Wednesday, 16 March 2022

திருவாசகம் - உரை திருவாசகம் - 01 - சிவபுராணம் திருவாசகம் - 02 - கீர்த்தித் திருவகவல் திருவாசகம் - 03 - திருவண்டப் பகுதி


திருவாசகம் - உரை

 https://siththargalaatchi.blogspot.com/2022/01/36-01.html


https://siththargalaatchi.blogspot.com/2022/01/41-02.html



https://siththargalaatchi.blogspot.com/2022/02/48-03.html




Thursday, January 6, 2022

சித்தர்கள் ஆட்சி - 36 : திருவாசகம் - 01 - சிவபுராணம்






திருச்சிற்றம்பலம்

ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு"
சிறப்புப் பாயிரம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
01 திருவாசகம்-சிவபுராணம்பதவுரைபொருளுரை
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கநாதன் = ஒலிக்கு மூலமாக விளங்கும் தலைவன்

தாள் = சிவபெருமான் திருவடிகள்
நமச்சிவாய என்னும் திரு ஐந்து எழுத்து என்றும் வாழ்க வாழ்க வாழ்க.
எம்பெருமான் சிவபெருமான் திருவடிகள் (தாள் ) வாழ்க வாழ்க வாழ்க.

இங்கு வாஅழ்க என்ற வாசகத்தில் அ கரம் இருப்பது முன்தர முந்தும் என்பதற்கு இணங்க இங்கு அளபெடை என்பது.சாதாரண வாழ்க என்பதில் இருந்து உயர்த்தி சொல்வது வா + அ = 2 1/2 மாத்திரை அளவு.

நமச்சிவாய என்ற அந்த ஒலியின் (நாதன் )தலைவன் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்கநீங்காதான் = நீங்காத என் இறைவன்கண்னை விழி மூடி திறக்கும் நுண்ணிய கால அளவினும் என் மனதில் இருந்து நீங்காத என் இறைவன் திருவடி வாழ்க வாழ்க வாழ்க.
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
கோகழி - திருவாவடுதுறை (கோமுத்தீஸ்வரர் (மூலவர்), கோகழிநாதர்(உற்சவர்))
கோ - பசு , கழி - கழிதல் பசுத்துவம் கலைய ஆட்கொண்ட


குருமணி = மேம்பட்ட ஆசிரியன், நிறமுடன் ஒளிபொருந்திய மணி,
குற்றமற்ற மணி ( திருவாவடுதுறை மாசிலாமணீசுவரர்)
திருவாவடுதுறை (கோகழிநாதர்) என்னும் திருத்தலத்தினை அரசாட்சி செய்துவரும் மாசிலாமணீசுவரர் இறைவன் திருவடிகள் வாழ்க வாழ்க வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஆகமம் = இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் , ஞானத்தின் நுண் பொருள்
அண்ணிப்பான் = அணுகி வருவோன் , இனிமை செய்வோன்
இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூலாகி ஞானத்தின் நுண் பொருள் ஆகி நின்று உயிர்களை இனிமையான அன்பால் ஆட்கொண்டு அருளும் இறைவன் திருவடிகள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5ஏகன் = ஒன்றாக உள்ளவன்

அனேகன் = பலவாக உள்ளவன்
ஒருவர் ஆனவரும் ஒன்றுஅல்லாத பல உருவனும் ஆகிய எங்கும் நிறைந்த இறைவன் திருவடிகள் வாழ்க வாழ்க வாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்கவேகம் = ஆணவ மலம் , பிறவி வெப்பம் , மனஓட்டம் , பிறவியின் கொடுமை

கெடுத்து = அழித்து

எனது இப்பிறவியின் கொடுமையை , மனஓட்டத்தை அழித்து என்னை ஆட்கொண்ட என் இறைவன் திருவடிகள் வெல்க வெல்க வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்கபிஞ்ஞகன் = கங்கையை தரித்த சடை முடியாகிய தலைக்கோலம் அணிந்தவன்.

பெய் = பொழி ( மழை பெய்கிறது)

கழல் = வீரக்கழல்; சிலம்பு; கால்மோதிரம்; செருப்பு; பாதம்;

பெய்கழல் = இறைவனின் திருவருள் பெய்யப்பெற்ற வீரக்கழல் ( கால் சிலம்பு ) உடைய திருவடி
இவ்வுலக மாய பிறப்பு மறுமுறை எடுக்காமல் நீக்கும் ( அறுக்கும்) கங்கையை தரித்த சடை முடியாகிய தலைக்கோலம் அணிந்த இறைவனின் திருவருள் பெய்யப்பெற்ற வீரக்கழல் ( கால் சிலம்பு ) உடைய திருவடிகள் வெல்க வெல்க வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்கபுறத்தார் = அன்பிற்கும் புறம்பாக உள்ளவர்கள் ( இறைவன் இடத்தில் அன்பு கொள்ளாமல் புறப்பொருள் மீது ஆசை கொண்டவர்கள்)

சேயோன் = எட்டாமல் இருப்பவன்

பூங்கழல்கள் = பொலிவு பெற்ற திருவடிகள்
இறைவன் இடத்தில் அன்பு கொள்ளாமல் புறப்பொருள் மீது ஆசை கொண்டவர்களுக்கு (அன்பிற்கும் புறம்பாக உள்ளவர்களுக்கு) எட்டாமல் இருப்பவனது பொலிவு பெற்ற திருவடிகள் வெல்க வெல்க வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்ககரம் குவிவார் = இரு கரம் கூப்பி இறைவனை உள்ளன்போடு வணங்குபவர்கள்

உள்மகிழுங் = உள்ளம் மகிழும்

கோன் = அரசன்
இரு கரம் கூப்பி இறைவனை உள்ளன்போடு உள்ளம் மகிழ்ந்து வாங்குபவர்களின் அரசன் திருவடிகள் வெல்க வெல்க வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10சிரம் = தலை
குவித்தல் = ஒடுங்குதல்
சிரங்குவிவார் = இறைவன் திருவடிகளில் சிரசு / தலை வைத்து வணங்குதல்

ஓங்குவிக்கும்= உயர்வடைய செய்தல்
சீர் = மிக்க புகழ் , அழகு , செல்வம் முதலிய பொருட்கள்
சீரோன் = மிக்க புகழ் , அழகு , செல்வம் முதலிய பொருட்கள் உடையவன்
இறைவன் திருவடிகளில் சிரசு / தலை வைத்து வணங்கும் சிவன் அடியவர்களை உயர்வடைய செய்யும் மிக்க புகழ் , அழகு , செல்வம் முதலிய பொருட்கள் உடையவன் இறைவன் திருவடிகள் வெல்க வெல்க வெல்க
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றிஈசன் = எப்பொருளையும் உடையவன். அனைத்து ஐஸ்வரியங்களும் உடையவன்இறைவன் அனைத்து ஐஸ்வரியங்களும் உடையவன் திருவடிக்கு வணக்கம். எனது தந்தை இறைவன் திருவடிக்கு வணக்கம்.
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றிதேசன் = ஒளிக்கு மூலமாக உள்ளவன்

சேவடி = சிவந்த திருவடி
ஒளிக்கு மூலமாக உள்ள இறைவன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி.
என் இறைவன் சிவன் சிவந்த திருவடிகள் போற்றி போற்றி போற்றி.
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிநேயம் = அன்பு, பக்தி

நிமலன் = அழுக்கற்றவன்
அடியவர்கள் அன்பில் நிலைத்து நின்ற அப்பழுக்கற்ற இறைவன் திருவடி போற்றி போற்றி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றிமாயப் பிறப்பு = வஞ்சகமான இந்த பிறவிவஞ்சகமான இந்த பிறவியை அறுக்கும் என் அரசன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

( நிலையற்ற பொருட்களை நிலையானதாகவும் , நிலையானவற்றை நிலையற்றவனாவாகவும் ஆணவத்தை உடைய இந்த மக்களின் பிறவியை வேரோடு அறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம்)
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15சீரார் பெருந்துறை = திருப்பெரும்துறை (ஆவுடையார்கோயில்) திருத்தலம்திருப்பெரும்துறையில் எழுந்து அருளிய நமது இறைவன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றிஆர்தல் = நுகர்தல்
ஆராத = நுகர்ந்து அறியாத
நுகர்ந்து அருந்த இன்பம் - சிற்றின்பம்
நுகர்ந்து அறியாத இன்பம் - பேரின்பம்

ஆராத இன்பம் = நுகர்ந்து அறியாத இன்பம் - பேரின்பம்
இதுவரை என்னால் நுகர்ந்து அறியாத இன்பம் ஆகிய பேரின்பம் அளிக்கும் மலைபோன்ற என் இறைவன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்என் இறைவன் சிவபெருமான் எனது சிந்தனையின் நிலைத்து நின்ற காரணத்தினால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்தாள் = பாதம்என் இறைவன் அவன் திருவருளாலே அவன் திருவடியை நான் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைஎனது சிந்தனை மகிழ சிவ புராணம் என்ற இந்த பாடலை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20முந்தை வினை = முற்பிறவியில் செய்த வினைகள்

ஓய = ஒழிய

உரைப்பன் = ஓதுவேன் / உரைப்பேன்

யான் = நான்
முற்பிறவியில் செய்த வினைகள் முழுவதும் ஒழிய ஓதுவேன் நான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்திகண்ணுதலான் = நெற்றிக்கண் உடைய சிவபெருமான்
நெற்றிக்கண் உடைய சிவபெருமான் என்னிடத்தில் வந்து தனது கருணையை காட்ட
எண்ணுதற்க்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சிஎண்ணுதற்க்கு எட்டா = சொல்வதற்கும் , காண்பதற்கும் , வணங்குவதற்கும் எட்டாத

எழில் = அழகு

ஆர் = பொருந்திய

கழல் = திருவடி

இறைஞ்சி = தாழ்ந்து
சொல்வதற்கும் , காண்பதற்கும் , வணங்குவதற்கும், நினைப்பதற்கும் எட்டாத அழகு பொருந்திய திருவடியை பணிந்து வணங்கி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்விண்ணிறைந்து = விண்ணுலகம் முழுவதும்

மண்ணிறைந்து = மண்ணுலகம் முழுவதும்

மிக்காய் = நிறைந்து

விளங்கொளியாய் = ஒளி வடிவாக விளங்குகின்ற இறைவன்


விண்ணுலகம் முழுவதும் மண்ணுலகம் முழுவதும் ஒளி வடிவாக நிறைந்து விளங்குகின்ற இறைவன்
எண் இறந்து எல்லை இல்லாதானே நின் பெரும் சீர்எண் இறந்து = கணித எண்கள் தொகையை கடந்துகணித எண்கள் தொகையை கடந்து எல்லை இல்லாமல் விரிந்த இறைவா உனது பெரும் மகிமை மிகுந்த புகழினை
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் 25பொல்லா வினையேன் = தீய வினைகளை உடைய நான்தீய வினைகளை உடைய நான் உனது அருள் இல்லாமல் உன்னை புகழும் முறையை அறியாதவன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், - பூத கணங்களாகியும்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆகி தேவராய்ச்வலிய அசுரராகியும், முனிவராகியும், தேவராகியும்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30செல்லாஅ = இயங்காமல் நிற்கும் பொருள்

சங்கமம் = இயங்கும் / அசைகின்ற பொருள்

இயங்காமல் நிற்கும் பொருள் மற்றும் இயங்கும் / அசைகின்ற பொருள் என்ற இரு\வகை பொருட்களின் உள்ளே உள்ள இந்த உலகத்தில்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்இளைத்தேன் = இறப்பது
எல்லா பிறவிகளிலும் அடியேன் பிறந்து இறந்தேன் எனது சிவ பெருமானே
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்வீடு = மோட்சம் என்னும் சிவபுரம்
உண்மையாகவே , உனது பொன் திரு அடிகள் கட்சி அடியேன் காணப்பெற்று இன்று மோட்சம் என்னும் வீடாகிய சிவபுரம் அடைந்தேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றஉய்ய = உய்யச் செய்வது என்பது அரிய பெரிய அடைவு (சாதனை) ஆகும்.

ஓங்காரமாய் = ஓம் எனும் பிரணவ ஒலியாகி
அடியேன் உயர்வடைய , பெரிய சாதனை அடையும் வகையில் ஓம் எனும் பிரணவ ஒலியாகி என் உள்ளத்துள் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்மெய்யா = உண்மையானவனே

விமலா = தூயவனே

விடைப்பாகா = ரிஷப காளையை வாகனமாக உடையவனே
உண்மையானவனே, தூயவனே , ரிஷப காளையை வாகனமாக உடையவனே , வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35ஐயனே என்று உன்னை துதிக்க வேதங்களாலேயே உயர்ந்து அளவிட முடியாத ஆழமாகவும், வேதங்கள் மூலம் அளவிட இயலாத அகலமாகவும், வேதங்களுக்கு அப்பாற்பட்டு நுண்ணிய சிறிய பொருளாகவும் இருப்பவனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலாவெய்யாய் = வெப்பம் உடையவனே ( சூரியன் போன்ற வெப்பத்தையும் )

தணியாய் = குளுமை உடையவனே ( சந்திரன் போன்ற குளிர்ச்சியையும் )

இயமானனாம் = வேள்வியின் தலைவன் , மனம் முதலிய கருவிகள் கொண்டு யாகம் செய்ப்பிப்பவன்

விமலா = தூயவன்
வெப்பம் உடையவனே ( சூரியன் போன்ற வெப்பத்தையும் ), குளுமை உடையவனே ( சந்திரன் போன்ற குளிர்ச்சியையும் ) ,வேள்வியின் தலைவன் , மனம் முதலிய கருவிகள் கொண்டு யாகம் செய்பவனே
, தூயவனே
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளிபொய் ஆனா மாயை எல்லாம் என்னிடம் இருந்து விலகிப்போக என் அருகில் வந்து அருள் செய்து
மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரேஉண்மை அறிவு ஆகி விளங்குகின்ற உண்மையான ஒளி விளக்கே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஎஞ்ஞானம் இல்லாதேன் = எந்த விதமான அறிவும் ,ஞானமும் இல்லாத என்னக்குஎந்த விதமான அறிவும் ,ஞானமும் இல்லாத என்னக்கு இன்பத்தை அருளும் என் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40அஞ்ஞானம் = அறியாமை

அகல்விக்கும் = விலக்கும் / நீக்கும்
அறியாமை என்ற அஞ்ஞானத்தை நீக்கும் நல்ல அறிவான என் சிவபெருமானே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்ஆக்கம் = தோற்றம்

அளவு = நிலைத்த நிகழ்காலம்

இறுதி = முடிவு

இல்லாய் = இல்லாதவனே

தோன்றுதல் , நிலைத்தல், முடிவுமாகுதல் என்ற மூன்று நிலைகளும் இல்லாதவனே , அனைத்து உலகங்களையும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்ஆக்குவாய் = படைப்பாய்

காப்பாய் = காத்து அருள்வாய்

அழிப்பாய் = அழிப்பாய்

அருள்தருவாய் = பிறவி எடுக்காமல் இருக்க அருள் தருவாய்


நீயே படைப்பாய் , நீயே காத்து அருள்வாய் , நீயே அழிப்பாய், நீயே பிறவி எடுக்காமல் இருக்க அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்போக்குவாய் = பலவகை பிறவிகளில் செலுத்தி போகங்களில் மூழ்கவைத்து

நின்தொழும்பின் = உனது திருவடி வணங்கும் சேவை தொண்டு
பலவகை பிறவிகளில் செலுத்தி என்னை போகங்களில் மூழ்கவைத்து பின்னர் அந்த போகங்களில் இருந்து என்னை உனது திருவடி வணங்கும் சேவை தொண்டுகளில் என்னை உள் புக செய்வாய்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானேநாற்றத்தின் நேரியாய் = பூவின் மனம்போல நுண்ணியனே

சேயாய் = அன்பர் அல்லாதவருக்கு தூரத்தில் உள்ளவனே

நணியானே =அன்பாக இருபவர்க்கு அருகில் உள்ளவனே
பூவின் மனம்போல நுண்ணியனே , உன்னிடம் அன்பு இல்லாதவருக்கு
வெகு தூரத்தில் உள்ளவனே , அன்பாக இருபவர்க்கு மிக அருகில் உள்ளவனே
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே 45மாற்றம் = சொல்

கழிய = கடந்து

மறையோனே = மறை பொருளாகிய இறைவனே

சொல் , மனம் இவைகள் எல்லாம் கடந்து நின்ற மறை பொருளாகிய வேதப் பொருளாய் உள்ள இறைவனே
கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்கறந்தபால் = பசுவில் கறந்த புதிய பால்

கன்னல் = கரும்பு சர்க்கரை ( இனிப்பு)
அடியவர்களின் சிந்தனையில் பசுவில் கறந்த புதிய பாலில் சர்க்கரையும் , நெய்யும் கலந்தது போல
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்றுதேன் ஊறி நின்று = தேன் போல ஊறி நிலைபெற்றுசிறந்த சிவன் அடியவர்களின் சிந்தனை உள்ளே தேன் போல ஊறி நிலைபெற்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்எடுத்த பிறவியை அடியோடு நீக்கும் எங்கள் பெருமானே
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்தநிறங்கள் ஓர் ஐந்து உடையாய் = பஞ்ச பூதங்களின் நிறம் ஐந்தும் (பொன்மை, வெண்மை ,செம்மை ,கருமை ,கருமை புகைமை) உடையவனே

விண்ணோர்கள் ஏத்த = வின்னோர்கள் துதிக்க
பஞ்ச பூதங்களின் நிறம் ஐந்தும் (பொன்மை, வெண்மை ,செம்மை ,கருமை ,கருமை புகைமை) உடையவனே, விண்ணோர்கள் உன்னை துதிக்க
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50வல்வினையேன் = வலிய வினை உடைய என்னை(தேவர்கள் உன்னை துதிக்கும் பொழுது அவர்களுக்கு காட்சி தராமல் நீ உன்னையே ) மறைந்திருந்தாய் எம்பெருமான் , வலிய வினை உடைய என்னை
மறைந்திட மூடிய மாய இருளைமாய = அறியாமை

