Thursday, 31 January 2019

மஞ்சளின் மகத்துவம்

சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
        🌼மஞ்சளின் மகத்துவம்
.🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மஞ்சள் என்றாலே மங்களம் பெருகும். சகல செளபாக்கியங்களும் கிட்டும்.அம்பாளின் பேரனுக்கிரகமான மஞ்சள் எங்ஙனம் தோன்றியது. எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் பெறும் நலன்கள் யாவை என்பன குறித்து நாம் பல சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

போற்றப்பட வேண்டிய  மஞ்சளை மங்கலமாதா் எங்ஙனம் பூசிக்க வேண்டும் என்பது முக்கியம்.

மஞ்சள் என்றாலே மங்களம் என்று ஒரு பொருள் உண்டு. மஞ்சளின் மகிமையைப் பற்றி பேசாத, பாடாத சித்தா்களே இல்லை எனலாம். பல மகான்கள்-ஞானிகள் அம்மன் புராணங்களை எழுதியுள்ளாா்கள்.

மஞ்சளின் பிறப்பு, பெருமைகள், மகிமைகள், பயன்கள் இவற்றையெல்லாம் மிக விாிவாக விளக்குவது '.*உத்தம சிவ தாண்டவ ரகசியம்',* என்னும் நூலிருந்து தான். இதில் குரு அகத்தியா்-- சீடா்போகா் சம்பாஷணையில் ஞான சீடா் தன் தெய்வ குருவிடம் மக்கள் சாா்பில் நின்று மஞ்சளின் வரலாற்றை விளக்குமாறு வேண்டி,

' சற்குருதேவா! மகாதேவா! மஞ்சள் பிறந்த நிலைக்கு காரணம் யாதோ? ' என வினவுகின்றனா்.

அதற்கு அகஸ்திய தேவா்,,,,,,

"அன்பனே போகா! அண்ட சராசரத்தில் சக்தி வாய்ந்த ஞானக்கனி கொடுத்த அருள் மஞ்சளே" என்கின்றாா். ஞானக்கனி  என இங்கு அகஸ்திய பெருமான் குறிப்பிடுவது அம்பாளையே ஆகும்.

' ஞானத்தினின்று பிறந்தமையால் மஞ்சளின் முழு அருமை, பெருமைகளை ஞானிகளே முழுவதுமாக உய்ந்து உணர முடியும். மற்றவா்களுக்கு மிக அாிது பாரேன்' என்கின்றாா் அகஸ்திய பெருமான்.,

தா்ப்பையில் கணபதியை ஆவாகனம் செய்தால் பிரமச்சா்ய சித்தி கைகூடும்.

அருகம்புல்லில் கணபதியை ஆவாகனம் செய்தால் காாிய சித்தி கைகூடும்.

சந்தனத்தில் கணபதியை ஆவாகனம் செய்தால் ஆத்ம சித்தி கிட்டும்.

வெள்ளருக்கு வோில் ஆவாகனம் செய்தால் காயகல்ப சித்தி கிட்டும்.

மஞ்சளில் ஆவாகனம் செய்தால் விண்ணப்பித்தவைகள் கைகூடும். கேட்பதைத் தருவாள். தருவாள் என்பதன் மூலம் கணபதியை விட்டு என்றும் பிாியாத வல்லப,மாதாவே அருளுவாள் என்கின்றனா்.மேலும் எவ்வகை பித்தத்தையும் ( மன நோய்) போக்கவல்லது.

மஞ்சளை முன்னிலையில் வைத்துத்தான் எந்த இந்து திருமணமும், மங்கள சடங்குகளும் நடைபெறும். மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைப்பதிலிருந்து வழி அனுப்புவோருக்கு விடை கொடுப்பது வரை மஞ்சள் கலக்காத நிகழ்ச்சியே இல்லை எனலாம்.

' மஞ்சளே   மங்களம்-- மங்களமே மஞ்சள்' இது அம்பாளின் பேரனுக்கிரகம் ஆகும்.

சகல சித்திகளும் பூரணமாக அடைந்துள்ள தன் ஞான குருவான அகஸ்தியாிடம் பெரும் பணிவோடு போகா் கேட்கின்றாா்........

" தாங்கள் எங்ஙனம் மஞ்சள் பெற்றீா் குருதேவா?"

மஞ்சளை எனக்களித்தவள் காமகலா காமேஸ்வாி போகா ! என்கின்றாா் அகஸ்திய பெருமான்.

மஞ்சளைக் கொண்டு எவ்வகை சித்தியையும் பெற முடியும். தாந்திரீக முறையில் எந்தத் தெய்வத்தையும் மஞ்சளைக் கொண்டு முறையாக வசியம் செய்ய முடியும்.

ஏன்? ஏவலை வைக்கலாம். ஏவலை எடுக்கலாம். எம்மகள் கீழ்க்கண்ட தோத்திரத்தை ஆத்ம சுத்தியுடன், தெய்வ பக்தியுடன் பதினோரு முறை ஓதுகின்றாளோ, அவளுக்கு தேவியே நோில் வந்து மங்கள மஞ்சளை அருளுவாள்.

" சங்காிசூலி சாம்பவிநீலி சகலகலா மாயி

மங்கள தத்துவ மரகதமேனி மாயவன் தங்கையளே

சங்கினை ஏற்றி சங்கடம் தீா்க்கும் காமகலா மாயி

மந்திர சக்தி மஞ்சுளதேவி மஞ்சள் அளித்திடுவாய்.

இதை,இயற்றியவா் அகஸ்திய மகா பிரபு ஆவாா். இப்பாட்டை வைத்துக் கொண்டு இகலோக சித்திகள் அனைத்தும் பெறலாம்.

சிவனின் பாதியாகிய அம்பிகையே நோில் தோன்றி அகஸ்திய பெருமானுக்கு வழங்கிய பெருமையுடையது மஞ்சள். இது தோன்றிய வரலாற்றை உலகறியுமாறு செய்யத் திருவுள்ளம் கொண்ட போகா் பெருமான், அகஸ்தியாிடம்..........

' மஞ்சள் எங்ஙனம் பிறந்தது, குருதேவா? " என்று பணிவாக வினவுகின்றாா். அதற்கு அகஸ்திய பெருமான்........

" அன்பனே போகா! யாம் கூறுவதை விட எம் பரம்பரையில் உதித்த குப்பைச் சித்தா் இதற்கு விடை கூறுவாா்', என்று பதிலுரைக்கின்றாா்.

2500 -ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குப்பைச் சித்தா் பெருமான் மஞ்சள் பிறந்ததைப் பற்றி....,,,,

ஓங்காரப் பெருஞ்சோதி ஒளிநீற்றைத் தூவிடவே

ஓங்கார ஒளியுற்று அந்நீறும் பெண்மையுற்று

ஓங்காரப் பெருஞ்சோதி பாதி சிவனாகியே

ஓங்கார அன்னையும் மஞ்சளாய் ஆகினாளே.
                         --என்று கூறுகின்றாா்.

சிவ அம்சமாகிய திருநீறு ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி மஞ்சளாகவும் மாறியது. திருநீறும் மஞ்சளும் சிவசக்தி இரகசியத்தை அறிவிப்பதாகும்.

ஒளிநீற்றிலிருந்து பிறந்ததால்
மஞ்சளுக்குப் பூரண சக்தி உண்டு.
இதே ஒளி நீற்றிலிருந்து பிறந்தவன் ஆறுமுகன் என அறிவாய், போகா! என்றாா் அகஸ்திய பெருமான். மேலும்.......

ஒளியினின்று தோன்றியதால் மஞ்சளுக்கு அழகும் சக்தியும் உண்டு. மஞ்சளை எவா் பூசினாலும் முருகனோடு இரண்டற  இணைந்ததற்கு சமம்.

கணபதியை எவ்வளவு வேண்டினாலும் காட்சி அளிக்க மாட்டாா். ஆனால் வல்லப மாதாவிற்குத் தூபம் காட்டினால் தான் வருவாா் கணபதி. சிவனோ என்றும் பனிமலைவாசம். நித்ய தியானாதிபதி. எவரும் எழுப்ப முடியாது. ஆனால் என் குருநாதன். சற்குருநாதன் முருகனை அழைத்தாலோ, தான் மட்டும் வராமல் தன் இரு மனைவியருடனே வருவான்.

ஒரு மனைவி கிாியையும், ஒரு மனைவி ஞானத்தையும், முருகன் அனுக்கிரகத்தையும் வாாி வழங்குவாா்கள்.

அஞ்சுமுகன் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமாில் அஞ்சேல்என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இரு காலும் தோன்றும்.
     
முருகா என ஓதுவாா் முன். என்று அருணகிாிநாதா் பாடுகிறாா்.

ஒருமுறை அழைத்தால் இருமுறை வரும் முருகனோ மஞ்சளுக்கு சமமானவன். ஆனால் இக்கலியுகத்திலோ முருகனுக்கு நிகரான மஞ்சளைப் பூசவே பெண்டிா் தயங்குகிறாா்கள்.  தொட்டதை இங்கும் அங்கும் தட்டுவாா்கள். துடைத்டுக் கொள்வாா்கள். உலரும் முன்னே துடைத்தெடுப்பாா்கள் என்கின்றாா் அகஸ்திய பெருமான், மேலும்........

மஞ்சளைத் துஷ்பிரயோகம் செய்தாலோ மஞ்சளைப் பூசாதே, அல்லது குறைவாகபி பூசு, இங்கு பூசு, அங்கு பூசாதே ஏனக்,கூறினாலோ, அம்மாந்தா் மண்ணிற்குச் சமம்.

மஞ்சள் இல்லாத பெண் மண்ணாவாள், போகா! என்கின்றாா். அதே சமயம்........

முன்வினைக் கா்மங்களால் ஒரு பெண்ணானவள், பொன்,பொருள் அணிகலன்களை இழந்திருந்தாலும், தன்வினை, தன்நிலை இப்புவியில் உயா்ந்திட வேண்டில், உன்நிலை உயா்த்தவே மஞ்சள் உண்டே இப்புவியில், என்கின்றாா். ஆகவே..........

முன்வினை கா்மாக்களின் வேகத்தையும் மாற்றவல்லது மஞ்சள்.

மேலும் போகா், பெண்ணிற்கு கிட்டும் அாிய பொருள் இப்புவியுல் எது குரு தேவா? என வினவ......

பதிபால் சாா்ந்து இல்லறம் நடத்துவதே! அரசருக்கு அரசாட்சி கிட்டியது போல், பெண்டிறிகுக் கிட்டும் அாியபொருள் போகா! என்கின்றாா் அகஸ்தியா்.

பெண்ணானவள் தன் பதியுடன் இருப்பதே-- சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உதாரணம் ஆகும். மஞ்சள் பிறந்த வரலாற்றை கீழ்வருமாறு போகருக்கு அகஸ்தியா் கூறினார்.

ஒருவருக்கு மாலை போட்டால் அதை உடனே கழற்றுதல் கூடாது. ஏனென்றால் மாலை இலக்குமியின் அம்சமாகும். போட்ட மாலையை உடனே கழற்றுவது இலக்குமியை அவமதிப்பதாகும். துா்வாச மகாிஷிக்கு சகல சக்தியுடைய ஒரு மாலை கிடைத்தது. அந்த மாலையானது மாலை அழைத்து வரும் சக்தி பெற்றது.

