Tuesday, 27 February 2024

மந்த்ரா யந்த்ரா தந்த்ரா

 மந்த்ரா யந்த்ரா தந்த்ரா




Sunday, 25 February 2024

பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம்

 பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம்

கோயில் வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன் மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவைகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கின்றன.

போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன.

காலத்தின் சாட்சியாய், கோடிக்கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள்.

ஓதுவார்களின் தேவாரப்பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காண காண திகட்டாத சிற்பக்கலைகளும், பண்டாரங்களின் ஞானப்பாடல்களும், எண்ணைய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றத்தையும், மனதை நிறைக்கும் மணி ஓசையையும், சந்தன விபூதி மணமும், வீதியில் அசைந்துபோகும் தேரும் , திருவிழாவும், மக்களோடு மக்களாய் ஒன்றி இருந்தன.

ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலம் உண்டு, நேந்து விடுபவர்களால் மாடுகளும், ஆடுகளும், கோல்களும் நிரம்பி வழிய அதை விவசாயிகளும், ஆடு மாடு மேய்ப்பவர்களும் பார்த்துக் கொண்டார்கள்.

அந்தக் கால வாழ்க்கை முறையில் ஒரு சிறந்த கணக்கியல் வல்லுனனாக கூட கோவில் இருந்துள்ளது.

மாடுகளை மேய்ப்பவனுக்கு அதற்கான நிலமும் கோவிலில் கொடுக்கப்பட்டது.

அந்த மனிதன் கடவுளுக்கு நெய்வெய்தியம் செய்ய வேண்டிய பாலை மட்டும் கொடுத்துவிட்டு, மாட்டையும், நிலத்தையும் அனுபவிக்கலாம். அவன் சரியாக பாலை கொடுக்காத பட்சத்தில் அந்த நிலமும், மாடுகளும் பரிக்கப்படும்.

இது ஒரு எடுத்துக் காட்டு மட்டும் தான். இப்படி ஏகப்பட்ட நுட்பமான கோட்பாடுகள் உண்டு.

ஓதுவார்கள், பண்டாரங்கள், நாட்டிய கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள், இசை மேதைகள், புலவர்கள், சுத்தம் செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள், விவசாயிகள், பூ வியாபாரிகள் என கோடிகோடியான மக்களுக்கு வாழ்வாதமாக விளங்கியுள்ளன அந்தக்கால கோவில்கள்.

இங்கு வியாபாரிகளில் பூ வியாபாரிகள் என குறிப்பிட்டு சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் நம்முடைய பூஜை முறையே பூவை கடவுள் மீது போட்டு வணங்குவது தான்.

உலகில் உள்ள பிற மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது.

நமது முன்னோர்கள் தாங்கள் கண்டறிந்த  அறிவியல் விசயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்தி சென்றுள்ளார்கள்.

வடக்கு திசை நோக்கி படுக்க வேண்டாம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த்தை, சில மூடர்கள் மூடநம்பிக்கை என்று கிண்டல் செய்தார்கள்.

ஆனால் வடக்கு திசை நோக்கி படுக்கும் போது மனிதனின் மூளையை பூமிகாந்தம் பாதிக்கிறது என்ற உண்மையை பிறகே மக்கள் உணர்ந்தார்கள்.

மஞ்சளையும் வேம்பினையும் கிருமி நாசினியாக இன்றுதான் மேலுலகம் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நம் ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை கண்டறிந்து பயன்படுத்திவந்துள்ளார்கள்.

அவர்கள் பயன்படுத்தியதோடு நில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்விலும் அவைகளை பயன்படுத்த வைத்துள்ளார்கள்.

இப்படி இந்து மதத்தில் நிறைய விசயங்களில் மறைமுகமாக இருக்கும் விஞ்ஞானத்தினை நாம் இப்போது அறிந்துகொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் இன்று டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிமையாக விளக்கும் இந்து மதத்தினைப் பற்றி காண்போம்.