இருளை = ஆணவம்
கடுமையான முன் ஜென்ம வினைகளில் சிக்கியிருக்கும் எனது அறியாமை, ஆணவம் ஆகிய மாய இருளை மூடி மறைத்து
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்அறம் = புண்ணியம்

பாவம் = பாவங்கள்

அருங்கயிறு = விதி

புண்ணியம் , பாவங்கள் என்னும் விதி என்ற அரும் கயிற்றால் என்னை நன்றா கட்டி
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடிபுறந்தோல்போர்த்தி = வெளியே தோலை போர்வையாக போர்த்தி
புழு அழுக்குகளும் நிறைந்த எனது இந்த உடலின் வெளியே தோலை போர்வையாக போர்த்தி
மலம் சோறும் ஒன்பது வாயிற் குடிலைகுடில் = உடல்

ஒன்பது வாயில் = உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்கள் என்ற வாசல்

மலம் சோறும் நிறைந்த இந்த உடம்பில் ஒன்பது துவாரங்கள் என்ற வாசலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 55மலங்க = குலையம்படி

புலன் ஐந்தும் = ஐந்து புலன்கள்


குலையம்படி செய்து , புலன்கள் ஐந்தும் எனக்கு வஞ்சனையை செய்கின்றது
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்விலங்கு மனத்தால் = இறைவனை விட்டு விலகி செல்லும் மனம் ( இடையே நின்று தடுக்கும் மனதை உடையமையால் )

விமலா = தூய்மையானவனே


இறைவனை துதிக்கும் வழிபாடுகளில் இருந்து அடிக்கடி விட்டு விலகி செல்லும் எனது மனதால் , தூய்மையானவனே என் இறைவனே உன்
கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்கலந்த அன்பு ஆகி = உள்ளத்துள் கலந்த அன்பு உடையவன் ஆகி

கசிந்து உள் உருகும் = நெகிழ்ந்து மனம் உருகி
உள்ளத்துள் கலந்த அன்பு உடையவன் ஆகி ,நெகிழ்ந்து மனம் உருகி
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கிநலந்தான் இலாத = உன்னிடத்தில் அன்பாக உள் உருகும் தன்மை இல்லாத

சிறியேற்கு = இச்சிறியவனுக்கு

நல்கி = அனைத்தும் கொடுத்து அருளி
உன்னிடத்தில் அன்பாக உள் உருகும் தன்மை இல்லாத இச்சிறியவனுக்கு அனைத்தும் கொடுத்து அருளி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டிநிலந்தன்மேல் வந்தருளி = இவ்நிலவுலகினிலே வந்து எனக்கு அருள் செய்து

நீள்கழல்கள் காட்டி = உனது நீண்ட கழல் அணிந்த திருவடிகள் காட்டி

இவ்நிலவுலகினிலே வந்து எனக்கு அருள் செய்து , உனது நீண்ட கழல் அணிந்த திருவடிகள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60நாயிற் கடையாய்க் கிடந்த = நாயை விட இழிந்தவனாக கீழ் நிலையில் கிடந்த

அடியேற்குத் = எனக்கு

நாயை விட இழிந்தவனாக கீழ் நிலையில் கிடந்த எனக்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனேதாயிற் சிறந்த = தாயினும் சிறந்த

தயாவான =அருள் வடிவான

தத்துவனே = உண்மையானவனே

தாயினும் சிறந்த அருள் வடிவான உண்மையானவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேமாசற்ற சோதி = குறைபாடுஇல்லாத தூய்மையான

மலர்ந்த மலர்ச்சுடரே = ஒளி விரையப்பெற்ற பூ போன்ற ஒளி உருவம் கொண்டவனே
குறைபாடுஇல்லாத தூய்மையான ஒளி நிறைந்த பூ போன்ற ஒளி உருவம் கொண்டவனே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனேதேசனே = பல ஆலயங்களில் எழுந்து அருளிய இறைவனே

தேனா ரமுதே = தேன் போன்ற இனிமை நிறைந்த இப்பிறவி நீக்கும் மருந்து ஆனவனே

பல ஆலயங்களில் எழுந்து அருளிய இறைவனே ,தேன் போன்ற இனிமை நிறைந்த இப்பிறவி நீக்கும் மருந்து ஆனவனே , சிவபுர அரசனே , திருக்கயிலை அரசனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேபாசமாம் = ஆணவம்,கன்மம் , மாயை என்ற மூன்று மலங்கள் என்ற

பற்றறுத்துப் = பற்றை நீக்கி

பாரிக்கும் = காப்பவனே ( காப்பாற்றும், தாங்கும்)

ஆரியனே = மேலான ஆசிரியனே

ஆணவம்,கன்மம் , மாயை என்ற மூன்று மலங்கள் என்ற பற்றை நீக்கி காப்பவனே , எனது மேலான ஆசிரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65நேச = அன்பு

நேச அருள்புரிந்து = உன் மீது அன்பு செய்வதற்கு ஏதுவாகி எனக்கு அருள் செய்து ,

நெஞ்சில்வஞ் சங்கெடப்= என் மனதில் உள்ள பொய் ஆகிய குற்றம் கெட

உன் மீது அன்பு செய்வதற்கு ஏதுவாகி எனக்கு அருள் செய்து , என் மனதில் உள்ள பொய் ஆகிய குற்றம் கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறேபேராது = என் நாளும் வெள்ளம் போல் வற்றாமல்என் நாளும் வெள்ளம் போல் வற்றாமல் நின்ற பெரும் கருணை ஆன பெரிய ஆறு போல் ஆகிய சிவபெருமானே
ஆரா அமுதே அளவு இலாப் பெம்மானேஆரா அமுதே = தெவிட்டாத அமிர்தம் போன்றவனே

அளவிலாப் பெம்மானே = இயல்புகள் அளவு ஏதும் இல்லாத சிவபுரனே
தெவிட்டாத அமிர்தம் போன்றவனே , இயல்புகள் அளவு ஏதும் இல்லாத சிவபுரனே
ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானேஓராதார் = ஆணவத்தால் சிவன் பற்றிய அறிவுஇல்லாதவர்

உள்ளத்துள் = உள்ளத்தில்

ஒளியானே = ஒளியாக உள்ளவனே

ஆணவத்தால் சிவன் பற்றிய அறிவுஇல்லாதவர் உள்ளத்தில் ஒளிக்கும் ஒளியாக உள்ளவனே ( அதாவது ஆணவம் கொண்டவர்களால் சிவனை உள்ளத்தில் காண இயலாது )
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானேநீராய் உருக்கி = கல் போன்ற என்னை நீர் போல உருக்கி

என் ஆருயிராய் நின்றானே = எனது அருமை உயிர் போல நின்றவனே என் இறைவனே
கல் போன்ற என்னை நீர் போல உருக்கி எனது அருமை உயிர் போல நின்றவனே என் இறைவனே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70உள்ளானே = உடையவனேஇன்ப துன்பங்கள் இல்லாதவனே , அவற்றை உடையவனே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்யாவையுமாய் = எல்லா பொருள்களுமாகி

அல்லையுமாய் = அவனைத்து பொருள் அல்லாதவனாகி
அன்பர்களுக்கு அன்பு செய்பவனே , எல்லா பொருள்களுமாகி உள்ளவனே , அவனைத்து பொருள் அல்லாதவனாகி உள்ளவனே என் இறைவனே
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனேசோதியனே = ஒளி வடிவு ஆனவனே ,

துன்இருளே = செறிந்த இருள் வடிவு உடையவனே

தோன்றாப் பெருமையனே = இவ்வுலகத்தில் தோன்றாத பெருமை உடையவனே
ஒளி வடிவு ஆனவனே , செறிந்த இருள் வடிவு உடையவனே, இவ்வுலகத்தில் தோன்றாத பெருமை உடையவனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஆதியனே = மூல காரணமானவனே

அந்தம் = முடிவானவனே

நடுவாகி = நடுவுமாகியவனே

அல்லானே = இம்மூன்றும் இல்லாதவனே
மூல காரணமானவனே , முடிவானவனே , நடுவுமாகியவனே , இம்மூன்றும் ( ஆதி , அந்தம், நடு) இல்லாதவனே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானேஈர்த்து = கவர்ந்து இழுத்துஎன்னை உன் அருகில் கவர்ந்து இழுத்து என்னை முழுவதுமாக ஆட்கொண்ட என் தந்தை ஆகிய பெருமானே
கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தங்கருத்தின் 75கூர்த்த = கூறிய
கூறிய மெய்ஞ் ஞானத்தால் ஆராய்ந்து பார்த்து உணர்பவர்களின் உள்கருதில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வேநோக்கரிய நோக்கே = பார்ப்பதற்கு அரிதான காட்சி உடையவனே

நுணுக்கரிய நுண்ணுணர்வே = நுணுகி அறிதற்கு உடைய நுண்ணிய உணர்வுடையவனே
பார்ப்பதற்கு அரிதான காட்சி உடையவனே, நுணுகி அறிதற்கு உடைய நுண்ணிய உணர்வுடையவனே
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனேபோக்கும் = இறத்தலும்

வரவும் = பிறத்தலும்

புணர்வும் = பொருந்தியிருத்தலும் ( சேர்த்தல் )

இறத்தலும் , பிறத்தலும் , புணர்தல் இல்லாத பெரும் புண்ணிய இறைவனே
காக்கும் எங் காவலனே காண்பரிய பேரொளியேகாண்பரிய = காண்பதற்கு அரிதானஎல்லாவற்றையும் காக்கும் எங்கள் அரசனே , காண்பதற்கு அரிதான பெரும் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்றஆற்று இன்ப வெள்ளமே = ஆற்று நீர் போல பெருகும் இன்ப வெள்ளம் போன்றவனே

அத்தா = அப்பனே

மிக்காய் = யாவற்றிலும் மேலானவனே
ஆற்று நீர் போல பெருகும் இன்ப வெள்ளம் போன்றவனே , என் அப்பனே , யாவற்றிலும் மேலானவனே உள்ளவனே
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80தோற்றச் சுடரொளியாய்ச் = நிலை பெற்ற தோற்றத்தை உடைய சுடர்விடும் பேரொளி ஆனவனே

சொல்லாத நுண்ணுணர்வாய் = சொல்லுதற்கு முடியாத நுண்ணிய உணர்வுடையவனே
நிலை பெற்ற தோற்றத்தை உடைய சுடர்விடும் பேரொளி ஆனவனே , சொல்லுதற்கு முடியாத நுண்ணிய உணர்வுடையவனே
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்த அறிவாம்மாற்றமாம் = மாறுபடும் இயல்பு

வையகத்தின் = இவ்வுலகத்தின்

அறிவாம் = அறிவாக விளங்கும்
மாறுபடும் இயல்பு உடைய இவ்வுலகத்தின் வேறு வேறு ஆக காணப்பட்டு வந்த அறிவாக விளங்கும்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்தேற்றனே = தெளிவானவனே
தேற்றத் தெளிவே = தெளிவின் தெளிவே

தெளிவானவனே , தெளிவின் தெளிவே , என் சிந்தனையுள்
ஊற்று ஆன , உண் ஆர் அமுதே ! உடையானேஊற்று ஆன = ஊற்று போல் சுரக்கின்ற ,

உண் ஆர் அமுதே = உண்ணப்படுகின்ற நிறைந்த அமுதமே

உடையானே = எல்லா பொருள்களும் உடையவனே

ஊற்று போல் சுரக்கின்ற , உண்ணப்படுகின்ற நிறைந்த அமுதமே , எல்லா பொருள்களும் உடையவனே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
விடக்கு = ஊன் / குறைபாடுகள்

வெவ்வேறு மாறுபாடுகள் உடைய குறைபாடுகள் உள்ள இந்த உடம்பின் உள்ளே அடியேன் கிடைக்க
ஆற்றேன், எம் ஐயா அரனே ஓ என்று என்று 85ஆற்றேன் = பொறுக்கமாட்டேன்

அரனே = சிவபெருமானே
பொறுக்கமாட்டேன் , எனது ஐயனே , சிவபெருமானே , ஓ என்று அழுது
போற்றிப் புகழ்ந்து இருந்து, பொய் கெட்டு மெய் ஆனார்பொய் கெட்டு = பொய் ஆகிய நினைவு செயல்கள் எல்லாம் கெட்டுவணங்கி புகழ்ந்திருந்து, பொய் ஆகிய நினைவு செயல்கள் எல்லாம் கெட்டு , மெய் ஆகிய நினைவு செயல்கள் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமேசாராமே = அடையாமல்திரும்பவும் இந்த நிலவுலகில் வந்து இரு வினை பிறவி அடையாமல்
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானேபுலக்குரம்பை = சிறு குடில் எனும் உடல்


வஞ்சகத்தை உடைய புலன்களின் வழி செல்லும் இந்த மாய உடலை அதன் பந்தத்தை அழிக்க வல்லவனே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனேநட்டம் = நடனம்நடு இரவினில் நடனம் (திரு கூத்தினை) பல காலம் ஆடும் தலைவனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90கூத்தனே = கூத்து இயற்றுபவனேதில்லையின் உள்ளே கூத்து இயற்றுபவனே , தெற்கே உள்ள பாண்டி நாட்டை உடையவனே
அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்றுஅல்லற் பிறவி = துன்பமான பிறவிதுன்பமான பிறவி அழிப்பவனே , ஓ வென்று அலறி
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்சொல்லற்கு = சொல்லி பாராட்டுவதற்குசொல்லி பாராட்டுவதற்கு அரியவனை இயன்ற மட்டும் புகழ்ந்து சொல்லி
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்பாடிய பாட்டின் பொருளையறிந்து பாடுபவர்கள்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்சிவபுரம் = சிவபெருமான் வசிக்கும் இருப்பிடம்செல்லுவார்கள் , சிவபுரத்தின் சிவபெருமான் திருவடியின் கீழ் சென்று நிலைத்த தன்மை அடைவர்
பல்லோரும் ஏத்தப் பணிந்து 95பல்லோரும் = அனைவரும் / சிவகணங்கள்

ஏத்தப் பணிந்து = புகழப்படும் , வணங்கப்படும்
சிவகணங்கள் வணங்கி துதிக்க
திருச்சிற்றம்பலம்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.


சைவ மகுடம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!!
திருச்சிற்றம்பலம்
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து.

No comments:



Thursday, January 20, 2022

சித்தர்கள் ஆட்சி - 41 : திருவாசகம் - 02 - கீர்த்தித் திருவகவல்


 


திருச்சிற்றம்பலம்


ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு
சிறப்புப் பாயிரம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
02 திருவாசகம்- கீர்த்தித் திரு அகவல்பதவுரைபொருளுரை
தில்லை மூதூர் ஆடிய திருவடிதில்லை = சிதம்பரம் / இந்த அண்டம் முழுவதும் தோன்றி ஒடுங்குதற்கு இடமான முந்தய தில்லை

மூதூர் = பழைய முதுமையான ஊர்

ஆடிய = பிற ஊர்கள் எல்லாம் தில்லைக்கு பின் உருவாக்கிய ஊர் என்ற பொருள்.ஆகையால் முன்பு ஆடிய நடனம் ( இறந்த காலம் இங்கு ஆடிய என்று பொருள்)
இந்த அண்டம் முழுவதும் தோன்றி ஒடுங்குதற்கு இடமான முந்தய தில்லை என்ற சிதம்பரம் என்ற பழைய முதுமையான ஊரில் பலகாலம் முன்பு நடனம் ஆடிய இறைவன் திருவடிகள்
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகிபல் உயிர் எல்லாம் = பல உயிர்கள் எல்லாம்

பயின்றனன் = தங்கி அருள் செய்தல் / உயிர்கள் எல்லாவற்றுள்ளும் விளங்கி / பொருத்தப்பெற்றவன் ஆகி



இந்த உலகத்தில் உள்ள பல உயிர்கள் எல்லாவற்றிலும் தங்கி, உயிர்கள் எல்லாவற்றுள்ளும் விளங்கி அருள் செய்தவனாகிய என் இறைவன் ஈசன்
எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கிஎண்இல் = எல்லை இல்லாத

பல்குணம் = பல வகைப்பட்ட அருள் குணங்கள்

எழில் = அழகு

அளவில் அடங்காத (எல்லை இல்லாத ) பல வகை அருள் குணங்களும் எழுச்சி அழகு பெற விளங்கி

(இறைவன் இவ்வாறு பலவகை குணங்களுடன் விலங்கினதால் , அனைத்து உயிர்களும் அப்படியே பலவகை குணங்களுடன் உருவாகின என்ற பொருள் )
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்மண்ணும் = மண் என்ற இந்த புவி உலகிலும்

விண்ணும் = தேவர்கள் வசிக்கும் விண் உலகிலும்

வானோர் உலகும் = தேவர்கள் தலைவர்கள் திருமால் , பிரம்மன், ருத்திரன் , மகேஸ்வரன் ஆகிய வானவர்கள் உலகிலும்

மண் என்ற இந்த புவி உலகிலும், தேவர்கள் வசிக்கும் விண் உலகிலும் ,தேவர்கள் தலைவர்கள் திருமால் , பிரம்மன் , ருத்திரன் , மகேஸ்வரன் ஆகிய வானவர்கள் உலகிலும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் ⁠5துன்னிய = செறிந்த

கல்வி = கலை அறிவு

தோற்றியும் = தோற்றுவித்தும் , உருவாக்கியும்
செறிந்த கலை கல்வி அறிவை தோற்றுவித்தும் பின்னர் அதனை அழித்தும்
என்னுடை இருளை ஏறத்துரந்தும்என்னுடை = என்னுடைய

இருளை = ஆணவமான அறியாமை என்னும் இருளை

ஏற = முழுவதும்

துரந்தும் = நீக்கியும் , போக்கியும்

ஏறத்துரந்தும் = பறித்து எறிந்தும்
என்னுடைய ஆணவமான அறியாமை எனும் இருளை முழுவதும் போக்கியும் , அதனை வெளியேறும்படி செய்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்அடியார் உள்ளத்து = சிவன் அடியவர்கள் உள்ளத்தில்

மீதூரக் = மேலும் மேலும் பெருக
சிவனடியவர்கள் உள்ளத்தில் சிவன் மீது அன்பு மேலும் மேலும் பெருக
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்குடியாக் கொண்ட = அடியவர்கள் உள்ளதை தனது இருக்கையாக கொண்ட என் இறைவா

சிறப்பும் = தலைமை பண்பும்

அடியவர்கள் உள்ளதை தனது இருக்கையாக கொண்ட என் இறைவா உனது கொள்கையும் தலைமை பண்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்நிலைபெற்ற இந்த மண் உலகில் , புவி உலகில்

மகேந்திரம் = மகேந்திர மலை என்பது பொதிகை மலைக்கு தெற்கே உள்ளது என்று கம்ப ராமாயணம், வான்மீகம் , சிவதருமோத்திரம் முதலிய நூல்கள் கூறுகின்றன. இந்த மலை கன்னியாகுமரியை அடுத்து பரந்து இருந்தது.

