Friday, 13 March 2020

மஹாபெரியவா #திருவிளையாடல்

பகிர்வு

#மஹாபெரியவா
#திருவிளையாடல்

ஆன்மிகப் பெரியவர்களுக்கு ருத்ராவின் அன்பு வணக்கங்கள்
என் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை உங்களுக்கு சொல்ல இருக்கிறேன்
தயவுசெய்து இந்த பதிவை முழுவதுமாக படிக்குமாறு வேண்டுகிறேன்!

அன்று 2013 /06/23

அது நான் கோவையில் உள்ள ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தருணம்
அன்றைய தினம் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது மிகுந்த பெருமைக்குரிய ஒன்று  விடுப்பு எடுத்து ஏதேனும் தூரதேச பயணம் செய்வது எமது வாடிக்கை அதேபோல் மாதமொருமுறை காஞ்சிமடம் வருவதும்
மகா பெரியவா பிருந்தாவனம் மற்றும் புதுப் பெரியவா தரிசனம் மாதம் ஒருமுறையேனும் நிகழ்ந்துவிடும்

(ஏற்கனவே புதுப் பெரியவா எமக்கு எப்படி அனுக்கிரகம் செய்தார் என்பதை விரிவாக சொல்லி உள்ளேன்)

அலுவலகப் பணி முடித்து எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தேன்
அன்று ஏகாதசி  பூரன விரதம் 

"சுத்தம் பாகவத அன்னம்"
"சுத்தம் பாகிரதிஜலம்"
"சுத்தம் விஷ்ணு பத தியானம்"
"சுத்தம் ஏகாதசி விரதம்"

என்பதாலும் கருணையே வடிவான மகாபெரியவர் தன் திருவாய் மலர்ந்தருளிய "தெய்வத்தின் குரல்'
எனும் ஞானத்தின் பிரம்மாண்டத்தை
தவறாமல் படிக்கும் அனுக்கிரகத்தை
பெரியவா அருளியதால் அடியேன் ஏகாதசிகளில் உணவு எதுவும் எடுத்துக்கொள்வதில்லை  பரிபூரண விரதம் மேற்கொள்வது முடிந்தால் அன்று விடுப்பு எடுத்து   சிவ ஸ்தலங்களுக்கு சென்று விடுவது இதுவே வாடிக்கை

YouTube எனும் ஒரு செயலி உண்டு  அதில் ஜோதிர்லிங்கங்கள் குறித்த ஒரு காணொளி "மரணத்தின் மடி மகாகாலா"
என்ற அந்த காணொளியை கண்டு
என்னுள் அந்த ஆசை துளிர்விட்டது நாம் ஒரு முறையேனும் இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற தீராத ஒரு ஆசை என்னை ஆட்கொண்டு விட்டது நானும் நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன் அந்த நேரமும் வந்தது
உஜ்ஜெயின் புறப்பட அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி ஆகிவிட்டது எனக்கு ஆங்கிலம் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது
நாம் எப்படி செல்வது எங்கு தங்குவது எப்படி திரும்பி வருவது பல கேள்விகள் என்னுள் எழுந்தன  என் வீட்டுப் பெரியவர்களிடம் கலந்தாலோசித்த போது ஒருமித்த குரலாக அவர்கள் என்னிடம் சொன்னது.

"உனக்கு என்ன வயசு ஆயிடுச்சு இப்ப கோவில்குளம் சுத்திட்டு இருக்கே?
அதெல்லாம் நாள் இருக்கு அப்ப போய்க்கலாம் இப்போ உன் வேலைய பாரு"

என்று அவர்கள் சொன்னார்கள். என் அருமை மணி மாமாவை கேட்டபோது
மஹா பெரிவா முன்னாடி நின்னு அனுக்கிரகத்தை கேளு சீட்டு எழுதி போட்டு பாரு என்ன வருது அப்புறமா அதை வச்சு முடிவு பண்ணிக்கோ 

எனக்கும் அதுவே சரியென்று தோன்றிவிட. பெற்றோர்களும் அதற்கு தலையசைக்க பெரியவா (என் வீட்டுப் பூஜையறையில் எழுந்தருளியுள்ள) முன்னிலையில்  அந்த வைபவம் நிகழ்ந்தேறியது பெரியவ அனுக்கிரகம் செய்துவிட்டார்

பிறகு என்ன தடை  தடையேதும் இல்லாமல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தாகிவிட்டது  ஈரோடு வந்து ரயில் ஏருவது முடிவானது தங்கும் ஏற்பாட்டை அங்கு சென்று  செய்துகொள்ளலாம் என்றும் அலைபேசியை எடுத்து செல்ல வேண்டாமென்றும்  தீர்க்கமாக முடிவு செய்தேன். அடிக்கடி  உனக்கு போன் செய்றேன் அம்மா என்ற வாக்குறுதி யுடன் அலைபேசியை கோவையில் உள்ள எனது அறையிலேயே வைத்துவிட்டு  கிளம்பிவிட்டேன்

