Tuesday 6 February 2018

சித்தர்களின் குணாதிசயங்கள்

காவி கட்டி சித்து விளையாடல் புரிபவன் எல்லாம் சித்தனே அல்ல!
”சித்தம் போக்கு சிவம் போக்கு” என்ற முதுமொழிக்கேற்ப, ஐந்தொழிலுக்கும் தலைவனான முழுமுதற் பரம்பொருளான சிவபெருமானே பின்பற்றி ஒழுகும் தன்மை பெற்றவர்களே சித்தர்கள்!!.

சித்தர்களின் நிலையை இப்படிப்பட்டது,! இன்ன தன்மையுடையது,! இன்ன அளவு உடையது!, இன்ன வடிவ வரையறை உடையது!, இன்ன ஆற்றல் எல்லையுடையது!, இன்ன கால அளவு உடையது!.... என்று என்றைக்குமே, எவருமே அறுதியிட்டுக் கூற முடியாது!!!

நண்பா ! சித்தர்கள் என்பவர்கள்,

1) செத்தவர்கள் போல் வாழக் கூடியவர்கள்.

2) செத்தவர்களையும் எழுப்பக்கூடியவர்கள்.

3) செத்துச் செத்து மீண்டும் எழக்கூடியவர்கள்.

4) சமாதிக்குள்ளிருந்து முழு உடம்போடு வெளிவரக்கூடியவர்கள்.

5) உடம்பை அழியாமல் காக்கும் கலையைக் கற்றவர்கள்.

6) குறிப்பிட்ட உடம்பு தேவைஇல்லை என்று நினைத்தவுடன் சட்டையைக் கழட்டுவது போல் அதைக் கழற்றி மாட்டக்கூடியவர்கள்.

7) தங்களுடைய உருவத்தையே நினைத்த மனித உருவமாக அல்லது விலங்கு, பறவை முதலியவற்றின் உருவமாக மற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.

8) உயிரைக் கூடு விட்டுக் கூடு பாய்வதின் மூலம் பிணமாகக் கிடக்கும் உடலுக்குள் செலுத்தக்கூடியவர்கள்.

9) உடலை விட்டு உயிரை மட்டும் பிரித்து கிளியாகவோ, காக்கையாகவோ, புறாவாகவோ இன்னும் மற்ற பறவையாகவோ மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

10) மண்ணைப் பொன்னாக்கக் கூடியவர்கள்.

11) எந்த உலோகத்தையும் பொன்னாக மாற்றுபவர்கள்.

12) பொன்னை வேறு எந்த உலோகமாகவும் மாற்றக் கூடியவர்கள்.

13) உலோகத்தைச் சாம்பலாக்கக் கூடியவர்கள்.

14) ஒன்பதுவகை நஞ்சுகளையும் [நவபாசனம்], ஒன்பது வகைக் கற்களையும் [நவரத்தினங்கள்], ஒன்பது வகை உலோகங்களையும் [நவலோகங்கள்], ஒன்றாக்கி, சாம்பலாக்கி, காயகல்பம் செய்யக் கூடியவர்கள்.

15) கருங்கல்லுக்கு உயிர் கொடுக்கக் கூடியவர்கள்.

16) பட்டமரம், சுட்டசட்டி, வார்க்கப்பட்ட உலோகச்சிலை முதலிய அனைத்திற்கும் உயிர்த் துடிப்பை கொடுக்கக்கூடியவர்கள்.

17) இரசங்களை சாம்பலாக்கக் கூடியவர்கள்.

18) முப்பு விளைவிக்கக் கூடியவர்கள்.

19) பசி, தாகம், உறக்கம் முதலியவற்றை வென்றவர்கள்.

20) மண், நெருப்பு, நீர், காற்று, விண் ஆகிய ஐந்தினையும் மாறுபாடு இல்லாமல் தங்கள் விருப்பம்போல் பயன்படுத்தக் கூடியவர்கள் அதாவது விண்ணில் பறப்பது, காற்றில் நீந்துவது, நீர்மேல் நடப்பது, நெருப்புக்குள் இருப்பது, மண்ணுக்குள் புதையுண்டு இருப்பது முதலியவைகள் எல்லாம் இவர்களுக்குச் சாதாரணம்.

21) இவர்களே எந்த மனிதனையும் தெய்வீகநிலைகளுக்கு உயர்த்தக் கூடியவர்கள்.

22) இவர்களே எந்த மனிதனும் தன்னுடைய பழம் பிறப்புக்களையும், மறு பிறப்புக்களையும் உணரச் செய்யும்படியான பேராற்றலைப் படைத்தவர்கள்.

23) சித்தர்களே அண்டப் பெருவழி அனைத்திற்கும் உயிராகவும், உடம்பாகவும் இயக்குவிக்கும் சக்தியாக இருப்பவர்கள்.

24) சித்தம் போக்கு சிவம் போக்கு என்ற முதுமொழி, ஐந்தொழிலுக்கும் தலைவனான முழுமுதற் பரம்பொருளான சிவபெருமானே சித்தர்களைப் பின்பற்றி ஒழுகுபவன் என்ற பேருண்மையினை விளக்குகின்றது என்றால், சித்தர்களின் நிலையை இப்படிப்பட்டது,! இன்ன தன்மையுடையது,! இன்ன அளவு உடையது!, இன்ன வடிவ வரையறை உடையது!, இன்ன ஆற்றல் எல்லையுடையது!, இன்ன கால அளவு உடையது!.... என்று என்றைக்குமே, எவருமே அறுதியிட்டுக் கூற முடியாது என்பதனை விளக்குவதேயாகும்.

25) சித்தர்கள் வேறு அண்டங்களிலிருந்து இந்த மண்ணுலகிற்கு வந்தவர்கள். இந்த மண்ணுலக மக்களோடு பல வகைகளில் உறவுகளை உண்டாக்கிக் கொண்டுத் தங்களுடைய வாரிசுகளை உருவாக்கி இருப்பவர்கள்.

26) சித்தர்களின் நேரிடையான விந்துவுக்குப் பிறந்த வாரிசுகள் பாரம்பரியச் சித்தர்களாகவும் ; சித்தர்களின் மாணவர்களாக இருந்து சித்தர்களாக ஆகிறவர்கள் குரு வழிச் சித்தர்களாவார்கள்.

27) சித்தர்களில் நவகோடி சித்தர்கள், பதினென் சித்தர்கள், நவநாத சித்தர்கள், நான் மறைச் சித்தர்கள், தவ சித்தர்கள், வேத சித்தர்கள், வேள்விச் சித்தர்கள், ஞான சித்தர்கள் ஆகிய எட்டு வகையினர் வெளிப்படையாக ஏட்டில் குறிக்கப்படுகின்றனர்.

-





No comments:

Post a Comment