ஞான தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்ட, ஞான தபோதனரான துா்வாச மகாிஷி மாலையுடன் இந்திரலோகம் ஏகினாா். அப்போது இந்திரன் படு அமா்க்களமாக வெள்ளை யானை மீது அமா்ந்து எதிரே வந்து கொண்டிருந்தான். தேவா் தலைவன் நலமாக வாழட்டுமே என்று எண்ணித் துா்வாசா் மாலையை அவனிடம் கொடுத்தாா்.

தேவராஜனுக்குத் தான் என்ற அகந்தை மேலிட, விதியும் சோ்ந்து விளையாட, மாலையை அணியாமல் யானையின் மத்தகத்தின் மேல் வைத்தான். இதப போதாது என்று விக்னேஸ்வரரும் யானை உருவில் விளையாடினாா். வெள்ளையானை மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலில் போட்டு மிதித்து நசுக்கியது.

இதைக் கண்ட துா்வாச முனிவா் வெகுண்டெழுந்து இந்திரனை சபித்தாா். உடனே இந்திரனை விட்டு, ஒளதாா்யம், சீலம், பொறுமை, சந்தோஷம், ஐஸ்வா்யம் முதலானவை அகன்று நீங்கிப் போயின. இது போன்று அாிய வாய்ப்பினை எதிா்பாா்த்து காத்திருந்த அசுரா்கள் தேவா்களை நசுக்கினா். தேவா்கள் எல்லோரும் மூலைக்கொருவராகப் பறந்தோடிப் போயினா்.

தேவா்களைப் பிாிந்த தேவ மாதா்கள் மெய்யுருகி இழந்த வாழ்வை மீண்டும் பெற உமையை வழிபட்டனா்.காமகலா காமேஸ்வாி அம்மனும் அவா்களின் பக்தியை மெச்சி அவா்கள் முன் பிரசன்னமாகி மங்கள வாழ்வைத் திரும்ப அடைய மஞ்சளை அருளினாள். பெற்ற மஞ்சளை மந்திரம் கூறியே முறையோடு பூசி தேவ மாந்தா் இழந்த வாழ்வை மங்களமாக அடைந்தனா். இம்மந்திரத்தை *லோபாமுத்ரா*தேவியை வணங்கினால் உபதேசம் செய்வாள்.

முன்பே மஞ்சளின் பங்கு ஒரு திருமணத்தில் எத்தகையது எனப் பாா்த்தோம்.

திருமணம் மட்டுமின்றி திருமண அழைப்பிதழை முறையாக அச்சடிப்பது எப்படி என்பதைப் பல ஆயிரம் ஆண்டுகட்கு,முன்னமே அகஸ்தியா் பெருமான் எழுதி வைத்துள்ளாா்.

மஞ்சளில் நாள் குறித்து, மங்கலப் பொட்டிட்டு பஞ்சமில்லாமல் வாழ்ந்திடப் பசுமை எழுத்திட்டு அஞ்சேலென வாழ்த்தியே, அருந்ததி போல் சஞ்சலமின்றி வாழ வரைந்த ஓலையே


இதை விாிவாகக் கூற வேண்டுமானால் வெளிப்பக்கம் திருமண அழைப்பிதழை இளஞ்சிவப்பு நிறத்துடனும் உள்பக்கம்,மஞ்சள் நிறத்துடனும் கூடிய காகிதத்தில்  பச்சை மையினால் அச்சடிக்க வேண்டும், கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற மைகளை அறவே பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு முறையாகச் செய்வதன் மூலம் திருமண ஜோடியின் வாழ்க்கை நிலையையே மாற்றி விடலாம். தொடக்கமே மங்களகரமாக இருந்தால் நடுவும், முடிவும் தானாய் மங்கலமாக அமையும்.

இதே போல் துருவனையும், அருந்ததியையும் காட்டும் பழக்கமும் சிறிது சிறிதாய் மறைந்து விட்டது.

மேலும் திருமணம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்குத் தாலி கட்டிக் கைப்பிடித்தலோடு முடிவதில்லை. இது மட்டுமே முக்கியமும் இல்லை. திருமணமச் சடங்கு தொடங்கி முடியும் வரை கடைப்பிடிக்கப்படும் சாங்கியங்கள் அனைத்துமே ஆழ்ந்த அா்த்தம் உள்ளவை. முக்கியமான சாங்கியங்கள் சிலவற்றைப் பாா்ப்போம்.

அாிசி இடும் சாங்கியம்.
**************************!
அாிசியைக் கையால் தூக்கும் போது, மணமகனே! சம்சாரம் என்னும் பெரும்பாரத்தை உன் கைகளில் தூக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதையும்,சிறிது சிறிதாக அாிசியை இடும்போது,மணமகனே! வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்பவை மாறி மாறி தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆகையால் பொறுமையாக இருந்து வாழ்க்கையில் எல்லா சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து சம்சாரக் கடலினின்று கரையேற வேண்டும் என்பதையும் காட்டுகின்றனா் பொியோா்கள். இச்சாங்கியத்தை பெரும்பாலும் வயதாகி, வாழ்க்கையில் மேடு பள்ளங்களைச் சந்தித்த பொியோா்களே இடுவா்.

கும்பம் ஏந்தி சிறுமியா், பெண்டிா் வலம் வருதல்.
****************
இதுவரை சிறுமியாய் இருந்த நீ கன்னியாகி மணம் புாிந்து வாழ்க்கையில் ஈடுபடும் போது தொட்டுத் தாலி கட்டிய கணவனைக் கும்பிட்டு வாழ்வாய் என்பதை வலியுறுத்தவே சிறுமியாில் ஆரம்பித்து வளா்ந்த பெண்டிா் வரை கும்பம் ஏந்தி வலம் வருவா்.

மணமகன் மணமகள் ஊஞ்சலாடுதல்.
*********************
மணமகனே! வாழ்க்கை எனும் ஊஞ்சலில் அந்தரத்தில் ஆடுகின்றாய். உன்னையே தெய்வம் என்று நம்பிக் கைபிடித்திருக்கும் உன் மனைவியை என்றென்றும் கைவிடாமல் வாழ்க்கை நடத்துவாய், கைபிடித்தவளை அந்தரத்தில் விட்டுவிடாதே, என்னும் கருத்தை அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல் சாங்கியம் வலியுறுத்தும் செய்தியாகும்.

பாயில் மணமக்களை உருட்டுதல்.
அம்மி மிதித்தல்.
*************************************
அம்மி என்றால் அம்மா என்று பொருள் உண்டு. மனைவியை அதன் மீது குழவி போல் நிற்க வைத்து காலில் மெட்டி போடுதல்- ஒரு தாய் தன் குழவிகள் எத்தகைய தவறுகள் செய்தாலும் பொறுமையாக சகித்துக் கொள்வது போல், கணவன் தன் வாழ்வில் இன்ப துன்பங்களைத் தன் மனைவியுடன் சாிபாதியாகப் பகிா்ந்து கொள்ளுதலே கடமை, சிறப்பு ஆகும். மேலும் கனவிலும் பிற மாதரை நினையேன் என்பது மறைபொருள்.

மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் மஞ்சள் ஆடை அணிந்தே பங்கேற்பா். இதையே பொியோா்கள்,,,,,,,

வேதவேத ரூபிணி வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ! மாறன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, மஞ்சள் தந்த வாழ்வு நீ!
என்று மஞ்சளின் பெருமையைப் பாடினா்.

திருமணம் என்றால் நேரத்தைக் காட்டுவது என்னும் ஒரு பொருள் உண்டு. குரு பொருத்தம் அல்லது குரு பாா்வை பட்டால் தான் ஒரு பெண்ணிற்கோ, ஆணிற்கோ திருமண பாக்கியம் கிட்டும். குருவிற்கு உாித்தான நிறமோ மஞ்சள் ஆகும். ஆகவே மங்களம், பவித்ரம் என்ற பொருளுக்கே உாித்தானது மஞ்சளாகும்.

மஞ்சளைப் பூசாமல், வேறு வெள்ளை மாவுகளைப் பூசுவதால் சாபமே மிஞ்சும் இக்கலியில்,

திருமணத்தில் மேளம் கொட்டுவதோ மிகப் பொருள் நிறைந்தது.
1.தாலி கட்டும் போது எவா் திட்டுமி சத்தமும், வேண்டத்தகாத பேச்சுகளும் பிற அமங்கல ஒலிகளும் மறைந்து போகும்.

2. பிறாிடம் பணம் இல்லையென்று என்று தட்டைத் தட்ட மாட்டாா்கள்.

3. விரல்களில் வெள்ளை வளையம் பூண்டு தட்டுவது- இனி குறைவில்லாத வாழ்வு, வாழ்க என்று வாழ்த்து ஒலி.

பிறந்தோா் அனைவரும் சென்றடைய வேண்டிய இடம் மயானம், சமரசம் உலாவுமிடம். முக்தி ஸ்தலங்களில் ஒன்றான காசி, இறந்தால் முக்தி தரும் ஸ்தலமாகும். மகா ருத்ர பூமியான காசியின் தலைவன் சிவபெருமான்.

ஆசிரமங்களும்,மடங்களும் இருபுறமிருக்க நடுவே புண்ணிய கங்கை பாய்ந்தோடும் புண்ணிய ஸ்தலம் காசி. எனவே காசி யாத்திரை செல்வதாகச் செய்து மணமகனுக்கு நினைவூட்டும் அறிவுரை;

கட்டுச் சோறு கொடுத்து அனுப்புதல்.
**************************
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பாடமும் கூடவே வராது. உன்னத குறிக்கோளுடன், உயாிய கொள்கைப் பிடிப்புடன் இறுதி வரை வாழ்ந்தால் காசி சென்ற பலனை இருக்குமிடத்திலிருந்தே அடையலாம்- என்பதை அறிவுறுத்துகின்றது.

அாிசி, குடை, சொப்பு, துணிகள் இவற்றைக் கொடுத்து அனுப்புதல்:
**************************************
( நிலையில்லாமையினை எடுத்துரைக்கின்றது.)
1. அாிசி பிதுா்களுக்காக தானம் செய்தலையும்,
2. குடை, சொப்பு, துணிவகைகள்- நாம் பிறருக்கு தானம் செய்ய வேண்டியதையும், அண்டினவரையும் இயலாதவரையும்- வெயிலிருந்து பிடிப்பவரைக் காக்கும் குடை போல- வேண்டியவற்றைக் கொடுத்து காக்க வேண்டியதை அறிவுறுத்துகிறது.

அட்சதை.
**********
60- வயதுக்கு மேல் கணவன் மனைவி இருவராய் அட்சதை பிசைந்து, அதை அவா்களே முதலில் மணமக்களுக்கு இடுதல் வேண்டும். அவ்வாறு ஆசி பெற்ற மணமக்கள் நீண்ட ஆயுளுடன் அஷ்டலட்சுமிகளின் பாிபூரண ஆசியுடன் தாமும் 60- வயதுக்குமேல் வாழ்ந்து பிறருக்கு ஆசி அருளும் தகுதி பெறுவா்.