மாமலை = மிகப்பெரிய மலை

நிலைபெற்ற மிகப்பெரிய மலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் ⁠10ஆகமம் = முதல் நூல்

சொன்ன ஆகமம் = முன்னர் ஒருகாலத்தில் அம்மை பார்வதி உமை அன்னைக்கு பரமேஸ்வரன் சொன்ன ஆகமம் என்ற முதல் நூல்

தோற்றுவித்து = மீண்டும் உருவாக்கி

அருளியும் = உபதேசம் செய்து

முன்னர் ஒருகாலத்தில் அம்மை பார்வதி உமை அன்னைக்கு பரமேஸ்வரன் சொன்ன ஆகமம் என்ற முதல் நூலை மீண்டும் உருவாக்கி உமை அன்னைக்கு பரமேஸ்வரன் உபதேசம் செய்து
கல்லாடத்துக் கலந்து இனிது அருளிகல்லாடம் = ஒரு சிவ தலம்


கல்லாடம் என்ற சிவ தலத்தில் உமை அம்மை வழிபட்ட திரு உருவில் கலந்து இனிதாக அருளி
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்நல்லாளோடு = உமாதேவியோடு

நயப்பு = இன்பம்

உறவு = நட்பு

எய்தியும் = அடைந்தும்,கொண்டும்


உமாதேவியோடு பேரின்ப நட்பு கொண்டும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்பஞ்சப்பள்ளியில் = பஞ்சப்பள்ளியி என்ற ஊரில்

பால்மொழி = பால் போல இனிய சொற்கள்

தன்னொடும் = உமையாளோடு சேர்ந்து

பஞ்சப்பள்ளி என்ற ஊரில் பால் போல இனிய சொற்கள் பேசும் உமையாளோடு சேர்ந்து
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்எஞ்சாது = என்றும் குறையாத

ஈண்டுதல் = மிகுதல்

ஈண்டும் = மிகுதி ஆகின்ற

இன்அருள் = இனிய அருளை

விளைத்தும் = செய்தும் , உருவாக்கியும்

என்றும் குறையாத மிகுதி ஆகின்ற இனிய அருளை விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் ⁠15
கிராதன் = வேடன்

வேடமொடு = வடிவோமோடு

கிஞ்சுகம் = முருக்கு பூ

கிஞ்சுக வாய் = முருக்கு பூ போன்ற சிவந்த வாய்

கிஞ்சுக வாயவள் = முருக்கு பூ போன்ற சிவந்த வாய் உடைய அன்னை பார்வதி தேவி

வேடன் வடிவத்தில் முருக்கு பூ போன்ற சிவந்த வாய் உடைய அன்னை பார்வதி தேவி











முருக்கு பூ
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்விராவு = கலத்தல், நெருக்குதல்

கொங்கை = தனங்கள்

தடம் = பெருமை

ஒன்றோடு ஒன்று கலந்த தனங்களாகிய நல்ல தடாகத்தில் மூழ்கியும் (வேடன் வேடத்தில் வேட்டை ஆடிய இறைவன் தன் வெம்மை நீக்கும் வண்ணம் ஒரு நீர் தடாகத்தில் மூழ்கினான் என்று உவமை கொள்க )
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்கேவேடர் = வலைஞன்

ஆகி = வடிவம் கொண்டு

கெளிறது = கெளிற்று மீன்

இறைவன் மீனவ வலைஞன் வடிவம் கொண்டு கடலில் உள்ள கெளிற்று மீனை பிடித்து
மாஏட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்மாஏட்டு ஆகிய ஆகமம் = முன்பு கடலில் வீசிய மிகப்பழமையான மிகப்பெரிய ஆகம நூல்களை

வாங்கியும் = மீட்டு எடுத்தும்
முன்பு கடலில் வீசிய மிகப்பழமையான மிகப்பெரிய ஆகம நூல்களை
மீட்டு எடுத்தும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்துமற்றவை தம்மை = அங்ஙனம் வாங்கிய ஆகம நூல்களை

மகேந்திரத்து இருந்து = மகேந்திர மலையில் இருந்து
அங்ஙனம் வாங்கிய ஆகம நூல்களை மகேந்திர மலையில் இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் ⁠20ஐம் முகங்கள் = ஈசானம் , தட்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம்

உற்ற ஐம் முகங்களால் = சிவபெருமான் தனது ஐந்து திரு முகங்களால்

பணித்து அருளியும் ⁠= உபதேசம் புரிந்து அருளியும்

சிவபெருமான் தனது ஐந்து திரு முகங்களால் உபதேசம் புரிந்து அருளியும்
நந்தம் பாடியில் நான் மறையோனாய்நந்தம் பாடியில் = சிவ தலமான நந்தம் பாடி என்ற ஊரில்

நான் மறையோனாய் = நான்கு வகை வேதங்கள் அறிந்த வேதியனாக

சிவ தலமான நந்தம் பாடி என்ற ஊரில் நான்கு வகை வேதங்கள் அறிந்த வேதியனாக
அந்தம் இல் ஆரியனாய் அமர்ந்து அருளியும்அந்தம் = முடிவு

அந்தம் இல் = முடிவு இல்லாத

ஆரியனாய் = ஆசிரியனாய்

முடிவு இல்லாத ஆசிரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்வேறு வேறு உருவும் = வெவ்வேறு திரு உருவமும்

இயற்கையும் = தன்மைகளும்
வெவ்வேறு திரு உருவமும் வெவ்வேறு தன்மைகளும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகிநூறு நூறு ஆயிரம் = நூறு லட்சம்
இயல்பினது = தன்மைகள்

பல நூறு லட்சம் தன்மைகள் உடையதாகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் ⁠25ஏறு = ரிஷபம் / காளை

ஏறு உடை = காளை வாகனம் உடைய

புவனி = உலகம்

காளை வாகனம் உடைய ஈசன் இந்த உலகத்தில் ஆன்மாக்கள் உயர்வு அடைய
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்கூறு = பகுதி, பிரிவு, பங்கு

கூறு உடை மங்கை = ஈசன் உடலில் பாதியாக உள்ள உமை அம்மை

தானும் = ஈசனும்

ஈசன் உடலில் பாதியாக உள்ள உமை அம்மையும் , ஈசனும் உடன் வந்து அருளி
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்குதிரையை நடத்திக்கொண்டு

குடநாடு = திருப்பெருந்துறைக்கு ( ஆவுடையார் கோயில்) மேற்கே மதுரை இருந்ததால் அதற்கு குடநாடு என்று பெயர் இட்டார் மாணிக்கவாசகர்

குதிரையை நடத்திக்கொண்டு திருப்பெருந்துறைக்கு ( ஆவுடையார் கோயில்) மேற்கே உள்ள மதுரைக்கு
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்சதுர் = திறமை

சதுர்பட = திறமை உள்ள

சாத்து = வணிகர்கள் திகம் பேர் உள்ள கூட்டம்

சாத்தாய் - வணிகக்கூட்டமாய்

தான் = ஈசனே

எழுந்தருளியும் = வந்து அருளியும்

திறமை மிக்க வணிகக்கூட்டமாய் ஈசனே வந்து அருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்வேலம் புத்தூர் = ஒரு இடம்

விட்டேறு = வேல் படை

வேலம் புத்தூர் என்ற ஊரில் வேல் படையை விட்டு அருளி
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் ⁠30கோலம் = திருஉருவம்

தனது திருவுருவம் அதனை அழகாக காட்டிய தன்மையும்
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்தர்ப்பணம் அதனில் = கண்ணாடியில் வழிபட ( வேடன் ஒருவனுக்கு அவன் வேண்டிய வாள் , படை முதலியவற்றை கண்ணாடியின் வாயிலாக அளித்த வரலாற்றை கூறும் என்றும் பொருள் )
சாந்தம் புத்தூர் = திருச்சந்தம்புத்தூர் என்ற ஊரில்

சாந்தம் புத்தூர் என்ற இடத்தில் வேடன் ஒருவன் கண்ணாடியில் இறைவன் திருவுருவம் அமைத்து , வழிபாடற்ற அந்த வழிபாட்டினை இறைவன் ஏற்று அந்த கண்ணாடியில் இருந்து வெளிப்பட்டு அவன் விரும்பிய வரத்தை ஈசன் கொடுத்தார் என்று ஒரு வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில ஏகலைவன் எனும் வேடன் துரோணாச்சாரியார் உருவத்தை அமைத்து வழிபட்டு சிறந்த வீரனாக விளங்கினான் என்பதை நினைவு கூற வேண்டும்.

கண்ணாடியில் வழிபட திருச்சந்தம்புத்தூர் என்ற ஊரில்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்வில் பொரு வேடற்கு = வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்கு

ஈந்த = வேண்டியவற்றை கொடுத்து அருளல்

விளைவு = பயன்

வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்கு வேண்டியவற்றை கொடுத்து அருளிய பயனும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனிமொக்கணி = அவித்த பயிறு , கொள்ளு , கடலை முதலியவற்றை வைக்கும் குதிரையின் தீனிப்பை
(மொக்கணீசுவரர்)

அருளிய = ஒரு அன்பருக்கு அருளுதல் பொருட்டு

முழுத்தழல் மேனி = முழுமை ஆகிய நெருப்பை ஒத்த திருமேனியை


இறை வழிபாட்டின் பின்னரே உணவு அருந்தும் கொள்கை உடைய வணிகன் ஒருவரை அவரின் மைத்துனர் குதிரைக்கு கொள்ளு காட்டும் பையில் மணலை நிரப்பி நடுவித்து அது சிவலிங்கம் என கேலி செய்தார். அந்த வணிகன் பூசையை முடித்த பின், அந்த பையை எடுக்க முயன்றபோது அது பாதாளம் வரை ஊடுருவி சிவலிங்கமாக மாறியது. அங்கு இறைவனுக்கு மொக்கணீசுவரர் என்ற பெயரும் உண்டானது.
கொள்ளுப்பையை லிங்கமாக காட்டி முழுமை ஆகிய நெருப்பை ஒத்த திருமேனியை
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்சொக்கது = லிங்க வடிவமாக

தொன்மையும் = பழைய அருள் தன்மையும்

லிங்க வடிவமாக காட்டிய பழைய அருள் தன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் ⁠35அரி = திருமால்

அரியொடு = திருமாலுடன்

பிரமற்கு = பிரம்மாவாலும்

அளவு அறி ⁠= அளவு அறியப்படாத

ஒண்ணான் = அளவு அறியப்படாதவனாக இருக்கும்

திருமாலுடன் பிரம்மாவாலும் அளவு அறியப்படாதவனாக இருக்கும்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்நரிகளை குதிரைகள் ஆக்கிய நன்மையும்
ஆண்டு கொண்டு அருள அழகு உரு திருவடிஆண்டு கொண்டு அருள = பாண்டிய மன்னனை ஆட்கொண்டு அருள

அழகு உரு திருவடி = மிகவும் அழகு பொருந்திய திருவடி

பாண்டிய மன்னனை ஆட்கொண்டு அருள மிகவும் அழகு பொருந்திய திருவடி அதனை
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்றுபாண்டியன் தனக்கு = பாண்டிய மன்னனுக்கு

பரிமா = குதிரையை


பாண்டிய மன்னனுக்கு குதிரையை விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாதுஈண்டு கனகம் = திரண்ட பொன்

ஈண்டுதல் = திரளுதல்

இசையப் பெறாது = ஏற்காமல்

அதற்கு ஈடான திரண்ட பொன் பெறுதற்கு உடன்படாமல்
ஆண்டான் எம்கோன் அருள் வழி இருப்பத் ⁠40
ஆண்டான் எம்கோன் = இந்த அடியவனை ஆண்ட எனது இறைவன் ஆகிய எம் அரசன்

அருள்வழி இருப்ப = அருள் வழியை நான் நாடியிருக்குமாறு

இந்த அடியவனை ஆண்ட எனது இறைவன் ஆகிய எம் அரசன் அருள் வழியை நான் நாடியிருக்குமாறு
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
தூண்டு சோதி = ஒளி பொருந்திய தூண்டி சுடர் விட்டு எரியும்

தோற்றிய தொன்மையும் = தோன்றிய பழமையும்

ஒளி பொருந்திய தூண்டி சுடர் விட்டு எரியும் விளக்கு போல் தோன்றிய பழமையும்
அந்தணன் ஆகி ஆண்டு கொண்டருளிஅந்தணன் வடிவில் அழகு பொருந்தி வந்து என்னை ஆட்கொண்டு அருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்இந்திர ஞாலம் = மாய வித்தை போன்ற திருவிளையாடல்

மாய வித்தை போன்ற திருவிளையாடல் காட்டிய தன்மையும்
மதுரைப் பெரு நல் மாநகர் இருந்துபெருநல் மாநகர் = தோற்றத்தால் பெரியதும் பண்பால் நல்லதும் ஆட்சியில் சிறந்ததும் ஆகிய மதுரை

தோற்றத்தால் பெரியதும் பண்பால் நல்லதும் ஆட்சியில் சிறந்ததும் ஆகிய மதுரையில் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ⁠45குதிரையை ஓடிக்கொண்டு சேவகன் ஆக வந்த தன்மையும்
ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்ஆங்கது தன்னில் = மதுரையில்

அடியவர்க்கு ஆகப் = செம்மனச்செல்வி வந்தியம்மை என்னும் அடியவள் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
மதுரையில் செம்மனச்செல்வி வந்தியம்மை என்னும் அடியவள் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்து அடியவர்க்கு அடியவர் ஆகி
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்பாங்காய் = உரிமையாய்

பரிசும் = பண்பும்

உரிமையாய் மண் சுமந்து அருளிய பண்பும்
உத்தர கோச மங்கை உள் இருந்துஉத்திரகோசமங்கை என்ற தலம்உத்திரகோசமங்கை என்ற ஊரில் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்வித்தக வேடம் = ஞான ஆசாரியன் வடிவம்

ஞான ஆசாரியன் வடிவம் காட்டிய தன்மையும்
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் ⁠50பூவணம் = திருப்பூவணம் எனும் நகரில் தனக்கு அடியவளான பொன்னனையாள் என்ற அடியவருக்கு

திருப்பூவணம் எனும் நகரில் தனக்கு அடியவளான பொன்னனையாள் என்ற பெண்மணி அடியவருக்கு சித்தர் வேடத்தில் ரசவாதம் செய்து தனது திருமேனி கட்டி அருளிய தன்மையும்
தூவண மேனி காட்டிய தொன்மையும்தூவண = தூய்மையான

தூய்மையான தனது திருமேனி கட்டிய தன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளிப்வாத வூரினில் = திருவாதவூர் என்ற ஊரில்

திருவாதவூர் என்ற ஊரில் வந்து இனிதுஆக எனக்கு அருளி
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்பாதச்சிலம்பு ஒலி காட்டிய பண்பும்பாதச்சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக்செல்வம் பொருந்திய திருப்பெருந்துறை நகரின் செல்வனாக ஆகிசெல்வம் பொருந்திய திருப்பெருந்துறை நகரின் செல்வனாக ஆகி
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் ⁠55கரு = மூலம்எப்பொருளும் மூலமாக அமைந்த ஜோதியில் மறைந்த தன்மையும்
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்பூவலம் = திருப்பூவலம் என்ற சிவ தலம்

பொலிந்து = ஒளிபோல்
திருப்பூவலம் என்ற அந்த ஊரில் ஒளிபோல் இனிதாக அருள் செய்து
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்பரிசும் = தன்மையும்
அடியவர்களின் பாவத்தை அடியோடு அழித்த தன்மையும்
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்துசயம் பெற = ஜெயம்/வெற்றி பெற - தன் அடியவனான பாண்டியன் வெற்றி அடையும் பொருட்டுதன் அடியவனான பாண்டியன் வெற்றி அடையும் பொருட்டு , பாண்டிய மன்னனின் படை வீரர்கள் தாகம் தணிக்க ஒரு சேவகனாக தண்ணீர் பந்தல் வைத்து திருவிளையாடல் புரிந்த ( நம்பி திருவிளையாடல் புராணம் - தண்ணீர் பந்தல் வைத்த படலம் )
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்நல்ல தண்ணீரை அளிக்கும் சேவகன் வேடம் தரித்து அளித்த நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் ⁠60வெண்காடு = திருவெண்காடு என்ற சிவ ஸ்தலம்
திருவெண்காட்டில் ஒரு புதியவனாக , விருந்தினர் போல் வந்து
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்குருந்தின் கீழ் - குருந்த மர நிழலின் கிழே

குருந்த மர நிழலின் கிழே அமர்ந்து அங்கு உபதேசம் செய்த தன்மையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்குபட்ட மங்கையில் = பட்டமங்கலம் என்ற சிவ ஸ்தலம்

பட்டமங்கலம் என்ற சிவ ஸ்தலம் அதனில் அன்பாக அமர்ந்து
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
அட்ட மாசித்தி = எட்டு வகை சித்தி
ஆறுமுக கடவுளுக்கு பால் ஊட்டி உணவு கொடுத்த 6 தாய்மார்களுக்கு அஷ்டமா சித்திகளை அருளிய திருவிளையாடலும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டுவேடுவன் = வேடன்

வேண்டு உரு = தனக்கு விரும்பிய அச்சப்படும் உருவம்
ஒரு வேடன் ஆகி தனக்கு விரும்பிய அச்சப்படும் உருவம் கொண்டு
காடு அது தன்னில் கரந்த கள்ளமும் ⁠65காடு அது தன்னில் = காடு அதனில்

கரந்த = மறைந்த

கள்ளமும் = தந்திரமும்
காடு அதனில் மறைந்த தந்திரமும்
மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டுமெய்க் காட்டி இட்டு = படைகளின் உண்மையை காட்டுதல் ( மெய்க் காட்டிட்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பதாவது படலமாக அமைந்துள்ளது.)

