Wednesday, 6 November 2019

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்லாடல்

“திருநீறு இட்டார் கெட்டார்..
திருநீறு இடாதார் வாழ்ந்தார்”

வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல்
எதிர்மறையாக இருந்தால்கூட இதை
நேர்மறையாக மாற்றி சிந்திப்பவர்.

இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்,
திருநீறு இட்டார் கெட்டார்
திருநீறு இடாதார் வாழ்ந்தார்
என்று எழுதி இருந்தார்கள்.

உடன் வந்தவர், “காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு வாரியார், “சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.

“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?” என்றார் உடன் வந்தவர்.

அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார்.

#திரு_நீறு_இட்டு_யார்_கெட்டார்
(இட்டு + யார் = இட்டார்)” என்றும்,

அடுத்தது,

#திருநீறு_இடாது_யார்_வாழ்ந்தார் (இடாது+யார்=இடாதார்)
என்றும் சொன்னார்.

#ஓம்_நமசிவாய..