Thursday, 4 March 2021

சுந்தர காண்டம் படித்தால் சோதனை தீர்க்க வருவான்

 🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

🤝ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் 🤝

🌹 சுகம் தரும் சுந்தரகான்டத்தை பாரயணம் செய்யும் முறை காரிய சித்தியளிக்கும் வழி

🌹ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் 🌹

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

------------------------------------------------------------------------------

🍊 ஸ்ரீமத் ராமாயண சுந்தர காண்ட ஸப்த ஸர்க்க பாராயணம் :

----------------------------------------------------------------------------

🍏 ஸப்த ஸர்க பாராயணம் (ஏழு நாட்கள்) 🍏                                         


🍊 தினமும் ஏழு சர்க்கம் பாராயணம் செய்ய வேண்டும்.                           

இப்படி ஏழு தடவை பாராயணம் செய்வதால்                                    

நினைத்த காரியம் நிறைவேறும். 10ம் நாள் 68வது                           

முடிந்தபின் மீண்டும் முதலிலிருந்து தொடங்கவும்.

--------------------------------------------------------------------

சுந்தரகாண்டம் பாராயணம் எளிய வழியில் :

-------------------------------------------------------------------- 

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண 

அனுமத் சமேதா சரணம்

வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 

66 சர்க்கங்களை உடையது.  

இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம்.  எனவே,  

சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… 


இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.

 

சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும்,  வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.


 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂


ஸ்ரீ ராம ஜெயம்


🍒 சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்


🍒இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்


🍒கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன 


🍒 கருணைமிகு  ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது


🍒அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றான்


🍒இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி


🍒 இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.

 

🍒அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்


🍒அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!


🍒வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்


🍒வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

 

🍒மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க


🍒மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து


🍒சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து


🍒சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.

 

🍒இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை


🍒இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்


🍒அழகான இலங்கையில் அன்னை ஜானகியை


🍒அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

 

🍒 சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்


🍒 சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்


🍒ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட


🍒வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !

 

🍒கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி


🍒சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்


🍒அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு


🍒அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

 

🍒பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்


🍒பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க


🍒வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்


🍒வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

 

🍒அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்


🍒அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.


🍒ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்


🍒அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

 

🍒ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்


🍒 ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.


🍒வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி


🍒 சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.

 

🍒மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து


🍒ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.


🍒ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ


🍒அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.

 

🍒அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை


🍒அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.


🍒அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்


🍒அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.

 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🍒எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து  மனம் போல நீர் சொரிந்து

ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே  உனை பணிகின்றோம் பலமுறை🍒


 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


🌺 ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்ன மாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

-------------------------

சுந்தர காண்டம் :

-------------------------

🍂 இராமாயணத்தில் எத்தனையோ காண்டங்கள் இருந்தாலும், சுந்தரகாண்டம் மிகவும் முக்கியமான காண்டமாகும். ராம பக்தியை முக்கிய நோக்கமாகக் கொண்டு, அருந்தமிழ் மொழியால் கம்பர் நமக்குப் பாடித் தந்துள்ளார். துளசிதாசர் என்னும் மஹான் இதனை ஹிந்தியில் இயற்றியுள்ளார். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஏனைய காண்டங்களுக்கெல்லாம் அவற்றுள் கூறப்பட்டுள்ள கதையின் சந்தர்ப்பத்தையொட்டிப் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் சுந்தர காண்டத்துக்கு மட்டும் மேற்கண்ட ரீதியில் பெயரமைக்கப்படவில்லை.


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


♻ இது ஏனெனில், மற்ற காண்டங்களில் கூறப்படும் கதைகளைக் காட்டிலும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ள கதைகள், மனதிற்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன. 


🌹ஸ்ரீ ராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மை பக்தியும் வாய்க்கப்பெற்று உள்ள ஹனுமனின் வீரச் செயல்கள் இக்காண்டத்துள் மிக விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. 


🍅  இக்காண்டம் நித்ய பாராயணத்திற்குத் தகுதியாயிருக்கிறது. 🍅 


🍊 அவரவர்கள் விரும்பும் பலன்கள் யாவையும் கொடுக்கக் கூடியதாக உள்ளது. 


🌕 ஸாமான்ய தர்மங்கயையும், 


🌕விசேஷ அர்த்தங்களையும் இக்காண்டம் போதிக்கிறது. இன்னும் பலவிதமாக ஆராய்ந்தால் "சுந்தர காண்டம்" என்ற பெயர் மிகவும் பொருத்தமானதே என்று முடிவு ஏற்படும்.


