Tuesday, 31 July 2018

தேரையர் சித்தர் வழிபாட்டு முறை

தேரையர் சித்தர் வழிபாட்டு முறை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

தேரையர் சித்தர் ஐயாவின் மூலமந்திரம் .

//"ஓம் லபம் ருணம் நஸீம் ஶ்ரீதேரைய சித்தரே போற்றி,போற்றி. "//

ஐயாவை தியானிக்கும் மந்திரம்.

"மாய மயக்கம் நீக்கி,காய கல்பம் தேடி,மூலிகை கொணர்ந்து ,முதுகுகூன் நிமிர்த்திய, அகத்தியர் சீடனே உன் பாதம் சரணம்"

ஐயாவின்16 போற்றிகள்.

1.குரு மெச்சிய சீடரே போற்றி.
2.தேரையை அகற்றிய தேரையரே போற்றி.
3.சிவனை பூசிப்பவரே போற்றி.
4.சங்கடங்களை போக்குபவரே போற்றி.
5.சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி.
6.சாந்த சொரூபரே போற்றி.
7.நோய் தீர்க்கும் மருந்தே போற்றி.
8.ஞானம் அளிககும் ஞானியே போற்றி.
9.சித்த சுத்தியுடையவரே போற்றி.
10.சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி.
11.குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி.
12.வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி.
13.துக்கத்தை போக்குபவரே போற்றி.
14.கண் ஒளி தந்த கருணையே போற்றி.
15.குறை தீர்க்கும் நிறையே போற்றி.
16..பாண்டியன் கூன்நிமிர்த்திய தேரையரே போற்றி போற்றி.

ஐயாவை முறையாக வழிபட்டால்.   சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்..குடும்ப ஒற்றுமை ஓங்கும். பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும். பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை தீரும். வீண்பழி, அவமரியாதை, ஒவ்வாமை போன்றவை அகலும். வாக்கு பலிதம், ராசியோகம் உண்டாகும். பிரச்சினைகளில்  சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

ஐயா இயற்றிய நூல்கள்.

1.பதார்த்த குண சிந்தாமணி.
2.நீர்க்குறிநூல்.
3.நோய்க்குறி நூல்.
4.தைல வர்க்க சுருக்கம்.
5. வைத்திய மகா வெண்பா.
6.மணி வெண்பா 7.மருத்துவப் பாதம் ,
ஆகிய நூல்களை ஐயா நமக்கு அருளியுள்ளார்கள்.
நன்றி.
ௐ. சிவாய.

குரு சிவகாமி நடராஜன்
ஜோதிட ரத்னா.
V ரவி கண்ணன்.

ௐ முருகேசர் திருமாலை ௐ

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி

அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி

அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி

அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி

அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி

அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி

அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி

அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி

இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி

எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி

இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி

வருவோனே ... வருபவனே

இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்

எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ

எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்

மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக

மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)

மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்

வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே

வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)

அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற

கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே

ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)

என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே

திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த

பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது

மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.


Monday, 30 July 2018

மரத்தினுள் புதைந்திருந்த, ௐ வடிவம்

கேரளத்தின் 1000 வருட பழமையான கோவிலில் உள்ள ஆல மரம் உடைந்து விழுந்து ௐ வடிவம் வெளிப்பட்டது.





Sunday, 29 July 2018

நெய் மீண்டும் வெண்ணெய் ஆகும் அதிசயம், ஒளிப்படம் உள்ளே

பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.








Saturday, 28 July 2018

படவேட்டம்மன்

#ஆடி_மாதம்_11
#படவேடு_ரேணுகாஅம்மன்
திருக்கோயில் 20 அறிய தகவல்

1. ஆலயத்தில் அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

2. அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை, அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.

3. பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும் ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.

4. சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கேற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர்.

5. அம்மன் சன்னதிகளில் குங்குமம் பிரசாதமாக தரப்படும் ஆனால் இங்கு வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது.

6. இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (ரேணுகாதேவியின் கணவர்) வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

7. வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது.

8. பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள்.

9. ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது, ஆதலால் பரசுராம ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.

10. இத்திருக்கோயில் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறம் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியுடன் அமைத்துள்ளது. திருக்குளம் உட்பிரகாரத்தில் வடக்கிழக்கில் அமையப்பெற்றுள்ளது.

11. அருள்மிகு விநாயகர், அருள்மிகு ஆறுமுகர் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர். பரசுராமருக்கு சிலை தனியாக உள்ளது.

12. திருச்சுற்றில் ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருகில் உட்பிரகாரத்தில் அருள்மிகு சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.

13. இராஜ கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு என பெயர் பெற்று நாளடைவில் படவேடு என்று மருவி வந்துள்ளது.

14. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைத்துள்ளது.

15. அம்மை கண்டவர்கள் விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கினால் அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது.

16. தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்து அம்மனை வணங்கி செல்கிறார்கள்.

17. அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்தி கடன்களாகும்.

18. ஆடி மாதம் முழுவதும் இங்கு மிகவும் விஷேசமாக இருக்கும். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

19. காஞ்சிபுரம், வேலூர், போளூர், ஆற்காடு, ஆரணி முதலிய இடங்களிலிருந்து படவேட்டிற்கு பேருந்து வசதி உள்ளது.

20. திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது.

🌹🌹🌹🌹🌹 ஓம் சக்தி 🌹🌹🌹🌹🌹


Friday, 27 July 2018

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்

அவை:

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்குப் பொய்கை நல்லூர். இங்குதான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெய்யன்பர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

ஆமே கேளிது நிலையற்ற வாணிபுக்கி
ஆனபதி பொய்கைப் பூங்கா சொன்னேன்
தேகமே பரிவிருத்தி ஆயிரத்துத்
திகழ் நூற்றிருபது ஆறதாண்டில்
பாமேவு சித்தர்களும் வெளியாய் வந்து
பட்சமுடன் மனுக்களையும் ஆள்வார் மண்ணில்
பூமேவு பொக்கிஷங்கள் பூரணிக்கும்
பூரணியாள் பதமாய்ச் சொன்னேன் சித்தே
பொய்கைநல்லூர் என்னும் ஊரைச் சொன்னேன். பரிவிருத்தி ஆயிரத்து நூற்று இருபதாம் ஆண்டில் ஆற்றல் சித்தர்கள் வெளியே வந்து ஆன்மிக ஆட்சியை ஆள்வார்கள். அப்போது சித்தர்களின் பல அற்புத கருத்துப் பொக்கிஷங்கள் முழுமையடையும் என்பதை பூரணியின் அருளுடன் சொல்கிறேன்.

'கடல் நாகை' என தேவாரம் கூறும் நாகப்பட்டினமும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களும் பல வரலாறு மற்றும் புராணச் சிறப்புகளைக் கொண்டது. நீலாயதாட்சி சமேத காயாரோகணர் கோயில் இங்கு அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இங்கு பௌத்தமதம் தழைத்தோங்கி இருந்தது.

நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்குப் பொய்கை நல்லூர். இங்குதான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெய்யன்பர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

நாகையிலிருந்து வடக்குப் பொய்கை நல்லூர் வழியே நாம் பயணித்த போது, வழியெங்கும் மீன் வலைகளும் படகுக் கட்டுமானங்களுமாக நெய்தல் நிலக் காட்சிகளே நிறைந்திருந்தன. மீன் வணிகத்தில் சிறந்து விளங்கும் அக்கரைப்பேட்டை கிராமத்தின் மேம்பாலத்தைக் கடந்து போகும்போது வடக்குப் பொய்கை நல்லூரின் வரலாற்று - புராணச் சிறப்புகள் நம் நினைவில் எழுந்தன...

நெய்தல் வளமும் மருத வளமும் இணைந்து சிறந்த சிற்றூர் வடக்குப் பொய்கை நல்லூர். இவ்வூரில் பால்மொழி அம்மை சமேத நல்லூர் நாதர் என்னும் பழைமையான சிவாலயம் உள்ளது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று திருநாவுக்கரசர் தமது க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் இவ்வூரை 'பொய்கை நல்லூர்' எனக் குறிப்பிடுகிறார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய புகழ்பெற்ற, 'திருநாகைக் காரோண புராணம்' என்னும் தலபுராண நூல் வடக்குப் பொய்கை நல்லூரின் பழைய பெயர் 'சித்தாச்சிரமம்' எனக் குறிக்கிறது

தேவர்களால் போற்றப்பெற்ற 'சித்தாச்சிரமம்' ஒன்று இவ்வூரில் இருந்ததையும், அதில் பல சித்த புருஷர்கள் தவவாழ்வு வாழ்ந்ததையும் இந்நூலின் வழியே அறிய முடிகிறது. கோரக்கரின் ஜீவசமாதிக்குச் செல்லு முன்பு அவரின் வாழ்க்கைச் சுருக்கத்தைப் பார்ப்போம்...
கொல்லிமலையில் நெடுந்தவம் இருந்த சித்தர் மச்சேந்திரர் ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிய மலை செல்லும் விருப்பத்துடன் தென்திசைநோக்கிப் பயணித்தார். மக்களைச் சந்திக்கவும் அவர்களின் வாழ்க்கைத் துயர் போக்கவும் எண்ணம் கொண்ட மச்சேந்திரர், விண்வழிச் செல்லும் சித்து தவிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டார்.

வழி நடையில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்து ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார். அந்த இல்லத் தலைவன் சிவராம தீட்சிதர் அப்போது வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருப்பவர் எவர் என அறிய முடியவில்லை எனினும், அவர் ஒரு சிவனடியார் என்பது  தெரிந்து, நீர் மட்டுமே கேட்ட அவரை வீட்டுக்குள் அழைத்து அன்பொழுக இலை போட்டு பசியும் தாகமும் தீர்த்து பணிந்து வணங்கினார்

உபசரிப்பில் மனம் குளிர்ந்தவராக, அம்மையாரை வாழ்த்திய மச்சமுனி சித்தர், அம்மையாரின் முகத்தில் இழையோடிய சோகத்தைக் குறிப்பால் உ ணர்ந்தார். ''உன் வாழ்வில் ஏதோ ஒரு பெரும் குறை. அது என்ன தாயே?" என்று வினவினார். தயங்கியபடி அவரும் தன் வாழ்வில் எல்லா வளநலமும் இருந்தும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

தன் இடையில் இருந்த திருநீற்றை எடுத்த மச்சேந்திரர், அதை ஒரு பச்சிலையில் வைத்து வழங்கி "அம்மையே! உன் கணவனுடன் நீராடி சிவத்தியானம் செய்து இந்தக் கவசத் திருநீற்றினை இருவரும் அணிந்து வணங்குங்கள் எஞ்சியதை தூய நீரில் இட்டுப் பருகுங்கள். உங்கள் நெடுநாள் குறை விரைவில் நீங்கும். பரமஞானி ஒருவன் உங்களுக்கு மகவாக வந்துதிப்பான்!" என ஆசீர்வதித்து விட்டு பொதிகை மலை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பிறகு சிவராம தீட்சிதரின் துணைவியார் நீராடச் சென்றார். நீராடுவதற்கு உடன் வந்த பெண்களிடம், சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூறினார். அதைக் கேட்ட அந்தப் பெண்கள், ''கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே. அவன் பெண்களை வசியம் செய்யும் மந்திரக் கயவனாக இருக்கலாம்!" என எச்சரிக்கின்றனர். பயந்துபோன அம்மையார் அடுப்பு நெருப்பில் மச்சேந்திரர் கொடுத்த திருநீற்றைப் போட்டு விட்டார். பத்து ஆண்டுகள் உருண்டோடின

பொதியமலை சென்று யோகம் புரிந்து பல சித்திகள் பெற்ற மச்சேந்திரர் மீண்டும் சம்பல்பட்டி வழியாகவே கொல்லிமலை நோக்கிப் பயணம் செய்கிறார். அப்போது சிவராம தீட்சிதரின் வீட்டில் உணவு உண்டது நினைவுக்கு வருகிறது. அவரின் இல்லம் செல்கிறார். வாயிலில் நின்றிருந்த தீட்சிதரின் மனைவிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. மச்சேந்திரர் ''அம்மா! என் அருளால் உனக்கு வாய்த்த உன் மகன் நலமாக இருக்கிறானா?" எனக் கேட்கிறார். பயந்து கூனிக்குறுகி, அவர் கொடுத்த திருநீற்றை அச்சம் காரனமாக அடுப்பு நெருப்பில் எரித்ததைக் கூறி மன்னிப்பு வேண்டுகிறார்.

