Tuesday, 27 February 2018

அதி சூட்சுமமான மஹாலட்சுமி மந்திரம்

வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான மஹாலட்சுமி மந்திரம்
...

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்

அர்ச்சனை

அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்

இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்.

ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.

லஷ்மி ....எத்தனை லஷ்மி

லஷ்மி ....எத்தனை லஷ்மி
லஷ்மி ....எத்தனை லஷ்மி !

உதாரணமாக, சுக்கிரன்
அசுவினியில் இருந்தால் வித்யாலஷ்மியாகவும்,
பரணியில் இருந்தால் அன்ன லஷ்மியாகவும்,
கிருத்திகையில் ஜோதி லஷ்மியாகவும்,
ரோஹிணியில் தனலஷ்மியாகவும்,
மிருக சீரிடத்தில் முத்து லஷ்மியாகவும்,
திரு வாதிரையில் வீர லஷ்மியாகவும்,
புனர் பூசத்தில் ராம லஷ்மியாகவும்,
பூசத்தில் குரு லஷ்மியாகவும்,
ஆயில்யத்தில் நாக லஷ்மியாகவும்,
மகத்தில் தான்ய லஷ்மியாகவும்,
பூரத்தில் சந்தான லஷ்மியாகவும்,
உத்திரத்தில் சீதா லஷ்மியாகவும்,
ஹஸ்தத்தில் கான லஷ்மியாகவும்,
சித்திரையில் சுப லஷ்மியாகவும்,
சுவாதியில் தீப லஷ்மியாகவும்,
விசாகத்தில் சுப்பு லஷ்மியாகவும்,
அனுஷத்தில் ஆனந்த லஷ்மியாகவும்,
கேட்டையில் யோக லஷ்மியாகவும்,
மூலத்தில் வசந்த லஷ்மியாகவும்,
உத்திராடத்தில் ராஜ லஷ்மியாகவும்,
திரு வோணத்தில் மகா லஷ்மியாகவும்,
அவிட்டத்தில் அஷ்ட லஷ்மியாகவும்,
சதயத்தில் விஜய லஷ்மியாகவும்,
பூரட்டாதியில் பாக்கிய லஷ்மியாகவும்,
உத்திரட்டாதியில் வேங்கட லஷ்மியாகவும்,
ரேவதியில் கஜ லஷ்மியாகவும்

பெயர் அமைப்புகள் மாறும். குண பாவங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

Courtesy: Sri krishna ravi @ krishnalaya

...

16 வகை லட்சுமி

மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

Courtesy: "தமிழ்மறை"

சித்தர் காடு, 63 சீவ சமாதிகள் ஒரே இடத்தில்

மயிலாடுதுறை அருகே...
#ஒரு__சித்தர் தனது
#அறுபத்து_மூன்று #சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.

சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.

சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.

முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.

சமாதி அடைய விருப்பம் :

இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.

அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.

ஆலய அமைப்பு :

கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது.

இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாக்கள் :

ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.

கசப்புத் தன்மை :

ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்திருந்தார். இதையடுத்து அனைவருக்கும் அன்னமும், பருப்பும் பரிமாறப்பட்டது. அப்போது உணவு வைத்தவர், தவறுதலாக நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெயை எடுத்து பரிமாறிவிட்டார். சிற்றம்பல நாடிகளும், அவரது சீடர்களும் எந்த வித வேறுபாடுமின்றி உணவருந்தினார்கள். ஆனால் கண்ணப்பர் என்ற சீடர் மட்டும், அதன் கசப்புத் தன்மையை உணர்ந்து, அதை வெளிப்படுத்தவும் செய்தார்.

இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள், ‘நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும்’ என்றார்.

தனது தவறை உணர்ந்த கண்ணப்பர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். தனது குருநாதருடைய திருவடியை தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி வாழ்ந்து வந்தார். சில காலம் சென்ற நிலையில், தன் குருவும், மற்ற சீடர்களும் சமாதி நிலையை அடைவது பற்றி அவருக்கு செய்தி கிடைத்தது. இதையடுத்து அவர் குருவின் இருப்பிடம் தேடி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் சமாதிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதனால் சமாதிகளை வணங்கிய அவர், குருவின் சமாதி முன்பாக அமர்ந்து கண்ணீர் விட்டார்.

‘ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்கா

மீண்டும் எழுந்தருள வேண்டாவோ– நீண்டவனும்

ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்

பூரணமா வையாத போது’

– என்று மனமுருகிப் பாடினார்.

அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரை, தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார் சிற்றம்பல நாடிகள்.

அமைவிடம் :

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை –கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும்,
சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.

இந்த பதிவை பதிவதற்க்கு அருளிய இறைவனுக்கு..
கோடான கோடி வணக்கங்கள்..

ஓம் நமசிவய....

Monday, 26 February 2018

ஒரு நண்பரின் தெய்வீக அனுபவம்

https://m.facebook.com/photo.php?fbid=905180402846585&id=100000639026701&set=a.220493341315298.61789.100000639026701

திருச்செந்தூர் சென்றால் அங்குள்ள மூவர் சமாதிக்கு சென்று குறைந்தது ஒரு மணி நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு வருவது வழக்கம். அப்படித்தான் ஒரு நாள் மூவர் சமாதியில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது பிற்பகல் மூன்று மணி இருக்கும். அங்கு வேறு யாருமில்லை. சற்று நேரத்திற்கு பிறகு அங்கு காவி ஆடை அணிந்த ஒரு பெரியவர் வந்தார். வரும்பொழுது அவர் பாட்டு பாடிக்கொண்டே வந்தார். "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற பாடலை பாடிக்கொண்டு வந்தவர். எனக்கு சற்று தூரத்தில் அமர்ந்துகொண்டார். அவர் என்னிடம் " தம்பிக்கு எந்த ஊரு" என கேட்டார். நான் " பாளையங்கோட்டை" என்றேன். அவர் " தம்பி இது எப்பேர்பட்ட மண்ணு தெரியுமா? முருகன் கால் பதித்த மண்ணு இங்க பக்கத்தில் வா" என்றார். நான் அவர் அருகில் சென்றேன். அவர் தொடர்ந்தார் ' என் கட்டையை இந்த மண்ணுலதான் தம்பி சாய்க்கணும், அதோ அங்க கீழ கிடக்கிற பேப்பர எடுத்துட்டு வா' என்றார். அங்கு கிடந்த நாளிதழ் பேப்பரை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். அவர் என்னை அந்த பேப்பரை விரித்து பிடிக்க சொன்னார். நானும் விரித்து பிடித்தேன். அவர் கீழிருந்து கடல் மணலை அள்ளி மூன்று முறை அதில் இட்டு மடித்து என் கையில் கொடுத்தார். 'இந்த மண்ண உன் வீட்டில் வை தம்பி ரொம்ப புனிதமானது' என்றார். பிறகு அவர் ' தம்பி நான் வருகிறேன், இன்னும் 10 நிடத்தில், சரியா மாலை 4 மணிக்கு இங்கு கருடன் மேலே வட்டமடிக்க வருவான் அவனை  பார்த்திட்டு போ' என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். நான் காத்திருந்தேன். சரியாக மாலை 4 மணிக்கு கருடன் தரிசனம் தந்தான். அவனை தரிசித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன். அந்த மண்ணை வீட்டில் வைத்த அடுத்த மாதத்தில் ஒரு நிலம் வாங்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த பெரியவர் ஒரு வழிபோக்கர். அவர் யார் என்று எனக்கு தெரியாது.

சங்கு ஸ்வாமிகள் ஜீவசமாதி

சங்கு ஸ்வாமிகள் ஜீவசமாதி


மகான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான். அதாவது பக்தியை இயன்றுவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது. வறுமை, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு உதவுவது. இவையே அவர்களின் நோக்கங்கள். பக்தர்களது எளிய வாழ்வுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை என்றென்றும் கிடைக்கும்படி அருள்புரிந்தனர். வைத்தியர்களால் கூடத் தீர்க்க முடியாத விதிப் பயனால் விளைந்த நோய்களை தங்களது அருளாசியினால் பறந்தோட வைத்தார்கள்.

தென் தமிழகத்தில் கோவில்பட்டியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் பசுவந்தனை எனும் கிராமம் உண்டு. இங்கே விவசாயக் குடும்பத்தில் அவதரித்த சங்கு ஸ்வாமிகள் என்பவர் மிகச்சிறந்த சித்த புருஷர். இவர் பிறந்தது. சமாதி ஆனது முதலான விவரங்கள் பல காலமாக அறியப்படாமலே இருந்தது. என்றாலும் ஸ்வாமிகளுடன் இருந்து சீடர்களது காலத்தைக் கொண்டு ஓரளவு ஊகித்து அறிந்துள்ளனர். அதாவது, சங்கு ஸ்வாமிகள் பிறந்தது 1785 என்றும், ஜீவசமாதியானது 1870 என்றும் அனுமானிக்கப்படுகிறது.

