கேதார்நாத் தரிசனம்
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Saturday, 31 July 2021
Thursday, 29 July 2021
கேரளா சங்கணசேரி ஊரில் உள்ள சிவன் ஆலயத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்துள்ளது
கேரளா சங்கணசேரி ஊரில் உள்ள சிவன் ஆலயத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்துள்ளது
Tuesday, 27 July 2021
கயிலாய மலையின் உச்சி எப்படி இருக்கும்
***********************************
கயிலாய மலை உச்சி
************************************
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
Thursday, 22 July 2021
குரு பூர்ணிமா, குரு மகிமை
ஈச்வரன் என்று தனியாக ஒருவனை வைத்துக்கொண்டு உபாஸிக்காமல் குருவையே அப்படி உபாஸிப்பதற்கு ஆதரவாகச் சில காரணங்கள் உண்டு.
முக்யமாக, ஈச்வரன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவனை மஹான்களின் வர்ணனைகளிலிருந்து பாவனையாகத்தான் மனஸில் கல்பித்துப் பார்க்க முடிகிறது. குருவோ கண்ணுக்குத் தெரிகிறார். அவரோடு நாம் கலந்து பழக முடிகிறது. நேருக்கு நேர் கேட்டுக்கொள்ள முடிகிறது. ஈச்வரனால் நமக்கு நடக்கவேண்டிய கர்ம நாசம், ஞான ப்ராப்தி எல்லாம் இவரே நடத்திக் கொடுக்கிறார்.
நாமே நேரே ஈச்வரனிடம் ப்ரார்த்தித்துக்கொண்டால் அவன் நமக்குச் செய்கிற அநுக்ரஹத்தைவிட ஜாஸ்தியாகவே நாம் அவனை ப்ரார்த்திக்காமல் குருவையே ப்ரார்த்திக்கும்போது, அந்த குருவின் மூலம் பெற்று விடலாம்! எப்படி என்கிறீர்களா? நாமே நேராக ஈச்வரனிடம் ப்ரார்த்திக்கிறோம் என்றால், நம்முடைய ப்ரார்த்தனா சக்தி எவ்வளவு? ரொம்பக் கொஞ்சந்தான். மனஸின் ஆழத்திலிருந்து தீவிரமாகப் பிரார்த்திக்கவே நமக்குத் தெரியாது. அதோடு நமக்கேதான் நாம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். நம்முடைய ஸொந்த நலனையேதான் ஈச்வரனிடம் வேண்டுகிறோம். இதற்கு அவன் செவி சாய்க்க மாட்டானென்றில்லை. ஆனாலும் நம்முடைய அல்ப ப்ரார்த்தனா பலத்தில் நமக்காகவே நாம் வேண்டிக் கொள்வதற்கு அவன் பெரிசாக எப்படி ஒரு பலன் தருவான்? ஆனால் நாம் குருவே எல்லாம் என்று இருந்து விட்டால், ‘அவர் இந்தக் குழந்தைக்காக நாம்தான் ப்ரார்த்திச்சுக்கணும்’ என்று ஈச்வரனிடம் நம் சார்பில் ப்ரார்த்தனை செய்வார். அவர் நம்மைப்போல ஈச்வரனை நேரில் தெரிந்துகொள்ளாதவரில்லை. அவருடைய ப்ரார்த்தனா சக்தி மிகவும் பலமானது. நமக்கு எட்டாக்கையனாக இருக்கும் ஈச்வரனுக்கு ஸமீபத்திலேயே இருப்பவர் அவர். தன்னுடைய வலுவாய்ந்த பிரார்த்தனா சக்தியோடு அவர் நமக்காக அவனிடம் வேண்டிக்கொண்டு, எடுத்துச் சொல்லி கேட்டுக் கொள்கிறபோது அவன் அதை நிச்சயம் கேட்கத்தானே கேட்பான்? நாம் எக்கேடு கெட்டுப் போனாலும் குருவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அப்படியிருந்தும் அவர் பரம கருணையோடு நமக்கு உபதேசம் பண்ணி, நம் அழுக்கைப் போக்குவதற்காகப் பாடுபட்டு, ஸ்வய நலமே கொஞ்சங்கூடக் கலக்காமல் நம் பொருட்டாகவே ஈச்வரனிடம் வேண்டிக் கொள்கிறாரென்றால் அதற்கு வால்யூ ரொம்ப ஜாஸ்திதானே? நம்முடைய ஸாதனை, ப்ரார்த்தனை ஆகியவற்றுக்காக ஈச்வரன் ஏதோ கால் பங்கு, வீசம் பங்கு அநுக்ரஹம் பண்ணுவானென்றால், நமக்காக குரு ப்ரார்த்திக்கும்போது முழுப் பங்கும் பண்ணிவிடுவான். லௌகிகத்திலேயே பார்க்கிறோமோல்லியோ? கவர்னர், மந்திரி மாதிரி ஒருவரால் நமக்கு ஒரு கார்யம் நடக்குமென்றால் நாமே அவரிடம் போய் நிற்க முடியுமா? நமக்குப் பேட்டி கிடைக்குமா? அவரிடம் சாய்கால் உள்ளவராக இருக்கிற நமக்குத் தெரிந்த ஒருவரிடம் நாம் போய் முறையிட்டாலே போதுமானதாக இருக்கிறதல்லவா? இவருடைய சிபாரிசுக்காகவே கவர்னர் நம்மைப் பார்க்கக்கூடப் பார்க்காமல் நமக்கு வேண்டிய கார்யம் ஆவதற்கு உத்தரவு போட்டு விடுகிறாரல்லவா?
