Monday, 27 June 2022

தீபப் பயிற்சி

 தீபப் பயிற்சி-பதிவு - 1


“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல

ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.

தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது.


தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.

ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும், தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:

1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.

2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.

3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.

4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.

5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.


தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:

1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.

2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.

3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.

4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும். அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது.

5 தீபப் பயிற்சி செய்வதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு மந்திரம் ,திக்கு கட்டு மந்திரம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும் .


தீபப் பயிற்சி செய்வதற்கு தேவைப்படுபவை:

1 அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.

2 சாதாரண விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.

3 விளக்கில் எண்ணெய் வகைகளாக நெய், விளக்கு எண்ணெய் ,கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

4 மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.

5 மெழுகுவர்த்தியை பயன்படுத்த வேண்டாம் .


தீபப் பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:

முதல் நிலை -1


a ) தீபப் பயிற்சியில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யவேண்டியது

1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

5 பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்.

6 மேலே கண்ட செயல்முறையைப் போலவே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.


b ) தீபப் பயிற்சியில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டியது

1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 தீபத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் (அல்லது) 20 நிமிடங்கள் வரை பார்க்க வேண்டும்.

5 தீபத்தில் பல்வேறு நிறங்கள் தெரிவதைப் பார்க்க முடியும்.

6 பச்சை, சிகப்பு என்று பல்வேறு பட்ட நிறங்களை தீபப் பயிற்சியில் நாம் வளர்ச்சி அடையும் பொழுது நாம் காணக் கூடிய நிறங்களாகும்.


தீபப் பயிற்சியின் முதல்நிலையில் பல்வேறு வகையான நிறங்கள் தெரிந்த பிறகு அடுத்து அடுத்து தீபத்தில் தெரியும் விஷயங்கள் தீபப் பயிற்சியில் சூட்சும ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”


தீபப் பயிற்சி-பதிவு - 2


“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல

ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இரண்டாம் நிலை - 2

தீபப் பயிற்சியில் முதல் நிலை முடித்தவர்கள் ,இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்யலாம்.


இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .முதல் நிலை முடித்தவர்கள் இரண்டாம் நிலை ஆரம்பித்து விட்டால் ,முதல் நிலை பயிற்சியான எண்ணெய் ஊற்றிய விளக்கைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை.

இரண்டாம் நிலையில் என்ன பயிற்சியை செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ ,அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் போதும்.


இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்வதற்கு நமக்கு தேவைப்படுபவை : 

1 ஒரு சிறிய நைட் பல்பு (இரவில் உறங்கும் பொழுது பயன் படுத்தும் பல்பு)

2 அந்த நைட் பல்பு ஜீரோ வாட்ஸ் பல்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நைட் பல்பை எரிய வைத்தால் முழுவதும் மஞ்சள் நிறமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் நிற நைட் பல்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4 நைட் பல்பின் ஒளி நம் கண்களை கூசச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை கீழ்க்கண்டவாறு செய்ய வேண்டும் :

1 நாம் உட்காராமல் நேராக நின்று கொள்ள வேண்டும்.

2 நைட் பல்பு கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நைட் பல்பை எரிய வைத்து கண்களால் தொடர்ந்து பார்க்க வேண்டும்.

4 நைட் பல்பை தொடர்ந்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை பார்க்க வேண்டும்.

5 நைட் பல்பில் தெரியும் மஞ்சள் நிற ஒளி படிப்படியாக மாற்றம் அடைந்து பல்வேறு நிறங்கள் தெரிவதை பார்க்கலாம்.

6 முழுவதும் மஞ்சள் நிறமாக தெரியும் ஒளி படிப்படியாக சிகப்பு ,பச்சை என்று நைட் பல்பு முழுவதும் ஒளியின் நிறம் மாற்றம் அடைவதை நாம் பார்க்கலாம்.

