அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு
21-08-2022, ஞாயிற்று கிழமை
வாக்கு கேட்பவர் - தி. இரா. சந்தானம் , சே . வித்யா
நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர்
இடம் - பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , கோவை
அருவாய் உருவாய் திருவாய் போற்றி
திருவாய் மலரடி பணிந்தாய் போற்றி
வருவாய் குகனே அருள்வாய் போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவர்களின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து பொதிகை வாழ் அகஸ்தியன் நானே என் மைந்தனுக்கு அருள்தனை உரைக்கின்றேன் கேள் மகனே
ஆலய பணிதனை நீ செய்வாய் என் மகனே
பூசையிடும் வேளையிலே கருடனாக வந்து காட்சி தந்தேன் அறிவாய் நீ
பின்பு சிறு துளி மழையாக வந்து அருள் தந்தோம்
வாசனை வடிவில் வந்து உமக்கு மட்டும் புலன் உணர்த்தினோம்
பின்பு ஒரு வயோதிகனாக வந்து உனை உற்று நோக்கி சென்றேன் அறிவாய் நீ
ஆலய கைங்காரியங்கள் அதனை செய் மகனே
உமக்கு யாம் அன்றுரைத்தோம்
கண்டம் விட்டு கண்டம் இருக்கும் மைந்தன் அவன் உன்னுடன் இனைந்து பெரும் ஆலய பணி அதை செய்வான் என்று
நீ செய்யும் பூசை புனஸ்காரங்களை கண்டு யாம் மனம் மகிழ்ந்தோம்
நீ செய்யும் தான தர்ம காரியங்களை யாம் உற்று நோக்கி உள்ளோம்
தானம் செய்யும் வேளையிலே திரை வடிவில் காட்டாதே
கர்ம நிலை பற்றும் அப்பா
கவலைகள் கொள்வாய் நீ
என் கேள்வி - தர்ம சிறகுகள் அரசாங்கத்தில் பதிவு செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவுகிறதே
அகத்தியர் வாக்கு - என் ஆலய கைங்காரியங்கள் அதை ,உயரும் பட்சத்தில் , தர்ம காரியங்களும் உயரும் அப்பா . தடைகள் அகலும் , என் மகனே , தயங்காதே ,
ஒருமுறை கோரக்க சித்தனவன் சமாதி நிலை பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று
படித்துறையில் வீற்றிருக்கும் கஜமுகனையும் சப்த கன்னியரையும் வணங்கி
அப்பன் உள் ஆலயம் சென்று ,
கோதுமை தானியத்தால் மூன்று வட்ட கோலம் இட்டு ,
மூன்று அகல் இட்டு ,
கொண்டவளுடன் , வலம் வந்து ,
மல்லிகை மலர் தன்னை ஈசனுக்கும் உமையவளுக்கும் சாற்றி
கொண்டவளுடன் கையில் இட்டு ...(மனைவிக்கு மல்லிகை பூ மாலையை கையில் கொடுத்து )
அங்கிருக்கும் கஜமுகனுக்கு இனிப்பு பூசணி அதை தானமிட்டு
தொழுது வந்தாலே இடர் நீங்கி , அரசாங்க துறையிலே இருக்கும் இன்னல் அகலும் அப்பா
பின்பு எமது நிலை உயர்ந்து கோபுரம் எழும்பும் போது
உமது நிலை உயரும் அப்பா
நீ செய்யும் தர்ம காரியங்களை யாம் உற்று நோக்கி உள்ளோம்
வாழ்வில் நிலை பெறுவாய் என் மகனே
மனம் தளராதே தூயவனே
யாம் இருக்கிறோம் உமை காக்க , அஞ்சுவது ஏன் மகனே
என் கேள்வி - அகத்தியர் வாக்கு என்னுள் தோன்றி எழுத்து வடிவில் எழுதி வருகின்றேன் அய்யா - அது சரியா
அகத்தியர் பதில்
நான் உனக்கு அன்று உரைத்தேன் உனக்கு அறியவில்லையா மூடனே
நான் உன் அருகில் அல்ல
உன்னுள் இருந்து உன்னை காற்று இயக்குகிறேன் , என்று
யாமே இயக்குகிறோம் ,
நீ சித்த நிலையை பின்பு வந்து அடைவாய்
மனதை மென்மைப்படுத்து
ஏன் மனக்குழப்பம் ?
ஆலய கைங்காரியங்கள் அதை செய்
யாமே சித்தன் என்று புறம் பேசி அலைகின்ற மூடர்கள் இருக்கும் கலியுகம் அப்பா இது
மனதில் ஏதும் கொள்ளாதே
யாம் உண்மை ஆசீர்வதிப்போம் , ஆட்கொள்வோம் , முற்றே
No comments:
Post a Comment