Source - https://www.facebook.com/reel/2456459874526676?s=yWDuG2&fs=e&mibextid=Nif5oz
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Monday, 31 July 2023
திருநெல்வேலயில் ஒரு ராமேஸ்வரம்
Thursday, 20 July 2023
அடுத்த கட்ட ஆலய பணிகள்,பொகளூர் அகஸ்தியர் பீடம்
தற்போது அன்னதான கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது அது நிறைவு பெறும் தருவாயில் வாசி யோக குடிலுக்கு கூரை அமைக்கப்படும் அது நிறைவு பெறும் தருவாயில் கோபுரம் அமைக்கும் பணி துவக்கப்படும் தற்போது அன்னதான கூடத்திற்கு 36 அடி நீளம் 16 அடி அகலம் உடைய அளவில் திட்டம் செய்யப்பட்டுள்ளது இந்த அன்னதான கூடமானது சிமெண்ட் கான்கிரீட் தரை அதன் சுற்று சுற்றுப்புறத்தில் ஆறு அடி உயரத்தில் சுவர் அதன் மேற்கூரை முக்கோண வடிவில் மேற்கூரை இருக்கும் இதற்கு தேவையான இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நம் வாழ்க்கை இது போல
Wednesday, 19 July 2023
பழமையான சிவன் கோவில்
Saturday, 8 July 2023
அஷ்ட திக் பாலகர்
#அஷ்டதிக்_பாலகர்கள்
🌹அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
🌹அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும்.
🌹கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.
🌹இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.
🌹அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது.
🌹அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.
👑இந்திரன்
🌹இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார்.
🌹இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
👑அக்னி தேவன்
🌹இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார்.
🌹இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.
👑யமன்
🌹இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார்.
🌹சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார்.
இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவாhர். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீக்கி நல்வழி கிடைக்கும்.
👑நிருதி
🌹இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
👑வருண பகவான்
🌹இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன.
🌹ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார்.
🌹இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.
👑வாயு பகவான்
🌹இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
🌹இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி கிடைக்கும்.
👑குபேரன்
🌹இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன.
🌹இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
👑ஈசானன்
🌹இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார்.
🌹இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும்.
நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.
Thursday, 6 July 2023
வாராஹி வழிமுறை, சித்தர்களின் குரல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது
Source
வாராஹியை யார் வழிபடலாம்?
வாராஹியை வழிபட்டால் அதனால் பிரச்சனைகள் உண்டாகுமா? வீட்டில் வைத்து வழிபடலாமா? திருமணமானவர்கள் (க்ரஹஸ்தர்கள்) இவளை வழிபடுவதால் குடும்பத்தில் பிளவுகள், நோய்கள், குடும்பம் அழிந்து போவது, இது போன்ற பிரச்சனைகள் உண்டாகுமா? இதனைப்பற்றி இன்று பேசலாம்
நான் இங்கு சூட்சுமமாக சில விஷயங்களை கூற ஆசைப்படுகிறேன். ஸ்ரீ வித்தை மற்றும் சாக்த சாஸ்திரங்கள் அனைத்திலும் க்ரஹஸ்தர்கள் என்ற இல்லறத்தில் இருப்பவர்களுக்கே முதல் உரிமை உண்டு. அதற்கடுத்த அதிகாரி மற்றவர்கள் ஆவார்கள். சக்தியோடு இருப்பவர்களே ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ வித்தையை பூஜிக்க முதல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். இங்கு நான் குறிப்பிடப்படும் சக்தி என்ன? என்பதை அவரவர் அவருடைய குருநாதரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். உண்மையான ஸ்ரீவித்யா உபாஸகர்கள் இதனை அறிந்து கொள்வர்.
ஸ்ரீ வித்தை உபாசனை செய்பவர்கள் ஸ்ரீசக்கரத்திலேயே மஹாவாராஹியை பூஜை செய்வார்கள்.
