Friday, 18 July 2025

மருத்துவ நாடி பார்க்கும் முறை

 சித்தர்கள் அருளிய நாடி முறை !!!


ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.


நாடி என்றால் என்ன?

அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித

உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம்

மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.


பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத

ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் – இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர்.


நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள் காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக துள்ளியமாக கணிக்க முடியும். இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக கூறுகிறேன்.  


வாத நாடி – நாடி 

அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் 


பித்த நாடி – நாடி

அதாவது பல்ஸ்  பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது .


கப நாடி – நாடி 

அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி.


ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது 


பூத நாடி – நாடி

அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம் தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும். 


குரு நாடி  : 

குரு நாடி – என்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின்

கூட்டு கலவை தான் குரு நாடி. 


பிரனான் நாடி 

இது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம் செல்கிறதா என்று பார்ப்பது.


ஆங்கில மருத்தவம் – அல்லது  ஸ்டெத்தஸ்கோப் பல வருடங்களுக்கு முன் தான்

கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம் மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம் செய்திருக்கின்றனர். வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல் பண்ணீனாலே போதும் – முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது.


நாடி எப்படி உண்டாகிறது?நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம்உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்


.நாடி பார்க்கும் முறை:

மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல்)ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும்.

பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும்,தளர்த்தியும் பார்த்தால் நாடியின்  தன்மையை  முழுமையாக அறிந்து கொள்ளலாம்.(30 வினாடிகள் துடிப்பு கவனித்து அதை 2 ல் பெருக்கி வருவது நமது துடிப்பு எண்ணிக்கை.)18 வயதுக்கு குறைவானவர்களுக்கு சராசரியாக 70-100/ நிமிடம் துடிப்புகள். மற்றவர்களுக்கு சராசரியாக 60-100/நிமிடம் துடிப்புகள் இருக்க வேண்டும்.


நாடி நிதானம் :

மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.


எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.

ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:

ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.


பத்துவகை நாடிகள்:


1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.

2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.

3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி

4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி

5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.

6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி

7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி

8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.

9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.

10.குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.


நாடிகளின் தன்மை:வாத நாடி: 

வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும்.

வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும்

ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.வாத நாடி அறிகுறிகள்: உடல்

குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல்

கொஞ்சமாகவும் வெளியாகும்.


பித்த நாடி:

பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம்,

குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல

பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள்

உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில

சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.


பித்த நாடிஅறிகுறிகள்:

உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். 

சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.சிலேத்தும

நாடி:சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து

நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு,

வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சுமற்றும் விலாப்பகுதியில்வலி

இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர்

குறைவாகப் போகும்.சிலேத்தும நாடி அறிகுறிகள்: உடல் அடிக்கடி வியர்க்கும். 

முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும்.

கண்களில் பீளை கட்டும். 


நாடி எப்படி உண்டாகிறது?

நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.


உடல் அறிகுறிகள்:

உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.


மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:

தலையில் - 15000

கண்களில் - 4000

செவியில் - 3300

மூக்கில் - 3380

பிடரியில் - 6000

கண்டத்தில் - 5000

கைகளில் - 3000

முண்டத்தில் - 2170

இடையின் கீழ் - 8000

விரல்களில் - 3000

லிங்கத்தில் - 7000

மூலத்தில் - 5000

சந்துகளில் - 2000

பாதத்தில் - 5150

மொத்தம் - 72000


நாடிகள் உள்ளன . நாடியைப் பற்றிய ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள் நமதுசித்தர்கள். அவர்கள் மேலும், வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளனர். 


ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

அஷ்ட கர்மம்

 அஷ்ட கர்மம் என்றால் என்ன?

           காலத்தால் மறைக்கப்பட்ட ரகசியம் 

        

(ஆதாரம்: அகத்தியர் பரிபூரணம்:1200 நூல், முழுக்க முழுக்க இந்த நூலில் இருந்து எடுக்க பட்ட ரகசியங்கள் இவை... நீங்கள் செய்த தர்மம், புண்ணியத்தின் பலன் மாபெரும் சித்தராக, யோகியாக  உங்களை மாற்ற கூடிய அபூர்வ மந்திர யோக வித்தை இதோ.......)