ஒரு துணிப்பை
இரண்டு காவி வஸ்திரம்(வேட்டி துண்டு)
ஸ்னான பொடி
கொஞ்சம் பழங்கள்
வேர்கடலை ஒரு கிலோ பாக்கெட்
கையில் ஒரு பர்ஸ் அதில் ஏடிஎம் கார்டு
தெய்வத்தின் குரல் புத்தகம்

அவ்வளவுதான் என்னுடன் வருகிறது  புண்ணிய பூமி நோக்கி பயணம் ஒரு இரவு ஒரு பகல் கடந்தது  கையிலிருந்த பழங்களைத் தவிர வேறு எதையும்
உண்ணவில்லை  உஜ்ஜெயின் வந்து இறங்கி ஆகிவிட்டது 

அங்கிருந்து நானா கேடா  என்ற இடத்திற்கு செல்ல வேண்டும் நான் இறங்கியது இரவு பொழுது வாகன வசதிகள் அவ்வளவாக தென்படவில்லை
எனவே ரயில் நிலையத்தில் உள்ள பெஞ்சில். ஒரு குட்டி தூக்கம் போடுவோம் என்று படுத்தேன் சிறிது நேரம் தூங்கி எழுந்த பின்பு அங்கேயே காலை நியமங்கள் முடிந்தது சட்டைப் பையில் இருந்த எனது பர்சை காணவில்லை
திரும்பி செல்லும் ரயில் டிக்கெட் எனது பையின் உள்ளே இருந்தது இரண்டு நாட்கள் அங்கு தங்குவதாக திட்டம்
ஆதலால் இரண்டு நாள் கழித்து போபாலில் இருந்து ஊருக்கு ரயில் ஏறுவதாக திட்டம்

எனக்கு அந்த நேரத்தில் ஒரு பெரிய சோகம் ஏற்படவில்லை நேராக சென்று நிலைய அதிகாரியிடம் புகார் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன் கையில் பத்து காசு கிடையாது எங்கே போகிறோம் என்று தெரியாது அங்கிருந்து கோவில் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றேன் நேரே சிப்ரா நதிக்குச் சென்று அங்கு ஓடிய சிறிய தீர்த்தத்தில் தீர்த்தம் ஆடிவிட்டு ராம் காட்‌ என்ற இடத்தில் அமர்ந்தேன்

"பெரியவா உங்க அனுமதி கேட்டு தானே யாத்திரை ஆரம்பிச்சேன் இது என்ன நீங்க எனக்கு சோதனை கொடுக்குறீங்க
இதெல்லாம் சரி அல்ல ஆனா பின் வாங்க போறதும் இல்லை நீங்கதான் எனை தரிசனம் முடிச்சு போபால் வரை கொண்டு போய் விடணும் விடுவீங்க என்று பரிபூரணமாக நம்புகிறேன்"

என்ற வினோத பிரார்த்தனை செய்துகொண்டு மரணத்தின் மடி என்று அழைக்கப்படும்  மகா காலேஸ்வரர் என்ற கோவிலுக்கு சென்றேன்

சாதாரணமாக மக்கள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்
அங்கு வந்த அந்தக் கோவில் தன்னார்வ தொண்டர் ஒருவர்  இந்தியில் முதலில் என்னிடம் பேசினார் அது எனக்கு விளங்கவில்லை நான் அவருக்கு பதில் ஆங்கிலத்தில் பதிலளித்தேன்

அவர் என்னிடம் ஆங்கிலத்தில் இவ்வாறு சொன்னார்

"There is a separate way for Sadhu Babaji
Please come to that way"

சரி என்று அவருடன் சென்றேன் மிகுந்த மரியாதையோடு அவர் என்னை அழைத்து சென்றாற் அங்கு காவி உடை தரித்தவர்களுக்கு அத்தனை மரியாதை அளிக்கப்படுகிறது 

மகாகாலேஸ்வரர் தரிசனம் பரிபூரணமாக  கிடைத்தது. அங்கு சாதுக்களுக்கு நிகழ்த்தப்படும் மரியாதை
அடியேனுக்கும் கிட்டியது எனக்கு அவர்கள் பழங்களையும் ஒரு உணவு பொட்டலத்தையும் கொடுத்தார்கள்
மகா பெரியவா படியளந்து விட்டார்
காலை பிக்ஷை இனிதே நிறைவேறியது
மேலும் அவரே எனக்கு சாதுக்கள் தங்குமிடத்திற்கு வழிகாட்டினார்
அங்கே சென்று சிறிது நேரம் அமர்ந்து இருந்தேன் சுற்றி இருக்கின்ற தலங்களுக்கு சென்று வர எத்தனித்தேன்
அவ்வாறே அருகில் உள்ள திரிவேணி சங்கமம் என்ற இடத்துக்கு சென்றேன்
பிறகு மீண்டும் திரும்பி வந்தேன்
அன்று இரவு அங்கேயே கழிந்தது