அடுத்தபடியாக பொரும்பாலோரால் பொருள் தொியாமல், செய்யும் முறைதொியாமல் செய்யப்படுவது, அட்சதை தூவுதல் ஆகும். ஆண், பெண் இருபாலரும் அவசியம் தொிந்து கொள்ள வேண்டியது அட்சதையை தாம் தாம் இருந்த இடத்திலிருந்து வீசி எறிதல் கூடாது, மணமக்கள் அருகே சென்று தலை மீது இட்டு ஆசீா்வதித்தலே முறை. இதுவும் மேற்க்கூறிய பலனைப்போல் மணமக்களை மற்றவாிடமிருந்து வரும் பல செல்வங்களைப் பெற்று சிறப்புற வாழவும் உதவும். மேலும் அாிசியானது அன்னபூரணி தெய்வத்திற்குச் சமம். அதை எறிவது அன்னையை அவமதிப்பதிற்குச் சமம்.

மங்களத்தின் ஒருமித்த சின்னமாகிய மஞ்சளை பெண்கள் உடல் முழுவதும் பூச வேண்டும். மஞ்சள் கறை ஆடையில் படியுமே என்ற எண்ணம் அறவே கூடாது. மஞ்சள் கறை படிவது ஒரு மாபெரும் பாக்கியம் ஆகும்.

மஞ்சளைப் பூசுவது மங்களம் என்றால் அதைப் பூச உபயோகிக்கும் ஒவ்வொரு விரலுக்கும் பலன் உண்டு. ஆள்காட்டி விரலால் மஞ்சளைத் தொட்டால் ஒரு பலன். மோதிர விரலால் தொட்டால் ஒரு பலன். சுண்டு விரலால் தொட்டால் ஒரு பலன். இதே போல் மஞ்சள் பூசும் ஒவ்வொரு இடத்திற்கும் அங்கத்திற்கும் தனிப்பலன் உண்டு.

நெற்றி முழுமுகம் தனில் பூசிடில்- கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டும். கண்ணங்களில் பூசிடில்- குழந்தைகள் குதூகலமாய் வாழும். நாடியில் பூசிடில்- நாடி தேடி பொன் பொருள்,வரும். கழுத்தில் பூசிடில்- கட்டிய தாலி கெட்டியாய் நிற்கும். வலது செவியில் பூசிடில்- மாமியாா், மாமனாா் மகிழவே நடந்திடுவா்.

இடது செவியில் பூசிடில்-இருவரும் மதிப்பு தருவா். பூசும் பெண்டிா் கணவன் சொல்லைச் செவிமடுத்துக் கேட்பா்.அக்கணமே செயலில் இறங்குவா். உள்ளங்கையில் பூசிடில்- என்றும் கடனாளியாக மாட்டாா்கள். அம்மை உமையருளால் வலது முழங்காலில் பூசினால்- கணவனுக்குத் தோல் வியாதிகள் வராது. கணவன் மனைவியின் பேச்சைக் கேட்க வேண்டுமானால், கணவனுக்கு முன் துயில் எழுந்து, குளித்து மஞ்சள் பூசி கணவன் திருப்பாதங்களுக்கு மஞ்சள் இட்டு பொட்டு வைத்து விழுந்து வணங்கினால் மனைவி பேச்சைக் கணவன் கேட்பான். அதை விடப் பொிய பாக்கியம் இவ்வாறு செய்யும் பெண் மீண்டும் புவியில் பிறக்க மாட்டாள்.( மீண்டும் பிறவாமை அருள்.) என்று போகாவுக்கு அகஸ்தியா் பெருமான் கூறினாா்.

கோர சிவ நாட்டியத்தில், சிவன் உக்கிர தாண்டவம், காலை தூக்கி ஆடினான். எனக்கு நிகா் யாருமில்லை என்று ஆடினான். உள்ளிருந்து உக்கிரவேகம் வெளிப்பட்டதே சிவன் சக்தி பிாிய சாய்ந்தான். உக்கிர காளியானவள் சிவன் மீது ஆடினாள், தானே சிறந்தவள் எனவே அறிவித்து. ஆகவே ஆண்கள் பெண்களுக்கென்று என்று அபார மதிப்பு தர வேண்டும். பெண்மையைப் போற்ற வேண்டும்.

காா்கோடகா் என்ற சித்தா் மஞ்சளின் மங்கலத்தைப் பற்றிச் சொல்கிறாா்........

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பாிதி முன் பனியே போல, மங்கையா் பூசும் மஞ்சள்தனை அள்ளியே பூசும் அன்னைக்கு மஞ்சள் அன்னை என்று பட்டம் இட்டனா் பாா்.

இடைக்காட்டு சித்தா்.
இருப்பதும், பொறுப்பதும், மறுப்பதும் ஆகி இனியொரு பிறவி எடுக்க வேண்டில் மஞ்சள் மகிமை அறியாதவா் பாரேன்.

வேகத்தால், தணித்த நாதத்தால், ஓதுகின்ற பிறவி அனைத்தையும் பெண்ணாய் பிறந்திடில், மஞ்சள் இல்லையேல் அவள் பெண் அல்லையே!

வாங்கித சித்தா்.
வந்ததும் பொன்னும், பொருளும் ஆகும் முன்னே தந்த சிவலோக சக்தி தானே, ஈசன் கெளாிக்கே கிட்டிய பொருள் மஞ்சள் மகிமை அறிந்தது தானே! என்கிறாா்.

அா்த்தநாரீஸ்வரா் ரூபத்தில் கெளாி ஆகக் காரணம் மஞ்சளை அம்பாள் பூரணமாக புாிந்து கொண்டதால்தான். ஆனால் இக்கலியுகத்திலோ பெண்கள் எல்லா மங்கலங்களையும், சகல செளபாக்கியங்களையும் அளிக்கவல்ல மஞ்சளைப் பூச விரும்பாமல் வெண்மாவு (பவுடரை) பூசவே விரும்புகின்றனா். இவ்வாறு செய்வதால் மறுபிறவி ஏற்படுவது திண்ணம்.

மஞ்சள் மிக மிக புனிதமானது. மஞ்சள் என்ற சொல்லுக்குத் திருமணம் என்று பொருள் ஆகும்.  இதையே பொியோா்........

" ஒருவனுக்கு ஒருத்தி என்று உரை சொன்னதால் திருமணம் என்ற முறை பிறத்தது என்பா்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழும் கலியில் திருமணங்கள் எப்படியெப்படியோ நடப்பதால் அதன் மூலத்தைப் பற்றி  யாரும் கவலைப்படுவதாய் தொியவில்லை.

திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது மிகவும்  உண்மை நிரம்பியதாகும்.

யாருக்கு யாா் , எங்கு, எப்போது, எப்படி கணவன் அல்லது மனைவியாவா் என்பதை  மக்கள் புவியில் பிறப்பதற்கு  முன்னமே முடிவு  செய்யப்பட்ட ஒன்றாகும்.  மனிதராய் பூமியில் பிறக்கும் யாவரும் முன்வினைகளின் ( பாக்கி) காரணமாகவே பிறக்கின்றனா். அதன்
காரணமாகவே திருமணம் புாிகின்றனா். பிறக்கும் குழந்தைகளும் பாக்கியைத் தீா்க்கவே பிறக்கின்றன. சுருங்கக் கூறின்,,,,,,,,

தொட்டிலிருந்து சுடுகாடு வரை மனித வாழ்க்கை ஒரு முழு நீள பாக்கிக் கதையாகும். இதில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் பெறப்பட வேண்டிய பாக்கிகளும் முழுமையாக கழிந்தாலன்றி இக்கதை இந்த ஜென்மத்தோடு முடியாது.  தொடா்கதையாக மாறி மாறி பல ஜென்மங்கள் மேலும் தொடரும்.

மனிதப் பிறவியையே பாக்கி என்று கூறினாலும் மனிதனாய்ப் பிறப்பது பவித்ரம். அதனினும் பவித்ரம் மஞ்சளைப் பற்றி பெண்கள் அனைவருமே தொிந்து கொண்டு முறையே பயன்படுத்துதல்.

🌼மஞ்சளிலிருந்தே குங்குமம் உற்பவிப்பதால்," மஞ்சள் குங்குமம்"  என்று மஞ்சளையும், குங்குமத்தையும் எப்போதும் இணைத்தே வாயாரச் சொல்லிப் பழகி வந்தால் சா்வமங்கள மாங்கல்ய சக்திகளும் வாக்மய யோகசக்தியாய் உங்கள் வாழ்வில் தினந்தோறும் பதிந்து வந்திடும் என்ற தெய்வ ரகசித்தையும் இனியேனும் அறிந்து கொண்டு இதனை வாழ்வில் நன்கு முறையாகக் கடைபிடித்து வாருங்கள்.

🌼"மஞ்சள் குங்குமம்" என்று குங்குமத்தையும், மஞ்சளையும் எப்போதும் இணைத்துச் சொல்லி வந்து- உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு, மெய், இல்லம், சமுதாயம், நாடு, பிரபஞ்சத்திற்கு மங்களவளத்தை  சதாசா்வ காலமும் வாா்த்துத் தாருங்கள். இதுவே மகத்தான ' அட்சர மங்கள குங்கும வழிபாடு' என்ற போற்றுதலாகி,' மங்களகரமான மஞ்சள் குங்கும லோகத்தில்' நிச்சயமான மங்கள ஸ்தானத்தையும் பதித்தும் தரும்.

🌼மகத்தான தெய்வீகப் புனிதத்தை சா்வ கோடி யுகக் காலங்களிலும் சாசுவதமாகவே கொண்டு, இவ்வாறு பெயாிலேயே சா்வநிரந்திரமான  மங்களகர சக்திகளைப் பூண்டதாய் சதாசா்வ காலமும், பஞ்சபூத சக்திகளுக்கும் எப்போதும் மங்களச் சுனையைப் பொழிந்தருளும் மஞ்சள், குங்குமம் போன்ற அமிா்தமய தெய்வீக வாா்த்தைகள் மிகவும் அபூா்வமானவையே! இத்தகைய புனிதத்திலும் புனிதமான மங்களகரமான வாா்த்தைகளை- தினமுமி எவ்வகையிலேனும் குறைந்தது 108 முறையேனும் கூறி மங்கள மழையைப் பரவொளியில் சுபமயமாய் வா்ஷித்து வருவதும் சாலமிகு தவமே, பிறவிப் பெரும் பயனே!

🌼மூலப்பொருளாய் மஞ்சளில் இருந்துதான் புனிதமான மங்கள மெய்யே அருள்நெய்யாய் குங்குமமும் ஆக்கப்படுகின்றது அல்லவா? இதனால்தான் குங்குமமும் " ஹாித்ரா குங்குமம்" ( மஞ்சள் குங்குமம்) என்றே மஞ்சளுடன் இணைந்தே அழைக்கப் பெறும் பாக்கியத்தையும் அட்சரமங்கள சக்தியாய்க் கொண்டுள்ளது.

