நமது அகத்தியர் ஆலயத்தில் பணிகள் விரைவாக நடைபெற்று கொண்டு உள்ளன
மிகுந்த பொருட்செலவில் மிகச் சிறந்த முறையில் சுற்றுப்புற சுவர் எழுப்பப்பட்டு வருகிறது
பொதுவாக சுற்றுப்புற சுவர் இவ்வளவு செலவு செய்து ஏற்படுத்துவது கிடையாது
ஆனால் நாம் அறிந்த வகையில் பிற்காலங்களில் இங்கே நிறைய மழை பெய்து தண்ணி ஓடி வரும் நிலை என்பது உள்ளது
அப்போது நிச்சயமாக இங்கே சுற்றுப்புறத்தில் நிறைய வயல்கள் உள்ளதால் மழை பெய்யும் போது பல திசைகளிலும் இருந்து நீர் ஓடி வரும் நிலை உள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு அங்கே சுவர்கள் சரிந்து விழும் அபாயம் நிச்சயமாகவே உள்ளது
எனவே இங்கே சுவர் அமைக்கும் போது எந்த அசம்பாவிதமும் பிற்காலத்தில் ஏற்படாத வகையில் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்பட்டு காங்கிரீட் என்ற முறையில் போடப்பட்டு சுமார் 3 லட்சம் அளவுக்கு இரும்பு கம்பிகள் கொண்டு கம்பி கட்டப்பட்டு கான்க்ரீட் போடப்பட்டு கட்டப்படுகிறது
அப்போதுதான் ஒரு காலத்தில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சுவர் விழாமல் உறுதியாக நிற்கும்
இப்போது பில்லர்கள் போடப்பட்டு கான்கிரீட் பெட் முழுமையாக போடப்பட்டு நுழைவு வாயிலில் மிக அற்புதமான ஒரு அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்து கொண்டு வருகிறது
இன்று நம்முடைய ஆலய பணியில் கட்டுமான கூலி மற்றும் பொருட்கள் ஆகிய செலவுக்காக நமது ஆலய நிதியிலிருந்து ரூபாய் 50,000 நமது குருஜியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இன்னும் 10 நாட்களில் சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணி நிறைவடைந்து நிற்கும்
மேலும் பல அன்பர்கள் நமக்கு பொருளாக சிமெண்ட் மூட்டை மணல் ஜல்லி ஆகியவை வாங்கி கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்
மேலும் பல அன்பர்கள் ரொக்கமாக நன்கொடை அளித்த வண்ணமாக இருக்கிறார்கள்
அனைத்தையும் நான் சேகரித்து வைத்துள்ளேன்
இந்த 50,000 என்று கொடுப்பது போக மேலும் பாக்கி இரண்டு லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்கும்
மேலும் நமது அகத்தியர் ஆலயத்திற்கு மேற்கூரை அமைக்க பாம்பே ஓடுகள் எனப்படும் முறையில் அமைக்கப்பட உள்ளது
அந்த ஓடுகள் மொத்தம் அது மட்டுமே 6 லட்ச ரூபாய் வரை தேவைப்படும்
மேலும் தரை தளம் அமைக்க வேண்டும்
சுமார் 25 அடி உயரத்தில் இந்த மேற்கூரை மிக அகலமாக 4 ஆயிரம் சதுரஅடி அளவில் அமைக்கப்படும்
அதற்குள்ளே வெறும் தர்ப்பையால் குடில் அமைக்கப்படும் அகத்தியருக்கு குருநாதருக்கு என்று தனித்தனியே தர்பை கூடங்கள் அமைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
படிப்படியாக இந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும் . முதலில் இந்த சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் அடுத்த பணி ஆரம்பமாகும்
இந்த வாரம் சென்று ஜீவநாடியில் அகத்தியரிடம் அருள் கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன்
அனைவரும் கைகோர்த்து ஆலயப் பணியில் தத்தமது பங்களிப்புகளை கொடுத்து உதவி புண்ணியத்திற்கு ஆளாகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தி. இரா. சந்தானம்
No comments:
Post a Comment