வேண்டு உருக் கொண்டு = வேண்டிய வடிவம் கொண்டு
படைகளின் உண்மையை காட்ட வேண்டிய வடிவம் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்தக்கான் = தகுதி உடையோன்
தகுதி உடையோன் ஒருவனாக ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளிஓரியூர் என்ற தலத்தில் ஒரு அம்மைக்கு மனம் உகந்து முதலில் விருத்தனாக ( வயோதிகனாக ) பிட்சை கேட்டு, உணவு அருந்திய பின்னர் குமாரனாக மாறினார். மாமியார் முதலியோர் வீட்டுக்கு திரும்பிய போது குழந்தையாக காட்சி கொடுத்து இனிதாக அருளி
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்பார் = நிலவுலகம்

இந்த உலகத்தில் பிறவா பெருமையுடைய குழந்தை ஆகிய தன்மையும்

( விருத்த குமார பாலக திருவிளையாடல் )
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் ⁠70ஈண்ட = திரண்ட

பாண்டூர் என்ற தலத்தில் அடியவர்கள் திரண்டு வந்து வணங்கும்படி எழுந்து அருளியதும்
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்தேவூர் = வேதாரண்யத்துக்கு சமீபத்தில் உள்ள ஒரு ஊர்.

தென்பால்= தெற்கு நோக்கிய

திகழ்தருல் = விளங்குதல்

தேவூர் வேதாரண்யத்துக்கு சமீபத்தில் உள்ள ஒரு ஊர். அந்த தேவருக்கு தென் பகுதியில் ( இலங்கை) உள்ள ஒரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்கோவார் = அரசன் போல

அரசன் போல வடிவம் கொண்ட தன்மையும்
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்தேன் அமர் சோலை = வண்டுகள் அமரும் சோலைதேன் எடுக்கும் வண்டுகள் அமரும் சோலைகளை உடைய திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்ஞானம் = முக்தி அடைய உதவும் ஞானம்

நல்கிய = அருளிய
முக்தி அடைய உதவும் ஞானம் அதனை அருளிய நலமும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து ⁠75இடைமருது = திருவிடைமருதூர்

ஈண்ட இருந்து = நெருங்கி வந்து

திருவிடைமருதூர் அதனில் அடியவர்களுக்கு நெருங்கி வந்து
படிமப் பாதம் வைத்த அப்பரிசும்படிமப் பாதம் = தூய திருவடிகளை ( அடியவர்கள் தலையில் )

பரிசும் = அருள் செய்த கருணை தன்மையும்
தூய திருவடிகளை அடியவர்கள் தலையில் வைத்து அருள் செய்த கருணை தன்மையும்
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்துஏகம் பத்தில் = காஞ்சி மாநகரில்

இயல்பாய் = தனது இயல்பான உருவத்திருமேனியுடன்

காஞ்சி மாநகரில் தனது இயல்பான உருவத்திருமேனியுடன் வந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்பாகம் பெண்ணோடு = ஈசன் இடப்பக்கத்தில் ஊமையம்மை
ஈசன் இடப்பக்கத்தில் ஊமையம்மை உடன் கூடிய அர்த்தநாரீஸ்வரராக உள்ள தன்மையும்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்துதிருவாஞ்சியத்தில் = திருவாஞ்சியம் என்ற ஊரில்

சீர்பெற = சிறப்பு பெற
திருவாஞ்சியம் என்ற ஊரில் சிறப்பு பெற எழுந்து அருளி
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் ⁠80மரு ஆர் = இயற்கை மனம் உடைய கூந்தல்
குழலியொடு = உமாதேவியோடு

இயற்கை மனம் உடைய கூந்தல் கொண்ட உமாதேவியோடு மகிழ்ந்து இருந்த விதமும்
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்சேவகன் ஆகி = வீரன் ஆகி ( திருவிளையாடல் புராணம் - யானை எய்த படலம் )

திண்சிலை ஏந்தி = வழிய வில்லை கையில் ஏந்தி

ஒரு மாபெரும் போர் வீரன் ஆகி வழிய வில்லை கையில் ஏந்தி ( திருவிளையாடல் புராணம் - யானை எய்த படலம் )
பாவகம் பலபல காட்டிய பரிசும்பாவகம் = பல வகையான அம்புகள் எய்யும் இயல்பு

பரிசும் = நல்ல தன்மையும்
பல வகையான அம்புகள் எய்யும் இயல்புகளை காட்டிய தன்மையும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்கடம்பூர் = திருக்கடம்பூர் என்ற சிவ ஸ்தலம்
திருக்கடம்பூர் என்ற சிவ ஸ்தலம் அதனில் அழகாக இறைவன் கோயில் அமைய பெற்றும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்ஈங்கோய் மலை = திரு வீங்கோய் மலை ( திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலையில் உள்ள பச்சை மரகத லிங்கம் மிக அழகானது )

எழிலது காட்டியும்= அழகிய மரகதமேனியை காட்டியும்
திரு வீங்கோய் மலையில் அழகிய பச்சை மரகதமேனியை காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் ⁠85ஐயாறு = திருவையாறு

சைவன் = கோயில் பூசாரி ( திருவையாற்றுப் புராணம் )
திருவையாறு என்ற சிவா தலத்தில் கோயில் பூசாரி ஆகியும்
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
துருத்தி = தஞ்சாவூரில் உள்ள குத்தாலம்

அருத்தியோடு = அருள் புரியும் ஆசையோடு
தஞ்சாவூரில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் உள்ள சிவ தலத்தில் அருள் புரியும் ஆசையோடு அமர்ந்து இருந்ததும்
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்திருப்பனை = திருப்பனை ஏன்ற ஊரில்

விருப்பன் = ஆசையுடன் , அன்புடன் ( இறைவன் சௌந்தரேசுவரன் - எல்லோராலும் விரும்பப்படும் அழகன்)
திருப்பனை ஏன்ற ஊரில் எல்லோராலும் விரும்பப்படுதலுக்குரிய அழகனாக அமர்ந்தும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுமலம் = சீர்காழி

சீர்காழி திருத்தலத்தில் தனது திருவுருவினை தரிசனம் காட்டி காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்கழுக்குன்று = திருக்கழுக்குன்றம்

வழுக்காது = தப்பாது

திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் தவறாது காட்சி அளித்ததும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் ⁠90புறம்பயம் = திருப்புறம்பயம். கும்பகோணத்திற்கு வட மேற்கே மண்ணியாற்றின் வட கரையில் உள்ள ஊர்.

அறம்பல = அற நூல்கள் பல
கும்பகோணத்திற்கு வட மேற்கே மண்ணியாற்றின் வட கரையில் உள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் அற நூல்கள் பல அருளியும்
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்குற்றாலம் = திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலம்

குறியாய் = சிவலிங்க வடிவாய் தோன்றுதல்
திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலம் என்ற தலத்தில் திருமாலின் திருவுவம் அகத்திய முனிவரால் சிவலிங்க வடிவ திருவுவமாய் அதில் எழுந்து அருளுதலும்
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்துஅந்தமில் பெருமை = முடிவு இல்லாத பெருமை

அழல் = தீ பிழம்பு போன்ற

உரு = உருவம்

கரந்து = மறைத்து
முடிவு இல்லாத பெருமையினை உடைய தீ பிழம்பு போன்ற உருவத்தை மறைத்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டுசுந்தர = அழகிய

வேடத்து = வேடம் அதனை

ஒருமுதல் = ஆதி மூல உண்மைப்பொருள்

உருவுகொண்டு = உருவம் கொண்டு

அழகிய கோலத்தினையுடைய ஈடு இணை இல்லாத ஆதி மூல உண்மைப்பொருள் உருவம் கொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளிஇந்திர ஞாலம் = இந்திரசால வித்தை
இந்திரசால வித்தை போல வந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிர் படுத்துத் ⁠95எவ்வெவர் தன்மையும் = எல்லா தெய்வங்களின் தன்மையும்

தன்வயிர் படுத்து = தன்னிடத்தே அடங்க வைத்து
எல்லா தெய்வங்களின் தன்மையும் இறைவன் சிவபெருமான் தன்னிடத்தே அடங்க வைத்து
தானே ஆகிய தயாபரன் எம் இறைதயாபரன் = பேரருளாளன்

எமது இறைவன் தான் ஒருவனே முழு முதல் கடவுள் ஆகி பேரருளாளன் ஆகி
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகிசந்திர தீபம் = சந்திரத்தீவு

சாத்திரன் = சாஸ்திரங்களில் வல்லவன்
சந்திரத்தீவு அதனில் சாஸ்திரங்களில் வல்லவன் ஆக இருந்து அருளி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்அந்தரத்து = ஆகாயம்

இழிந்து = இறங்கி

அமர் = பொருந்திய

பாலை = சந்திரதீபத்தில் உள்ள தலம்

( திருக்கழிப்பாலை எனவும் பொருள் உண்டு)
ஆகாயத்தில் இருந்து கீழே பூவுலகில் இறங்கி வந்து , அழகு பொருந்திய திருக்கழிப்பாலை ( சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது ) என்ற சிவ தலத்தில்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்சுந்தரம் = அழகு

துதைந்து = நெருங்கி
அழகிய தன்மையோடு அடியவர்களுக்கு நெருங்கி இருந்து அருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் ⁠100மந்திர மாமலை = ஆகம நூல்கள் வெளிப்படுத்திய மலை

மகேந்திர = மகேந்திர மலை

வெற்பன் = உடையவன்
மந்திர ஆகம நூல்கள் வெளிப்படுத்திய மகேந்திர மலையை உடையவன் எம் இறைவன்
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்அந்தம் = முடிவு

அந்தம் இல் = முடிவு இல்லாத

அண்ணல் = எம் பெருமான் சிவபெருமான்
முடிவு என்று ஒன்று இல்லாத பெருமையையும் , அருள் என்றும் வழங்கும் எங்கள் சிவபெருமான்
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்எம் தமை = என்னை

பகரின் = சொல்லுதல்
என்னை ஆட்கொண்டு ஆண்ட என் இறைவனின் நன்மை அதை சொல்லுவதனால்
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உருஆற்றல் = சர்வ வல்லமை
ஆற்றல் அது உடை என்பது முதல் பத்து தசாங்கம் ஆகிய பத்து உறுப்புகளை சொல்ல துவங்குகின்றர் மாணிக்கவாசகப்பெருமான்

அந்த பத்து தசாங்கங்கள் பின்வருமாறு
கொடி , ஆறு , முரசு, படை , மாலை , ஊர்தி , நாடு, ஊர் , பெயர் , மலை

அது உடை = அது உடைய

அழகு அமர் = அழகு பொருந்திய
முதல் பத்து தசாங்கம் ஆகிய பத்து உறுப்புகளை சர்வ வல்லமை உடைய அழகு பொருந்திய எம் பெருமான் இறைவன் திருவருவதால்
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
நீற்றுக் கோடி = திருநீற்றின் வளைந்த வரி கோடுகள்
திருநீற்றின் வளைந்த கோடுகளை சிவ பெருமான் தன் திரு உடலில் தரித்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் ⁠105ஊனம் தன்னை = பிறவித்துன்பம் எனும் கேட்டினை

ஒருங்கு உடன் = ஒரு சேர , முழுவதுமாக

அறுக்கும் = நீக்கும்

பிறவித்துன்பம் எனும் கேட்டினை ஒரு சேர , முழுவதுமாக நீக்கும்
ஆனந் தம்மே ஆறா அருளியும்ஆனந்தமே = சிவஞான பேரின்பம்

ஆறா அருளியும் = ஆறு போல வற்றாது அருளியும்

ஆனந்தமே இங்கு ஆறு என பொருள் ஆக மாணிக்கவாசகப்பெருமான் உரைத்துள்ளார்.
இந்த ஆறு தசாங்கத்தில் இரண்டாவதாக வருவது
சிவஞான பேரின்பம் அதனை ஆறு போல வற்றாது அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்மாதிற் கூறு உடை = மாது கூற்றிலுடை என்று உறுபு பிரித்து பொருள் கொள்ள வேண்டும். உமை அம்மையை இட பாகத்தில் உடைய.

மாபெரும் = மிகப்பெரிய

கருணையன் = கருணை உடையவன்
உமை அம்மையை இட பாகத்தில் உடையவனாகி மிகப்பெரிய கருணை உடையவன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்நாதப் பெரும்பறை = ஒலி என்ற நாத தத்துவமே உலக தோற்றத்துக்கு மூலமானது. அதை இறைவனுக்கு முரசாக உருவகப்படுத்தி நாதப் பெரும்பறை என்று மாணிக்கவாசகப்பெருமான் நமக்கு விளக்கியுள்ளார்.

( இங்கு நாத தத்துவமே முரசு என்ற உரைக்கப்பட்டடது. இந்த முரசு தசாங்கத்தில் மூன்றாம் அங்கமாக வருவது )

நவின்று = ஓங்கி / முழங்கி
கறங்கவும் = ஒலிக்கவும்
நாதமாகிய பெரும் ஒலி பறை ஓங்கி ஒலிக்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்அழுக்கு = மும் மலம் ( ஆணவம் , கன்மம் (ஆசை, பொறாமை), மாயை )
மும் மல அழுக்கு அடியவர்களை அணுகாமல் அவர்களை அருளாட்சி செய்து கொண்டு அருள்பவன்
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் ⁠110கழுக் கடை = சிவபெருமானிடம் உள்ள மூன்று தலைகளை உடைய முத்தலை சூலாயுதம் ஆன திரிசூலம் என்ற வேல். அது இன்பம், மெய்வறிவு, நற்செயல் என்ற குணங்களை கொண்டது.

( இங்கு முத்தலை சூலாயுதமே படை என்ற உரைக்கப்பட்டடது. இந்த படை தசாங்கத்தில் நான்காம் அங்கமாக வருவது )
திரிசூலம் தன்னை என் இறைவன் திருக்கையினால் தாங்கி அருளியும்
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்மூலம் = மூல கரணம்

மும்மலம் = மும் மலம் ( ஆணவம் , கன்மம் (ஆசை, பொறாமை), மாயை )
உயிர்களின் துன்பங்களுக்கு மூல கரணம் ஆகிய மும்மலம் அதனை வேரோடு அறுத்து
தூய மேனிச் சுடர்விடு சோதிதூய = பரிசுத்த

மேனி = திருவுடல்

சுடர்விடு = பிரகாசமாக
பரிசுத்தமாக உள்ள எம் இறைவன் திருவுடல் மிகுந்த பிரகாசமாக ஒளி வீசி பேரொளி போல உள்ளது
காதலன் ஆகிக் கழுநீர் மாலைகாதலன் ஆகி = அன்புக்கு உரியவன் ஆகி

கழுநீர் மாலை = செங்கழுநீர் மலர் மாலை

( இங்கு செங்கழுநீர் மலர் என்பது மாலை என்ற உரைக்கப்பட்டடது. இந்த மாலை தசாங்கத்தில் ஐந்தாம் அங்கமாக வருவது )

அன்புக்கு உரியவன் ஆகி செங்கழுநீர் மலர் மாலை
ஏல் உடைத்தாக எழில்பெற அணிந்தும்ஏல் = பொருத்தம்
பொருத்தம் உடையதாக மிக்க அழகு பெற கழுத்தில் அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் ⁠115அரி = திருமால்

பிரமற்கு = பிரம்மா

திருமால் , பிரம்மா ஆகியவர்களுக்கு அளவு அறியப்படாதவன்
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்பரி = குதிரை

பரிமா = குதிரை ஆகிய விலங்கு

பயின்ற = பயில்தல் , பலமுறை ஈடுபடுதல் , குதிரை மீது பல காலம் ( நீண்ட பொழுது ) ஊர்ந்து வந்ததை குறிக்கும்

வண்ணம் = சிறப்பு

( இங்கு குதிரை என்பது ஊர்தி என்ற உரைக்கப்பட்டடது. இந்த ஊர்தி தசாங்கத்தில் ஆறாம் அங்கமாக வருவது )
குதிரையின் மீது அழகாக நீண்ட நேரம் பயணம் செய்த சிறப்பும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்மீண்டு வாரா வழி = பரமுக்திவழி , சிவலோகம் சென்ற ஆத்மா மீண்டும் பிறவி எடுத்து இந்த உலகத்தில் திரும்பி வராத வழி
இந்த உலக பிறவியை மறுபடி நாம் எடுக்காமல் அருள் செய்யும் நம் அருள் பொழியும் இறைவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்பாண்டி நாடே = பாண்டியன் நாடு

