ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுதுன்னு தெரியுமா?
பொதுவாக ஸ்வீட் கடைகள்ல வாங்கற ஸ்வீட்டுகள் மேல ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த சில்வர் பேப்பர் அழகிற்காகவும் ஒட்டப்பட்டிருக்கும். அது ஒட்டிய பின்னர் அந்த ஸ்வீட்லேந்து அதை எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால பெரும்பாலானவங்க அந்த சில்வர் பேப்பரோடவே ஸ்வீட்டை சாப்பிடுவார்கள்.. ஸ்வீட் மேல ஒட்டியிருக்காங்கன்னா அது என்ன பண்ணிடப் போகுதுங்கிற நம்பிக்கை தான். இது சில்வர் ஃபாயில், சில்வர் ரேக் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதன் ஒரிஜினல் பெயர் வராக்.. இந்த வராக் எனப்படுவது எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்று சொன்னால் அதிர்ச்சியின் எல்லைக்கே போக நேரிடும். இருந்தாலும் எல்லாரும் தெரிந்து கொண்டு இனி அந்த வராக் பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்பதை விட்டுவிடலாமே என்ற எண்ணத்தில் தான் அதைப்பற்றியான செய்தி இங்கே தரப்படுகின்றது..
வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது முதல் ஷாக்..
வராக் எப்படி தாயாரிக்கின்றார்கள்?
இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து, இந்த ‘வராக்’ தயாரிப்பாளர்களிடம் விற்பனை செய்வார்கள். மாடு இறந்த உடனேயே இந்த குடல் எடுக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் அது விறைத்து விடும். ஒரு மாட்டோட குடல் 540 இன்ச் நீளமும் 3 இன்ச் அகலமும் கொண்டது. இதை சுத்தம் செய்து நீளாக வெட்டினால் 540 இன்ச் 10இன்ச் என விரியும். ‘வராக்’ தயாரிப்பாளர்கள் 9க்கு 10இன்ச் என்ற வீதத்தில் 60 துண்டுகளாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள். இது ஒரு நோட்புக் போல இருக்கும். அதன்பின்னர் மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள். இப்படி தொடர்ந்து அடிப்பதினால் அது மிக மெல்லிய வெள்ளி தாளாக மாறுகின்றது..
இப்படி தயாரிக்கப்பட்ட வெள்ளி சரிகை தாள்கள் மொத்தமாக ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 வெள்ளி சரிகை தாள்கள் (10 கிராம் எடை) கொண்ட ஒரு ரோலின் விலை 200 ரூபாய். இந்த வெள்ளி சரிகை தாள்களைதான் ஸ்வீட்டுகளின் மேல் அழகுக்காக பரப்பிவிடுகிறார்கள். முட்டை கூட தொடாத சைவ பிரியர்கள் இந்த வெள்ளிதாள்கள் எதிலிருந்து செய்யப்படுகின்றது என்ற விவரம் தெரியாமலேயே இந்த ‘சரிகை தாள்’ கொண்ட இனிப்பை அந்த தாள்களை நீக்காமலேயே சாப்பிடுகிறார்கள்.
தோல் பெட்டியில் வைத்து அடிக்கப்படும் வெள்ளி தகடுகள், மெல்லிய தாள்களாக மாறும் போதும், குடலில் உள்ள திசுக்கள் சூடாக உள்ள இனிப்புகள் மீது இந்த தாள்கள் ஒட்டப்படும்போடு இந்த இனிப்பில் அந்த திசுக்கள் கலந்துவிடுகின்றது. அதனால் இனிப்பில் மாட்டின் குடலில் உள்ள திசுக்கள் கலந்துவிடுகின்றது. சைவ இனிப்பு அசைவ இனிப்பாக மாறுகிறது.
இதுல என்ன கொடுமைன்னா அந்த சில்வர் ரேக் சுற்றப்பட்ட ஸ்வீட்டை வாங்கிச் சாப்பிடும் போது நமக்கு தெரியாமலேயே, மாட்டு குடல்களில் உள்ள கிருமிகள் மற்றும் குடல் புழுக்களின் முட்டைகள் ஆகியவற்றை வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம். மாட்டுக்கறி உண்பர்கள் கூட மாட்டின் குடலை உணவில் பயன்படுத்துவதில்லை. காரணம் அந்த குடல்களில் உள்ள திசுக்கள், கிருமிகள், குடல்புழுக்கள் ஆபத்தானவை என்பதால்.
ஸ்வீட் தானே என்று இந்த தாள் சுற்றப்பட்ட இனிப்புகள் உண்பதால் பல கொடிய நோய்கள் நம்மையறியாம லேயே நமக்கு ஏற்படுகின்றது. இப்படி இந்த சில்வர் தாள்கள் எதிலிருந்து தயாரிக்கப் படுகின்றது என்பது இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு தெரிந்திருந்தும் தொடர்ந்து பயன்படுத்துவதின் நோக்கம் அந்த இனிப்புகள் இந்த காகிதத்தால் அலங்கரிக்கப் படுகின்றது, அதன் காரணமாக பார்ப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சியும், அந்த இனிப்பினை வாங்கவும் தூண்டுகின்றது என்பதினால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றார்கள்.
ஒரு சில இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விவரம் தெரிந்த பின்னர் அதனை வாங்கி தங்களது இனிப்பின் மேல் சுற்றுவதில்லை.. இவ்வளவு ஏன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வெள்ளி தாளால் மூடப்பட்ட இனிப்புகளை பல காலமாக பறிமாறி வந்தனர். இந்த வெள்ளி தாள் எந்த வகையில் தயாரிக்கப்படுகின்றது என்ற செய்தி அறிந்ததும் இப்போது அந்த இனிப்புகள் வாங்குவதை நிறுத்திட்டாங்க.
ஒரு சர்வே என்ன சொல்லுதுன்னா ஒரு வருஷத்திற்கு நம் நாட்டில் தயாரிக்கப்படும் இனிப்பின் மேல் சுற்றுவதற்கு தயாரிக்கப்படும் அந்த தாளுக்கு 275 டன் வெள்ளி தேவைப்படுகின்றது. இந்த ப்ராசஸ் நடைபெற்று அதனை மெல்லிய வெள்ளித்தாளாக மாற்ற 5,16,000 மாடுகள் மற்றும் 17,200 கன்றுகளின் தோல்கள் தேவைப்படுகிறது.
இதைபற்றி பல செய்தித்தாள்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அரசாங்கம் இதற்கு தடை ஏற்படுத்தவும் இல்லை. அரசாங்கமே தடை ஏற்படுத்தாமல் போனதால இன்னும் பல பிரபல இனிப்பு நிறுவனங்கள், இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான வேதனை..
இனி இனிப்புகள் வாங்கும்போது இந்த வெள்ளித்தாள் சுற்றப்பட்ட இனிப்புகளை வாங்கறதை கட்டாயம் தவிர்த்திடுங்க…
(Jain Meditation International Center, New York இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருப்பதை இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது..)