Thursday, 30 January 2025

நமது அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம் 10.03.2025


 🙏🏻வணக்கம்🙏🏻

🙏🏻நமசிவாயம்🙏🏻



ஏப்ரல் 2016, முதல், 8 வருடங்களாக பொகளூர் கிராமத்தில், சிறிய குடிலில் குடிகொண்டு அருள் பாலித்து  அரும்  நமது தந்தை அருள்மிகு அகத்தீஸ்வரர் எம்பெருமான் அவரகளுக்கு பக்தர்களின் பெரும் பொருளுதவியுடன் பிரமாண்டமான ஆலயம் எழுப்பட்டு இன்று கம்பீரமாக நிற்கிறது.


 நமது குருநாதர் அகத்தியர், தம்பதி சமேதராக ஸ்ரீமதி உலோபமுத்திரை தாயாருடன் அருள் பாலிக்க உள்ளார்.


 அத்துடன் இலிங்க  வடிவில் ஈசனும், மற்றும் தம்பதி சமேதராக நீலா சரஸ்வதி சமேத உஜ்ஜிஷ்ட மகா கணபதி பெருமானும் தனி சந்நிதி கொண்டு எழுந்தருள உள்ளார்கள்.


மேலும் திரு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்சமேதராக சித்திர வடிவுடன் சித்திர கூடமாக ,  வாசி யோக மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.


அன்னதான .மண்டபம் தனியே எழுப்பப்பட்டுள்ளது. 


 நவீன் தொழில் நுட்பத்துடன் கூடிய சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.


கோசாலை அமைக்கப்பட்டுள்ளது.


27 நட்சத்திர மரங்கள் கொண்ட நந்தவனம் அமைய பெரும். மரங்கள் நடப்பட தயார் நிலையில் உள்ளன.


பக்தர்கள் வசதிக்காக ஆண், பெண், தனித்தனியே உபயோகிக்கும்  வகையில் கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


மஹா கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க, நம்மிடம் ஜீவ நாடி மூலம் பேசி உரையாடும் மூலவரான கும்பமுனி அகத்தியரே நாள் குறித்து உள்ளார்.


 மற்ற ஆலயங்கள் போல் அல்லாமல், மூலவரே பேசி, தன்னை எப்படி பிரதிட்டை செய்ய வேண்டும், விழா எப்படி நடத்த வேண்டும், எவ்வளவு கலசம் கொண்டு அபிஷேகம் செய்ய  வேண்டும் என்று ஜீவ நாடி மூலம் உரைத்து நடத்தும் கும்பாபிஷேகம்,மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் விழா ஆகும்.


கும்ப அபிஷேக விழாவில்,  அகத்தியர் மனித உருவம் கொண்டு அங்கு வந்திருந்து மக்களை ஆசி புரிவார்.


கும்ப அபிஷேகத்திற்கு யாக சாலை, பூஜை பொருட்கள், பந்தல், அன்னதானம், கலசங்கள், புரோகித செலவு, ஆகியவைக்கு, சுமார்,  5 லட்சம் தேவை படுகிறது. 


50 பேர் சேர்ந்து ஆளுக்கு 10,000 வீதம் பொருள் ஈட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அகத்தியர் ஆலய கும்ப அபிஷேக பணியை ஏற்று கொண்டு அந்த 50 பாக்கியவான்களில் ஒருவராக ஆகும்படி பீடத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.


ஒரு பீடம், இன்று ஆலயமாக மாற போகிறது. ஆசிரமமாக மாற போகிறது.


50 பேரில் ஒருவராக விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கவும். 10,000 நன்கொடை மார்ச்சு மாத துவக்கத்திற்குள் கொடுக்கலாம்.


மிக்க நன்றி.


தி. இரா. சந்தானம்

அகத்தியர் பீடம்

Gpay 9176012104