உத்தம மூத்த சுமங்கிலியா்களும் தம் இல்லத்துக்கு வருவோாிடம் "மஞ்சள்  குங்குமம் பெற்றுச் செல்லுங்கள்" என்று புனிதமயமாக( மஞ்சள்) குங்குமத்தைப் போற்றி விளித்துரைத்து மஞ்சள் குங்குமம் இட்டும், தந்தும் வழியனுப்புவாா்கள்.🌼திருமங்கலக்குடியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீபிராணநாதீஸ்வரா் சிவாலயத்திற்கு அடுத்த வீதி முனையில் உள்ள இந்தச் சிறிய ஒளம ( மங்கள) கணபதி ஆலயம் ஒரு சமயம் பொிதும் சிதிலமடைந்து இருந்தது. (இப்போது எந்நிலையோ தொியவில்லை.)அங்கு அ, உ, ம, ஆகிய மூன்று ஓஃ ங்கார மங்கள சக்திகளுடன் மூன்று கணபதி மூா்த்திகள் ஒளம கணபதி மூா்த்திகளாய் அருளுகின்றனா்.,( அ+ உ+ம=ஓஃம்).

🌼ஆழ்ந்த பக்தியுடன் அம்மியில் மஞ்சளை அரைத்து ஆலயத்திற்கு அளித்துத் திருமஞ்சனம் ( அபிஷேகம்) சாத்தி மூன்று ஒளம ( மங்கள) கணபதி மூா்த்திகளை வழிபடுவது கணவனுக்கு தீா்க ஆயுளைத் தந்து சுமங்கலித்வ மங்களத்தையும் இல்லறப் பெண்ணுக்கு வாா்ப்பதாகும். கடுமையான நோய்ப்பிணியால் வாடுவோா் இந்த மஞ்சள் திருமஞ்சனப் பூஜையை ஒளம கணபதிக்கு புதன், சதுா்த்தி, சதுா்த்தசி நாட்களில் ஆற்றி வந்திடில் நல்ல நிவாரணமும், நிவா்த்தியும் கிட்டப் பெறுவா்.பள்ளி, கல்லூாி பருவத்தினருக்கும் கலியுகத்தின் கண்கண்ட கனிந்த கணபதி மூா்த்தி!.

🌼திருமங்கலக்குடியில் ஒரு முறை முறையான  பூஜைகளற்றும்,
மிகவும் சிதிலமுற்றும் இருந்த  இந்த ஒளம ( மங்கள) கணபதி ஆலயத்திற்கு முதலில் உடனடியாகத் திருப்பணி நிகழ்த்தி ஆக வேண்டும்.

🌼மஞ்சள் கொத்தைப் பானையில் சுற்றிப் பொங்கல் படைத்தும், இம்மூன்று ஒளம கணபதி மூா்த்திகளுக்கும், அகஸ்திய மஹாிஷி சாா்த்திப் பூஜித்தது போன்று  மஞ்சள் கொத்தை மாலையாக அணிவித்து வழிபடுவது சிறப்பான வகையில் காாியசித்திகளை நல்கும். மங்கள விநாயகா்., மங்கள விமானம், மங்கள தீா்த்தம்., மங்களப் பெயா்., மங்களாம்பிகை. ஆகிய ஐந்து மங்கள சக்திகளும் ஸ்ரீமங்களாம்பிகையின் திருக்கரத்தில் இருந்து பெறப்படும் தாலிச்சரடில் பொலிந்து மக்களுக்கு அருள வேண்டும் என ஸ்ரீ லோபாமாதா தேவியே முதன் முதலாக வேண்டி இத்தலத்தில் நமக்கென நல்வரம் பெற்றுத் தந்துள்ளாா். இந்த மங்களகரமான வரத்தைப் பெற்றிட, அகத்தியா்- லோபாமாதா தேவிக்கு முதலில் அருள்வழி காட்டியவரே ஸ்ரீஒளமகணபதி மூா்த்தியே ஆவாா்.

🌼அமாவாசைத் திதியில் தோன்றியதே மூங்கில் தாவரமாகும். சதுரகிாி போன்ற மூலிகை மலைப் பகுதிகளில், மேலிருந்து 300 அடி ஆழத்தில்  'குஞ்சம் கதிா்' என்ற  மூங்கில் இனம் வளா்கின்றது. இந்த மூங்கிலில் தான் பண்டைய காலத்தில், ஆலயத்தில் சுவாமிக்குப் பல்லக்குகளைச் செய்வாா்கள். இறைவனுக்காகவே படைக்கபட்டு வளா்வதால்  வேறு எதற்கும் இதனைபி பயன்படுத்துவது கிடையாது. ஆனால் மூங்கிலில்  அரைத்த மஞ்சள் கலந்த தீா்த்தத்தை நிரப்பி இறைவனுக்கு அபிஷேகித்தல் பன்மடங்குப் பலன்களை வாா்க்கும் என்ற  விசேஷமான வழிபாட்டு நியதியும் உண்டு.

🌼இந்தக் குஞ்சம் கதிா் மூங்கில் பல்லக்கில் மூங்கில் மாத்திரம் எப்படி வேண்டுமானாலும் வளையும், எவ்வளவு எடையும் தாங்கும். சுவாமிக்கு பல்லக்குக்கு செய்வதற்கு, அம்பாாி செய்வதற்கு என -- வளையும் தெய்வப் பாங்கு உற்சவங்களுக்கு -- இது மிகவுமி உதவும்.

🌼இந்த மூங்கிலை அனைவராலும் பாா்க்கவோ, எடுத்து வரவோ முடியாது. பூா்வ ஜன்ம முருக வழிபாட்டுப் புண்ய சக்திகள் நிறைந்த ஆதி மலைவாசிகள்தாம் நன்கு பக்தியுடன் மஞ்சள்மாதாவை வழிபட்டு, தக்க பூஜைகள் நடத்தி இவ்வகை மூங்கில்களை எடுத்து வந்து நன்கு பதப்படுத்தித் தருவாா்கள். இறைவனுடைய பல்லக்கு ஆக்குவதற்கான சுவாமி கைங்கா்யம் என்பதால், அவா்கள் இதற்குப் பணம் எதையும் பெறுவதில்லை.

🌼எனவே, மஞ்சள், அாிசி, கேழ்வரகு, எண்ணெய் போன்றவற்றைத் தான, தா்மமாக அவா்களுக்கு அளித்ததுத்தான் இவற்றைப் பெறுதல் சிறப்பானதாகும். இவ்வகை மூங்கில் வகைகளால் ஆவதே சில அாிய பூஜை சக்திகள் நிறைந்த மூங்கில் தம்ளா்கள் ஆகும். இவற்றால் அபிஷேகம் செய்தல், தா்ப்பணம் அளித்தல், நீா் அருந்தி வருதல் மிகவும் விவேஷமானதாகும். மூங்கில் தம்ளாில் அரைத்த மஞ்சள் நீா் ஊற்றி அருந்தி வருதல் நல்ல ஆரோக்கியத்தையும், குறிப்பாகச் சுமலிங்கத்வத்தையும் தரவல்ல மிகவும் விசேஷமான  சக்திகளைக் கொண்டதாகும்.

🌼இத்தகைய மூங்கில் காட்டில் நாகங்கள் வாசம் அதிகம். எனவே அனைவராலும் போய் எடுத்து வர முடியாது. இவற்றைக் காணவே ஒரு மண்டல சூாிய பூஜையை ஆற்றிட வேண்டும்.

🌼மூங்கில் தம்ளாில் மஞ்சள் பொடி, மஞ்சள் தீா்த்தத்தை வைத்துச் சூாிய பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானது. கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவா்த்திகளைத் தர வல்லது. எனவே கண் டாக்டா்கள் தினமும் மூங்கில் தம்ளரால் மஞ்சள் தீா்த்த அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வருவதால் நல்ல திறமையான சக்திகளைப் பெற முடியும்.

🌼மிகவும் முக்கியமான மூங்கில் வகைப் பூஜையை ஆற்றிலானோ, அல்லது, ஆலயத்தில் மூங்கில் வகைகொண்டு செய்துள்ள பல்லக்கினை சுவாமியைச் சுமந்தாவது இதனை நிறைவேற்ற  வேண்டும்.

Wednesday, 30 January 2019

பஞ்ச ஆரண்ய தலங்கள்!

ஒரே நாளில் ஐந்து பூஜைகள், ஐந்து தலங்கள்! வாழ்வை வளமாக்கும் பஞ்ச ஆரண்ய தலங்கள்!

ஒரே நாளில் ஐந்து ஆலயங்களைத் தரிசித்தால், மகா புண்ணியம் என்கீறார்கள் பக்தர்கள். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள இந்தத் தலங்களை ஒருநாள்... ஒரேநாளில்... தரிசிக்கலாம். அப்படித் தரிசித்து எல்லா வளங்களையும் பெறுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

உஷத் கால பூஜை எனப்படும் அதிகாலையில் நடைபெறும் பூஜை தொடங்கி அர்த்தஜாம பூஜை வரை தரிசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன பஞ்ச ஆரண்ய திருத்தலங்கள். இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்!

திருக்கருகாவூர், திரு அவளிவநல்லூர், அரித்துவார மங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் என ஐந்து தலங்களை, பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று போற்று கிறார்கள். ஆரண்யம் என்றால் வனம். ஒருகாலத்தில் வனமாகத் திகழ்ந்து, இன்றைக்கு கிராமங்களாகவும் ஊர்களாகவும் அமைந்திருக்கின்றன, இந்தத் திருத்தலங்கள்.

தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச ஆரண்யத் தலங்களைப் பார்ப்போமா?

தஞ்சாவூரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கருகாவூர். இங்கே சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீமுல்லைவனநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை! கர்ப்பத்தைக் காத்தருளும் அம்பிகை குடிகொண்டிருக்கும் அற்புதமான கோயில்.

குழந்தைப் பேறு, சுகப் பிரசவம் வேண்டி வழிபடும் அருமையான திருத்தலம். இங்கே காலை 5.30 முதல் 6 மணிக்குள் உஷத் காலம் எனப்படும் அதிகாலை பூஜையை முதலில் தரிசிக்க வேண்டும்!

இதையடுத்து திருக்கருகாவூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள திரு அவளிவநல்லூரை அடையலாம். அங்கே ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசாட்சி நாதர் ஆலயம் அமைந்து உள்ளது.

இந்தத் தலத்துக்கு வந்து சிவபார்வதியை வேண்டிக் கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள்! அமைதியே உருவான அழகிய கோயில். அம்பாள், கொள்ளை அழகுடன் கருணைத் ததும்பக் காட்சி தருகிறாள்.

காலை 8.30 முதல் 9.30 மணி வரை காலைவேளை பூஜை சிறப்புற நடைபெறும். அந்த நேரத்தில் இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு!