சங்கு ஸ்வாமிகளின் தந்தையார் பெயர் சிவஞான தேசிகர். இவருக்கு இரு மகன்கள். மூத்தவர் தங்கப்பிள்ளை. இளையவர் சங்கு ஸ்வாமிகள் (தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் உள்ளனர் இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம், சங்கு ஸ்வாமிகளின் சமாதி வழிபாடுகளை கவனித்து வருகிறார். அடுத்தவரான ஐ. மாடசாமி பிள்ளை பசுவந்தனை அருள்மிகு கயிலாயநாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார்) சங்கு ஸ்வாமிகளுக்குத் திருமணம் ஆகவில்லை. சங்கு ஸ்வாமிகள் எப்படி இருப்பார் என்பதற்கான தகுந்த புகைப்பட ஆதாரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை. எனினும் இளம் வயதில் ஸ்வாமிகள் இப்படிதான் இருந்திருப்பார் என்ற யூகத்தின்பேரில் அவருடைய அன்பர்கள் படம் ஒன்றை வரைந்து உருவாக்கியுள்ளனர். அதில் கட்டுமஸ்தான தேகம், சாந்தமும், தெய்வீகமும் தவழும் திருமுகம். கம்பீரமான மீசை. திருநீறும் ருத்திராட்சமும் துலங்கும் திருமேனி என அருள் ததும்பும் வடிவமாகத் திகழ்கிறார் ஸ்வாமிகள்.

சங்கு ஸ்வாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே இவரது ஜீவசமாதி இருக்கிறது. சமாதியின் மேல் லிங்கப் பிரதிஷ்டை முன்னே நந்திதேவர். தவிர, இங்கு விநாயகரும் தரிசனம் தருகிறார். ஜீவசமாதி, கதைச் சிற்பங்கள் நிறைந்த விமானத்துடன் திகழ்கிறது. பிராகாரத்தில் சங்கு ஸ்வாமிகளின் சிஷ்யரான நத்தக்காடு சங்கு ஸ்வாமிகள் சமாதி இருக்கிறது. மேலும் கோவிந்தபுரம், சங்கு ஸ்வாமிகள். சிங்கிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள். மாவிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள் முதலான சிஷ்யர்களும் சங்கு ஸ்வாமிகளுக்கு உண்டு. இவர்களது சமாதிகள் வேவ்வேறு இடங்களில் உள்ளன்.

தினமும் காலை ஒன்பது மணிக்கு சங்கு ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் பிரார்த்தனை குறைவின்றி நிறைவேறுவதாகச் சொல்கிறார். இங்கு பூஜைகள் செய்துவரும் பிரம்மநாயகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அசுவினி நட்சத்திர தினத்தன்று சங்கு ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

ஒருமுறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா, பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார் (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி பசி எடுக்கும், சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி, குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார் இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள், வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார்.

அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி, விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்துபோன ஜமீன்தார்.

விடிந்ததும் சிவனாரை வணங்கிவிட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார். பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா? அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில்தான் இருக்கிறார் ஒருவேளை. அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா. இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்துகிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம். அவர்தான். நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக, ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள். பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார்.

கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள், என்ன அப்பனே, அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம்தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார் என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார். சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம், இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து, அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன்படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான். இதுபோன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும்போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டுவிட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்றுபோல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன.

எல்லா மகான்களையும் போலவே, தான் சமாதி ஆகப்போகும் காலம் இதுதான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சீன முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள். அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம் பசுவந்தனை சிறப்பு சங்கு சுவாமிகள் சமாதி கோயில். எங்கே இருக்கிறது? கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது பசுவந்தனை. மதுரை- நெல்லை ரயில் மார்க்கத்தில், கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவு. மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவு. தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் இருக்கறது
=============================
முடிசார்ந்தமன்னரும்முடிவில்
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே
இனிய வணக்கம் .

Saturday, 24 February 2018

அகத்தீசரே வாசியை நடத்துவார்

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நற்கருணையுடன் சொன்னதை பின்பற்றி ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!.

-குருநாதர் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்

அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்

வாசக அன்பர்களுக்கு வணக்கம். கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரை தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளிவந்துள்ளது. நம் வாசகர்களின் நலம் கருதி இங்கே பகிரப்படுகிறது.

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும்.

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே 

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்
மூன்று வகைப்படும்.
ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்

ஷணிக லிங்கம்:

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்


இஷ்ட லிங்கம்:

மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்


ஆத்ம லிங்கம்:

தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்

சில வகையான வித்யா சக்திகள்


Kubjaka Devi - is the spinal cord in the human body as well as the Kundalini Shakti. She is the Kala Sarpam and the mother of Rahu and Ketu. Kubjaka Devi is the Nagaamsha of Adhi Parashakti and the power of Sapta Matrikas. She has 1000 hoods when shown in the form of a snake. She is the Dharma devta. She is also the shadow and pratibimb of human. She protects humans from suffering fevers and diseases. As she is the consciousness, so represented as she seats on a dead body(as without her human is a dead body) which is on a swing(which represents movement or chaitanya).


Nageshwari - She is the representation of Sanskrit Alphabet and also known as Sri Vidya Shankari. She plays veena and is shown as having ferocious fangs. She grants wealth and luck. She is the Kundalini Shakti which is the basis for gyan.

Manasa Devi or Virada Narayani - According to some puranas she is the manasa putrika of lord Shiva but others say she is his disciple. She is an amsha of Goddess Parvati. She is a sister of Adi Sesh and sage Jaratkaru is her husband. The great sage Astik who made King Janamejay to stop the Sarpa yagam and saved the Naga jati is the son of Manasa and Jaratkaru. She did tapasya for Lord Vishnu for lakhs of years and became Narayani, so the name Virada Narayani. She is the Adhistan devta of manas, so she became Manasa Devi. She removes the poisionous thoughts from human mind.She is a siddha yogini and her temple is located in Haridwar.


Ananta Naga or Adi Sesha


Friday, 23 February 2018

சித்தர் உரை - ஞானம் பெறுவதற்கு என் செய்ய வேண்டும்

மிக ஆழமான அர்த்தம், மிக மிக எளிமையான விளக்கத்தில் கிடைத்தல் அரிது.... 🙏

Watch சித்தர் ஜீவசமாதி அடைந்தார்

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்
Watch சித்தர்
ஜீவசமாதி அடைந்தார்7.50,Pm 23.2.18


திருமுருகநாதஸ்வாமி. முயங்குபூண்முலைவல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை.


சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
____________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............................)
_____________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 261*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜திருமுருகநாதசுவாமி திருக்கோயில், திருமுருகபூண்டி:*
_____________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* திருமுருகநாதஸ்வாமி.

*💥இறைவி:*
 முயங்குபூண்முலைவல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை.

*🌴தல விருட்சம்:* குருக்கத்தி.

*🌊தல தீர்த்தம்:* சண்முக தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,ஞான தீர்த்தம்.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர்- ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.

*🛣இருப்பிடம்:*
கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து ஐந்து கி.மி. தொலைவில், அவிநாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி ஆலயம் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு திருமுருகநாதஸ்வாமி திருக்கோயில்,
திருமுருகபூண்டி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
PIN - 637 211

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8. 00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

*கோயில் அமைப்பு:*
நொய்யல் ஆற்றின் வடபகுதியோரமாக அமைந்து, மேற்கு நோக்கியபடி அருளும் தலம் இத்திருமுருகன் பூண்டி.


மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோயிலில் மற்ற கோயில்களைப் போல நுழைவு கோபுரம் கிடையாது.

கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பத்தூடன் அமையப் பெற்றிருந்தது.


சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுடன் நான்கு புறமும் உயர்ந்ததான மதில் சுவர்களைக் கொண்டு அமைந்திருந்தது.

இரண்டு பிராகாரங்களுடன் இந்தக் கோயில் அமைந்திருக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து உள் புகுந்தோம்.

கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில்  தரிசனம் தந்தார்.
மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதியில் காட்சி தந்தார்.

முன்நின்று, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதுபோல அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்து வைத்திருந்தனர்.

