காணாமல் போன பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்!
திருச்சியில் இருந்து சுமார் 54 கி.மீ. தொலைவில் உள்ளது புதுக்கோட்டை.. இங்கே, திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீபிரகதாம்பாள் கோயில். ஆனால் அரைக்காசு அம்மன் என்றால் தான் அகிலத்து மக்களுக்கே தெரியும்.
சிற்ப நுட்பங்களுடன் கூடிய, குடைவரைக் கோயிலாக கட்டப்பட்டுள்ள அற்புதமான தலம். பசுவுக்கு அருளிய தலம். இங்கே, கங்கையை சுமந்தபடி உள்ள சிவனாரின் சிலை அற்புதம். தட்சிணாமூர்த்தியும் விசேஷம். வியாழக்கிழமைக ளில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பொருள் திருடு போய்விட்டாளோ, காணாமல் போய்விட்டாலோ அம்பாளுக்கு வேண்டிக் கொண்டால் போதும்... விரைவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்! இங்கு உள்ள சரஸ்வதிக்கு வெண்மை நிற மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்பது நம்பிக்கை.
இங்கு உள்ள விநாயகப் பெருமான் மிகப்பிரமாண்ட மாகக் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே, கங்காதீஸ்வரராக, கங்கையைச் சுமந்தபடி சிவனார் நின்றிருக்கும் சிலை கொள்ளை அழகு. சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலையில் ஸ்ரீவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அப்போது தரிசித்தால், சங்கடங்கள் யாவும் விலகும். நல்ல வேலை கிடைக்கும்.
#ஸ்ரீராமஜயம்