சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 1
1. பொ-ரை: இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில்
வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே!
உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக்
கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு
நல்லவண்ணம் விடை அருள்வாயாக.
No comments:
Post a Comment