கருவறை விமானத்தை நோக்கியபோது,  அழகிய சுதைச் சிற்பங்கள் காட்சியளித்தன. கண்டு இன்புற்று நடந்தோம்.

உட்பிராகாரத்தில் நிருதி விநாயகரைக் கண்டு விட்டோம். சடுதியில் காதுகளைப் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

இதனையடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்கள் இருக்க, நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.

அடுத்து, சண்முகர், துர்க்கை, பைரவர், ஆகிய சந்நதிகளுக்குச் சென்று வணங்கிப் பிரார்த்தித்து நகர்ந்தோம்.

மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி இருந்தது.

ஐந்தடி அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கமாக ஐந்து திருமுகங்களும், பின்பக்கமாக ஒரு முகமும் உடையதாக அமைந்து காட்சியருளிக் கொண்டிருந்தார். ஆனந்தித்து வணங்கி மகிழ்ந்து திரும்பினோம்.

மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்திருந்தது.

அம்மையை கண்குளிர தரிசனம் செய்து மனங்குளிர ஆராதித்து வணங்கி, அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

கோயிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தம் அமைந்திருக்கிறது.

கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் அமைந்து இருக்கிறது.

சித்த பிரமை பிடித்தவர்களை இந்த தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவரச் செய்கிறார்கள்.

இவ்விதம் வணங்கித் தொழ, அவர்களுடைய சித்த பிரமை நீங்குவது என்பது பக்தர்களின் கண்கூடு.

*தல அருமை:*
புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம்.

சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.

கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே" என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன.

பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று.

ஆக,  இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.

இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி விளங்குகிறது.

இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம் இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோயில் என்ற ஒரு கோவிலும் உள்ளது.

இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது.

இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக ளங்குகிறது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.

*வேடுபறி திருவிழா:*
திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியுள்ள திருமுருகநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வேடுபறி திருவிழா  பிரசித்தமானது.

*ஆலயப் பழமை:*
தொல்லியல் துறையின் ஆய்வுகளின்படி திருமுருகன் பூண்டியை புராதன நகரமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

*தல சிறப்பு:*
சூரபத்மனை வதைத்த முருகன் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தன் கையாலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்ட தலம் இது.

நிந்தா ஸ்துதி என்பது இறைவனை நிந்தனை செய்வது. இறைவனே தன்னிடம் நட்பு பாராட்டிய பெருமைக்கு உரியவர் சுந்தரர்.

அப்படிப்பட்ட சுந்தரரே தன்னுடைய நண்பரான சிவபெருமானை, நிந்தனை செய்து திட்டி பதிகம் பாடுகிறார். இதுவும் இறைவனின் திருவிளையாடல் இது.

சிவனின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாக கருதப்படுகிறது.

பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதை எண்ணி வருந்தி, இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான்.

இது குறித்து சிற்ப காட்சிகள் இங்கு காணப்படுகின்றன.

இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவரின் சிற்பமும் இங்கு அமையப் பெற்றிருந்தது.

*திட்டுப் பாடல் கேட்க நினைத்த இறைவன்:*
தன்னுடைய காதலுக்கு சிவபெருமானையே தூதாகச் செல்லச் சொன்னவர் சுந்தரர்.

பெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே அப்படியொரு அன்யோன்யமான நட்பு இருந்து வந்தது.

பெருமானின் பெருமைகளை ஒவ்வொரு ஆலயத்திலும் பாடிவருவார் சுந்தரர்.

சுந்தரர் தனக்கு என்ன தேவையோ அதை தன்னுடைய நண்பரான பெருமானிடமே நேரடியாக கேட்டுப் பெறக்கூடியவர்.

இந்த வழக்கத்துக்கு மாறாக, சுந்தரருக்கு மன்னர் ஒருவர் பொன்னும், அளவிடமுடியாத பரிசுகளும் அளித்து அவரை வழியனுப்பி வைத்தார்.

பெரும் பொருட் செல்வத்தோடு கோவை, அவினாசியில் இருக்கும் *கூப்பிடு பிள்ளையார்* கோயிலில் இரவு தங்கினார் சுந்தரர்.

ஒவ்வொரு முறையும் வாழ்த்தி வணங்கி பாடிவந்த தன்னுடைய நண்பர் சுந்தரரை, தம்மை இதுவரை திட்டிப் பாடவில்லையே என நினைத்த சிவபெருமானார் அதற்காக ஒரு திருவிளையாடல் புரிகிறார்.

தம்முடைய பூத கணங்களுடன், வேடனாகச் சென்று சுந்தரர் அறியாவண்ணம் அவரிடம் உள்ள பொருட்களை கவரச் செய்து விட்டார்.

மறுநாள் கண் விழித்த சுந்தரர், தம்மிடம் இருந்த பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

சிவபெருமானை நோக்கி, நீ இருக்கும் சந்நதியிலேயே இப்படியெல்லாம் நடக்குமா? என கோபத்தோடு கேட்டார்.

*எந்துற்கு எம்பிரான் நீரே…* எனத் தொடங்கி பத்து பதிகங்களால் வசைபாடி பாடுகிறார்.

உடனே அவரின் முன் தோன்றிய இறைவன், நண்பரே!, நீர் என்னைத் திட்டிப் பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று கூறியதோடு, களவாடிய பொருட்களைப் போல் இரண்டு மடங்கு அதிகம் செல்வத்தைக் கொடுத்து, சுந்தரருக்கு அருள் பாலித்தார்.

*கதை சொல்லும் சிற்பங்கள்:*
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் இந்தச் சம்பவத்தை விளக்கும் வகையில், சிவன் வேட்டுவனாக வில்லோடு நிற்பதைப் போலவும், சுந்தரர் கோபமாக இறைவனுடன் வாதிடுவது போல ஒரு சிற்பம் உள்ளது.

மற்றொரு சிற்பமாக, மகிழ்ச்சி தவழும் முகத்தோடு சுந்தரர் இருப்பதையும் போன்றும் ஒரு சிற்பமும் உள்ளன.

இந்த புராணச் சம்பவத்தை ஒட்டியே ஆண்டுதோறும் இக்கோயிலில் வேடுபறி திருவிழா விமரிசையாக நடத்தப்படுகின்றது.

*பரிகார ஆலயம்:*
இன்றும், சிவன், பொருட்களைத் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோயிலில் இருக்கிறது நாம் சென்றால் காணமுடியும்.

திருட்டு, மனநோய், திருமணத் தடை என எத்தகைய இடர்களையும் தீர்க்கும் ஆலயமாக இருக்கிறது.

சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டிப் பாடிய பத்துப் பாடல்களையும், பாடி வணங்க, நினைத்த காரியம் கைகூடும் என்பதும் ஐதீகம்.

*சுந்தரர் தேவாரம்:*
பண்: பழம் பஞ்சுரம்.

1.🔔கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

🙏எம்பெருமானிரே, முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர், வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி, திடுகு என்றும் , மொட்டு என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம். இம்மாநகரிடத்து இங்கு, சிறுகிய, நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்?

2.🔔வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடுவர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால்,  இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

3.🔔பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அப்பாவிகள், பாவம் என்பதொன்றையறியாராய் விலங்குகளையே கொன்று தின்று, நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். இதன்கண் நீர், இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று, இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

4.🔔பீறற் கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, குற்றமுடைய வேடுவரே கூடி, ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய், வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அவர்கள், கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு, வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால், அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

5.🔔தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம் பெருமானிரே, நீர், விளங்குகின்ற தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும், இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

6.🔔விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, நீர், கொட்டிப்பாடுதற்கு உரிய, தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால், மற்றும், ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால், பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

7.🔔வேத மோதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்றயலே
ஓத மேவிய ஒற்றி யூரையும்
உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளு
முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏது காரண மேது காவல்கொண்
டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, நீர், வேதத்தை ஓதிக்கொண்டு, வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு, வெள்ளிய கோவணத்தை உடுத்து, பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர். அங்குப் போகாமல், வேடர்கள், வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, யாது காரணத்தால், எதனைக் காத்துக் கொண்டு, எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்?

8.🔔படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, உமை என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர். முடவரல்லீர், ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர். அன்றியும், நீர், விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர்?

9.🔔சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம் பெருமானிரே, வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு, வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி, முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நீர், மொந்தை என்னும் வாச்சியத் தோடு, வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து, அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

10.🔔முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.

🙏தேவர், ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற, திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற, பந்திற் பொருந்திய விரல்களையுடைய, பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள், துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர்.