பழம் = பழைய

பதி = இருப்பிடம்

( இங்கு பாண்டிநாடு என்பது நாடு என்ற உரைக்கப்பட்டடது. இந்த நாடு தசாங்கத்தில் ஏழாம் அங்கமாக வருவது )
மதுரையை தலைநகரமாக கொண்ட பாண்டி நாட்டையே தனது பழைய இருப்பிடமாகவும்
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்பக்தி = அன்பு

பக்தி செய் = அன்பினால் பக்தி வழிபாடு செய்பவர்கள்

அடியாரை = சிவன் அடியவர்கள்

பரம் = மேலானது

பரம்பரத்து = அதி மேலான

உய்ப்பவன் = உயரச்செய்பவன்

அன்பினால் பக்தி வழிபாடு செய்யும் சிவன் அடியவர்களை மிகவும் மேலான நிலையில் உயரச்செய்பவன்
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் ⁠120உத்தர கோச மங்கை = உத்திரம்-உபதேசம். கோசம்-ரகசியம். மங்கை-பார்வதி தேவி. அப்பன் ஈசன் அம்மை பார்வதி தேவிக்கு ரகசிய உபதேசம் செய்த இடம்

( இங்கு உத்தரகோசமங்கை என்பது ஊர் என்ற உரைக்கப்பட்டடது. இந்த ஊர் தசாங்கத்தில் எட்டாம் அங்கமாக வருவது )
உத்தரகோசமங்கை என்ற ஊரை தனது சொந்த ஊராகவும்
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளியஆதி மூர்த்திகள் = பிரம்மா, விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன்

ஆதி மூர்த்திகள் ஆகிய பிரம்மா, விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகியோருக்கு அருள்புரிந்து அருளிய இறைவன்
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்
தேவ தேவன் = மகாதேவன். தேவர்களுக்கு தேவன்

( இங்கு தேவதேவன்என்பது பெயர் என்ற உரைக்கப்பட்டடது. இந்த பெயர் தசாங்கத்தில் ஒன்பதாவது அங்கமாக வருவது )
தேவர்களுக்கு தேவன் ஆகி மகாதேவன் என்ற திருப் பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்திஇருள் = அறியாமை

கடிந்து = போக்குதல் , நீக்குதல்

இன்ப ஊர்தி = பேரின்ப வடிவாகிய ரிஷப காளையை வாகனமாக உடையவன்
/ அறியாமை என்ற துன்பத்தை நீக்கி ஞானம் எனும் பேறின்பதை அளிப்பவன் இறைவன்
அனைத்து அடியவர்களின் அறியாமை என்ற துன்பத்தை நீக்கி ஞானம் எனும் பேறின்பதை அளிப்பவன் இறைவன்
அருளிய பெருமை அருள்மலை யாகவும்அருளிய பெருமை = அடியவர்களுக்கு அருள் செய்த பெருமை

அருள்மலை யாகவும் = அந்த பெருமையே அருள் மலையாகவும்

( இங்கு அருள் என்பது மலை என்ற உரைக்கப்பட்டடது. இந்த மலை தசாங்கத்தில் பத்தாவது அங்கமாக வருவது )
அடியவர்களுக்கு அருள் செய்த பெருமையே அருள் மலையாகவும்

( இங்கு அந்த பத்து தசாங்கங்கள் நிறைவு அடைந்தது
கொடி , ஆறு , முரசு, படை , மாலை , ஊர்தி , நாடு, ஊர் , பெயர் , மலை )
எப்பெருந் தண்மையும் எவ்வெவர் திறமும் ⁠125எப்பெருந் தண்மையும் = எவர் எவர் எந்த பெருந்தன்மையை கொண்டுஉள்ளாரோ

திறம் = வகை

எவ்வெவர் திறமும் = ஏனைய அன்பு முறை வகைகளையும்
எவர் எவர் எந்த பெருந்தன்மையை கொண்டுஉள்ளாரோ மற்றும் ஏனைய அன்பு வகைகளையும்
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளிஅப்பரிசு அதனால் = அந்த தன்மைகளால்
அந்த தன்மைகளால் அடியவர்களை அருள் புரிந்து ஆண்டு அருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்நாயினேனை = நாய் போன்ற என்னை

நலம் = நன்மை

மலி = மிகுந்த

தில்லையுள் = சிதம்பரம் என்ற தில்லை திரு தளத்தின் உள்
நாய் போன்ற என்னை நன்மை மிகுந்த சிதம்பரம் என்ற தில்லை திரு தளத்தின் உள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎனகோலம் = அழகு

கோலம் ஆர் தரு = அழகு உடைய

பொதுவினில் = அம்பலத்தில்

( பொது = வெட்டவெளி என்ற ஆகாயம் )
அழகு உடைய தில்லை அம்பலத்தில் வருக என்று
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளிஏல = பொருந்த

ஈங்கு - இவ்விடத்தில் , இங்கு

ஒழித் தருளி = என் வினைகளை ஒழித்து அருளி
எனது வினைக்கு பொருந்த ஏற்றவாறு என்னை இங்கு இவ்விடத்தில் என் வினைகளை ஒழித்து அருளி
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் ⁠130அன்று உடன் சென்ற = அந்நாளில் தன்னுடன் வந்த ( அன்று = இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்த நாள் )
அந்நாளில் தன்னுடன் வந்த தன் அருளை பெற தகுதியான அடியவர்
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்ஒன்ற ஒன்ற உடன் = இறைவனுடன் ஒன்ற/இனைய

தன்னுடன் பொருந்த பொருந்த அடியவர்களோடு இரண்டற கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்எய்த = அடைய

வந்திலாதார் = வர இயலாதவர்கள்

எரியில் = ஞானத்தீ என்ற எரியில்

இறைவனது அருளை அடைய வர இயலாதவர்கள் ஞானத்தீயில் பாய்ந்து தன்னோடு கலக்கவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்மால் = வேட்கை , ஏக்கம்

மயக்கம் எய்தியும் = மயக்கம் அடைந்தும்
தம் மீது வேட்கை அதிகமாகி தன்னோடு கலக்க இயலாததால் மயக்கம் அடைந்தும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்பூதலம் அதனில் = பூமி அதனில்
உடலை விட்டு நீங்க பூமி அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி ⁠135கால் விசைத்து ஓடி = காலால் வேகம் எடுத்து ஓடி

கடல் = பேரானந்த பரமானந்த கடல்

மண்டி = வேகமாக சென்று , மிக்குச்சென்று

காலால் வேகம் எடுத்து ஓடி பேரானந்த பரமானந்த கடல் உள் புக வேகமாக சென்று
நாத நாத என்று அழுது அரற்றிநாத நாத = இறைவா இறைவா

அரற்றி = வாய்விட்டு புலம்பி

இறைவா இறைவா என்று அழுது வாய்விட்டு புலம்பி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்பாதம் எய்தினர் = தன் உடலை நீத்தவர்கள்

பாதம் எய்தவும் = இறைவன் பாதத்தை அடையவும்
தன் உடலை நீத்தவர்கள் இறைவன் பாதத்தை அடையவும்
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்றுபதஞ்சலி = பதஞ்சலி முனிவர் ( ஆதிசேஷன் மறுஅவதாரம் )

பரம = மேலான , இறைவன்

நாடக = நாடகம்
பதஞ்சலி முனிவர் அவருக்கு அருளிய தில்லை திரு கூத்து நாடகம் என்று
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
இதம் = இருதயம் , இதயம் , உள்ளம்

சலித்தல் = நிலையில்லாது போதல்
( இறைவனை அடைய இயலாதவர் ) இதயம் சலிப்பு அடைந்தவர்கள் ஏங்கினர் ஏங்கி நிற்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் ⁠140எழில் = எழுச்சி

அம்பொன் = அழகிய பொன்

எழுச்சி பெறும் இமயமலையின் தன்மை உடைய அழகிய பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்பொலிதரு = (பொன் )வேய்ந்து விளங்கும்

புலியூர் = புலிக்கால் முனிவர் சிவபெருமானை சிதம்பரத்தின் கண் வழிபட்டதால் தில்லை புலியூர் என்று அழைக்கப்பட்டது
(பொன் )வேய்ந்து விளங்கும் தில்லைஅம்பலத்தில் நடனம் செய்த
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்குகனிதரு செவ்வாய் = கொவ்வைப்பழம் போல சிவந்த வாய் உடைய

உமையொடு = அன்னை பார்வதிதேவியோடு

காளிக்கு = காளி அன்னைக்கும்
கொவ்வைப்பழம் போல சிவந்த வாய் உடைய அன்னை பார்வதிதேவியோடு காளி அன்னைக்கும்
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகைஅருளிய = அருள் செய்த

திருமுகத்து = இறைவன் திருமுகம்

சிறுநகை = புன்முறுவல்
அருள் செய்த இறைவன் திருமுகம் அழகு உடையதாகவும் புன்முறுவல் கொண்டதாகவும்
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
ஈண்டிய = இறைவன் திருவடிகளை சரண் அடைந்த
இறைவன் திருவடிகளை சரண் அடைந்த அடியவர்களோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் ⁠145பொலிதரு புலியூர் = பொலிவாக விளங்குகின்ற தில்லைனுள்
பொலிவாக விளங்குகின்ற தில்லைனுள் புகுந்து இனிதாக எழுந்து அருளினான்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனேஒலி = தெய்வப்பாடல்களின் ஓலி , இசை ஓலி , சிவ சிவ எனும் ஓலி

ஒலி தரு கைலை = மந்திர ஒளி பயிலும் கயிலை

கிழவோன் = உரிமையுடையவன்

உயர்கிழவோன் = உயர்ந்த இறைவன்
தெய்வப்பாடல்களின் ஓலி , இசை ஓலி , சிவ சிவ எனும் ஓலி மற்றும் மந்திர ஒளி பயிலும் கயிலை மலையின் உயர்ந்த இறைவனே
திருச்சிற்றம்பலம்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.


சைவ மகுடம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையாறா போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெணுரு ஆனாய் போற்றி!

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி!
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி!

குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளுந்தானும் உடனே காண்க!

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

இன்பமே சூழ்க!!
எல்லோரும் வாழ்க!!!
திருச்சிற்றம்பலம்
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து.



No comments:




Tuesday, February 8, 2022

சித்தர்கள் ஆட்சி - 48 : திருவாசகம் - 03 - திருவண்டப் பகுதி






திருச்சிற்றம்பலம்

ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு
சிறப்புப் பாயிரம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
திருவாசகம் - 03 - திருவண்டப் பகுதிபதவுரைபொருளுரை
1-12 இறைவனின் பெருமையும் வலிமையும் புகழும் வரிகள்
அண்டப் பகுதியி ணுண்டைப் பிறக்கம்அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அண்டப் பகுதி = அண்டம் எனப்படும் இந்த பேருலகின் பகுதி

உண்டை = உருண்டை

அண்டம் என்பது முட்டை வடிவத்தை குறிக்கும். அதனால் உண்டை ( உருண்டை ) என்றார்.

பிறக்கம் = குவியல், தொகுதி
அண்டம் எனப்படும் இந்த பேருலகம் உருண்டை ஆகிய வடிவம் ஆனது
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சிஅளப்பு = அளவு எடுத்தல்

அளப்பருந் தன்மை = அளப்பு அரும் தன்மை = அளவு எடுக்கவே இயலாத தன்மை

வளப்பெருங் காட்சி = வளம் மிக்க பெரும் காட்சி
அளவு எடுக்கவே இயலாத தன்மை உடன் கூடிய வளம் மிக்க பெரும் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

ஒன்றனுக்கு ஒன்று = ஒன்றுக்கு ஒன்று

நின்றெழில் = நின்ற எழில் ( அழகு )

பகரின் = பகர்தல் = சொல்லுதல்
ஒன்றுக்கு ஒன்று நின்ற அழகு குறித்து சொன்னால்
நூற்றொரு கோடி மேல்பட விரிந்தனநூற்றொரு கோடியின் = நூற்று ஒரு கோடி - அதாவது எல்லையே இல்லாத ஒன்று

நூற்று ஒரு கோடிக்கு மேல் , அதாவது எல்லையே இல்லாது விரிந்த இந்த உலகம்
இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச் 5இன்னுழை கதிரின் நுன் அணுப் புரையச் 5

இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5

இல் நுழை = இல்லங்களின் நுழையும்

கதிரின் = சூரிய கதிர்களின்

துன் அணு = நுண்ணிய நெருங்கின அணுக்கள்

புரைய = ஒப்ப , அதுபோலும் ( இரு பொருள்கள் ஒத்திருப்பதை உணர்த்தும் உவம உரு )
இல்லத்தில் நுழையும் சூரிய கதிர்களின் நுண்ணிய நெருங்கின அணுக்கள் போலும்
சிறிய வாகப் பெரியோன் தெரியில்சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

சிறிய ஆகப் = அவற்றை எல்லாம் சிறியது போல் ஆக

பெரியோன் = இறைவன்

தெரியின் = இருப்பவன்
அந்த பேரண்டங்கள் எல்லாம் ஒரு அணு குவியல் போல சிறியது போல் இறைவன் பாதத்தில் உள்ளன.

இறைவன் பெருமை மனதுக்கும் சொல்லுக்கும் எட்டா இயல்புடையது.
வேதியன் றொகையோடு மாலவன் மிகுதியும்வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்

வேதியன் தொகையொடு = பல பிரம்மாகளின் கூட்டத்தோடு

மாலவன் மிகுதியும் = பல திருமால்களின் கூட்ட மிகுதியும்
பல பிரம்மாகளின் கூட்டத்தோடு பல திருமால்களின் கூட்ட மிகுதியும்
தோற்றமும் சிறப்பு மீற்றோடு புணரியதோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

தோற்றமும் = இந்த உலக படைப்பும்

சிறப்பும் = அந்த படைப்பின் சிறப்பும்

ஈறு = பேரழிவுக்கு முன்னர் உண்டாகும் சிறு சிறு அழிவு

புணரிய = சேர்ந்த
இந்த உலக படைப்பும், அந்த படைப்பின் சிறப்பும் , அண்ட பேரழிவுக்கு முன்னர் உண்டாகும் சிறு சிறு அழிவுகளும் சேர்ந்த
மாப்பெ றூழியு நீக்கமு நிலையுஞ்மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்


மாப்பேர் = மிகப்பெரிய

ஊழி = பேரழிவுக்காலம்

மாப்பேர் ஊழி = இந்த அண்டத்தின் பேரழிவுக்காலம்

நீக்கமும் = அந்த பேரழிவுக்காலதின் பின்னர் அண்டம் புதிதாக தோன்றுதலும்

நிலையும் = புதிதாக தோன்றிய அண்டம் நிலைத்த தன்மை பெறுதலும்
இந்த அண்டத்தின் மிகப்பெரிய பேரழிவுக்காலமும் , அந்த பேரழிவுக்காலதின் பின்னர் அண்டம் புதிதாக தோன்றுதலும் , புதிதாக தோன்றிய அண்டம் நிலைத்த தன்மை பெறுதலும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் 10சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

சூக்கம் = சூக்ஷும / சூக்குமம் / நுண்மை = பருப்பொருளின் நுண்ணியவடிவம் ( கண்ணால் பார்க்க இயலாத )

தூலம் = ஸ்தூலம் = கண்களால் பார்க்கக்கூடிய பெரிய பொருள்

சூறை = சுழல்

மாருதம் = காற்று

சூறை மாருதம் = சுழல் காற்று = சூறாவளி
பருப்பொருளின் நுண்ணியவடிவமும் , பருப்பொருளின் பெரிய அகண்ட வடிவமும் , சுழல் காற்றினால்
தெறியது வழியிற்
எறியது வளியின்

எறி = வீச்சு

வளி = சிறு காற்று
சிறு காற்று வீச்சு போல
கொட்கப் பெயர்க்கும் குழகன் ; முழுவதும்கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்

கொட்க = சுழல

பெயர்க்கும் = நிலைபெயர்கின்ற

குழகன் = அழகன் சிவபெருமான்
சுழல வைத்து நிலைபெயர்கின்ற வகையில் வைக்கும் அழகன் சிவபெருமான் , முழுவதும்
13 - 16 முத்தொழில் முதல்வன் புகழ் பாடும் வரிகள்
படைப்போற் படைக்கும் பழையோன் ; படைத்தவைபடைப்போன் படைக்கும் பழையோன் ; படைத்தவை

முழுவதும் படைப்போன் = எல்லாவற்றையும் படைபவனாகிய பிரமன்

படைக்கும் = உருவாகும்

பழையோன் = மிகவும் தொன்மை வாய்ந்தவன் எம் ஈசன்

படைத்தவை = அங்ஙனம் படைக்கப்பட்ட
எல்லாவற்றையும் படைபவனாகிய பிரமனை உருவாகும் எம் ஈசன் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தவன்
காப்போற் காக்குங் கடவுள் ; காப்பவைகாப்போன் காக்கும் கடவுள் ; காப்பவை

காப்போன் = பாதுகாப்பவன்

காக்கும் கடவுள் = திருமால் , மஹா விஷ்ணு

காப்பவை = அங்ஙனம் காக்கப்பட்ட பொருள்களை
அங்ஙனம் படைக்கப்பட்ட பொருள்களை காக்கும் கடவுள் ஆன மஹா விஷ்ணுவையும் காக்கும் கடவுள் எம் ஈசன்
கரப்போன் , கரப்பவை கருதாக் 15கரப்போன் = உரிய காலத்தில் அதன் மூலப்பொருள்களில் ஒடுக்கும் இறைவன்

கரப்பவை கருதாக் = அங்ஙனம் ஒடுக்கப்பட்டவற்றை பற்றி எந்த நினைப்பும் இல்லாத
அங்ஙனம் காக்கப்பட்ட பொருள்களை உரிய காலத்தில் அதன் மூலப்பொருள்களில் ஒடுக்கும் இறைவன்
கருத்துடைக் கடவுள், திருத்தகும்கருத்துடைக் கடவுள் = (அழிப்பவற்றை நினையாத) கருத்தை உடைய கடவுள்

திருத்தகும் = சிறப்பு பொருந்திய
(அழிப்பவற்றை நினையாத) கருத்தை உடைய கடவுள் , சிறப்பு பொருந்திய
17- 19 வீடு பேற்றுக்கும் ( முக்திக்கும்) உரிய இறைவன்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்



அறுவகைச் சமயத்து = ஆறு + சமயம் = அறுசமயம்.இந்து மதத்தை மக்கள் வழிபடும் கடவுளரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளகப் பிரித்துள்ளனர்.அவைகளுக்கு மொத்தமாக அறுசமயம் என்று பெயர்.இவைகளுக்கு தனித்தனியாக வழிபாட்டு முறைகளும் சொல்லும் மந்திரங்களும் வேறுபடும்.அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை).