அவரின் அறியாமை கலந்த அச்சத்தை உணர்ந்த மச்சேந்திரர் தன் சினம் மறைத்து, அடுப்புச் சாம்பலைக் கொட்டும் இடத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளை இடுகிறார். அம்மையார் கொல்லைப் பக்கம் உள்ள குப்பை மேட்டுக்கு மச்சேந்திரரை அழைத்துச் செல்கிறாள். அதற்குள் அங்கு தெரு ஜனங்கள் கூடி விடுகின்றனர். மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கிக் கண்மூடி தியானித்த பின் ''கோரக்கா! வெளியில் வா!" என்கிறார். ''இதோ வருகிறேன் குருநாதரே!" என்ற குரலுடன் பத்து வயது தோற்றத்தில் பாலகன் ஒருவன் முகப்பொலிவுடன் விபூதி மணக்க வெளியே வருகிறான். அம்மையார் ஆனந்தக் கண்ணீர் உகுக்கிறார். கூடியிருந்தோர் வியந்து மச்சேந்திரனின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

"உன் தாயை வணங்கு கோரக்கா! சிவனருளால் என்னிடம் சித்துகள் பயின்று உன் பெற்றோர் வியக்கும் சித்தனாக நீ நீண்டகாலம் சிவத்தொண்டு புரிவாய்!" என ஆசீர்வதிக்கிறார். குருவை வணங்கியபின் தாயை வணங்கி எழுகிறான் சிறுவன் கோரக்கர்

வடக்குப் பொய்கை நல்லூரை நாம் அடைகிறோம். சாலையின் வலதுபுறம் அமைந்துள்ள நந்திராதேஸ்வரர் ஆலயத்தைக் கடந்ததும் சாலையின் வலப்பக்கம் பிரம்மாண்டமான முகப்புத்தோற்றத்துடன் எழுந்துள்ளது கோரக்க சித்தரின் ஜீவசமாதிபீடம் அமைந்துள்ள கோரக்க சித்தர் ஆஸ்ரமம். வாயில் மண்டபத்தில் காவி உடை தரிசித்த சிவனடியார்கள் நிறைந்துள்ளனர். பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும், கார்களிலும் பக்தர்கள் கூட்டம் குவிந்தபடி இருக்கிறது. இது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை யாத்திரீகர்கள் பேருந்துகளில் கோரக்கரை தரிசிக்க வந்த வண்ணம் இருக்கின்றனர்

ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியா அமைதி நமக்குள் ஊடுருவுவதை உணர முடிகிறது. ஒன்பது கோடிச் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்னும் புராணக்குறிப்பு அப்போது சிலிர்ப்புடன் நமக்கு நினைவு வருகிறது!

வடக்குப் பொய்கை நல்லூரின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது கோரக்கரின் ஜீவ சமாதி பீடம். கிழக்கு நோக்கிய பீடத்தின் முன், அழகிய பெரிய அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை ஸ்தூபி மின்னும் பொற்கூரைபோல் விளங்குகிறது. எப்போதும் நறுமணம் கமழும் புதிய பூக்களால் சூழப்பட்டிருக்கும் சித்தர் கோரக்கரின் ஜீவசமாதி பீட லிங்கத்தின் முன் கண்மூடி சில நிமிடங்கள் தியானிக்கும் போதே உடலும் மனமும் மிக லேசாவதை உணர முடியும். இதுவே ஜீவ சமாதி பீடங்களின் அதிர்வலை தரும் ஆனந்தம்!

ஆசிரமத்தின் கருவறைப் பகுதியில் நீள் சதுர வடிவில் செங்கற்களால் கட்டப்பட்ட சமாதிமேடை அமைந்துள்ளது. இந்த மேடைக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறையில்தான் போகர், கோரக்கரை சமாதியிட்டார். சமாதி மேடையின் மேல் முன்பகுதியில் கருங்கற்களால் செய்யப்பட்ட பாதரட்சையுடன் கூடிய இரண்டு திருவடிக்கமலங்கள் உள்ளன. அடுத்து பின்பகுதியில் அரை அடி தூரத்தில் இரண்டு சிறிய திருவடிக் கமலங்கள் அமைக்கப்பட்டுள்ளன

இந்தத் திருவடிகள் லிங்கத் திருமேனிகளாகக் கருதப்பட்டு, கோமுகியுடன் கூடிய ஆவுடையார் அமைப்பின் மேல் இடம்பெற்றுள்ளன. பெரிய திருவடிகளின் கீழாக இருபத்து நான்கு உருத்திராட்ச மணிமாலை ஒன்றின் இடையில் ஆறு இதழ் கொண்ட சுதை மலர் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரிய திருவடிகள் சிவபெருமானின் பாதங்களாகவும் சிறிய திருவடிகள் உமையவளின் பாதங்களாகவும் கருதப்பட்டு, இவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

தியானம் முடித்து பீடத்தை வலம் வரும்போது பிரகாரத்தில் உள்ள நாகலிங்க மரமும் நமக்கு ஆசிகளை வழங்கும் விதமாக இலைகளை உதிர்த்தபடியே இருக்கிறது.! கோரக்கர் எவ்வாறு வடக்குப் பொய்கை நல்லூர் வந்து, சித்தர் போகரால் சமாதி வைக்கப்பட்டார் என்பதை நாம் இத்தொடரின் மூன்றாவது அத்யாயத்தில், போகரின் பாடல்கள் மூலம் விளக்கியிருப்போம். அதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

ஆசிரம ஜீவசமாதியை விட்டு வெளியே வந்தால் திருச்சுற்றில் நந்தவனமும் கிடைத்தற்கரிய சிற்றகத்தி முதலிய மூலிகை வகைகளும் உள்ளன. மக்கள் தங்கி இளைப்பாற இருபுறங்களிலும் அழகிய தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன






Wednesday, 25 July 2018

வியாழ மாலை

உபாசனா குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய (குருபலத்தை தரும்) வியாழ மாலை

தினமும் காலை 6 மணிக்குள்ளாகவும்,வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் பாடுவதன் மூலமாக அவரவர் ஜாதகத்தில் குரு பலம் அதிகரிக்கும்;கல்வியில் மகத்தான தேர்ச்சி பெற விரும்புவோர் தினமும் இதைப் பாடி வரவேண்டும்;3 ஆண்டுகள் தினமும் இதைப் பாடி வருபவர்களுக்கு தகுந்த குரு கிடைப்பார்;

ஜோதிடர் எனில் அவரது சுபாவத்திற்கு ஏற்ற ஜோதிட குருவும்,
சித்த வைத்தியர் எனில் அவரைப் புரிந்து கொள்ளும் சித்த வைத்திய குருவும்;
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு நேர்மையான குருவும் கிடைப்பார்கள்;

ரிஷப லக்னம்,துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் 3 ஆண்டுகள் தினமும் பாடினால், குருக்கிரகத்தால் வர இருக்கும் தீமைகள் 99% குறைந்துவிடும்;

சித்தர்களின் ஜீவசமாதி ஒன்றில் 3 ஆண்டுகள் பாடி வர மூன்றாம் ஆண்டின் முடிவில் அந்த சித்தரே குருவாக இருந்து வழிகாட்டுவார்;

திருச்செந்தூரில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று போய் இதை 6 முறை வீதம் 12 முறை(ஒரு வருடம்) ஜபித்தால்,குருவாக திருச்செந்தூரனே வருவார்;

கழுகுமலை,திருப்பரங்குன்றம்,பழனிமலை,திருத்தணி,பழமுதிர் சோலைகளில் சஷ்டி திதி நாட்களில் 12 முறை(வளர்பிறை சஷ்டி) ஜபிக்க குமரக்கடவுளின் உபதேசம் கிட்டிடும்;

காசி மாநகரத்தில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,தகுந்த சிவனடியார் குருவாக அமைவார்;

அண்ணாமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,சிவ கணமே குருவாக அமைந்து சிவ வழிபாட்டில் அடுத்த நிலைக்கு வழிகாட்டும்;

இமயமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,காகபுஜண்டரின் தரிசனம் கிட்டும்;அவரது யுக உபதேசம் கிட்டும்;

சிவபெருமானின் வடிவமான லிங்கத்தின் முன்பாக தினமும் ஒரு முறை வீதம் 12 ஆண்டுகள் ஜபித்தால் சிவ தரிசனமும்,சிவபெருமானே குருவாகவும் அமைவார்;

ஓம் கிலி அங் உங்
ஓம் அருணாச்சலாய நம
திருவான செல்வம் திரளான மக்கள்
   தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
   மகிழ்துளப மான குருவே
உருவான கல்வி உயர்ஞான வேள்வி
   உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
   கதியானாய் தேவர் குருவே!

அறியாமை பேசி அலையாதே என்று
    அறிஞானம் தந்த குருவே
செறியாமை யென்னும் செகமாயம் நீக்கி
    செழிப்பாக்கி வைத்த குருவே
முறியாமை யாலே முளைத்திட்ட பந்தம்
   முடிவாக்கி விட்ட குருவே
குறியாமை யான குணக்கேடு நீக்கி
    குளிரானாய் தேவர் குருவே!

மனவீடு மெழுகி மணத்தோடு வைத்தேன்
    மலர்ந்தனை மன்னர் குருவே
தனவீடு என்று தனிகரும் போற்ற
   தயவாகிச் செய்த குருவே
சினவீடு ஆன சிறுமனம் செயிக்க
   செப மாலை தந்த குருவே
வனவீடு மோன வளர்வீடு வாழும்
   வணிகனே வள்ளல் குருவே!

அண்ணலே என்றுனை அவிட்டமாம் நாளில்
   அழைத்திட அருளும் குருவே
மண்ணிலே தங்கமும் மயக்கிடும் வயிரமும்
   மகிழ்வோடு சேர்த்த குருவே
கண்ணிலே துயரமாம் கடு ஆறு வற்றிடக்
   கணமதில் கனிந்த குருவே
விண்ணுறைத் தேவரும் விருப்புடன் வாழ்த்திட
   விளங்கினாய் தேவ குருவே!

இருபத்தி ஏழெனும் எண்தரு யந்திரம்
  இயக்கிட இருந்த குருவே
திருபற்றி நின்றிடத் திங்களார் முழுமையில்
  திருபூசை சொன்ன குருவே
குருபத்தி கொள்ளாரின் குலம் விட்டு ஒடிடும்
  குருவான குருவின் குருவே
உருபத்தி ஞான உயர்பத்தி மோன
  உத்தமா தேவர் குருவே!

குரு போற்றி குரு போற்றி குலத்துறை குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவான தென் திசைக்
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குமரநல் குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குரு போற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவே எம் பிரகஸ்பதி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே!!!

Tuesday, 24 July 2018

அதிசயத்திலும் அதிசயம்.. இதை பார்க்கவும்... மகாராஷ்டிர மாநிலத்தின் புணே மாவட்டத்தில், ஆம்பேகாவு தாலுக்காவில் சாண்டோலி கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த சிவலிங்கத்திலிருந்து தாராளமாக தண்ணீர் வருகிறது. நேரடி வீடியோ. ஹர ஹர மஹாதேவா!! சம்போ சங்கரா!!


Sunday, 22 July 2018

முருகனருள் முன் நிற்க






Saturday, 21 July 2018

பூரி ஜகநாதர் கோயில் அதிசயம் - உயரத்தில் கொடி மாற்றம்

பூரி ஜகநாதர் கோயில் அதிசயம்

பூரி ஜகநாதர் கோயிலின் உயரத்தை பார்த்து பிரமித்திருக்கிறோம்.அதில் மற்றுமொரு பிரமிப்பு 10 வயது பையன் தினமும் மாலை 5 மணிக்கு அந்த கோபுரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் ஏறி உச்சியில் பழைய கொடியை அவிழ்ந்துவிட்டு புதிதாக கொடி கட்டிவிட்டு இறங்குகிறான்.இதை.ஒரே குடும்பம் பரம்பரையாக செய்துவருகிறது.பார்க்காதவர்கள் அடுத்தமுறை போகும்போது கண்டிப்பாக பார்க்கவும்.