பரிணாமக் கொள்கை -

சார்லஸ் ராபர்ட் டார்வின் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில்,  உலகில் பல இடங்களுக்கும் சென்று,  உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன,  பறப்பன,  நடப்பன ஆகியவற்றின் பல எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிந்தார்.

அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் எனும் நூலில் விவரித்துள்ளார். இதனை பரிணாமக் கொள்கையென கூறுகின்றார்கள்.

இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புக் கொள்கையாகும்.

பூமியில் நீர் மட்டுமே சூழ்ந்திருந்த காலத்தில் நீர்வாழ்பவன தோன்றின. பின் நாட்களில் நீர் வற்றி, நிலம் தென்பட்ட போது, நீரில் வாழும் உயிர்களில் சில நீர் நில வாழ்பவனவாக மாற்றம் அடைந்தன.

அவற்றிலிருந்து ஊர்வன உயிரினங்கள் தோன்றின. பின் பாலூட்டிகளாக அவை மாற்றம் அடைந்தன. பாலூட்டிகளில் ஒன்றான குரங்கினம் சிந்தனை செய்ய தொடங்கிது. அதனால் ஆறறிவு பெற்ற மனிதன் தோன்றினான.

மற்ற பாலூட்டிகள் போல் அல்லாமல் இரண்டு கால்களால் மனிதன் நடந்தான். மூர்கமாக வேட்டையாடும் குணம் அவனுக்குள் இருந்தது. அதனால் வேட்டையாடி மிருகங்களை கொன்று உண்டான். தனித்தனியாக இருந்த மனிதன் குழுவாக இணைந்தார்கள்.

தங்களுக்குள் தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் பின் மற்றவர்கள் சென்றார்கள். அவன் சொல்படி நடந்தார்கள். நதிப்பகுதியில் விவசாயம் செய்து நாகரீக மனிதனாக மாறினான். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினான்.

அவைகளை காடுகளில் மேய்ச்சல் செய்து பிழைத்தான். பின் தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தி தற்போதுள்ள விஞ்ஞான மனிதனாக மாறிவருகிறான். வருங்காலத்தில் உலகினையே அழிக்கும் சக்தியுடைவனாக மாறுவான் என்பதில் சந்தேகமில்லை.

தசவதாரம் -

உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார்.

எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன.

இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும்.

டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது.

அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன.

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.

மச்சாவதாரம்:

திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம்:

பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம்:

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். 

வாமன அவதாரம்:

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம்:

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம்:

ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம்:

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம்:

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்:

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

 

அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.

மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)

பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.

கூர்ம அவதாரம் – (ஆமை- நீர் நில வாழ்வன)

திருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால் ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது. பரிணாமக் கொள்கையைப்படி நீர் வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

வராக அவதாரம் – (பன்றி- நிலத்தில் வாழும் பாலூட்டி)

தசவதாரத்தின் மூன்றாவது அவதாரம் வராகம். இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது. பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக மாறியதை குறிக்கிறது.

நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)

தசவதாரத்தின் நான்காவது அவதாரம் நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும் சொல். மனிதன் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலின் அவதாரம் இரணியனை கொல்ல எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம் சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.


வாமண அவதாரம் – (மனித தோற்றம்)

தசவதாரத்தின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த அவதாரமென புராணங்கள் கூறுகின்றன. பரிணாமக் கொள்கைபடி முழு மனிதனை இந்த அவதாரம் குறிக்கிறது.

பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)

தசவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க மனிதராக இந்த அவதாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது.

ராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)

தசவதாரத்தின் ஏழாவது அவதாரமான ராம அவதாரம் இராவணனை அழிப்பதற்காக திருமாலால் எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம அவதாரம் குறிக்கிறது.

பலராம அவதாரம் –(விவசாயம் செய்யும் மனிதன்)

தசவதாரத்தின் எட்டாவது அவதாரம் பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது. பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம் செய்யும் மனிதனை குறிக்கிறது.

கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)

தசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும் அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் சிறுவனாக இருந்தது கால்நடைகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.

கல்கி அவதாரம் -

தசவதாரத்தின் இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனமும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன் மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.

மேலைநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளமை வியப்பானதல்லவா?

கேசரி யோகம்

 கேசரி யோகம் என்றால் என்ன?

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

இராம் மனோகர் ::::::

★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம். மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.


★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.


கேசரி யோகம்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆


★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்

அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி

விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து

நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் - 779.


★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன்

அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.


★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப்

பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. - தாயுமானவர்.


★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய

முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு

கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் - அருணகிரிநாதர்.


★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்.


★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற் கொள்ள வேண்டும். வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்க வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.


★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.


★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு

அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும்

உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.


★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.


சந்திர யோகம்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆


★காணும் பரிதியின் காலை இடத்திட்டு

மாணும் மதியதன் கால் வலத்திட்டு

பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்

ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம் - 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம். மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.


★சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும்.


★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரிய கலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.


★சந்திர யோகத்தில் அமரும் விதம்.

வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம்.


★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.


★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்

நாழிகை ஆக நமனை அளப்பர்கள்

ஊழி முதலாய் உயர்வார் உலகினில்

தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் - 874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள்.


★குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும். இல்வாழ்வையும், யோகவாழ்வையும் இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர். ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல, ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல் ஐக்கியமாவதே பரியங்க யோகம். இதைக்குறித்து திருமந்திரம் - 825- 844 வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.


★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம் என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும் என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும் சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850 வரை இதைக்குறித்த விளக்கங்களைக் காணலாம்.


Wednesday, 21 February 2024

விருதுநகர் நடுப்பட்டி சத்திரம் ஸ்ரீ கண்ணன் கோயில்

 சாமியோட கண் கட்ட அவிழ்த்தவுடன் எதிரில் இருக்கும் கண்ணாடி உடையும் மர்மம் என்ன



Thursday, 8 February 2024

பொன்மணி தட்டார்

 தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக சிவ கங்கை தீர்த்த குளத்தில் அமைந்துள்ள பொன்மணித்தட்டார் என்வரின் சமாதிக்கு அபிஷகம் நடைபெறுவது தொடர்பான அரிய தகவல் அடங்கிய பதிவு!


தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் இந்த நல்ல நாளில்(5-2-2020)இந்த பதிவினை வெளியிடுவதில் பெருமையடைகின்றேன்.


கி.பி 10-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் கம்மாளர் தெருவில் (தற்போதைய தெற்குவீதியில்) விஸ்வப்ரம்மண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்த பொன்மணித்தட்டார் என்ற வயோதிக சிவயோகி வாழ்ந்து வந்தார்.


அவர் சிறிது மாற்றுக் குறைந்த பொன்னை வாங்கி அதை புடமிட்டு அதில் இரண்டுமணிகளை மட்டும் ஒருதினத்துக்கு தேவையான வருமானத்திற்காக விற்று வாழ்ந்து  வந்துள்ளார்.


புடமிடப்பட்ட இம்மணிகளைப்பெற தினமும் மாலையில் அதிக அளவில்  பெண்கள் இவருடைய வீட்டின் முன்பு கூடுவர்.அவர்களில் இருவருக்கு மட்டுமே மணி கிடைக்கும். 


இதனல் அவரின் இயற்பெயர் மறைந்து பொன்மணிதட்டார் என்ற பெயர் நிலைத்தது. 


இவர் வாழ்ந்த காலத்தில் தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழ மகாராஜாவின் விருப்பப்படி இராஜராஜ பெரும் தச்சன் என்ற சிப்பி கட்டி வந்தார்.


தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தின்மேல் வைக்கும் பிரம்மேந்திர பெரியகல் கிடைக்காது இராஜராஜ பெரும் தச்சன் கலங்கி இருந்த வேளையில் பொன்மணி தட்டார் தன்னை அறிமுகப்படுத்தாத வகையில் தினமும் ஆலய கட்டுமான வேலைகளை கண்டு வந்துள்ளார். 