அதன் பிறகு அப்படியே அருகில் உள்ள அரித்து வார மங்கலம் தலத்தை வந்தடையலாம். இங்கே ஸ்ரீ அலங்காரநாயகி சமேத ஸ்ரீபாதாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அற்புதமான ஆலயம்! புராதனப் பெருமைகள் கொண்ட திருக்கோயில் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அரித்துவாரமங்கலம் தலத்துக்கு வந்து, ஸ்ரீ பாதா ளேஸ்வரரையும் ஸ்ரீஅலங்காரநாயகியையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரத் வேண்டிக் கொண்டால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

இங்கே, 11 முதல் 12.30 மணி வரை உச்சிக் கால பூஜை நடைபெறும். அப்போது மூன்றாவதாக இந்தத் தலத்தை தரிசித்து விடலாம்!

இதையடுத்து, திருஇரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலத்துக்கு வந்துவிடலாம். பேருந்து வசதிகள் நிறையவே உண்டு. இங்கே ஸ்வாமியின் திருநாமம் & ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். அம்பாள்  ஸ்ரீ ஏலவார்குழலி.

நீங்கள் நினைத்தது சரிதான். குரு தட்சிணாமூர்த்தி, கோயில் கொண்டிருக்கும் குரு ஸ்தலம்தான் இது. குருவின் ஆதிக்கம் நிறைந்த திருத்தலம். இந்தத் தலத்தின் முக்கியமான சிறப்பு... குரு தட்சிணா மூர்த்தி அழகுற கோயில் கொண்டிருக்கிறார்! இங்கு வந்து வேண்டிக் கொண்டால், குரு பலம் கிடைக்கும். கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்!

மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை சந்தியா கால பூஜையின் போது ஆலங்குடி தலத்தில் வழிபட்டு விடலாம்.

பிறகு ஐந்தாவதாக, அப்படியே அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் தலத்தை அடையலாம். இங்கே சிவபெருமானின் திருநாமம் & ஸ்ரீ வில்வாரண்யே ஸ்வரர். அம்பாளின் பெயர் ஸ்ரீசௌந்தரநாயகி.

சித்த பிரமை உள்ளவர்கள், மனக்குழப்பத்தில் தவிப்பவர்கள், எப்போதும் பயத்துடன், எதற்கெடுத்தா லும் பயத்துடன் கலங்குபவர்கள் இங்கு வந்து வழி பட்டால் மனதில் தெளிவு பிறக்கும், மனநோய் நீங்கும் என்பது ஐதீகம்! மனோபலத்தைத் தந்தருளும் அற்புத மான திருத்தலம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை அர்த்தஜாம பூஜை நடைபெறும். பஞ்ச ஆரண்ய தலங்களில் ஐந்தாவதாக இந்தத் தலத்தை தரிசித்து, நிறைவு செய்யலாம்!

இந்த ஐந்து திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொண்டால், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறலாம். சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

Saturday, 26 January 2019

என்னுடைய ஜீவ நாடி அருள் வாக்கு, அகத்தியர் உரைத்தது, 26.01.2019


என்னுடைய ஜீவ நாடி

அருள் பெருபவர் : தி. இரா. சந்தானம், கோவை, ph. 91760 12104

நாள் நேரம்          : 26 சனவரி 2019, 26.01.2019, மதியம்,

இடம்            : அகத்தியர் ஜீவ நாடி, பொகளூர், மேட்டுபாளையம் to                       அன்னூர் சாலை, கோவை மாவட்டம்

நாடி வாசிப்பவர் : குருஜி இறைசித்தர், ph. 95850 18295

***************************************************************************************************************
அகத்தியர் அருளுரை :

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீராய் திருவையாராய் போற்றி
எம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக்கடலே போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
நீராகி நின்ற நிழலே போற்றி
நேர்வை ஒருவரையும் நில்லாய் போற்றி
காற்றாகி வரும் முகிலே போற்றி
என் கயிலை மலை வாழும் எம் அய்யனே போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து அகத்தியன் யான்தனே அருள்தனை உரைப்பேன்
கேள் அய்யனே

இன்னவனின் மலை யாத்திரைதனை யாம் கண்டோம் மனமகிழ்ந்தோம்
உமக்கும் விஸ்வரூப தரிசனத்தை உமக்கு யாம் தந்தோம்
__________________ உமக்கு காட்சி தந்தோம், மனமகிழ்ந்தாய்,

பின்பு

உனை சுற்றி கருட வடிவிலே வந்து மூன்று முறை உனை சுற்றி ஒலி தனை எழுப்பிச்சென்றேன். அறிவாய் நீ.
பின்பு

உனக்கு வாக்குரைப்பேன் என்று அன்றுரைத்தேன்,
உரைத்தேனே உன்னிடம் அறிவாயா நீ...

என் அய்யன் வீற்றிருக்கும் நான் நிலை பெற்ற பத்மநாத சுவாமி ஆலயம் தன்னிலே உமை யாம் உரைத்துச்சென்றோமே.
ஒரு வயோதிகன் வடிவில் வந்து உரைத்தோமே.

உமக்கு, யாம் சஞ்சாரம் செய்யும் பொதிகைமலை உச்சியில் தன்னிலே வானவில்லாக உனக்கு காட்சி தந்தேன், அறிந்தாயா நீ..

அங்கும் ஒரு வயோதிகனாக வந்து உனை ஆசீர்வதித்தேனே
பச்சை நிறத்தில் முன்டிட்டு உமக்கு யாமே ஒளி ரூபத்தில் காட்சி தந்தோம்

உன்னை சற்றி ஒரு கூட்டம் கூடும் அப்பா
மீண்டும் ஒர் நிலை நீ அடைவாய்

செய் தொழில் தன்னிலே மேன்மை நிலை நீ உயரப்பெருவாய்

இன்னவன் தேகத்திலும் கொண்டவள் அவள் தேகத்திலும் இன்னல்கள் தோன்றி மறையும் அப்பா

கர்மமது விட்டொழியும் கலங்காதே என் மழலையே

யாம் உமை முழு சித்த நிலைக்கு யாம் அழைப்போம்

கொண்டவளுடன் வாழ்வில் இனைந்து சேவை தனை செய்

(தனிப்பட்ட முறையில்எமக்குரைத்த பரிகாரம் பதிவிடுவதற்கு இல்லை, எனவே தவிர்க்கப்பட்டுள்ளது)

வெள்ளி என்றுரைக்கும் நன்னாளிலே __________________ மந்திரம் அதை __________________ ஜெபி, __________________ திசை நோக்கி அமர்ந்து.

ஞாயிறு என்றுரைக்கும் நன்னாளிலே கொண்டவளுடன் சேர்ந்து என் அப்பன், __________________ நிலை அமர்ந்த __________________ ஆலயம் சென்று படித்துறையில் வீற்றிருக்கும் __________________, என் அய்யன் உள் ஆலயம் சென்று அகலுக்கு நெய்யிட்டு உள் பிரகாரம் அதை __________________ முறை கொண்டவளுடன் வலம் வந்து அங்கிருக்கும் __________________ அதை தானம் கொடு, கொண்டவள் கரத்தால். __________________
மனம் தளராதே தூயவனே, கொண்டவளுடன் நல்லுறவு கிட்டுமய்யா

மீண்டுமோர் நிலைக்கு யாம் உமை அழைப்போமே

ஒரு முறை அத்திரி மலைக்கு சென்று அத்திரி மகரிஷியும் தாய் அனுசூயா தேவியையும் தொழுது வா. உன் மனதில் இருக்கும் என்ன அலைகள் மாற்றம் பெறும்.

உனது ஈன்றவள் தேகம் தனிலே, உற்று நோக்கு.

ஈன்ற மழலைகள் வாழ்வு சீர்பெறும் அப்பா

உமக்கு யாம் __________________ காட்சி தந்தோம், __________________ தன்னில். திரை வடிவில் சொல்லாதே ரகசியம் கார்.

வாழ்வு சிறக்கும். முற்றே.

*************************************************************










Tuesday, 15 January 2019

உண்மை சம்பவம்

வார்த்தையின் வலிமை...

உண்மை சம்பவம்


அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை. அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....".

அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது. காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது. உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது அந்த திருடனுக்கு   திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது.

ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான். அதை வாங்குவதற்கு வட நாட்டு மனிதர் ஒருவர் தயாராக இருந்தார். கொள்ளை அடித்தவுடன் அன்றைய தினமே நகைகளை அவர் வந்து வாங்கிக் கொண்டு போவதாக இருந்தது. ஆனால் கொள்ளையடிக்கப் போகும் கோயிலின் அருகே உள்ள பெரிய மைதானத்தில் அவனது திட்ட நாளன்றே முதலமைச்சரின் பொதுக்கூட்டம் நடக்க திடீரென்று ஏற்பாடு ஆனது. போலீஸ் நடமாட்டம் அதிகமாக அந்தப் பகுதியில் ஆரம்பிக்கும் என்பதால் அவன் தனது திட்டத்தை மூன்று நாட்கள் முன்னதாக செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அந்த வட நாட்டு மனிதரோ முன்பு சொன்ன தேதிக்கு முன்னால் வர முடியாது என்று சொல்ல கொள்ளை அடித்த நகைகளுடன் மூன்று நாள் மறைந்திருக்க ஒரு இடத்தைத் தேடித் தேடிக் கடைசியாக அவன் தேர்ந்தெடுத்தது தான் அவர் வீடு. நகைகளை வெற்றிகரமாக அவன் கொள்ளையடித்து விட்டான். லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஒரு பழந்துணியில் கட்டிக் கொண்டு அவன் அவரது வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டு. அந்த நேரத்தில் வாசற் கதவு திறந்திருந்ததும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்ததும் அவனை திடுக்கிட வைத்தன. 'யாராவது வந்திருக்கிறார்களா?' வெளியே சிறிது நேரம் நின்று காதுகளைக் கூர்மையாக்கினான். காற்றும், வண்டுகளும் தான் சத்தமிட்டன. வீட்டுக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. தன் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு மெள்ள உள்ளே நுழைந்தான்.

"வாங்கோ..வாங்கோ"

அபிராம பட்டர் மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்று அவனை வரவேற்றார். கிட்டத்தட்ட எழுபது வயதைத் தாண்டிய அவர் தன் வயதில் பாதியைக் கூடத் தாண்டாத அவனது திடகாத்திரமான முரட்டு உருவத்தையோ கத்தியையோ பார்த்து பயக்காதது மட்டுமல்ல அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்ததும், வரவேற்றதும் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இது வரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் எதிர்கொண்டதெல்லாம் பயம், அதிர்ச்சி, மயக்கம், உளறல், கூக்குரலிடுதல் வகையறாக்களைத் தான்.

"உட்காருங்கோ" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியைக் கை காட்டினார்.

அந்த திருடன்  என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தான். இங்கு நடந்து கொண்டிருப்பவை எதையும் அவனால் நம்ப முடியவில்லை. அபிராம பட்டரைக் கூர்ந்து பார்த்தான். அவர் அவிழ்ந்திருந்த தன் குடுமியை நிதானமாக முடிந்து கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அது ஒரு சந்தோஷமான, மனம் நிறைந்த புன்னகை.