பொது நாடி வாக்கு - நிகழ இருக்கும் 27/07/2018 சந்திர கிரகணம் பற்றி

உலோபமுத்ரா தேவி சமேத அகத்திய சித்தர் துணை

முன்னுரை

கோவை மேட்டுப்பாளையத்திற்கும்  - அன்னூருக்கும் இடையில் அமைந்துள்ள பொகளூர் கிராமத்தில் திரு இறைசித்தர் அவர்களால் ஸ்தாபிக்கபிட்ட ஓம் ஸ்ரீ அகத்திய சித்தர் பீடம் அமைந்து உள்ளது. அங்கே, இறை அருளால் அகத்தியரின் சீவ நாடி ஓலை சுவடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கே நிதமும் அகத்தியர் சீவ நாடியில் தோன்றி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு பல வகையான பரிகார முறைகளை கூறி வாழ்வில் எல்லா வளமும் ஏற்பட வழி காட்டியபடி உள்ளார். அங்கே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பொது வாக்கு பலன்களை அகத்தியர் உரைத்தபடியே உள்ளார்.

அவ்வாறு அகத்தியர் உரைத்த பொது வாக்கு கிழே கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று உலகில் பல மானிடர்கள் கடவுளை பற்றி பலவாறாக பொது இடங்களில் கூட்டம் போட்டு, சத் சங்கம் நடத்தி, சொற்ப்பொழிவு ஆற்றி, பல கருத்துகளை முன் வைக்கின்றனர். மேலும் பலர், பல புத்தகங்களை அச்சிட்டு, பணம் வாங்கி கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆனால் கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை என்பதற்கு ஏற்ப, மானிடர்கள் கூறும் பலவும் பிறவி குருடன் யானையை வர்ணித்தது போல ஆகும்.

கிழே உள்ள அருள் வாக்கு நேரிடையாக இறை உலகத்தில் மகா சக்தியின் கட்டளைக்கேற்ப பணியாற்றிக்கொண்டு இருக்கும் மகா முனி, சித்தர்கள் தலைவர் அகத்திய மாமுனிவர் நேரிடையாக சீவ நாடி மூலம் மக்களுக்கு உரைத்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த முன்னுரையை கொடுத்து உள்ளேன்.

அகத்தியர் வாக்கு :

விளம்பி வருடம் ஆடி மாதம் வரும் பவுர்ணமி அன்று முழு சந்திர கிரகணம் 27/07/2018 அன்று நிகழ உள்ளது. அது குறித்து குருமுனி அகத்தியர் அவர்கள் கீழ் கண்டவாறு பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி சுவடி மூலம் அருளுரைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆங்கில மாதம் ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சரியாக 10:58 மணிக்கு நடக்கும்.

அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டுள்ளது.

குளியல் :

கர்ப்பஸ்த்ரீகளும், மற்றும் அனைத்து நட்சத்திரக்காரர்களும், பௌர்ணமி அன்று இரவிலேயே, வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, ஒரு கொள்கலனில் (bucket பக்கெட் போல) நீர் நிறைத்து, அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை இட்டு, பின்னர் ஒரு முழு எழுமிச்சம் பழத்தை இட்டு, பின்னர் அதிலேயே இரு தர்ப்பை புல் இட்டு வைத்திருக்க வேண்டும். பின்னர் சனிக்கிழமை காலை எழுந்தவுடன் அந்த நீரில் உள்ள எழுமிச்சை பழத்தை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி ஓடும் நீரில் அல்லது அருகில் உள்ள தோட்டத்தில் போட்டு விடவும். குப்பையில் போட்டு விட வேண்டாம். பின்னர் அந்த நீரில் உச்சி முதல் பாதம் வரை முழுவதும் நனையுமாறு குளிக்கவும். குறிப்பு - சுடு நீர் எதுவும் சேர்க்க கூடாது, குளிர்ந்த நீரிலேயே குளிக்க வேண்டும். பின்பு அந்த நீர் குளியல் முடிந்த உடனே, சாதாரண குளியலை முடிக்க வேண்டும். குளியல் முடிக்கும் வரை எந்த உணவோ அல்லது நீரோ அருந்த வேண்டாம்.

வழிபாடு :

குளித்து முடித்து அருகில் கஜமுகன் ஆலயம் சென்று அவருக்கு அருகம்புல் சாற்றி கும்பிட்டு வரவும்.

விரதம் :

வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு மேல் எந்த உணவும் அருந்த கூடாது. சரியாக எட்டு மணியிலிருந்து கிரகணத்தின் தாக்கம் ஆரம்பிக்கும்.

விதிகள் :

• இந்த சந்திர கிரகணத்தை யாரும் வெறும் கண்களால் காணக்கூடாது
• இரவில் புலால் உண்ணக்கூடாது
• இரவில் உடல் உறவு வைத்து கொள்ளல் ஆகாது.
• எட்டு மணிக்கு மேல் அமைதியாக உட்கார்ந்துமந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். அதில், நமசிவாய என்ற ப்ரணய மந்திரம், அல்லது லலிதாம்பிகையின் சமஸ்காரமோ, அல்லது கஜமுகனின் ஸ்துதியோ உச்சாடனம் செய்ய வேண்டும்.

ஜீவ ராசிகளுக்கு உணவிடுதல் :

• கிரகணம் முடிந்த மறு நாள் காலையில் பட்சிகளுக்கு, கம்பு தானியத்தையும் ஊற வைத்த அரிசியையும் உணவாக வைக்க வேண்டும்.
• எறும்புகளுக்கு உடைத்த பச்சை அரிசி, வெண் சர்க்கரை, திணை கலந்து உணவாக அளிக்க வேண்டும்.
• கிரகணம் முடிந்த மறு நாள் சனிக்கிழமை மாலை வேலையில், பைரவருக்கு ஏதாவது ஒரு உணவை அளிக்க வேண்டும்.

இதுவே முழுமையான சாந்தி பரிகாரமாகும். அகத்தியர் கூறி உள்ள பரிகாரங்களை கடைபிடிப்பவர்களுக்கு கிரகணத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விலக்கு கிடைக்கும்.

சாந்தி பரிகராம் செய்யாவிட்டால் நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

சரியான பரிகாரம் செய்யும் பக்தர்களை யாமே துணை நின்று காப்போம் என்று அகத்தியர் அருளுரைத்துள்ளார்.

குறிப்பு - மாத விலக்கு ஆக நேர்ந்தால் சாந்தி முறைப்படி குளிக்கலாம், கோவிலுக்கு செல்ல வேண்டாம். மற்ற பரிகாரங்களை செய்யலாம். அவர்கள் சார்பாக அவர்களின் குடும்பத்தினர் ஆலயம் சென்று அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து வரலாமே.

நல்லது ; நற்பவி
குருவே துணை ; குருவே போற்றி
திருச்சிற்றம்பலம்

இறைசித்தன் செந்தில், 93843 95583
ஓம் ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி, சித்தர்கள் பீடம்
பொகளூர்

நாடி வழி செய்தி அறிவிக்கும் தேதி 21 ஜூலை 2018

தட்டச்சு செய்தவர் - தி. இரா. சந்தானம், கோவை ph: 91760 12104






Friday, 20 July 2018

கௌசிக பால சுப்ரமணியர் கோவில்


கௌசிக பால சுப்ரமணியர் கோவில்


Monday, 16 July 2018

கதாகாலக்ஷேபம் - ஸ்ரீ_கண்ணன்_நாமம்_சொல்லும்_கதைகள்_14 ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

#ஸ்ரீ_கண்ணன்_நாமம்_சொல்லும்_கதைகள்_14
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

'நீங்களே கதி என்று ஒருவரிடம் சொல்வதும், அவருக்கு அடியவராக இருப்பதும் தவறு. அதேபோல், 'நானே பெரியவன்’ என்று சொல்வது அகங்காரம்; ஆகவே, அதுவும் தவறு'' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அல்லவா? ஆனால், இறைவனுக்கு இதெல்லாம் பொருந்தாது.

தன்னை 'அடியேன்’ என்று சொல்லிக்கொண்டே அனைவரிடமும் பழகி, எல்லோரையும் மதித்து வாழ்ந்தவர் யார் தெரியுமா? ஸ்ரீராமச்சந்திர பிரபுதான் அவர்.

தன்னை அவதாரமாக அவர் ஒருபோதும் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும், எங்கும் தன்னை 'அடியேன்’ என்றுதான் சொல்லிக் கொண்டார். விஸ்வாமித்திரரிடம் 'அடியேன்’ என்றுதான் பணிந்தார். பரத்வாஜ முனிவரைப் பார்த்ததும், 'அடியேன்’ என்று சொல்லித்தான் நமஸ்கரித்தார். வசிஷ்டரைச் சந்தித்ததும், 'அடியேன்’ எனப் பரவசப்பட்டு வணங்கினார்.

அவ்வளவு ஏன்..? சமுத்திரராஜனிடம்கூட அப்படி 'அடியேன்’ என்று சொல்லித்தானே வழிவிடும்படி மூன்று நாட்கள் வேண்டினார். ஆனாலும் சமுத்திரராஜன், கடலைக் கடப்பதற்கு வழிவிடவில்லை. பிறகுதான் ஸ்ரீராமன், 'என்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்து வாருங்கள். இந்தக் கடலை அப்படியே வற்றச் செய்கிறேன். அப்படி வற்றினால்தான், வானரங்கள் கடலைக் கடக்க, வழி கிடைக்கும்’என்றாரே, பார்க்கலாம்!
ஆக... எவருக்கு, எப்போது, எதனால் அடிமையாக, தாசனாக, அடியவனாக இருக்கவேண்டுமோ, அப்போதெல்லாம் அப்படி இருப்பதே சிறப்பு என்பதை வாழ்ந்து காட்டிய அவதார புருஷன் ஸ்ரீராமபிரான்.

சரி... 'நானே பெரியவன்’ என்று பறைசாற்றிய பகவான் யார் தெரியுமா? அவர்... ஸ்ரீகிருஷ்ணரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?

கீதையில், பல இடங்களில், 'நானே பெரியவன்’ என்று அர்ஜுனனுக்கு அருளியுள்ளார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. எதற்கெடுத்தாலும், எங்கே தீங்கு நேர்ந்தாலும், 'சங்கை ஊதிவிடுவேன்; சக்கரத்தை ஏவி விடுவேன்’ என்பது போல், தயாராக, துடிப்புடனும் விழிப்புடனும் அஞ்சாநெஞ்சனாக, 'நானே பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னவர், ஸ்ரீகிருஷ்ணன்.

அதனால்தான் அவருக்கு 'சர்வாசு நிலையஹ’ எனும் திருநாமம் உண்டானது. 'இந்த உலக உயிர்கள் அனைத்துக்கும் இருப்பிடமாகத் திகழ்பவன்’ என்று இதற்குப் பொருள். உலகத்து மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக, அடைக்கலம் தருபவனாக இருப்பவன்தானே, மிகப் பெரியவன்! அப்படியெனில், பகவான் சொன்னதில் தவறென்ன இருக்கிறது?

இப்படித்தான்... கீதையின் 16-வது அத்தியாயத்தில், அசுரர்களையும் தேவர்களையும் பிரித்துப் பகுத்து எடுத்துரைக்கிறார் அர்ஜுனனிடம்! இதையெல்லாம் கேட்ட அர்ஜுனனுக்கு சின்னதாக ஒரு பயம், பதற்றம், குழப்பம்! 'அசுரர்களையும் தேவர்களையும் பற்றிச் சொல்கிறானே கண்ணன்... நம்மை இவன் அசுரனாக நினைக்கிறானா, அல்லது தேவர்களில் ஒருவனாக மதிக்கிறானா? என்று தவித்தான்; மருகினான்.

கண்ணனிடம் மெள்ள, 'அசுரர்கள் என்பவர் யார்? தேவர்கள் என்பவர் யார்? ஒற்றை வரியில் தெளிவாகச் சொல்லேன், கண்ணா! என்று கேட்டான்.

உடனே கண்ணபிரான், 'சாஸ்திரங்களையும் அதன் விதிமுறைகளையும் யாரெல்லாம் அத்துமீறுகிறார்களோ அவர்கள் அசுரர்கள். அந்த சாஸ்திரத்தையும் அதன் விதிமுறைகளையும் போற்றி, அதன்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் தேவர்கள்! என்றார்.

உடனே அர்ஜுனன், 'சரி கண்ணா, நான் யார்? என்று கேட்டான். 'இதிலென்ன சந்தேகம்? உன்னிடம் எத்தனை முறை 'நான் பெரியவன்... நான் பெரியவன்... என்று என்னைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், என் நல்லுரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த நீ, தேவர்களில் ஒருவன் தான்! என்று சொல்லிப் பூரித்தார் கண்ணபிரான். இதில் வியந்தும் நெகிழ்ந்தும் போனான் அர்ஜுனன்.