ஈச்வரனிடம் நாம் போகவேண்டாம். நாம் போய் நடத்திக்கொள்வதைவிட இன்னம் நூறு பங்கு நன்றாக நமக்கு அவனிடம் சொல்லி நடத்திக் கொடுப்பதற்காக இருக்கிற குருவிடம் போய் அவரிடமே முறையிட்டுவிட்டால் போதும்.
நாமாக நம் கர்மாவைக் கழித்துக்கொள்வது கஷ்டம். குருவுக்கு ஈச்வரன் கொடுத்திருக்கிற விசேஷ சக்தியால் அவர் நம் கர்மாவிலே எவ்வளவோ பங்கு கழிந்து போவதற்கு ஸஹாயம் செய்வார். தம்முடைய தபோ சக்தியைக் கூட அதற்குச் செலவழிப்பார். பரம கருணாமூர்த்தியாகவும் த்யாகியாகவும் இருக்கப்பட்ட அவர் ஓரளவுக்குத் தாமே கூட நம் கர்மாவை வாங்கிக்கொண்டு அநுபவித்து, நமக்கு பாரத்தைக் குறைப்பார். இப்படி அவர் தம்மை வருத்திக் கொண்டுதான் நமக்கு ஈச்வரனிடமிருந்து உய்வு பெற்றுத்தரவேண்டுமென்றில்லை. அவர் அவனிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பவரானால் ஸ்வாதீனமாகவே அவன்கிட்டே, “இவனுக்காக இந்த அநுக்ரஹம் பண்ணு. பண்ணியே ஆகணும். (குரலை உயர்த்தி மிரட்டுவது போல:) என்ன, பண்றயா, இல்லையா?” என்பார். “ஆஹா, பண்றேன்” என்று ஈச்வரனும் அவர் சொன்னபடியே செய்து விடுவான்.
Wednesday, 21 July 2021
சிரார்த்த விதிகள்
பித்ருக்களுக்கு செய்யும் ச்ராத்தத்தில் முக்கியமாக இந்த ஏழு பொருட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
1. உச்சிஷ்டம் நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம்.
ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா:
உச்சிஷ்டம் என்றால் எச்சில் பொருள்.பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் ஊட்ட செய்து ,பால் சுரந்தபின் கன்றை விலக்கி விட்டு மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது.இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது.பசும்பால் கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும்.🙏
2 . சிவ நிர்மால்யம்
தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவபெருமான் தனது சிரஸ்ஸில் தாங்கி கொண்டார் .அதன்பிறகே ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலமாகையால் சிவநிர்மால்யம்.
சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷித்து பின்னர் ச்ராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம்🙏
3 . வமனம்
என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்🙏
4 . ஶ்வேத பர்ப்படம்
ஶ்வேதம் என்றால் வெண்மை ,பர்ப்படம் என்றால் பட்டுதுணி ,பித்ருக்களுக்கு வெண் நிறமுடைய பட்டுதுணி மிகவும் ப்ரியம்.
ஆகவே கர்த்தா ச்ராத்தத்தின் போது வெண்நிற பட்டு வேஷ்டி கட்டிகொள்வதும் ச்ராத்தத்தில் சாப்பிடுபவர்க்கு வெண்பட்டு தந்து அதை கட்டிக்கொண்டு சாப்பிடச்செய்வதும் பித்ருக்களுக்கு ஸந்தோஷத்தையும் சிராத்தம் செய்பவருக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத்தரும்.🙏
5 . தௌஹித்ர
என்றால் பேரன் ,பேத்திகள். யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய பெண்ணின் குழந்தைகளான பேரன் பேத்திகள்.இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள்.
மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் பெரியோர்களால் கூறப்படுகிறது.அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் போட்டு சாப்பிடசெய்து மறுநாள் பிரதமை அன்று அம்மாட்டிலிருந்து கறந்தபாலை தயிராக்கி அதை வெண்ணையாக்கி அதை நெய்யாக காய்ச்சினால் அதுவே தௌஹித்ர எனப்படும் பொருள்.அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரியமானது🙏
6.குதப என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம்.பகல் சுமார் 11.30க்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம்.கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல் -முடித்தல் அதிகமான பலனை தரும்.🙏
7.திலா
என்றால் கருப்பு நிறத்தில் உள்ள எள். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும்.
வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.கருப்பு நிற எள் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை தரும்.ஆகவே ச்ராத்தத்தில் தாராளமாக உபயோகிக்கலாம்.