சில சம்பிரதாயங்களில் தனியாக மஹாவாராஹிக்குரிய பிரசித்தமான கிரி சக்ரத்தில் தனியாக பூஜிப்பதும் உண்டு. யந்திர பூஜை செய்ய தீக்ஷிதர்களுகே முழு அதிகாரம் உண்டு. இதை தவிர்த்து ஸ்ரீ வித்தை அல்லாதவர்களும், பல காலமாக வாராஹியை உபாஸித்து வருகிறார்கள். உபாஸகர்கள் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் அதாவது வாராஹியை ஸ்ரீ வித்தையை தவிர்த்து, சில தமிழ் சித்தர்கள் மரபை ஒட்டியும், சில ப்ரத்யேக தந்த்ர வழிகளிலும் வாராஹியை ஆராதனை செய்வது உண்டு. தமிழ் சித்தர்கள் மரபில் பூஜிக்கும் இவர்கள், பல தமிழ் யந்திர மந்திர ப்ரயோகங்களை வைத்து வாராஹியை பூஜித்து வருகிறார்கள். அதேபோல் சில தந்த்ர வழியில் உபாஸிப்பவரும், வாராஹியை தனிப்பட்ட தெய்வமாக உபாஸித்து வருகிறார்கள். இவர்களால் உபாஸிக்கப்படும் வழிமுறைகளும் யம, நியமங்களும் மாறுபடும். இது ஸ்ரீ வித்தை அனுஷ்டானங்களிலிருந்து மாறுபடும். இவர்கள் முக்காலமும் (காலை மாலை உச்சி) வாராஹியை உபாஸனை செய்வார்கள். இந்த மூன்று வழிகளில் வாராஹியை உபாஸனை செய்பவர்களுக்கு அவரவர் மார்க்கத்தை ஒட்டிய தீக்ஷை அவசியம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் சித்த மரபை ஒட்டியவர்களும், சில தந்த்ர விஷயங்களை பின்பற்றப்படும் வழியில், இரவில் மட்டும் பூஜை செய்யவேண்டும் என்ற நியமங்களும் கட்டுபாடும் கிடையாது. ஆனால் ஸ்ரீ வித்தை உபாஸனை மேற்கொள்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு உண்டு. இன்றும் பல சித்தர் வழியில் பின்பற்றப்படும் வாராகி உபாசனையில் முக்கால வழிபாடு உண்டு.
உதாரணமாக வாராஹியின் உபாசனையில் முக்கியமாக போற்றப்படுவது வாராஹி மாலை உச்சாடனம். இந்த மாலையில் வாராஹி வழிபாடு, சூட்சுமங்களும், பலபிரயோகங்களும் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு பாடலில் வாராஹியின் மூன்று கால உபாசனை வர்ணனை கூறப்பட்டுள்ளது
வாலை புவனை திரிபுரை இம்மூன்றும் இவ்வையகத்தில் காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலையும் ஆகிய வாராஹிதன் பாதத்தை அன்பில் உண்ணி மால் அயன் தேவன் முதலான பேர்களும் வாழ்த்துவரே!
இப்பாடலின் உபாசனை ஆனது வாராகியை வழிபடும் பொழுது மூன்று காலத்திலும் வாராஹியின் மூன்று வடிவங்களான வாலை வாராஹி, புவனை வாராஹி, திரிபுரை வாராஹி என்று மூன்று ரூபங்களாக மூன்று மந்திரங்களில் உபாஸிக்கப்படுகிறது. இதனுடைய சூட்சுமத்தை குரு மூலம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
மேலும் ஆதி வாராஹி கவசத்தில்,
படேத் த்ரிஸந்த்யம் ரக்ஷார்த்தம் கோர ஸத்ரு நிவ்ருத்திதம்
இந்த வாராஹி கவச்சத்தை மூன்று சந்தியில் படிப்பவர்களுக்கு, சத்ரு தொல்லையிலிருந்து நிவர்த்தி ஏற்படும்.