"பெருசு நீ என்னை வேற யாரோன்னு நினைச்சுட்டே போல இருக்கு" செந்தில் கரகரத்த குரலில் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

அபிராம பட்டருக்கு அந்தக் கேரள நம்பூதிரிகள் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....". அவன் வந்த நேரமும் சரி, கத்தியோடு வந்த விதமும் சரி அவர்கள் சொன்னது போலத் தான் இருக்கிறது.

"அப்படியெல்லாம் இல்லை" என்று அமைதியாக சொன்னார்.

'கிழத்திற்குப் பைத்தியம் முற்றி விட்டது போலிருக்கிறது' என்று எண்ணிய திருடனுக்கு  சிறிது உதறல் எடுத்தது. போலீஸைக் கூட சமாளிக்க அவன் தயார். ஆனால் பைத்தியம் என்றால் அது அடுத்து என்ன செய்யுமோ என்று அனுமானிக்க முடியாததால் ஏற்ப்படுகிற உதறல் அது. அதை வெளிக் காட்டாமல் யோசித்தான். எதிராளியை என்றுமே பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனது தொழில் சூத்திரம். பயம் மட்டுமே என்றுமே மனிதனை செயல் இழக்க வைக்கிறது என்பதும் அது தனக்குப் பாதுகாப்பு என்பதும் அனுபவம் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம். கத்தியை அவர் முன்னுக்கு நீட்டினான். "பெருசு இது பொம்மைக் கத்தியில்ல. நான் நினைச்சா ஒரு நிமிஷத்தில உன்னைக் கொன்னுடலாம் தெரியுமா?"

அபிராம பட்டர் அதற்கும் அசரவில்லை. "நான் எப்ப சாகணும்னு பராசக்தி நான் பிறந்தப்பவே நாள் குறிச்சுருக்கா. அதுக்கு முன்னாடி நீங்க நினைச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அந்தக் கத்தியை உள்ளே வைங்கோ. நான் என்ன உங்க கிட்ட சண்டையா போட்டேன்".

மனிதர் ஒடிசலாக இருந்தாலும் அவர் பேச்சு உறுதியாக இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை. "பெருசு உன் கிட்ட நானும் சண்டை போட வரல. நான் இங்க மூணு நாள் தங்கப் போறேன். நான் இங்க இருக்கறது வெளிய ஒருத்தனுக்கும் தெரியக் கூடாது. அது உன்னால வெளிய தெரியப்போகுதுன்னு தெரிஞ்சாலோ, நீ என் கிட்ட எடக்கு முடக்கா நடந்துகிட்டாலோ நான் உனக்கு நாள் குறிச்சுடுவேன். பராசக்தி குறிச்ச நாள் வரை நீ உசிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா"

"புரிஞ்சுது. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. பயப்படாதீங்கோ. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருங்கோ. உங்களாலும் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் பெளர்ணமி எப்போ வரும், நீங்க எப்போ வருவீங்கன்னு நான் ஆவலாய் காத்துகிட்டு இருந்தேன்".

அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களும் அவனை திடுக்கிட வைத்தன. எரிச்சலோடு சொன்னான். "புதிர் போடாம எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுக்கு முன்னாடி விவரமா சொல்லுய்யா"

அபிராம பட்டர் சொல்ல ஆரம்பித்தார். பம்பாயில் கோடிக் கணக்கில் சொத்துள்ள வைர வியாபாரம் செய்யும் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தின் பூர்வீக இடமும் அந்த இடத்தில் ஒரு பராசக்தி கோயிலும் இங்கிருந்தன. தங்களது சுபிட்சத்திற்கு அந்தப் பராசக்தியின் அருள் தான் காரணம் என்று பெரிதும் நம்பிய அந்தக் குடும்பம், தடைப்படாமல் பூஜை அந்தக் கோயிலில் நடக்க அபிராம பட்டரை நியமித்திருந்தது. தனது பதினெட்டாம் வயதிலிருந்து அபிராம பட்டர் கோயிலில் பூஜை செய்து கொண்டு அருகில் இருந்த அந்த வீட்டில் வசித்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் வந்து பராசக்தியை தொழுது விட்டுப் போவார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பராசக்தி சிலை சேதப்பட்டுப் போனது. அதே சமயம் அந்தக் குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மாரடைப்பும் வரவே உடனடியாக பல லட்சம் செலவு செய்து கோயிலைப் புதிதாகக் கட்டவும் சாஸ்திரப்படி ஒரு பராசக்தி சிலை செய்யவும் ஏற்பாடு செய்தார்கள். கோயில் கட்டப்பட்டு முடிந்த போது பராசக்தி சிலையில் கண்களைத் தவிர சிற்ப வேலை எல்லாமே முடிந்திருந்தது. அந்த நிலையில் சிற்பி ஒரு சாலை விபத்தில் இறந்து போனான். இது ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றவே அந்தக் குடும்பத் தலைவர் அபிராம பட்டரையும் அழைத்துக் கொண்டு கேரளா சென்று சில வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளையும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்தார். அவர்கள் அஷ்ட மங்கலப் ப்ரஸ்னம் வைத்து ஆருடம் சொன்னார்கள். பெளர்ணமி இரவு அன்று ஒருவன் தானாகவே அபிராம பட்டரைத் தேடி வருவான் என்றும் அவனைக் கொண்டு அந்தக் கண்களைச் செதுக்கும் படியும் சொன்ன அவர்கள் சிலையைப் பிரதிஷ்டை செய்ய நாளையும் குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படிச் செய்தால் அந்தக் குடும்பத்தார்களுக்கு எல்லா தோஷங்களும் நீங்குவதோடு அந்தக் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசிக்கும் பிரசித்தியும், சக்தியும் வாய்ந்த ஸ்தலமாக மாறும் என்றும் சொன்னார்கள்.

"இந்த வீட்டுக்கு வெளியாட்கள் வந்து பல காலம் ஆயிடுச்சு. ஆனா அவங்க சொன்னது போல இந்த பெளர்ணமி ராத்திரியாப் பார்த்து நீங்க வந்திருக்கீங்கோ. அவங்க சொன்னபடியே நீங்க இங்கே இருந்து அந்தக் கண்களையும் செதுக்கித் தரணும். அந்தக் குடும்பத்துப் பெரியவர் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரச் சொல்லி என் கிட்டே அவர் கையெழுத்து போட்ட ப்ளாங்க் செக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதில் நீங்க என்ன தொகை வேணும்னாலும் எழுதிப் பணம் எடுத்துக்கலாம். அவங்களுக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை"

கேட்டு விட்டு அந்த திருடன்  ஒரு சிலையாகத் தான் நின்றிருந்தான். கடைசியில் அரை மனதோடு சொன்னான். "நான் ஒரு திருடன். சிற்பியல்ல"

"அஷ்ட மங்கல ப்ரஸ்னம் வைத்தவர்கள் மஹா தவசிகள். சாதாரணமானவங்க அல்ல. அவங்க சொன்னது பொய்க்காது. உங்களுக்கு சிற்பக்கலை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை" அபிராம பட்டர் ஆணித்தரமாகச் சொன்னார்.

அந்த ப்ளாங்க் செக் நிறையவே ஈர்த்தாலும் செந்திலுக்கு அந்த இடமே மாந்திரிகம் நிறைந்ததாகத் தோன்றியது. எல்லாம் முன்னமே தெரிந்து வைத்திருந்த அந்தக் கேரள நம்பூதிரிகளும், அபிராம பட்டரும் அவனை அசத்தினார்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா என்கிற பிரமிப்பு தீரவில்லை. கூடவே அங்கிருந்து ஓடி விடலாம் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் அந்தத் திருட்டு நகைகளோடு இனி எங்கே போய் ஒளிவது? இன்னமும் மூன்று நாள் ஒளிந்திருக்க இது தான் பாதுகாப்பான இடம்.

"பெருசு நான் இப்ப எங்கேயிருந்து வர்றேன் தெரியுமா? ஒரு அம்மன் கோயில்ல இருந்து நகைகளைக் கொள்ளை அடிச்சுட்டு வர்றேன். என்னைப் போய் ஒரு அம்மன் சிலைக்குக் கண் வடிக்கச் சொல்றிச்ங்க. இத்தன உசந்த வேலையை எங்கிட்டத் தர்றீங்களே தமாஷா இல்ல"


"உங்களை மாதிரிக் கொள்ளை அடிச்ச ஒருத்தர் தான் ராமாயணம் எழுதினார். எல்லாம் தெய்வ சங்கல்பம். சரி சரி மணி ரெண்டாகப் போகுது. பேசாமத் தூங்குங்கோ. மீதி எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்" என்று அவர் அவனுக்குப் படுக்கையை விரித்துத் தானும் போய் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது குறட்டை சத்தம் லேசாகக் கேட்டது.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. 'இனி இந்த வேலையைச் செய்ய மாட்டேன்' என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன் அப்பாவின் எதிரில் உளியைத் தூக்கி எறிந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அப்பா அன்று சொன்னார் "இது ஒரு நல்ல கலைடா".

"நீங்க கலையைப் பார்க்கிறீங்க. நான் இந்தக் கலை இத்தனை வருஷமா உங்களுக்குக் கொடுத்த பட்டினியைப் பார்க்கறேன்"

அதற்குப் பின் அவன் உளியை எடுத்தது பூட்டுகளை உடைக்கத் தான். இத்தனை வருடம் கழித்து இப்படியொரு சூழ்நிச்லையில் மறுபடி அவனுக்கு ப்ளாங்க் செக்குடன் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அபிராம பட்டரின் குறட்டை சத்தம் அதிகமாகியது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டில் இருக்கும் போது எந்த பயமும் இன்றித் தூங்கும் பட்டரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனுக்கு ஏனோ அந்தப் பட்டரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

மறு நாள் காலை அவன் சொன்னான் "எனக்கு நேத்துத் தூக்கமே வரல பெருசு"

"கையில கொள்ளையடிச்ச நகை அவ்வளவு இருக்கிறப்ப எப்படித் தூக்கம் வரும்"

"என்ன கிண்டலா. அது சரி. என்னை இங்க வச்சிகிட்டு எப்படிப் பெருசு நீ நிம்மதியாத் தூங்கினே"

"உண்மையைச் சொன்னா நான் ஆறு மாசம் கழிச்சு நேத்து தான் நிம்மதியாத் தூங்கினேன்" அபிராம பட்டரின் கண்களில் நீர் தழும்பியது "அந்தப் பணக்காரங்களைப் பொறுத்த வரை இந்த பராசக்தி அவங்களைச் சுபிட்சமாய் வச்சிருக்கும் ஒரு தெய்வம். ஆனா எனக்கு எல்லாமே அவள் தான். பதினெட்டு வயசுல பூஜை செய்ய ஆரம்பிச்ச எனக்கு அப்புறம் ஒரு குடும்பமோ, பணமோ, வேற சினேகிதர்களோ வேணும்னு தோணலை. தாயாய், சினேகிதியாய், குழந்தையாய்,சொத்தாய்,எல்லாமாய் எனக்கு அவள் இருந்தாள். பூஜை செய்துகிட்டு இருக்கிறப்பவே ஒரு நாள் அவள் காலடியில் உயிர் போயிடணும். அது தான் என் ஒரே ஆசை. விக்கிரகம் சேதப்பட்டப்ப என்னையே ரெண்டாப் பிளந்த மாதிரி துடிச்சேன். நேத்து உங்களைப் பார்த்த பிறகு தான் நிம்மதி.சந்தோஷம்.எல்லாம் சரியாகி நான் பழைய படி பூஜை செய்ய ஆரம்பிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு"

