வணக்கம் அகத்திய அடியவர்களே
நமது பொகலூர் அகஸ்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , பெரும் ஆலயமாகி நிற்கிறது . அகத்தியர் எம்பெருமான் ஒரு விளக்கு ஒளி மூலம் அங்கே கும்ப அபிஷேகத்திற்கு முன்னால் 21 நாட்கள் ஒரு விளக்கு ஒளி மூலம் இப்போது உள்ள பீடத்தில் எழுந்தருளி , பிறகு அவ்விளக்கை புதிய ஆலயத்தில் ஏற்றி வழிபட்ட உடன் இங்கே இருந்து குடி பெயர்ந்து புதிய நிலைக்கு அரூபமாக சென்று விடுவார் . 21 நாட்களும் அணையா தீபமாக , இப்போது இருக்கும் குடிலில் தொடர்ந்து ஒளிர வேண்டும் என்பது அகத்தியர் எங்களுக்கு ஜீவ நாடியில் உறைத்துள்ள வாக்கு .
ஒன்று அறியாத சிறு குழந்தைகள் போல் உள்ள எங்களுக்கு ஆசானாய் குருவாய் உள்ள அகத்தியரின் நேரடி உத்தரவை மட்டுமே நாம் அடிபணிந்து செயலாற்றி கொண்டு உள்ளோம் . எங்களுக்கு பெரிதாக ஆலய விதிகள் எதுவும் தெரியாது . நாங்கள் எப்போதும் அகத்தியர் ஆட்டுவிக்கும் பொம்மையாக உள்ளோம் , ஆட்டுவிப்பவர் அவரே.
எனவே , இதனை உணர்ந்து , பக்தர்கள் அனைவரும் , தம் தமது வாழ்வில் அகத்தியரின் வழி காட்டுதல் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் , அதற்கு அவர் தொடர்ந்து மிகவும் ஆழமாக நிலை நிற்க வேண்டும் . அதற்கு தான் இந்த ஆலயம் .நமது சுயநலத்திற்காக , நமது பக்தர்கள் வாழ்வில் சிறப்புகள் பெற்று தடைகள் அகன்று உயர வேண்டும் என்பதற்காக ஒரு உண்மையான வழிகாட்டி அரூபமாக இருந்து ஜீவ நாடி மூலம் நேரிடையாக உரையாடி அருள , அவருக்கு மிகவும் தகுந்த இடமாக இந்த ஆலயம் இருக்கும் .
*எனவே , ஏற்கனவே நமது அகத்தியர் அருள் மூலம் பயன் பெற்ற அடியவர்கள் , ஏதோ ஒரு வகையில் தங்களால் இயன்ற பொருளதவியை செய்து இந்த ஆலயம் எழும்ப தோள் கொடுக்குமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்*
நமது தேவை 50 நபர்கள் , தலா 10000 வீதம் அளித்தால் , நன்கொடை சேகரிப்பு விரைவில் முடிவடையும்
*ஆலயம் எழும்பினால் நமக்கு தான் நல்லது , நமது வாழ்வு மேலும் சிறக்கும் , ஆலயம் கோபுரம் உயர உயிர் பெற , அதற்கு உறுதுணையாக இருந்த பக்தர்கள் வாழ்வும் படிப்படியாக உயரும் என்பது அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த வாக்கு*
நமக்கு இன்னும் சுமார் 35 நாட்கள் மட்டுமே உள்ளன - கும்பாபிஷேகம் மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் கும்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும்
*இதற்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வேத விற்பன்னர்கள் குழுவிற்கும் , பூஜை பொருட்களுக்கும் மொத்தமாக 2 லட்சம் கொடுப்பதாக பேசி இருக்கிறோம் . வசதி படைத்தவர்கள் மனது வைத்தால் , இந்த 2 லட்சம் ரூபாயை யாரேனும் கொடுக்க முன்வரலாம் , பணத்தை கூட நேரிடையாக வந்து இருந்து கும்பாபிஷேகம் செய்து வைக்கும் உயர்திரு கல்கி கண்ணன் ஸ்வாமிஜி சாஸ்திரிகள் அவரிடமே நேரிடையாக கொடுக்கலாம்* விருப்பம் இருப்பவர்கள் , வசதி உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் , இந்த கைங்கர்யமான் 2 லட்சம் ரூபாயை ஏற்று கொள்ளவும் . ராஜ பட்டாபிஷேகத்தில் , கிரீடம் எவ்வளவு முக்கியமானதோ , அதை போன்று , கும்பாபிஷேகத்தில் , புரோகிதமும் வேத மந்திரங்களும் , பூஜை திரவியங்களும் தான் பிரதானம் . அதே போல, ஒரு கல்யாணத்தில் , தாலி கயிறு திருமாங்கல்யம் எவ்வளவு முங்கியமோ , அதை போல தான் இந்த வேத கைங்கர்யம் . இந்த கைங்கரிய செலவை ஏற்று கொள்பவர்களுக்கு பிரதானமான கும்பிஷேக புண்ணிய பலன் சென்று சேரும்.
எந்த கட்டாயமும் இல்லை . மேலே உள்ள பதிவு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அவர்கள் மட்டும் மனம் வைத்தால் இது நடக்கும். எல்லாம் இறை செயல் ,; நாங்கள் வெறும் கருவிகளே !!!
இறை இயக்கம் வெற்றி பெறட்டும் !!!! ஓம் அகத்தீஸ்வராய நமஹ ஓம் லோபாமுத்ராய நமஹ
இங்கனம்
தி. இரா. சந்தானம்
03- 02-2025
GPAY 9176012104