ஒருநாள் மாலையில், தன் கூந்தலைத் தோகைபோல் விரித்து, நெய் தடவிக்கொண்டிருந்தாளாம் திரௌபதி. அவளின் அந்தத் தலைவிரிகோலத்தைக் காணச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணன், 'ம்... சீக்கிரம், சீக்கிரம்’ என்று விரட்டி, அவளை உடனே தலைவாரிக் கொள்ளச் செய்தானாம். நல்லதொரு பொழுதில், அவள் சிறிது நேரத்துக்குத் தன் கூந்தலை முடிந்துகொள்ளாமல் இருந்ததையே காணப் பிடிக்காத கருணையாளனான கண்ணபிரான், 'துரியோதன - துச்சாதன ரத்தத்தைத் தடவிக் கொள்ளும் வரை, என் கூந்தலை முடிய மாட்டேன்’ என்று அவள் சபதமிட்டபோது, பேசாமல் இருப்பானா, என்ன? அதைத் தாங்கமுடியாதவனாக, வெகுண்டு எழுந்து அவன் நிகழ்த்தியதே மகாபாரத யுத்தம்!

'அடியேன்’ என்று ஸ்ரீராமனாகவும், 'நான் பெரியவன்’என்று ஸ்ரீகிருஷ்ணனாகவும் அவதரித்து, உலகுக்கு எப்படியெல்லாம் உணர்த்தியிருக்கிறார் பாருங்கள், பகவான்! 'அடியேன்’ எனப் பணிந்தது ஸ்ரீராமரின் காலம். 'சக்கரத்தை எடுப்பேன்’ என வியூகத்துக்குத் தயாராக இருந்தது ஸ்ரீகிருஷ்ணனின் காலம். துவாபர யுகத்தின் மாறுபாடு அது!

சரி... 'நான் பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னாலும், கண்ணன் அப்படியே இறுமாப்பும் கர்வமுமாகவே இருந்துவிட்டானா என்ன?

தன் அத்தனை பெருமைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு, தன் அத்தனை சக்திகளையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, அர்ஜுனனுக்கு சாரதியாக, அவனுடைய கால்கள் தன் தோளில் படும்படி தேரோட்டினானே, அவனை விடவா 'அடியேன்’ என்று சொல்வதற்கு ஒருவர் வேண்டும்?! எதற்கும் கலங்காத அந்த மாயக் கண்ணனும் ஒரே ஒரு விஷயத்துக்காகத் தவித்து மருகினானாம். எப்போது தெரியுமா?

'சபையில் மானபங்கப்படுத்திய வேளையில், திரௌபதிக்குத் துணையாக அருகில் இல்லாது போய் விட்டேனே...' என அர்ஜுனனிடம் வருந்தினானாம்.

அதனால் என்ன... திரௌபதி கண்ணீரும் கதறலுமாக 'கோவிந்தா’எனக் குரல் கொடுத்ததும், உலகின் எந்த மூலையில் இருந்தெல்லாமோ சட்டென்று சரம்சரமாக, புடவை புடவையாக அங்கே கொண்டுவந்து, அவளின் மானத்தைக் காத்தருளிவிட்டானே கண்ணன்? அப்படியிருக்க... அவன் எதற்காகக் கவலைப்படவேண்டும்? அதுதான் ஸ்ரீகிருஷ்ணனின் மகோன்னதம். அருளை அள்ளிக் கொடுப்பதில் அகமகிழ்பவன் அவன். ஒரு துளசி, ஒரு பூ, ஒரு பழம்... ஸ்ரீகண்ணனைத் திருப்திப்படுத்த, அவனது பேரருளைப் பெற, இவை மட்டுமே போதும். நமக்கு அருள்மழை பொழிந்துவிடுவான், அந்த அழகுக் கண்ணன். ஆனால், ஒரேயொரு விஷயத்தில் மட்டும் அவனுக்குத் திருப்தியே வராதாம்! அது என்ன விஷயம்?

அதாவது, நாம் என்ன கொடுத்தாலும், அதில் நிறைவு பெற்றுவிடுகிற ஸ்ரீகிருஷ்ணன், நமக்குத் தருகிறபோது மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவடையவே மாட்டான். உள்ளன்புடன் அவனைச் சரணடைந்து விட்டால், அவர்களுக்கு 'இன்னும் கொடுப்போம், இன்னும் கொடுப்போம்’என்று கொடுத்துக்கொண்டே இருக்கிற தயாளன் அவன்!

இதனால்தான், அவனை 'அனலஹா’ எனும் திருநாமத்தைச் சொல்லிப் போற்றச் சொல்கின்றனர், பெரியோர்.

அனல் என்றால் அக்னி. அக்னிக்கு நிகரானவன் ஸ்ரீகண்ண பரமாத்மா! அதாவது, எரிகின்ற நெருப்பில் எதைப் போட்டாலும், 'ஹா’ என வாய்பிளந்து, அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்; எண்ணெய், வஸ்திரம், நெய் என எதைச் சேர்த்தாலும் இன்னும் இன்னும் கனன்று எரியும். 'பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பக்தர்களுக்கு அருள்கிற விஷயத்தில், போதும் என்கிற மனம் இல்லாத அக்னியைப் போல் இருக்கிறார்’ என்பதாலேயே இந்தத் திருநாமம்!

கண்ணனுக்கு தாசனாக இருந்தால், நமக்குத் தேவையானவற்றைத் தந்தருளி மகிழ்கிற, அந்த மகிழ்ச்சியில் திருப்திப்படுகிற மாணிக்கம் அவன்!

அவனுக்கு அடிமையாக இருங்கள்; ஆனந்தத்தில் உங்களை மூழ்கடிப்பான், அந்த மாயக்கண்ணன்!

ஸ்ரீ மதே வாசுதேவாய....

கண்ணன்  கழலினை நன்னும்
              மனமுடையீா்  எண்ணும்
திருநாமம்  திண்ணம் நாரணமே.....

                        நம்மாழ்வாா்

கோவில்பட்டி திருமங்கைதிருப்பதி எம்பெருமானின் திருமுகத்தில் வியர்வை அரும்பியது

*அத்புதம்* *ஆச்சர்யம்* *ஆனந்தம்*.           இன்று நம் கோவில்பட்டி திருமங்கைதிருப்பதி ( இந்திரா நகர்) திருவேங்கடமுடையானுக்கு காலை சுக்ரவார திருமஞ்சனம் முடிந்து திருவாராதனம் நடைபெறும் போது எம்பெருமானின் திருமுகத்தில் வியர்வை அரும்பியது "அத்புதம் ஆச்சர்யம்  "உடனே திருமுகத்தை துடைத்தோம் துடைக்க துடைக்க மீண்டும் மீண்டும் வியர்த்தது நாங்கள் பரவஶமடைந்தோம் என்னே எம்பெருமான் திருவேங்கடமுடையானின் லீலை " நான் இங்கே(கோவில்பட்டி திருமங்கை திருப்பதியிலே) ப்ரத்யக்ஷமாக இருக்கிறேன்" என்று நமக்கு உணர்த்துகிறான் அடியார்கள் அனைவரும் இந்த அத்புத சேவையை சேவித்து மகிழுங்கள்   நம் திருவேங்கடமுடையானின் திருவடியை போற்றுங்கள்


ஆஸ்லேஷா பூஜை

ஆஸ்லேஷா பூஜை 
*********************

ஒரு நண்பர் 'சார், அது என்ன சர்ப்பதோஷ பூஜை?" என்று கேட்டிருந்தார்.

முன்னோரின் நல்வினை/தீவினை மூட்டைகளாக மரபணு வழியே கடத்தப்படுகிறது. காலசர்ப்ப தோஷம் என்பது ஏதோ நல்லபாம்பை கொல்வதாலோ, பாம்பு புற்றை உடைப்பதாலோ மட்டுமே வருவது என்பதில்லை. அவரவர் ஜெனனத்தில் தந்தை வழி/தாய் வழி வரும் பாவங்கள் தான் ராகு/கேது சர்ப்ப தோஷமாக மாறுகிறது. எல்லோர் ஜாதகத்திலும் வம்ச பாபங்களும் சாபங்களும் உண்டு என்றாலும், இந்த காலசர்ப்ப தோஷ ஆட்களுக்கு மட்டும் எல்லா கிரகங்களும் ராகு முதல் கேது வரை உள்ள கட்டங்களில் அடைப்பட்டு மாட்டிக்கொள்ளும். கருநாகமும் செந்நாகமும் துரத்தும் என்பது இதைத்தான் குறிக்கும்.அத்தகையவர்கள் என்னதான் தலைக்கீழாக உழைப்பு போட்டாலும் தக்க பலன் கிடைக்காது. எதிரிகள் நிழலாய் நின்று இவர்களுடைய உழைப்பை/ முன்னேற்றத்தை தடைபோடுவர். இது எப்போது நீங்கும்? ஒரு தலைமுறையை அந்த நபர் கடந்துவிட்டபின் இன்னல்கள் நீங்கும். அதாவது 33 வயதுக்குப்பின் இதன் வீரியம் குறையும். பிறகு தோஷம் யோகமாக மாற ஆரம்பிக்கும். அதுவரை பொறுமை வேண்டும்!

மூதாதையரின் வம்ச பாவங்கள் நீங்கினாலும் அந்த நபருடைய தனிப்பட்ட முற்பிறவி ஊழ்வினைகள் நீங்கி இருக்குமா என்பது தெரியாது. அதனால்தான் பாவங்கள்/புண்ணியங்கள் செய்தால் அது உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததிகள் வழியே பயணிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆட்டம்போட்டுவிட்டு போய்விட்டால் பின்னால்வரும் தலைமுறைகள் அவதிப்படும். அதுதான் வாங்கிவந்த வரம்! 

இங்கே படத்தில் உள்ளபடி பல டிசைன்களில் அச்லேஷா ரங்கோலி வரைகிறார்கள். நான் சொன்ன அந்த நாகபத்ரி வரைந்த கோலம்தான் இது. சர்ப்பங்களின் வகைகள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பிண்டம் வைக்கிறார்கள். இதுவும் தலைமுறைகள் கணக்குப்படிதான் என்று சொன்னார். நான் எண்ணியபடி 64 இருந்தது அதுபோக அஷ்டதிக்குகளுக்கு 4+8=12 வைத்தார்கள். அந்த சம்ஸ்காரம் ஆஸ்லேஷ பலி பூஜை நிவர்த்தி சுமார் 2 மணிநேரம் போகிறது. இதைப் பெரும்பாலும் நாக பஞ்சமி நாளிலோ ஆயில்யம் நட்சத்திரம் அன்றோ செய்கிறார்கள். அதுவே நாகமண்டலா என்பது இரவு முழுதும் நடக்கும் பூஜை.

பூஜைகள் முடிந்ததும் எல்லோர்க்கும் கழிப்பு நடக்கிறது. ரட்சை தருகிறார்கள். அதன்பின் அதில் வைத்த பிண்டம், பூ, பழம் முதலியவற்றை அப்புறப்படுத்தி அத்வான இடத்தில் போய் எரித்து விடுகிறார்கள். ரங்கோலி போட்ட இடத்தை சுத்தம் செய்கிறார்கள். நடந்த பிறகு பங்குகொண்டவர்கள் பிரசாதம் வாங்கிக்கொண்டு போகிறார்கள்.

ஆகவே, தலைமுறைகளுக்காக பொருள் சேர்க்கிறேன் என்று சொல்லி தீரா பாவத்தையும் சேர்த்துக்கொடுத்து பயனில்லை. அரூபமாக உள்ள பாட்டன் / பூட்டன் /ஒட்டனை அவர்களின் கொள்ளுப் பேரக் குழந்தைகள் நொந்துபோய் வசைகளும் சாபமும் அளித்தாலும் ஆச்சரியமில்லை.

நம்ம பாவங்களை சுமக்க அடிமை சிக்கிட்டான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!

-எஸ்.சந்திரசேகர்

Thursday, 12 July 2018

அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் - அதிசயம்

அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் என்பது சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தில் மூலவராக உள்ள லிங்கத் திருமேனி தீண்டாத் திருமேனியாகவும், நிறம் மாறும் தன்மை கொண்டுள்ளதாகவும் உள்ளது. பரசுராமர் மற்றும் பிரம்மன் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு உய்வுபெற்றிருக்கிறார்கள்.