"ஏன் பெருசு எனக்கே அவங்க இவ்வளவு பணம் தர்றாங்களே. உனக்கு எவ்வளவு தருவாங்க"

"எவ்வளவு வேணுனாலும் தருவாங்க. பசிக்குச் சோறு, உடுக்கத் துணி, தங்க இடம் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ. அதுக்கு மேல கிடைக்கிறதெல்லாம் அதிகம் தான். அவங்க தந்தாலும் நான் வாங்கறதில்லை"

அந்தக் கிழவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சும் வெகுளித்தனமும் அவன் தந்தையை அவனுக்கு நினைவுபடுத்தின. அவரும் இப்படித்தான் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்தார். ஆனால் பிழைக்கத் தெரியாதவர் என்று தான் நினைக்கும் இந்தக் கிழவரின் நேற்றைய நிம்மதியான உறக்கமும் பிழைக்கத் தெரிந்த தனது உறக்கம் வராத நிலையும் ஒரு கணம் அவனுக்கு உறைத்தது. இது பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

"ஏன் பெருசு இவ்வளவு சின்னவனான என்னைப் போய் எதுக்கு நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றே"

"என் தெய்வத்திற்கு கண்கள் தரப்போறவர் நீங்க. நீங்க எவ்வளவு சின்னவராக இருந்தாலும், எப்படிப் பட்டவரா இருந்தாலும் சரி எனக்கு கடவுள் மாதிரி தான்"

அவரது வார்த்தைகள் அவனை என்னவோ செய்தன.

"நான் சிற்ப வேலை செஞ்சு இருபது வருஷம் ஆயிடுச்சு. இப்ப எனக்கு எப்படி வரும்னு தெரியல"

"நல்லாவே வரும்.எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவர் அருகில் கோயிலில் இருந்த அந்த சிற்பத்தைக் காண்பித்தார். பழைய சிற்பி உபயோகித்த உபகரணங்களும் அங்கிருந்தன. சிலைக் கல்லையும் அந்த உபகரணங்களையும் அவன் நன்றாக ஆராய்ந்தான்.

"பெருசு, நீங்க போங்க. எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும்" அவர் போய் விட்டார்.

அந்த சிலையையே பார்த்தபடி நிறைய நேரம் உட்கார்ந்தான். திருடன் திரும்பவும் கலைஞனாக மாற சிறிது நேரம் தேவைப் பட்டது. தன் குருவான தந்தையை நினைத்துக் கொண்டான்.
"சிலை கல்லில் வர்றதுக்கு முன்னால் மனசில் துல்லியமாய் வரணும். அதுக்கு முன்னால் உளியைத் தொடக்கூடாது" என்று அப்பா என்றும் சொல்வார். சிலையை நிறைய நேரம் பார்த்து கண்ணை மூடினான். மனதில் பல விதமான கண்கள் வந்து வந்துப் பொருத்தமில்லாமல் மறைந்தன. கடைசியில் பேரழகுடன் இரு விழிகள் வந்து மனதில் உள்ள சிலையில் நிலைத்தன. அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி ஒரு துளியாக ஆரம்பித்து வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. உளியைக் கையில் எடுத்தான். சிலை கண்கள் திறக்க ஆரம்பித்தது.

அவனுக்கே எப்படி செதுக்கி முடித்தான் என்று தெரியவில்லை. ஆனால் முடித்த பின் அவனே சொக்கிப் போனான். பராசக்தியின் கண்கள் மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது. கடைசியில் அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் அவனால் காண முடியவில்லை. அண்ட சராசரங்களையே அவன் அந்தக் கண்களில் கண்டான். அந்தக் கண்களில் இருந்து கவனத்தைத் திருப்ப அவனால் முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். காலம் அவனைப் பொருத்த வரை நின்று போய் விட்டது.

அபிராம பட்டர் மதியம், மாலை, இரவு என மூன்று நேரங்களில் வந்து பார்த்தது அவனுக்குத் தெரியாது. இரவில் அவர் வந்து பார்க்கும் போது இரண்டு சிலைகளைப் பார்த்தார். அந்தத் தெய்வச் சிலையும் மனிதச் சிலையும் ஒன்றை ஒன்று நேராகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. அந்த முரட்டு முகம் சிறிது சிறிதாகக் கனிய ஆரம்பித்து பேரமைதியுடன் பளிச்சிட்டது. பட்டர் பராசக்தியைப் பார்த்தார். அவரது பராசக்தி இப்போது முன்பை விட அதிகப் பேரழகுடன் ஜொலித்தாள். எல்லை இல்லாத சந்தோஷத்தில் அவர் கண்கள் அருவியாயின. அவர் சாஷ்டாங்கமாய் அவனது கால்களில் விழுந்தார்.

இந்த உலகிற்கு மறுபடியும் திரும்பிய அவன் தீயை மிதித்தவன் போலப் பின் வாங்கினான். "பெரியவரே, என்ன இது..." அவனது பேச்சும் தோரணையும் முற்றிலும் மாறி இருந்தது.

அபிராம பட்டருக்கு வார்த்தைகள் வரவில்லை. மெளனமாக அந்தச் சிலையைக் காண்பித்துக் கை கூப்பினார். பின்பு அந்தப் ப்ளாங்க் செக்கை நீட்டினார்.

அவன் வாங்கவில்லை. "நான் கண்களைச் செதுக்குனதுக்கு அவள் என் கண்களைத் திறந்துட்டா பெரியவரே. எங்களுக்குள்ள கணக்கு சரியாயிடுச்சு" புன்னகையோடு கரகரத்த குரலில் சொன்னான். "ஒரு விதத்தில் பார்த்தா வாழ்க்கையே நமக்கு அவள் தர்ற ப்ளாங்க் செக் தான், இல்லையா பெரியவரே. என்ன வேணும்னாலும் எழுதி நிரப்பிக்கோன்னு குடுத்துடறா. நாம் தான் எதையோ எழுதி எப்படியோ நிரப்பிக் கெடுத்துடறோம்" அவன் குரலில் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு வருத்தப் படுவது போல் தெரிந்தது. அதற்குப் பின் பேசும் மனநிலையில் இருவருமே இல்லை. மனம் நிறைந்திருக்கையில் வார்த்தைகள் அனாவசியமாகவும், மெளனமே இயல்பாகவும் இருவருக்கும் தோன்றியது. சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள்.

நடு இரவில் அபிராம பட்டர் விழித்துப் பார்க்கையில் செந்திலின் படுக்கை காலியாக இருந்தது. வீடு முழுவதும் தேடி அவன் இல்லாமல் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார். அவன் அங்கும் இருக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவன் போய் விட்டிருந்தான். ஆனால் அவன் நேற்றுக் கொண்டு வந்திருந்த நகைகள் எல்லாமே பராசக்தியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

Monday, 7 January 2019

திருவருட்பரகாச வள்ளலார் அருளிய - நித்திய கரும விதி

நித்திய கரும விதி

திருச்சிற்றம்பலம்

நித்திய கரும விதி

1. சாதாரண விதி
சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.2 பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும். மலங்கழிக்கின்றபோது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும். மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும். ஜலம் தடை பட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜலவுபாதி கழித்தல் வேண்டும்.

மலஜல வுபாதி கழிந்த பின், செவிகள், கண்கள், நாசி, வாய் தொப்புள் - இவைகளில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும், கைகால் முதலிய உறுப்புக்களிலுள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றறத் துடைத்தல் வேண்டும். பின் வேலங்குச்சி ஆலம்விழுது - இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து,3 அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுளையிலை4 முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு - இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.

காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது மிகுந்த தீவிரமுமாகாது,5 முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும். அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.6 பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் - இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.7 அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் - இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் - இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று. கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை - இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும். சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, வேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது.8 சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும்9 தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். பகற் போஜனஞ் செய்த சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது. பகற்போஜனஞ் செய்த பின், சற்று நேரங் கடவுளைத் தியானித்திருக்க வேண்டும். அதன் பின் எந்த வேலை செய்யினுந் தேக கரணங்களுக்கு மெலிவு உண்டு பண்ணுகிற வேலைகளாகச் செய்யப்படாது. செய்யினும் சிறிது சிறிதாகச் செய்தல் வேண்டும்.

சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை - இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் - இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.10 இரவில் தயிர்11 கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். சுமார்12 நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக்12 கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

பெண்களுடன் தேகசம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைத் தேகசம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் - என்றால், வேறுபடாமல் - மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும். அவ்வுபாயமாவது பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே யுலாவச் செய்து கொள்ளுதலாம். ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது. தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்.13 பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு நித்திரை செய்தல் வேண்டும்.14 அதன் பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடனிருத்தல் வேண்டும். இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற் கொருவிசை செய்தல் அதம பக்ஷம். 8 தினத்திற் கொருவிசை செய்தல் மத்திம பக்ஷம். 15 தினத்திற்கொருவிசை செய்தல் உத்தம் பக்ஷம். அதன் மேற்படில் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். 4 தினத்திற்கொரு விசை செய்யில் சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும், ஆதலில், அதம பக்ஷமாயிற்று. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.

எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும். புகைக்குடி, கஞ்சாக்குடி, கட்குடி, சாராயக்குடி முதலிய மயக்கக்குடி களாகா. மலஜலத்தைச் சிறிதும் அடக்கப்படாது.15 சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது. துன்மார்க்கப்பழக்கஞ் செய்யக்கூடாது. எந்த வேலை செய்யினும், எந்த விவகாரஞ் செய்யினும், சிவசிந்தனையோடு செய்து பழகுதல் வேண்டும்.

இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து, ஓங்காரபஞ்சாக்ஷர ஞாபகஞ்செய்தல் வேண்டும்; சிவபஞ்சாக்ஷர ஞாபகஞ் செய்தல் வேண்டும்; அவசியம்.

2. பொது விதி

1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம்16
வாங்கிக் கொள்ளுதல்.

2. நாலு மாதத்திற்கு ஒரு தரம், மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு17 வாங்கிக் கொள்ளல்.

3. ஒரு வருடத்திற்கு ஒருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ்18 செய்து கொள்ளல்.

4. நாலு நாளைக்கு ஒருதரம்,அத்தி முதலிய வஸ்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந்
தீட்டல்.

5. ஒரு பக்ஷம் அல்லது ஒரு வார வட்டத்திற்கு ஒருதரம், சாவதானமாக நல்ல நினைப்போடு தன் வசத்திலிருந்து,
மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல். இது விருத்தர்களுக்கு விதித்ததல்ல.

