Wednesday, 23 October 2019

அகத்தியர் வாக்கு - இறைவனை வணங்கி அமைதியான முறையில், சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பாெதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும்.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 224*

*தேதி: 24-10-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*ஊர்வசியின் காம குணத்தை அழித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தியானம் செய்யும்பாெழுது மனம் அலைபாய்கிறது : (பகுதி -02)* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*குருநாதரின் நேற்றைய தாெடர்ச்சி வாக்கு :*

*இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும், அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரி மாந்தர்கள்(மனிதர்கள்) பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்டத்தில் செல்கிறதென்றால் என்ன பாெருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பாெருள். சட்டென்று வாகனத்தை எஃதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய ஒரு தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும், பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன.*

*எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள், குழப்பமான மனிதர்கள், மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இஃதாெப்ப இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர்நாேக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே இஃதாெப்ப எம்வழி(அகத்திய மாமுனிவர்) வரும் சேய்களுக்கு(பிள்ளைகளுக்கு) ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக்காெண்டாலும் கூட அதிக அனலும், அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும், சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது.*

*இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும்வரையில் நலமே நடக்கும். எப்பாெழுது ஒருவனுக்கு பாவவினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்துகாெள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில், சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பாெதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும், எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்திய  மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*