இந்த மொத்த உலகமும் ஒரு வீடியோ கேம் போல துல்லியமாக இருக்கிறது. வீடியோ கேம்ல மொதல்ல ஆரம்பிக்கும் போது நம்ம கேரக்டர் மேல இருந்து உலகத்துக்குள்ள குதிக்கும். குதிச்சவோடனே அண்ட் பையன் பாப்பான் , நா எந்த கேம் ஐ சொல்றேன் னு உங்குளுக்கு புரிஞ்சிருக்கும் , சூப்பர் மாரியோ கேம் தான் அது, கேம் ஓட குறிக்கோள் வாசலை அடைவது, வாசலை அடைந்தால், அடுத்த லெவலுக்கு போகலாம் , அடுத்த லெவல் பல சவால்கள் இருக்கும். அந்த வாசலுக்கு போகறதுக்கு பல பல தடங்கல்கள் இருக்கும் , சில பேய்கள் எதிரில் வரும், அப்போ நாம அதுங்க மேல படாம எகிறி குதிச்சு தாண்டி போனும் , கொஞ்சம் மூளையை யோசிச்சு பிரயத்தனப்பட்டு ஒரு கரெக்ட்டான எடத்துல எகிறி குதிச்சா நமக்கு பாயிண்ட் கிடைக்கும், புது பவர் கிடைக்கும். நல்ல வெளையான்டா மட்டும் போதாது , ஆட்டம் முடிக்கறதுக்கு ஒரு டயம் கொடுத்து இருப்பான், அதுக்குள்ள நாம பாதி தூரம் தான் போயி இருந்தோம்னா ஒன்னும் பண்ண முடியாது. கேம் ஓவர் ன்னு வந்துடும், அதனால அங்க இங்க வேடிக்க பாத்துட்டு இருக்காம நம்ம போக வேண்டிய இடத்த நோக்கி ஓடிக்கிட்டே இருக்கணும் , போற வழியில கிடைக்குற சக்திகளை எடுத்துக்கிட்டு செல்வங்களை சேத்துக்கிட்டு நிக்காம ஓடி கிட்டே இருக்கணும், பயப்படாம பேய்களை காலால மிதிச்சு தள்ளி முள் செடிகளை தாண்டி குதிச்சு ஓடணும். கேம் தான் உலகம் player 1 தான் நீங்க, நமக்கு கொடுத்த ஆயுள் தான் கேம் வெளயாடி முடிக்க வேண்டிய டயம். சக்திகள் த்யானம் தவம் யோகம் மூலம் கிடைக்கும், கண்டா கேளிக்கைகளில் ஈடுபட்டால் டயம் முடிந்து போகும் , கதவை அடைய முடியாது. பயம் இல்லாம நம்மளோட கேட்ட குணங்கள எதிர்த்து நின்னு அதுங்கள உதைத்து தள்ளி, சக்திகளை பெற்று, புண்ணியங்களை சேர்த்து, டயம் முடியறதுக்குள்ள ஓடி கதவை அடைய வேண்டும். கேம் ல life இருக்கும், அதாவது உயிர் போயிட்டா திரும்ப அதே எடத்துல புது உயிரோட திருப்பியும் எழுந்து வரும், அதே போல வாழ்க்கையிலே நமக்கு வாழ்க்கை நெறய பாடம் கத்து கொடுக்கும், சில கண்டங்கள் இருக்கும், நாம் சில நேரம் தப்பிச்சு வருவோம், கேம் ல லைப் வேணும்னா நெறய காயின்ஸ் எடுக்கணும். இத்தன காயின்ஸ் எடுத்தா ஒரு லைப் அப்பிடீன்னு கணக்கு இருக்கு, அதே போல உலக வாழ்க்கையிலே , இந்த அளவுக்கு தான தருமம் செய்தா அவனுக்கு மரணத்துல இருந்து தப்பிக்க வைக்க ஒரு வாய்ப்பு கெடைக்கும். இந்த மாரியோ கேம் இக்கும் நம்ம வாழ்க்கைக்கும் பெரிய வித்யாசம் இல்ல ........ ஏதோ எனக்கு தெரிஞ்சதை கலோக்கியல் பாஷை ல சொன்னேன் ...... புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க
No comments:
Post a Comment