Tuesday, 14 October 2025

யோனி முத்திரை

 யோனி முத்திரை! 

           யோக முத்திரைகள் வரிசையில் இந்த பதிவில் "யோனி முத்திரை" பற்றி சொல்கிறேன்....


யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை "தன்வந்திரி" சித்தர் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்....


"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு

தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்

மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி

மேலான அண்டமொடு புவனஞ்சித்தி

மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி

மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி

பையப்பா யோனி முத்திரயைப் பெற்று

பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

       - தன்வந்திரி வைத்தியம் 1000 


மேலே படத்தில் உள்ளவாறு "யோனி முத்திரை"யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து "றீங்" என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.


          - முத்திரைகள் பற்றிய ரகசிய குறிப்புகளில் இருந்து.....



No comments:

Post a Comment