ஆகவே மேற்கூறிய
1.பசும்பால்
2.கங்கா ஜலம்
3.தேன்
4.வெண்பட்டு
5.புத்துருக்கு நெய்
6.குதப காலம்
7.கருப்பு எள்
இந்த ஏழு பொருட்கள் ச்ராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்து செய்வது நிறைவான பலனை தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்🙏
சுந்தர காண்டம்
https://drive.google.com/folderview?id=18ixvkjBn_8icB30f88j_pQw1L0wNMJCs
சுந்தர காண்டம்
Sunday, 18 July 2021
சர்வ நதி ரஜஸ்வலை
சர்வ நதி ரஜஸ்வலை. .அந்த மூன்று நாட்கள் வரும்போது யாரும் புண்ணிய நதிகளில் ஸ்நானாதிகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் ருனத்ரயமான தேவபித்ருரிஷிகளுக்கு உத்தேசித்து செய்யப்படும் எந்த கார்யங்களுக்கும் இம்மாதிரி நேரங்களில், மூன்று நாட்களுக்கு, நதிகளிலிலிருந்து தீர்த்தம் எடுத்து உபயோகப்படுத்தக் கூடாது
Thursday, 15 July 2021
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன
*ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன என்று சிந்திப்போம்*
பிறப்பே எடுக்காத [ *ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு* ] சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
ஆர்த்ரா = திருவாதிர்சி
தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;
பரதனுக்கு - பூசம்;
லட்சுமணனுக்கு -ஆயில்யம்;
சத்ருக்னனுக்கு- மகம்;
கிருஷ்ணனுக்கு - ரோகிணி;
இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.
*ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?*
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்
ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படு
கிறது.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன்.
ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன்.
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
பயணம்🚆🚆🚆 குறுகியது
*பயணம்🚆🚆🚆 குறுகியது!*
🪶ஒரு சிந்தனையைத் தூண்டும் கதை!
🌻 ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில், ஒரு இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவளது ஏராளமான பைகளால் இடித்த படி அமர்ந்தாள்.
🌷வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும், அந்தப் பெண் தன் பைகளால் இடித்தபோது ஏன் எரிச்சலாகவில்லை என்று கேட்டார்.
🌼அந்த வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: " *நம் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன்.* இந்த பதில் தங்க எழுத்துக்களில் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால்நாங்கள் ஒன்றாக செய்யும் பயணம் மிகவும் குறுகியதாகும்.
🕸️இந்த உலகில் நம்முடைய நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான மனப்பான்மை ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது ஒரு அபத்தமான செயல். நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறது.
🌿 யாராவது உங்கள் இதயத்தை உடைத்தார்களா? அமைதியாக இருங்கள். பயணம் மிகக் குறைவு!
🍀யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்கள், ஏமாற்றினார்கள் அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். அழுத்தம் வேண்டாம்! பயணம் மிகக் குறைவு!
🌱 யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தா ல், அதை புறக்கணிக்கவும். பயணம் மிகக் குறைவு!
☘️ உங்களுக்குப் பிடிக்காத ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கருத்துத் தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னிக்கவும் மறக்கவும். பயணம் மிகக் குறைவு!
🪴 யாராவது உங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், எங்கள் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்!
🌹 எங்கள் பயணத்தின் தூரம் யாருக்கும் தெரியாது. அதன் நிறுத்தம், அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது .நமது பயணம் குறுகியதாகும்!
🌺 நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் நன்றி பாராட்டுவோம்.
🍃 நாம் மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம்.
🌸 பதிலுக்கு, நன்றியும் மகிழ்ச்சியும் பரிசளிப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் பயணம் மிகவும் குறுகியதாகும்!
🌈 உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நமது பயணம் மிகக் குறைவு ...! 🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
Wednesday, 14 July 2021
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
ழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.
தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)
வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)
முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)
நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே
வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)
பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)
பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட
பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)
சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து
செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)
Tuesday, 13 July 2021
சுழுமுனை தியானம்
சுழுமுனை தியானம்
நன்றாக கால்களை மடித்து நேராக அமர்ந்துகொள்ளுங்கள். கண்களை மூடிகொள்ளுங்கள்.மனதை அண்ணாக்கிற்கு நேரே சுழுமுனையில் நின்று, நாக்கை மேலண்ணத்தில் அழுத்தி, பின் தொண்டையில் காற்றை அழுத்தி சுழுமுனையை நோக்கி செலுத்தவும்.
மனதை அழ்ந்த அமைதியில் வைத்திருக்கவும். காற்றின் அசைவை மேல்நோக்கி மனதையும் சேர்த்து அண்ணாகிற்கு மேல் செலுத்தவும். சிறுதுகாலம் சென்றபெறகு பலபல வண்ணங்கள் தோன்றும். பின் கடைசியாக ஒரு சிருஒளி வெண்மை நிறத்தில் தோன்றும் பின் அதுவே வளர்ந்து அளவில்லாத எல்லையிலததாக மாறிவிடும்.