6. வாரவட்டம் அல்லது நாலு தினத்திற் கொருதரம், முலைப்பால், பொன்னாங்கண்ணி முதலிய தயிலமிட்டுக்
கொண்டு, செம்பாகமான வெந்நீரில், மெல்லென முழுகல்.

7. இளவெயில், கடுவெயில், மழை, குளிர்காற்று, பனி - இவைகளால் உடம்பை வருத்தாமற் காத்துக் கொள்ளுதல்.

8. கடுநடை, ஓட்டம், பெருஞ்சொல், பேரோசை, இசைபாடுதல், வழக்காடுதல், பெருநினைப்பு, பெருஞ்சிரிப்பு,
பெருந்துயர், மிகுபார்வை, ஊன்றிக்கேட்டல், துர்க்கந்த நற்கந்த முகர்தல், சுவை விரும்பல், பேருண்டி,
பெருந்தூக்கம், வீண்செயல், பெருமுயற்சி, விளையாட்டு, மலமடக்கல், சலமடக்கல், தாகமடக்கல், பெருநீர்
குடித்தல், சயனஉணர்ச்சி, பயம், அகங்காரம், இடம்பம், பேராசை, உலோபம், கோபம், மோகம், மதம் - இவை
முதலிய தேகேந்திரிய கரண குற்றங்க ளடையாதிருத்தல்.

9. பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத்தயிர், மோர், நெய், செம்மறிப்பால், தயிர், மோர், நெய், கேழ்வரகு,
வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம் முதலிய சிற்றுண்டி, தயிர்ச்சோறு, புளிச்சோறு
முதலிய சித்திரான்னம் காரரிசிச்சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி, சுரை,
பூசுணை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால்,
மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி, விதித்தவைகளை யனுசரித்தல்.

3. சிறப்பு விதி

1. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு19 முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.

2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.

3. அங்ஙனம் எழுந்து, சிறிதுந் தாமதியாமல், மௌனமாகச் சிறிது தூரம் நடந்து, எவ்விடத்தில் மலசலவுபாதி
நேரிடுகிறதோ, அவ்விடத்தில் அப்பொழுதே ஒன்றுஞ் சேஷ்டையில்லாமல் விரைவில்லாமல் இருந்து அறவிடுதல்.

4. பொற்றலைக்கையாந்தகரை, கரிசலாங்கண்ணி - இவைகளில் ஒன்று கொண்டு உள்ளே சிறிது சாரம் போகவும்
கபநீர் பித்தநீர் வெளியாகவும் தந்தசுத்தி செய்தல்.

5. பின்பு திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியனுதயமாகிற வரையில் கடவுளைத்
தியானஞ் செய்துகொண்டிருத்தல்.

6. உதயந் தொடங்கிச் சுமார் சாம பரியந்தம் தக்க முயற்சியோடு பழகுதல்.

7. காலையில் உண்ணாமல் சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணுதல்.

8. காலையில் சூரியோதயமானவுடன் தூதுளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக் கையாந்தகரை,
புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம்வேர் - இவைகளில் யாதாயினும்
ஒன்றைப் பசும்பாலிற் சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது
சூரணமாகவாவது பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.

9. சுமார் 15 நாழிகைக்கு உண்ணத் தொடங்கும்போது, முன்புசித்த போசன முழுதுஞ் ஜீரணித்ததை நன்றா யூன்றி
யறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசு முனைபோல்
அளவறிந்து, அந்த அளவின்படி, அதிக விரைவும் அதிக தாமதமு மில்லாதபடி சமமாகப் புசித்தல்.

10. புசிப்பில் பச்சரிசிச் சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி, தூதுளை முதலிய இளங்காய்.
பொன்னாங்கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை - இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக்காற்
பங்கு, வெந்தயம் காற்பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது
குழம்பு ரசம் முதலானவைகளைக்கொண்டு, பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலானவைகளைத்
தள்ளிப் புசித்தல்.

11. புசித்தபின்பு, மத்தியானந் தொடங்கி 25 நாழிகை பரியந்தம் சத்துவமான விவகாரங்களை மெல்லென இருந்தபடி
நடத்தல், பிறர்க்கு விசேஷங் கேளாவகை படித்தல், மெல்லெனப் பேசல் - இவையன்றி நல்ல
நினைப்போடிருந்தல்.

12. காலை, மத்தியானம், சாயங்காலம் - இப்பொழுதுகளிலும் மத்தியிலும் நித்திரை செய்யாதிருத்தல்.

13. மத்தியான போஜனம் செய்கிறபொழுது, அடிக்கடி தாகநீர் குடியாமல், போஜனஞ் செய்தபின்பு, ஒரு தரமாக
இளஞ்சூடுள்ள வெந்நீரைக் கிரமமாகத் தாகத்துக்குக் கொண்டு, குளிர்ந்த ஜலம் சிறிதுங் கொள்ளாது தள்ளுதல்.

14. மத்தியானத்தில் சுமார் 5 நாழிகை பரியந்தஞ் செவ்வையாக ஓரிடத்திலிருந்து, மனத்தை ஒருவழிப்படுத்தித் தெய்வ
சிந்தனை யோடிருத்தல்.

15. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி, காலைப்போஜனம்,
அந்திப்போஜனம் முதலானவை யில்லாதிருத்தல்.

16. சாயங்காலத்திலும் 5 நாழிகை யாதொரு முயற்சியும் இல்லாமல், ஓரிடத்திலசையாதிருந்து தியானித்தல்.

17. இரவில் 10 நாழிகைக்குள் மத்தியான போஜனத்துக்கு அரைத்தரமாகப் புசித்தல்.

18. அதற்குமேல் இராத்திரி 15 நாழிகை பரியந்தம் மனத்தையடக்கித் தியானித்திருத்தல்.

19. 15 நாழிகை தொட்டு இருபத்திரண்டரை நாழிகை20 பரியந்தம் மெல்லெனத் தூங்கல்.

20. படுத்து விழிக்கிற பரியந்தம் இடக்கை கீழிருக்கச் செய்தல்.

21. ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீசம், பயம் பூச்சியம் ஆகப் பெறுதல்.

திருச்சிற்றம்பலம்
நித்திய கரும விதி முற்றிற்று.
___________________________

Sunday, 6 January 2019

அகத்தியர் இன்று எனக்குரைத்த அருள் வாக்கு





எனக்கு நாடி வழியே நற்பலன்கள் உரைத்த நாள் 06/01/2019

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம், கோவை

நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர், பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்
                                               
அகத்தியர் எமக்குரைத்த அருள் வாக்கு

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீராய் திருவையாரா போற்றி
என் அண்ணாமலையும் என் அண்ணா போற்றி
காவாய் கனகத்திறளே போற்றி
கயிலை மலை வாழ் என் அய்யனே போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து இக்கலியுகம் தன்னிலே எம் நிலை இறக்கி பொதிகை வாழ் அகத்தியன் யானே அருள் தனை உரைக்கிறேன், கேள் மழலையே

யாம் உமையறிவோம்

என் குருபூசை தன்னிலே நீ ஆற்றிய பணியை கண்டு யாம் மனம் மகிழ்ந்தோம் எம் மழலையே.
உமக்கு முன்றேயே உரைத்தோமே
யாகம் தன்னிலே உனக்கு விஸ்வரூப காட்சி தன்னை யாம் தந்தோம்
ஒரு வயோதிகனாக நின்று உமை ஆசீர்வதித்தோம்
கருடனாக வந்து உனை வட்டமிட்டு சென்றேன்
அறிவாய் நீ

உமது நிலை மாறுமப்பா
உமை யாம் முழு சித்த நிலைக்கு யாம் அழைப்போம்
என் நாமம் அதை ஜெபித்து வா
என் நாமம் அதை பறை சாற்று என்று அன்றுரைத்தேன், பறை சாற்று.

யாம் நிலை கொள்ள மண் தனை உனது கரத்தால் பெற்றுத்தா

யாம் பொதிகை மலையிலே உமக்கு யாம் ஒரு  _______________ காட்சி தருவோம்
உமை மலைக்கு யாமே அழைத்தோம் எம் மழலையே
உமது நிலைகள் மாறுமப்பா
வீண் வாதம் அதை தவிர்த்து மௌன நிலையிலே மலை அதை உச்சியிலே அபிஷேகம் செய்.

தானம் செய், த்யானம் செய்

உமக்கு யாம் ________________ காட்சி தனை யாம் தருவோம்
உமை ____________________________________ செல்வோம்.
உணர்வாய் நீ

உன் மழலை வாழ்வு சீர் பெறுமே
கொண்டவுளுடன் ஒரு நல்லுறவு கிட்டுமய்யா
இது கர்மத்தால் வந்த வினைகளின் ஆக்கமே
கர்ம வினைகளது உமை விட்டு படிப்படியே செல்லுமப்பா
அப்போது நீ முழு சித்த நிலை அடையப்பெருவாயே

ஒரு முறை _____________ சித்தனவன் நிலை பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று, என் அப்பனுக்கு, _________________, மண்டியிட்டு மனமுருகி தொழுது வா.

உனது செய் தொழில் தன்னிலே சிறு சிறு இன்னல்கள் உள்ளதய்யா.
இடர் நீக்கி வாழ வைப்பன் அஞ்சாதே தூயவனே

உமை, யாம் உன் அருகில் அல்ல, உன் உள் இருந்து உமை காப்பேன்

நாத ஒலி தனை யாம் கேட்டோம், குரு பூசை தனிலே, மனமகிழ்ந்தோம்

உனது நாவில் நான் நின்று நல்லதொரு நிலையை உயர்த்துவேனே

செய்தொழிலில் இன்னல் தீருமப்பா

சிருஷ்டி அதை நீ பெறுவாய் காலையே

ஏன் நாமமதை பறை சாற்று

நான் நிலை கொள்ள மண் தனை யாம் உமக்கு அமைத்து தருவோமே
உன் உள் இருந்து யாம் உமை இயக்குவோமே

உனது பணிச்சுமை படிப்படியே விட்டு விலகுமப்பா
இப்பீடத்து ஆசான் வழி நின்று சேவை தனை செய்
நிலை பெறுவாய்
வாழ்வு சிறக்கும்

உனது ஈன்றவள் தேகம் தனை கவனமுடன் நோக்கு என் மகனே
அவளின் நல்லாசி கிட்டுமே.
உனது வாழ்வு சீர் பெரும் அப்பா
யாம் உனை உன் உள் இருந்து உனை காப்பேன் தூயவனே
முற்றே

தனிப்பட்ட அருளுரை காட்சிகள், பரிகாரங்கள் ஆகியவற்றை பகிர வேண்டாம் என்று உத்தரவு, எனவே அவைகளை நீக்கி பதிவிட்டுள்ளேன்.
அகத்தியர் இருக்கிறார், அவர் பக்தர்களை வழி நடத்துகிறார், காக்கிறார், அருள்கிறார் என்று உலகிற்கு உணர்த்தவே மேற்கண்ட எனது பதிவு. அகத்தியர் ஆணைப்படி அவர் நாமம் பரப்பும் பணி. நன்றி.


என்றும் இறை பணியில்

தி.இரா. சந்தானம்
கோவை - 91760 12104