7 நிறம் மாற்றம் அடைந்த பிறகு கிடைக்கும் பலன்கள் தான் சூட்சும ரகசியங்கள் என்பதை தீபப் பயிற்சி செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

8 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர அடுத்து, அடுத்து நமக்கு கிடைக்கும் பலன்களை பயிற்சியை செய்பவர்களே தெரிந்து கொள்ளலாம்.

9 பயிற்சி தொடர்ந்து செய்து அதன் பலனை சுவைத்தவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வார்கள்.


சோதனை முறை

தீபப்பயிற்சியின் இரண்டு நிலைகளையும் குறைந்தது ஒரு வருடம் செய்தவர்கள் கீழே சொல்லப்பட்ட சோதனை முறையை செய்து பார்த்தால் தங்களிடம் உள்ள சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.


முதல் சோதனை முறை

1 காற்றால் நிரப்பப் பட்ட ஊதிய பலுhன் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் .

2 பலுhனை தரையில் வைத்து விட்டு நாமும் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும் .

3 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும்படி நாம் அமர்ந்திருக்கும் அறையில் உள்ள கதவுகள் அனைத்தையும் மூடிக் கொள்ள வேண்டும்.

4 அறைக்குள் காற்று முழுவதுமாக வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும் படியாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.

6 பலுhன் நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தொலைவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

7 நாம் பலுhனை சிறிது நேரம் ஊற்று நோக்கியபடி மனதிற்குள் தன்னை நோக்கி பலுhன் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே பலுhனைப் பார்க்க வேண்டும்.


“””””வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்

துhண்டும் உருவும் எனதாக வேண்டும்”””


8 அவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது பலுhனை சிறிது அசையத் தொடங்கும் சிறிது ,சிறிதாக நகர்ந்து உருண்டு உருண்டு நகரத் தொடங்கும்.

9 உருண்டு ,உருண்டு நகர்ந்து கொண்டே வந்து நம் அருகே வந்து விடும்.


அப்படி வந்து விட்டால் உங்களிடம் சக்தி வளர்ந்து இருக்கிறது என்று பொருள்


இரண்டாவது சோதனை முறை

1 ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதை மேசையின் மேல் வைக்க வேண்டும்.

2 மேசையின் மேல் அகல் விளக்கை வைத்த பிறகு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்ற வேண்டும்.

3 விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் நம் கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 நாம் தரையில் அமர்ந்து கொண்டு நம் கண்களுக்கு நேராக விளக்கின் தீபம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 சிறிது நேரம் தீபத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

6 பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தீபத்தின் முன் வைக்க வேண்டும்.

7 சிறிது நேரம் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை தொடர்ந்து பார்த்து மேலே சொன்ன மந்திரத்தை


“””” வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்

துhண்டும் உருவும் எனதாக வேண்டும்””””


என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வரவேண்டும்

8 எலுமிச்சை பழம் மேசையில் மெதுவாக அசைய ஆரம்பிக்கும்.

9 பிறகு உருள ஆரம்பிக்கும்.

10 மேசையிலிருந்து உருண்டு வந்து நம்முடைய மடியில் வந்து விழும்.


மேலே சொல்லப்பட்ட பலன் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு ஆகர்ஷன சக்தி வந்து விட்டது என்று பொருள்.

அதாவது நீங்கள் விருப்பப் பட்ட பொருள் எந்த இடத்தில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் ,அந்தப் பொருள் உங்களைத் தேடி வரும்.


அந்த பொருள் உயிருள்ள பொருளாக இருந்தாலும் ,உயிரற்ற பொருளாக இருந்தாலும் உங்களைத் தேடி வரும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ,அறிந்து கொள்ள வேண்டும்.


மேலே சொல்லப்பட்ட பலன் மட்டுமில்லை, இதை விட மேலும் பல பலன்களும் சக்திகளும் தீபப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் .


தீபப்பயிற்சியை செய்பவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து செய்து அதன் பலன்களை அனுபவித்து அதை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் எனறு கேட்டுக் கொள்கிறேன்.


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

போற்றினேன் தீபப்பயிற்சி யுந்தான்முற்றே “”

No comments:

Post a Comment