Tuesday, 13 February 2018

நாத்திகம்

*தவறாமல் படியுங்கள்*

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இல்லாதோருக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்த்தும் அற்புதமான உதாரணம்.

ஒரு தாயின் வயிற்றில் கருவறையில் இருந்த இரட்டை குழந்தைகள் பேசிக்கொண்டன.

முதல் குழந்தை : பிரசவத்துக்கு பிறகு நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கும் என்பதை நம்புகிறாயா?

இரண்டாம் குழந்தை : நிச்சயமாக நம்புகிறேன். பிரசவத்துக்கு பின் நமக்கு ஏதாவது நிகழும். அதற்காகத்தான் நாம் இங்கே தயாராகி கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

குழந்தை 1 : முட்டாள்தனம். பிரசவத்துக்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கவே முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை இருக்கும் என்றால் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?

குழந்தை 2: எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கே இருப்பதை விட ஒளி மிகுந்த வாழ்க்கையாக இருக்கலாம். நாம் கால்களால் நடக்கக்கூடும், வாயால் உணவருந்தக்கூடும். இன்னும் நமக்கே தெரியாத உணர்ச்சிகளை எல்லாம் நாம் பெறக்கூடும்.

குழந்தை 1: நீ சொல்வது பகுத்தறிவு இல்லாத பேச்சு. அதெப்படி வாயால் உண்ண முடியும்? பைத்தியக்காரத்தனமான கற்பனை. தொப்புள் கொடிதான் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. தொப்புள் கொடியின் நீளம் குறைவாகவே இருக்கிறது. எனவே பிரசவத்துக்கு பிறகு நம் வாழ்க்கை முடிந்து விடும்.

குழந்தை 2 : எதிர்காலத்தில் ஏதோ ஒன்று இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இங்கே இருக்கும் வாழ்க்கையை விட அது வித்தியாசமாக இருக்கலாம். நமக்கு தொப்புள் கொடியே தேவை இல்லாமல் கூட போகலாம்.

குழந்தை 1: என்ன உளறுகிறாய்? பிரசவத்துக்கு பின் வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் ஏன் அப்படி வாழும் யாரும் இங்கே வரவில்லை? பிரசவமே வாழ்க்கையின் இறுதி. அதற்கு பின் இருளும் அமைதியும் மட்டும் தான் இருக்கும். நாம் பயணிக்க இடமோ இலக்கோ ஏதும் இருக்காது.

குழந்தை 2 : அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக நாம் தாயை சந்திப்போம். அவர் நம்மை பாதுகாப்பார்.

குழந்தை 1 : தாயா? நீ தாய் என்று ஒன்று இருப்பதாக நம்பும் முட்டாளா? எனக்கு சிரிப்புதான் வருகிறது. தாய் என்று ஒருவர் இருந்தால் இப்போது அவர் எங்கே இருக்கிறார்?

குழந்தை 2 : நம்மை சுற்றி எல்லா இடத்திலும் இருக்கிறார். நாமே அவரால் உருவாக்கப்பட்ட உயிர்கள்தான். அவர் இல்லாமல் நம் எதுவும் அசைவதில்லை.

குழந்தை 1 : நான் அப்படி ஏற்கமாட்டேன். இதுவரை தாய் என்று ஒருவரை நான் கண்ணால் கண்டதில்லை எனவே அப்படி ஒருவர் இல்லை என்பதுதான் எனது அறிவார்ந்த பார்வை.

குழந்தை 2: சில நேரங்களில் நீ அமைதியாக இருந்து மனதை ஒருநிலைப்படுத்தி கூர்ந்து கவனித்தால் தாயின் இருப்பை உணர முடியும். மேலிருந்து ஒலிக்கும் அவரது இனிய குரலை கேட்க முடியும். முயற்சித்துப்பார்.

No comments:

Post a Comment