     திருச்சிற்றம்பலம்.

*🎡திருவிழாக்கள்:*

*☎தொடர்புக்கு:*
04296- 273507

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *கொடுமுடிநாதர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி.(கொடுமுடி.)*
_____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

ருண விமோசன பிரதோஷம்

🌸🔱 *ௐம் நமசிவாய ௐம்*🔱🌸

*ருண விமோசன பிரதோஷம்*

வரும் 27/02/2018 செவ்வாய் கிழமையன்று வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் எனக் கூறப்படுகிறது.
*செவ்வாய் கிரகம் கடன் தொல்லை தரவும் செய்யும்,தீர்க்வும்  செய்யும்.*
இப்பிரதோஷம் செவ்வாய் அன்று வருவதால் இது *ருண ( கடன் )  விமோசன பிரதோஷம்* எனப்படுகிறது.
 கடன் தொல்லையால் அவதிப்படுவோர் இந்த பிரதோஷத்தை முறையாகப் பயன் படுத்திக் கொள்ளவும்.

*சித்தர்களின் ஜீவ சமாதி, 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிவாலயங்கள்,ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னிதி போன்ற இடங்களில் வழிபாடு செய்யலாம்.*

*ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் வழிபாடும் இந்த பிரதோஷ  காலத்தில் சிறப்பானது.*

*அருணாசல கிரிவலம் மிக மிக சிறப்பு. மற்ற இடங்களிலும் கிரி வலம் செய்யலாம்.*

*அன்றைய தினம் மௌன விரதம் இருப்பது கூடுதல் பலன் தரும்.*

*கேரட் சாதம், தக்காளி சாதம், துவரை சாதம் அன்னதானம் செய்யலாம்.*

*அன்று ரத்ததானம் செய்யலாம்.*

*முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஸ்தலங்களில் கிரி வலம் செய்யலாம்.*

*பழனி,திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் , கழுகு மலை சிறப்பு ஸ்தலங்கள்.*

*திருச்செந்தூர் செல்வோர் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி ஸ்வாமி ஜீவ சமாதியிலும், கழுகு மலை செல்வோர் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவ சமாதியிலும்,பழனியில் ஸ்ரீ போகர்  மற்றும் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் ஜீவ சமாதியிலும், திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ  மாயாண்டி சித்தர் ஜீவ சமாதியிலும் இந்நாளில்*
 *தியானிக்கலாம்.*

அறிவியல் தியானம்

தியானம் (share this post)

உடலுக்கு உடற்பயிற்சி –உயிருக்குத் தியானப் பயிற்சி

தியானம் :

தி = பேரறிவு
யானம் = பயணம்.

தியானம் என்றால் பேரறிவை நோக்கிய பயணம்.
இறைவனாகிய பேரறிவு, பெரும்சக்தி நம் இதயத்தில் வாழ்கிறது. அந்தப் பேரறிவை, பேராற்றலை, தியானப் பயிற்சியால் வெளிக் கொணர்ந்து, பெருக்கி பெரும் வல்லமை பெற்று, பேரானந்தம் (Eternal Bliss) பெற
வேண்டும்.

தியானம் என்பது ஒரு
· ஒரு முகப் பயணம் (CONCENTRATION)
· உள் முகப் பயணம் (KNOW THYSELF)
· விழிப்புணர்வுப் பயணம் (AWARENESS)

தியானம் : பலன்கள்

புத்தி கூர்மை கூடுகிறது (INTELLIGENCE ++)
முடிவுஎடுக்கும் திறமை வளர்கிறது (DECISION MAKING++)
மனம் நிம்மதி பெறுகிறது (PEACE OF MIND ++)
மனம் நிறைவு பெறுகிறது (SENSE OF SATISFACTION)
இரத்தக் கொதிப்பு குறைகிறது (REDUCES HIGH BLOOD PRESSURE--)
நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது (IMMUNITY ++)
புதுச் சிந்தனை, புதிய ஆற்றல், புதிய கலைத்திறன் வளர்கிறது (DISCOVERY AND INVENTION ++)
அகப்பொலிவு (தேஜஸ்) பெருகுகிறது (ENLIGHTENMENT OF BODY++)
மன நோய்கள் அகல்கிறது (CURES PSYCHOSIS --)
இறைநிலை கைகூடுகிறது (ACHIEVE DIVINE STATUS ++)

அறிவியல் தியானம் செய்முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

உணவுவயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லது சின் முத்திரை

யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல் (RELAXED POSTURE)

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும். திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய் அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்

கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள் (புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி
ஜோதியாகத் தெரியும்.)

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்

எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்
நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும். கவலை
வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம். மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு, பிறகு தியானத்தை தொடருங்கள். எண்ணங்கள்
தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில் தியான நேரத்தை
5 நிமிடங்கள், பின் 10 நிமிடங்கள், பின் 15,பின் 30 நிமிடங்கள் எனப் படிப்படியாகக் கூட்டுங்கள்.
ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால் ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி, மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல் எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறுபிறப்பு.

வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும், தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும். “கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” ( வள்ளலார் )

பிராணயாமம்.

ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம்

பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்)

மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாம மாகும்.

குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும்  ஜீவன் களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான்.

ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள்.

மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம்
இரட்டிப்பாகும்.

கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன் மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன் நோய்வாய்ப்படுகிறான்.

மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால்,
பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித் தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.

மூச்சை உள்ளிழுத்தல்பூரகம் 4 செகண்டுகள்
மூச்சை தக்கவைத்தல்கும்பகம்16 செகண்டுகள்
மூச்சை வெளியே விடல்ரேசகம் 8 செகண்டுகள்
இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல் சாலச் சிறந்தது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.

வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளி ழுத்து வெளிவிடுவது பிங்கலை.

இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை.

இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது. சுழுமுனை
பிராணவாயுவை அதிகம் நுரையீரலில் தக்க வைக்கும். காரணம் இடது நாசியிலிருந்து சுவாசப் பையின் தூரம் 16 அங்குலம். வலது நாசியிலிருந்து சுவாசப்பையின் தூரம் 12 அங்குலம். இடது நாசியால் இழுத்து வலது நாசியால்
வெளிவிடும் பொழுது 4 அங்குலம் மூச்சு (பிராணவாயு அதிகம் உள்ள மூச்சு) நுரையீரலில் உள் தங்குகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்யும். பிராண சக்தியை அதிகரி க்கும்.

பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் நான்காம் யோகமாகும்.

(1) பஸ்திரிகா பிராணயாமம் ; செய்முறை.

தியானம் போல் இடம், ஆசனம், மற்றைய நியதிகள் இருக்கட்டும்.

பிராணயாமம் செய்யும் பொழுது மூச்சோடு மனம் ஒன்ற வேண்டும்.

மூச்சை வெளிவிடும் பொழுது வயிறு மட்டும் சுருங்க வேண்டும்.

மூடிய கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்கட்டும்.

மூச்சை இயல்பாக விட வேண்டும்.

வலது கைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும்.

பின் வலது நாசி வழியாக மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல், வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை இடது நாசி வழியாக வெளிவிடவும்.

இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்தால் போது மானது.

(2) கபாலபதி பிராணயாமம் ; செய்முறை.

இரண்டு மூக்குத்துவாரங்களிலும் மூச்சை வேகமாக
உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் உடனே அதிவேகமாக வெளிவிடவும்.

இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்யவும்.

(3) உஜ்ஜயி பிராணயாமம். இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை
முடிந்தவரை உள்ளுக்கிழுத்து (4 செகண்டுகள்) பின் அப்படியே மூச்சை உள் நிறுத்தி (16 செகண்டுகள்) பின் நிதானமாக மெதுவாக வெளிவிடுதல் வேண்டும் (8
செகண்டுகள்).

ஆசிபா (ABS) பயிற்சி

ஆசனவாய், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புகள் அனைத்தும் ஒரே நரம்பினால் எஸ் – 2 (S 2 Segment) இயக்கப்படுகிறது. ஆசனவாயை சுருக்கி, விரிவடையச் செய்யும் பயிற்சியால் அந்த நரம்பு வலுவடைகிறது.

பயிற்சியால் பெண்கள் பாலியல் உறுப்புகள் கட்டுப்பாடும், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல்
(Uterine Prolapse) தடுப்பும் பெறுகிறார்கள். சிறுநீரை அடக்குதல் சுலபமாக சாத்தியமாகிறது. ஆண்களுக்கு நீர்த்தாரை கட்டியால் (Prostate) ஏற்படும்
முதுமைக்கால நீர்க்கசிவு, கட்டுப்பாடின்மை குறைகிறது. விந்துக் கசிவும் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆசிபா செய்முறை :

கால்களை கொஞ்சம் அகல விரித்து, நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ ஆசனவாயை மெதுவாகச் சுருக்கி, பின் விரித்து 10 தடவை
பயிற்சி செய்யவும்.