இக்காண்டம் சௌபாக்யத்தை அளிக்கவல்ல காண்டமாகும். உடலுக்கு உயிர் எப்படி முக்கியமோ, அப்படி சுந்தர காண்டம். ஸ்ரீமத் ராமாயணத்திற்கு அமைந்துள்ளது.


🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹


♻ அனுமனின் "வீரவெளிக்காட்டு" என்று கூட இக்காண்டத்தைக் கூறிவிடலாம். வாயு புதல்வனின் வீரம், விவேகம், வலிமை, பக்திப்பெருக்கு, சேவா உணர்ச்சி அனைத்தும் அளாவு கடந்து பரிமளிப்பது இக்காண்டத்தில் தான். 'அனுமரின்றேல் அவ்வளவுமேயில்லை' என்று அறுதியிடும் அளவிற்கு எங்கு அவரைப்பற்றியே இப்பகுதியில் நாம் உணர முடிகிறது.


பிணைக்கப்பட்ட இரு தெய்வீக உள்ளங்கள் பிரிக்கப்பட்டுப் பரிதவிக்கும் நிலையில் இணைப்பு கயிற்றைக் கணையாழி மூலமாக அனுமர் அணிவிக்கிறார். தொலைவிலுள்ள இரு உள்ளங்கள் சின்னங்களின் மூலமாகவோ சந்திக்கும் நிலையில்தான் எவ்வளவு பேரானந்தம் 1 இத்தகைய ஆனந்த நிலையைத் தன்னுள் கொண்டுள்ள தனிப்பெரும் பகுதியே "சுந்தர காண்டம்".


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


⭐ எவர் அவநம்பிக்கைகளை விடுத்து ஸ்ரீராமனை வழிபடுகின்றாரோ, பக்தியுடன் அவன் நாமங்களை உச்சரிக்கின்றாரோ, அவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திச் செல்வது திண்ணம், கலியுகத்தில் நாம மகிமை கண்கூடு என்று துளிசிதாசர் புகன்றிருக்கிறார்.


🦐 ராமகதையின் ஜீவமையமே சுந்தரகாண்டம். சுந்தரகாண்டத்தைப் படிப்பதால் பற்பல பலன்கள் உண்டு.  


🌹 துயர் துடைக்கும் அருமருந்து அது. 


🌹இருளை அகற்றும் 


 இன்ப விளக்கு அது. 


🌹 அறிவை வளர்க்கும் அன்பு ஒளி அது. 


🌹 இதனை பக்தியுடன் படிப்போர் இன்னல்களை சமாளித்து இன்பம் காண்பர். 


🌹 இழந்த பொருளை எய்திப் புளகாங்கிதம் கொள்வர்.  


🌹 தோல்வியின் சாயலை விடுத்து வெற்றிப் பாதையை அடைவர்.  


🌹 அறிவும் திறனும் அடையப் பெறுவர். 


🌹 கலை கேள்விகளில் வளர்ச்சி காண்பர். 


🌹 மங்களமான நிகழ்ச்சிகளைக் கொள்வர். 


🌹 சௌபாக்யம் சித்திக்கும். 


🌹 துயரம் துடைபட்டுப் போகும். 


🌹 ஆனந்தம் அடையும்  


🌹 இறைவனின் இன்ப அருளையும் சுவைப்பர். 


🌹 நேரிய நல்வாழ்வு அவர்களை அடையும். 


🌹சம்சார சாகரத்தை சுமுகமாகக் கடப்பர். 


🌹அவன் அன்புப் பாதங்களை அடைவர். 


🌹பிறவாப் பெருநிலையும் அவர்களுக்குக் கிட்டும்.


🌹 இவ்வளவு பேற்றையும் அளிக்கவல்ல இப்பெருமைமிக்க நூலை யாவரும் படிக்க வேண்டும். பன்முறை படிக்க வேண்டும். திரும்பத் திரும்ப ஆழ்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் பற்பல புதிர்கள் நமக்குப் புலப்படும். உண்மைகளை உணரவும் முடியும். பக்திப் பரவசத்தில் பரமனின் பனுவல்களின் பண்புகளைப் பரமானந்த நிலையில் பார்க்க முடியும். தூய உள்ளத்துடன், உடலை சுத்தமாக்கிக் கொண்ட பின்னர், தினமும் இதனைப் படிப்பது ஒன்றே போதும், பரமனருளைப் பெற்று அவன் திருவடிகளை அடைவதற்கு சீதையைப் போன்ற ஒப்பற்ற தேவி உலகில் தோன்றியதில்லை. அளவற்ற பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இருப்பிடம். கற்புக்கு அணிகலன். எல்லாக் கஷ்டங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டவள். மாதர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறவள். அப்படிப்பட்ட சீதாப்பிராட்டியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் வாழ வேண்டும்.


🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


🌹 இக்காண்டத்தில், ஆஞ்சநேயரின் அற்புதமான சாகசங்களும், அபரிதமான அறிவுத் திறனும், அளவில்லாத ஸ்ரீராம பக்தியும், அவர் சீதாப்பிராட்டி, ஸ்ரீ ராமர் இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு எடுத்துக் கொண்ட ஒப்பற்ற செயல்களும் ஒருங்கே சிறந்து காணப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்ற ஒரு பெயரும் உண்டு. அதனாலேயே இது சுந்தர காண்டம் (மிக அழகுடைய காண்டம்) என்று சிறப்புற்று விளங்குகிறது என்று கூறலாம்.


🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


🌹 இதை தினசரி ஒவ்வொரு ஸர்க்கமாகப் பாராயணம் செய்யலாம். பாராயணத்திற்கு முன்பு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, புஷ்பம் அணிவித்து, பாராயணம் முடிந்த பிறகு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நிவேதனம் செய்யலாம். ஸ்ரீராம பட்டாபிஷேகம் படித்து முடித்த அன்று பாயசம் நிவேதனம் செய்யலாம். ஆஞ்சநேயரைத் தொழுது வந்தால், அவரருளால், நவக்கிரகங்கள் முக்கியமாக சனீஸ்வரரின் பாதிப்புகளின் கடுமை குறையும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🌺 எளிய முறையில் பக்தியுடன் செய்யும் எதையும் ஸ்ரீ பகவான் ஏற்றுக் கொள்கிறார். ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான், இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை எதையேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ, அதில் தான் திருப்தி அடைவதாகக் கூறுகிறார்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🌹 பிரிந்த தம்பதிகளை ஹனுமன் இணைக்க உதவுவதால், இதைப் படிப்பதால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும், திருமணம் கைகூடும். ஜாதக தோஷங்கள் நீங்கும். அதுவரை சாதாரண வானரமாயிருந்த மாருதி, இலங்கை சென்று வந்தபிறகு, சீதாராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்களோடு இணைந்து புகழ் பெற்றார். ராமனோடு லட்சுணர், சீதை ஆகியோர் மட்டுமல்லாமல் ஹனுமனையும் சேர்தே பூஜிக்கிறோம்.


🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊


🌹எனவே இக்காண்டத்தைப் படிப்பவர்களுக்கு வேலை கிட்டும். 


🌹  புகழ் தேடிவரும் 


🌹  எடுத்த காரியம் ஜெயமாகும். 


🌹 உத்யோக உயர்வு கிடைக்கும் 


🌹 . விளைச்சல் அதிகரிக்கும்.  


🌹 தொழிலில் லாபம் பெறலாம்.  


🌹 வழக்குகள் வெற்றி பெறும்.  


🌹சீதையின் துக்கமென்னும் வியாதிக்கு ஒளடதமானவர். 


🌹  தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார். அதோடு 


🌹 நற்குணங்கள் பெருக, பாபங்கள் அழியும். 


🌹எதிரிகள் தலை தூக்க மாட்டார்கள்.  


🌹தீங்கு செய்ய நினைப்பவரே தீங்கை அடைவர்.

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊


🌿 ஆகவே, இக்காண்டத்தைப் பக்தர்கள் பக்தியோடு பாராயணம் செய்து, ஸ்ரீ சீதா ராமர் அனுக்கிரகத்தால் தங்கள் கோரிக்கைகள் ஈடேறப் பெறுவார்களாக!

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐


சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது எப்படி?

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


🌺 தினமும் காலையில் நீராடி, ஸ்ரீ ராமபிரானின் படத்தை வைத்துப் புஷ்பம் சாத்தி, குறைந்தபட்சம் ஒரு ஸர்க்கமாவது (ஓர் அத்தியாயம்) படிக்க வேண்டும். எந்த ஒரு ஸர்க்கத்தையும் பாதியில் நிறுத்திவிட்டு மறுநாள் தொடரக்கூடாது. ஒவ்வொரு ஸர்க்கத்தையும் முழுமையாகப் படித்தல் வேண்டும்.


🌺பாராயணம் செய்த பிறகு, திணமும், சிறிது உலர்ந்த திராட்சை அல்லது ஏதாவது ஒரு பழம், அல்லது கற்கண்டு அல்லது காய்ச்சிய பசும்பால், நைவேத்தியம் செய்துவிட்டு 12 முறை ஸ்ரீ ராமபிரானின் படத்தை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.