இப்போது கண்ணை மூடினால் இருட்டு தெரியாது வெறும் வெளிச்சம் தான் தெரியும். பின்னர் அந்த வெள்ளை ஒளிக்குள் ஒரு பொன்னிற ஒளி தோன்றும். அதுவும் எல்லையில்லாமல் வளர்ந்துவிடும். பின்னர் அந்த பொன்ஒளிகுள். ஒரு செவ்வொளி தோன்றும். அந்த ஒளி எங்கும் எல்லையில்லாமல் வளர்ந்து நிக்கும். பின் அந்தஒளிக்குள் ஒரு ஒளி உருவாகும் அது வந்து வந்து செல்லும்.
இதுவே நடராஜர் நடனம் ஆகும். பொன்னமம்பலம் மேடையில் நடராஜர் நடனம் நடக்கும். இப்போது நாம் ஒரு பொருளாகவும் செவ்வொளி ஒரு பொருளாகவும் இறுக்கும். பின்னர் நீ நான் என்று வேறுபாடு இல்லாமல் அந்த பொன்னம்மபலமே மிஞ்சும். (அட்டகம் -- தந்தனை தன் மயமாக்கி ....). பின்னர் எல்லையில்லா ஆனந்தம் உடலில் பாயும். வானவேடிக்கை நடக்கும் ஆயிரதுஎட்டு தாமரை இதழ் மேல் சிவலிங்கம் தோன்றி மறையும்.
அதன் பின்னர் இப்போது கூடவே சங்கு ஓசையும் பின்னர் சலங்கை ஓசையும் கேட்கும். பின்னர் அமைதி நிலவும். பின்னர் பொன்னம்பலத்தில் ஒரு ஓட்டை ஏற்படும் அதுதான் சொர்கவாசல் திறப்பதாகவும். ( காகபுஜண்டர் பாடல் -- கொல்லிமலை ஏறி குகையை கண்டு குகையில் இருந்து தவமே செய்தால் ....) . இப்போது உள்ளே செல்லும் காற்று வெளியே வராது.
இடகலை, பிங்கலை மற்றும் பொன்னம்பலம் மூன்றும் ஒன்றாகிவிடும் இதுவே முச்சுடர் ஆகும். ( அகத்தியர் பாடல் -- ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றது ஆகும் பின்னர் தணலாய் கீழ் நோக்கி பாயும் .....) கனல் போல் உடலில் வெப்பம் பரவும். உடல் வெப்பத்தில் வேதிக்கபடும். பின்னர் எல்லா காட்சிகளும் மறைந்து நான் நீ என்ற இரு நிலையும் இல்லம்மல் போகும்.
இப்போது பத்து திசைகளும் தெரியும் உங்கள் உடல் பற்றிய நினைப்பு மறைந்து எல்லையில்லாமல் நாமே விரிந்து விளங்கும். பின்னர் அந்த நிலையும் போய் இப்போது இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. இதுவே சும்மா இருக்கும் இடமாகும். அந்த நிலையில் எவ்வளவு நேரம் நீடித்தது என்றும் தெரியாது.
கண்ணை திறந்தால் சிலமணி நேரம் கடந்து இருக்கும். இதுவே அருட்பெரும் ஜோதி அனுபவமாகும். இந்தநிலையை அடைந்த பிறகே அறிவு துலங்க ஆரம்பிக்கும். தன்னை பற்றிய அறிவும், உலகத்தின் இயக்கம் மற்றும் இறைநிலை பற்றிய அறிவும் விளங்கும். இதன் பின்னர் ஞான பாதை துலங்கும். அதன் பின்னர் என்னவாகும் என்று ஆண்டவர் அறிவித்தபின் எழுதுகிறேன்.
கண்களின் ஒளி --- நட்சத்திர ஒளி .
மனதின் ஒளி --- வெள்ளை ஒளி .
ஜீவனின் ஒளி --- பொன் ஒளி.
ஆன்மாவின் ஒளி --- செவ்வொளி
ஆன்மாவுக்குள் -- பதியாக அருட்பெரும்ஜோதி ஆண்டவர் விளங்குகிறார். நானே கடவுள்
என்று சொல்லுவதை விடுத்தது என்னுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கிறார் என்பதை
உணர்ந்து தத்துவ நிவர்த்தி செய்து அவரோடு கலப்பதே சித்தி நிலையாகும்.
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
Thursday, 8 July 2021
பத்து நிமிடங்களில் 274 சிவ ஸ்தலங்களின் கோபுர தரிசனம் கண்டு கோடி புண்ணியங்கள் பெறுவோம்
பத்து நிமிடங்களில் 274 சிவ ஸ்தலங்களின் கோபுர தரிசனம் கண்டு கோடி புண்ணியங்கள் பெறுவோம்
மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
மதுரை மீனாட்சி அம்மன் போற்றி 108 மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப்பெற்றிருக்கும் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள் சொல்லி இன்று 9/7/2021 வெள்ளிக்கிழமை வழிபட்டு வாழ்வில் வளங்கள் பெற்று மகிழ்வோம் !
மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப்பெற்றிருக்கும்
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்:
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20.
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30.
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40.
ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50.
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி 60.
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி 70.
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80.
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90.
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100.
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108
Tuesday, 6 July 2021
ஆலய பணிகள் 07.07.2021
நமது அகத்தியர் ஆலயத்தில் பணிகள் விரைவாக நடைபெற்று கொண்டு உள்ளன
மிகுந்த பொருட்செலவில் மிகச் சிறந்த முறையில் சுற்றுப்புற சுவர் எழுப்பப்பட்டு வருகிறது
பொதுவாக சுற்றுப்புற சுவர் இவ்வளவு செலவு செய்து ஏற்படுத்துவது கிடையாது
ஆனால் நாம் அறிந்த வகையில் பிற்காலங்களில் இங்கே நிறைய மழை பெய்து தண்ணி ஓடி வரும் நிலை என்பது உள்ளது
அப்போது நிச்சயமாக இங்கே சுற்றுப்புறத்தில் நிறைய வயல்கள் உள்ளதால் மழை பெய்யும் போது பல திசைகளிலும் இருந்து நீர் ஓடி வரும் நிலை உள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு அங்கே சுவர்கள் சரிந்து விழும் அபாயம் நிச்சயமாகவே உள்ளது
எனவே இங்கே சுவர் அமைக்கும் போது எந்த அசம்பாவிதமும் பிற்காலத்தில் ஏற்படாத வகையில் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்பட்டு காங்கிரீட் என்ற முறையில் போடப்பட்டு சுமார் 3 லட்சம் அளவுக்கு இரும்பு கம்பிகள் கொண்டு கம்பி கட்டப்பட்டு கான்க்ரீட் போடப்பட்டு கட்டப்படுகிறது
அப்போதுதான் ஒரு காலத்தில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சுவர் விழாமல் உறுதியாக நிற்கும்
இப்போது பில்லர்கள் போடப்பட்டு கான்கிரீட் பெட் முழுமையாக போடப்பட்டு நுழைவு வாயிலில் மிக அற்புதமான ஒரு அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்து கொண்டு வருகிறது
இன்று நம்முடைய ஆலய பணியில் கட்டுமான கூலி மற்றும் பொருட்கள் ஆகிய செலவுக்காக நமது ஆலய நிதியிலிருந்து ரூபாய் 50,000 நமது குருஜியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இன்னும் 10 நாட்களில் சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணி நிறைவடைந்து நிற்கும்
மேலும் பல அன்பர்கள் நமக்கு பொருளாக சிமெண்ட் மூட்டை மணல் ஜல்லி ஆகியவை வாங்கி கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்
மேலும் பல அன்பர்கள் ரொக்கமாக நன்கொடை அளித்த வண்ணமாக இருக்கிறார்கள்
அனைத்தையும் நான் சேகரித்து வைத்துள்ளேன்
இந்த 50,000 என்று கொடுப்பது போக மேலும் பாக்கி இரண்டு லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்கும்
மேலும் நமது அகத்தியர் ஆலயத்திற்கு மேற்கூரை அமைக்க பாம்பே ஓடுகள் எனப்படும் முறையில் அமைக்கப்பட உள்ளது
அந்த ஓடுகள் மொத்தம் அது மட்டுமே 6 லட்ச ரூபாய் வரை தேவைப்படும்
மேலும் தரை தளம் அமைக்க வேண்டும்
சுமார் 25 அடி உயரத்தில் இந்த மேற்கூரை மிக அகலமாக 4 ஆயிரம் சதுரஅடி அளவில் அமைக்கப்படும்
அதற்குள்ளே வெறும் தர்ப்பையால் குடில் அமைக்கப்படும் அகத்தியருக்கு குருநாதருக்கு என்று தனித்தனியே தர்பை கூடங்கள் அமைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
படிப்படியாக இந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும் . முதலில் இந்த சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் அடுத்த பணி ஆரம்பமாகும்
இந்த வாரம் சென்று ஜீவநாடியில் அகத்தியரிடம் அருள் கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன்
அனைவரும் கைகோர்த்து ஆலயப் பணியில் தத்தமது பங்களிப்புகளை கொடுத்து உதவி புண்ணியத்திற்கு ஆளாகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தி. இரா. சந்தானம்
Sunday, 4 July 2021
பிரபஞ்ச ஒலிகள்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள் இயங்கும் போது ஏற்படும் ஒலி. இந்த காணொளியை வெளியிட்டது நாஸா ஆய்வு கழகம். (அமெரிக்கா). (Sound of the Universe planets, Sun black hole collision universe).
👉👉👉👉👇👇👇👇
கடுக்காய்
********************************
*இன்றைய ஆரோக்கிய குறிப்பு*
********************************
#என்றும்_இளமையோடு_வாழ #_எளிய_வழி கடை பிடித்தால் போதும்
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.
உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.
நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.
எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.
நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.
துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"
காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு-
இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.
கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"
🌷🌷🌷
🌷🌷🌷
சூரிய துதி
சிவ சிவ
வாழ்க வளமுடன்
ஓம் சிவாய நம
🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻
*சூரிய பகவான் துதி*
: விண்ணில் பல நட்சத்திரங்கள், கோள்கள் இருந்தாலும் பூமிக்கு ஒளி மற்றும் அதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலை தருகின்ற ஒரு கோளாக அல்லது நட்சத்திரம் சூரியன் இருக்கிறது. சூரியனின் ஆற்றல் எத்தகையது என்பதை பழங்காலத்திலேயே உணர்ந்த உலகின் பல நாகரீக மக்கள் சூரிய வழிபாட்டை செய்து வந்திருக்கின்றனர். தினந்தோறும் காலையில் சூரியனை வழிபடுவது சிறப்பானதாகும். அப்படி வழிபடும் போது சூரியனின் அருளால் பல நன்மைகளை பெற துதிக்க வேண்டிய சூரிய பகவான் துதி இதோ.
*சூரிய பகவான் துதி*
*காசினி இருளை நீக்கும்* *கதிரொளியாகி எங்கும்*
*பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை* *நல்கும்*
*வாசி ஏழுடைய தேர்மேல்* *மகாகிரி வலமாய் வந்த*
*தேசிகா எனைரட்சிப்பாய்* *சேங்கதிரவனே போற்றி*
*சூரியனின் தன்மைகளை* *கூறும் அற்புத தமிழ் துதி* *இது. இந்த துதியை தினமும் காலையில்* *எழுந்து*, *குளித்து முடித்ததும்* *சூரியனை நமஸ்கரித்தவரே 10 முறை* *துதிப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து* *குளித்து முடித்ததும், கிழக்கு திசையை பார்த்தவாறு நின்று சூரியன் உதிக்கின்ற போது இத்துதியை 10 அல்லது 27 முறை துதித்தால் உடல் மற்றும் மனோபலம்**பெருகும்* உடலில் இருக்கும் நோய்கள் நீங்கும். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கச் செய்யும், வியாபாரம் மற்றும் தொழில்கள் மேன்மையடைந்து லாபங்கள் பெருகும். மக்கள் செல்வாக்கு உண்டாகும்.
விண்ணில் இருக்கும் அனைத்து கோள்களும் பல கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்தே தோன்றியதாக நவீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அறிவியல் உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த முன்னோர்கள் பாரதத்தின் பாரம்பரிய மதமான இந்து மதத்திலும், யோக காலையில் சூரிய நமஸ்காரம் என்கிற முறையிலும் சூரிய பகவானின் வழிபாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் நவகிரகங்களின் நற்சக்திகளும் நமக்கு கிடைக்கப் பெறுமாறு செய்தனர்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்ரீ *சூரிய* *பகவானுக்கு* *உகந்த* *108* *போற்றி* இன்று 4/7/2021 ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளோம்
ஞாயிற்றுக்கிழமை காலையில் பொதுவாக சூரிய உதயமானதும், சூரிய பகவானுக்கு உகந்த இந்த போற்றியை சொல்லி வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
ஸ்ரீ *சிவசூர்யநாராயணஸ்வாமியே* நின் *திருவடிகள்* *சரணம்*
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயமானதும், சூரிய பகவானுக்கு உகந்த இந்த போற்றியை சொல்லி வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
சூரிய பகவானுக்கு உகந்த 108 போற்றி
1.ஓம் அதிதி புத்ரனே போற்றி
2.ஓம் அளத்தற்கரியனே போற்றி
3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி
4.ஓம் அருணன் சோதரனே போற்றி
5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
7.ஓம் ஆண் கிரகமே போற்றி
8.ஓம் ஆதிவார நாதனே போற்றி
9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
11.ஓம் ஆன்மாவே போற்றி
12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
13.ஓம் இருள் நீக்கியே போற்றி
14.ஓம் இயக்க சக்தியே போற்றி
15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
16.ஓம் உக்கிரனே போற்றி
17.ஓம் உஷா நாதனே போற்றி
18.ஓம் உவமைப் பொருளே போற்றி
19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
20.ஒம் உத்திரநாதனே போற்றி
21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
22.ஓம் என்பானவனே போற்றி
23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி
24.ஓம் எழுபரித் தேரனே போற்றி
25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
29.ஓம் ஓராழித்தேரனே போற்றி
30.ஓம் ஓய்விலானே போற்றி
31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
32.ஓம் கதிரவனே போற்றி
33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
34.ஓம் களங்கமிலானே போற்றி
35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி
37.ஓம் கனலே போற்றி
38.ஓம் கண்ணின் காவலே போற்றி
39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
42.ஓம் காயத்ரி தேவனே போற்றி
43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
44.ஓம் காலக் கணக்கே போற்றி
45.ஓம் காய்பவனே போற்றி
46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
49.ஓம் கிரக நாயகனே போற்றி
50.ஓம் கிருபாகரனே போற்றி
51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி
52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
55.ஓம் ஞாயிறே போற்றி
56.ஓம் ஞாலக் காவலே போற்றி
57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
59.ஓம் சாட்சித் தேவனே போற்றி
60.ஓம் சமரிலானே போற்றி
61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி
62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
63.ஓம் சிரஞ்சீவியே போற்றி
64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி
66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
68.ஓம் செம்மேனியனே போற்றி
69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி
71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
72.ஓம் சூலாயுதனே போற்றி
73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி
74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
76.ஓம் தாமிர உலோகனே போற்றி
77.ஓம் தூயவனே போற்றி
78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
79.ஓம் நடுவிருப்போனே போற்றி
80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி
81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி
82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
84.ஓம் நாடப்படுபவனே போற்றி
85.ஓம் நீதிதேவனே போற்றி
86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
87.ஓம் பகற்காரணனே போற்றி
88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
89.ஓம் பரஞ்சோதியே போற்றி
90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி
91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
92.ஓம் பிரபாகரனே போற்றி
93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி
95.ஓம் மல நாசகனே போற்றி
96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
97.ஓம் மயில்வாகனனே போற்றி
98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
99.ஓம் முதல் கிரகமே போற்றி
100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி
101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி
102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
105.ஓம் விடியச் செய்பவனே போற்றி
106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
107.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி
108.ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!