அறுவகை யோர்க்கும் = ஆறு வகை சமய பிரிவினருக்கும்

ஆறு சமயம் மற்றும் ஆறு வகை சமய பிரிவினருக்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதிவீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி

வீடுபேறாய் நின்ற = முக்தி அளிக்கும் ( சிவபுரம் ) பேரின்ப வீடுகளாக நின்ற

விண்ணோர் பகுதி = தேவர்களின் பகுதிகள்
முக்தி அளிக்கும் ( சிவபுரம் , விஷ்ணுபுரம் போன்ற ) பேரின்ப வீடுகளாக நின்ற தேவர்களின் பகுதிகள்
கீடம் புரையும் கிழவோ நாடொறும்கீடம் புரையும் கிழவோன், நாள் தோறும்

கீடம் = புழு

புரையும் = போன்ற, ஒத்த

கீடம் புரையும் = ( தேவர்கள் பகுதிகள்) புழுக்களை போல/ஒத்த

கிழவோன் = உரிமையுடையோன்

நாடொறும் = நாள் தோறும்
தேவர்கள் பகுதிகள் புழுக்கள் போல சிவபுரம் என்ற பெரிய நகரதை உடைய உரிமையுடையோன்
20 - 28 பஞ்ச பூதங்களுக்கும் ஆற்றல் தருபவன் இறைவன்
அருக்கனிற் சோதி யமைத்தோன்;திருத்தகு 20
அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20

அருக்கனின் = சூரியனில்

திருத்தகு = அழகு பொருந்திய

இறைவன் சூரியனில் ஒளியை உள்புகுத்தி ஒளிரவைத்தார் , அழகு பொருந்திய
மதியில் தண்மை வைத்தோன், திண்திறல்மதியில் தண்மை வைத்தோன், திண்திறல்


மதியில் = சந்திரனில்

திருத்தகு மதி = சிவபெருமானின் சிகையை அழகுபடுத்துவதால் சந்திரன் , அழகு பொருந்திய மதி என்று பெயர்

தண்மை = குளிர்ச்சி

திண்திறல் = வலிய வெற்றியை உடைய
அழகு பொருந்திய மதியில் குளிர்ச்சியை உண்டாக்கியவன் இறைவன்
தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர்வெம்மை = வெப்பம்

பொய்தீர் = பொய் அற்ற ( பொய்யாகாமல் )
வலிய வெற்றியை உடைய தீயில் வெப்பம் உள் வைத்த இறைவன்
வானில் கலப்பு வைத்தோன், மேதகுவானில் = ஆகாயத்தில்

கலப்பு = மற்ற மூலப்பொருள்கள்

மேதகு - உயர் திரு
பொய்யாகாமல் உள்ள ஆகாயத்தில் மற்ற மூலப்பொருள்களை வைத்தவன் இறைவன்
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்

ஊக்கம் = முயற்சி. இங்கு வீசுதலாகிய முயற்சியை குறிக்கும்.

நிழல் திகழ் = நிழல் பொருந்திய
வாயுவிடத்தில் மேம்பட்ட வலிமையளிக்கும் வீசும் சக்தியை அருளியும்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25

நீரில் = தண்ணீரில்

இன்சுவை = இனிய சுவை

நிழல் பொருந்திய தண்ணீரில் இனிய சுவை வைத்தவவன் இறைவன் ஈசன்
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்றுதிண்மை = வலிமை

வெளிப்படையாக மண்ணில் வலிமையை வைத்தவன்
எனைப் பலகோடி எனைப் பலபிறவும்பலகோடி = பலகோடி பொருள்களைஎவ்வளோவோ பல கோடியாகிய எண்ணில் அடங்காத பல பிற பொருள்களிலும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்றுஅவ்வயின் = அப்பொருள்களின் தன்மையில்

அஃதான்று = அங்கனமுமன்றி , அது மட்டும் இல்லாமல்
அந்த அந்த பொருள்களின் தன்மையை அந்த அந்த பொருள்களின் அடைத்து வைத்து
29 - 65 இறைவன் அருமை பெருமைகளை காண்க
முன்னோன் காண்க, முழுதோன் காண்ககாண்க = வெளிப்பட்டு அருளுபவன் அன்பர்க்கு , அறிந்துகொள்க

முன்னோன் = அனைத்து பொருளுக்கும் அனைத்து உயிருக்கும் முன்னோன்

முழுதோன் = அனைத்து பொருள்களையும் அனைத்து உயிர்களையும் உடையவன்
யாவற்றுக்கும் முன்னோனுமவன் அவன் வெளிப்பட்டு அருளுபவன் என அறிந்துகொள்க. எல்லாமும் அவனே ஆனவன் ஆக வெளிப்பட்டு அருளுபவன் அறிந்துகொள்க
தன்நேர் இல்லோன் தானே காண்க 30தன்நேர் = தனக்கு நிகர்தனக்கு நிகர் யாரும் இல்லாதவனை அறிந்துகொள்க
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்கஏனம் = பன்றி

எயிறு = பல்

அணிந்தோன் = மாலையாக அணிந்தவன்

(பன்றியின் பல்லை அணிந்த புராணம்)
பன்றி உருவம் கொண்ட திருமாலிடம் இருந்து பல்லைபிடுங்கி மாலையாக அணிந்தவன் இறைவனை அறிந்துகொள்க
கானம் புலியுரி அரையோன் காண்ககானம் = காடுகளில் வாழ்கின்ற

புலியுரி = புலி உரி = புலியின் தோல்

அரையோன் = தனது இடுப்பில் அணிந்தவன்
காடுகளில் வாழ்கின்ற புலியின் தோலை தனது இடுப்பில் வெற்றிச்சின்னமாக அணிந்தவனை அறிந்துகொள்க
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்நீற்றோன் = இறைவன் பராமச்சரியனாக வந்தபோது திருநீறு தரித்து வந்தமையால் நீற்றோன் என பெயர்.
உடம்பெலாம் திருநீறு தரித்தோன்

நினைதொறும் = நினைக்கும் பொழுது
உடம்பெலாம் திருநீறு தரித்தோன் காண்க. இறைவனை நினைக்கும் பொழுது நினைக்கும் பொழுது
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்ஆற்றேன் = பொறுக்கமாட்டேன்

அந்தோ கெடுவேன் = அப்பிரிவினையை தாங்கமுடியாமல் கெட்டுஅழிவேன்
இறைவனை நினைக்கும் பொழுது நினைக்கும் பொழுது அந்த பிரிவை பொறுக்கமாட்டேன் காண்க.அப்பிரிவினையை தாங்கமுடியாமல் கெட்டுஅழிவேன்
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35இன்னிசை = இனிய இசை

இசைத்தோன் = இசையாக இணைந்து இருப்பவன்
இனிய இசை வீணையில் கலந்து இருப்பதுபோல , அணைத்து உயிர்களிலும் கலந்து இருந்த இறைவன் காண்க
அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்கஅன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க

அன்னது ஒன்று = அப்படிப்பட்ட வீணையின் இசை ஒன்றை

அவ்வயின் = அந்த வீணையில் இருந்து

அறிந்தோன் = அனைத்தும் அறிந்தவன் இறைவன்
அப்படிப்பட்ட அந்த வீணையில் இருந்து வீணையின் இசை ஒன்றை அனைத்தும் அறிந்தவன் இறைவன் காண்க
பரமன் காண்க, பழையோன் காண்கபரமன் = எல்லா பொருள்களுக்கும் மேலான இறைவன்

பழையோன் = எல்லா பொருள்களுக்கும் ஆதி பழமையான இறைவன்
எல்லா பொருள்களுக்கும் மேலான இறைவனை காண்க, எல்லா பொருள்களுக்கும் ஆதி பழமையான இறைவனை காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்கபிரமன்மால் = பிரமன், திருமால்

பெரியோன் = மிக உயர்ந்த இறைவன்

பிரமன், திருமால் ஆகிய தெய்வங்களால் காண இயலாத மிக உயர்ந்த இறைவனை காண்க
அற்புதன் காண்க, அநேகன் காண்கஅற்புதன் காண்க= வியக்கத்தக்க இயல்புகளை உடைய இறைவனை காண்க

அநேகன் காண்க = உயிர்களின் பலவகை வேறுபாடுகளை உடைய இறைவனை காண்க
வியக்கத்தக்க இயல்புகளை உடைய இறைவனை காண்க, உயிர்களின் பலவகை வேறுபாடுகளை உடைய இறைவனை காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40பதம் = அளவு , தரம்
சொற்பதங் = சொல் பதம் = வாசகத்திற்கு எட்டிய பொருள்
சொற்பதங் கடந்த = சொல் பொருளுக்கு அப்பாற்பட்ட

தொல்லோன் = மிக மிகப்பழையவன்
சொல் பொருளுக்கு அப்பாற்பட்ட மிக மிகப்பழையவன் இறைவனை காண்க
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்கசித்தம் = மனம்
சேட்சியன் = தூரத்தில் உள்ளவன்
மனதால் செல்ல இயலாத தூரத்தில் உள்ள இறைவனை காண்க
பத்தி வலையில் படுவோன் காண்கபடுவோன் = அடைபடுவோன்
அடியர்வர்களின் பத்தி வலையில் அடைபடுவோன் காண்க ( சொல்லாலும் , மனதாலும் அடங்காத இறைவன் பக்தி என்னும் வலையில் அடைபடுபவன் )
ஒருவன் என்றும் ஒருவன் காண்கஒருவன் = ஒப்பற்றவன்
ஒரே ஒருவனே என்று கூறப்படும் ஒப்பற்ற இறைவனை காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்கவிரி = பறந்து விரிந்த

பொழில் = உலகம்

விரிந்தோன் = அண்ட சராசரங்களும் அத்தனையும் விஞ்சி நிறைந்து உள்ள இறைவனை

விரிபொழில் = மண் முதல் விண் வரை விரிந்த உலகம்
மண் முதல் விண் வரை விரிந்த உலகம் முழுவதும் அண்ட சராசரங்களும் அத்தனையும் விஞ்சி நிறைந்து உள்ள இறைவனை காண்க
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45ஐயோன் = மிக நுண்ணியவன்
அணுக்கள் தரும் நுண்ணிய தன்மையிலும் அதனைவிட மிக நுண்ணியவன் இறைவனை காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க

இணைப்பு = ஒப்பு

அரும் = இல்லாத

ஈசன் = தலைவன்
ஒப்பு இல்லாத பெருமை உடைய தலைவனை காண்க
அரிய அதில் அரிய அரியோன் காண்கஅரியதில் அரிய அரியோன் காண்க


அரியதில் = மிக அரிய பொருள்

அரியோன் = அரியவன்
மிக அரிய பொருள் அதனுள் அரியவனாகிய அரியவன் இறைவன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்கமருவி = கலந்து

வளர்ப்போன் = உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களை காப்பவன்
இந்த உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் கலந்து காப்பவனை காண்க
நூல்உணர்வு உணரா நுண்ணியன் காண்கநூல்உணர்வு = அறநூல்களினால் உணரக்கூடிய உணர்வு

அறநூல்களினால் உணரக்கூடிய உணர்வுகளினால் உணர இயலாத மிகவும் நுணுக்கமானவனை காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50மேலோடு கீழாய் = ஆகாயம் பூமிமேலும் கீழும் என எங்கும் நிறைந்தவன் காண்க
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்கஅந்தமும் = முடிவும்

ஆதியும் = ஆரம்பமும்

அகன்றோன் = இல்லாதவன்
தனக்கு முடிவும் ஆரம்பமும் இல்லாதவன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்கபந்தமும் = ஆன்மாக்களுக்கு மும்மலம் என்ற பந்தம்

வீடும் = ஆன்மாக்களுக்கு முக்தி எனும் வீடு

படைப்போன் = உருவாக்குபவன்

ஆன்மாக்களுக்கு மும்மலம் என்ற பந்தமும் முக்தி எனும் வீட்டையும் உருவாக்குபவனை காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்கநிற்பதுஞ் = நிலையற்ற பொருள்கள்

செல்வதும் = அசையும் பொருள்கள்
அசையும் பொருள்கள் மற்றும் அசையா பொருள்களினுள் வியாபித்து நின்ற இறைவனை காண்க
கற்பமும் இறுதியும் கண்டோன் காண்ககற்பமும் = படைக்கும் கடவுள் பிரம்மனை உருவாக்கி கற்பகாலம் எனும் ஆதி காலம்

இறுதியும் = இந்த அண்ட பேரண்டமும் அழிந்து ஒடுங்கும் இறுதி காலம்

கண்டோன் = செய்தோன்
படைக்கும் கடவுள் பிரம்மனை உருவாக்கி கற்பகாலம் எனும் ஆதி காலம் ,இந்த அண்ட பேரண்டமும் அழிந்து ஒடுங்கும் இறுதி காலம் என்ற இந்த இரண்டு காலத்தையும் செய்தோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55யாவரும் = எல்லா உயிர்களும்

உறும் = மிகுதி

எல்லா உயிர்களும் அருள் மிகுதியாக பெற அருளும் ஈசன் காண்க
தேவரும் அறியாச் சிவனே காண்கதேவரும் அறியா = தேவராக இருந்தும் அன்பு இல்லாதவரால் அறிய இயலாத
தேவராக இருந்தும் அன்பு இல்லாதவரால் அறிய இயலாத எம் இறைவன் சிவனே காண்க
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்கபெற்றி = தன்மை

பெற்றியன் = தன்மைகளை பெற்றவன்
பெண் ,ஆண் , அலி எனும் தன்மைகளை பெற்றவனை காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்ககண்ணால் = மெய்ஞ்ஞானம் இல்லாத இவுலக பொருள்களை மட்டும் பார்க்கும் எனது ஊனக்கண்
யானும் = நானும்
கண்டேன் = பார்த்தேன்
மெய்ஞ்ஞானம் இல்லாத இவுலக பொருள்களை பார்க்கும் மட்டும் எனது ஊனக்கண்ணால் நானும் என் இறைவனை கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்கநனி = மிகுதி

( இறைவனை நீரூற்றாகவும் அருளை நீராகவும் உருவகம் செய்து மனைக்கவாசகப்பெருமான் அருளியுள்ளார் )
இறை அருள் மிகுதியாக சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60கருணை = தன்னை ஆட்கொள்ள வேண்டி இறைவன் இந்த நிலவுலகத்தில் தனது அருள் செறிந்த பாதத்தை வைத்தத கருணை
எம் இறைவன் கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியல் சேவடி தீண்டினன் காண்கபுவனி = இந்த நிலவுலகம்

சேவடி = இறைவன் திருவடிகள்
இந்த நிலவுலகதில் இறைவன்தின தன் திருவடிகளால் தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்கயானும் = நானும்

தேறினன் = அறிந்துகொண்டேன்
இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது எம் இறைவன் சிவன் என நானும் அறிந்துகொண்டேன் காண்க
அவன்எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
அவன் = எம் இறைவன் ஈசன்

ஆட்கொண்டு = அடியாராக ஏற்றுக்கொள்ளுதல்

எம் இறைவன் ஈசன் எனை அடியாராக ஏற்றுக்கொண்டு அருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்ககுவளைக் கண்ணி = நீல கரும் குவளை ( கருங்குவளை ) மலர் போல கண்களை உடைய உமை அம்மை ஆகிய பார்வதி தேவி

கூறன் = உமையம்மையை தனது ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான்
நீல கரும் குவளை ( கருங்குவளை ) மலர் போல கண்களை உடைய உமை அம்மை ஆகிய பார்வதி தேவியை தனது ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65அவளுந் தானும் = அம்மையும் அப்பனும் ஒன்றி காட்சியளிக்கும்
அம்மையும் அப்பனும் ஒன்றி காட்சியளிக்கும் விளங்குதலை உடனே காண்க
66 - 95 பரம ஆனந்த பெரும் கடல் அருள் பொழியும் இறைவன் வாஅழ்க ( சிவார்ச்சனை மகிமை )
பரமா னந்தம் பழம் கட லதுவேபரமானந்த பழம் கடல் = முக்தியென்னும் பேரின்பத்தை அளிக்கக்கூடிய மாபெரும் பழமை வாய்ந்த கடல்
முக்தியென்னும் பேரின்பத்தை அளிக்கக்கூடிய மாபெரும் பழமை வாய்ந்த கடல் அதுவே
கருமா முகிலில் தோன்றித்கருமா = கரி + மா

கரி = கரிய

மா = பெரிய

முகில் = மழைமேகம்
கரிய பெரிய மழைமேகம் போல தோன்றி
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்திருவார் பெருந்துறை வரையில் ஏறித்