இப்பயிற்சி செய்யும் பொழுது, மனம் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். பயிற்சி கஷ்டப்படாமல் இயல்பாக செய்யப்பட வேண்டும்.

பயிற்சி முடிவில் உஜ்ஜயி பிராணயாமம் செய்யவும். கைகளைக் கும்பிடுவது போல் மேல் தூக்கி மூச்சை இரண்டு நாசிகளாலும் நாலு செகண்டுகள் உள்ளிழுத்து
பதினாறு செகண்டுகள் நிறுத்தி பின் எட்டு செகண்டுகள் மெதுவாக வெளிவிடவும்.

ஆசிபா பயிற்சியை ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் செய்யவும்.
ஆ : ஆசனவாய். சி : சிறு நீர்ப்பை: ப : பாலியல் உறுப்புகள்
A : Anus, B : Bladder, S : Sexual organs.

எல்லாப் பயிற்சிகளுக்கும் பொது நியதிகள்:

1. பயிற்சிக்காலம் முழுதும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.

2. காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்தல் நலம்.

3. பயிற்சியில் மனம் லயிக்க வேண்டும். (ஒருமை உணர்வு)

4. முக மலர்ச்சியுடன் பற்றுவைத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

5. மூச்சை இயல்பாக விட வேண்டும்.

6. இரண்டு பயிற்சிகளுக்கு நடுவில் குறைந்தது 5 நிமிட இடைவெளி தர வேண்டும்.

7. பயிற்சி தொடங்குமுன் தசைகளை தளர்த்தி இயல்பாக மூச்சுவிட வேண்டும்.

8. மூச்சுப் பயிற்சியின்போது இருதய, நுரையீரல் நோயாளிகள் அதிக நேரம் மூச்சை இழுத்து, உள்நிறுத்தி ‘தம்’ கட்டுவது தவறு. ஆபத்தாகும்.

9. பயிற்சி முடிந்ததும் உடனே எழுந்து வேறு வேலை செய்வது நல்லதல்ல. குறைந்தது பத்து நிமிடம் ஓய்வு தேவை. விரும்பினால் சாந்தி யோகம் செய்யலாம்.

10.பயிற்சிகள் முடிந்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

11.இளைஞர்கள் விளையாடுவதற்கு முன் இப் பயிற்சிகளை ஒரு ஆரம்ப தயார் நிலை (Warm up) பயிற்சியாக செய்வது சிறந்த பலனைத் தரும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா

Tuesday, 20 February 2018

பிப்ரவரி 2018 முக்கிய செவ்வாய் தினங்கள்

ஜோதிடர்களுக்கும்,ஜோதிட ஆர்வலர்களுக்கும்,ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கும்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை செவ்வாய் விருச்சிக ராசியை அடையும்;அதில்,கேட்டை நட்சத்திரத்தை கடக்கும் நாட்களில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஜீவ சமாதிகளில் தவம் செய்யும் மகான்கள்,சித்தர்கள்,துறவிகளின் அருளாற்றல் அளவுக்கு மீறி வெளிப்படும்;

இந்த செவ்வாய்க்கிழமைகளில் வரும் குரு ஓரை அல்லது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் ஜீவசமாதிகளில் மாலை அணிவித்து,பத்தி பொருத்தி,சித்திரான்னங்கள் (ஐந்து வகை சாதம்) படையல் இட வேண்டும்;இட்டு,30 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை தியானம் செய்ய வேண்டும்;தியானத்தின் முடிவில் சித்திரான்னங்களை எடுத்து அங்கே வரும் அனைவருக்கும் பகிர்ந்து தர வேண்டும்;எந்த உயிரினம் (காகம்,புறா,நாய்,குருவி,பசு) வந்தாலும் அவைகளுக்கும் தர வேண்டும்;

இதன் மூலமாக உடனே அந்தந்த மகான்/சித்தர்/ரிஷி/துறவியின் அருள் கிட்டும்;

இந்த அருள் உங்களது பலவிதமான நெருக்கடிகளை உடனே தீர்த்துவைக்கும்;

கேட்டை நட்சத்திரத்தை செவ்வாய் கடக்கும் செவ்வாய்க்கிழமைகள்:



20.2.2018

27.2.2018

6.3.2018

எல்லா ஊர்களிலும் எதாவது ஒரு ஜீவசமாதி/சித்தர் ஐக்கியமான அதிஷ்டானம் இருக்கின்றது;இந்த வழிபாடு செய்து அனைவரும் வளமோடும்,நலமோடும்,சீரோடும்,சிறப்போடும் வாழ்க!!!

2016  இல்  இது போல மகான்களின் அருளாசியை முறைப்படி வழிபாடு செய்து பலர் வாழ்க்கை/தொழிலில் அபாரமாக முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.....!!!!!

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்

Monday, 19 February 2018

ஆன்மீகத்தில் ஏழு நிலைகள்

ஆன்மீக முன்னேற்றமானது 7  நிலைகளாக அறியப்படுகிறது. 

சுபேச்சா -

                உலகின் தன்மைகள். தான் இதனோடு எந்த அளவு சம்பந்தபட்டிருக்கிறோம். இதனால் உண்மையில் நான் அடைந்த பலன் அல்லது திருப்தி என்ன?  என சிந்திப்பதும் ஆன்மீக அடிப்படை உண்மைகள், நீதிகள், பற்றிய புத்தகங்கள் படித்தல், சத்சங்கம் நாடுதல்.

விசாரணா

             சித் என்ற ஜீவன் அசித் எனும் உலகை (பிரபஞ்சத்தை) அல்லது பிரகிருதியை, பிரம்மமான  பரமாத்மாவைப் பற்றி சிந்தித்தல் , தேடல், தேறுதல்  உணர்வதிலே தன்னை வெகுவாக ஈடுபடுத்தி - ஆராய்தல்.

அஸங்க பாவனா 

              புலன், புலனறிவு சம்பந்தப்பட்ட விஷய நாட்டம். இவற்றிலிருந்து சிறிது சிறிதாக விலகி - அந்த நிலையே உகந்ததென அதில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அமைதி , பொறுமை, கொண்டு மகிழ்ச்சி கொள்ளுதல்

விலப்பனா

                                   ஆசை, மோஹம், துவேஷம், கிலேசங்கள் அற்ற நிலையில் எல்லாவற்றிலிருந்தும் விலகி மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நழுவி விடாத மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நழுவி விடாத உன்னத அல்லது அற்ற நிலையில் இருத்தல், பற்றற்றவனாகிறான்.

அஸம் சக்தி

முற்றுமாக, உலகப்பற்றறுத்து விலகிக் கொண்டவனாய் , எந்த வித தொடர்பும் சம்பந்தமில்லாத (தொடர்பறுத்த ) சித்த விருத்திகளை  முழுதும் வேரறுத்த  விவேகியாகின்றான். (முழுத் துறவு) சாதனையாளனாகிறான்.

பதார்த்த அ பாவானா

உலகில் யாவும் மாயைக்குட்பட்டதே என்பதில் சந்தேகமில்லாமல் தெளிந்து நிலையற்ற தன்மையே நிரந்தரம் என உணர்கிறான்.

துரீயா :
உணர்வு கடந்த , உயிர்ப்பு அடக்கிய தூல உடல் ஒரு சாட்சியாக்கப் பட்ட, அண்ட சக்தியினைப் பிண்டத்திற்குள் இருத்தி சமாதி என்ற எட்டாவது நிலையுள் பிரவேசித்து இறுதி காரண லோக வாசியாவதற்கான ஜீவன் முக்தனாகிறான்.

கணபதி காயத்ரி மந்திரங்கள்

கணபதி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

 ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்தியுதாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

ஓம் தசபுஜாய  வித்மஹே

வல்லபீசாய  தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய  தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

ஓம் லம்போதராய வித்மஹே

வக்ர துண்டாய  தீமஹி

தந்நோ  தந்தி ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

மீண்டும் ஒரு கட்டுரையில் ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மனம் மகிழ்வடைகிறது. ஜீவ நாடி நூல்களில் கிடைக்கப்பெற்ற காயத்ரி மந்திரங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . முடிந்தவரை அனைத்து தெய்வங்கள் ரிஷிகள், மகான்கள், சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை வெளியிட இறைவன் அருளால் முயற்சிக்கிறோம். மன வேகத்திற்கு  இணையாக சென்று கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கையில் மந்திரங்களின் பலன் என்பது அதனை ஜபம் செய்பவர்களுக்கே விளங்கும்.  எங்காவது , யாரவது  இந்த வலைத்தளத்தின் மூலமாக பயன்பெற்றால் அதுவே எமக்கு உயர்ந்த பரிசாகும்.

