Monday, 29 January 2024

தும்புரு

 #மனித உடலும் #குதிரை முகமும் கொண்ட இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..??


இவர் பெயர் #தும்புரு. இவர் #காசியப முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர். #நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். 


நாரதரின் இசைக்கு #நாரதகானம் என்றும், தும்புருவின் இசைக்கு #தேவகானம் என்றும் பெயர். இவர் #கந்தர்வர்கள், #கின்னரர்கள், #கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள். 


ஒருமுறை நாரதர், தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும், மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க, பூலோகத்தில் #ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர், கோபத்துடன் இறைவனைத் தவிர #நரஸ்துதி கூடாது எனத் தெரியாதாவென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். 


#திருப்பதி திருமலையில் உள்ள #கோண_தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று #நாராயணனைத் துதித்து #பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க அதுவும் நிறை வேற்றப்பட்டது. 


அன்று முதல் கோண தீர்த்தம் #தும்புரு_தீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் #களாவதி (#மகதி)..!!


அமைவிடம்: #சக்கரபாணி கோவில், #கும்பகோணம்.



No comments:

Post a Comment