Thursday 12 September 2019

இன்றைய தின அகத்தியர் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு
:*

*நாள் : 183*

*தேதி: 13-09-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நிலை நான்கையும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "சங்கரனுக்கு, சரவணகுகன் (முருகப்பெருமான்) ஓதிய கிரி" :* 🙏

*திருக்காேவில் உள்ள இடம் :* இடும்பரை, மேட்டுப்பாளையத்திலிருந்து 21 கி.மீ தாெலைவு.

*மாவட்டம் :* காேயம்புத்தூர் மாவட்டம்

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*சங்கடப்பட்ட பல்மாந்தர்கள்(பல மனிதர்கள்) தலைவிதி மாறிய கிரி(மலை),*

*சபலங்கள், சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி,*

*சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி,*

*சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி,*

*சிறப்பாே, சிறப்பில்லையாே, பேதம் பார்க்கா வாழ்கையை ஏற்க வைக்கும் கிரி,*

*சப்த கன்னியர்கள், அன்னையாேடு, அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்(கூறுங்கால்),*

*பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தாேன் அருளும் கிரி,*

*சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன்(முருகப் பெருமான்) அருளால் இருந்திட்டாலும், குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி,*

*அன்னையாேடு, ஐயன் அமர்ந்து அன்றும், இன்றும், என்றும் அருளும் கிரி,*

*நீறு(திருநீறு) வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு(மனிதனுக்கு), நீறு(திருநீறு) பூத்த அக்னிபாேல்,*

*நீராேடு, நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி,*

*கட்டிய கணவன் காதில் இரகசியமாய் மனையாள் ஓதினாலும், கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,*

*உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்,*

*மாந்த குரு(மனித குரு) சிஷ்யனுக்கு ஓதினாலும்,*

*அனைத்திலும் பேதமுண்டு, சுயநல நாேக்கமுண்டு.*

*பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,*

*நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க, அறுவதனமும் ஐவதனமாகி, எழு பிறப்பும் எட்டென விரட்டி,*

*உபயவினையும் இல்லாது ஒழித்து,*

*சூல நேத்திரத்தாேன், திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,*

*அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன்(மனிதன்) வாழ அருளும் கிரி,*

*ஞானத்தை நல்கும் கிரி(மலை),*

*அஞ்ஞானத்தை அடியாேடு அழிக்கும் கிரி,*

*பேதத்தை நீக்கும் கிரி,*

*வேதத்தை உணர்த்தும் கிரி,*

*சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி,*

*நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி,*

*வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி,*

*எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி,*

*கர்ம நிலைகளை மாற்றும் கிரி,*

*அக உளைச்சல் ஒழிக்கும் கிரி,*

*பேதம் காட்டா வேதகிரி,*

*ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி,*

*இளையவன்(முருகப்பெருமான்) திருவடி பாதம் படிந்த கிரி,*

*அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி,*

*ஐயனாேடு இன்று அனைவரும் இருக்கும் கிரி ஓதும் கிரி அது ஓதிய கிரி,*

*பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம்  வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர்மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*