"அஷ்ட கர்ம வித்தை" என்பது ஒரு அற்புதமான சித்தர்களின் கலை என் குருநாதர் அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமிகளுடன் பிரம்மரிஷி மலையில் வாழ்ந்த காலத்தில் அவர் கற்றுக்கொடுத்த அற்புத கலை இது. "அகத்தியர் பரிபூரணம்:1200" என்ற நூலில் அகத்தியர் பெருமான் இந்த ரகசியங்களை விரிவாக சொல்கிறார். உலக மக்கள் அனைவரும் அறிய பயன்பெற பல நூல்களில் இருந்து திரட்டிய மாபெரும் ரகசியங்களை இன்று சித்தர்களின் குரல்.  வாயிலாக முக்கிய விடயங்களை பகிர்கிறேன். மிக மிக விரைவில் விரிவாக பிரயோகங்கள், யோகமுறைகள், மந்திர சித்தி முறைகளை நமது திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் பார்ப்போம்....


அஷ்ட கர்மம் என்பது யோக சித்திகளில் எட்டு அங்கங்களை குறிக்கும். இதில் முதல் 5உம் ஆக்கபூர்வமான வித்தையாகவும், மிகுதி 3உம் அழிவு பூர்வமான வித்தை என்பதால் சித்தர்கள் மறைவாக தகுதி உள்ள சீடர்களுக்கே உபதேசித்தார்கள்.


அவை,

(01) #வசியம்

              [குறிப்பிட்ட நபரயோ or பொருளையோ வசிகரிப்பது அல்லது ஈர்ப்பது]

(02) #மோகனம்

               [ஒட்டு மொத்த கூட்டத்தையே வசீகரிப்பது or மனமயக்கத்தை ஏற்படுத்துவது.]

(03) #தம்பனம்

                [ஒன்றன் இயற்கையான செயல்பாட்டை நிறுத்துவது or பிறரை நமக்கு எதிராக செயல்பட விடாமல் ஸ்தம்பிக்க  வைப்பது.]

(04) #உச்சாடனம்

                   [ஒரு பலனுக்காக நம் சக்தியை, மந்திரங்களை ப்ரயோகிப்பது, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற எதிர்மறை சக்திகளை உடைப்பது, அதிலிருந்து நம்மளை பாதுகாப்பது.]

(05) #ஆகர்ஷணம்

                                   [ஒரு பொருளைத் தன்னை நோக்கி வரச்செய்வது or மனிதனிற்கு அப்பாற்பட்டு பஞ்சபூதங்கள், தெய்வங்கள், தேவதைகள், பிற உயிர்கள், விலங்குகள் என அனைத்தையும்  ஆகர்ஷிப்பது or ஈர்ப்பது]

(06) #பேதனம்

                    [இருவரிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவது or  ஒற்றுமையாக இருப்பவர்களை பிரிப்பது]

(07) #வித்துவேஷணம்

                    [ஒருவர் ஒன்றை வெறுக்கச் செய்வது or கூட்டமாக இருக்கும் இடத்தில் கலவரத்தை உண்டாக்குதல்.]

(08) #மாரணம்

                     [இறப்பை ஏற்படுத்துவது, வேண்டாதவரை அழித்தல்.]

               என்பனவாகும்......


இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும். அப்படி முறையாக கற்றவரே உண்மையான யோக குருவாவார். அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய  முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர். அவ்வகையில் அகத்தியர் பெருமான் அருளிய அகத்தியர் பரிபூரணம்:1200 என்ற அற்புதமான நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு, 

உலோகம், எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள் 

பற்றிய தகவல்களை தந்துள்ளார்.


அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:

-----------------------------------------------------------


ஞாயிறு  -   வசியம்

திங்கள் -    மோகனம்

செவ்வாய் - வித்துவேஷணம்

புதன்         - தம்பனம்

வியாழன் - உச்சாடனம்

வெள்ளி      - ஆகர்ஷணம்

சனி - மாரணம்

        இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது சித்தியாகும். இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச் செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் அகத்தியர் பெருமான் ....


திசைகள்:-

-------------------


கிழக்கு - வசியம்

தெற்கு - மோகனம்,மாரணம்

மேற்கு - உச்சாடனம்

வட்க்கு - பேதனம்

தென்மேற்கு - வித்துவேஷ்ணம்

தென்கிழக்கு - தம்பனம்

வடமேற்கு - ஆகர்ஷணம்

வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.....