ஸ்ரீ சிவசூர்யநாராயணஸ்வாமியே நின் திருவடிகள் சரணம்
Saturday, 3 July 2021
இந்த அதிசயத்தை பாருங்கள்
அவர் யார் என்று தெரியவில்லை.
எத்தனை முறைதான் ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை மட்டும் உங்களால் அடையவே முடியவில்லையா? மந்திரத்தின் பலனை உடனே அடைய என்ன செய்வது
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
**எத்தனை முறைதான் ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை மட்டும் உங்களால் அடையவே முடியவில்லையா? மந்திரத்தின் பலனை உடனே அடைய என்ன செய்வது?**
சில பேரது நாக்கு பொல்லாத நாக்கு, என்று சொல்லுவார்கள். அவர்கள் வாயால் எதை சொன்னாலும் அது அப்படியே பலித்துவிடும். நமக்கு எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்போனால், ‘உன் வாயால் எதையும் சொல்லி விடாதே, கருநாக்கு! அப்படியே பலித்துவிடும் என்பார்கள் அல்லவா?’ நாக்கிற்கு வாக்கு வன்மை உண்டு. சில பேருக்கு அந்த நாக்கில் இருக்கும் வாக்குவன்மை, சக்தி வாய்ந்ததாக இருக்கும். சில பேருக்கு நாக்கில் இருக்கும் வாக்குவன்மை சக்தி குறைவாக இருக்கும். சில பேர் சில மந்திரத்தை உச்சரிக்க தொடங்கிய நாள் முதலே அந்த மந்திரத்திற்கு உண்டான பலனை அடைய தொடங்கிவிடுவார்கள். சில பேரால் மட்டும் எத்தனை முறைதான் மந்திரத்தை உச்சரித்தாலும் சரி, 1008 முறை அந்த மந்திரத்தை உச்சரித்தாலும் அதற்கான பலனை அடைய முடியாது. இப்படிப்பட்டவர்கள் முதலில் அவர்களுடைய நாக்கை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
நாக்கை சுத்தம் செய்வது என்றால் என்ன? தினம்தோறும் எல்லோரும் பல் தேய்க்கும் போது நம்முடைய வாயை சுத்தம் செய்வோம். நம்முடைய நாக்கையும் சுத்தம் செய்வோம். அது சுத்தம். இது சுத்தி. உங்களுடைய நாவை சுத்தி செய்து விட்டால் போதும். நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்திற்கு உடனடி பலனை பெற்று விடலாம். நாக்கை சுத்தி செய்வது எப்படி?
அன்றாடம் நாம் எழுந்ததும் காலையில் பல் தேய்க்கும் வழக்கத்தை வைத்திருப்போம். பல் தேய்த்து முடித்த பின்பு, வில்வ இலை, விபூதி பச்சை இலை இந்த இரண்டு இலைகளையும் உங்களுடைய வாய்க்குள் போட்டு மென்று அதிலிருக்கும் உமிழ் நீரை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இலையை கீழே துப்பி விடலாம். ஒரு நிமிடம் இந்த இலைகள் உங்களுடைய நாவில் படும்படி இருந்தாலே போதும்.
https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9
உங்களுடைய நாக்கு சுத்தி அடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த வில்வ இலை பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கடைகளிலும் கிடைக்கும். விபூதி பச்சிலையை நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். கட்டாயம் கிடைக்கும். விபூதி பச்சை இலை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
விபூதி பச்சை இலைக்கு பதிலாக துளசி இலைகளை பயன்படுத்தலாம். அருகம்புல்லை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பரிகாரத்தை கட்டாயம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். இந்த நாட்களில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ இரண்டு இலைகளை எடுத்து வாயில் போட்டு மென்று, உமிழ் நீரை விழுங்கி விட்டு அந்த இலையை துப்பி விடுங்கள்.
