Saturday, 10 September 2022

சூரியன்

 இன்று ஞாயிற்றுக்கிழமை 


சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு.


வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.


 சூரியவழிபாடு அவசியம். 

சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன்.


அபயம் அல்லது எதற்கும் அஞ்சாத தன்மையை அளிப்பவர் நாராயணன் என்பது சித்தாந்தம். உயிரினங் களைஅச்சத்திலிருந்து காப்பவரே ஆதித்யன் என்ற சூரிய பகவான். இருள் சூழ்ந்திருக்கும்போது எல்லா உயிர்கள் அச்சத்தினால் மருண்டிருக்கின்றன. சூரியன் உதித்தவுடன் ஒளியினால் அச்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனாலயே சூரிய நாராயணன் என்று பெயர் விளங்குகிறது.


ஆதிசங்கரர் ஆறுவித முக்கிய தெய்வங்களாகிய கணபதி, சுப்ரமணியர், அம்பிகை, சிவன், விஷ்ணு, சூரியன் என்று உபாசனா மார்க்கத்தை நாம் எல்லாரும் உய்யும் பொருட்டு உபதேசித்தருளினார். நமக்கு எந்த தெய்வத்திடம் ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த தெய்வத்தையே துதிக்கலாம். முறையாகத் துதித்தால் எந்த தெய்வமும் அருள்புரியும் என்று நிலைநாட்டினார். 


சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல் வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப் படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார்.


சௌரம் என்ற சூரிய வழிபாட்டில் காயத்ரி ஜெபம் முக்கியமானது. வேதங்களில் சூரிய வணக்கமும் அடங்கியுள்ளது. உடல் ஆரோக் கியத்திற்காகவும், கண் பார்வை சிறப்பாக இருக்கவும் சூரியனை வழிபடுகிறார்கள். ஞானம் வேண்டியும் வழிபடலாம். ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத் தைக் கற்றார் என்பதை அறிய முடிகிறது. திரேதாயுகத்தில் சூரியனைதான் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.


சூரியனுக்கென்று சிறப்புப் பெற்ற ஆலயங்களும் இருக்கின்றன. கும்பகோணத் திற்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் விசேஷமானது.


மாதங்கள்தோறும் சூரியன்...


ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார்.


வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார். ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார். ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார். ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார். ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார். கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார். மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள்ளார். தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார், மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.


ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்

சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்"


துதிகளில் எல்லாம் சிறந்த தான ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திரத்தை நாளும் ஓதி பாவங்களையும், கவலைகளை யும், குழப்பங்களையும் நீக்கிக் கொள்வோம். வாழ்நாளை நீட்டிக்கும், வளங்களை அளிக்கும் சூரிய பகவானை எப்போதும் போற்றுவோம்.


நன்றி

இனியகாலைவணக்கம்

வாழ்கவளமுடன்நலமுடன்

No comments:

Post a Comment