இச்சிவாலயத்தின் மூலவர் பரசுராம லிங்கேஸ்வரர் என்றும், அம்பிகை பர்வதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். தாயைக் கொன்ற பாவத்தினை நீக்க பரசுராமர் இச்சிவலிங்கத்தினை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.

இக்கோயிலின் மூலவர் லிங்கவடிவில் காட்சிதருகிறார். இவருக்கு பரசுராம லிங்கேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இச்சிவலிங்கத்தினை தீண்டாத் திருமேனி லிங்கம் என்றும் அழைக்கின்றனர். இச்சிவலிங்கத்திற்கு அரச்சனை மற்றும் அபிசேகம் செய்ய அர்ச்சகர்கள் லிங்கத்தினைத் தொடுவதில்லை. இச்சிவலிங்கம் பருவகாலத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் தன்மையுடையது. ஆவணி முதல் மார்கழி மாதம் வரை சிவலிங்கம் கருப்பு நிறமாகவும், பங்குனி முதல் ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது.

இச்சிவாலயத்தில் ஆருத்ரா தரிசனம்,[1] பிரதோசம் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

அனுமனுக்கு மலரபிஷேகம் காணொளி, கண்கொள்ளாக்காட்சி


Wednesday, 11 July 2018

கரந்தையர் பாளையம் சாஸ்தா ப்ரீதி வைபவம்

கரந்தையர் பாளையம் சாஸ்தா ப்ரீதி வைபவம் :

ஸ்வாமியே சரணம் அய்யப்பா

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதி புண்ணியத்தலத்தில் அமைந்துள்ள கல்லிடைக்குறிச்சிக்கு " கரந்தையர் பாளையம் " என்ற பெயரும் உண்டு.

இந்த ஊரில் வசித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் குலதெய்வமாக ஸ்ரீசாஸ்தா இருப்பார்.

இந்த ஊர் என்றில்லை மதுரையும் மதுரைக்கு தெற்கே உள்ள திருநெல்வேலி ; தூத்துக்குடி ; அம்பாசமுத்திரம் ; கல்லிடைக்குறிச்சி ; ஆம்பூர் ; ஆழ்வார்குறிச்சி ; ரெங்கசமுத்திரம் ; பிரம்மதேசம் ; அடைச்சானி ; பள்ளக்கால் ; ரவணசமுத்திரம் ; கடையம் ; தென்காசி ; செங்கோட்டை ; குற்றாலம் ; சுரண்டை ; சுந்தரபாண்டியபுரம் ; கடையநல்லூர் ; இராஜபாளையம் ; ஸ்ரீவில்லிப்புத்தூர் ; வத்திராயிருப்பு போன்ற பல ஊர்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் குலதெய்வம் ஆக ஸ்ரீசாஸ்தா இருப்பார்.

பெயர்கள் வேண்டுமானால் சாஸ்தா ; அய்யனார் ; பூதநாதர் ; கல்யாண வரதன் ;அரிகரபுத்ரன் ; முத்தைய்யன்  என்று இருக்கும் அப்படி அழைக்கின்ற அனைத்து பெயர்களும் பொன்னம்பல மேட்டில் தன் இரு தேவியரோடு அருள்பாலிக்கும்  சாட்சாத் ஆதிபூதநாதர் ஆன அந்த மஹாசாஸ்தாவையே குறிக்கும்.

சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டுள்ள குடும்பங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு
ஹரிஹரன் ; பூதத்தான் ; சடையப்பன் ; கல்யாணம் ; ஆர்யா ; அய்யப்பன் ; மணிகண்டன் ; அய்யாமணி ; குளத்துமணி என்றும்
பெண் குழந்தைகளுக்கு பிரபா ; பூர்ணா ; புஷ்கலா ; பூர்ணபுஷ்கலா ; ஹரிணி ; ஹரிப்ரியா ;ராஜேஸ்வரி ; பொன்னம்மாள் ; பொன்னி என்றும்
பெயர் வைப்பார்கள்.

அதை வைத்தே அவர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எளிதாக சொல்லி விடலாம் அந்த அளவுக்கு இப்பகுதியில் சாஸ்தா வழிபாடு பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது.

மஹாமேரு ஸமூஹம் என்றழைக்கப்படும் கம்பங்குடி வம்ச வரலாறு :

முன்னொரு காலத்தில் சாஸ்தாவிடம் அளவில்லாத பக்தி கொண்ட விஜயன் என்ற பெயருள்ள அந்தணர் கரந்தையர் பாளையம் என்ற கல்லிடைக்குறிச்சியில் அவர் மனைவியோடு வாழ்ந்து வந்தார்.

அத்தம்பதியினர் இருவரும் சாஸ்தா மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர்
அவர்களது தன்னலம் இல்லாத பக்தியை மெச்சி அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று சாஸ்தா எண்ணினார்.

அதன்படி ஒருநாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்த வேளையில் சாஸ்தா ஒரு பாலகன் உருவில் இவர்கள் இல்லம் தேடி வந்தார்.

வந்து நின்ற பாலகனின் பொலிவான முகத்தைப் பார்த்து அந்த தம்பதியினர் இருவரும் அவனை தங்கள் இல்லத்துள் அழைத்துச் சென்றனர்.

மழையில் நனைந்து வந்த அந்த பாலகனுக்கு உடலை துடைக்க ஒரு புது வஸ்திரம் கொடுத்தனர் பாலகனும் அதை வாங்கி தன் தலையை துவட்டிக் கொண்டே அம்மா எனக்கு மிகுந்த பசியாக இருக்கிறது இந்த கொட்டும் மழையில் நடுநிசியில் உணவுக்கு நான் எங்கு செல்வேன் தாங்கள் எனக்கு கொஞ்சம் உணவு தந்தால் என் பசியை போக்கிக் கொள்வேன் என்றான்.

அதற்கு அவர்கள் பாலகா இப்போது எங்கள் இல்லத்தில் கம்பு புல்லில் செய்த கம்பங்கூழ் தான் இருக்கிறது அதை உனக்கு தருகிறோம்
அதை அருந்தி உன் பசியாற்றிக் கொள் என்று மிகவும் கனிவோடு கூறினார்கள்.

பாலகனும் அந்த கம்பங்கூழை அருந்தி விட்டு அம்மா இன்று இரவு மட்டும் இங்கே தங்குவதற்கு சிறிது இடம் தாருங்கள் இன்றிரவு ஓய்வெடுத்துக் கொண்டு நாளை காலையில் சென்று விடுகிறேன் என்று பணிவோடு கேட்டான்.

அதற்கு அத்தம்பதியனரும் அந்த பாலகனுக்கு சமயம் அறிந்து தங்க இடம் தந்து உதவினர்.

அன்றிரவு பாலகனாய் வந்த பகவான் சாஸ்தா அத்தம்பதியினர் முன் பிரசன்னம் ஆகி அன்புடையீர் உங்கள் அன்பினால் நீங்கள் பக்தியோடு எமக்கு படைத்த கம்பங்கூழ் ஆனது எனது பசியைப் போக்கி எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இன்று முதல் கம்பங்கூழ் தந்த உங்கள் குடும்பம் ஆனது " கம்பங்குடி வம்சம் " என்று தொன்று தொட்டு வழங்கப்படும்.

இந்த " கம்பங்குடி " வம்சத்திற்கு என்றென்றும் நான் உடமை என்றும்
இந்த " கம்பங்குடி " வம்சத்தினர்
என்றென்றும் எனக்கு அடிமை என்றும்
உங்கள் குடும்பத்திற்கு நானே குலதெய்வமாக இருந்து எப்போதும் காவலனாக இருப்பேன் என்று கூறி மறைந்து விட்டார்.

அப்படிப்பட்ட " கம்பங்குடி " வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் " கரந்தையர் பாளையத்தில் " நடைபெறும் சாஸ்தா ப்ரீதி வைபவத்தில் பூஜையில் வைக்கப்படும்
" ஸ்தானிகர் " ஆசனத்தில் ( பலகையில் ) ஸ்ரீசாஸ்தா சொரூபமாக வந்து அமர்வார்கள்.

இன்றும் வயதில் மூத்தவரான " கம்பங்குடி " வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண அய்யர் மற்றும் ஸ்ரீ வீரமணி ஐயர் ; ஸ்ரீ கணபதி ஐயர் மும்பையிலும்
ஸ்ரீ சுரேஷ் ஐயர் அவர்கள் பெங்களூரிலும்
கல்லிடைக்குறிச்சி தொந்திவிளாகம் தெருவை சேர்ந்த ஸ்ரீ அப்பாச்சி கிருஷ்ணய்யர் அவர்கள் சென்னையிலும்
வசித்து வருகின்றார்கள்.

மேலும் சாஸ்தா ப்ரீதியில் செல்லப்பிள்ளை ஸ்தானத்தில் செல்லவிலாஸ் அப்பளம் ஸ்ரீ முத்துஸ்வாமி சாஸ்திரிகளின் குடும்பத்தினரும் ஸ்ரீ செல்லமணி ஐயர் குடும்பத்தினரும் உள்ளனர்.

இப்போதும் கேரள மாநிலத்தில் கொச்சி ; எர்ணாகுளம் ; நூறணி ஆகிய இடங்களில் நடைபெறும் சாஸ்தா ப்ரீதியில் கரந்தையர்பாளைய சமூகத்தினருக்கே முதல் மரியாதை செய்வார்கள்.

மேலும் கோயம்புத்தூரில் வருடா வருடம்
" ஸ்ரீ மஹாசாஸ்த்ரு ஸேவா சங்கம் " நடத்தும் " ஸம்ப்ரதாய சாஸ்தாப்ரீதி வைபவத்தில் " கரந்தையர் பாளைய சம்ப்ரதாய முறைப்படியே நடக்கிறது.

" சாஸ்தா ப்ரீதி வைபோஹம் " :

" ப்ரீதி " என்றால் " சந்தோஷம் "

உலகத்திற்கே படியளக்கும் அன்னதான ப்ரபு ஆன அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஆன பகவானை
சந்தோஷப்படுத்த வருடத்தில் ஒருநாள் அவன் அடியவர்களால் அவனுக்கு செய்யப்படும் உபசாரமே " சாஸ்தா ப்ரீதி " ஆகும்.

அப்படிப்பட்ட " சாஸ்தா ப்ரீதி " இந்தியாவில் முதன் முதலாய் நடந்த இடம் தென்பொதிகை தென்றல் வீசும் தாமிரபரணி பாய்ந்தோடி வரும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  கல்லிடைக்குறிச்சி ஆகும்.

" கரந்தையர் பாளையம் " என்றழைக்கப்படும் கல்லிடைக்குறிச்சியில் மொத்தம் 18 அக்ரஹாரங்கள் உள்ளது அந்த 18 அக்ரஹாரத்தையும் மொத்தம் எட்டு கிராமங்களாக பிரித்துள்ளனர்.

அவை முறையே

1) வைத்தியப்ப புரம் கிராமம்

2) தொந்தி விளாகம் கிராமம்

3) ராமச்சந்த்ர புரம் கிராமம்

4) தென்னூர் கிராமம்

5) ஸ்ரீ வராகபுரம் கிராமம் என்ற
வீரப்ப புரம் கிராமம்

6) பாட்ட நயினார் புரம் கிராமம்

7) முதலியப்ப புரம் கிராமம்

8) ஏகாம்பர புரம் கிராமம்

என்பதாகும்.

இந்த ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்களும்
" கிழிக்காரர்கள் " என்று அழைக்கப்படுவர்
ஒவ்வொரு வருடமும் " தக்ஷிணாயன புண்ய காலம் " என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தில் நடைபெறும் " சாஸ்தா ப்ரீதி " வைபவத்தை பகவானுக்கு உகந்த ஸ்திரவாரமாம் சனிக்கிழமை செய்வார்கள் மறுதினம் ஆன ஞாயிற்றுக்கிழமை சூரியநாராயண பூஜை செய்து நிறைவு செய்வார்கள் இதை நாள் பார்த்து நடத்துவார்கள்.

இதை " பெரிய அடி யந்திரம் " என்றும் அழைப்பார்கள் அதற்கான கிராமக் கூட்டம் சாஸ்தாங்கோவிலில் வைத்து நடைபெறும்.

அந்த வருடம் எந்த கிராமத்தின் " கிழியோ "
அவர்கள் அந்த வருடம் முழுவதும் கிராமத்தில் நடைபெறும் கோவில் விசேஷங்களையும் " ஸ்ரீ சங்கர ஜெயந்தி " மற்றும் " சிருங்கேரி ஆச்சார்யாள் வர்த்தந்தி தினம் " போன்ற உற்சவங்களை பொறுப்பாக நடத்த வேண்டும்.

