பொகளூர் ஜீவ நாடி: ஒரு அன்பரின் அனுபவம்
ஊர்,
பெயர், குறிப்படப்பட மாட்டாது
ஒரு நாள் ஒருவர் நாடி பார்க்க வந்தார்.
அப்போது அவருக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்ப்பட்டு உள்ளதாகவும், டாக்டர்கள்
அவருக்கு இருதயத்தை அறுத்து திறந்து, சில நிமிடங்கள் நிறுத்தி, பிறகு அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதற்கு
ஆங்கிலத்தில் OPEN HEART SURGERY என்று பெயர். ஆனால் அந்த கடினமான அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானதாகும்.
நோயாளியின் உயிருக்கு நூறு சதவிகதம் உத்தரவு தர இயலாது. ஐம்பது சதவிகிதம்
மரணிப்பதற்கும் ஐம்பது சதவிகிதம் பிழைப்பதற்கும் வாய்ப்பு சமமமாக இருக்கும்.
பிழைத்த பிறகும் கூட பல வகையான கட்டுப்பாடுகள் இருக்கும்.
இந்த நபரை சோதித்த மருத்துவர், இந்த அறுவை
சிகிச்சையை இந்த நபருக்கு செய்தால் மரணிப்பதற்கு தான் நிறைய வாய்ப்பு உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
இதனை கண்டு உயிர் பயத்தில் அகத்தியரை
நோக்கி வந்து நாடி கேட்கும் போது, யாருக்குமே உரைக்காத ஒரு வித்தியாசமான பரிகார
முறையை அகத்தியர் உரைத்தார். இது வரை பல ஆயிரம் நபர்கள் நாடி வழியே அருளுரை கேட்டு
சென்றுள்ளனர். ஆனால் ஒருவருக்குக்கூட இந்த மாதிரி பரிகாரம் கூறியதில்லை.
எல்லோருக்கும் குல தெய்வம் கோவிலுக்கு
சென்று வழிபாடு செய்ய சொல்லி, அதில் ஒரு வழிபடும் முறையும் கூறப்படும். இவருக்கும்
குல தெய்வ வழிபாடு கூறப்பட்டது. மற்றவர்களுக்கு குல தெய்வ வழிபாடு செய்து, பிறகு
மேலும் நான்கு அல்லது ஐந்து கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்யும் முறை
கூறப்படும். ஆனால் இவருக்கோ, வெறும் குல தெய்வ வழிபாடு மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இதில் வித்தியாசம் என்னவென்றால், குல தெய்வ
கோவிலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்று முப்பத்தி இரண்டு அகல் விளக்குகளை
ஏற்றவேண்டும் என்பதே அது. யாருக்குமே இரவு ஒன்பது மணிக்கு சென்று வழிபட இதுவரை
நாடியில் கூறப்பட்டதில்லை. அகத்தியர் இவ்வாறு கூறியதும் இறைசித்தன் செந்தில் அவர்கள்
" தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசீர்வதித்து பரிகாரம் செய்ய கூறினார்.
அவர்களது குல தெய்வம் இருப்பதோ ஒரு அடர்ந்த
காட்டில். அவரோ உடல் நலம் குன்றிய நிலையில் உள்ளார். செல்ல சொன்னதோ ஒரு அகால நேரத்தில்.
ஆனால் அகத்தியரின் மேல் முழு நம்பிக்கை கொண்ட அவர், தன் குடும்பத்துடன் மாலையே
அங்கு சென்று, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, ஒன்பது மணி வரை காத்திருந்து, பின்னர்
முப்பத்து இரண்டு அகல்களையும் பொறுமையாக ஏற்றினார். அனைத்து விளக்குகளும்
ஏற்றப்பட்ட நிலையில், கோவிலில் இருந்து திரும்புவதற்காக கிளம்பி உள்ளனர். அப்போது கோவில்
படியில் இறங்கும் போது, ஒரு படியில் மிக நீண்ட ஒரு நாகம் படுத்து இருந்துள்ளது.
அந்த இதய நோய் கொண்ட அகத்திய பக்தர். கிழே
படியில் இறங்கும் போது, வேறு யாரையும் குறி வைக்காமல் கடிக்காமல், இவரை மட்டும்
காலில் அழுத்தமாக கொத்தி உள்ளது. அந்த பாம்பு கொத்தியவுடன் ரத்த ஓட்டம் மிகவும்
அதிகரித்து, ஆள் கிழே விழுந்துள்ளார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கே அவர்கள் பாம்பு கடித்த இடத்தை அறுத்து
தைத்து, பிறகு, விஷ முறிவு மருந்துகளை கொடுத்துள்ளனர்.
அப்போது, அவரின் மனைவி இறைசித்தன் செந்திலுக்கு
தொலைபேசியில் அழைத்து தகவல் கூறி உள்ளார். "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசீர்வதித்து
கூறினீர்களே, ஆனால் இப்போது, நான் சுமங்கலியாகவே இருக்க முடியாது போல தோன்றுகிறதே என்று
கூறி உள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இறை சித்தன் அய்யா அவர்கள், அகத்தியரை
நம்பினோர் எந்நாளும் கைவிடப்படார், அதனால் கவலை அடைய வேண்டாம். அவர் நிச்சயம்
பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார்.
பிறகு பத்து தினங்கள் கழித்து வந்த அந்த
நபர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியுள்ளார். தனக்கு அகத்தியர் ஒரு பெரும் SHOCK
TREATMENT கொடுத்து விட்டதாகவும், தற்போது இருதய நோய் முற்றிலும் குணமாகிவிட்டதாகவும்,
இப்போது தாம் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். எந்த அறுவை சிகிச்சையும்
செய்யாமலே, எந்த மருந்தும் உட்கொள்ளாமலே, சரி ஆகி விட்டதாக கூறி
ஆச்சரியப்பட்டுள்ளார். பாம்பு கடித்தவுடன் தந்து உடலில் உள்ள ரத்த ஓட்டத்தில்
பெரும் மாற்றம் ஏற்பட்டு, மிக விரைவாக ரத்தம் ஓடியதாக உணர்ந்துள்ளார். ரத்தம்
விரைவாக ஓடியதால், ரத்த குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு, ரத்த ஓட்டத்தின் வேகத்தில்
சரி செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இப்போது தான் அனைவருக்கும் அகத்தியர் ஏன்
அகால நேரத்தில் காட்டினுள் இருக்கும் குல தெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு போட
சொன்னார் என்று நன்றாக புரிந்தது. பெரும்பாலும் நாகம் தீண்டியவுடன் சில
நிமிடங்களில் விஷம் தலைக்கு ஏறி ஆளை கொளல்லும். ஆனால் இந்த நபருக்கோ, அவ்வாறு
எதுவும் நிகழவில்லை. இதிலிருந்தே அகத்தியரின் திருவிளையாடலை புரிந்து கொள்ளலாம்.
பிறகு நாடியில் அகத்தியரிடம் மீண்டும்
கேட்டு, அவரது ஆயுள் நீடிக்க, திருவிடை மருதூர், மற்றும் பல தலங்கள் சென்று பரிகார
முறைப்படி வழிபாடு செய்ய அகத்தியர் அருளுரைத்தார்.
நன்றி. வணக்கம்.
ஓம் அகத்தீசாய நம
குருவே போற்றி. திருச்சிற்றம்பலம்.