Tuesday, 7 June 2022

பாட்டி சித்தர்

 பகவான் பாட்டியின் அற்புதங்கள் 215


பவானி லிங்கமூர்த்தி தொடர்ச்சி...


     நம் பாரதம்  ஞானிகளின் விளையாட்டு பூமி. மகான்கள் செய்யும் இடைவிடாத தவத்தினாலும்  அவர்களின் அருளினாலும்  பிரபஞ்சத்தை காத்து  ரட்சிக்கிறார்கள்..அதே சமயத்தில் நடப்பவை எல்லாம் நல்லதுக்கே என்றாலும்...

நம்மைப் பொறுத்தவரை நல்லவை நல்லவை தான். தீயவை தீயவை தான். அப்படி இருக்க இக்கலியில் தீயவை சார்ந்த அதிக  விஷயங்கள் நடக்கிறது .


    கலியில் இப்புவியில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். கலியில் அதர்மம் மேலோங்கும் என்பது சற்றே அறிந்ததுதான் என்றாலும்

ஏன் இவை எல்லாம் நடக்கிறது?  எதற்கு ??எப்படி? எதனால்..?

இதனால் கடவுளுக்கு என்ன அனுகூலம்..?


  உலகில் எவ்வளவு பிரச்சினைகள்  எவ்வளவு போராட்டங்கள் இவ்வாறான கேள்விகளுக்கு இடையே ...


  நம் பாட்டியின் அவதாரத்தின் முக்கிய நோக்கமாக ..... செயல்பாடாக எது இருக்கும் என்று சிந்தித்த வேளையில் அதற்கு நம் பாட்டியின் சூசகமான  பதில்:


"ஒரு கேள்வி கேட்ட...

ஒரு பதில நானும் சொல்றேன்...

ஒரே ஒரு வார்த்தையை...சொல்றேன்....

முதல் வார்த்தையை சொல்றேன்... அதுதான் முதல் வார்த்தை...அதுலதான் இருக்குது முதல் வார்த்தை.. அதுலியேதான்...

அதுதான் முதல் வார்த்தை.. அதேதான் முதல் வார்த்தை... "


என்று திரும்பத் திரும்பச் சொல்ல...

நாம் எது என்று யோசிக்க..

மீண்டும் பாட்டி ..


"அதுல இருந்து அத எடுத்தாதான்....

நல்லது..

அது இல்லாம இருந்ததா...

நா வந்த வேலை முடிஞ்சுதுனு

ஆகும்...

ஆனா....

அது இல்லாம போனா...

எல்லாம் நடக்கும் நல்லா...

அது இல்லாம இருக்கும் பாரு அது தான் என் பேரு..."



"இப்போ ... (இப்பொழுது)

தண்ணி குடிக்கிறேன் நான்..

நான் சொல்லி அடிக்கிறேன்..

அடிக்காம உன்ன வெளுக்கிறே

என்னடா வெடவெடத்து போற...

ஆமா நீ...

இத வெள்ளிக்கிழமையா எழுதப் போற..

நல்லா முறம் மாதிரி காத வச்சுகிட்டு இருக்கிற...

என்னடா முழிக்கிற.. அதத்தான்டா  சொன்னேன்....

அதுக்குத்தாண்டா வந்தேன்...


முறத்த முன்னாடி அறுத்து போடு .. அதச் சேரு..

அதுதான்டா பதில்...நான் தான் பதில்....என் பேர் பதில்."


மேலே பாட்டி சொன்ன வார்த்தைகளை கவனமாக படியுங்கள்.

அதற்குப் பின் கீழே வரும் வாசகத்தை அதனோடு பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக அமையும்..


 ஆம் .....


பாட்டியின் அவதார நோக்கம் எதுவோ அதுவே நம் பாட்டி இரண்டும் ஒன்றே.

அதற்கு பெயர் அறம் என்கின்ற  தமிழ்ச்சொல் அல்லது தர்மம் என்கின்ற வடமொழிச்சொல்.


 அதர்மம் என்ற சொல்லிலிருந்து.......

🔥 "அ" ........என்ற சொல்லை நீக்க வேண்டியும்  தவிர்க்கும் படியும் பாட்டி மேலே சூசகமாக கூறியுள்ளதை திரும்பத் திரும்பப் படித்தால் உணரலாம். மேலும் அறம் என்ற தமிழ்ச் சொல்லையும் முறம் என்ற சொல்லை பயன்படுத்தி சூசகமாக கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.


தர்மம் எப்பொழுதெல்லாம் சீர் குலைகிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரம் நிகழும் என்பது பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் வரும் வாக்கு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பகவான் கிருஷ்ணனின் அம்சமாக நம் பாட்டி தர்மத்தை காக்க அவதரித்துள்ளார்கள். நிச்சயம் அதர்மம் அழிக்கப்படும். தர்மம் காக்கப்படும் ...


உலகம் வெட்டவெளியில் இருக்கிறது என்று மட்டும் சொல்வது விஞ்ஞானம். இந்த உலகத்தை தாங்கி நிற்பது பரப்பிரம்மம் எனப்படும் சச்சிதானந்தின்  அருள்வெளி.

அதுவே,

தர்மம்.... நம் பாட்டி.

இப்படிச் சொல்வது நம் பாட்டியின்  மெய்ஞானம்.....


 தர்மமே எல்லாவற்றையும் சேர்க்கும் இணைக்கும் நீடித்து நிற்கச் செய்யும்.. பாட்டியின் அவதார நோக்கம் மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளதை நாம் இங்கு தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும்.


நாம் அப்பொழுதே தர்மத்தைக் காக்க.. நிலைநிறுத்த  தர்மத்தின் மறுஉருவமாக நம் பாட்டி வந்துள்ளார்கள் என்று நினைத்தாலும்..



கொளுத்துது  வெயில்...

இந்த சமயத்தில் பாட்டி சொல்வதை நாம் எவ்வாறு  ஞாபகம் வைத்துக் கொள்வது..

என்று நினைக்க...


அதைக்குறித்து பாட்டி பரிபாசையாக கூறியவை:


"உன் தலைய சுத்தி..

நான் வைப்பேன் காயில்(COIL.)

அதுக்கு வரும்  கரண்டு (மின்சாரம்) என் புகையிலையில்...

கரண்டு தரும் எல்லாம் எழுத்தில் 

அதுவும் வரும் அச்சில்..."

.....


என்று கூறி அதன் பின் பாட்டி தொடர்ந்த 

வெயில்...மழை பற்றி அடுத்த பதிவில் காண்போம். 

சர்வம் பாட்டி மயம்.

பாட்டியின் திருவடி சரணம்..


தொடரும்...


மேலும் தகவல்களுக்கு


பாட்டி சித்தர் ஜீவசமாதி இருப்பிடம்::


கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் உள்ளது.. அதன் அருகிலேயே அரசு மயானம் உள்ளது...மயானத்தில் பாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது.. அங்கு கேட்டால் கூறுவார்கள்...

காலையில் 6 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லலாம்...


பகிர்வு

ஆர்.வீ.சரவணன்

இராமநாதபுரம்


No comments:

Post a Comment