Thursday 9 August 2018

அம்பிகை அருளை அள்ளித்தரும் தேவீவைபவாஸ்சர்யாஷ்டோத்தரசததிவ்யநாமாவலீ

அம்பிகை அருளை அள்ளித்தரும் தேவீவைபவாஸ்சர்யாஷ்டோத்தரசததிவ்யநாமாவலீ





பரமாம்பிகை, பரசிவனிடம் “லோகநாதா! தாங்கள் எனக்கு பல ரஹஸ்ய தந்திரங்களை கருணித்துள்ளீர், ஆயினும், எனது அவா தீரவில்லை, தாங்கள் எனக்கு இவ்வுலகில் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மத்ஸர்யத்தால் உளலும் மாந்தர், அவ்வினைப் பயனிலிருந்து விடுபட்டு ஆதிசக்தியாம், பராசக்தி ராஜராஜேஸ்வரியின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகவும், மிக எளிமையான வழிபாடு முறையாகவும், ஜெபம், எண்ணிக்கை, ஹோமம் போன்ற வழிபாட்டு க்ரமங்கள் இல்லாததுமான உபாயத்தை வேண்டுகிறேன்” என்று கூற,

பரசிவன், அப்படியே என்று “தேவி வைபவ ஆஸ்சர்ய ஆஷ்டோத்தரம்” எனும் இந்த அஷ்டோத்திரத்தை நிஷ்டையுடனும் பக்தியுடனும் அனுஷ்டிப்பவன் தனது எல்லா பாவ வினைகளையும் களைந்து அக்கணமே பராசக்தி ராஜராஜேஸ்வரியின் அருளுக்கு பாத்திரமாகிறான்.


மும்மூர்த்திகள் பண்டொரு காலத்தில் மணித்வீபத்தில் அம்பிகையின் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர். அம்பிகை அவ்ர்கட்கு முன் அபூர்வ அழகும், காந்தியுமுடைய, பல கோடி கோடி சூரிய ப்ரபையோடு கூடி தரிசனம் தருகிறாள். இதை ஆஸ்சரியத்துடன் கண்ட மும்மூர்த்திகள் இயற்றிய அஷ்டோத்திரம் இது. இது உதித்த தினம் சித்திரை மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியாகும். அந்த நாளில் எவர் ஆராதித்தாலும் அவர்கு உடனே பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அருள்வாள் என்று ஆசீர்வதிக்கிறார். ஆராதித்து பயன் பெறுவீரே!

அம்பிகை அருளை அள்ளித்தரும்
॥ தேவீவைபவாஸ்சர்யாஷ்டோத்தரசததிவ்யநாமாவலீ ॥
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ।
ஓம் பரமானந்தலஹர்யை நம: ।