இது போன்றே பல க்ரந்தங்தளில், மந்திரம் ஸ்தோத்திரங்களை மூவேளையும் படிக்கவும் உபாஸிக்கவும் வழியுறுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கிராத வாராஹி ஸ்தோத்திரம், வஸ்ய வாராஹி ஸ்தோத்திரம் இவற்றில் முக்காலத்திலும் படிக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. இது அவரவர் மார்க்கத்தை அது அனுசரித்தது. மறுபடியும் கூறுகிறேன்! ஸ்ரீ வித்தை, சில தந்திரங்கள் வாராஹியை இரவில் வழிபட வேண்டும் என்று கூறியிருக்கிறது. பல சித்தர்களும் சில தந்திர மார்க்கத்திலும் பகல் உபாசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. அவரவர் அவர்கள் மார்க்கத்தையே அனுசரிக்க வேண்டும்.
"நாங்கள் எந்த சம்பிரதாயங்களையும் சார்ந்தவர்கள் இல்லை! தீட்சை வாங்கவில்லை! எங்களுக்கு வாராஹியை வழிபட ஆசை உண்டு! அவளின் அருளுக்கு பாத்திரமாக ஆசை உண்டு!" என்று நினைப்பவர்கள், வாராஹி உபாசனையை உலகறிய பறைசாற்றியவர் ,வாராஹியின் மந்திர உபாஸனையில் கைதேர்ந்தவர், உபாசனா குலபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ துர்க்கை சித்தர். அவர்கள் சொல்லிய ஸ்வயம்ஸித்த வாராஹி மந்திரத்தை உபாசனை செய்யலாம். மேலும் சித்தி அர்ச்சனை, ஸ்தோத்திரங்கள், அஸ்வாரூடா மாலை, வாலை கும்மி, வாராஹி மாலை, அஷ்டோத்திர நாமாவளி கொண்டு அர்ச்சிக்கலாம். யந்திரம், பிரயோக விஷயங்களில் ஈடுபடாமல் செய்ய வேண்டும். இம்மகான் ( துர்க்கை சித்தர்) வாராஹி உபாஸனையை பாமரரும், அதீக்ஷிதர்களும் பயமின்றி லகுவாக உபாஸித்து பலன் அடையும் வழிகளை வகுத்து கொடுத்தவர். பல கள்ளம் கபடமற்ற பாமரர்களுக்கும் வாராஹியை உபாஸனை செய்ய வழிவகை செய்தார். வாராஹியை பூஜை செய்பவர்கள் புண்ணியசாலிகள் என்று போற்றினார். அனைவரும் பக்தி ரீதியாக வாராஹியை வழிபடும் வண்ணம் பத்ர, புஷ்ப , நைவேத்திய விதானங்களையும், தமிழ் ஸ்தோத்திரங்கள் பற்றிய தகவல்களை வகுத்தருளினார். வாராஹி பற்றிய ரகசியங்களையும், பெருமைகளையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், இலகுவாக வெளியிட்டு அருளினார். வாராஹி மாலை என்ற மந்த்ர ஸ்துதியை உலகெங்கும் ப்ரசித்தி செய்த பெருமை இவரையே சேரும். வாராஹி மாலை, சுவடிகளில் இருந்து 1800 களின் கடைசியில் முதன்முதலில் புத்தகத்தில் அச்சிடப்பட்டது. அதன் பிறகு ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப்பிறகு, அதில் இருந்த பலவிதமான இலக்கணப் பிழைகளும் யாப்பு பிழைகளும், சுவடி துணைகொண்டும், அன்னை அருள் கொண்டும் திருத்தி, அனைத்தையும் தொகுப்பாக்கி, வாராஹி மாலைக்கு முழு உருவம் கொடுத்து, மறுபடியும் அச்சில் ஏற்றினார். அதுமட்டுமில்லாமல் வாராஹி மாலை பெருமைகளை அனைவரும் அறியும்படி செய்தும், படிக்கவும் வைத்தார். இதையெல்லாம் எதற்கு செய்தார்? சாமானியர் முதல் தீக்ஷிதர் வரை அனைவரும் அன்னையை அவரவர்களுக்குரிய சக்திக்கேற்றவாறு பூஜித்து பயன் அடையவே!அவரால்தான் இன்று நம்மால் வாராஹி மாலை படிக்க முடிகிறது, அது நமக்கு கிடைத்ததற்கு அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!
