நமது பீடத்துக்கு தேவையான பொருட்கள்
1. இரும்பு வாணலி
நேற்று வாங்கப்பட்டது. நன்கொடை பெறப்பட்டது. 1000
2. அண்ணக்கூடை
இன்று வாங்கப்படும். முழு பண உதவி கிடைத்துள்ளது.1500
3. 10 நூல் பாய்கள்
Rs..2250. 6 பாய்களுக்கு ஒரு அன்பர் நன்கொடை அளிக்க உறுதி செய்துள்ளார். இன்று 5 பாய் வாங்கப்படும். *மேலும் 5 பாய்களுக்கு நன்கொடை தேவை.*
4. அன்னதான சேர் டேபிள்
*5 டேபிள் 15 சேர் தேவை. ஒரு டேபிள் Rs.2700, 1 சேர் Rs.300. 5 டேபிள் விலை 13500, 15 சேர் விலை 4500. நன்கொடை தேவை*
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் முடிந்த அளவு நன்கொடை அளிக்கலாம். எந்த கட்டாயமும் இல்லை. இதனை, நமது பீடம் கொடுத்துள்ள ஒரு வாய்ப்பாக கருதுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் இருந்தே ஆக வேண்டும் என்று எந்த சூழலும் இல்லை. பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில் வாடகைக்கு எடுக்கப்படும். ஆனால் அது ஒரு அவசியமற்ற செலவு. சொந்த பொருள் இருந்தால் வாடகை செலவை மிச்சப்படுத்தலாம். மேலும் சேர் டேபிள் பாத்திரங்கள் இருந்தால், சமைப்பவர்களுக்கு, பரிமாறுபவர்களுக்கு, சாப்பிடுபவர்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கும்.
அன்னதானம் என்பது ஒரு சுவையான உணவாக இருக்க வேண்டும். சாப்பிடுபவர்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும்.
வயிறு நிறைந்தால் தான் மனம் நிறையும். கடவுளை பற்றி சிந்திக்கவே முடியும். எனவே பசியாற்றுதல் என்பது இந்து மதம் மட்டுமல்லாமல் அனைத்து மதங்களிலும் வலியுறுத்தப்படுவது.
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.
ஜீவ. நாடி வாசிக்கும் இடத்தில் எப்போதும் அன்னதானம் நடந்து கொண்டு அன்பர்கள் அனைவரும் பசியாற்றி இருக்க வேண்டும் என்பது , ஜீவ அருள் நாடி ஓலை சுவடிகள் வாசிக்கும் வீதிகளில் ஒன்றாகும்.
தொடர்நது ஜீவ நாடி வாசித்து அனைத்து தரப்பு மக்களும் அவரவர் பிரச்சனைகளுக்கு தீர்வு பரிகாரம், ஆன்மீக முன்னேற்றம், ஆசீர்வாதம், ஆலோசனை போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், அன்னதான காரியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதில் எந்த தடையும் இருக்க கூடாது. உணவு உண்பவர்கள் மன திருப்தியுடன் உணவு உண்ண வேண்டும்.
எனவே இதற்கு ஒரு சிறு முயற்சியாக தான் இந்த சமையல் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், சேர் டேபிள் போன்றவை உபயோகப்படும்.
இது ஒரு சிறு உதவியாக இருந்தாலும், இதில் மிகப்பெறும் பயன் அடங்கி உள்ளது.
தானம் வாங்கும் இடம் சாக்ஷாத் அகத்திய பெருமான் உறையும் இடம். தான பொருட்களையும் தானங்களையும் இவர் தன் இரு கண்களாலும் பார்த்து கொண்டு இருக்கிறார். தானம் அளிப்பவர்களையும் பார்க்கிறார், அவர்களத்திய கர்மங்களையும் பார்க்கிறார். அன்பரகளுக்கு வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்து கொடுக்கிறார். நல்ல எண்ணம் ஓடைத்தவர்களுக்கு மேலும் மேலும் பணம் சேருமாறு வழிவகை செய்து கொடுக்கிறார். தானங்களை பெருக்குகிறார்.
ஒருவனுக்கு ஊழ்வினை வரும் தருவாயில், எமனை எதிர்த்து திருப்பி அனுப்ப வேண்டுமானால், அவன் ஏதாவது அதற்கு உண்டான அளவு புண்ணியம் செய்திருக்க வேண்டுமே. அதற்கு தான் இந்த தான தருமங்கள் செய்ய வேண்டிய அவசியம். மற்றவர்கள் இன்பமுற்று மனம் திருப்தி அடைந்தால் தான் தானம் நிறைவு பெறும். நன்மைகள் உண்டாகும்.