உடைகள்:-

-------------------


சிவந்த வஸ்திரம் - வசியம்

மஞ்சள் வஸ்திரம் - மோகனம்

பச்சை வஸ்திரம் - தம்பனம்

வெள்ளை வஸ்திரம் - பேதனம்

பச்சைப்பட்டு - உச்சாடனம்

கருப்பு வஸ்திரம் - மாரணம்

செம்பட்டு - சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.....


உலோகங்கள்:-

---------------------------


காரீயம்              - வசியம்

வங்கம்               - மோகனம்

பொன்                - ஆகர்ஷணம்

செம்பு                 - தம்பனம்

வெள்ளீயம்       - உச்சாடனம்

குருத்தோலை - வித்துவேஷணம்

இரும்பு               -  பேதனம்

வெள்ளி              - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.....


எண்ணைகள்:-

----------------------------


பசு நெய்                          -  வசியம்

நல்லெண்ணை           - மோகனம்

வேப்பெண்ணை          - மாரணம்

புங்கெண்ணை             - உச்சாடணம்

புன்னை எண்ணை      - பேதனம்

ஆதளை எண்ணை      - தம்பனம்

கழுதை, ஆடு, பன்றிகளின் நெய்

                                             - வித்வேஷணம்

வன்னி, ஆல், விளா, இவைகள் - சுபகர்மத்திற்கும்

கள்ளி, எருக்கு, எட்டி

அத்தி ,இச்சி, விடத்தலை

இவைகள் - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்.....


அதிதேவதைகள்:-

----------------------------------


ஈசன்                      -  வசியம்

அக்கினி               - மோகனம்

இந்திரன்             - தம்பனம்

நிருதி                    - உச்சாடனம்

வருணன்             - ஆகர்ஷணம்

வாயுதேவன்       - வித்துவேஷனம்

குபேரன்                - பேதனம்

எமன்                      - மாரணம்

முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 

அதிதேவதைகளாகும்.....


மலர்கள்:-

-------------------


மல்லிகை   -  வசியம்

முல்லை      -  மோகனம்

தாமரை       -  தம்பனம்

தும்பை        -  உச்சாடனம்

அரளி            -  ஆக்ரூஷணம்

காக்கண மலர் - வித்வேஷணம்

ஊமத்தம்     - பேதனம்

கடலை மலர் - மாரணம்

         முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 

மலர்களாகும்.....


ஆசனங்கள்:-

------------------------


வில்வப்பலகை          -    வசியம்

மாம்பலகை                 -   மோகனம்

பலாப்பலகை              -    தம்பனம்

நீலக்கம்பளம்              -    உச்சாடனம்

வெள்ளாட்டுத்தோல் -   ஆகர்சணம்

எட்டிப்பலகை               - வித்வேஷனம்

மரத்தோலாடை           - பேதனம்

அத்திப்பலகை            - மாரணம்

           முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 

ஆசனங்களாகும்......


அஷ்டகர்ம சித்தி:-

---------------------------------


மேலும் அகத்தியர் பெருமானின் சீடாரான தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.


தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்

தானான வயநமசி வசியமாகும்

மின்னின்ற யநமசிவ உச்சாடந்தான்

முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்

ஒன்றான சிவயநம மோகனந்தான்

உருவுவய யவசிமந வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்

வினையமுடன் யநவசிம மாரணந்தான்

நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு

நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்

தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்

திடமாக எட்டெட்டும் சித்தியாகும்

சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்

தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.

தேரையர் சிவபூசாவிதி


பொருள்:-


-சி-வ-ய-ந-ம- (மோகனம்)


-வ-ய-ந-ம-சி- (வசீகரம்)


-ய-ந-ம-சி-வ- (உச்சாடனம்)


-ந-ம-சி-வ-ய- (ஸ்தம்பனம்)


-ம-சி-வ-ய-ந- (ஆகர்ஷணம்)


-ய-வ-சி-ந-ம- (வித்வேடணம்)


-ம-ந-ய-வ-சி- (பேதனம்)


-ய-ந-வ-சி-ம- (மாரணம்)


அஷ்ட கர்மங்கள் சித்தியாக

வேண்டுமென்றால் ஒவ்வொரு

கர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் "ஐயும் கிலியும் சவ்வும்"

       என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம் உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்.


(01) வசியம்: அகத்தியர்

--------------------------------------------


அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் "வசியம்" எனப்படும் கலையானது எட்டு உட்பிரிவுகளை கொண்டது. வசியத்தின் தேவதை ஈசன் ஆவார்.


