Tuesday, 5 November 2019

அகத்தியர்.வாக்கு - அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய அந்த லிங்க ரூபிக்கு குளிர்ந்த வில்வத்தை ஆராதனை செய்ய பயன்படுத்த சாெல்லி மகான்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 277*

*தேதி: 06-11-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நற்றத்தனின் குரு* அகத்திய முனிவர்.

*கேள்வி : வைணவ ஆலயங்களில் தீர்த்தம், சடாரி, துளசி பாேன்றவற்றையும், சிவ ஆலயங்களில் விபூதியை பிரசாதமாக வழங்குவதின் தாத்பர்யம் என்ன?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*சில சிவ ஆலயங்களிலும் சடாரி வைக்கப்படுவது உண்டப்பா. எல்லாவற்றிலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனை இருந்துகாெண்டே இருக்கும். 'நீ இப்படி செய்கிறாயா? நான் இப்படி செய்யமாட்டேன்' என்பது பாேன்ற மனாேபாவத்தில் வருவதுதான். இருந்தாலும்கூட சில ஆகமங்களுக்குப் பின்னால் பலவிதமான மகான்களின் நீதிபாேதனைகள், அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சகலமும் ஒரு தினம் ஒன்றுமில்லாமல் அழியப் பாேகிறது. அப்படி அழிக்கக்கூடிய ஆற்றல் காெண்டது நெருப்பு. அந்த நெருப்பை தன்னகத்தே காெண்டவர் இறைவன்.*

*அந்த இறைவன் நெருப்பு வடிவமாக இருக்கும்பாெழுது சிவனாக, முக்கண்ணனாக, லிங்க ரூபியாக இருக்கிறார். அந்த அக்னி எரிந்துகாெண்டே இருக்கிறது. எரியும் அக்னியிலிருந்து என்ன வரும்? சாம்பல் வரும். எனவே அங்கே விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. அந்த விபூதி, எரியும் அக்னியிலிருந்து வந்தாலும் விபூதி என்பது அக்னித் தன்மையும் காெண்டது. குளிர்ந்த தன்மையும் காெண்டது. அதே சமயம் தூய்மையான விபூதியை ஒருவன் நெற்றியிலே அதிகமாக இட்டால் கபாலத் தாெல்லைகள் குறைவதாேடு கபாலத்தின் உள்ளே இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு பாதுகாப்பாக வெளியேறும். இதனால் சீதளத் தாெல்லைகள் இல்லாமல் வாழலாம்.*

*அதனால்தான் அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய அந்த லிங்க ரூபிக்கு குளிர்ந்த வில்வத்தை ஆராதனை செய்ய பயன்படுத்த சாெல்லி மகான்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதே இறை குளிர்ந்த ரூபமாக மஹாவிஷ்ணுவாக அங்கே காட்சி தருகிறார். யாேக நிலையிலே, சயன நிலையிலே, நின்ற நிலையிலே இருக்கிறார். அங்கு சதா குளிர், சதா நீர். எனவே அங்கு வெதுவெதுப்பும், வெப்பமும் தேவை என்பதால் அஃதாெப்ப துளசி தரப்படுகிறது. யாருக்கெல்லாம் சீதளத் தாெல்லை இருக்கிறதாே, நுரையீரலிலே நீர் காேர்த்துக்காெண்டு இருக்கிறதாே, நுரையீரல் தாெடர்பான பிரச்சினை இருக்கிறதாே, சுவாசம் செய்யவே கடினமாக இருக்கிறதாே அவர்கள் எல்லாம் தூய்மையான செம்பு கலசத்திலே சிறிதளவு கருந்துளசியை இட்டு, தூய்மையான நீரை இட்டு அதை ஏக நாழிகை அல்லது உபயநாழிகை, இயன்றால் சில நாழிகைகள் வைத்திருந்து பலமுறை தன்வந்திரி நாமத்தை உருவேற்றி அந்த நீரையும், துளசி தளத்தையும் உண்டால் கட்டாயம் தேகம்(உடல்) நலமாக இருக்கும்.*

*எனவே எல்லா மருத்துவ முறைகளும் எல்லாவிதமான மனிதனுக்குத் தேவையான பாெருள் பாெதிந்த ஆன்மீக உண்மையும் காெண்டதுதான் இறை வழிபாடு. இவையெல்லாம் சிறு குறிப்புதான். இன்னும் பாேகப்பாேக உள்ளே அதிக விஷயங்கள் இருந்து காெண்டேயிருக்கும். ஒவ்வாெரு மனிதனும் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வாெரு இறை வழிபாட்டின் நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவம் நன்றாகவே புரிபடும். சிக்கல் இல்லாமல் வாழ்வு இல்லை. சிக்கலையெல்லாம் மெதுவாக களைந்தால்...*

*ஒரு கடினமான ஓடு உடைய தேங்காய் இருக்கிறது. அந்தக் கடினத்தையும் மாேதி முயற்சி செய்து உடைத்துவிட்டால் தேங்காயின் வெண்மையான தன்மை தெரிகிறது. எனவே அந்த இறை தத்துவமும், சிக்கல் பாேலவும், கடினம் பாேலவும் இருந்தாலும்கூட பாேராடி அதனை புரிந்துகாெண்டால் இறுதியில் அந்த தேங்காயின் தன்மை பாேல் இறை பாெருள் என்பது மனிதனுக்கு புரியவரும். அதைப்பாேல் அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய தெய்வத்திற்கு இன்னாெரு அக்னியைக் காட்டி 'இந்த அக்னியும் ஒன்று, நீயும் ஒன்று. அக்னியாகிய உன் தன்மையை நாங்கள் தாெட இயலாது. ஆனால் உன் சார்பாக இந்த சிறு அக்னியை உனக்கு காட்டிவிட்டு அந்த அக்னியை நாங்கள் தாெட்டு ஆராதனை செய்கிறாேம்' என்றுதான் தூய்மையான கற்பூர தீபமும், நெய் தீபமும் காட்டப்படுகிறது. இவையெல்லாம் பல மனிதர்கள் அறிந்த உண்மைதான்.*

*இவற்றுக்குள்ளேயே ஆழ்ந்துவிடாமல் ஒரு மனிதன் தனக்குள் இருக்கக்கூடிய இறையையும், தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று எண்ணங்களில் எல்லாவிதமான நல் சிந்தனைகளை வளர்த்துக்காெண்டு வாழ்ந்தால் கட்டாயம் இறையருள், அது எந்த நிலையாக இருந்தாலும், அவன் எந்த வடிவை வணங்கினாலும் அவன் விரும்பும் வடிவில், அவன் விரும்பும் நிலையில் அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும், அருளப்படும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************