Saturday, 3 July 2021

எத்தனை முறைதான் ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை மட்டும் உங்களால் அடையவே முடியவில்லையா? மந்திரத்தின் பலனை உடனே அடைய என்ன செய்வது

 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉


**எத்தனை முறைதான் ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை மட்டும் உங்களால் அடையவே முடியவில்லையா? மந்திரத்தின் பலனை உடனே அடைய என்ன செய்வது?**







சில பேரது நாக்கு பொல்லாத நாக்கு, என்று சொல்லுவார்கள். அவர்கள் வாயால் எதை சொன்னாலும் அது அப்படியே பலித்துவிடும். நமக்கு எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்போனால், ‘உன் வாயால் எதையும் சொல்லி விடாதே, கருநாக்கு! அப்படியே பலித்துவிடும் என்பார்கள் அல்லவா?’ நாக்கிற்கு வாக்கு வன்மை உண்டு. சில பேருக்கு அந்த நாக்கில் இருக்கும் வாக்குவன்மை, சக்தி வாய்ந்ததாக இருக்கும். சில பேருக்கு நாக்கில் இருக்கும் வாக்குவன்மை சக்தி குறைவாக இருக்கும். சில பேர் சில மந்திரத்தை உச்சரிக்க தொடங்கிய நாள் முதலே அந்த மந்திரத்திற்கு உண்டான பலனை அடைய தொடங்கிவிடுவார்கள். சில பேரால் மட்டும் எத்தனை முறைதான் மந்திரத்தை உச்சரித்தாலும் சரி, 1008 முறை அந்த மந்திரத்தை உச்சரித்தாலும் அதற்கான பலனை அடைய முடியாது. இப்படிப்பட்டவர்கள் முதலில் அவர்களுடைய நாக்கை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.


நாக்கை சுத்தம் செய்வது என்றால் என்ன? தினம்தோறும் எல்லோரும் பல் தேய்க்கும் போது நம்முடைய வாயை சுத்தம் செய்வோம். நம்முடைய நாக்கையும் சுத்தம் செய்வோம். அது சுத்தம். இது சுத்தி. உங்களுடைய நாவை சுத்தி செய்து விட்டால் போதும். நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்திற்கு உடனடி பலனை பெற்று விடலாம். நாக்கை சுத்தி செய்வது எப்படி?


அன்றாடம் நாம் எழுந்ததும் காலையில் பல் தேய்க்கும் வழக்கத்தை வைத்திருப்போம். பல் தேய்த்து முடித்த பின்பு, வில்வ இலை, விபூதி பச்சை இலை இந்த இரண்டு இலைகளையும் உங்களுடைய வாய்க்குள் போட்டு மென்று அதிலிருக்கும் உமிழ் நீரை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இலையை கீழே துப்பி விடலாம். ஒரு நிமிடம் இந்த இலைகள் உங்களுடைய நாவில் படும்படி இருந்தாலே போதும்.


https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9


உங்களுடைய நாக்கு சுத்தி அடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த வில்வ இலை பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கடைகளிலும் கிடைக்கும். விபூதி பச்சிலையை நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். கட்டாயம் கிடைக்கும். விபூதி பச்சை இலை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.


விபூதி பச்சை இலைக்கு பதிலாக துளசி இலைகளை பயன்படுத்தலாம். அருகம்புல்லை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பரிகாரத்தை கட்டாயம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். இந்த நாட்களில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ இரண்டு இலைகளை எடுத்து வாயில் போட்டு மென்று, உமிழ் நீரை விழுங்கி விட்டு அந்த இலையை துப்பி விடுங்கள்.


இந்த இலைகளை வாயில் வைத்துக் கொண்டிருக்கும்போது எந்த ஒரு மந்திரத்தையும் நாம் உச்சரிக்க கூடாது. சாதாரணமாகத்தான் இருக்க வேண்டும். இந்த பரிகார முறையை செய்து விட்டு, அதன் பின்பு நீங்கள் எந்த மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கு உண்டான முழு பலனையும் உங்களால் அடைய முடியும். மந்திரங்கள் பலிக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நம்முடைய நாக்கு சுத்தி இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். அந்த நாக்கை சுத்தி செய்து விட்டாலே போதும்.


https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9


மந்திரங்கள் பலன் அளிப்பதோடு இந்த இலைகளின் உமிழ்நீரை நாம் விழுங்குவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நன்மை ஏற்படும். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. நம்முடைய நாவில் இருந்து வரக்கூடிய எதிர்மறை வார்த்தைகள், வாயிலிருந்து வீசக்கூடிய துர்நாற்றம், போன்ற பல பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த பரிகாரம் நமக்கு கொடுக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.





🕎*குறிப்பு *🕎


*குருப்பு 1 முதல் 103 குருப்புகளிலும் ஒரே பதிவு தான் வரும். ஏற்கனவே இனைந்தவர்கள் மறுபடியும் இனைய வேண்டாம். புதிதாக இனைபவர்கள் மட்டும் இனையலாம*


*அனைத்து குருப்புகளிலும் ஒரே பதிவுதான் இடம் பெறும்*


🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


*இறைவனின் பரிபூரண அருளையும், சித்தர்களின் வழிகாட்டுதலின் படி பூஜை முறையும், மற்றும் பல பரிகார முறையை அறிய இனைவீர்*


*குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்*


https://www.youtube.com/channel/UC8Ws1OfzzDpdVIM8VSIDXUQ


*குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு*


*குருப்பு 103*


https://chat.whatsapp.com/I7oUax0iek195sSo092XQ9



*குதம்பை சிவசித்தர் டெலகிராம் குருப்பு*


https://t.me/joinchat/S29dd1ffwrfIXUN3


*பகிர்வு

*Courtesy: unknown

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

No comments:

Post a Comment