Saturday, 7 August 2021

அகத்தியர் நாடி வாக்கு 07.08.2021. அகத்தியர் மீண்டும் அவதாரம்.

 *ஜீவ நாடி கேட்கப்பட்ட நாள்* - 07 / 08 / 2021, மதியம் 12.45 மணி 


*அருள் கேட்பவர்* -  தி.இரா . சந்தானம் , கோவை . 9176012104


*நாடி வாசிப்பவர்* - குருஜி இறைசித்தர் , அகத்தியர் ஜீவ அருள் நாடி ஆசிரமம் பொகளூர் , மேட்டுப்பாளையம், கோவை . 9585018295


*ஜீவநாடி வாக்கு கீழ்வருமாறு*


அருவாய் உருவாய் திருவாய் போற்றி 


திருவாய் மலரடி தொழுவாய் போற்றி 


வருவாய் குகனே அருள்வாய் போற்றி 


காவாய் கனகத்திரளே போற்றி 


கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி 


சிரம் தாழ்ந்து வணங்கும் அடியோரின் தேவ தேவனே போற்றி 


சிரம் தாழ்ந்து என் நிலை இறக்கி 


பொதிகைவாழ் அகத்தியன் யானே 


என் மழலை செல்வமே 


யாம் அருள்தனை உரைக்கிறேன் 


கேள் மகனே 


நீ செய்யும்  இந்த தான தர்ம நற்காரியங்களை 


யாம் உற்று நோக்கி கண்டோம் 


மனமகிழ்ந்தோம் என் மகனே 


என் பூரண நல்லாசிகள் உமக்கு 


பிறவியில்லா பெரும் சுடரே 


உன் வாழ்க்கை நிலையை யாம் மாற்றி அமைய  செய்வோம் 


மனம் குளிர்ந்தோம் என் மகனே 


என் அப்பன் வேலவன் உத்தரவு பெட்டி தனிலே 


என் சாதகத்தை இட்டு பூசைகள் பல நடக்குதப்பா 


இப்பூசைகளிலே உமக்கு யாம் உரைக்கிறோம் கேள் 


அன்றுரைத்தோம் , மண்ணில் இருக்கும் சித்தனெல்லாம் இனி விண்ணை நோக்கி வருவானே 


மீண்டுமோர் அவதாரமதை எடுத்து 


இப்பிரபஞ்சத்தில் தர்மம் நிலைக்க செய்வோம் 


சித்தனுக்கு ஆலயங்கள் பல அமையுமப்பா 


நித்திரையில் யாம் சென்று புலன் உணர்த்துவோம் 


அன்றுரைத்தோம் குருவும் நானே குரு தட்சிணாமூர்த்தியும் நானே அகத்தியனும் நானே 


மக்களுக்கு யாம் இந்த பொது வாக்கு தன்னிலே 


சித்தர் ஆலய கைங்கர்யங்களை ஏகி கலந்து கொண்டு 


கர்மங்களை அகற்றவே யாம் புலன் உணர்த்தினோம் 


(அதற்காக தான் அந்த 1008 காணிக்கை வைக்கப்பட்டது . எல்லோரும் சித்தர் ஆலயங்களுக்கு காணிக்கை அளித்து பங்கு வேண்டும் என்று நாம் புரிந்து கொள்கிறோம்)


பின்பு ,


ஆலய பணியதை மேற்கோள் என் மகனே 


நாம் நியூலை கொள்ளும் இடம் தன்னிலே எமக்கு வட்ட நிலவு வடிவிலே எமக்கு ஆலயம் அதை அமை 


பின்பு 


த்யான நிலையை கூம்பு வடிவிலே செய்யப்பா 


பின்பு 


நிலையிலே தானமதை சத்திரத்தை அதை ஏற்படுத்து 


பின்பு 


அன்றுரைத்தேன் தாய் உமையவள் சக்தி வடிவேலை  நிலைநிறுத்து , 


யந்திரமதை கீழ் பிரதிஷ்டை நிலை செய்து 


பின்பு 


யாம் பக்தர்கள் தனை பார்க்கவே 


யாம் சிலை அமைக்க சொன்னோம் 


பின்பு 


நுழை வாயில் தனிலே 


ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை மேலே நிறுத்து 


இரு திசைகளிலும் கும்பமதை நிறுத்து 


யாம் காப்போம் தூயவனே மனம் தளராதே 


உனக்கு பெரும் தொகையது வந்து சேரும் அப்பா 


உன் சிதறிய செல்வங்கள் அத்தனையும் கிட்டும் 


வாழ்வில் நிலை பெறுவாய் 


நீ தான தர்ம காரியங்கள் அதை மேற்கொள் 


பின்பு 


இனி வரும் நாட்களிலே இந்த துர் பீடை அது விட்டு ஒழிந்து 


நாட்டில்  மகிழ்ச்சி நிலை பெருகுமப்பா 


சித்தரெல்லாம் இனி வருவான் 


தானம் செய் , த்யானம் செய் என் மகனே 


இப்பீடத்து ஆசான் வழி நின்று ஆலய பணி யதை முன்னின்று செய் 


யாம் உன் வம்ச நிலைகளை முற்றிலும் காப்போம் 


தேகம் சீர் பெருமடா 


வாழ்வில் நிறைவு பெறுவாய் 


முற்றே


No comments:

Post a Comment