அவளுக்கு செய்யப்படும் நைவேத்தியங்கள் புஷ்பங்கள் பூஜை புனஸ்காரங்கள் அனைத்தையும் அவள் ஏற்றுக் கொள்வாள். சுத்தமான உள்ளமும், பக்தியும் அவளிடம் இருந்தாலே கஷ்டங்களை நீக்கி செல்வங்களைத் தந்து, இறுதியில் மோக்ஷ சாயுஜ்யத்தையும் தருவாள்.
சிலர் வாராஹியை மது மாமிசம் ஏற்கும் அவைதிக தேவதை, துர்தேவதை, க்ஷூத்ர தேவதை என்றும் கூறுகிறார்களே?
சில சம்பிரதாயங்களில் வாராஹிக்கு மது மாமிசம் வைத்து பூஜிக்கும் வழக்கம் உண்டு. மது மாமிசம் வைத்து பூஜிக்கும் அதிகாரம் பெற்ற சம்பிரதாயங்கள் மட்டும் அதை வைத்து பூஜிக்கலாம். மற்றவர்கள் வாராஹியை ஸாத்வீக நைவேத்தியங்களை ஸமர்ப்பிப்பதே சரியானது.
ஒரு சில தந்திரங்களின் கோட்பாடுகளினால் மது மாமிசத்தை ஸமர்பித்து உபாஸனை செய்கிறார்கள். இதை எல்லோராலும் செய்யும் விஷயம் கிடையாது. தந்த்ர சாஸ்திரத்தில் வாமாசார மார்க்கத்தை சேர்ந்தவருக்கே இந்த அதிகாரம் உண்டு. அதாவது முறையாக அந்த மார்க்த்தில் தீக்ஷை பெற்றவருக்கு மட்டுமே.
மது மாமிச போஷிதர்கள் இக்காலத்தில் தன்னுடைய நா சுவைக்காக பஸு பலியில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் தவறு.
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.
- வாராஹி மாலை
இதன் பொருள் வாராஹி தேனில் தோய்த்த வடை, பாயாசம், பொங்கல் முதலானவற்றையும் உண்ணும் வாராஹி, சில சம்பிரதாயத்தில் மது, மாமிசம் வைத்து பூஜிக்கும் அதிகாரமும், பரம்பரை வழியிலும் வந்த முறைகளையும் அவைதீகம், துராசாரம், க்ஷூத்ர தேவதை என்றெல்லாம் விமர்சிப்பது அவரவர்கள் அவர்களுக்கே தேடிக்கொள்ளும் பாவம், வினை வழிபயன் என்று இந்த சூத்திரம் கூறுகிறது.
இந்த பாடலை இடையில் சேர்த்தது என்று சொல்ல முடியாது. இலங்கையில் இருக்கும் பழம்பெரும் சுவடியிலும், நம் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மிகக் பழமையான சுவடியிலும் இந்த பாடல் உள்ளது.
மது மாமிசமும் வாராஹி ஏற்கின்ற காரணத்தினால் இவளை க்ஷூத்ர தெய்வம் என்றும் துர் தேவதை என்பதும், அவைதிக தேவதை என்றும் சொல்லுவது அபத்தம்.
வாராஹியை இல்லங்களில் பூஜிக்க தக்க தெய்வம் இல்லை என்கிறார்களே? அவளை வீட்டில் உபாஸிக்கலாமா?