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்சனாய வித்மஹே

ஜ்வால சக்ராய   தீமஹி

தந்நோ  சக்ர  ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்சனாய வித்மஹே

மஹா மந்த்ராய   தீமஹி

தந்நோ  சக்ர  ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்சனாய வித்மஹே

மஹா ஜ்வாலாய   தீமஹி

தந்நோ  சக்ர  ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்சனாய வித்மஹே

சக்ர ராஜாய  தீமஹி

தந்நோ  சக்ர  ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்சனாய வித்மஹே

ஹெட்டி ராஜாய  தீமஹி

தந்நோ  சக்ர  ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்சனாய வித்மஹே

மகா மந்த்ராய  தீமஹி

தந்நோ  சக்ர  ப்ரசோதயாத்

ஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

சுவம பக்ஷாய  தீமஹி

தந்நோ  கருட  ப்ரசோதயாத்

ஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் பக்ஷி ராஜாய வித்மஹே

சுவம பக்ஷாய  தீமஹி

தந்நோ  கருட  ப்ரசோதயாத்

ஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் தசபாத்ராய வித்மஹே

தனாயுபுத்ராய  தீமஹி

தந்நோ  கருட  ப்ரசோதயாத்

பெரியாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் வைஷ்ணவாய வித்மஹே

சத்ய வாசாய தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

சுப்ரமண்யர் காயத்ரி மந்திரம்

சுப்ரமண்யர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

சிகித்வஜாய தீமஹி

தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மகா சேனாய தீமஹி

தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் கார்த்திகேயாய வித்மஹே

வள்ளிநாதாய தீமஹி

தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் புஐங்கேசாய வித்மஹே

யூரகீசாய தீமஹி

தந்நோ நாக ப்ரசோதயாத்

ஓம் மகாசேனாய வித்மஹே

ஷடாநனாய தீமஹி

தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷடாநனாய வித்மஹே

சக்தி ஹஸ்தாய தீமஹி

தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

பைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் திகம்பராய வித்மஹே

தீர்க்க சிஸ்னாய தீமஹி

தந்நோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே

சூல  ஹஸ்தாய தீமஹி

தந்நோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ ஷேத்ர ப்ரசோதயாத்

ஓம் ஷேத்ர பாலாய வித்மஹே

ஷேத்ர ஸ்திதாய தீமஹி

தந்நோ ஷேத்ர ப்ரசோதயாத்

ஹனுமான் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

ராம தூதாய தீமஹி

தந்நோ கபிதி ப்ரசோதயாத்

ஓம் பவனாத்மஜாய வித்மஹே

ராம பக்தாய தீமஹி

தந்நோ கபிதி ப்ரசோதயாத்

தட்சிணா மூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் தக்ஷிணாமூர்த்யே வித்மஹே

த்யானாஸ்தாய தீமஹி

தந்நோ தீஸ ப்ரசோதயாத்

ஓம் ஞான மூர்ததாய வித்மஹே

தத்வ போதாய தீமஹி

தந்நோ தேவ ப்ரசோதயாத்

ஓம் ருஷபாதவஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்

ஓம் பரவரசாய வித்மஹே

குரு வ்யாதாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

ருத்ர பத்னியை ச தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்

ஓம் சௌபாக்யை வித்மஹே

காமமாலினியை தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்

ஓம் ஞானாம்பிகாய  வித்மஹே

மகாதபாய தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்

ஓம் ஸ்வபாகாயை வித்மஹே

காமமாலாய  தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்

ஓம் ஸோஹம்ச வித்மஹே

பரமஹம்ஸாய  தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்

ஓம் பகவத்யை வித்மஹே

மஹேஸ்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

ஸ்ரீ அன்னபூரணி தேவி காயத்ரி மந்திரம்

ஓம் பகவத்யை வித்மஹே

மகேஸ்வர்யை  தீமஹி

தந்நோ  அன்னபூர்ணா ப்ரசோதயாத்

காளிகா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் காளிகாயை ச வித்மஹே

ஸ்மசான வாசின்யே  தீமஹி

தந்நோ  கோர ப்ரசோதயாத்

ஜெய துர்கா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

துர்காயை ச  தீமஹி

தந்நோ தேவி ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே

துர்காயை ச தீமஹி

தந்நோ கிணி ப்ரசோதயாத்

ஓம் காத்யனாய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தந்நோ துர்க்க ப்ரசோதயாத்

ஓம் காத்யனாய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தந்நோ துர்க்க ப்ரசோதயாத்

ஓம் தும் ஜ்வாலமாலினி வித்மஹே

மகா சூலினி தீமஹி

தந்நோ துர்க்க ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா காயத்ரி மந்திரம்

ஓம் ரூபாதேவி ச வித்மஹே

சக்தி ரூபிணி தீமஹி

தந்நோ சந்தோஷி ப்ரசோதயாத்

சரஸ்வதி காயத்ரி மந்திரம்

சரஸ்வதி காயத்ரி மந்திரம்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

பிரம்ம பத்னியை  ச தீமஹி

தந்நோ வாணி ப்ரசோதயாத்


ஓம் யே யே சர்வப்ரியவாக் ச வித்மஹே

ப்ரீம் வாகீஸ்வரி தீமஹி

தந்நோ சக்தி  ப்ரசோதயாத்

ஓம்  வாக்தேவ்யை ச வித்மஹே

விருன்ச்சி பத்னியை தீமஹி

தந்நோ வாணி ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே

காம ராஜ்யாய தீமஹி

தந்நோ தேவி ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே

பிரம்ம பத்னியை  ச தீமஹி

தந்நோ வாணி ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே

பிரம்ம பத்னியை  ச தீமஹி

தந்நோ தேவி ப்ரசோதயாத்

மஹா லட்சுமி காயத்ரி மந்திரம்

ஓம் தன தான்யை வித்மஹே

ஸ்ரீம் ராதிப்ரியாயை தீமஹி

ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்

ஓம் மகாலக்ஷ்மி ச வித்மஹே

விஷ்ணு பத்னியை ச தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பந்தாய ச தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் அம்ருத வாசினி வித்மஹே

பத்மலோசனி தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் பூ சக்தி ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மீ பூர்வ புவஹ வித்மஹே

ஸ்வ காலகம் தீமிஹி

தந்நோ மகாலக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் தன ஆஹர்ஷினீ ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச  தீமஹி

தந்நோ  லட்சுமி  ப்ரசோதயாத்

பிரம்மா காயத்ரி மந்திரம்

பிரம்மா காயத்ரி மந்திரம்

ஓம் பரமேஸ்வராய வித்மஹே

பர தத்வாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

ஓம் சுராராத்யாய வித்மஹே

வேதாத்மனாய  தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

ஓம் ஹம்சாரூதாய வித்மஹே

கூர்ச ஹஸ்தாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

ஓம் வேதாத்மஹாய  வித்மஹே

ஹிரண்யகர்ப்பாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே

சதுர்முகாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் கச்சபேஸாய வித்மஹே

மஹா பலாய தீமஹி

தந்நோ கூர்ம ப்ரசோதயாத்

ஓம் வாசுதேவாய வித்மஹே

ராதாப்ரியாய தீமஹி

தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்

ஓம் நரசிம்மாய  வித்மஹே

வஜ்ர நகாய  தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய  வித்மஹே

மஹா மீனாய   தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் தனுர்தாராய   வித்மஹே

வகர தம்ஸ்த்ராய   தீமஹி

தந்நோ வராக  ப்ரசோதயாத்

ஓம் நாராயணாய    வித்மஹே

வாசுதேவாய   தீமஹி

தந்நோ நாராயணா ப்ரசோதயாத்

ஓம் த்ரைலோக்ய மோகனாய    வித்மஹே

ஆத்மராமாய    தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் லட்சுமிநாதாய மோகனாய    வித்மஹே

சக்ரதாராய   தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் விஷ்ணுதேவாய   வித்மஹே

வாசுதேவாய   தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் பூவராகாய   வித்மஹே

