Monday, 15 April 2024

சுந்தரகாண்டம் படித்தால்

 #சுந்தரகாண்டம் படித்தால் கிடைக்கும் நன்மை


சுந்தரகாண்டம் படித்தால் நினைத்தது நடக்கும்.

தீராத வியாதிகள் தீரும். திருமணம் கை கூடும்.

தனலாபம் உண்டாகும்.


இவை மட்டுமல்ல சுந்தரகாண்டம் படிக்க, படிக்க

ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள்

போன்றவை கூட நீங்கும். 


சிலர் எப்போதும் பேய், பிசாசு என்று பயந்து கொண்டே

இருப்பார்கள். அது ஒரு மன வியாதியாகக் கூட மாறி

விடலாம். இத்தகைய பாதிப்பில் இருப்பவர்கள்

இலங்கை அனுமன் விஜயம் மேற்கொள்ளும் மூன்றாவது

அத்தியாயத்தை மாலை நேரத்தில் படிக்க வேண்டும்.


வீட்டில் எப்போதும் ஏழ்மை நிலையே உள்ளதா?


பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வை வளமாக்க

வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆஞ்சநேயர்

அசோகவனத்தில் சீதையைக் கண்ட 15-வது

அத்தியாயத்தை படித்தால் பலன் கிடைக்கும்.


உங்களை விட்டு முக்கிய உறவினர்கள், நண்பர்கள்

பிரிந்து சென்று விட்டார்களா? சுந்தரகாண்டம் இருக்க

ஏன் கவலைப்படுகிறீர்கள்.


ஆஞ்சநேயர் சீதாவுக்கு கணையாழி கொடுத்த 36-வது

அத்தியாயத்தை காலை, மாலை இரு நேரமும் படித்தால்

கைமேல் பலன் உண்டு.


அடிக்கடி கெட்ட கனவு வருகிறதா? சுந்தர காண்டத்தில்

திரிஜடை கண்ட கனவை விவரிக்கும் 27-வது

அத்தியாயத்தை படித்தால் கெட்ட கனவு வராது.

அன்று சர்க்கரை நிவேதனம் செய்ய வேண்டும்.


தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது பாவம் செய்து

விட்டீர்களா?


காகாசுரனுக்கு அணுக்கிரகம் செய்த 38 அத்தியாயம்

படித்தால் பாவம் தீரும்.


ஜாதகத்தில் சிலருக்கு சந்திரதசை தோஷம் இருக்கலாம்.

அத்த கையவர்கள் 5-வது அத்தியாயம் படித்து

சந்திரதோஷ நிவர்த்தி பெறலாம்.


செவ்வாய் தோஷம் உங்களை பல தடைகள் கொடுத்து

வாட்டி வதைக்கிறதா? ஆஞ்சநேயர் ராவணனுக்கு

உபதேசம் செய்த 51-வது அத்தியாயம் படித்தால்

நிச்சயம் பலன் கிடைக்கும்.


அனுமாரின் வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயில் எந்த

பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று சீதை அக்னிதேவனை

பிரார்த்தனை செய்வார். அது 52-வது அத்தியாயத்தில்

இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்தை படித்தால்

குரு தசையில் சுக்ரபுத்தி கெடுவது நிவர்த்தி பெறும்.

ராகு திசையில் சுக்ரபுத்தி கெட்டிருந்தால் 65-வது

அத்தியாயத்தையும் சனிபுத்தி கெட்டிருந்தால் 47-வது

அத்தியாயத்தையும் பாராயணம் செய்ய வேண்டும்.


குரு தசை திருப்தியாக இல்லாமல் இருந்தால் சுந்தர

காண்டத்தின் முதல் அத்தியாயத்தை படிக்க வேண்டும்.

அப்படி படிக்கும் போது பொரி நிவேதனம் செய்வது

நல்லது.


குரு கேது கெட்டு இருந்தால் 61 மற்றும் 62-வது

அத்தியாயம் படிக்க வேண்டும்.

ஜாதகத்தில் தசை தோஷம் இருந்தால் 48-வது

அத்தியாயம் படிக்க வேண்டும்.


சனி தசையில் சுக்ரபுத்தி கெட்டிருந்தால் 38-வது

அத்தியாயம் படிக்க வேண்டும். சனி தசையில் புதன்

புத்தி கெட்டிருந்தால் 54-வது அத்தியாயம் படிக்க வேண்டும்.

புதன் தசை கெட்டிருந்தால் 35-வது அத்தியாயம் புதன்

தசையில் செவ்வாய் புத்தி கெட்டிருந்தால் 27-வது

அத்தியாயம் புதன் தசையில் கேது புத்தி கெட்டிருந்தால்

14-வது அத்தியாயம் படிக்க வேண்டும்.


கேது தசையில் சுக்ர புத்தி கெட்டிருந்தால் 65-வது

அத்தியாயம் படிக்க வேண்டும். எல்லாராலும் இப்படி

தோஷத்தை தனித்தனியேப் பார்த்து குறிப்பிட்ட

அத்தியாயங்களை படிக்க இயலாது. எனவே பொதுவாக

சுந்தரகாண்டம் படித்து வந்தால் எல்லா தோஷங்களும்

விலகி விடும்.



No comments:

Post a Comment