திருப்பூரில் உலக அதிசயம் நந்தியே கோபுரமாய் திருமுருகன்பூண்டி கோவிலின் பின்புறம் சற்று தூரத்தில் அமைந்துள்ள "மாதவ வனேஸ்வரர்" ஆலயத்தின் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்திற்குப் பதிலாக சுதையாலான பெரிய ஒரு நந்தியே அமர்ந்துள்ளது. இது எங்கும் இல்லாத அதிசய அமைப்பு
இங்கு அய்யன் - மாதவனேஸ்வரர், அம்மை - மங்களாம்பிகை.ஒரு காலத்தில் இங்குள்ள இறைவனை துருவாச முனிவர் வந்து வழிபட்டுள்ளார்.அதனால் அவர் பெயரில் துருவாச தீர்த்தக் கிணறு உள்ளது,
கேது பரிகார தலம்🙏🏻
தமிழகத்தில் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள நவகிரக தலங்களில் கேது - தலமான கீழ்பெரும்பள்ளம் அடுத்து இரண்டாவதான ஒரே தலம் இந்த மாதவனேஸ்வரன் கோவில்தான்.இந்தக் கோவிலின் வடமேற்கு மூலையில் "கேது பகவான்"தனிசன்னதியில் அமர்ந்துள்ளார்.எனவே கேது தோஷ பரிகாரத்திற்கு கீழ் பெரும்பள்ளம் செல்லாமல் இங்கேயே செய்யலாம்.
தகவல் உதவி - கவிஞர் சிவதாசன் அவர்கள்
#TirupurTalks
No comments:
Post a Comment