ஓம் பரசைதன்யதீபிகாயை நம: ।

ஓம் ஸ்வயம்ப்ரகாஷகிரணாயை நம: ।

ஓம் நித்யவைபவஷாலின்யை நம: ।

ஓம் விஷுத்தகேவலாகண்டஸத்யகாலாத்மரூபிண்யை நம: । 5

ஓம் ஆதிமத்யாந்தரஹிதாயை நம: ।

ஓம் மஹாமாயாவிலாஸின்யை நம: ।

ஓம் குணத்ரயபரிச்சேத்ர்யை நம: ।

ஓம் ஸர்வதத்த்வப்ரகாஷின்யை நம: ।

ஓம் ஸ்த்ரீபும்ஸபாவரஸிகாயை நம: । 10

ஓம் ஜகத்ஸர்காதிலம்படாயை நம: ।

ஓம் அஷஷேநாமரூபாதிபேதச்சேதரவிப்ரபாயை நம: ।

ஓம் அனாதிவாஸனாரூபாயை நம: ।

ஓம் வாஸனோத்யத்ப்ரபஞ்சிகாயை நம: ।

ஓம் ப்ரபஞ்சோபஸமப்ரௌடாயை நம: । 15

ஓம் சராசரஜகன்மய்யை நம: ।

ஓம் ஸமஸ்தஜகதாதாராயை நம: ।

ஓம் ஸர்வஸஞ்ஜீவனோத்ஸுகாயை நம: ।

ஓம் பக்தசேதோமயானந்த ஸ்வார்தவைபவ விப்ரமாயை நம: ।

ஓம் ஸர்வாகர்ஷணவஸ்யாதிஸர்வகர்மதுரந்தராயை நம: । 20

ஓம் விஜ்ஞானபரமானந்தவித்யாயை நம: ।

ஓம் ஸந்தானஸித்திதாயை நம: ।

ஓம் ஆயுராரோக்ய ஸௌபாக்ய பலஸ்ரீகீர்திபாக்யதாயை நம: ।

ஓம் தனதான்ய மணீவஸ்த்ர பூஷாலேபனமால்யதாயை நம: ।

ஓம் க்ருஹக்ராம மஹாராஜ்ய ஸாம்ராஜ்ய ஸுகதாயின்யை நம: । 25

ஓம் ஸப்தாங்க சக்திஸம்பூர்ண ஸார்வபௌம பலப்ரதாயை நம: ।

ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவேந்த்ராதி பதவிஷ்ராணனக்ஷமாயை நம: ।