இந்த இலைகளை வாயில் வைத்துக் கொண்டிருக்கும்போது எந்த ஒரு மந்திரத்தையும் நாம் உச்சரிக்க கூடாது. சாதாரணமாகத்தான் இருக்க வேண்டும். இந்த பரிகார முறையை செய்து விட்டு, அதன் பின்பு நீங்கள் எந்த மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கு உண்டான முழு பலனையும் உங்களால் அடைய முடியும். மந்திரங்கள் பலிக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நம்முடைய நாக்கு சுத்தி இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். அந்த நாக்கை சுத்தி செய்து விட்டாலே போதும்.
https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9
மந்திரங்கள் பலன் அளிப்பதோடு இந்த இலைகளின் உமிழ்நீரை நாம் விழுங்குவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நன்மை ஏற்படும். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. நம்முடைய நாவில் இருந்து வரக்கூடிய எதிர்மறை வார்த்தைகள், வாயிலிருந்து வீசக்கூடிய துர்நாற்றம், போன்ற பல பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த பரிகாரம் நமக்கு கொடுக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.
🕎*குறிப்பு *🕎
*குருப்பு 1 முதல் 103 குருப்புகளிலும் ஒரே பதிவு தான் வரும். ஏற்கனவே இனைந்தவர்கள் மறுபடியும் இனைய வேண்டாம். புதிதாக இனைபவர்கள் மட்டும் இனையலாம*
*அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*இறைவனின் பரிபூரண அருளையும், சித்தர்களின் வழிகாட்டுதலின் படி பூஜை முறையும், மற்றும் பல பரிகார முறையை அறிய இனைவீர்*
*குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்*
https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ
*குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு*
*குருப்பு 103*
https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9
*குதம்பை சிவசித்தர் டெலகிராம் குருப்பு*
https://t.me/joinchat/S29dd1ffwrfIXUN3
*பகிர்வு
*Courtesy: unknown
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
இந்த விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!**
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
**இந்த விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!**
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, ‘நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா’ அப்படி என்றுதான் கேட்பார்கள். அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது. இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இது முற்றிலுமான ஆன்மீக ரீதியான உண்மையும் கூட. சிவ பக்தர்களுக்கு இந்த உண்மை தெரிந்ததுதானே!
சரி, அன்றாடம் நாம் இட்டுக்கொள்ளும் இந்த திருநீறை மேலும் பல மடங்கு சக்தி வாய்ந்த நீறாக எப்படி மாற்றுவது என்பதை பற்றிய சிறிய ஆன்மீக தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டு பூஜை அறையில் விபூதியை எப்படி வைக்க வேண்டும்? எப்படி வைத்தால் அந்த விபூதியில் சிவனின் அம்சம் மேலும் அதிகரிக்கும் என்பதை பற்றிய ஒரு அரிய தகவல் உங்களுக்காக.
சிவபெருமானுக்கே உரியது வில்வமரம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதே மரத்தில் இருப்பது தான் வில்வக் காய். அந்த வில்வக்காயை எடுத்து இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, வில்வக்காய் ஓட்டை திருவோடு போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் உள்ளே இரண்டு மூன்று வில்வ இலைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.
https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9
வில்வ காயின் ஓடு, அதன் உள்ளே முதலில் வில்வ இலைகள், அதன் மேலே சுத்தமான திருநீறு நிரப்பி விடுங்கள். முடிந்தால் அதற்கு மேலேயும் இரண்டு வில்வ இலைகளைப் போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது இந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.
சிவனை மனதார வேண்டிக்கொண்டு, நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று இந்த திருநீறு பூசிக் கொண்டு போனாலே போதும். வரக்கூடிய தடைகளும் தடங்கல்களும் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9
இந்தப் பிரசாதம் உங்களுக்கு சிவபெருமானின் கையில் இருந்து பெறப்பட்ட பிரசாதத்திற்கு சமம் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது. அந்த அளவிற்கு மகிமை வாய்ந்து, இந்த வில்வ காயின் ஓட்டில் இருக்கும் இந்த திருநீறு. தினமும் இந்த திருநீறை நெற்றியில் இட்டுக்கொண்டு உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்கள். நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும்
🕎*குறிப்பு *🕎
*குருப்பு 1 முதல் 103 குருப்புகளிலும் ஒரே பதிவு தான் வரும். ஏற்கனவே இனைந்தவர்கள் மறுபடியும் இனைய வேண்டாம். புதிதாக இனைபவர்கள் மட்டும் இனையலாம*
*அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*இறைவனின் பரிபூரண அருளையும், சித்தர்களின் வழிகாட்டுதலின் படி பூஜை முறையும், மற்றும் பல பரிகார முறையை அறிய இனைவீர்*
*குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்*
https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ
*குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு*
*குருப்பு 103*
https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9
*குதம்பை சிவசித்தர் டெலகிராம் குருப்பு*
https://t.me/joinchat/S29dd1ffwrfIXUN3
*பகிர்வு
*Courtesy: unknown
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️