ஹிரண்யகர்ப்பாய   தீமஹி

தந்நோ க்ரோத  ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வராய   வித்மஹே

ஹயக்ரீவாய   தீமஹி

தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

ஓம் நிலாயாய    வித்மஹே

வெங்கடேசாய    தீமஹி

தந்நோ ஹரி  ப்ரசோதயாத்

ஓம் நிரஞ்சனாய   வித்மஹே

நிரா பாஷாய   தீமஹி

தந்நோ வெங்கடேச  ப்ரசோதயாத்

ஓம் நிரானாய    வித்மஹே

நிரா பாஷாய   தீமஹி

தந்நோ  ஸ்ரீவாச  ப்ரசோதயாத்

சிவ காயத்ரி மந்திரங்கள்

சிவ காயத்ரி மந்திரங்கள்

ஓம் தன் மகேசாய வித்மஹே

வாக்விசுத்தாய தீமஹி

தந்நோ சிவ  ப்ரசோதயாத்

ஓம் மஹா தேவாய வித்மஹே

ருத்ர மூர்த்தயே தீமஹி

 தந்நோ சிவ  ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ ஈச ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே

தீக்ஷணாதமஸ்த்ராய தீமஹி

தந்நோ சிவ ப்ரசோதயாத்

ஓம் சதாசிவாய வித்மஹே

ஜடாதராய தீமஹி

தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

ஓம் கௌரி நாதாய வித்மஹே

சதாசிவாய தீமஹி

தந்நோ சிவ ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய வித்மஹே

மஹோத்தமாய தீமஹி

தந்நோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பசுபதயே வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ பசுபதி ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய  வித்மஹே

அதிசுத்தாய தீமஹி

தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

ஓம் கௌரி நாதாய வித்மஹே

சதாசிவாய தீமஹி

தந்நோ சிவ ப்ரசோதயாத்

வேல் பந்தனம்

வேல் பந்தனம்


இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.
“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’
இந்த வேல் பந்தன மந்திரத்தைஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி, முருகனின் அருள் விரைவில் கிட்டும்.
சிதம்பரத்தில், சிவகங்கை குளக்கரை மண்டபத்தில், முருகனின் வேல் பந்தனம் எனும் தமிழ் மந்திர எழுத்துக்கள் கொண்ட மந்திர அமைப்பு வரையப் பட்டுள்ளது. எதிரிகளின் இடத்திற்கு செல்லும்போது, காப்பு எனும் கவசம் அணிந்து செல்வது போர் முறை. அதேபோல் மந்திர காப்பு கவசமாக இந்த வேல் பந்தனம் நம்மைக் காத்து, வெற்றியளிக்கும் என்பது ஐதீகம்.

Wednesday, 14 February 2018

யாகத்தீயில் சக்கரத்தாழ்வார்

ஹைதெராபாத் ஸ்ரீ பரகால மடத்தில் நடைபெற்ற சுதர்ஷன ஹோமத்தின் பூர்ண ஆஹுதியில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அக்னி ரூபத்தில் ஹோம குண்டத்தின் கீழ் மட்டத்தில் எழுந்தருளி காட்சி தருவதை தரிசனம் செய்யும் பாக்கியம் நமக்கு.


கீரிமலை– நகுலேஸ்வரம்

*இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்-5*
****************************************

*கீரிமலை– நகுலேஸ்வரம்*
*****************************

கீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம் பற்றிய வரலாறு.

ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.

உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு நீங்காமல் நிறைந்திருக்கும் இத்திருக்கோயிலைப் பற்றிய அற்புத வரலாற்றை இப்போது படியுங்கள்.

இலங்கையிலுள்ள புராதனமான சிவாலயங்களுள், யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைச் சிவன் கோயில் முக்கியமானதாகும். இது மிகவும் பழைமையானது.

நகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் என்னும் பெயர்களும் இத் திருத்தலத்துக்கு உண்டு.

இக் கோயில், ஆதிகாலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்ந்துவந்த நகுலேசப் பாசுபதர்களினால் அமைக்கப்பட்டதென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். (ஆனால், ஆதிகாலத்துக் கோயில் 1621ம் ஆண்டு, போர்த்துக்கேய ஆட்சியாளர்களால் முற்றிலுமாக இடித்து அழிக்கப்பட்டது.

மேலும், அந்த ஆதிக் கோயிலில் இருந்த கருவறைத் திரு உருவச் சிலைகளும் மற்றும் வழிபாட்டுப் பொருட்களும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்து போயின.

இக் காரணங்களால், கீரிமலைச் சிவன் கோயிலைப் பற்றிய முழுமையான உண்மை வரலாற்றை அறிய முடியவில்லை.

எனினும், அந்த ஆதிகாலம் தொட்டு மக்களிடையே வழிவழியாகப் பரவிவந்த வரலாற்றுக் கதைகளிலிருந்தும், பிற கோயில்களின் வரலாற்று ஏடுகளில் இருந்தும், முந்திய ஆட்சியாளர்கள் எழுதிவைத்த பதிவேடுகளிளிருந்தும் இக் கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.)



இலங்கைத் தீவின் சகல திசைகளில் இருந்தும், தென் இந்தியாவிலிருந்தும் மக்கள் தல யாத்திரையாக இக் கோயிலுக்கு வந்தார்கள். மேலும், இத் திருக்கோயில் சமுத்திரக் கரையில் அமைந்திருப்பதால், நீத்தார் (இறந்தோர்) கடமைகளான அந்தியேட்டி, திவசம், சபிண்டீகரணம், அஸ்தி சஞ்சயனம் முதலிய கிரியைகளுக்குச் சிறப்பாகவுள்ள புண்ணியத்தலமாகவும் விளங்குகின்றது.

இக் கோயிலின் அதிசய வரலாற்றைப்பற்றி, யாழ்ப்பாணம் மயில்வாகனப்புலவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
முற்காலத்திலே, நகுல முனிஎன்னும் ஒரு முனிவர் இருந்தார். அவரது முகம் கீரியின் முகத்தைப்போன்று காட்சியளித்ததால், மக்கள் யாவரும் அவரைப் பழித்ததுடன், யாரும் அவருடன் பேசவும் அஞ்சினார்கள்.

மக்களின் பழிப்புக்கு அஞ்சி, உலகையே வெறுத்த ஒரு துறவியாகி, ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவர் அப் பகுதியிலுள்ள மலைச் சாரலிலே சில காலம் தங்கியிருந்து, தீர்த்தமாடி வந்தபோது, இறைவன் அருளாலும், அந்தத் தீர்த்தத்தின் மகிமையாலும் அவரது கீரி முகம் நீங்கி, இயல்பான மனித முகம் அவருக்கு உண்டானது.

அதனால், அந்தத் தலமும், அந்தக் கடற்கரைத் தீர்த்தமும் தெய்வீக அருள் பெற்றவை என்பதை உணர்ந்த அந்த முனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கித் தவம் புரியத் தீர்மானித்தார்.

அவருக்கு, அந்தத் தலத்திலே கீரி முகம் மாறியதால், அந்தத் தலத்துக்குக் கீரிமலை என்று பெயர் உண்டாயிற்று. அந்த முனிவரின் தெய்வீகமான புகழ் ஊரெங்கும் பரவியது. அவரை வணங்கி, அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, திரளான பக்தர்கள் அங்கே வந்து, கீரிமலைத் தீர்த்த்தத்தில் நீராடி, அவரை வழிபட ஆரம்பித்தார்கள்.

அதைக்கண்டு, அவ்வூர் அரசன் மக்கள் வழிபடுவதற்கு உகந்ததொரு அழகான சிவன் கோயிலை அங்கே கட்டுவித்தான். அந்தக் கோயிலின் ஈஸ்வரன் திருத்தம்பலேஸ்வரர் என்றும், அம்பாள் திருத்தம்பலேஸ்வரியம்பாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆயினும், கீரிமுகம் கொண்ட முனிவரின் பெயரால், அந்தத் தலத்தை மக்கள் நகுலேசர் கோயிலென்றும், அம்பாள் கோயிலை நகுலாம்பிகையம்மன் கோயிலென்றும் அழைத்தார்கள். (நகுலம் = கீரி).

நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்தின் மிகவும் புராதனமான தலங்களுள் ஒன்று என்பதை முன்னர் பார்த்தோம். அங்குள்ள சமுத்திர தீர்த்தமானது, அங்கு தீர்த்தமாடும் பக்தர்களுக்குப் பாவ விமோசனங்களையும், இராஜயோகம் முதலான இம்மைப் பலன்களையும் கொடுக்க வல்லது.

சுசங்கீதன் என்ற கந்தருவன், இராவணனின் யாழை உபயோகித்து இசை வழிபாடாற்றி, இறைவனிடமிருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொண்டான்.