அது,

(01) சர்வவசியம்

(02) இராஜ வசியம்

(03) புருஷவசியம்

(04) ஸ்த்ரீ வசியம்

(05) மிருகவசியம்

(06) சர்ப்ப வசியம்

(07) சத்துரு வசியம்

(08) லோகவசியம்

                என்பனவாகும்.....


இந்த எட்டுவகை வசியத்திற்குமான

மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும்

முறையினையும் அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார்.


கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்

கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு

வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும்

கிலியும் சுவாகா வென்று

வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு

காலடா முக்கோணம் நடுவில்விந்து

கருவாக லங்கெனவே சந்திரபீஜம்

ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி

அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.


செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்

செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்

மெய்யடா வசியமது சித்தியானால்

மேன்மைபெற நினைத்ததெல்லாஞ்

சித்தியாகும்

அய்யனே புலத்தியனே

உனக்காய்ச்சொன்னேன்

கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன

கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.

            - அகத்தியர் பரிபூரணம் 1200


பொருள்:-

          வசியம் எட்டுக்குமான மந்திரத்தைச் சொல்கிறேன் கேள்,

"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும்

சுவாகா"


என்ற மந்திரத்தை செபிக்கும் முறை எப்படியெனில் முதலில் ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு

அதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்.


பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான பூசை வைத்து அதன் நடுவில் இந்த யந்திரத்தை வைத்து முன் கூறிய வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும்.


மாணவனே உனக்காக இதை சொல்கிறேன், கை அடக்கமாக இருந்து இதன் பலனைப்பார் என்கிறார் அகத்தியர்.


(02) மோகனம்: அகத்தியர்

------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் "மோகனம்" என்னும் கலையானது எட்டு உட்பிரிவுகளை கொண்டது. மோகனத்தின் தேவதை அக்கினி பகவான் ஆவார்.


அது,

(01) சர்வ மோகனம்

(02) இராஜ மோகனம்

(03) புருஷ மோகனம்

(04) ஸ்திரி மோகனம்

(05) மிருக மோகனம்

(06) சொர்ண மோகனம்

(07) சத்துரு மோகனம்

(08) லோக மோகனம்

                      என்பனவாகும்.....


பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன்

பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு

நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்

நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு

காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ

சுவாகாவென்று

கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு

சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து

தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.


சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து

தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா

புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்

பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்

பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்

கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி

பெற்றால்

கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.


பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று

பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்

நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்

நேர்மையுடனுன் முகங்கண்டபோது

வீரடா தானொடுங்கி மோகமாகும்

வேதாந்த பூரணமே தான்தானானால்

ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ

அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.

           - அகத்தியர் பரிபூரணம் 1200


பொருள்:-

         வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை சொல்கிறேன் கேள், ஒரு திங்கட்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில் நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும், அவ்வட்டத்தினுள் "றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி உடல் மனசுத்தியுடன் மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில் தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர் நிலையுடன்

"ஓம் கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா"

                        என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் இம்மோகனம் எட்டும் சித்தியாகும்.


மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவ ஜந்துகளும்,

மிருங்களும், மனிதர்களும் உன்னை

கண்டமாத்திரத்தில் தனது நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.


மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள் வசமாக்கி விடுவார்கள். அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம் என்கிறார் அகத்தியர்.


(03) தம்பனம்: அகத்தியர்:-

------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் மூன்றாவதாக

சொல்லப்படுவது "தம்பனம்" என்னும் கலையாகும். தம்பனம் என்பது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே தம்பிக்கச் செய்வதாகும், இது எட்டு உட்பிரிவுகளை கொண்டது. தம்பனத்தின் தேவதை இந்திரன் ஆவார்.


அவை,

(01) சர்வ தம்பனம்

(02) சுக்கில தம்பனம்

(03) ஆயுத தம்பனம்

(04) மிருக தம்பனம்

(05) ஜல தம்பனம்

(06) அக்கினி தம்பனம்

(07) தேவ தம்பனம்

(08) சர்ப்ப தம்பனம்

                    என்பவாகும்....