இது, எப்படி என்றால், ஜட்ஜ் (ஈசன்) தவறு செய்தவனை (மனிதன்) ஜெயிலுக்கு அனுப்புகிறார் (உலகம், பிறவி). அங்கே சிறையில் பல இன்னல்கள் (கர்மா, நோய், ஏழ்மை, மன வருத்தங்கள், ஏமாற்றம்). சிறையில் இருக்கும் வரை வசதிகளுடன் இருக்க வேண்டும். வசதியாக இருப்பதினால் சிறையிலேயே இருந்து கொள்ளலாம் என்றும் அர்த்தம் கொள்ள கூடாது 😀. சிறையில் நன்னடத்தை கொண்டு இருந்தால் (தானம், தர்மம்), வார்டன் அவர்கள் (எமன்), சிறை கமிஷனர் (அகத்தியர், சித்தர்கள்) ஆகியோர் ஜட்ஜ் (சிவன்) இடம் விண்ணப்பம் செய்து, விரைவில் விடுதலை, இருக்கும் வரை துன்பம் இல்லாமல் இருத்தல், கண்டங்களில் இருந்து தப்பித்தல், அகால மரணம் அடையாமல் இருத்தல், மேலும் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் தூக்கு தண்டனை கைதிகள் கூட தப்பிக்க வாய்ப்பு உண்டு.
இங்கே நான் ஆயுள் தணடனை கைதிகள் என்று குறிப்பிடுவது, வாழ்க்கை ஆரம்பம் முதல் இன்று வரை ஏதாவது ஒரு கஷ்டம் துயரம் அனுபவித்து கொண்டே இருப்பவர்கள். தூக்கு தண்டனை கைதிகள் என்று நாம் குறிப்பிடுவது அல்ப ஆயுசு காரர்கள், ஆயுள் குறைவு, பெரும் கண்டங்கள் கொண்ட வாழ்க்கை அவர்களுக்கு இருக்கும்.
வெளியே உள்ள உலகத்தில் - அதாவது சூட்சும நிலையில் - பல சக்திகள் உண்டு . உடலை இழந்த ஆத்மாக்களுக்கு அபரிமிதமான சக்திகள் உண்டு. நல்ல சக்திகள் கடவுள்களாகவும் கேட்ட சக்திகள் பேய்களாகவும் உலாவுவது உண்டு. தீய எண்ணம் கொண்டவர்கள் கோர்ட் இல் இட்டு செல்லப்பட்டு (எமலோகம்) அங்கே ஜட்ஜ் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு (சிவன்) மீண்டும் தகுந்த தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ஆகவே அந்த ஜெயில் கமிஷினருக்கு (சித்தர்கள்) நமது மொத்த பைல் தெரியும் , நமது பிறவிகள், செய்த வினைகள், எல்லாமே அவர்களுக்கு தெரியும் (ஜீவ நாடி). எனவே ஜெயிலுக்குள்ளேயே வந்து மீண்டும் குற்றங்கள் செய்வது , அடுத்தவரை கெடுப்பது, சுயநலம் கொள்வது ஏமாற்றுவது போன்றவை செய்தால் தண்டனைகள் நிச்சயம் கடுமையாக்கப்படும். ஆனால் தானம் தருமம் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டால் தண்டனைகள் குறைக்கப்படும் என்பது உண்மை. அதுவும் அந்த கைதி செய்யும் நல்ல செயல்கள் கமிஷனருக்கு தெரிய வேண்டும், அவரது பார்வைக்கு அனுப்பப்பட வேண்டும். இங்கே கமிஷனர் தான் அகத்தியர் , நற்செயல்கள் தான் தானம் தருமம் தவம் ஆசிரம பணி போன்றவை. நேரிடையாக நமது பீடத்துடன் தொடர்னு கொண்டு
பணிகள்செய்வதாலும் தான தரும பணிகளை நமது பீடம் மூலம் - தர்ம சிறகுகள் மூலம் மேற்கொள்வதாலும் நமது நற்செயல்கள் கமிஷனரின் நேரடி பார்வையில் வருகின்றன. அவரும் நமது காலம் முடிந்தவுடன் ஜட்ஜ் முன்னால் அழைத்து சென்று அந்த நற்செயல்களை எடுத்து காட்டி விடுதலை (முக்தி) கோருவார்.
No comments:
Post a Comment