ஆண்டியாக நிற்கும் பழனி ஆண்டவரின் புகைப்படத்தை வீட்டில் வைத்தால், அவனும் ஆண்டியாவான், கோமனமே மிஞ்சும். துர்க்கையை வீட்டில் வைத்தால் வீட்டில் சண்டை வரும், குடும்பத்தில் பிரிவு உண்டாகும். நடராஜரை வீட்டில் வைத்தால் வீடே கதி கலங்கி விடும், இப்படி பல்வேறு போலியை, உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று!
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அது எந்த தெய்வமாக இருந்தாலும் தன்னை அண்டி வந்தவனைக் காத்து அருள்செய்யும்.
சிலர் சொல்கிறார்கள் பகலில் வாராஹி நினைக்கவே கூடாது. அதனால் பாவம் விளையும் என்று கூறுகிறார்களே?
பலவிதமான தேவியின் நாமாவளிகள், ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரங்கள், கவசங்கள், இந்திராக்ஷி சிவ கவசம் முதலிய பல்வேறு இடங்களில் வாராஹி, வார்த்தாலீ, தண்டினி போன்ற நாமாவளிகள் வருகிறது. தேவி மஹாத்மியத்தில் பல இடங்களில் வாராஹி சார்ந்த ஸ்லோகங்களும், அவளுடைய பராக்கிரமங்களை போற்றி வருகிறது, அதனை பகல் சமயத்தில் பாராயணம் செய்யும் பொழுது, அம்பிகையின் ஸ்மரணம் செய்யாமல் இருக்க முடியுமோ?
"ந திவா ஸ்மரேத் வார்த்தாலீ" என்ற பரசுராம கல்ப சூத்திரம் வரியில் உள்ள "ஸ்மரணம்" (ஸ்மரேத்) என்ற உண்மையான பதத்தின் அர்த்தம் குருமுகமாக அறிந்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்! சாதாரணமாக சொல்லப்படும் ஸ்மரணம் கிடையாது. சூத்திரம் என்பது ஒரு சாவி போல, அது சூட்சுமத்தை மட்டுமே சொல்லும் மீதமுள்ளவற்றை தக்க குருவிடமே அறிந்து தெரிந்து கொள்ள முடியும். அதுபோல்தான் பரசுராம கல்ப சூத்திரம்.
பொதுவாக கௌலர்கள் இரவில் விசேஷமாக நவாவரணம் செய்வர், பகலிலும் நவாவரணம் செய்யும் உபாஸகர்கள் உண்டு. இப்படி பகலில் நவாவரணத்தில் ஈடுபடும் உபாசகர் பூஜையின் அங்கத்தில் வாராஹி பிரிக்க முடியாதவளாக இருக்கிறாள். பஞ்சபஞ்சிகா, அங்கோபாங்கப்ரத்யங்க தேவதைகளை பூஜிக்காமல் நவாவரணம் நிறைவு பெறுவதில்லை. இதை பீட அதிகாரம் பெற்ற ஸ்ரீ வித்யா உபாஸகர்கள் நன்கறிவார்கள். இந்த சமயத்தில் அவளை ஸ்மரித்து தானே ஆகவேண்டும்? நினைத்து தானே ஆக வேண்டும்? நான் சொன்ன இந்த விஷயம் தீட்சை பெற்றவர்களுக்கு புரியும்.
முழுமையாக தண்டினி க்ரமத்தை பூஜை செய்ய வேண்டுமென்றால் இரவில் தான் செய்ய வேண்டும். இந்த இடத்தில் நான் அதிகம் பேச முடியாது. உண்மையான ஸ்ரீவித்யா தீக்ஷிதர்களுக்கு புரியும். தெரியாதவர்கள் குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்
வாராஹியை எந்த வடிவில் உபாஸிக்கலாம்?