அடுத்த நாள் காலை ஓம்காரேஷ்வர்
தரிசிக்கவேண்டும் ஆனால் கையில் ஒரு துளி பணமும் கிடையாது எப்படி அங்கே செல்வது அனைவரும் காலை பிக்ஷைக்காக  கூடத்திற்கு வந்தனர் அங்கு சில மந்திர உச்சாடனங்கள் முடிந்ததும் அங்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் அமுது படைத்தனர்
நானும் அதில் கலந்து கொண்டேன் சாப்பிட்டு முடித்ததும் சாப்பிட்ட தட்டை எடுத்துப் பார்த்தால் அடியில் ஆயிரம் ரூபாய் இரண்டு 500 ரூபாய் இருந்தது
பிறகு விசாரித்ததில் அது சாதுக்களுக்கு கொடுக்கப்படும் காணிக்கையாம்  அந்த ஊரில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறது போலும் என் கண்கள் பெரியவா அருளை எண்ணி ஆனந்த  கண்ணீர் சொரிந்தது

கையிலிருக்கும் பணத்தை கொண்டு
ஓம்காரேஷ்வரர் தரிசித்தேன் புனித நீராம் நர்மதையில் தீர்த்தம் ஆடினேன்
மீண்டும் உஜ்ஜெயின் வந்து சேர்ந்தேன்
 அந்த மடத்திலேயே அன்று இரவு தங்கினேன்  அடுத்தநாள் விடியற்காலை எழுந்து மீண்டும் மகாகாலேஸ்வரர் தரிசனம் "பஸ்ம ஆரத்தி" அருகில் நின்று சேவிக்கும் அற்புத பாக்கியம் கிட்டியது
அதன் பிறகு நேரே மடத்திற்கு வந்து போபால் செல்ல முடிவு செய்த நான்
வழிமாறி வேறு எங்கேயோ சென்று விட்டேன் சிறிதுநேரம் சுற்றித்திரிந்த பிறகு கலங்கரை விளக்கம் போல் கண்ணில் தெரிந்தது உஜ்ஜெயின் ரயில் நிலையம் உள்ளே சென்று  நிலைய அதிகாரியிடம் என்னுடைய பர்ஸ் கிடைத்ததா என்று கேட்டேன். ஆச்சரியம் நிகழ்த்தினார் மகாபெரியவா  அந்த ஸ்டேஷன் மாஸ்டர்  இவ்வாறு சொன்னார்.

"உங்கள் மணிபர்ஸ்  பத்திரமாக இருக்கிறது நீங்கள் படுத்திருந்த  பெஞ்ச்பின்னாடியே தான் அது இருந்தது  அங்கு வேலை செய்யும்
சந்திரசேகர் எனும் பணியாளர் அதைக் கொண்டு வந்து கொடுத்தார்"

இதோ எடுத்து தருகிறேன் வாங்கி கொண்டு செல்லுங்கள் என்று கூறி
பீரோவைத் திறந்து என்னுடைய பர்சை எடுத்து கொடுத்தார் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
என சத்தமாக சொன்னேன்

அதுவே என் வாழ்வில் பிரம்மச்சரியம் எனும் விதை என்னுள் விழுந்த தருணம்

சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்பு ரயில்நிலையத்தில் இருந்து வெளியேறினேன்

போபால் வந்தேன் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன் நடந்த நிகழ்வுகளை அசை போட்டவாறு ரயிலில் ஏறினேன்
மீண்டும் ஒரு இரவு ஒரு பகல் ஈரோடு வந்து சேர்ந்தேன் அம்மாவிற்கு போன் செய்தேன்

" என்னப்பா இத்தனை நாளா போனே காணோம் தரிசனம் நல்லா முடிஞ்சுதா
எனக்கேட்டார்"

எல்லாம் சுகபோகமாக முடிஞ்சது
என்று புன்னகையுடன் பதில் சொன்னேன்

எல்லாம் பெரியவா நிகழ்த்திய திருவிளையாடல் அவரின்  அருளின்றி
ஒரு அணுவும் அசையாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை பகிர்கிறேன் இது இதுவரை என் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் தெரியாது(மணி மாமா தவிர)

அன்புடன்
ருத்ரா