அவர்  சிற்பி இராஜராஜ பெரும் தச்சனின் மனக்கவலையை அறிந்து இடைச்சியின் வீட்டிற்கு அருகில் கல் இருப்பதை  காட்டி அதை வாங்கி கோபுரத்தில் வைக்கும்படி கூற அதன்படி இடைச்சியின் வீட்டிற்கு அருகில் இருந்த பிரம்மேந்திர பெரியகல்லை எடுத்து கோபுரத்தில் வைத்தார் சிற்பி இராஜராஜ பெரும் தச்சன்.


அதன் பின்னர் பெரிய ஆவுடையாரின் லிங்கத்துக்கு அஷ்டபந்தனம் கூடாது போனதால் கருவூரார் வாய் தாம்பூலம் பட்டு அஷ்டபந்தனம் இறுகி அமைக்கப்பட்டது. 


தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் ‘ உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்’ என்ற அசரீரியாக இறைவன் மன்னனுக்கு உணர்த்தினான்.


மறுநாள் மந்திரியை அழைத்து இறைவனின் அசரீரி பற்றி  விளக்கம் கேட்க உன் மறைவில் என்பது உன்னால் கட்டப்பட்ட கோயில் என்பதாகும்.


இடைச்சியின் நிழல் என்பது இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கோபுரத்தின் மேல் உள்ள பிரமாந்திர ஆகும்.


பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது மட்டும்  புரியவில்லை என்று மந.திரி கூறினார்.


இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை மந்திரி அனுப்பி வைக்க அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரிகளிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியை கூறினர்.


அரண்மனை ஆட்களிடம் பொன்மணித்தட்டார் 'நானோ சாதாரண வயோதிகன், அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை .


மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் இல்லை. 


என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே.


இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை என்று கூறி அனுப்பி விட்டார்.


அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்து அவரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதாக கேட்ட அசரீரி விசயத்தை எடுத்துக் கூறி தனது சந்தேகத்தை போக்குமாறு கேட்டார். 


அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்தின் ஸ்தூபிக்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தால் கோபுரம் தெரியும் வகையில்  அமைக்கச் சொன்னார்.


மேலும் அதனை அமைத்த எட்டாவது நாளில் இறைவனின் காட்சி கிடைக்குமென்றர். 


அவர் கூறியதற்கேற்ப அரசன் சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தால் கோபுரம் தெரியும் வகையில் பொன்மணித்தட்டார் மொழி தவறாது கட்டி முடித்தார்.


பின்பு எட்டாம் நாள் மன்னரின் வேலயாட்கள் பொன்மணித்தட்டார் வீட்டிற்குச்சென்று அவரை அழைத்து வந்தனர்.


திருக்குளத்தினுள் செல்வதற்கு  தெப்பம் உள்ளதென அரசன் பொன்மணித்தட்டாரிடம் கூற அவர் தண்ணீரின் மேல் நடந்தே சென்று பத்மாசனத்தில் கோயிலின்னுள் அமர்ந்து அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சி ஒளியாக மாறி கோபுரத்தில் இரண்டற கலந்தார். 


இதனைக்கண்ட அரசனும் மற்றோர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தை பெற்றதை எண்ணி வியந்தனர். 


அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இன்றளவும் இருக்கின்றது. 


இப்படிப்பட்ட பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னே தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.


சமாதிக்குச் செல்ல அமைப்பட்ட தொங்கு பாலம் தற்போது பழுதடைந்துள்ளது.


தஞ்சை விஸ்வப்ராமண மகாஜன சபையின் மூலமாகவும் பூமாலை சாமிநாத ஆச்சாரியார் குடும்பத்தினராலும் மகா சிவராத்திரியன்று இங்கு குருபூஜை நடத்தப்பட்டுவருகின்றது.


இதன் சிறப்பினை ‘விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்’ என்ற பழைய நூலிலும். ‘பொன்மணித்தட்டார் சரித்திரம்’ என்னும் நூலிலும், ‘படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்’ என்ற நூலிலும் காணலாம்.


பொன்மணித்தட்டார் சமாதி அமைந்துள்ள  சிவகங்கைக் குளக்கோயில் புகைப்படங்கள் கீழே!👇👇