ஓம் புக்திமுக்திமஹாபக்திவிரக்த்யத்வைததாயின்யை நம: ।

ஓம் நிக்ரஹானுக்ரஹாத்யக்ஷாயை நம: ।

ஓம் ஜ்ஞானனிர்த்வைததாயின்யை நம: । 30

ஓம் பரகாயப்ரவேஷாதி யோகஸித்தி ப்ரதாயினீ நம: ।

ஓம் ஷிஷ்டஸன்ஜீவனப்ரௌடாயை நம: ।

ஓம் துஷ்டஸம்ஹாரஸித்திதாயை நம: ।

ஓம் லீலாவினிர்மிதானேக கோடிப்ரஹ்மாண்ட மண்டலாயை நம: ।

ஓம் ஏகஸ்மை நம: । 35

ஓம் அனேகாத்மிகாயை நம: ।

ஓம் நானாரூபிண்யை நம: ।

ஓம் அர்தாங்கனேஸ்வர்யை நம: ।

ஓம் சிவசக்திமய்யை நம: ।

ஓம் நித்யஸ்ருங்காரைகரஸப்ரியாயை நம: । 40

ஓம் துஷ்டாயை நம: ।

ஓம் புஷ்டாயை நம: ।

ஓம் அபரிச்சின்னாயை நம: ।

ஓம் நித்யயௌவனமோஹின்யை நம: ।

ஓம் ஸமஸ்ததேவதாரூபாயை நம: । 45

ஓம் ஸர்வ தேவாதிதேவதாயை நம: ।

ஓம் தேவர்ஷிபித்ரு ஸித்தாதி யோகினீ பைரவாத்மிகாயை நம: ।

ஓம் நிதிஸித்தி மணீமுத்ராயை நம: ।

ஓம் சஸ்த்ராஸ்த்ராயுதபாஸுராயை நம: ।

ஓம் சத்ரசாமரவாதித்ரபதாகாவ்யஜனாஞ்சிதாயை நம: । 50

ஓம் ஹஸ்தாஸ்வரதபாதாதாமாத்யஸேனாஸுஸேவிதாயை நம: ।

ஓம் புரோஹிதகுலாசார்ய குருஸிஷ்யாதிஸேவிதாயை நம: ।

ஓம் ஸுதாஸமுத்ரமத்யோத்யத்ஸுரத்ருமனிவாஸின்யை நம: ।

ஓம் மணித்வீபாந்தரப்ரோத்யத் கதம்பவனவாஸின்யை நம: ।

ஓம் சிந்தாமணி க்ருஹாந்தஸ்தாயை நம: । 55

ஓம் மணிமண்டபமத்யகாயை நம: ।

ஓம் ரத்னஸிம்ஹாஸனப்ரோத்யத் சிவமஞ்சாதிஸாயின்யை நம: ।

ஓம் ஸதாசிவமஹாலிங்க மூலஸங்கட்டயோனிகாயை நம: ।

ஓம் அன்யோன்யாலிங்கஸங்கர்ஷகண்டூஸங்க்ஷுப்தமானஸாயை நம: ।

ஓம் கலோத்யத்பிந்துகாலின்யாதுர்யனாத பரம்பராயை நம: । 60

ஓம் நாதாந்தானந்தஸந்தோஹ ஸ்வயம்வ்யக்தவசோ ஸ்ம்ருதாயை நம: ।

ஓம் காமராஜ மஹாதந்த்ர ரஹஸ்யாசாரதக்ஷிணாயை நம: ।

ஓம் மகாரபஞ்சகோத்பூதப்ரௌடாந்தோல்லாஸஸுந்தர்யை நம: ।

ஓம் ஸ்ரீசக்ரராஜனிலயாயை நம: ।

ஓம் ஸ்ரீவித்யாமந்த்ரவிக்ரஹாயை நம: । 65

ஓம் அகண்டஸச்சிதானந்த சிவசக்தைகரூபிண்யை நம: ।

ஓம் த்ரிபுராயை நம: ।

ஓம் த்ரிபுரேஷான்யை நம: ।

ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம: ।

ஓம் த்ரிபுராவாஸரஸிகாயை நம: । 70

ஓம் த்ரிபுரா ஸ்ரீஸ்வரூபிண்யை நம: ।

ஓம் மஹாபத்மவனாந்தஸ்தாயை நம: ।

ஓம் ஸ்ரீமத்த்ரிபுரமாலின்யை நம: ।

ஓம் மஹாத்ரிபுரஸித்தாம்பாயை நம: ।

ஓம் ஸ்ரீமஹாத்ரிபுராம்பிகாயை நம: । 75

ஓம் நவசக்ரக்ரமாதேயை நம: ।

ஓம் மஹாத்ரிபுரபைரவ்யை நம: ।

ஓம் ஸ்ரீமாத்ரே நம: ।

ஓம் லலிதாயை நம: ।

ஓம் பாலாயை நம: । 80

ஓம் ராஜராஜேஸ்வர்யை நம: ।

ஓம் சிவாயை நம: ।

ஓம் உத்பத்திஸ்திதிஸம்ஹாரக்ரமசக்ரனிவாஸின்யை நம: ।

ஓம் அர்தமேர்வாத்மசக்ரஸ்தாயை நம: ।

ஓம் ஸர்வலோகமஹேஸ்வர்யை நம: । 85

ஓம் வல்மீகபுரமத்யஸ்தாயை நம: ।

ஓம் ஜம்பூவனனிவாஸின்யை நம: ।

ஓம் அருணாசலஸ்ருங்கஸ்தாயை நம: ।

ஓம் வ்யாக்ராலயனிவாஸின்யை நம: ।

ஓம் ஸ்ரீகாலஹஸ்தினிலயாயை நம: । 90

ஓம் காஸீபுரனிவாஸின்யை நம: ।

ஓம் ஸ்ரீமத்கைலாஸனிலயாயை நம: ।

ஓம் த்வாதஸாந்தமஹேஸ்வர்யை நம: ।

ஓம் ஸ்ரீஷோடஸாந்தமத்யஸ்தாயை நம: ।

ஓம் ஸர்வவேதாந்தலக்ஷிதாயை நம: । 95

ஓம் ஸ்ருதிஸ்ம்ருதிபுராணேதிஹாஸாகமகலேஸ்வர்யை நம: ।

ஓம் பூதபௌதிகதன்மாத்ரதேவதாப்ராணஹ்ருன்மயை நம: ।

ஓம் ஜீவேஸ்வரப்ரஹ்மரூபாயை நம: ।ஓம் ஸ்ரீகுணாட்யாயை நம: ।

ஓம் குணாத்மிகாயை நம: । 100

ஓம் அவஸ்தாத்ரயனிர்முக்தாயை நம: ।

ஓம் வாக்ரமோமாமஹீமயை நம: ।

ஓம் காயத்ரீபுவனேஸானீ துர்காகாள்யாதிரூபிண்யை நம: ।

ஓம் மத்ஸ்யகூர்மவராஹாதினானாரூபவிலாஸின்யை நம: ।

ஓம் மஹாயோகீஸ்வராராத்யாயை நம: । 105

ஓம் மஹாவீரவரப்ரதாயை நம: ।

ஓம் ஸித்தேஸ்வரகுலாராத்யாயை நம: ।

ஓம் ஸ்ரீமச்சரணவைபவாயை நம: । 108

ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஓம் ।


நன்றி: - ஹைந்தவ திருவலம் வலைத்தளம்