🌺அதன் பிறகு கற்பூரம் அல்லது தீபம் ஆகியவற்றினால் ஆரத்தி எடுத்துவிட்டு, மீண்டும் 12 முறை விழுந்து வணங்க வேண்டும். சுந்தர காண்டம் முழுமையும் பாராயணம் செய்து முடித்த கடைசி தினத்தில் பாயஸம், வடையுடன் நைவேத்தியம் செய்து, வயோதிக ஏழை ஒருவருக்கு அன்னமிட்டால் நல்ல பலன் தரும். எனினும், தங்கள் வசதிக்கு உட்பட்டு செய்தால் போதும்.


வடமொழி தெரியாதவர்கள் அல்லது அதனையே தாய்மொழியில் உச்சரிக்க முடியாதவர்கள் கம்பராமாயணம் அல்லது துளிசதாஸரின் ஸ்ரீராம சரிதமானஸ் (ஹிந்தி) பாராயணம் செய்யலாம். பலன் ஒன்றே பக்தியே இப்பாராயணத்திற்கு அடிப்படை அவசியமாகும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


🌺 குடும்பங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கொடிய துன்பங்களையும் ஸ்ரீமத் ராமாயணம் - சுந்தர காண்டப் பாராயணத்தினால் சூரியனைக் கண்ட பனிபோல விலகுவதை அனுபவ பூர்வமாகக் காணலாம்.


ஸ்ரீமத் ராமாயணம் எவர் பாராயணம் செய்தாலும் அவ்விடத்தில் ஸ்ரீ அனுமன் எழுந்தருளி, அந்தப் பாராயணம் என்னும் அமுதத்தைப் பருகிப் பேரானந்தம் அடைந்து, உடனடியாக அருள் பாலிக்கிறார் என மகாத்மாவான ஸ்ரீ துளசிதாசர் விவரித்துள்ளார். ஆதலால் ஸ்ரீமத் சுந்தரகாண்டப் பாராயணத்தின் மகிமையும், சக்தியும் அளவற்றவை ஆகும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


   🍒 பாராயண முறைகளும், பலனும் 🍒


🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


🙏 ஒரே நாளில் பாராயணம் செய்வோர் அதிகாலை ஆரம்பித்து மதியம் 1.00 மணிக்குள் முடிக்க வேண்டும்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🍁 இரண்டு நாள் பாராயணத்திற்கு முதல் நாள் 36வது சர்க்கம் வரையிலும், இரண்டாம் நாள் பட்டாபிஷேகம் முடியவும் பாராயணம் செய்ய வேண்டும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🍅 மூன்று நாள் பாராயணத்திற்கு முதல் நாள் 27வது ஸர்க்கம் முடியவும், 2ம் நாள் 40வது ஸர்க்கம் வரையுலும், மூன்றாவது நாள் பட்டாபிஷேகம் வரையிலும் முடிக்க வேண்டும்.


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


♻ ஐந்து நாட்கள் பாராயணத்திற்கு


1ம் நாள் - 15வது ஸர்க்கம் வரை

2ம் நாள் - 27வது ஸர்க்கம் வரை

3ம் நாள் - 40வது ஸர்க்கம் வரை

4ம் நாள் - 54வது ஸர்க்கம் வரை

5ம் நாள் - பட்டாபிஷேகம் வரை


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


🌺 முதல் ஸர்க்கத்தை தினமும் காலையில் 6 மாதங்கள் விடாது பாராயணம் செய்து வந்தால் சம்சார கஷ்டங்கள் நீங்கும்.


🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐


🔥 பேய், பிசாசு, பில்லி, சூன்யம் நீங்க 3வது ஸர்க்கத்தை தினமும் மாலை நெய் தீபம் ஏற்றி பாராயணம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து கற்பூரம் காட்ட வேண்டும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


🌳 ஐஸ்வர்யம் பெருக, கடன் தொல்லை அகல வெள்ளிக்கிழமை தொடங்கி தினமும் 9 ஸர்க்கங்களாகப் பாராயணம் செய்து அடுத்த வெள்ளி மீதி இருக்கும் ஐந்து ஸர்க்கங்களையும், பட்டாபிஷேகத்தையும் முடித்து அப்பம், வடை, பால், சர்க்கரைப் பொங்கல், பழங்கள், பாயஸம், தேன் என்று தினமொன்றாக நிவேதிக்க வேண்டும். 15வது ஸர்க்கத்தை காலையில் படித்து ஐந்து வாழைப்பழங்கள் நைவேத்யம் செய்தாலும் விரைவில் கடன் நீங்கும்.