கைலாச புராணத்தில் காணப்படும் இக் கதையின் மூலம், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மக்கள் வாழ்க்கை பரவத் தொடங்கியதற்கு முன்பாகவே நகுலேஸ்வரம் அங்கே நிலைபெற்று விளங்கியது என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

கீரிமலைத் தலத்தின் மகிமையை மாருதப்புரவல்லி கதை மிகவும் சுவையாக விளக்குகின்றது.

தென் இந்தியாவில், சோழ தேச அதிபதியாகிய திசையுக்கிர சோழன் என்பவனுக்கு, மாருதப்புர வல்லி என்னும் மகள் இருந்தாள். அவள் முகம் மனித முகமாக இல்லாமல், குதிரையின் முகத்தைப்போல இருந்தது.

மேலும், அவளுக்குக் குன்ம வியாதி பீடித்திருந்ததால், அவளது உடல் மெலிந்து, மிகப் பலவீனமாயிருந்தாள். சோழ தேசத்திலிருந்த பிரபல வைத்தியர்கள் எவராலும், அவளைக் குணப்படுத்த முடியவில்லை. அவள் வாலிப வயதடைந்து, மணப்பருவம் எய்தியும், யாருமே அவளைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.

மகளின் நோயையும், கவலையையும் கண்டு, தந்தை மிக்க கவலையுற்றான். அப்போது, சாந்தலிங்கன் என்னும் ஒரு சந்நியாசி அவளைச் சந்தித்து, “மகளே, நீ இனிமேல் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கோயில்களைத் தரிசித்து, அங்குள்ள புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடி வந்தால், இறைவன் அருளால் உன் நோயும், உன் தந்தையின் கவலையும் தீரும் ” என்று அறிவுரை கூறினார்.

அதன்படி, மாருதப்புரவல்லி தன் நெருங்கிய சில தோழிகளோடும், சில உண்மையான காவலர்களோடும் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்திலுள்ள கோயில்களை முறைப்படி தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியும் வந்தாள். அவ்வாறே, அவள் யாழ்ப்பாணம் வந்தடைந்து, கீரிமலை நகுலேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கே வந்து சேர்ந்தாள்.

அங்கே தவம் செய்துகொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன் குறைகளையெல்லாம் கூறி அழுதாள். அவளைத் தேற்றி, ஆறுதல் கூறிய நகுல முனிவர், கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமைகளைக் கூறி, அவளை அங்கேயே தங்கித் தீர்த்தமாடி, இறைவனை வணங்கிவருமாறு கூறி ஆசீர்வதித்தார்.

நகுல முனிவரின் ஆசிர்வாதத்துடன், மாருதப்புரவல்லி அங்கேயே தன் தோழிகளோடும், காவலர்களோடும் கூடாரம் அமைத்துத் தங்கித் தினமும் கீரிமலைத் தீர்த்தத்தில் பயபக்தியுடன் நீராடி, நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் அன்புடன் வழிபட்டு வந்தாள்.

இறைவனின் அருளால், சில நாட்களிலேயே அவளது குதிரை முகம் மாறி, பேரெழில் மிக்க இளம் பெண்ணுக்குரிய முகம் அமைந்தது.

அவளது உடல் நோய் நீங்கி, வலிமையும், வனப்பும் பெற்றது. இதைக் கண்டு, மாருதப்புரவல்லியும், அவளுடன் வந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அந்த நற்செய்தியை அவளின் தந்தைக்கும், ஏனையோர்க்கும் அறிவித்துவிட்டு, மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அச் சந்தர்ப்பத்தில், கதிரைமலையிலிருந்து, உக்கிரசிங்க மகாராஜன் தன் படை பரிவாரங்களுடன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க வந்தான். நகுலேசரின் சந்நிதியில், பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்த மாருதப்புரவல்லியைக் கண்டான்.

அவளது பேரழகையும், தெய்வ பக்தியையும் கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்து, நகுல முனிவரின் ஆசீர்வாதத்துடன் அங்கேயே அவளை வெகு சிறப்பாக மணம் செய்துகொண்டான்.

இருவரும் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்து, நகுலேஸ்வரரை வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தனர்.

கீரிமலைத் தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கவல்லது என்பதற்கு மாருதப்புரவல்லியின் கதை போன்று மேலும் பல கதைகள் உள்ளன.

ஆதி காலத்து நகுலேஸ்வரத்திலே, மூன்று பிராகாரங்களும், ஐந்து கோபுரங்களும் இருந்தன என்பது ஐதீகம். கி.பி.ஆயிரத்து அறுநூற்று இருபத்தொன்றாம் ஆண்டிலே, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், நகுலேஸ்வரம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முதலிய ஏராளமான இந்துத் திருக்கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அங்கிருந்த விலையுயர்ந்த பூஜைக்குரிய பொருட்களையும், வழிபாட்டுப் பொருட்களையும் கொள்ளையடித்தனர். அக்காலத்தில், கீரிமலை நகுலேஸ்வரர்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பரசுபாணி ஐயர் என்பவர், கீரிமலைத் தலத்திலிருந்த ஆலயங்களின் விக்கிரகங்களையும், பூஜைக்குரிய பாத்திரங்களையும் ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்தார்.

இவ்வாறு பலரும், இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, இறைவனுக்குரிய பக்திப் பொருட்களை அன்னியர்கள் கைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக அவற்றை மண்ணில் புதைத்ததாகவும், ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்ததாகவும் வரலாற்று ஏடுகள் உரைக்கின்றன. ( இந்தியாவிலும், அன்னியர் ஆட்சியின்போது இவ்வாறே நடந்தது. )

அவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விக்கிரகங்களில் சில, மண்ணைத் தோண்டும்போது அல்லது கிணறுகளைத் தூர் வாரும்போது கிடைக்கப்பெற்று, மீண்டும் கோயில் கண்டன.

ஆனால், கீரிமலைச் சிவன் கோயிலுக்குரிய விக்கிரகங்களும், பூஜைப் பொருட்களும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. இது நம் துரதிர்ஷ்டமே.

ஏறக்குறைய நூற்றெண்பது வருடங்களின்பின், ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களின் பெருமுயற்சியால், இக்கோயிலை மீண்டும் கட்டிஎழுப்புவதற்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு, மன்மத வருடம், ஆனி மாதத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆனால், ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு, அக்கோயில் தற்செயலாகத் தீப்பிடித்து எரிந்தது.

அதன்பின்னர், பல இந்துமத அபிமானிகள் முன்னின்று உழைத்து, கோயிலை மீண்டும் அழகுறக் கட்டியெழுப்பி, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்துமூன்றாம் ஆண்டில், கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

கீரிமலைச் சிவன் கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கோபுர வாயில், பரிவாரத் தேவர் சந்நிதிகள், பிராகாரம் எனும் அமைப்புகளுடன், சிவாகம விதிகளுக்கும், சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமைய உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்கு, ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரே லிங்கத்தில் அமைக்கப்பெற்ற சகரலிங்கம் காட்சியளிக்கின்றது.

நிருத்த மண்டபத்தின் வட திசையில் நடராஜரின் திருவுருவம் தெற்கு நோக்கியவண்ணம் அமைந்துள்ளது.

இரண்டாம் பிராகாரத்தின் வட புறத்தில், துர்க்கை அம்மன் சந்நிதி காட்சியளிக்கின்றது. நவராத்திரி விழாவும், மானம்பூ விழாவும் அங்கே சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

பிராகாரத்தின் உள்ளே, விநாயகர், முருகப்பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தம், மகா விஷ்ணு, மகா லக்ஷ்மி, பஞ்ச லிங்க வடிவிலான பரமேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் மேற்குப்புறத்தில் காணப்படுகின்றன.

கிழக்கிலே, பைரவர் சந்நிதியும், நவக்கிரகங்களின் சந்நிதியும் காணப்படுகின்றன.

நகுலேஸ்வரத்தில், சிவாகம விதிமுறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சித்திரைப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மானம்பூ, புரட்டாசிச் சனி வாரம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாயில் ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் முதலான தினங்களில் சிறப்பான உற்சவங்கள் நடைபெறும்.

ஆடி அமாவாசை நாளில், பக்தர்கள் பெருங் கூட்டமாக வந்து தீர்த்தமாடி இறைவனைத் தரிசனம் செய்வார்கள்.

கீரிமலைச் சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று, தீர்த்த உற்சவம் நடைபெறும். அம்மன் கோயிலில், பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பன்று, தேர்த் திருவிழாவும், தீர்த்தமும் நடைபெறும்.

கீரிமலை நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் வணங்கிப் பிணிகள் யாவும் நீங்கப்பெற்று, நலமுடன் வாழ்வோமாக.