எல்லோருக்கும் தியான, ஆவாஹன, மந்திர, யந்திர, தந்திர வழிபாடுகளில் பரிச்சயம் இல்லாதவர்கள் , 90 சதவீத மக்கள் பக்தி அடிப்படையில் தூப, தீப ,நைவேத்திய, உபசாரம் இவற்றினால் பூஜை செய்கிறார்கள். பக்தியோடு செய்யப்படுகின்ற ஒவ்வொரு பூஜைக்கும் தெய்வம் கண்டிப்பாக செவிசாய்க்கும்!
கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் அதாவது த்யான ஆவாஹனாதி முறைகளை அறிந்தவர்கள் தேவியை சித்திரத்திலோ ப்ரதிமயிலோ தீபத்திலோ நிறை குடத்திலோ பூஜிக்கலாம்.
இதனால் கூறப்படுவது ஒன்றே ஒன்றுதான். கும்பிடும் தேவதை எதுவாகினும் நேர்மை, பக்தி, சிரத்தை இப்படி இருந்தால் அவனை தெய்வமே வழிநடத்தும்!
"கடவுளே எனக்கு நல்ல குரு கிடைக்கவில்லையே" என்று தெய்வத்திடம் முறையிட்டு பூஜைகளை செவ்வனே செய்து வந்தால், அதே தெய்வம் அவனுக்கு நல்ல குருவை அனுப்பி அவனுக்கு வழி காட்டும்.
வாராஹி ஒரு கருணை தெய்வம். அவள் பேய் இல்லை! பிசாசும் இல்லை! அவளை தஞ்சம் அடைந்தவர்கள் நன்றாகவே இருப்பார்கள்.
வாராஹியை கும்பிட்டு என் குடும்பம் நாசமாக போய்விட்டது, கவலை வந்துவிட்டது, தீங்கு நடந்துவிட்டது, அடித்துவிட்டால், இடித்துவிட்டாள் என்று பேசுவது! அப்பப்பா அபத்தம்.
வாராஹீ யாருடைய குடும்பத்தையும் அழிக்கவோ, எரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை! மனிதர்கள் தங்களுடைய துர்கர்மத்தினால் பாவங்களினால் அழிவைத் தேடிக்கொள்கிறார்கள். அவளுக்கு வேறு வேலை இல்லையா? என்ன?
தெய்வங்கள் ஒன்றும் சீரியல்களின் வரும் வில்லிகள் கிடையாது. ப்ளான் போட்டு குடும்பத்தையே நாசம் செய்வது, குலத்தை அழிப்பது போன்ற இழிசெயல்களை செய்வதற்கு!
உன் வினை உன்னைச் சு(ட்)டும்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
வாராஹியை கும்பிட்டவர்கள் வாழையடி வாழையாக செல்வங்களைப் பெற்று, வளங்களை பெற்று நலன்களைப் பெற்று தேவதைகளின் அருள் பெற்று இறுதியில் மோட்ச சாம்ராஜ்யம் அடைகின்றார்கள்.
ஹே தேவி உலகத்திலேயே மிகவும் கொடிய பொறுக்கமுடியாத பாவங்களை, பாதகத்தை நான் செய்தவனாக இருந்திருந்தாலும், உன்னுடைய கருணை கடாக்ஷமும், தாய்மை என்ற உணர்வும், என்னை தூயவன் ஆக்கி உன்னிடம் வந்து என்னை சேர்ந்து விடுகிறதே அம்மா!
வார்த்தாலீ அர்ப்பணம்.