அதற்கான செலவை அறக்கட்டளை மூலம் வருகின்ற வட்டியில் இருந்து இந்த நிகழ்ச்சிகளை முக்கியமாக
" சாஸ்தா ப்ரீதி வைபவத்தை " கோலாகலமாக கொண்டாட வேண்டும் அதற்கு பக்தர்கள் தாராளமாக காணிக்கைகள் கொடுத்து வருகின்றனர்.

" சாஸ்தா ப்ரீதி " வைபவத்திற்கு முதல்நாள் அதாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஆறு மணிக்கு மேல் எந்த கிராமத்தின் கிழியோ அந்த கிராமத்து கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும்
" பெரிய அடி யந்திரம் "
( நிறைய ஓலைச்சுவடிகள் நிறைந்த ஒரு பெரிய கட்டு )
ஸ்ரீ சாஸ்தாவின் பிரம்பு ; யானை வாகனம் மற்றும் சாஸ்தாவின் சட்டமிடும் மந்திரி ஆன ஸ்ரீ சங்கிலி பூதத்தாரின் சரம் ( சங்கிலி )
வட்டை விளக்கு ( ஒரு வகை விளக்கு இந்த விளக்கை முக்கியமாக சாஸ்தா ப்ரீதி பூஜையில் வைத்து பூஜிப்பார்கள் ) போன்ற தெய்வீகப் பொருட்களை தனித்தனியாக அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்களும் கிராம கிழிக்காரர்களும் கைகளில் ஏந்தி வர அவர்களுக்கு தனித்தனியாக வண்ணக்குடைகளை பிடித்துக் கொண்டு மரியாதை செய்த படி கிராமத்து இளைஞர்கள் வருவார்கள்.

அவர்களை சகல மரியாதைகளோடும் அனைத்து கிராமங்களுக்கும் நாதஸ்வர மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து இறுதியாக சாஸ்தாங் கோவி்ல் வந்தடைந்து பூஜைக்காக வைத்து நமஸ்கரிப்பார்கள்.

அன்று இரவு சாஸ்தாங் கோவிலில் வைத்து ஸ்ரீசாஸ்தாவாக ஆசனத்தில் அமரக் கூடியவரின் திருக்கரங்களில் ஒரு பெரிய வெள்ளைப் பூசணிக்காய் ( சாம்பக்காய் ) கொடுத்து அதை அவர் இரண்டாக வெட்டி உடைத்து அங்கிருக்கும் தலைமை சமையற்காரரிடம் " ஸ்வாமியே சரணம் அய்யப்பா " என்ற சரணகோஷத்துடன் தருவார்.

அதை பயபக்தியுடன் பெற்றுக்கொண்ட சமையற்காரர் சாஸ்தா ப்ரீதிக்கு உண்டான காய்கறிகளை நறுக்குவதற்கு தயாராகி விடுவார்.

அதன் பிறகு கோவிலில் வைத்து மறுநாள் நடைபெற இருக்கும் சாஸ்தா ப்ரீதி அன்று நடக்கும் அன்னதானத்தில் பந்தியில் என்னென்ன உணவு பதார்த்தங்களை யார் யார் பரிமாற வேண்டும் என்று ஸ்வாமியிடம் உத்தரவு கேட்டு திருவுளச்சீட்டு எழுதி குலுக்கி போடுவார்கள் அதில் யார் யார் பெயருக்கு என்னென்ன பதார்த்தம் வந்திருக்கிறதோ அதை மட்டுந்தான் அந்த கிராமத்து கிழிக்காரர்கள் பந்தியில் ( உதாரணம் : பாயசம் பரிமாறுபவர் மற்ற வகைகளை பரிமாறக் கூடாது ) பரிமாற வேண்டும் கிராமத்தின் ஒற்றுமைக்காக இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட நம் முன்னோர்கள் எத்தனை கவனமாக இருந்திருக்கின்றனர் என்பதற்கு கல்லிடைக்குறிச்சி கிராமம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

மறுநாள் சனிக்கிழமை ( சாஸ்தா ப்ரீதி ) அன்று " சாஸ்தா ப்ரீதி " ஆனது முன்பெல்லாம் சன்னதி தெருவில் உள்ள
ஸ்ரீ ஆதிவராஹ ( லக்ஷ்மீபதி ) பெருமாள் கோவிலில் வைத்து நடைபெறும் கோவிலின் தெற்கு பிரகாரத்தில் உள்ள சாஸ்தா மண்டபத்தில் தான் பூஜைகள் நடைபெறும்.

அழகாக ஸ்வாமியை அலங்காரம் செய்திருப்பார்கள் பெரிய விளக்குகளில் ஸ்வாமியை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

ஒரு விளக்கில் மகாகணபதியையும்
ஒரு விளக்கில் குருவையும்
ஒரு விளக்கில் பூர்ணாம்பா புஷ்கலாம்பா ஸமேத மஹாசாஸ்தாவையும்
ஆவாஹனம் செய்து வைப்பார்கள்.

தெற்கு முகமாக உள்ள விளக்கில் ஸ்வாமியின் சட்டமிடும் மந்திரியான ஸ்ரீ பூதத்தாரை ஆவாஹனம் செய்து குண்டாந்தடி மற்றும் சரம் ( சங்கிலி ) வைத்து வடைமாலை சாற்றி இருப்பார்கள்.

பூமாலை சாற்றி புஷ்பங்கள் சமர்ப்பித்து சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை
ஸ்ரீருத்ர பாராயணம்
ஸதுர் வேத கோஷ பாராயணம் செய்வார்கள்.

ஸ்ரீசாஸ்தாவாக அமர்பவருக்கான ஸ்தானிகர் ஆசனமும் ( பலகை )
ஸ்ரீ சாஸ்தாவின் செல்லப்பிள்ளை ஆன
ஸ்ரீ சத்யகனுக்கு ஒரு ஆசனமும் ( பலகை )
ஸ்ரீ சாஸ்தாவின் சட்டமிடும் மந்திரி
ஸ்ரீ பூதத்தாருக்கு ஒரு ஆசனமும் ( பலகை )
ஸ்ரீ சாஸ்தாவின் பரிவார தேவதா மூர்த்திகள் ஆன யக்ஷி மற்றும் கருப்பஸ்வாமிக்கு ஒரு ஆசனமும் ( பலகை ) போடுவார்கள்.

பின்னர் அந்தந்த தேவதைகளுக்குரிய பிரதிநிதிகளாய் அந்தந்த ஆசனங்களில் கம்பங்குடி வம்ச ஸ்தானிகர்கள் அமர்வார்கள்.

ஸ்ரீ மணிதாஸர் எழுதிய கீர்த்தனங்கள் ஆன மஹாமேரு ஸமூக சாஸ்தா ப்ரீதி வரவுப் பாடல்களை மனம் உருக பாடுவார்கள்.

அதன் பிறகு மங்கள ஸ்நானம் செய்ய ஸ்வாமி செல்வார் ஒரு வண்ணக் குடையின் கீழ் சாஸ்தாவாக இருப்பவரை அவரின் இரண்டு பக்கங்களிலும் இரு பக்தர்கள் அவரை கைத் தாங்கலாக பிடித்துக் கொள்ள இரட்டை வரிசையாக ஸ்வாமியின் வரவு விருத்தங்களை பாடிக் கொண்டே வருவார்கள்.

அவருக்கு முன்னால் வட்டை தீபத்தை ஒருவர் இரு கைகளிலும் தாங்கி கொண்டு வருவார்
சாஸ்தாவின் பரிவார தேவதைகள் ஆன
ஸ்ரீ சங்கிலிபூதத்தார் ; ஸ்ரீ குண்டாந்தடி பூதத்தார் ; ஸ்ரீ கருப்பஸ்வாமி ; ஸ்ரீ யக்ஷி ; செல்லப்பிள்ளை ஸ்ரீ சத்யகன் போன்றவர்கள் முன்னால் ஆடிக் கொண்டே போவார்கள் அவர்களின் தாக சாந்திக்காக பக்தர்கள் இளநீரை கொடுப்பார்கள்.

பெருமாள் கோவிலின் மேற்கு வாசல் வழியாக வந்ததும் அங்கு ஒரு வீட்டின் சுவரில் உள்ள சிறிய துவாரம் வழியாக ஸ்ரீசாஸ்தா ஆனவர் பார்ப்பார் அது பிலாவடி சாஸ்தா மற்றும் ஆரியங்காவு சாஸ்தா தரிசனம் என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பின்னர் மேலமாட வீதி வழி வந்து ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலின் கன்னடியன் கால்வாய் படித்துறையில் வைத்து ஸ்வாமிகள் அனைவரையும் மங்கள ஸ்நானம் செய்ய வைத்து புது வஸ்திரம் கொடுத்து அழைத்து வந்து நேராக வடக்குமாட வீதி வழியே அழைத்து வந்து பெருமாள் கோவிலுக்குள் சென்று பூஜா மண்டபத்தில் அவர்களை அமரச் செய்து சாந்தி பெற செய்வார்கள் பின்னர் ஸ்வாமிக்கு தீபாராதனை காண்பித்து அன்றைய காலை பூஜையை பூர்த்தி செய்வார்கள்.

பின்னர் மங்கள ஸ்நானம் முடித்து வந்த சாஸ்தாவின் கையில் இலைக்கட்டு தரப்பட்டு அதை அவர் அந்த கிராம கிழிகாரரிடம் கொடுத்து அன்னதானத்தை துவங்க சொல்வார் உடனே அதை அவர் பெற்றுக் கொண்டு அங்கு வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் பரிமாற துவங்கி விடுவார்கள் கிட்டத்தட்ட சுமார் மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அன்னதானம் முன்பெல்லாம் பெருமாள் கோவிலில் உள்ள அனைத்து பிரகாரங்களிலும் நான்கு அல்லது ஐந்து முறை அன்னதான பந்திகள் நடைபெறும்.

" சாஸ்தா ப்ரீதி பாயசம் " :

பெரிய அடுப்புக்குழி தோண்டி அதன் மேல் பெரிய வார்ப்பு ( அந்த பெரிய வார்ப்புகளை தூக்குவதற்கே ஒரு பத்து பேர் இருப்பார்கள் )
வைத்து அதில் பாயாசம் வைப்பார்கள்
அதை இரண்டு பேர் ( இந்த பாயசம் வைப்பது ஸ்வாமியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று ஸ்வாமியை அலங்கரித்த மண்டபத்தின் நேர் எதிரே வைத்து செய்வார்கள் ) கிண்டிக் கொண்டே இருப்பார்கள்.

அவைகள் எல்லாம் பசுமையான நினைவுகள் ஆன கண்கொள்ளா காட்சிகள் ஆகும்.

அதன் பின்னர் அன்றிரவும் பகலைப் போலவே பூஜை முடித்து ஸ்வாமிக்கு மங்கள ஸ்நானம் நடத்தி வைத்து அதன் முடிவில் நைவேத்யம் செய்து தீபாராதனை காட்டி சாஸ்தா ப்ரீதியை பூர்த்தி செய்வார்கள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சூரியநாராயண பூஜை அன்று காலை ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் சூரிய நமஸ்கார ஸ்லோகங்கள் சொல்லி நமஸ்கரிப்பார்கள்
அன்று காலை பத்து மணிக்கெல்லாம் அன்னதானம் துவங்கி விடும்.

பின்னர் அன்றிரவு கிராமக் கூட்டம் நடைபெறும் அதில் அடுத்த வருடம் எந்த கிராமத்துக்காரர்களின் கிழியோ அவர்களிடம் அதை ஒப்படைப்பார்கள்.

அதை அந்த குறிப்பிட்ட கிழிக்கார கிராம ஜனங்கள் மேள தாளத்துடனும் ஸ்வாமியின் சரணகோஷத்துடனும் பெரிய அடி யந்திரத்தையும் ; ஸ்வாமியின் பிரம்பு ; யானை வாகனம் ; சரம் ( சங்கிலி ) வட்டை தீபம் முதலியவற்றை எடுத்துச் சென்று அவர்களது கிராம கோவிலில் வைத்து விட்டு நைவேத்யம் தூப தீப ஆராதனைகள் செய்து பூர்த்தி செய்வார்கள்.

அன்று இரவு மஹாமேரு ஸமூஹத்தின் கட்டளையாக ஸ்ரீ ஆதிவராஹ பெருமாளுக்கு
" சிறப்பு கருடசேவை " நடைபெறும்.