அறிந்துகொண்டு மோகனத்தை நன்றாய்ப் பார்த்து

அதன்பிறகு தம்பனத்தையருளக்கேளு

வருந்திமன துரிமையினால் வாசிகொண்டு

மகத்தான கேசரியில் மனக்கண்சாத்தி

தெரிந்துஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும்

ரீயும்சுகசுகசுவாகாவென்று

திறமாக உருசெபிக்க செயலைக்கேளு

விரிந்துபஞ்ச கோணமதில் நடுவேவிந்து

விந்துநடு ஸ்ரீயும் நன்றாய்ச்சாத்தே.


நன்றாக கேசரியில் மனதைவைத்து

நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

குன்றாமல் மந்திரத்தைத் தினம் நூறப்பா

குறையாமல் உருவேற்ற குணத்தைக்கேளு

விண்டதொரு எட்டுவகைத் தம்பனந்தான்

விபரமுடனின்று விளையாடும்பாரு

மண்டலத்திற் சென்றுவிளையாடுதற்கு

மகத்தான வித்தையடா மகிழ்ந்துபாரே.

பாரப்பா மனங்குவிந்து பதியில்நின்றால்

பத்தியுடன் சகலசித்து மாடலாகும்.

              - அகத்தியர் பரிபூரணம்1200


பொருள்:-

             மோகனத்திற்கு அடுத்தபடியாக தம்பனத்தை பற்றி சொல்கிறேன் கேள், ஒரு புதன் கிழமை நாளில் உடல் மன

சுத்தியுடன் பச்சை நிற வஸ்திரம் அணிந்து தென்கிழக்கு திசை நோக்கி பலா பலகையில் அமர்ந்து கொண்டு ஒரு செம்பு தகட்டில் ஐங்கோணம் (5 ஸ்டார்) போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,

அவ்வட்டத்தினுள் ஸ்ரீயும் என்று எழுதவும். பின்னர் அந்த தம்பனச்சக்கரத்தினை உன் எதிரில் வைத்து அதற்கு தாமரை மலர் சாற்றி ஆதளை எண்ணை ஊற்றி விளக்கேற்றி வைத்து முறையான பூசை பொருட்களை வைத்துக்கொண்டு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவநடு மையத்தில் குவித்து 

"ஓம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் ரீயும் சுகசுக சுவாகா"

            என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 108-உரு வீதம் 48-நாட்கள் செபித்தால் மந்திரம் சித்தியாகும். மந்திரத்தை

எண்ணிகை குறையாமல் 48 நாட்கள் செபித்தால் எட்டுவகை தம்பனமும்

சித்தியாகும். தம்பனம் ஒரு மகத்தான

வித்தையாகும். தம்பன சித்தியினால் சகலசித்தும் ஆடலாம் என்கிறார் அகத்தியர்.


(04) உச்சாடனம்: அகத்தியர்:-

-----------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் நான்காவதாக

கூறப்படுவது "உச்சாடனம்" என்னும் கலையாகும். உச்சாடனம் என்பது தீயசக்தி முதல் எந்தவொரு சத்தியினையும் அது இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது

ஆகும். உச்சாடனத்தின் அதிதேவதை நிருதி ஆவார். உச்சாடனம் எட்டுவகை உட்பிரிவுகளை கொண்டத்தாகும். உச்சாடணத்தின் தேவதை நிருதி ஆவார்.


அது,

(01) சர்வ உச்சாடனம்

(02) மிருக உச்சாடனம்

(03) சத்ரு உச்சாடனம்

(04) தேவ உச்சாடனம்

(05) விஷ உச்சாடனம்

(06) ஸ்திரி உச்சாடனம்

(07) வியாதி உச்சாடனம்

                      என்பதுவாகும்.....


காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தா

கண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு

பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு

பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு

தாக்கு

தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று

தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு

துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து

பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே

பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.


நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து

நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா

சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்

வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்

மகத்தான புருவமதில் மனதைநாட்டி

பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா

பொன்னுலகில் நின்று விளையாடுவாயே.

           - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

           நீ அறிந்து கொள்வதற்காக தம்பனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கு அடுத்ததாக உச்சாடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள். இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை

சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா"

            இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள், உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல் மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி

நீலக்கம்பளம் விரித்து அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு வெள்ளீய தகட்டில் அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.

         பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.


பிறகு தேங்காய், பழம், பத்தி, சூடம், சந்தனம் உள்ளிட்ட பூசை பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள் இல்லாமல் மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.


உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில் நிறுத்தி பேய், மிருகம், அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும் ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும்.


