Friday 22 June 2018

சப்தகிரி மலை - சுயம்பு நரசிம்மர்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில், 
போளூர்.
திருவண்ணாமலை.

மூலவர்:
இலட்சுமிநரசிம்மர்
தாயார்:
கனகவள்ளி

சுயம்பு ஆன நரசிம்மர் தெற்கே திருவண்ணாமலையை
பார்த்து அமர்ந்துள்ளார்
 
லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்   போளூரில் உள்ள சப்தகிரி மலையில் அமைந்துள்ளது. 

இந்த சப்தகிரி மலை சமஸ்கிருதத்தில்  "மலை செல்வம்" என பொருள். 

சப்தகிரி என்றால் ஏழு மலை எனவும்
பொருள்.

சுயம்பு  நரசிம்மர் : 

புராண காலத்தில் மலை உடைக்கும் தொழிலாளர் 
குழு சப்தகிரி மலையை உடைத்துக்கொண்டு இருந்தபோது ஒரு தொழிலாளி  உடைத்த  
கல்லில் இருந்து ரத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
அனனவரும் அதிர்ச்சி அடைந்து பயந்து மலையை விட்டு இறங்கி  விடுகின்றனர்.  

அதே இரவு, 
இறைவன் நரசிம்மர்  பக்தர்  ஒருவரின் கனவில் வந்து இறைவன் நரசிம்மர்
நான் சப்தகிரி மலையில்   சாந்த மூர்த்தியாக எழுந்தறியுள்ளேன் என கூற

அடுத்த நாள், பக்தர் கனவு தகவலை  இந்த கிராமமக்களிடம் தெரிவிக்க அனைத்து கிராம மக்களும் மலை ஏறி  வந்து பார்க்க இறைவனின் சிலை இருந்தது. 
இரத்த வெள்ளத்தில் இருந்த நரசிம்ம மூர்த்தியை பார்த்து ஆனந்தப்பட்டனர்.

அனைத்து கிராம மக்களும் ஒன்றாக கூடி  ஒரு  மகா மண்டபம் கட்ட முடிவு செய்து கட்டியும் முடிக்கின்றனர்.

பின்னர் பெருமாளுக்கு ஒரு கோவிலையும் கட்டினர்.
பின்னர் மகாலெட்சுமிக்கும் ஒரு சிறிய கோவிலை கட்டிய மக்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர்.

குலஸ்தியர் & புலஸ்திய மகரிஷி.

 இறைவன் நரசிம்மர் அழைத்ததின் பேரில்  சகோதரர்கள்  
குலஸ்தியமகரிஷி  புலஸ்திய மகரிஷி.
இந்த கோயிலுக்கு வருகின்றனர்.

இந்த இரண்டு ரிஷிகளும்  தீவிர பெருமாள் பக்தர்கள் ஆவார்.
 
இந்த இரண்டு முனிவர்கள் செய்த  தவத்திற்கு  இறைவன் நரசிம்மர் ஈர்க்கப்பட்டு  இரண்டு ரிஷிகளுக்கும் 
நரசிம்மர் ஒரு மாம்பலழத்தை கொடுத்தார். பழத்தை ஒருவர் மட்டும் சாப்பிடவேண்டும் என்றார்.
அந்த மாம்பலத்தை யார் சாப்பிடுவது என சகோதரர்கள் இருவருக்கும் சண்டை வந்தது.
தான் மாம்பலத்தை சாப்பிடும் எண்ணம் கொண்டு
புலஸ்திய மகரிஷி அவரின்
இளைய சகோதரர் குலஸ்தியரிஷியின் கைகளை வெட்டிவிடுகிறார்.. 
கைகள் இழந்த நிலையிலும் 
அவர்  செய்யார் சென்று குளித்து (3 கி.மீ. போளூரில் இருந்து) 48 நாட்கள் (அதாவது 3 மண்டலம்)  இந்த சப்தகிரி மலையை வளம் வருகிறார். 
48ம் நாள் முடிவில் குலஸ்திய மகரிஷி கைகள் இரண்டும் திரும்ப பெறுகிறார்.
நரசிம்மரை வேண்டி நிற்க மாயாஜாலம் போல கைகள் இரண்டும் வளர்ந்தது.
இறைவனின் லீலையை நினைத்து புலஸ்திய முன்வரும் ஏனையோரும் மிகுந்தசந்தோஷம் அடைகிறார்கள்.

புலஸ்தியமகரிஷி மூலம் உற்சவ நரசிம்மர் பிரதிஷ்டை செய்ய எண்ணிய நரசிம்மர் அவரின் கனவில் வந்து உற்சவர் சிலை இருக்கும் இடத்தை தெரியப்படுத்தவே 
உற்சவர் கறபூண்டி செய்யாரில் இருப்பதை உணர்த்தவே 
அவ்வாறே புலஸ்தியர் உற்சவ மூர்த்தியை மலையின் கீழே பிரதிஷ்டை செய்கிறார்.

விஜய நகர மன்னர்களின் காலத்தில் இக் கோவில் விரிவாக்கம் கண்டுள்ளது.
ருக்குமணி சத்யபாமா வேணூகோபால் சுவாமிக்கு தனி கோவில் எடுத்தனர்.
 
இக் கோவில் மலை ஏற 840 படிகள் அமைத்தும் கொடுத்தனர்.

மீண்டும் 160  வருடங்களுக்கு முன்
சீனிவாச ராவ் என்பவரின் கனவில் வந்து பெரிய மணி கோவிலுக்கு வாங்கி தர வேண்டும் என சொன்னவுடன் இப்போது கோவிலில் உள்ள மணியை வாங்கி கொடுத்தார்.

இம் மலையில் அன்ன குகை எனும் ஒரு குகை உள்ளது.
இக் குகையில் அச்சுத தாசர்
 ஹரி தாஸ், ஸ்ரீ ஞானாந்த  சுவாமிகள் மற்றும் சித்தர் வினோபா  இங்கே  குகைகளில் தியானம் செய்துள்ளனர்.

இங்கே. இரண்டு நீர் நீரோடைகள்  உள்ளன  ஒன்று மேல் மலையில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் கீழே உள்ள  புலஸ்தியர்  தீர்த்தம். 

கீழே ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

இம்மலையில்
இரண்டு கழுகுகள் என்றும் சுற்றி பறந்த வண்ணம் உள்ளது. இவை
குலஸ்தியர் & புலஸ்திய மகரிஷ ஆவர்..

இருவருமே கழுகுகளாய் மாறி இறைவனை சுற்றுகின்றனர்..

இரண்டு சகோதரர்கள் புலஸ்தியர் மற்றும் குலஸ்தியர் மலையாகவும் உள்ளனர்.
இது சப்தகிரிக்கு  எதிரே உள்ளது 
இம் மலை எதிர் சப்தகிரியாக போற்றப்படுகிறது.

இந்த இடம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அனைத்து பிரார்த்தனைகளுக்கும்  செவிசாய்க்கும் இறைவனை இங்கே தரிசிக்கலாம்.

திரு. சேகர் பட்டாசாரியார் இக்கோவிலின் பட்டர்.
மொபைல்: +91 98423 07594/94430 98358 

காலை  4:30  மணி முதல்  இரவு  8.30.
வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 209km
கும்பகோணத்தில் இருந்து விருத்தாசலம் திருக்கோவிலூர் திருவண்ணாமலை சென்று போளூர் சென்றடையலாம்.