இப்போதெல்லாம் " சாஸ்தா ப்ரீதி " ஆனது
" தென் குளத்தூரிலய்யன் " என்று அழைக்கப்படும் சாஸ்தா கோவிலில் வைத்தே மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கோலாகலமான " சாஸ்தா ப்ரீதி " வைபவத்திற்கு அனைத்து ஊர்களில் இருந்தும் பல பக்த கோடிகள் தவறாது கலந்து கொண்டு ஸ்ரீசாஸ்தாவை அனைவருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்கின்றனர்.

ஸ்வாமியே சரணம் அய்யப்பா

தென்கரந்தாபுரி வாசனே சரணம் அய்யப்பா

கரந்தையர் பாளையத்துறைவோனே சரணம் அய்யப்பா

கருணா சாகரக் கடலோனே சரணம் அய்யப்பா

தென் குளத்தூரிலய்யனே சரணம் அய்யப்பா

கம்பங்குடிக்கு உடமையே சரணம் அய்யப்பா

உன் பொன்னடிக்கு அடிமையே சரணம் அய்யப்பா

ஸ்வாமியே சரணம் அய்யப்பா

ஆச்சர்யப்படுத்தும் அமர்நாத் குகைக்கோவில்

ஆச்சர்யப்படுத்தும் அமர்நாத் குகைக்கோவில்:-

செயர்கையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்குமுன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்துத்தான் போய்விடுகிறோம் என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்காது என்று கருதுகிறேன். எங்கும் எதிலும் அறிவியலின் அபிரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத கேள்விகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே? அப்படிப்பட்ட கேள்வியில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் சுமார் 5000 ஆண்டுகலுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).

விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில். இந்துக்களின் புராண இதிகாசங்களின்படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக கூறப்படுகிறது. இந்துக்களின் சிவ வழிபாட்டு தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.

இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையின் அடிவாரதத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam) என்ற இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு. இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலையின் அடிவாரத்திலிருந்து அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு நாட்களில் கால்நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.

சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான், வியப்பதிர்க்கில்லை. ஆனால் இங்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.

இங்கே இன்னுமொரு அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம் விஞ்ஞானத்தால் இன்றுவரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்றுவரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது, இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.

அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப இடங்களில் அமர்நாத்தும் ஒன்று என்பதே உண்மை.

Friday, 6 July 2018

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இப்போது வைக்கப்பட்டுள்ள பொருள் மிளகு, அருகம்புல், கீழாநெல்லி

ஈரோடு: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இப்போது வைக்கப்பட்டுள்ள பொருள் மிளகு, அருகம்புல், கீழாநெல்லி. ஒரே பொருள் மட்டுமே வைத்து பூஜை செய்யப்படும் உத்தரவு பெட்டியில் இப்போது 3 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவர் கட்டளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவே இருக்கிறது.

அதென்ன உத்தரவு பெட்டி, ஆண்டவர் கட்டளை எப்படி பக்தர்களுக்கு தெரியும் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் சொன்னால்தான் புரியும். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.

உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

சிவன்மலை ஆண்டவர்
சிவன்மலை முருகன்கோவிலில் ஆண்டவர் உத்தரவு என்ற பெயரில் கண்ணாடி பெட்டியில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புபூஜை செய்யப்படுவது வழக்கம். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

உத்தரவு பெட்டி பூஜை
மண், துப்பாக்கி, ஏர்கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது.

சசிகலா சிறை
மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள்.

ஜிஎஸ்டி வரி கெடுபிடி
கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி என்ற பெண் பக்தரின் கனவில் கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது. இதனையடுத்து கணக்கு நோட்டு வைத்து பூஜைக்கப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி வரிமுறை கடுமையானது. பினாமி சொத்துகள் மீட்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடைபெற்றன.

சென்னிமலைக்கு உத்தரவு
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிளகு, அருகம்புல், கீழாநெல்லி வைத்து பூஜை செய்யப்படுகிறது. வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தைச் சேர்ந்த சென்னிமலை என்பவருக்கு இந்த உத்தரவு கிடைத்ததாம்.

அருகம்புல்,மிளகு, கீழாநெல்லி
மிளகு, எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கானது. கீழாநெல்லி, தீயவைகளிலிருந்து காக்கும்; அருகம்புல் வெற்றியை குறிப்பதாகும். ஆன்மிகம் அதிகரிக்கும். ‘பழமையான தொழில்கள், மருத்துவம் பெருகும் ஆண்டாகும். அதேபோல், காய்ச்சல், மஞ்சள் காமாலை உட்பட தொற்று நோய்கள் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்கின்றனர் சிவாச்சாரியார்கள். நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் சிவன்மலை ஆண்டவரின் உத்தரவு பெட்டி பற்றி இன்றைக்கும் அதிசயமாக பேசிக்கொள்கின்றனர் திருப்பூர், கோவை மாவட்ட மக்கள்.

ஜ்வராபக்ன மூர்த்தி


🌺⚜24. ஜ்வராபக்ன மூர்த்தி
⚜🌺

⚜🌺மாபலி மன்னனின் மகன் வாணாசுரன். அவனுக்கு ஆயிரம் கைகள் உண்டு. அவனது மனைவி சுப்ரதீகை. அவன் நர்மதை நதியோரத்தில் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்கு தினமும் ஆயிரம் முறை அர்ச்சனை செய்து வந்தான். 🌺

⚜🌺சிவபெருமான் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு உலகம் முழுவதும் அரசாட்சி செய்யவும், நெருப்பினால் ஆன மதில் சுவரும், அழிவற்ற நிலையும், தேவர் அடித்தாமரை அன்பும் வேண்டுமெனக் கேட்டான். அதன்படியே கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் தன் வசம் கொண்டான். மீண்டுமொருமுறை சிவபெருமானை தரிசிக்க விரும்பி வெள்ளிமலை அடைந்தான். 🌺

⚜🌺அங்கு ஆயுரம் கைகளிலும் குடமுழா வாசித்தான். மீண்டும் சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்டதிற்கு இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்தில் வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான். பின் சிவபெருமான் குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே வாழ்ந்து வந்தார். 🌺


⚜🌺இந்நிலையில் வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு இழுத்து தோற்கடித்ததால் அனைவரும் ஓடி விட்டனர். எøவே தன்னுடன் போர்புரியும் படி சிவனை அழைத்தான் . சிவனோ எனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டார். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள் அந்த செய்தி கிடைக்கும் போது வருவான் என்றார். 🌺

⚜🌺அதன்படி நடைபெற்றது. வாணாசுரனின் மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர்புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான். இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது வாசலில் சிவபெருமானை கண்டான். உடன் சிவபெருமான் சண்டைக்கு கண்ணனை அழைத்தார். 🌺

🌺⚜கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் தேற்றி, வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய், அதற்கு முன் எண்ணிடம் போர் புரி என்ற படியே இருவருக்கும் போர் நடைபெற்றுக் கொண்டே யிருந்தது. எத்தனைக் காலமேன யாராலும் சொல்ல முடியாத படி நீண்டது. முடிவில் சிவபெருமான் ஒதுங்க போர் நின்றது. பின் வாணாசுரனுடன் படு பயங்கரப் போர் நடைப்பெற்றது. 🌺

⚜🌺இறுதியில் அவனது கரங்கள் ஒவ்வொன்றும் துண்டானது. சிவனை தொழுத கைகள் மட்டும் வெட்டாமல் விடப்பட்டது. மனமாறிய வாணாசுரன் மன்னிப்பு வேண்ட, மன்னிக்கப்பட்டு மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. அவன் மறுபடியும் குடமுழா வாசிக்க பணியமர்த்தப் பட்டான். அவனது மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணன் - சிவபெருமான் இடையே நடைபெற்ற போரில் தொடுத்த சீதள சுரத்தை, சிவபெருமான் விட்ட உஷ்ண சுரமானது ஒரு கணத்தில் வென்றது.🌺

 ⚜🌺அது மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழிகள், மூன்று கால்களுடன் இருந்தது. தீராத சுரம் கண்டோர் இந்த வடிவை வணங்க சுரம் குறையும். இவ்வுருவமே ஜ்வராபக்ன மூர்த்தி யாகும். அவரை நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டியகுடியில் காணலாம். வேதநாயகி இறைவி திருநாமமாகும். வெப்ப நோய்க்குரிய தேவதை ஜ்வர தேவர் ஆவார். இங்குள்ள அவரை வணங்க வெப்ப நோயின் தீவிரம் குறையும். வெள்ளை அல்லி அர்ச்சனையும், சுக்கு கசாய நைவேத்தியமும் புதன் சோம வாரங்களில் கொடுக்க நோய் தீரும். மேலும் இறைவனுக்கு பசுந்தயிர் அபிசேகம் செய்ய சுரம் குறையும்.🌺(தொடரும்) ஓம் நமசிவாய🙏🏻

மனிதன் எப்படி தேவ கணம் ஆகலாம்?

சிவன்பால் அன்பு கொண்ட மனிதன் எப்படி தேவ கணம் ஆகலாம்?

சிவன் மீது ஒவ்வொரு பிறவியிலும் இயல்பாகவே பற்றுதலுடன் வாழ்பவர்கள் உண்டு;

மகாவிஷ்ணுவை தனது தந்தையாகவே நினைக்கும் உயர்ந்த ஆத்மாக்களும் உண்டு;

மனிதன் தேவ கணம் ஆக வேண்டும் என்றால், தனது வருமானத்தில் ஒரு பகுதியை அன்னதானம்,அண்ணாமலை கிரிவலம்,திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் செல்லுதல்,பாழடைந்த ஆலயத்தைச் சீரமைத்தல்,ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்புதல் போன்ற செயல்களை செய்து வர வேண்டும்;

சில குறிப்பிட்ட ஆலயங்களில் குறிப்பிட்ட நாட்களில் அபிஷேகம்,அன்னதானம் தொடர்ந்து செய்து வர வேண்டும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் கோவிலில் தினமும் சங்கு ஊதினால் தேவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஒரு வேளையாவது கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு வந்தாலும் தேவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் தினமும் நாட்டுப் பசுவை (சிறிதும் புண்ணியம் தராத வெளிநாட்டு ஜெர்ஸிப்பசு அல்ல) குளிக்க வைத்து,பூ வைத்து,பொட்டு வைத்து உணவு கொடுத்து வந்தால் தேவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் தினமும் ஒரு சிவாலயம் என்றோ அல்லது ஒரே ஒரு சிவாலயத்தில் உழவாரப் பணி செய்து வந்தாலும் சிவ கடாட்சம் உண்டாகும்;

40 ஆண்டுகளாக ஆன்மீக சொற்பொழிவு செய்து வந்தாலும் அல்லது மத மாற்றத்தை தடுத்து நிறுத்தி,நமது பண்பாட்டின் பெருமைகளை பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு புரிய வைத்தாலும் சிவ கணம் ஆகும் தகுதி உண்டாகும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஏதாவது ஒரே ஒரு சிவமந்திரம் ஜபித்து வந்தால் சிவ கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்கு குறையாமல் தினமும் ஏதாவது ஒரே ஒரு விஷ்ணு மந்திரம் ஜபித்து/எழுதி வந்தால் விஷ்ணு கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்கு குறையாமல் விநாயகர் மந்திரம் ஒன்றை தினமும் ஜபித்து வந்தால் கணபதி கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்கு குறையாமல் தினமும் முருக மந்திரம் ஜபித்து வந்தால் முருக கணம் ஆக முடியும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு தானம் செய்து வந்தால் பைரவரின் அருளும்,அருளால் அஷ்டமாசித்திகளும் கிட்டும்;பைரவ கணமாகும் யோகம் அல்லது பைரவ உலகத்தில் வாழும் சித்தராகும் தகுதி உண்டாகும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் ஜபித்து வந்தால் சக்தி கணம் ஆகும் தகுதி உண்டாகிவிடும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் தினமும் வராகி மந்திரம் ஒன்றை ஜபித்து வந்தால் வராகி(சம்ஸ்க்ருதத்தில் வாராஹி) கணம் ஆகும் தகுதி உண்டாகிவிடும்;

40 ஆண்டுகளுக்குக் குறையாமல் மாதம் ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் (தினமும் கிரிவலம் செல்பவர்கள் இன்றும் இருக்கின்றார்கள்) சென்றால் அருணாச்சல கணம் ஆகும் தகுதி உண்டாகும்;

இவைகள் தவிர உங்கள் மனதில் உதிக்கும் எந்த ஒரு பக்திரீதியான செயல்களையும் செய்து வந்தால் ஒரு சில பிறவிகளுக்குப் பிறகு தெய்வ நிலையை அடைய முடியும்;

இவைகள் அனைத்தும் அகத்திய மகரிஷியின் கிரந்தங்களில் இருந்து எடுக்கப்பட்டவை;

ஓம் நமசிவாய
சர்வம் சிவார்ப்பணம்🌿

Wednesday, 4 July 2018

விளம்பி வருடம் ஆடி மாதம் 1ம் நாள் (27-07-2018) வெள்ளிக்கிழமை இரவு பெளர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.