உச்சான சக்கரத்தை விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும். நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் அடியோடு நீங்கி விடும். இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசக்திகளும் விலகி விடும் என்கிறார் அகத்தியர்.


(05) ஆகர்ஷணம்: அகத்தியர்:-

-------------------------------------------------------

 

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக

சொல்லப்படுவது ஆகர்ஷணமாகும். ஆகர்ஷணம் என்றால் தன்னை நோக்கி

இழுத்துக்கொள்ளுதல் என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சக்தியையும்

ஆகர்க்ஷிக்கலாம். அதாவது மிருகம், மனிதர், தெய்வம் முதல் எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆகர்ஷணமாகும். ஆகர்ஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. ஆகர்ஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.


அவை,

(01) சர்வ ஆக்ருஷணம்

(02) பூத ஆக்ருஷணம்

(03) இராஜ ஆக்ருஷணம்

(04) புருஷ ஆக்ருஷணம்

(05) ஸ்திரி ஆக்ருஷணம்

(06) மிருக ஆக்ருஷணம்

(07) தெய்வ ஆக்ருஷணம்

(08) லோக ஆக்ருஷணம்

                          என்பனவாகும்.....


நோக்கமுடன் உச்சாடனத்தைச்

சொன்னேன்மைந்தா

நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு

பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி

பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்

நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று

தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு

சிவசிவா நவகோணநடுவில்விந்து

மகத்தான விந்துநடு ஓமென்றூணே


உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா

பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்

காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்

கருணையுட னினைத்ததெல்லாங்

காணுங்காணும்

வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான்

உலகத்தோர்க்கு

வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.

         - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

        நீ தெரிந்து கொள்வதற்க்காக உச்சாடத்தை பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக ஆகர்ஷணத்தை சொல்கிறேன் கேள், ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க

தகட்டில் நவகோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்

பின்னர் அவ்வட்ட்த்தினுள் "ஓம்" என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை

பூசையில் வைத்து அதை சுற்றி அரளி

மலர்களால் அலங்கரிக்கவும்.


பின்னர் உடல் மனசுத்தியுடன் செம்பட்டு

ஆடை உடுத்தி வெள்ளாட்டு தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை

நோக்கி அமர்ந்து கொண்டு மன ஓர்நிலையுடன் " ஓம் கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"


என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு

உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் ஆகர்ஷணம் சித்தியாகும். ஆகர்ஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை அடைந்து கொள்வதற்க்காக இதைப்பற்றி விவரமாக சொன்னேன் என்கிறார் அகத்தியர்.


(06) வித்வேஷணம்: அகத்தியர்:-

------------------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக

சொல்லப்படும் கலையானது "வித்வேஷணம்" ஆகும். வித்வேஷணம்

என்பது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே

வித்வேஷணமாகும். வித்வேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும். வித்வேஷணத்தின் தேவதை "வாயு" தேவன் ஆவார்.


அவை,

(01)சர்வ வித்துவேஷணம்

(02) இராஜ வித்துவேஷணம்

(03) புருச வித்துவேஷணம்

(04) ஸ்திரி வித்துவேஷணம்

(05) மிருக வித்துவேஷணம்

(06) தேவ வித்துவேஷணம்

(07) லோக வித்துவேஷணம்     

                     என்பனவாகும்.....


பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு

பதிவான மந்திரமிது சுத்தவித்தை

வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது

ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும்

சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே

எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்

இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு

கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து

கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி

முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்

முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு

சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே

சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.


செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண

சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி

மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா

விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்

அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்

அரகரா தன்வசமா யடங்கியாடும்

மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட

வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.

         - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

           ஒரு செய்வாய் கிழமை நாளில்

உடல்மனசுத்தியுடன் சாம்பல் நிற

பட்டாடை உடுத்தி எட்டிபலகையில்

வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு

எட்டிப்பலகையை வைத்து அதில்

விபூதியை பரப்பி அவ்விபூதியில்

முக்கோணம் போட்டு அம்முக்கோணத்தின் நடுவில் "ஓம்" என்று எழுதி அதனுள் "சிங்" என்று

எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி

விளக்கேற்றி வைத்து அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய

பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு

"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா"

           என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் வித்துஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.


பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3

முறை செபித்தால் உன் வழியில் குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள்,

எதிரிகள், மிருகங்கள், ஆண்கள்,

பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில் மிரண்டு ஓடிவிடும்.


அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும், முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும். பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன

முறையில் மந்திரத்தை கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில் போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி

தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.


(07) பேதனம்: அகத்தியர்:-

-----------------------------------------------


அஷ்டகர்மங்களில் ஏழாவதாக

சொல்லப்படும் கலை "பேதனம்" ஆகும். பேதனம் என்பது ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் அவரின் புத்தியை பேதலிக்கச் செய்வதாகும். உதாரணமாக ஏழாம்அறிவு என்ற படத்தில் டாங்லி என்பவர் தனக்கு முன்னால் நிற்பவரின் புத்தியை பேதலிக்கச்செய்து விடுவார். இதனால் எதிரில் நிற்பவர் தன்னுடன் இருப்பவர்களையே கொன்று விடுவார். இதற்கு காரணம் நாம் அவரின் புத்தியை வேறு நிலைக்கு மாற்றியதுதான் இதுவும் நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை

தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென எண்ணினால் அவன் பேதலித்துப்போய்

விடுவான்.  இப்பேதனம் எட்டு வகைப்படும். பேதனத்தின் அதிதேவதை "குபேரன்" ஆவார்.


அவை,

(01) சர்வ பேதனம்

(02) இராஜ பேதனம்

(03) புருஷ பேதனம்

(04) ஸ்திரி பேதனம்

(05) மிருக பேதனம்

(06) தேவ பேதனம்

(07) அக்கினி பேதனம்

(08) லோக பேதனம்

                 என்பனவாகும்....


 பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்

பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு

மாரப்பா பேதனந்தானதீத வித்தை

மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு

அங்அங் நசி நசி சுவாகாவென்று

நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி

காரப்பா கோணம்நடு விந்துபோட்டு

கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.


போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து

புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா

நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு

வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்

மகத்தான பேதனந்தான் மார்க்கமாக

காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து

கைகண்டவித்தையடா கனிந்துபாரே.

        - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

            பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான் அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும் முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும். பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும் சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன் வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில் அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து மன ஓர் நிலையோடு

"ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும்

அங்அங் நசிநசி சுவாகா" என்று நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம்

சித்தியாகும்.

          

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதன மந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில்

இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில் பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம் எண்ணப்படி செயல்படச் செய்யலாம் என்கிறார்

அகத்தியர்.


(07) மாரணம்: அகத்தியர்:-

-----------------------------------------------


அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக

சொல்லப்படும் கலை "மாரணம்" ஆகும். இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும்

வேண்டாத அல்லது கேடு விளைவிப்பவைகளை மாரணிக்க

(அழிக்க) செய்வதாகும். மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார். மாரணம் எட்டுவகைப்படும். மாரணத்தின் அதிதேவதை "யமன்" ஆவார்.


அவை,

(01) சர்வ மாரணம்

(02) அரச மாரணம்

(03) சத்ரு மாரணம்

(04) சர்வபூத மாரணம்

(05) சர்வ ஜீவஜந்து மாரணம்

(06) சர்வவிஷ மாரணம்

(07) சர்வதேவ மாரணம்

(08) சர்வரிஷி மாரணம்

                             என்பதாகும்....


ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்

அரகரா மாரணத்தினருமை கேளு

தாமப்பா சொல்கிறே மந்திரசித்து

தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்

பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று

ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு

உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்

நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்

நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.


பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை

பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி

காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக

கண்ணார உருச்செபித்து கருணையானால்

நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே

நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே

தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று

சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.


தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்

தெளிந்துகொண்டு தன்னுயிர்போல்

செகத்தைப்பார்த்து

மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று

மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி

ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்

இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்

ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை

அப்போதே மாரணிக்க அந்தந்தானே.

             - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

          முன்பு பேதனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக

மாரணத்தைப் பற்றி சொல்கிறேன் கேள், ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின்

அடிமுனையில் "கம்" என்று எழுதவும்.

           பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கருமைநிற ஆடை

அணிந்து தெற்கு நோக்கி அத்திப்பலகையில் அமர்ந்து கொண்டு

உன் எதிரில் மேற்கூறிய மாரண எந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி

கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை

பொருட்களையும் வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு

             "ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா"

           வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க மாரணம் சித்தியாகும்.


மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத மனிதர், துன்பம் செய்யும் விலங்கு, தீராத நோய், தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள், அரச பதவியில் இருந்து கேடு செய்யும் பாவிகள் என யாவரையும் அழித்து விடலாம்.


மாரணத்தை சித்தி செய்து விட்டோம் என்பதற்க்காக நல்லவர்க்கு அதை தவறான வழியில் பயன்படுத்தினால் பெரும் பாவத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக வேண்டிவரும். ஆதலால்

இம்மாரணத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால் யாவர்க்கும் அதிக கெடுதல் செய்யும் பாவிகளிடமும், கொடுர விலங்குகளிடமும் பயன்படுத்தி அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி அவர்களுக்கு நன்மை செய்வதற்க்காக இதை பயன்படுத்த வேண்டும்.


மேலும் இதை பயன்படுத்து முறைகளை

சொல்கிறேன் கேளுங்கள்,

          மாரண சித்தி செய்த பின்னர் இந்த யந்திரத்தை வரைந்து 108 உரு

கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள் நடமாடும் வீடு,

தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால் அவ்விடத்தை அவைகள் நெருங்காது. அப்படி நெருங்கினாலும் சுருண்டு விழுந்து விடும், தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய

யந்திரத்தை விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து அவ்விபூதியை அவர்கள் பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால் அவர்களின் உடலில்

உள்ள நோய்கள் நீங்கி விடும்.

                  உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும் இம்மந்திரம் ஓதிய விபூதியை கொடுக்க சரியாகி விடும். உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை அவர்கள் அழிந்து போக வேண்டுமென எண்ணி இம்மாரண யந்திரத்தில் அவர்களின்

பெயரை தலைமாற்றி எழுதி அதில் அவர்களின் காலடி மண் அல்லது முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி அவர்கள் நடமாடும் பகுதி அல்லது சுடுகாட்டிலோ அதை புதைக்க அவர்களுக்கு மூச்சடைக்கும் உடலெல்லாம் எரியும் நிமிடத்தில் உயிர் பிரிந்து போகும்.


மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு மந்திரக்கட்டு போட்டு இருப்பார்கள். அவர்களின் மந்திரக்கட்டை மாரணிக்க செய்து அவைகளை நாம் அடைந்து விடலாம் இது ரிஷி மாரணமாகும்.


தீமை செய்யும் யாவரையும் அழிக்க வேண்டுமென்றால் உன் மூச்சை

இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை

மனதால் 3 முறை செபித்தவாறு அவனை உற்று நோக்கினால் மதிமயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன் எழவே மாட்டான்.


இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும் இதை நல்ல வழிக்கு

மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்,


சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம்

தன்னைச்

சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி

நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி

நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்

தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க

மாட்டார்

துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்

          - கோரக்கர் சந்திரரேகை:117


பொருள்:-

        மூச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு மனதினில் செபித்து நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில் "ஓம் உம் நம்" என்ற இம்மந்திரத்தை 1008 உரு

செபிக்க சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும். இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளாவார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விளங்காமல் போய்விடும். இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில் நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.


சிந்தித்து செயல்படுங்கள்....

ஒரு ஆழமான புரிதலுக்காக மட்டுமே இந்த பதிவை விரிவாக எழுதினேன்.


(விரிவாக திருமூலர் பெருமானின் வழியில் இந்த யோகங்களை முறையாக எளிமையாக பயின்று யோகங்களில் தேர்ச்சி பெற சிவயோகி சித்தர்களின் குரல் சிவசங்கர் ஆச்சாரியர் அவர்கள் நேரடியாக whatsaap மூலம் கற்பிக்கும் திருமந்திர whatsaap சிவயோக வகுப்பில் கற்றுக்கொள்ளவும். உலகில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் இருந்த படியே முழுமையாக அனைத்து சிவயோகங்களையும் திருமூலர் பெருமானின் குருவருளால் கற்கும் வாய்ப்பு. மேலதிக விபரங்களுக்கு சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம்குமார் +918148285865 என்ற எண்ணுக்கு whatsaap மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை நிரப்பி, வகுப்பு கட்டணத்தை செலுத்தி வகுப்பில் இணைந்து முழுமையாக கற்று பயன்பெறவும்.)


         - சித்தர்களின் குரல். Shiva shangar