திரு ஆர் பெருந்துறை = ஆவுடையார் கோயில்
அருள் அழகு நிறைந்த திரு ஆர் பெருந்துறை மலையில் ஏறி

(இங்கு ஆலயம் மலையாக உருவாக்கப்படுத்தப்பட்டுள்ளது )
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரியதிருத்தகு = திரு தரும் = இறைவன் தரும்

மின்ஒளி = அருள் ஆகிய ஒளி

திசைதிசை = அனைத்து திசைகளிலும்

விரிய = பரவ
இறைவன் தரும் அருள் ஆகிய ஒளி அனைத்து திசைகளிலும் பரவ
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70ஐம்புலம் பந்தனை = ஐந்து புலங்களினால் அடைக்கப்பட்ட இந்த பந்த உடம்பை

வாள் அரவு இரிய = வாள் போன்ற நீண்ட கொடிய பாம்புகள் கெட்டு ஓட ( ஐந்து தலை பாம்பு என்று இந்த ஐந்து புலன்களை உருவக்கப்படுத்துகின்றார் மாணிக்கவாசகப்பெருமான் )
ஐந்து புலங்களினால் அடைக்கப்பட்ட வாள் போன்ற நீண்ட கொடிய பாம்புகள் கெட்டு ஓட
வெம் துயர் கோடை மாத்தலை கரப்பவெம் துயர் கோடை = வெப்பம் ஆகிய இரு வினை துயர்

மாத்தலை கரப்ப = பெரிய தலையை வெளியில் காட்டாதவாறு
இரு வினை உடைய இந்த பிறவியின் கொடும் துன்பமாகிய கோடைகாலம் தனது பெரிய தலையை வெளியில் காட்டாதவாறு மறைத்துக்கொள்ள
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிரஎழில் = எழுச்சி

நீடு எழில் = அடியவர்கள் இறைவன் கருணையால் பொலிவு எழுச்சி பெற்று விளங்குதல்

வாள் ஒளி = மிக்க ஒளி
அடியவர்கள் இறைவன் கருணையால் பொலிவு எழுச்சி பெற்று மிக்க ஒளி போன்று ஒளிர
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்துகோபம் = பட்டுப்பூச்சி , இந்திரகோபப்பூச்சி
எங்களின் பல பிறவிகள் போன்ற இந்திரகோபப்பூச்சிகளை மிகுவித்து
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்முரசு ஏறிந்து = ஓங்கி முரசை ஒலிக்கச்செய்து

மாப்பெருங் கருணையில் = இறைவனின் மிகப்பெரிய கருணை
ஓங்கி முரசை ஒலிக்கச்செய்து போல இறைவனின் மிகப்பெரிய கருணை ஒளித்து முழங்கி
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75பூப்புரை = அடியவர்கள் பூப்போன்ற கைகள்

அஞ்சலி = கைகூப்பி வணங்கல்

காந்தள் = காந்தள் மலர்
அடியவர்கள் பூப்போன்ற கைகள் காந்தள் மலர் போன்று கைகூப்பி வணங்க
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்எஞ்சா = குறையாத

இன்னருள் = இனிய அருள்

நுண்துளி கொள்ளச் = நுண்ணிய துளி போல
இறைவனின் குறையாத இனிய அருள் நுண்ணிய துளி போல
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்செஞ்சுடர் = இறைவனின் போராளி ஆகிய அருள்

திசைதிசை = எல்லா திசைகளிலும்

தெவிட்டல் = நிறைதல்
இறைவனின் பேரொளி ஆகிய அருள் வெள்ளம் போல எல்லா திசைகளிலும் நிறைந்து
கேதக் குட்டம் கையற வோங்கிகேத குட்டம் கை அற ஓங்கி

கேதம் = துன்பம்

கேத குட்டம் = துன்பமாகிய சிறு குளம் ( குட்டை) ( யான் எனது என்ற துன்பமாகிய குளம் )

கை அற ஓங்கி = வரையுற ஓங்கி = மீளுதல் / அரிதாதல் / கையறுதல்
பெரும் மழை வெள்ளத்தில் சிறு குளம் , குட்டைகள் காணாமல் போவது போல , இறைவனின் அருளின் வெள்ளத்தில் நமது துன்பமாகிய சிறு குளம் மறைந்துவிடும்
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினைஇருமு = இரு மூன்று = 6

இருமுச் சமயத்து = ஆறு சமயம்

பேய்த் தேரினை = கானல் நீரினை
ஆறு சமையங்களாகிய கானல் நீரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80நீர்நசை = நீர் விடாய் , தண்ணீர் தாகம்

நெடுங்கண் = நீண்ட கண்

மான்கணம் = மான் கூட்டங்கள்
தண்ணீர் தாகம் எடுத்து ஓடிவரும் நீண்ட கண்களை உடைய மான் கூட்டங்கள்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்தவப்பெரு வாயிடைப் பருகி = மிகப்பெரிய தம் வாயினால் குடித்து ( தவம் ஆகிய பெரிய வாயினால் இறைவன் அருளை குடித்து )

தளர்வொடும் = தளர்ச்சி உடைய நடை
மிகப்பெரிய தம் வாயினால் குடித்து , தம் தளர்ச்சி உடைய நடையால்
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தனஅவம் = கேடு

தாபம் = விடாய் , தாகம்

அசைதல் = வருந்தல்
கேடு விளைவிக்கும் பெரும் தாபம் நீங்காது வருந்தின
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்ஆயிடை = அந்த வேளையில் , அவ்விடத்தே

வானப் பேரியாற்று = வானத்தில் (இருந்து வந்த இறை அருள் என்ற ) பெரிய ஆற்றின்

அகவயின் = உள்ளே
அந்த வேளையில் வானத்தில் (இருந்து வந்த இறை அருள் என்ற ) பெரிய ஆற்றின் உள்ளே
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச்பாய்ந்து எழுந்து = புகுந்து பெருகி

இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் = இன்பமாகிய பெரும் சுழியை சுழித்திக்கொண்டு சென்று
புகுந்து பெருகி இன்பமாகிய பெரும் சுழியை சுழித்திக்கொண்டு சென்று
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85சுழித்து எம் பந்தம் மாக்கரை பொருது அலைத்து இடித்து


பொருது = ஒன்றுதல், மோதுதல்
சுழித்து எமது பந்தம் என்னும் பெரிய கறைகளை மோதி அலைத்து இடித்து
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்ஊழ் ஊழ் = முறை முறையாய்

ஓங்கிய = வளர்ந்த

நங்கள் = எங்கள்
முறை முறையாய் வளர்ந்த எங்கள்
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்துஇருவினை மாமரம் = நல்ல வினை ( புண்ணியம்) மற்றும் தீய வினை ( பாவம் ) என்ற பெரிய மரங்களை
நல்ல வினை ( புண்ணியம்) மற்றும் தீய வினை ( பாவம் ) என்ற பெரிய மரங்களின் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்உருவ = அழகிய

அருள் நீரோட்டா = அருள் நீர் ஓட்டம் = இறைவன் அருள் வெள்ளம் பாய்தல் = இறைவன் உயிர்களுக்கு அருள் நீரினை செலுத்துதல் என்று பொருள் கொள்ள வேண்டும்

அருவரைச் = ஏறுவதற்கு அரிதான கடினமா மலை
அழகிய இறைவன் உயிர்களுக்கு அருள் நீரினை செலுத்தி , ஏறுவதற்கு அரிதான கடினமா மலையில்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்சந்து = சந்தனமரம்

வான்சிறை = பெரிய அணை

மட்டவிழ் = மட்டு அவிழ் = (மட்டு)தேன் (அவிழ் )மலரச் செய்

( ஏறுவதற்கு அரிதான கடினமா மலை போல ) சந்தனத்தால் ஆன மிகப் பெரிய அணை கட்டி , தேன் மலரச் செய்யும்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90வெறி மலர் குளம் வாய் கோலி நிறை அகில் 90

வெறி மலர் = நூறு நறுமண நாற்றத்தை உடைய மலர்

மலர் குளம் = இதயம் கமலம் என்னும் குளம்

வாய் = வழி

கோலி = கோலுதல் = உண்டாகுதல் , வளைத்து

நிறை = நிறுத்துதல் , ஐம்பொறிகளையும் அடக்குதல்

அகில் = சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று.

தேன் செறியும் நூறு நாற்றத்தை உடைய இதயம் கமலம் என்னும் குளம் அதனை மலரச் செய்து வழி உண்டாகி , ஐம்பொறிகளையும் அடக்குதல்

தேன் பறக்கின்ற சிவ மனம் வீசும் குளம் உண்டாகி
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்


மாப்புகைக் கரைசேர் = பெரிய புகை உடைய குளத்தின் கரைகள் ( வரப்புகள் )

வண்டுடைக் குளத்தின் = வண்டுகளை உடைய குளத்தில்

அகில் மனம் வீசும் பெரிய புகை உடைய வண்டுகளை உடைய குளத்தின் கரைகள்
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கிமீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி

மீக்கொள = அருள் வெள்ளமானது

மேல்மேல் = மேலும் மேலும்

மகிழ்தலின் நோக்கி = மகிழ்ச்சியை நோக்கி
அருள் வெள்ளமானது மேலும் மேலும் மகிழ்ச்சியை நோக்கி ஆர்ப்பரித்து
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்

அருச்சனை வயல் உள் = வழிபாடு என்னும் வயலின் உள்ளே

அன்புவித்து இட்டுத் = அன்பு என்னும் வித்தை விதைத்து ( அன்பு வித்து இட்டு)
வழிபாடு என்னும் வயலின் உள்ளே அன்பு என்னும் வித்தை விதைத்து
தொண்ட உழவர் ஆரத் தந்ததொண்ட உழவர் ஆரத் தந்த

தொண்ட உழவர் = அடியவர்களை உள்ளவர்களாக இங்கு உருவகப்படுத்துகின்றார் மாணிக்கவாசகப்பெருமான்

ஆரத் தந்த = அடியவர்கள் சிவ போகத்தை பயனை நுகருமாறு
அடியவர்கள் சிவ போகத்தை பயனை நுகருமாறு தந்து அருளிய
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95

அண்டத்து அரும்பெறல் = உலகம் அனைத்தும் பெறுவதற்கு அரிய

மேகன் = மேகம் போல அருள் மழை பொழியும் இறைவன் சிவபெருமான்
உலகம் அனைத்தும் பெறுவதற்கு அரிய மேகம் போல அருள் மழை பொழியும் இறைவன் சிவபெருமான் வாழ்க
96 - 123 இறை பேரின்பத்தில் திளைத்து இறைவன் திருவருளை புகழ்தல்
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்ககரும் = கருமை = பெருமை என்னும் பொருட்டதால்

பணம் = படம் ( நாகம் படம் எடுப்பது )

கச்சை = இடுப்பில் கட்டும் அரைக்கச்சை ( பட்டிகை )

இறைவனை சார்ந்தே இருக்கும் பாம்பு குண்டலினி எனப்படும்
பெரிய படத்தினை உடைய பாம்பை அரைக் கச்சாக அணிந்த இறைவன் வாழ்க
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்கஅரும்தவர் = செய்வதற்கு அறிய தவம் செய்பவர்

ஆதி = முதல்வன்
செய்வதற்கு அறிய தவம் செய்பவர்களுக்கு அருள் செய்யும் முதல்வன் வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்கஅச்சம் = பிறவியால் வரும் அச்சம்உயிர்களின் பிறவி பிணியால் உண்டாகும் பயத்தை நீக்கிய வீரன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்கநிச்சலும் = எப்பொழுதும்

ஈர்த்தாட் கொள்வோன் = தம் அன்பினால் ஈர்த்து உயிர்களை ஆட் கொள்பவன்
எப்பொழுதும் தம் அன்பினால் ஈர்த்து உயிர்களை ஆட் கொள்பவன் வாழ்க
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100சூழ்இருள் துன்பம் = உயிர்களின் இரு வினையால் உண்டகும் பிறவி துன்பம்

துடைப்போன் = நீக்குபவன்
உயிர்களின் இரு வினையால் சூழ்ந்து உண்டகும் பிறவித்துன்பம் நீக்குபவன் வாழ்க
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்கஎய்தினர்க்கு = தன்னை வந்து அடைபவருக்கு

ஆர்அமுது = அரிய அமுதம் = இறைவன் திருவடி அடையும் பேரின்பம்

அளிப்போன் = அளிப்பவன் = வழங்குபவன்
தன்னை வந்து அடைபவருக்கு அரிய அமுதம் ஆகிய இறைவன் திருவடி அடையும் பேரின்பம் என்ற ஒன்றை வாரி வாரி வழங்குபவன் வாழ்க
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்ககூர்இருள் கூத்தொடு =மிக்க இருளை உடைய ஊழிக்காலம் ( அழிவுக்காலம் ) என்ற சிவபெருமான் நடத்தும் கூத்து

குனிப்போன் = பெரும் ஊழிக்காலத்தின் ( அழிவுக்காலம் ) பின் இறைவன் நடத்தும் கூத்து ( உலகத்தை தோற்றுவித்தல் )
மிக்க இருளை உடைய ஊழிக்காலம் ( அழிவுக்காலம் ) என்ற சிவபெருமான் நடத்தும் கூத்து மற்றும் பெரும் ஊழிக்காலத்தின் பின் இறைவன் நடத்தும் கூத்து ( உலகத்தை தோற்றுவித்தல் ) என்ற இரண்டு கூத்தையும் நடத்தும் இறைவன் வாழ்க
பேர்அமைத் தோளி காதலன் வாழ்கபேர் = பெரிய

அமை = மூங்கில் ( இது உமை அம்மையின் தோளுக்கு உவமானப்படுத்தப்பட்டது )
பெரிய மூங்கில் போல தோள்களை உடைய உமை அம்மையின் காதலன் வாழ்க
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்கஏதிலார்ககு = அன்பினால் இயைபில்லாதவருக்கு

ஏதில் = இயைபு (பொருத்தம்)
அன்பினால் இயைபில்லாதவருக்கு தானும் இயைபு இல்லாதவனாகும் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105காதலர்க்கு = அன்புஉடைய அடியவர்களுக்கு

எய்ப்பினில் = கஷ்டகாலம்

வைப்பு = புதையல்
அன்புஉடைய அடியவர்களுக்கு கஷ்டகாலதில் புதையல் போன்ற இறைவன் வாழ்க
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றிநச்சு = நஞ்சு

அரவு = பாம்பு

நம்பன் = இறைவன் ( ஆண்களில் சிறந்தோன்)
நஞ்சு உடைய பாம்பு மகுடி கொண்டு ஆட்டிய இறைவன் போற்றி

( இது ஒரு திருவிளையாடல் )
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றிபிச்சு = பித்து

ஏற்றிய = ஆக்கிய
இறைவன் மேல் என்னை பித்து பிடித்தவன் போல ஆக்கி இவன் பித்தன் என்று சொல்லும்படியான நிலையை உண்டாக்கிய பெரியோனுக்கு வணக்கம்
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசைநீற்றொடு = திருவெண்ணீற்றோடு

நாற்றிசை = நான்கு திசைகளிலும்
திருவெண்ணீற்றோடு திருக்காட்சி அளிக்க வல்லவனுக்கு வணக்கம்
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்நடப்பன நடாஅய்க் = நடப்பனவற்றை நடத்தி, இயங்குபவற்றை இயக்கியும்

கிடப்பன கிடாஅய் = கிடப்பனவற்றை கிடத்தி

நடாஅய்க் = நடத்தி

கிடாஅய் = கிடத்தி
இயங்குபவற்றை இயக்கியும் , கிடப்பனவற்றை கிடத்தி
நிற்பன நிறீஇச் 110நிறீஇ = நிறுத்திநிற்பவற்றை நிற்கவும்
சொல்பதம் கடந்த தொல்லோன்பதம் = அளவு

சொல்பதம் = சொலின் ஆற்றல்

தொல்லோன் = பழமையானவன்
சொலின் ஆற்றல்களை கடந்த பழமையானவன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்உள்ளத் துணர்ச்சி = மனதின் உணர்ச்சி

கொள்ளவும் = உணர்வதற்கு

படாஅன் = அப்பாற்பட்டவன்
மனதின் உணர்ச்சியினால் உணர்வதற்கு அப்பாற்பட்டவன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்கண்முதல் புலனாற் = கண் முதலிய ஐந்து புலன் உணர்ச்சிகளால்
கண் முதலிய ஐந்து புலன் உணர்ச்சிகளால் உணர , காண இயலாதவன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்விண்முதல் பூதம் = ஆகாயம் முதல் ஐந்து பஞ்ச பூதங்கள்

வகுத்தோன் = படைத்தவன்
ஆகாயம் முதல் ஐந்து பஞ்ச பூதங்கள் வெளிப்படையாக தோன்றும்படி படைத்தவன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115பூவில் நாற்றம் = பூ மணம்

போன்றுயர்ந் தெங்கும் = போன்று உயர்ந்து (ஓங்கி) எங்கும் ( எவ்விடத்தும் )
பூவில் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமைஒழிவற நிறைந்து = நீக்கம் இல்லாமல் எங்கும் நிறைந்து

மேவிய பெருமை = பரவிய பெருந்தன்மை
நீக்கம் இல்லாமல் எங்கும் நிறைந்து பரவிய பெருந்தன்மை
இன்று எனக்கு எளிவந்து அருளிஎளிவந்து = எளியவனாய் வந்து
இன்று எனக்கு எளியவனாய் வந்து அருள் செய்து
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்அழி தரும் = அழிவைத்தரும்

ஆக்கை = இந்த உடம்பை

ஒழியச்செய்த = இனிமேல் பிறவி எடுக்காமல் செய்த

ஒண்பொருள் = சிறந்த பொருளானவன்
அழிவைத்தரும் இந்த உடம்பை இனிமேல் பிறவி எடுக்காமல் செய்த சிறந்த பொருளானவன்
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றிஇன்று எனக்கு எளி வந்து இருந்தனன் போற்றி
இன்னாளில் எனக்கு எளிதாக குருவாய் அருளியவனுக்கு வணக்கம்
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120அளிதரும் = அன்பு உருகச்செய்யும்

