*பஜகோவிந்தம் - பொருளுறையுடன்*
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே
துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
.குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் |
யல்லபசே நிஜகர்மோபாத்தம்
.வித்தம் தேன விநோதயசித்தம் |
மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;
நாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;
பாடுபட்டுழைத்து நீதேடிடும் தனத்தால்
கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.
யாவத்வித்தோபார்ஜனசக்த--
ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :|
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே
வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே |
சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்
அன்பைப் பொழிந்திடும் உன்பரிவாரம்,
ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்
வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.
மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா |
பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;
கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;
மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே
தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .
சுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜினம் வாசஹ |
ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ
கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ |
உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;
உடலினை மூடுவதோ தோலாடை ;
இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?
பகவத்கீதா கிஞ்சித தீதா
கங்காஜலலவகணிகா பீதா |
சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா
த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||
சில வரியேனுங் கீதை படிப்போரும்,
துளியேனுங் கங்கை நீர் குடிப்போரும்,
அரங்கனைக் கணமேனுந் துதிப்போரும்,
கலங்குவதில்லை கூற்றுவன் வரினும்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனிஜடரே சயனம் |
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே ||
மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்;
பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .
கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் சஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம் ||
கீதையும்,அரங்கனின் ஆயிரம்பேரும்
ஓதி நினைப்பாய் கமலையின் பதியை;
நிதம் நாடிடுவாய் நல்லோர் நட்பை;
இதயங்குளிர்வாய் இல்லார்க்கீந்தே!
அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் |
புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி
சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி
செல்வத்தால் தொல்லையே சுகமென்றுமில்லை;
உள்ளத்திலுறுதியாய்ப் பதி இவ்வுண்மையை.
தனயனும் சொத்தால் உன்பகையாவான் .
மனிதஇயல்பிதை மறந்திடவேண்டாம் .
குருசரணாம்புஜ நிற்பர பக்தஹ
சம்சாராதசிராத்பவமுக்தஹ |
செந்த்ரியமானச நியமாதேவம்
த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம்
குருவின் பதகமலம் பற்றிய பக்தா!
அறநெறி நின்று, ஐம்புலனடக்கி
விடுபடு பிறவிப் பிணியிலிருந்து ;
உணர்ந்திடுன்னுளமுறை பரம்பொருள்தன்னை !
நன்றி...
No comments:
Post a Comment