#பூர்ண_சந்திரகிரஹணம்

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரஹணம், அதிக நேரம் ஸம்பவிப்பதால் அதிக நேரம் ஆன்மீக அன்பர்கள் காயத்ரி ஜெபம், வேதங்களில் உள்ள முக்யமந்திரங்கள், மூல மந்திரங்களை அவரவர் குரு, மஹா வாத்யார் கூறும் அறிவுரைப்படிக்ரமாக அனுஷ்டிக்க வேண்டுகிறேன்.

(கேது க்ரஸ்த ஸோமோபராக புண்யகாலம்)

விளம்பி வருடம் ஆடி மாதம் 1ம் நாள்
(27-07-2018) வெள்ளிக்கிழமை இரவு பெளர்ணமி
உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.

இந்த கிரஹணத்தை இந்தியாவில் உள்ள
அனைத்து ஊர்களிலும் நன்கு காணமுடியும்.

கிரஹண ஆரம்பம் 27-07-2018 இரவு 11.54 மணி
கிரஹண மத்தியம் 28-07-2018 அ.காலை 1.59 மணி
கிரஹண முடிவு 28-07-2018 ஆ.காலை 3.49 மணி
வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.

பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.

பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்ராடம், திருவோணம், ரோஹிணி, ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை
பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.

கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரை
சந்திரனை பார்க்க கூடாது.

Tuesday, 3 July 2018

சுவாமிஜி தவயோகி தங்கராஜ் சுவாமிகள் நேற்று 03ஜூலை2018 மாலை 7.21 மணிக்கு ஜீவன் முக்தி அடைந்தார்

ஸ்ரீ அகத்தியர் ஞானபீடம் கல்லாறு மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோடு.
          சுவாமிஜி தவயோகி தங்கராஜ் சுவாமிகள் நேற்று 03ஜூலை2018 மாலை 7.21 மணிக்கு ஜீவன் முக்தி அடைந்தார்.
           இன்று 04ஜூலை2018 ஜீவசமாதி ஏற்பாடுகள் நடக்க இருக்கிறது.
           இதை தெரிந்த அகத்தியர் அன்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளவும்.
     ஓம் அகத்தீசாய நமக

Hari AUM Swaamiji.. Mettuppaalayam, Kallaar, Agasthya Gnaanapeetam Swaami Thavayogi Thangaraasan Adigalaar attained Mahaa Samaadhi Now..... Tomorrow 4.7.2018  Wednesday 2:00pm Samaadhi Vaibhavam ... Kindly attend   Akhila Bhaarateeya Sannyaasees Sangam....

Monday, 2 July 2018

நட்சத்திரங்களுக்குரிய பரிகாரங்கள்!

நட்சத்திரங்களுக்குரிய பரிகாரங்கள்!

 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

நீங்கள் பிறந்த நட்சத்திர, ராசி யைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிடப்பட்டுள  கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர, நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும்.  ஆத்ம சுத்தியுடன் , பய பக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள். மங்களம் உண்டாகட்டும். !!!

மேஷ ராசி :

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்

ரிஷப ராசி :

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசி :

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

கடக ராசி :

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசி :

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்

கன்னி ராசி :

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

துலாம் ராசி :

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்

விருச்சிக ராசி  :

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசி :

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசி :

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

கும்ப ராசி :

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

மீன ராசி :

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

(OR)

அஸ்வினி -

                 அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

பரணி -

             அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்  இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

கார்த்திகை -

     அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

ரோஹிணி -

               அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருக சீரிஷம் -

               அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்  இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

திருவாதிரை -

                 அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்  இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

புனர் பூசம் -

                   அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

பூசம் -

                அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

ஆயில்யம் -

            அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

மகம் -

            அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் -

               அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

உத்திரம் -

             அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் -

              அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்துபஸ், ஆட்டோ வசதி உள்ளது.

சித்திரை -

       அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி -

         அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் -

               அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

அனுஷம் -

          அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

கேட்டை -

             அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் -

       அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் -

           அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் -

       அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் -

       பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

அவிட்டம் -

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

சதயம் -

    அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

பூரட்டாதி -

   அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி -

    அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

ரேவதி -

         அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.



ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது.

1.மேஷ ராசி காரர்கள் ----ராமேஸ்வரம் ,பழனி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
2.ரிஷப ராசி காரர்கள் ----திருபதி ,திருபரம்குன்றம் , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
3.மிதுனம் ராசி காரர்கள் ----பழனி ,கோடி ஹத்தி பெருமாள் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
4.கடகம் ராசி காரர்கள்--ராமேஸ்வரம்,திருதேவன்குடி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
5.சிம்மம் ராசி காரர்கள்--ஸ்ரீ வாஞ்சியம் ,பருதியப்பர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
6.கன்னி ராசி காரர்கள்--திருகழுகுன்றம் ,திருகண்ணன் மங்கை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
7.துலாம் ராசி காரர்கள்---திருத்தணி ,நரசிங்கம் பேட்டை , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
8.விருச்சகம் ராசி காரர்கள்---காஞ்சிபுரம் ,ஓமந்தூர்,மதுரை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
9.தனுஷு ராசி காரர்கள்--மாயவரம் ,திருவெண்காடு கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
10.மகரம் ராசி காரர்கள்---சிதம்பரம் ,அனந்த மங்களம் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
11.கும்பம் ராசி காரர்கள்---தேவிபட்டினம் ,கும்பகோணம்( கும்பேஈஸ்வரர் ) ,திருகோஷ்டியூர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
12.மீனம் ராசி காரர்கள்---வைதீஸ்வர சுவாமி ,திருவையாறு ,மச்சமுனி தீர்த்தம் (திருபரம்குன்றம் ),திருவலஞ்சுழி

நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்

1.அஸ்வினி:-
ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர்
கோவில், இங்கு பைவருக்கு நாய்
வாகனம் இல்லை.

2.பரணி:-
 ஸ்ரீமகா பைரவர்-
திருப்பத்தூர் அருகில் உள்ள
பெரிச்சி கோவில்.
  3.கார்த்திகை:- ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
  4.ரோகிணி:- ஸ்ரீகால பைரவர்-
பிரம்ம கிரக்கண்டீஸ்வரர்
கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.
  5.மிருகசீரிஷம்:- ஸ்ரீ சேத்திரபால பைரவர்-
சேத்திரபாலபுரம் (குத்தாலம்
அருகில்)
  6.திருவாதிரை:- ஸ்ரீவடுக
பைரவர்-ஆண்டாள் கோவில்
(பாண்டிச்சேரி-விழுப்புரம்
பாதையில் 18 கி.மீ.)
  7.புனர்பூசம்:- ஸ்ரீவிஜய
பைரவர்-பழனி சாதுசுவாமி கள்
மடாலயம்.
  8.பூசம்:- ஸ்ரீ ஆவின் பைரவர்-
(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர்
கோவில்.
  9.ஆயில்யம்:- ஸ்ரீ பாதாள
பைரவர்-காளஹஸ்தி.
  10.மகம்:- ஸ்ரீநர்த்தன பைரவர்-
வேலூர் கோட்டை யின்
ஒரு பகுதியில் உள்ள
ஜலகண்டேஸ்வரர் கோவில்.
  11.பூரம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-
தேனு புரீசுவரர்கோவில்.
  12.உத்திரம்:- ஸ்ரீ ஜடாமண்டல
பைரவர்-சேரன்மகா தேவி அம்மைநாதர்
கைலாசநாதர் கோவில்.
  13.அஸ்தம்:- ஸ்ரீ யோக பைரவர்-
திருப்பத்தூர் திருத்தளிநாதர்
கோவில்.
  14.சித்திரை:- ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-
மல்லி கார்ச்சுன -
காமாட்சி கோவில் கோட்டை சிவன்
கோவில் என்றும் தகடூர்
காமாட்சி கோவில் என்றும்
இக்கோவிலை அழைக்கிறார்கள்.
  15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்-
புதுக்கோட்டை அருகே உள்ள
பொற்பனைக்
கோட்டை தற்போது திருவரங்குளம்
என்று அழைக்கப்படுகிறது.
  16.விசாகம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
  17.அனுஷம்:- ஸ்ரீ சொர்ண
பைரவர்- கும்பகோணம்
அருகே உள்ள ஆபத்சகாய
ஈஸ்வரர் கோவில்.
  18.கேட்டை:- ஸ்ரீகதாயுத
பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர்
கோவில்.
  19.மூலம்:- ஸ்ரீ சட்டநாதர்
பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர்
கோவில்.
  20.பூராடம்:- ஸ்ரீகால பைரவர்-
அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
  21.உத்திராடம்:- ஸ்ரீவடுகநாதர்
பைரவர்-கரூர்-
கல்யாணபசுபதி ஈஸ்வரர்
கோவில்.

 22.திருவோணம்:- திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட
பைரவர்-வைரவன்பட்டி-
வளரொளி நாதர் கோவில்.
  23.அவிட்டம்: -
சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில்
அஷ்ட பைரவர் சந்நிதி.
  24.சதயம்:- ஸ்ரீசர்ப்ப பைரவர்-
சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன்
கோவில் தலம்.
  25.பூரட்டாதி:-
கோட்டை பைரவர்-
ஈரோடு அருகே கொக்கரையான்
பேட்டை கிராமத்தில் உள்ள
பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.
  26.உத்திரட்டாதி:-
 ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-
சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர்
கோவில் கும்ப கோணம்,
பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
  27.ரேவதி:- ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-
தாத்தையங்கார் பேட்டை,
காசி விசுவநாதர் கோவில்.

12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்

சித்திரை- மது:

சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி - நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை - ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி - ஸஹர்:

வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா

வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம்

சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி - தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி - தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி
என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோக
ராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.



நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:

அசுவினி சுகந்த தைலம்
பரணி மாவுப்பொடி
கார்த்திகை நெல்லிப்பொடி
ரோகிணி மஞ்சள்பொடி
மிருகசீரிடம் திரவியப்பொடி
திருவாதிரை பஞ்சகவ்யம்
புனர்பூசம் பஞ்சாமிர்தம்
பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம் பால்
மகம் தயிர்
பூரம் நெய்
உத்திரம் சர்க்கரை
அஸ்தம் தேன்
சித்திரை கரும்புச்சாறு
சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம் இளநீர்
அனுஷம் அன்னம்
கேட்டை விபூதி
மூலம் சந்தனம்
பூராடம் வில்வம்
உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம் கொம்பு தீர்த்தம்
அவிட்டம் சங்காபிஷேகம்
சதயம் பன்னீர்
பூரட்டாதி சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி வெள்ளி
ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

 

பிறந்த நட்சத்திரமும் வணங்க வேண்டிய கிரகங்கள்!

அஸ்வினி கேது
பரணி சுக்கிரன்
கார்த்திகை சூரியன்
ரோகிணி சந்திரன்
மிருகசீரிஷம் செவ்வாய்
திருவாதிரை ராகு
புனர்பூசம் குரு (வியாழன்)
பூசம் சனி
ஆயில்யம் புதன்
மகம் கேது
பூரம் சுக்கிரன்
உத்திரம் சூரியன்
அஸ்தம் சந்திரன்
சித்திரை செவ்வாய்
சுவாதி ராகு
விசாகம் குரு (வியாழன்)
அனுஷம் சனி
கேட்டை புதன்
மூலம் கேது
பூராடம் சுக்கிரன்
உத்திராடம் சூரியன்
திருவோணம் சந்திரன்
அவிட்டம் செவ்வாய்
சதயம் ராகு
பூரட்டாதி குரு (வியாழன்)
உத்திரட்டாதி சனி
ரேவதி புதன்.