Wednesday, 6 November 2019

காரணீஸ்வரர் - ஒரு உண்மை சம்பவம்

ஒரு retired Bank Manager ன் Facebook பதிவு:

Just sharing what I received:.  ஏறத்தாழ  பல‌ ஆண்டுகளாயிற்று

அப்போது சைதாப்பேட்டை கிளையில்  பணிபுரிந்தேன்

அப்போது ஒருநாள்  ஒரு வாடிக்கையாளர்  என்னை தேடி வந்து  அறிமுகம் செய்து கொண்டார்

நடுத்தர வயது

நெற்றி நிறைய விபூதி

சிவப்பழம்

 நானே அவரை பார்க்க வேண்டும் என்று  எண்ணியிருந்தேன்

அவரே என்னை தேடி  வந்து விட்டார்

அந்தப் பகுதியில் பெரும் வணிகர்

அறிமுகம்  முடிந்த பிறகு  தன் வியாபாரத்திற்காக  ஒரு கார்  தேவைப்படுகிறது  என கூற

கணக்குகளை ஆராய்ந்தேன்

ஏகப்பட்ட  வரவு செலவு  லட்சக்கணக்கில்  இருப்பு

உடனே சரி என்று  சொல்லி விட்டேன்   சில நாட்களில்

கடன் தொகை கொடுக்கப்பட்டு  வண்டியை டெலிவரி எடுத்தவர் நேராக என்னிடம் வந்தார்

சார்  இன்று  மாலை  காரணீஸ்வரர்  கோவிலில்  வண்டிக்கு  பூஜை

நீங்கள்  வந்து  சாவியை  எடுத்துக் கொடுக்க வேண்டும்  என்றார்

சரி என்று நானும் சொல்ல ஏனோ  என்னால்  போக முடியவில்லை

வெகு நாட்களாக  போக நினைத்த காரணீஸ்வரரை பார்க்க முடியவில்லையே என சிறு  வருத்தம்

மறு நாள்  வங்கியை திறக்கும் போது  அருகிலுள்ள பஜாரில்  கடைகளெல்லாம்  மூடப்பட்டு  இருந்தன

விஷயத்தை  கேள்விப்பட்டதும் ஒரே  அதிர்ச்சி

புதிய வண்டியை எடுத்துக்  கொண்டு  மகாபலிபுரம்  சென்ற அவர்  மூத்த மகன்  வண்டி  மரத்தில்
மோதி  பலி

உடனே  அவர்  வீட்டிற்கு விரைந்தேன்

ஆறுதல் சொன்னேன்

நான்  கொடுத்த வண்டியில் இப்படியாகிவிட்டதே என்ற குற்றவுணர்வு 

அவர்  என்னை தேற்றிவிடட்டு  திருச்சிற்றம்பலம்  என்ற வார்த்தையை  மட்டுமே  உதிர்த்தார்

காரணீஸ்வரர் கோயில் நிர்வாகிகளில் இவர் தலைமை நிர்வாகி  என தெரிந்தது

அதற்கு  பிறகு அவரை பார்க்க முடியவில்லை

ஒரு நாள்  அவரே  என்னை  தேடி வந்தார்

மகன்  வண்டி ஒட்டும்  வயது வராததால்  இன்சூரன்ஸ் செட்டில் ஆவது சிக்கல் என கூறி 
கடன் தொகையை  கட்டி விட்டுப்  போனார்

இப்படி  ஒரு நல்ல  மனிதருக்கு  இப்படி ஒரு சோதனையா என காரணீஸ்வரனை  நொந்து  கொண்டேன்

ஒரு வருடம்  ஓடியது  மீண்டும் அசம்பாவிதம்   அவருடைய மற்றொரு மகன் விஷம்  குடித்து தற்கொலை

அவரைப் பார்க்க போகவே இல்லை

ஒரு நாள்  அவர் வீட்டிற்கு  அழைத்தார் அவ்வளவு  கலைநயம்   அந்த வீடு

கோயில் போலவே  இருக்கிறதே என்று  அவரிடம் வியந்தேன்

என்னையே ஒரு நிமிடம்  பார்த்தவர் கோவில் தான் சார்  என பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்

இந்த இடம் கோயில் வெளிப்பிரகாரம்

என்னுடைய முன்னோர்கள் பார்த்து பராமரித்த கோவில்

என் பராமரிப்பின் கீழ்  வந்தவுடன்   திராவிட சகவாசமும்  வந்தது

கோயில்  நிலத்திலேயே இந்த   வீடு  மற்ற  நிலங்களையும்  ஆக்கிரமித்தேன்     

என் உறவினர்கள்  கூறிய அறிவுரையை  தூக்கி  எறிந்தேன்

இப்போது தொடர்ந்து  இரு சோகங்கள்

எனக்கு  வாரிசு  இல்லாமல்  போய்விட்டது

நான் விலை  கொடுக்க  வேண்டிய நேரம்  இது தான் போலும்  என உடைந்தார்

இதைத் தான் சிவன் சொத்து  குல நாசம்  என்பார்களோ?

பிறகு பல சந்தர்ப்பங்கள்  வாய்த்தும்  ஏனோ  இன்றளவும்  காரணீஸ்வரனை  பார்க்க போகவில்லை

வட மாநிலங்களுக்கு  போய்  மீண்டும்  வந்த  போது  அவரைப் பற்றி விசாரித்தேன்

தன் சொத்துக்களை  விற்று  காசியில்  பெரிய இலவச தங்குமிடம்  கட்டி அங்கேயே இறந்தும் போய்  விட்டாராம்

எத்தனையோ  பேர்  நன்றாகத்  தானே  வாழ்கிறார்கள்  என  நீங்கள் கேட்கலாம்

ஒவ்வொருவருக்கும் இறைவன்  ஒரு  நேரம்  குறித்திருக்கிறான்