ஆக்கை = இந்த உடம்பை

செய்தோன் = உருவாக்கியவன்
அன்பு உருகச்செய்யும் இந்த உடம்பை உருவாக்கியவனுக்கு வணக்கம்
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றிஊற்று இருந்து = இன்ப அருள் நீர் ஊற்றாக இருந்து

உள்ளம் களிப்போன் = எனது உள்ளதை மகிழ்ச்சி கொள்ளசெய்பவனுக்கு
இன்ப அருள் நீர் ஊற்றாக இருந்து எனது உள்ளதை மகிழ்ச்சி கொள்ளசெய்பவனுக்கு வணக்கம்
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்ஆற்றா இன்பம் = பெறுவதற்கு மிகவும் அரிதான இன்பம்

அலர்தல் = பரத்தல்
பெறுவதற்கு மிகவும் அரிதான இன்பம் எங்கும் பரந்து அலை வீச செய்து
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்போற்றா = தாங்க இயலாத

ஆக்கையைப் = உடலை

பொறுத்தல் = தங்குதல்

புகலேன் = விரும்பேன்
( மேற்கூறிய அருள் அலையை) தாங்க இயலாத எனது இந்த உடலை இனிமேலும் தங்குதல் நான் விரும்பேன்
124 - 162 காண மாணிக்கம் இறைவன் கையில் கிடைத்த நெல்லிக்கனி ஆனவன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்மரகதம் = பச்சை மரகத மாணிக்க கல்

குவாஅல் = குவியல்

பிறக்கம் = கூட்டம்
பச்சை மரகத கல் குவியலும் , மாமணிக்க குவியலும் ஒன்று சேர்ந்து
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125மின்ஒளி = மின்னல் ஒளி

பொன்னொளி = பொன்ஒளி
மின்னல் ஒளியை தன்னகத்தே கொண்டு பொன்ஒளி போல இறைவன் விளங்க
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்திசைமுகன் = பிரமன்
திருமால் ,பிரமன் முதலிய தேவர்கள் சென்று அடி முடி தேடி காணாமலும் அதாவது தன்னை காண முயன்றவருக்கு தன்னை ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்

முறை = வேதநூல்கள்

முறையுளி = முறை ஒளி

ஒளித்தும் = தன்னை மறைத்தும்
வேதநூல்கள் ஆராய்ந்து விரதங்களை செய்ய முயன்றவருக்கு தன்னை மறைத்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்துஒற்றுமை கொண்டு = மனதை அன்பினால் ஒருமைப்படுத்திக்கொண்டு
மனதை அன்பினால் ஒருமைப்படுத்திக்கொண்டு இறைவனை நோக்கும் உள்ளம் கொண்ட
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்உற்றவர் = அடியவர்கள்

உறைப்பவர்க்கு = உறுதியாக நிற்பவருக்கு
அடியவர்கள் மனம் வருந்தும் அளவிற்கு உறுதியாக நிற்பவருக்கு தன்னை ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130மறை = மந்திரம்

மறைத்திறம் = மந்திர தந்திர திறமை

மந்திர தந்திர திறமை மூலம் இறைவனை காண முயலுபவர்களுக்கு அவர்கள் வருந்தும்படி தன்னை மறைத்தும்
இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்குஇத்தந் திரத்தில் காண்டும் = இந்த தந்திரத்தில் காண்போம்
இந்த தந்திரத்தில் காண்போம் என்று இருந்தோர்க்கு
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்அத்தந் திரத்தில் = அந்த தந்திரத்தில்

அவ்வயின் = அவ்விடம் , அதன் உள்ளேயே
அந்த தந்திரத்தில் அதன் செயல் முறையின் உள்ளேயே தன்னை மறைத்தும்
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவிமுனிவு அற = வெறுப்பு இல்லாமல்

நோக்கி = ஆராய்ந்து

நனிவரக் கௌவி = அன்பினால் மிகுதியாக பற்றி
வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து பார்த்து அடியவர் தனது அன்பினால் மிகுதியாக பற்றி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்துஆணெனத் தோன்றி = ஆண் என்று தோன்றி

அலியெனப் பெயர்ந்து = அலி என்று உருமாறியும்
ஆண் என்று நினைக்கும்படி தோன்றி , அலி என்று உருமாறியும் இயங்கியும்
வாள்நுதல் பெண்என ஒளித்தும் , சேண்வயின் 135வாள்நுதல் = ஒளி பொருந்திய நெற்றியை உடைய

சேண்வயின் = தூரத்தில்
ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண் ( உமையம்மை) என தன்னை ஒளித்தும் , தூரத்தில்
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்ஐம்புலன் செலவிடுத்து = தனது ஐம் புலன்களை நீக்கி

அருவரை = அரும் மலை வரை
தனது ஐம் புலன்களை ஒழித்து அரும் மலை தோறும் சென்று
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கைதுற்றவை = நுகர்பொருள் ( இவுலகத்தில் அனுபவிக்கும் பொருள்கள் )

துற்றவை துறந்த = இவுலக பற்றுகளை நுகர்பொருள் எல்லாம் துறந்த

வெற்று உயிர் ஆக்கை = உடம்பை மட்டும் உடைய ஊனம் இல்லா உடல் உடைய
இவுலக பற்றுகளை நுகர்பொருள் எல்லாம் துறந்து உடம்பை மட்டும் உடைய ஊனம் இல்லா உடல் உடைய
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்அருந்தவர் = செய்வதற்கு அறிய தவம் செய்பவர்

காட்சியுள் = தூய மன எண்ணத்தின் உள்ளே

திருந்த ஒளித்தும் = செம்மை ஆக மறைந்து இருந்தும்
செய்வதற்கு அறிய தவம் செய்பவர்களின் தூய மன எண்ணத்தின் உள்ளே செம்மை ஆக மறைந்து இருந்தும்
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்ஒன்று = ஒரு முழு முதற் பொருள்

உண்டில்லை = உண்டு இல்லை

யென்றறி = என்ற அறிவு

வொளித்தும் = ஒளித்தும்
ஒரு முழு முதற் பொருள் உண்டு இல்லை என்ற அறிவுக்கு மறைந்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140பண்டே = பழைய காலத்தில்

பயில்தொறும் = பழகும் தோறும்
பழைய காலத்தில் பழகும் தோறும் இந்த காலத்தில் பழகும் தோறும்
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்ஒளிக்கும் சோரனைக் = மறைக்கும் கள்ளனை

கண்டனம் = கண்டோம்
மறைக்கும் கள்ளனை கண்டோம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்ஆர்மின் ஆர்மின் = ஆரவாரியுங்கள் ஆரவாரியுங்கள்

நாண்மலர் = நாள் + மலர் = அன்றலர்ந்த மலர
ஆரவாரியுங்கள் ஆரவாரியுங்கள் அன்றலர்ந்த மலர் மாலைகளால்
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்தாள்தனை இடுமின் = இறைவன் கால்களை கட்டுங்கள்

சுற்றுமின் = இறைவனை வலம் வாருங்கள்

சூழ்மின் = இறைவனை சூழ்ந்து நில்லுங்கள்
இறைவன் கால்களை கட்டுங்கள் இறைவனை வலம் வாருங்கள் இறைவனை சூழ்ந்து நில்லுங்கள்
தொடர்மின் விடேன்மின்தொடர்மின் = பின் தொடருங்கள்

விடேன்மின் = விடாதீர்கள்
பின் தொடருங்கள் விடாதீர்கள்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145பற்றுமின் = இறைவனை பற்றுங்கள்

பற்றுமுற்று = பற்று அறுத்தவர்கள்

இறைவனை பற்றுங்கள் என்று பற்று அறுத்தவர்களுக்கு தன்னை ஒளித்தும்
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மைதன்நேர் = தனக்கு இணை ஆனவர்

இல்லோன் தானே = இல்லாதவர் தானே
தனக்கு இணை ஆனவர் என்று ஒருவர் இல்லாதவர் ஆன தன்மை
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பிஎன் நேர் அனையோர் = என்னைப்போல உள்ளவர்கள்

கேட்கவந்து = கேட்கும்படி

இயம்பி = சொல்லி
என்னைப்போல உள்ளவர்கள் கேட்கும்படி சொல்லி
அறைகூவி ஆட்கொண்டருளிஅறைகூவி = வலிய அழைத்து
வலிய அழைத்து ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்மறையோர் = வேதம் ஓதுபவர்கள் , அந்தணர்கள்
வேதம் ஓதுபவர்கள் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150உலையா அன்பு = வற்றாத அன்பு

என்பு = உடம்பு , எலும்பு
வற்றாத அன்பு உள்ளவர்கள் உடம்பு உருக்குலைந்து போகும் அளவிற்கு ஓலமிட்டு
அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்அலைகடல் திரையில் = அலைகடல் அலை போல

ஆர்த்து ஆர்த்து ஓங்கித் = இடைவிடாத ஓங்கி ஆராவாரம் செய்து
அலைகடல் அலை போல இடைவிடாது ஓங்கி ஆராவாரம் செய்து
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்தலை தடுமாறா வீழ்ந்து = தலை தடுமாறி வீழ்ந்து
தலை தடுமாறி வீழ்ந்து , அழுது புரண்டு அலறி
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்துபித்தரின் மயங்கி = பித்தரை போல மயங்கி

மத்தரின் மதித்து = வெறி பிடித்தவர் போல நினைத்து
பித்தரை போல மயங்கி , வெறி பிடித்தவர் போல நினைத்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்நாட்டவர் = நாட்டில் உள்ளவர்கள்

மருளவும் = மிரண்டுபோகவும் , அச்சம் அடையவும்
கேட்டவர் வியப்பவும் = கேள்வி கேட்பவர் வியப்பு அடையவும்
கடக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155கடக்களிறு ஏற்றா = ஆண் யானை தன்மீது பாகனை ஏற்றாமல்

தடம்பெரு மதத்தின் = மிகப்பெரிய மதத்தால்
ஆண் யானை தன்மீது பாகனை ஏற்றாமல் மதம் பிடித்தது போல
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதருஆற்றேன் ஆக = பொறுத்துக்கொள்ள இயலாதவன் ஆக

அவயவம் = என் உறுப்புகளை

சுவைதரு = சுவை தரும்
பொறுத்துக்கொள்ள இயலாதவன் ஆக என் உறுப்புகளை , சுவை தரும்
கோல்தேன் கொண்டு செய்தனன்கோல்தேன் = கொம்புத்தேன்
கொம்புத்தேன் கொம்புத்தேன் கொண்டு ஆக்கினவன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்ஏற்றார் = பகைவருடைய

மூதூர் = முப்புரங்கள் , பழைய ஊராகிய திரிபுரங்கள்

எழில்நகை = அழகிய நகை ஆகிய

எரியின் = நெருப்பில்
பகைவருடைய பழைய ஊராகிய திரிபுரங்கள் அழகிய நகை ஆகிய நெருப்பில்
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின்வீழ்வித்து = வீழவைத்து

ஆங்கு அன்று =

அருட்பெருந் தீயின் = அருள் பெரும் தீயின்
அந்த காலத்தில் வீழவைத்து அருள் பெரும் தீயின்
அடியோம் அடிக்குடில் 160அடியோம் = அடியவர்களுக்கு

அடிக்குடில் = உடம்பாகிய குடில்
அடியவர்களுக்கு உடம்பாகிய குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்வழாமை = நீதிதவறாமை

யொடுக்கினன் = ஒடுக்கினன் = அடங்க செய்தவன்
ஒருத்தரும் நீதி தவராதபடி அடங்க செய்தவன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்தடக்கையின் = பெரிய கையில் உள்ள

பெரிய கையில் உள்ள நெல்லிக் கனி போன்று இருந்தான்
163 - 182 உரைக்க இயலா பேரின்பம்
சொல்லுவது அறியேன் வாழி ! முறையோ !சொல்லுவது அறியேன் = எனது இறைவன் எம்பெருமானை நாயை விட கீழான நான் புகழ்ந்தது சொல்லும் முறை அறியாதவன்

வாழி = இறைவன் வாழ்க

முறையோ = இவ்வாறு நான் வாழ்வது முறையோ
எனது இறைவன் எம்பெருமானை நாயை விட கீழான நான் புகழ்ந்தது சொல்லும் முறை அறியாதவன். இவ்வாறு நன் வாழ்வது முறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்ததுதரியேன் = இறைவன் ஆட்கொள்வதனால் ஆகும் இன்பத்தை தங்க மாட்டேன்

நாயேன் = நாயேன் ஆன நான்
இறைவன் ஆட்கொள்வதனால் ஆகும் இன்பத்தை தங்க மாட்டேன் மேலும் நாயேன் ஆக எனைச் செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165தெரியேன் = காரணத்தை தெரியாதவன்.

ஆஆ = ஆவா = ஐய்யோ

அடியேற்கு = எனக்கு
காரணத்தை தெரியாதவன்.ஐய்யோ செத்தேன்.எனக்கு
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்அருளியது அறியேன் = இறைவன் அருளியது பற்றி ஏதும் அறிந்திலாதவன்.

பருகியும் ஆரேன் = இறைவன் அருளிய அருளை சிறுக சிறுக குடித்தும் நிறைவு பெற்றிலேன்
இறைவன் அருளியது பற்றி ஏதும் அறிந்திலாதவன். இறைவன் அருளிய அருளை சிறுக சிறுக குடித்தும் நிறைவு பெற்றிலேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்ஒல்ல கில்லேன் = பொறுக்கமாட்டேன் ,பொறுக்கும் ஆற்றல் உடையேன் அல்லன்
முழுவதும் விழுங்கியும் பொறுக்கமாட்டேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்துசெழுந்தண் பாற்கடல் = செழுமை ஆகிய குளிர்ந்த பால் கடலின்

திரை = அலை ( திரைகடல் ஓடியும் திரவியம் தேடு )

திரை புரைவித்து = அலைகள் போல செய்து
செழுமை ஆகிய குளிர்ந்த பால் கடலின் அலைகள் போல செய்து
உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்பஉவாக்கடல் நள்ளும்நீர் = நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடல்

நள்ளும்நீர் = நடுவில் உள்ள

உள்அகம் ததும்ப = உள்ளம் நிரம்பி வழிய
நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடல் நடுவில் உள்ள நீர் போல, உள்ளம் நிரம்பி வழிய
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170வாக்கு இறந்து = உள்ளத்தில் இருந்துஉள்ளத்தில் இருந்து வந்த அருள் அமுதம் எனது ஒவொரு மயிர்க்கால் வரையில் பெருகி
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
தேக்கிடச் செய்தனன் = தேங்கி நிற்க செய்தான் என் இறைவன்.

கொடியேன் = இந்த கொடியவனுடைய

ஊன்தழை = மாமிசம் செழித்த , ஊனாகிய கூரை உடைய
தேங்கி நிற்க செய்தான் என் இறைவன்.இந்த கொடியவனுடைய ஊனாகிய கூரை உடைய அதனில்
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தேகுரம்பை = குடில் , சிறு வீடு , உடல்உடல் முழுவதும் , இந்த நாய் அடியவரின் உடலின் உள்ளே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பியகுரம்பை = குடில் என்ற உடம்பு
இந்த உடல் குரம்பை கொண்டு அருள் இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்அற்புதம் = ஆச்சரியம்


வியத்தகு பேரின்ப அமுத நீரை
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175எற்புத் துளைதொறும் = உடலில் உள்ள எலும்பு தோறும்உடலில் உள்ள எலும்பு தோறும் அருளை ஏற்றினான் இறைவன் , உருகுவது
உள்ளம் கொண்டோ ஓர் உருச்செய் தாங்கு எனக்குஉள்ளம் கொண்டோர் = உருகுவதாகிய மனதைக்கொண்டு

ஓர் உருச்செய் தாங்கு எனக்கு = ஓர் உருவம் அமைத்தல் போல எனக்கு
உருகுவதாகிய மனதைக்கொண்டு ஓர் உருவம் அமைத்தல் போல எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியஆக்கை = உடல்

அள் ஊறு ஆக்கை அமைத்தனன் = எனக்கு பேரின்ப அமுதத்தை கொண்டு வாயுற இனிமை செய்யும் உடம்பை அமைத்தவன் என் நாதன்


ஒள்ளிய = சிறந்த
எனக்கு பேரின்ப அமுதத்தை கொண்டு வாயுற இனிமை செய்யும் உடம்பை அமைத்தவன் என் நாதன், சிறந்த
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறைகன்னல் = கரும்பு

களிறு = யானை

கடைமுறை = முடிவில்
கனி தேர் களிறு எனக் = இனிய உணவு ஆராய்ந்து உண்ணும் யானை போல ,முடிவில்
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்இருப்பது = அவனை நாடி இருப்பது

ஆக்கினன் = என் உள்ளே
என்னையும் அவனை நாடி இருப்பது போல ஆக்கினன் , என் உள்ளே
கருணை வான்தேன் கலக்க 180கருணை வான்தேன் = இறைவன் அருள் என்னும் தேன்

இறைவன் அருள் என்னும் தேன் கலக்க
அருளொடு பரா அமுது ஆக்கினன்பரா அமுது = உயர்ந்த அமுதம்
அந்த அருளோடு உயர்ந்த பேரின்ப அமுதம் ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனேபிரமன் மால் = ப்ரம்ம, திருமால்

நான்முகனும் , திருமாலும் அடி முடி அறியாத தன்மையுடைய என் பெருமான்
திருச்சிற்றம்பலம்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.


சைவ மகுடம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!!
திருச்சிற்றம்பலம்
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து.



No comments:

Post a Comment

No comments:

Post a Comment