Monday, 15 April 2024

ஜீவ அருள் நாடி வாக்கு 14ஏப்ரல் 2024









 ஜீவ அருள் நாடி வாக்கு 14ஏப்ரல் 2024, தமிழ் வருட பிறப்பு, குரோதி வருடம் 


கேட்பவர் - தி. இரா. சந்தானம் , வித்யா சந்தானம் 


உறைபவர் - குருஜி இறைசித்தர் , அகஸ்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , பொகளூர் 




ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று 


ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று 


கூடும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று 


குண்டுருக வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று 


மாறுபடா சூரனை வதைத்த முகம் ஒன்று 


வள்ளியை மணம் புளிர வந்த முகம் ஒன்று 


ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும் 


ஆதி அருணாசலத்தின் அமைந்த பெருமானே 




என் அப்பன் சக்தி வடிவேலவனின் திருப்பாதம் பணிந்து 


கயிலை மலை வாழ் அகஸ்தியன் யானே 


என் மழலைக்கு அருள் தன்னை செப்புகின்றேன் 


கேளடா என் மைந்தனே 


ஆலய பனி தன்னிலே தொய்வு நிலை கண்டு நிற்கிறாய் 


ஆங்கில வருடங்கள் மாற்றம் பெற்ற பிறகு 


குருவாக நானே மாற்றம் நிலை பெறுவேன் 


குருவும் நானே , குரு தட்சிணாமூர்த்தியும் நானே , அகஸ்தியனும் நானே 


மாற்றம் பெற்ற உடன் , தொய்வு நிலை அகன்று , பணியது மேலோங்கும் அப்பா 


ஆலய பணியை முன் நின்று செய் , என் மகனே 


மனதை மென்மைப்படுத்து 


ஏசுவோர் ஏசட்டும் , தூற்றுவோர் தூற்றட்டும் 


கர்ம வினைகள் கழியட்டும் என் மகனே 


நிலை மாறும் , நிலை மாறும் , என் மகனே 


மாந்தர் போற்றும் நிலை பெறுவாய் 


பூரண நல்லாசிகளே மழலைக்கு 


நிலை மாறும் என் மகனே 


பூரண நல்லாசிகள் உமக்கு 




கண்டம் விட்டு கண்டம் இருக்கும் மாந்தரெல்லாம் ஆலய பணிக்கு 


உதவி கரம் புரிவார் 


இது சித்தனின் சத்திய வாக்கே , நித்திய வாக்கே  - முற்றே 


கேள்வி  - தமிழ் வருட புத்தாண்டிற்கு , நமது பீடத்தினுடைய பக்தர்கள் , அன்பர்களுக்கு , அகஸ்தியருடைய ஆசீர்வாதம் வேண்டும் , அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் கேட்டு கொள்கிறேன் 




யாம் நேசிக்கும் யாம் நிலை புரியும் எம் தமிழ் மக்களுக்கும் எமது அத்துணை மழலை செல்வங்களுக்கும் 


பூரண நல்லாசிகள் என் மைந்தா 


யாம் உங்கள் அருகில் இல்லை , உங்களில் இருந்து உங்களை காப்போம்

No comments:

Post a Comment