வள்ளலார் பிறந்த தினம்..!!
வரலாறு சுருக்கம்
தொடர்ச்சி 3
ஒரு சமயம் இறைவன் தன் துணைவியுடன் இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில் வள்ளலார் இருக்குமிடத்துக்கு வந்து அருள் புரிந்ததையும், அப்போது தன்னைத் தேடிவந்தவர் யாரோ, எவரோ எனப் புரியாமல் வாசலருகிலேயே கதவின் தாழ்ப்பாளைப் பற்றிக்கொண்டு பயத்துடன் நின்று பார்த்ததையும் வள்ளலார் பாடல் வடிவில் கூறியுள்ளார். அந்தப் பாடல்;
எருதின் உழைத் திருந்தேனுக் கிரங்கி அடிச் சிறியேன் இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும் ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடு நின்றேனை வருதி எனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே மணியே என் மருந்தே என்வாழ்வே என்வரமே சுருதிமுடி அடிக்கணிந்த துரையே என் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
இதே போல அவர் இறுதியாக சித்திவளாகத்தில் இருந்த போது இறைவன் அவரை ஆட் கொண்டதையும் பாடலாகப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்:
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே தேனிருக்கும் மலரணை மேல் பளிக்கறை யினூடே திருவடி சேர்த்தருள்க எனச் செப்பி வருந் திடவும் நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந் தெனக்கே நல்ல திருஅருளமுதம் நல்கிய தன்றியும் என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந் தடியேன் உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும் நுழைந்தனையே.
ஒரு கேள்வியும் வள்ளலாரின் பதிலும்!
கேள்வி: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே... அவற்றை இம்சை செய்து ஆகாரமாக உட்கொண்டால், உயிர்க்கொலை செய்து உண்பது போல்தானே ஆகும்?
வள்ளலாரின் பதில்: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துகள் வெறும் சடங்களே.
அவ்வித்துகளை நாமே விதைத்து, உயிர் விளைவு செய்ய முடியும். அப்படி நாமே விளைவு செய்த அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்று வதற்குத் தகுதியுள்ள சடங்களான வித்துகளையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்கு ளையும் தழை களையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.
வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் முதலானவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், ரோமம் ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.
மேலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணம் இல்லாததாலும்,அது உயிர்க் கொலையும் அல்ல; துன்பம் உண்டு பண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.
சித்த மருத்துவர் வள்ளலார்!
பல மூலிகைகளின் குணங்களை அட்டவணையாக எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகளின் துணைகொண்டு இறந்தவர்களை மறுபடி உயிர்ப்பிப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார். அங்கங்கள் துண்டுகளாக வெட்டுப் பட்டால், அவற்றை மீண்டும் இணைக்க எந்த மூலிகையை உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வலுவான, திடமான சரீரத்துக்கு அவர் கூறும் மருத்துவக் குறிப்பு இதோ:
கெட்டி மிளகு அரைகிலோ எடுத்துக்கொண்டு, அதைப் பேயன் வாழையின் கிழங்குச் சாற்றில் மூன்று நாள் ஊறவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் ஊறவைத்துப் பகலில் நிழலில் காயவைக்க வேண்டும்.
வள்ளலார் நினைவிடம் மருதூர்...
இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.
வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை
1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.
2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங் ளையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்கு களையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக் கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்
க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.
7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.
8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப் படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரா அன்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். தோத்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவ காரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக் கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது |
20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப் படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம்,மாமிசம் போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:
"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."
பொன்னான மண்!
பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்
காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு. அம் முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச் சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையை யெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே ஒன்று, மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை அறவே அற்ற வர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும் என்றார் .நீங்கள் இதுவரையில் சாப்பிடாத ஒரு உணவு பதார்த்தம் உங்கள் முன் இருக்கிறது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டும், எப்படியாவது அதை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை உங்கள் உள் மனதிற்குள் எழும்புகிறது. இது இயல்பு. அந்த பதார்த்தத்தை நீங்கள் வாயில் போட்டு உண்ணும் வரையில் அதன் ருசி உங்களுக்குத் தெரியாது. அதுவரையில் அதன் மீதிருக்கும் ஆசை கூடிக்கொண்டு போகுமே தவிர சற்றும் குறையாது.
