபுலியூர், அத்திப்புலியூர், பெரும்புலியூர், தப்பளாம்புலியூர் ஆகிய ஒன்பது தலங்களும் நவபுலியூர் என்றாயின‌


இவற்றை ஒன்றுவிடாமல் தரிசித்து சிவனை முழுக்க உணர்ந்தவர்கள் பின் ஸ்ரீரங்கம் சென்றார்கள்


இந்த ஒன்பது தலங்களும் வெறும் தலங்கள் அல்ல, ஒவ்வொரு கோவிலும் ஒரு கிரகத்தின் ஆசிபெற்ற தலங்கள், அவ்வகையில் சிதம்பரம் சூரியனுக்கான தலம் 


அடுத்தடுத்த தலம் ஒவ்வொரு கிரகத்துகானது, மொத்தத்தில் நவகிரக வழிபாடுகளும் செய்து அருளை பெற்றார்கள், எல்லா கிரகங்களும் பலன் அளித்தன‌


கடைசியில் ஸ்ரீரங்கத்தில் பாம்புமேல் படுத்திருக்கும் ரங்கனை கண்டார்கள் அதற்கு "அறிதுயில்" என பெயர்


எல்லாம் அறிந்தும் ஒன்றுமறியாமல் நிசப்தத்தில் படுத்திருந்த பெருமானை வணங்கி அங்கெ தியானம் செய்தார்கள், அவர்களுக்கு உண்மை புரிந்தது


சிதம்பரத்தில் கண்ட ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்ச இயக்கம், பிரபஞ்சத்தின் படைப்புகள் தோன்றுதலும் மறைதலுமான இயக்கம், எல்லா பொருளும் உயிரும் அப்படியே தோன்றி மறைகின்றது அவ்வகையில் பிரபஞ்சத்தை இயக்குபவன் சிவன் அது இயக்கும் வடிவம்


எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல் ஆழ்ந்த அமைதியில் இருக்கும் இந்த ரங்கநாதன் காக்கும் வடிவம்


அவர்கள் தங்கள் யோக ச்கதியினால் ஆழ உணர்ந்தார்கள், இந்த மகா பிரமாண்ட பிரபஞ்சத்தின் தனிதன்மை மவுனம், நிசப்தமான மவுனம்


சூரியன் சந்திரன்  வியாழன் பூமி என பெரும் பெரும் கிரகங்கள் சுழலும் பிரபஞ்சத்தில் மிக பெரிய அதிசயம் மவுனம், ஒரு சத்தமுமில்லா நிசப்தம்


அணுவுக்குள் துகள்கள் சுழன்றாலும் வரும் அதே நிசப்த்ம்


இந்த நிசபத்தத்தில் இந்த அமைதியில் இருப்பவன் ரங்கன், எல்லாம் இயக்கி ஒன்றுமே அறியாதவன் போல் படுத்திருப்பவன் ரங்கன் இவரே காக்கும் வடிவம் என பணிந்தார்கள்


நிசப்தமான மனமே இறைவன் வாழும் ஞானமனம், அமைதியான மனமே இறைவன் வாழுமிடம் என்பதை உணர்ந்தார்கள்

யோகத்தில் எல்லாம் கடந்த சமாதி நிலையே அந்த அறிதுயில் நிலை, ரங்கன் துயில் கொள்ளும் காட்சி யோகத்தின் சமாதி நிலை என்பதை உணர்ந்து எழுதினார் பதஞ்சலி முனிவர்


இன்னும் பாற்கடலில் எழும் அலைகள் என்பதை, தன் அலையால் பிரபஞ்சக சக்தியினை இயக்கும் தெய்வம் இது என்பதை உணர்ந்து பணிந்தார்கள்


சிவனும் விஷ்ண்வுவும் வேறல்ல என்றவர்களுக்கு திருப்பட்டூரில் பிர்ம்மனின் ஆலயத்தில் மூவரும் ஒன்றே எனும் பெரும் ஞானம் கிடைதது அங்கே ஜீவ சமாதி அடைந்தார்கள்


இன்றும் புலிக்கால் முனிவர், பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி திருபட்டூரில்தான் உண்டு


வெறுமனே இரு முனிவர்களை அதுவும் அசாத்தியமான முனிவர்களை கோவில் கோவிலாக நடக்க வைக்க இந்த திருவிளையாடலை இறைவன் செய்யவில்லை அதில் ஆழ்ந்த போதனை இருந்தது


எல்லாம் பரம்பொருளே என்பதையும் தெய்வத்தில் வேறுபாடு இல்லை என்பதையும் எல்லாமே ஒவ்வொரு  வடிவம் என்பதையும் பரம்பொருள் அவர்கள் வாயிலாக போதித்தது


நிலையான நிலையில் இருந்து படைக்கும் நிலை, அதை மிக மவுனமாக இருந்து அறிதுயில் கொண்டு காக்கும் நிலை, பின் மறைந்து தோன்றும் நிலை என மூன்று வெவ்வேறு வடிவங்கள்தான் உண்டே தவிர பரம்பொருள் ஒன்றே என்பதை விளக்க இந்த போதனையினை பரம்பொருள் செய்தார்


கார்த்திகை மாதம் இந்த சிவவழிபாடும், ஸ்ரீரங்கநாதன் வழிபாடும் எவ்வளவு முக்கியமோ அப்படி பிரம்மனையும் ஒருபக்கம் நினைக்கலாம் அங்கே தவறொன்றும் இருக்க முடியாது


அந்த்த திருபட்டூர் ஆலயமும் நினைத்து வணங்க வேண்டியது, மிக முக்கியமான விஷயம் நவபுலியூர் என முனிவர்கள் நடந்து சென்று வணங்கிய தலங்கள்


அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் அருளை கொண்டிருப்பது, அதாவது நவகிரகங்களின் ஆற்றலும் பரம்பொருளின் ஆற்றலே, பரம்பொருள் முப்ப்பெரும் தெய்வமாக மட்டுமில்லை நவகிரகங்கள் வழி ஒன்பது வகையான அருளும் போதனையும் கொடுக்கின்றான் என்பது


கார்த்திகை மார்கழியில் இந்த நவகிரகங்களையும் வணங்கும்படி நவபுலியூர்க்கு செல்வதும் அங்கிருக்கும் சிவனை வணங்கி தன்னிடம் எந்த பலம் இல்லையோ அதனை அங்கிருக்கும் கிரக தேவதையிடமிருந்து வாங்கி நன்மை அடைந்து கர்மத்தை முடிக்கவும் வழிபடுதல் அவசியம்


ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு பலனை அருள்வார்கள், இந்த ஒன்பது அருளும் சரியாக பெற்றால்தான் ஞானமும் முக்தியும் வாய்க்கும், ஒன்று குறைந்தாலும் அந்த பலன்கிட்டாது


இந்த காலகட்டத்தில்  நவபுலியூர் வழிபாடு மிக்க பயனுள்ளது, முடிந்தவர்கள் செல்லலாம் முடியாதவர்கள் மனதால் நினைந்து கொள்ளலாம்


முடிந்தவரை இந்த நவபுலியூர் தலங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம், அந்த ஆலயங்களையும் அவற்றின் சக்தியினையும் அது கொடுக்கும் தார்மீக போதனைகளையும் இந்துமதம் எவ்வளவு ஞானமாக கட்டமைக்கபட்டது, எவ்வளவு ஆன்மீக ரகசியங்களை பிரபஞ்ச ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதையும் அவ்வப்போது பார்க்கலாம்


Friday, 21 November 2025

தாயார் இல்லாதவர்கள் padikkavum

 காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது


அப்போது  அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...  


சிறிது நிதானமாகப் படியுங்களேன். உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும் உங்கள் தாயை நினைத்து.


கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்


விஷ்ணு பாதம் 


பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.  

 

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.


ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 


ஜீவதோர்  வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்  

கயாயாம் பிண்ட தாணாத்

த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய


'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

 

 “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். 

ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)


இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 

 

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?


2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.


3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே. 


4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 


5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''


6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'


7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\


8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \


9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 

.

10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா


11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'


12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.


13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 


14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 


15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 


16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.


 மஹா பூதாந்தரங்கஸ்தோ

மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ

தஸ்மை ஸர்வாத்மனே நமஹ


(எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன்)

courtesy: mantrasa

Sunday, 16 November 2025

கோட்டையம் திருவார்பு கிருஷ்ணர் கோவில்

 *மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்:*


இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும்.

ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7 கோயில்

மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். அற்புதம்!

1500ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில்  அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.

கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. 11.58மணி முதல் 12 மணி வரை. இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப் படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப் படுகிறது. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.

அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின், மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை.

அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒரு முறை, கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, ​​கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த 

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து, கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை 2 நிமிடங்கள் மட்டுமே.

பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார்.

பிரசாதம் வழங்குதலில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கவேண்டும். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள்வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.


கோவிலின் முகவரி,.

திருவார்பு கிருஷ்ணா கோயில், 

திருவார்பூ - 686020,

கோட்டையம் மாவட்டம், கேரள மாநிலம்.


கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00மணி முதல் நள்ளிரவு 11.58மணி வரை. 


ஹரே கிருஷ்ணா. ஓம் நமோ நாராயணாய நமஹ.