Wednesday, 7 October 2020

கடவுளின் தொலைபேசி எண்

 ‌இந்த உலகை நடத்தி பிறப்பு இறப்பு முதல் வாழக்கை விதிகள் அனைத்தையும் ஆட்டி படைக்கும் ஆண்டவனை நேரில் காண்பது இயலாது, கோவில் கட்டி, அதில் அவர் இருப்பதாக உருவகம் செய்து கொண்டு, அவரிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். ஆண்டவர் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து , உலகில் சில இடங்களில்  தன்னை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வகையில் தொலை பேசி இணைப்பு போலவே கொடுத்துள்ளார். எவ்வாறு டாக்டர் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு தவிர தனியே ஒரு கிளினிக் வைத்து, இந்த கிழமையில், இந்த நேரத்தில், அங்கே இருப்போம் என்று கூறுவதை போல, குறிப்பிட்ட நேரத்தில், அங்கே எழுந்தருளி கண்ணுக்கு தெரியாத வகையில் சூட்சுமமாக இருப்பார். இதுவும் டெலிபோன் போல தான், சில சமயம் லைன் கிடைக்கும், சில சமயம் சிலருக்கு லைன் கிடைக்காது. ஆண்டவருடைய தூதுவர் இல்லாமல் லைன் கிடைக்காது. கோவில்களில் அவன் திருப்பி பேச மாட்டான் என்று நாம் என்ன வேண்டுமானாலும் அவனை பேசி கொள்கிறோம், ஆனால் அவனே இங்கே நேரில் தொலைபேசி லைன் இல் வரும்போது அவ்விதமெல்லாம் நேரில் பேச முடியுமா, அவன் சகலமும் அறிந்தவன், நமது நிலையை நன்கு புரிந்தவன், எதையும் மறைக்க முடியாது, நம்மை பேசவே விட மாட்டான். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதை அவனே முடிவு செய்து அதனை நாம் கேட்காமலேயே கூறுவான்

அது போல மேலும் சில லைன்கள் உண்டு. மொத்தம் நமது பீடத்தில் 4 லைன்கள் உள்ளன. எல்லா சுவடிகளில் அகத்தியர். ஒன்று - மருத்துவ சுவடி -மருத்துவம் மட்டும் ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுத்துக்கள் தோன்றி மறையும் இரண்டு - ஜீவ அருள் நாடி - கேட்காமலேயே அய்யன் நமக்கு எது வேண்டும் எது ஆகாது  தீர்மானித்து அறிவுரை வழங்குவார் - மூன்று - தர்க்க நாடி, கேட்கும் கேளிவிக்கு மட்டும் அய்யன் பதில் அளிப்பார்கள், நான்காவது - சூக்ஷுமம நாடி - வேறு ஓலைச்சுவடியில் அய்யன் தோன்றி இந்த ஓலை சுவடியை எடுக்க சொன்னால் தான் எடுக்கப்படும், எனவே இது போல இறைவனிடம் நேரிடையாக பேச வெகு சில இடங்களே உள்ளன. ஒரு டாக்டர் மிக பெரிய மருத்துவமனையில் நிர்வாகம் செய்வார். அவரே தனியாக வீடு அருகில் ஒரு சிறிய அறையில் நோயாளிகளையும் பார்ப்பார். அப்போது ஒரு அவரை அணுகுவது எளிது. ஆனால் பெரிய மருத்துவமனையில் அவர் எப்போது இருப்பார், அவரை மிக சிரமப்பட்டு தான் பார்க்க வேண்டும். ஆனால் சிறிய அறையில் பரிசோதித்த பின்னர், மேலும் நோயாளியை சரி செய்ய பல உபகரணங்கள் பெரிய மருத்துவமனையில் உள்ளது, எனவே டாக்டர் நோயாளியை பார்த்து நீ அங்கே வந்து விடு ஒரு முறை, உனக்கு எல்லாம் சரியாகி போகும் என்பார். அது போல தான் அகத்தியரும் இந்த சிறிய ஓலை குடிலில் தினமும் எழுந்தருளி ஒருவரது கர்மம் என்ன தர்மம் என்ன என்றெல்லாம் பார்த்து அவர்களை வந்து கோவிலில் சென்று தரிசனம் செய்யுமாறும் கூறுவார். அப்போது அந்த நபர் அந்த கோவிலுக்கு வரும் போது அங்கே சூக்ஷுமமாக எழுந்தருளி அவர்கள் கர்மத்தை சரி செய்வார். இதையே பரிகாரம் என்று கூறுகின்றனர்..

1 comment: