ஆசிரமத்தில் இருந்து வந்துள்ள தகவல்
ஏற்கனவே நாம் அகத்தியருக்கு ஆலயம் அமைக்க அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் தற்போது அகத்தியர் ஜீவநாடியில் தோன்றி தமது கருவறை அமையும் இடத்தை அவரே முடிவு செய்து சிறிது தள்ளி அமைக்க சொல்லி இருக்கிறார்.
அதாவது நமது இடம் சுமார் 70 அடி அகலம் கொண்டது தற்போது நாம் கருவறை அமைக்க இருந்த இடம் தென்மேற்கு மூலையில் இருந்தது , அதனை மாற்றி அந்த 70 அடி அகலத்திற்கு மத்தியில் இருக்குமாறு அமைக்க சொல்லி ஐயா ஜீவநாடியில் உத்தரவிட்டுள்ளார்கள்.
எனவே அஸ்திவாரம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது.
மேலும் அகத்தியர் ஜீவ நாடியில் மேற்கு திசையிலிருந்து மதில் சுவருக்கு உள்ளே 17அடி விட்டு அதற்குப் பிறகு கருவரை அமைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.
கருவறைக்கு பின்புறம் இடது புறம் வலது புறம் நுழைவுப் பகுதி ஆகிய பகுதிகளில் நட்சத்திர மரங்களை வைத்து அழகான ஒரு சோலை மத்தியில் அகத்தியர் ஆலயம் அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.
எனவே இதனை மனதில் கொண்டு தற்போது கட்டுமானப் பணிகள் மீண்டும் புதிதாக இப்போது உள்ள கருவறை , முன் மண்டபம் , ஆகிய இடங்களை அளந்து அஸ்திவாரம் எங்கே தோன்ட வேண்டும் இன்று முடிவு செய்வதற்காக நமது கட்டிட பொறியாளர் அவர்கள் உதவியுடன் மீண்டும் குறியீடு செய்யும் வேலை செய்து கொண்டு உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
அதன் புகைப்படங்கள் கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற முறையில் முழுவதும் தரைப்பகுதி வானத்து தொகுதி நான்கு புறம் என்று அனைத்துப் புறமும் ஒரே படத்தில் தெரியுமாறு முழுமையான ஒரு படமாக எடுத்து பதிவு செய்து அதை பார்ப்பதற்கு ஒன்றான இணைப்பை பயன்படுத்தி உள்ளேன் அதனை சொடுக்கி அந்தப் படத்தை எல்லோரும் பார்க்கலாம்
https://www.google.com/maps/@11.2645182,77.0372691,3a,75y,80h,90t/data=!3m4!1e1!3m2!1sAF1QipPZn_CAcz-4Vh5gDhf-Dl1VB-zHrRYB6IjxPaXh!2e10 Check out Pogalur, Tamil Nadu, IND Shared via the #StreetView app
No comments:
Post a Comment