Art credits: Mathi the sculptor.p
Tuesday, 4 July 2023
வழக்கமான பவுர்ணமி விழா நிகழ்ச்சி நிரல்
வழக்கமான பவுர்ணமி விழா நிகழ்ச்சி நிரல்
கலச பிரதிட்டை
குத்து விளக்கேற்றுதல்
ஹோம குண்ட விளக்கேற்றுதல்
சங்கு நாதம் முழக்கம்
தீப ஆராதனை
கணபதி ஹோமம்
சிவ ஹோமம் ஆகுதி அளித்தல்
நந்தியெம்பெருமானுக்கு ஆகுதி அளித்தல்
சிவபெருமானை போற்றி அர்ச்சனை , ஆகுதி
முருகப்பெருமானை போற்றி அழைத்தல்
திருநாவுக்கரசர் திருக்கயிலாய போற்றி திருத்தாண்டகம் வாசித்து ஆகுதியிடல்
பைரவர் சஷ்டி கவசம் ஓதி பைரவருக்கு ஆகுதியளித்தல்
பைரவரை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல்
அகத்தியரை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல்
சித்தர்கள் திருவடியை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல்
சனிபகவான் கவசம் ஓதி ஆகுதியளித்தல்
அகத்தியரை போற்றி அர்ச்சனை செய்தல்
அகத்தியரை யாக அக்கினியில் அழைத்து ஆகுதியளித்தல்
பூரண ஆகுதி அளித்தல்
ஹோம குண்டத்தை வணங்குதல்
கோமாதா உணவளித்தல்
மச்சிகளுக்கு உணவளித்தல்
பக்தர்களுக்கு அன்னதானம் அருளுதல்
அகத்தியருக்கு மற்றும் , அணைத்து உடனுறை இறை வடிவங்களுக்கும் 16 வகை அபிஷேகமளித்தல்
மஞ்சள் , திருமஞ்சள் , வில்வம் நெல்லி துளசி அருகம்பில் திருநீறு அரிசிமாவு தேன் நெய் பால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் பழங்கள் பஞ்சாமிர்தம் சந்தனாதி தைலம் வாசனை திரவியம் போன்றவை
சாயீ நாத சித்தர் அபிஷேக அலங்கார பூஜை பாடல் ஆரத்தி
பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமருளுதல்
சந்தன காப்பு அலங்காரம்
மலர் அலங்காரம்
அர்ச்சனை , தீபாராதனை , ஆரத்தி
சங்கு முழக்கம்
அகத்தியர் பாடல் ஆரத்தி
மலர் சொரிதல் , நமஸ்கார சமர்ப்பணம்
சிவன் குடில் அர்ச்சனை தீப விசேட மந்திர தந்திர ஆராதனை
உச்சிஷ்ட மஹாகணபதி விசேட மந்திர தந்திர ஆராதனை
மஹாலட்சுமி விசேட மந்திர தந்திர ஆராதனை
அகத்தியர் போற்றி அர்ச்சனை தீபாராதனை
சாம்பிராணி சேவை
மலர்சொரிந்து வரம் கேட்டு வணங்குதல்
அகத்தியர் நெய்வேத்திய பிரசாதம் அருளுதல்
அகத்தியர் ஹோம ரக்ஷை மை திலகமிடல்
அகத்தியர் அட்சதை பிரசாதம் சிரசில் ஏற்றுதல்
அகத்தியர் அபிஷேக பிரசாதங்கள் விநியோகம்
அகத்தியரை வணங்கி மந்திர எழுமிச்சை பிரசாதம் வழங்குதல்
விழா நிறைவு
03.07.2023, பௌர்ணம் ஹோம காட்சிகள்
கணபதி ஹோமம்
சிவ ஆகுதி ஹோமம்
நந்தியெம்பெருமான் ஆகுதி ஹோமம்
சிவபெருமான் 108 போற்றி அர்ச்சனை
ஓம் முருக பெருமான் போற்றி அழைப்பு
திருநாவுவக்கரசர் திருக்கயிலாய போற்றி திருத்தாண்டகம்
பைரவ சஷ்டி கவசம் ஹோமம்
பைரவரை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல்
அகத்தியர் போற்றி எழுந்தருளுவித்தல்
சித்தர்கள் திருவடி போற்றி அழைத்து எழுந்தருளவித்தல்
சனி பகவான் கவசம் ஹோமம், சனி தோஷம் நீக்கம்