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


🍅குழந்தைகள், கணவன் அல்லது மனைவி,  தகப்பனார் திருந்த, நற்குணம் பெற திணமும் காலை நீராடி 20,21 சர்க்கங்களைப் பாராயணம் செய்து இளஞ் சூடான பசுவின் பாலில் இனிப்பு சேர்த்து நிவேதனம் செய்யவும்.


🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅


🌕 ஸப்த ஸர்க பாராயணம் (ஏழு நாட்கள்)


தினமும் ஏழு சர்க்கம் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி ஏழு தடவை பாராயணம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். 10ம் நாள் 68வது முடிந்தபின் மீண்டும் முதலிலிருந்து தொடங்கவும்.


🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕


🍏 நவாஸ பாராயணம் (9 நாட்கள்)


நவாஹ பாராயணம் (9 நாட்கள்) நிவேதனம்


1ம் நாள் 1-5 சர்க்கம் சர்க்கரைப் பொங்கல்

2ம் நாள் 6-15 சர்க்கம் அப்பம், பாயசம்

3ம் நாள் 16-20 சர்க்கம் எள்ளோதரை (உப்பு (அ) இனிப்பு)

4ம் நாள் 21-26 சர்க்கம் தேன்குழல் (அ) முறுக்கு (அ) சீடை

5ம் நாள் 27-33 சர்க்கம் தயிர் சாதம்

6ம் நாள் 34-40 சர்க்கம் மோதகம்

7ம் நாள் 41-52 சர்க்கம் விதவிதபமான கனிகள்

8ம் நாள் 53-60 சர்க்கம் வெண்பொங்கல்

9ம் நாள் 61-68 பட்டாபிஷேகம் தேன், பசும்பால்


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🍒 நினைத்த காரியம் நடக்க 41வது சர்க்கத்தை தினமும் அதிகாலை பாராயணம் செய்து பால் நிவேதனம் செய்யவும்.


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🦐 துர் சொப்பனம் பலிக்காதிருக்க 27வது சர்க்கத்தை மூன்று தினங்கள் காலையில் பாராயணம் செய்து வாழைப்பழம் நிவேதிக்க வேண்டும்.


🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐


♻ பிரச்சனை தீர 36வது சர்க்கத்தை தினமும் காலையில் படித்து இனிப்பு போட்ட இளஞ் சூடான பசுவின் பாலை நிவேதிக்கவும்.


♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻


⭐ ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் 68 நாட்களில் 68 முறை சுந்தர காண்டம் பாராயணம் செய்து தினமும் 12 அந்தணர்களுக்கு அன்னமளித்து தாம்பூலம் தக்ஷனை கொடுத்தால் தீராத வியாதிகளும் தீரும். நான்கு அல்லது ஆறு மாதங்களிலும் பாராயணத்தை முடிக்கலாம். அது சற்று நிதானமாகப் பலன்தரும். நிவேதனம் இல்லாத பாராயணத்துக்குப் பலன் இல்லை. ஸ்ரீராம பட்டாபிஷேகம் படம் வைத்து அஷ்டோத்திரமாவது படித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


🍅 பிரிந்தவர் சேர 33,34,35 ஆகிய மூன்று சர்க்கங்களை தினமும் காலையில் படித்து பசும்பால் நிவேதிக்கவும். காரியம் நிறைவேறும் வரை பாராயணத்தை நிறுத்தக்கூடாது.


🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅


🍁 சத்துரு ஐயம் ஏற்பட 42வது சர்க்கத்தை காலையில் பாராயணம் செய்து இனிப்பு போட்ட பசும்பாலை நிவேதிக்கவும்.  


🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊


🎡 வீடு, நிலம் வாங்க 54வது சர்க்கத்தை தினமும் காலையில் படித்து பால் நிவேதனம் செய்யவும்.


🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


✡ சனிதிசை, சனி புக்திக்கு 48வது சர்க்கத்தை தினமும் காலையில் பாராயணம் செய்து, தினமும் கற்கண்டு, திராட்சை நிவேதிக்கவும். ராகு திசை, சனி திசைக்கு 47வது சர்க்கத்தை தினமும் காலையில் படித்து தேன், கற்கண்டு நிவேதிக்கவும்.


🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


♻ பின்குறிப்பு : சுந்தர காண்டம் புத்தகம் அனைத்து புத்தகக் கடைகளிலும் சிறியது முதல் பெரியது வரை கிடைக்கும். அதை வாங்கிப் படித்துப் அனைவரும் பயனடையலாம்.


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

🔥ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம்🔥

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

நன்றி திரு Nandakumar G அவரகள் 🙏🙏🙏


♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

No comments:

Post a Comment