அதேபோல் இறைவன் நமக்கு பிடித்த மானவராகவே இருக்கிறார். அவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் நாம் அவரை அடைந்துவிட முடியாது. அவரை நாம் இந்திரியங்கள்,கரணங்கள்,ஜீவனைக் கடந்து ஆன்மாவில்,மனதை வைத்து, அனுபவித்து மகிழ்ந்தால் தான் இது சாத்தியமாகும்.ஆன்மாவில் இருக்கும் அருள் அமுதம் சுரந்து ,அதை அனுபவித்தால் தான் இறைவனுடைய சுவை என்ன என்பதை அறிய முடியும். எனவே, இறைவனை அடையவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் செயல்படுங்கள். அவர் மீது வைத்திருக்கும் ஆசையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.
இறைவன் உருவமாக இல்லாமல், ஒளி வடிவில்தான் அருள் செய்கிறான். மேல் உலகம், கீழ் உலகம், நடு உலகம்,என அளவிடமுடியாத அண்டங்கள் உள்ள அனைத்து உலகங்களிலும் நிறைந்திருந்து,அருள் விளக்கமாக அவர் அசைந்தாடுகின்ற,அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற ''அருட்பெரும்ஜோதி கடவுள்'' ஒருவரே யாகும்.என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார் .
வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்!
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தமக்கு அறிவித்த வண்ணம் ,....உத்தரஞான் சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளால் ஆக்கச் சிறப்புப் பெயர்களும் ,பார்வதி புரமென்றும்,''வடலூரென்றும்'' உலகியலாற் குறிக்கப் பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள .ஓர் சுத்த சிவானுபவ ஞான வெளியில் ''சத்திய ஞானசபை ''..அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி நிறுவுகிறார் .
இது ஒரு கோயில் அல்ல !இறைவன் வந்து அமர்ந்து உலக மக்களுக்கு அருளை வழங்கும் ,''ஞான சிங்காதன பீடமாகும் '',இங்கே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒளியாக வீற்று யிருக்கின்றார் என்பதை விளக்கும்,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான'' சபையாகும்.
ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் சிற்சபையாகும்,ஆதாவது ஆன்மா இருக்கும் இடமாகும்.--நமது தலைபாகமாகும் .என்பதை வள்ளலார் விளக்கியுள்ளார் .ஆன்மாவை அறிந்தவர்கள் இறைவனை அறியலாம் ,இறைவனுடைய அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என்பது வள்ளலார் முக்கிய கொள்கையாகும்,மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்
ஆன்மாவும் ஒளியாக உள்ளது ! இறைவனும் ஒளியாக உள்ளார் !ஒளியும் ஒளியும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக ...ஒளிக் கடவுளான உண்மைக் கடவுளை ,உலக மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதற்க்காக தோற்றுவிக்கப் பட்டதுதான்,''சத்திய ஞானசபை ''யாகும் .
சத்திய ஞான சபை '' என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்று பறை சாற்றுகின்றார் வள்ளலார் .நான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் பேராசையாகும்.
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
ஜோதி யளித்து என்னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !
நான் அடைந்த பேரின்பத்தை இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் ,என்று இறைவனிடம் உலக உயிர்களுக்காக வேண்டுகிறார் .
ஒளியாகிய ஜோதியில் ஐக்கியமாகி இறைவன் இருக்கிறான்.-- இந்த உண்மையை தெரிந்துகொண்டு அந்த ஜோதியையே உண்மைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள். தன்னை ஜோதி வடிவினனாக வழிபடுவதைத்தான் இறைவனும் விரும்புகிறான். — வள்ளலார் ....தைப்பூசம் வள்ளல
ார் சித்தியடைந்த நாள்
1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக திரு மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.அதுவே சித்தி என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்.அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் என்பதாகும்.இவை அனைத்தும் பெற்ற ஒரே ஒரு அருள் ஞானி ,அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.
நாமும் அவர் காட்டிய வழியில் சென்று அவரைப்போல் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment