ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Monday, 30 April 2018
Friday, 27 April 2018
Thursday, 26 April 2018
அகத்தியர் அருள் வாக்கு - பிறவி ரகசியங்கள்
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்? ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார். இஃதொப்ப ஆணும், பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே, என்னென்ன வகையான நிலையிலே அந்தப் பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார். எப்படி முடிவெடுக்கிறார்? அந்தக் குடும்பம், புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றாற் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரக நிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றாற் போல்தான் அந்த ஆணும், பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்சநிலை ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரக நிலைக்கு தகுந்தாற்போல் உள்ள கால சூழலில் அதனை முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம். இடையிலும் நடக்கலாம். இறுதியிலும் நடக்கலாம். இஃதொப்ப நிலையிலே சில மிக விசேஷமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து "நான், இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லையே! வேறு எங்காவது என்னை அனுப்புங்கள்" என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதொப்ப நிலையில், அஃதொப்ப அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே இருக்கின்ற ஆத்மா, பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அஃதொப்ப அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா, ஆண் ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம், பெண் ஆத்மா – அங்கு பிரச்சினை இல்லை. ஆண் பிண்டம், ஆண் ஆத்மா – அங்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி வரும்.
அகத்தியர்ஞானம்

திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது
சபாபதி அளித்த நூற்திரட்டு
~~~~~~~~~~~~~~~~~~~~~
.
சிவபெருமான் பல நூறு ஓலைகளில் தன் கைப்பட எழுதிய திருவாசகம் எப்படி இருக்கும் என்று நாம் நினைப்போம். தில்லையில் சிவத்தொண்டு புரிந்து கொண்டு வாழ்ந்தார் திருவாதவூரார் (எ) மாணிக்கவாசகர். அங்கே தினமும் சொற்பொழிவு கேட்கவரும் முதியவர் ஒருவர் கேட்டுக்கொள்ள திருக்கோவைப்பதிகம் பாடினார். அதையெல்லாம் முதியவராக வந்த ஈசனே எதிரில் அமர்ந்து எழுதியது என்பது மறுநாள் கருவறைமுன் படியில் இருந்த ஓலைகட்டைப் பிரிக்கும்போது தான் தெரிந்தது. அதில் 'திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது' என்று ஈசனே கையொப்பமிட்டதை அனைவரும் படித்தனர்.
நன்றி:- அருள்மிகு ஆத்மனாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில், திருப்பெருந்துறை.
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை

Wednesday, 25 April 2018
Monday, 23 April 2018
குண்டடம் கால பைரவர்!
கொங்கு மண்டலத்தில் ஒரு காசி!
************************************
குண்டடம் கால பைரவர்!
'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!' என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார்.
அதற்கு என்ன அர்த்தம்?
காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
யார் இந்த பைரவர்?
சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கர்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது.
அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா?
அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?
இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாறை இப்போது பர்க்கலாமா?
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர். உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார்.
விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.
அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! ஒன்றரை லட்சம் டன் வேகம். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.
காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது. எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா? ரத்தக்காடு! சாம்பல் காடு!
களரிக்காடு!
காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்! ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.
ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன. இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.
தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!
மிளகு :
மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.
அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.
அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். 'ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்' என்றார்.
அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, 'பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு' என்று பொய் சொன்னார்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.
கொங்கு வடுகநாதா!
மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்!
சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.
அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? 'பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்' என்றான் கோபத்துடன்.
கதறினான் வியாபாரி. 'கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு' என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!
எல்லா நலனும் தருவேன்!
நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். 'நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!' என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.
'என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்' என்றான் மன்னன். வடுகநாதர் புன்னகைத்தார். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!
பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், 'என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று துதித்தான். வடுக பைரவர் புன்னகைத்தார். 'நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்' என்று சொல்லி மறைந்தார் பைரவர்.
அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.
சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்? ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.
எங்கே இருக்கிறது: கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.
ஆலய நேரம்: காலை 7 மணி முதல் 1 மணி வரை; மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
தொலைபேசி: 04258-263301
என்ன சிறப்பு: காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்,,,,,,

Sunday, 22 April 2018
Thursday, 19 April 2018
சில இயற்கை முறை தீர்வுகள்
#திராவகமும்
#தெளிந்தநீரும்
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
சில நாட்களுக்கு முன் ஒரு அலோபதி மருத்துவர் என்னை கைப்பேசியில் அழைத்து;" வீட்டிற்கு வந்து யோகா கற்றுத்தர முடியுமா? " என்று; கேட்டிருந்தார். சரி என்று அவர் கொடுத்த விலாசத்திற்கு போய்ப் பார்த்தேன் …
உண்மையில் அது ஒரு வீடு போல இல்லை. அவர் மருத்துவ ஆலோசனை வழங்கும் இடம் போல் இருந்தது.
அவருக்கு ஒரு 50 வயதிருக்கும், நல்ல சிகப்பு நிறம், இருந்த கொஞ்சம் முடியை பக்கவாட்டில் வகுடெடுத்து சீவி இருந்தார், கணத்த சரீரம், கண்களை சுற்றி கருவளையமும் தடிப்புமாக சற்று வீங்கி இருந்தது. அந்த அறை முதல் மாடியில் இருந்தது. உடலியல் படங்கள்,குழந்தைகள் படங்கள்,மருந்து கம்பெனிகளின் படங்கள் பலதும் சுவரை நிறைத்திருந்தது. மருத்துவர் தலைக்கு மேலிருந்த சுவரில் இயேசு கிழிந்த அங்கியோடு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
டாக்டர்: " வாங்க இடத்தை கண்டுப்பிடிக்க சிரமப்பட்டீர்களா?
நான்: 'இல்லை எளிதாக வந்துவிட்டேன், இது வீடு போல இல்லையே? '
"ஆமா,இது கிளினிக். வீடு மேலே இருக்கிறது.
எனக்கு கொஞ்சம் தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி போன்ற சில கோளாறுகள் உள்ளது. யோகாவில் சரியாகுமா?"
'நிச்சயமா,நாம சில பயிற்சிகளையும்,வாழ்க்கை முறையையும் கற்றுத் தருவோம். அதிலேயே உங்கள் பிரச்சனைகள் சரியாகி விடும்.'
"எப்படி என்று, கொஞ்சம் விளக்க முடியுமா?"
'நிச்சயமா,யோகாவை பொறுத்தவரை தூக்கமின்மைக்குக் காரணம் ஓயாத எண்ணங்கள் தான். மனதை காலி செய்து விட்டால் தேவையற்ற எண்ணங்களே வராது. அதற்கு ஜானுசீராசனம்,அதோமுகாசனம்,விபரீதகரணி ஆசனம், நாடிசுத்தி மூச்சுப்பயிற்சி,மந்திர மூச்சு,தாரணை தியானம் போன்றவற்றை கற்றுத்தருவோம் அதிலேயே நரம்புகளுக்கும் தேவையான ஓய்வு கிடைக்கும். பயிற்சியை ஆரம்பிக்கலாமா?'
"இல்லை,இன்னும் கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா? "
'விரிவா சொல்லணும்னா, ஒரு மணி நேரம் போதாது. நாம பயிற்சியை ஆரம்பித்து விடுவோம். பிறகு பயிற்சியே உங்களுக்கு பல விசயங்களை விரிவா சொல்லும்'
இப்படி; நான் கூறியதும் அவர் என்னை நோக்கி அடுத்தக் கேள்வியை தொடுத்தார்.
"யோகானா என்ன" என்பதே அவருடைய அடுத்தக் கேள்வியாய் இருந்தது. இதைக் கேட்டதும் எனக்கு இது போன்ற அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்ளவா? நம்மை அழைத்தார். கூகுளில் அடித்தாலே யோகானா என்ன, அது எப்படி வேலை செய்யும், அதற்கு அப்பன் யாரு என்பதெல்லாம் இருக்குமே.! என்று எண்ணியபடியே …
' முதலில் பயிற்சியை ஆரம்பித்து விடுவோம் சார். நான் 'மஹாயோகா,இயற்கை வழிகாட்டி,ஆதிமருத்துவம்' அப்படின்னு சில புத்தகங்களையும் எழுதிருக்கேன். அதுல யோகானா என்ன,இயற்கைனா என்ன,அலோபதினா என்ன என்பது பற்றியெல்லாம் எழுதி இருக்கேன்.'
"என்னது … அலோபதி மருத்துவம் பற்றியும் எழுதி உள்ளீர்களா, நீங்க டாக்டரா? "
'இல்லீங்க,யோகா தெரபிஸ்ட் '
"அப்ப அலோபதி பற்றி எப்படி எழுதுனீங்க?"
'அய்யா, உடலில் உள்ளவை அத்தனையும் செல்கள்தான், செல்களைப் பலப்படுத்தவும் இறந்த செல்கள் முறையாக வெளியேறவும் வழியை ஏற்படுத்திவிட்டு,மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் எல்லா வியாதிகளையும் உடல் தானே குணப்படுத்தும். என்பதே இயற்கை. உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளது,அதில் ஆயிரக்கணக்கான நரம்புகள் உள்ளன,உடலில் கெட்டக்கிருமிகள்,வைரஸ்கள் புகுவதாலேயே பெரும்பாலான நோய்கள் உருவாகிறது. அதனால் ஆன்ட்டி பயாடிக்,ஆன்ட்டி பாக்டீரியா,இரசாயண மாத்திரை,மருந்துகளை கொடுத்தால் மட்டுமே குணம் கிடைக்கும் என்பது.அலோபதி முறை'
"உடலில் செல்கள் மட்டுமே உள்ளதா? அப்ப இதயம்,கிட்னி,நுரையீரல்,குடல் இதெல்லாம் இல்லையா?"
'அதெல்லாம் இருக்கு ஆனா இல்ல.முதலில் தந்தையின் விந்தணுவில் உள்ள செல்களும் தாயின் கரு முட்டையில் உள்ள செல்களும் சேர்ந்து அதற்கு கிடைத்த ஊட்டம்,பாதுகாப்பு,மாற்றம் என்று ஒவ்வென்றாக பெருகி பல உறுப்புகளாக மாறி பிறகு மனிதனாக பிறந்தோம். கிட்னி,நுரையீரல்,உடல் எல்லாமே செல்கள் மட்டுமே அதனால் செல்லுக்கு ஊட்டமும் பாதுகாப்பும் கிடைத்தால் அது தானே வளரும், அப்படி கிடைக்காவிட்டால் அது தானே அழியும். அதனால்,எந்த உறுப்பிலும் நோயில்லை. செல்லைப் புதுப்பிக்கும் ஆற்றல் உள்ளவரை உடல் இயங்கும். அந்த ஆற்றல் இல்லாத போது மரணம் வரும்.'
" நீங்க சொல்றது இல்ல,
செல்கள் பல உறுப்புகளாய் மாறியாச்சி,அதற்கென தனித்தனி உள்ளீடுகள் உண்டு. அந்தந்த இடத்தைத் தாக்கும் வைரஸ்களும் நோய்களும் உண்டு.அதைத் தடுக்கவே மருந்து,மாத்திரை,ஊசி எல்லாம் போடுகிறோம். அப்படி செய்யாவிட்டால் கருப்பிடித்த சில நாட்களிலேயே அது சிதைந்து வெளியேறி விடும் வாய்ப்பு உண்டு. வளர்ந்த மனிதனுக்கு வரும் நோய்களிலும் கூட, அந்தந்த உறுப்புகளில் உள்ள வைரஸ்தொற்று,பலவீனம்,நரம்புக்கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய பல்வேறு ஆராய்ச்சியும்,ஆன்ட்டி பாக்டீரியாக்களும் மருந்தும் தேவை. இல்லாவிட்டால், பிறந்து வளர்ந்த மனிதனின் ஆயுள் 30 வயதுக்குள் முடிந்து விடும். "
'ஓ.! அப்போ,அலோபதி மருத்துவ முறை எல்லாம் இங்கு வராத நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவங்க எல்லாம் பொய்னு சொல்லுவீங்களோ,இன்னும் நாங்கதான் போலியோவை ஒழிச்சோம்,தொழுநோயை ஒழிச்சோம்,நாங்கதான் மக்களை ஆரோக்கியமா வழவைக்கிறோம்னு;
அலோபதி முறையினர் வழக்கமா சொல்வதை நீங்களும் சொல்வீங்க போல.! ஹ ஹ்ஹா.! '
என்று கூறி நான் சிரித்ததும் … சட்டென்று ஆங்கிலத்தில் இன்னும் "காட்டானாதான் வாழ்றீங்க"
என்று; கூறி மேலும் சில ஆங்கில வாக்கியங்களை உதிர்த்தார். அதாவது நான் ஆபத்தான மனிதன் என்றும், எனக்கு நிறைய அறிவு தேவைப்படுகிறது என்பதாகவும்
அதன் அர்த்தம் இருந்தது. உடனே நானும் ஆங்கிலத்தில் என்னால் உங்கள் உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், தமிழில் பேசினால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்வேன்.என்றதும் சட்டென்று
"நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்றார்;
'யோகாதெரபி'
"சரி உங்களுக்கு யோகாதெரபியில்
உடலியல் செயல்பாடு,பாக்டீரியா,நரம்பு மண்டலம் பற்றியெல்லாம் பாடங்கள் இருக்கிறதா?"
'ஏங்க,நாங்க நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா?,
அடிப்படை உடலியக்கம்,நோய்களுக்கான காரணங்கள்,அவற்றை குணப்படுத்தும் யோகா,இயற்கை உணவு,மூலிகை உள்ளிட்ட வழிமுறைகளே எங்களுக்கான முக்கிய பாடங்கள். இரசாயண உணவு,இரசாயண மருந்து,தடுப்பூசி போன்றவைகளின் தீங்கு மற்றும் அவைகள் ஏற்படுத்தும் நோய்கள் பற்றியும் உப பாடங்கள் உண்டு'
"மருந்துகளும்,உணவும்,தடுப்பூசியும் நோய்களை உருவாக்கும்; என்றா படித்து தருகிறார்கள்? அது பற்றி இன்னும் தெளிவாக சொல்ல முடியுமா?"
'இல்லீங்க,தற்போது எனக்கு நேரம் இல்லை. உங்களுக்கான ஒரு மணி நேரத்தில் 40 நிமிடங்கள் கழிந்துவிட்டது. அடுத்தது கோட்டாரில் ஒரு பக்கவாத நோயாளிக்கு பயிற்சி கொடுக்கப் போகணும்.,வேண்டுமானால் எனது
நூல்களை தருகிறேன்' என்றபடி எனது கைப்பையைத் திறந்து அதிலிருந்து 'இயற்கை வழிகாட்டி' என்ற, நான் இலவசமாக கொடுக்கும் நூலை எடுத்து ,அவரிடம் கொடுத்து விட்டு கிளம்ப ஆயத்தமானேன். உடனே அவர் …
"பக்கவாதம்,இதயநோய்,கேன்சர்,டெங்கு,சிக்கன் குணியா,வைரஸ் நோய்கள் எல்லாத்தையும் யோகா செய்தே சுகமாக்கலாமோ?"
'நிச்சயமா.! உடல்,மனம் சார்ந்த பயிற்சிகள் பாதியும் உணவு,மூலிகை மருந்துகளை மீதியும் கொடுத்து எந்த நோயையும் குணப்படுத்தவோ,கட்டுப்படுத்தவோ செய்வோம்'
"நீங்க ஒரு மருத்துவரோட வேலையை செய்வதாய் சொல்றீங்க?, இது தப்பில்லையா? "
'ஹ ஹ் ஹா.! நான் அலோபதி மருத்துவர் செய்ற எந்த வேலையையும் செய்யல,சித்தா படித்த மருத்துவர் செய்ற வேலையையும் நாம செய்யல.
இயற்கையின் வழி தனியானது.
எங்களுக்கு ரிப்போர்ட்,இரசாயண மருந்து,தடுப்பூசிகள் எதுவும் தேவையே இல்லை. கழிவு வெளியேற்றமும் இயற்கை வாழ்வியலும் எல்லாத்தையும் சீராக்கும். உணவு முறை,வாழ்க்கை முறை சீராக இருப்பவர்களுக்கு எந்த வைரஸ் நோய் உள்ளிட்டவைகளும் வராது.
இந்த அடிப்படை உண்மையை எவ்வளவு லேட்டா புரிஞ்சிகிட்டாலும் பரவாயில்ல. இயற்கை குணப்படுத்தும் நமக்கு நாமே கூட இதை செய்து குணப்படுத்தலாம்.'
"இல்லை நீங்க தவறான நம்பிக்கைல இருக்கீங்க,உடலில் தீமை செய்கிற பாக்டீரியாக்கள் கோடிகோடியாய் பெருகி மனிதனின் உள்ளுறுப்புகளை செயலிக்க செய்து மரணத்தை ஏற்படுத்திவிடும். அதை தடுக்கவே ஊசி,மருந்து எல்லாம் தேவைப்படுகிறது"
'நீங்க கூறுவது சரியில்லிங்க, மனிதனின் உடலில் பெருகும்,கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் உடல் தனது தேவையின் பொருட்டு தானே உருவாக்குகிறது.பிறகு தனது தேவை முடிந்ததும் அவற்றை உடல் தானே அழித்து விடும். ஒவ்வெரு நாளும் உடலில் பல கோடி இறந்த செல்கள் உடலை விட்டு சுயமாகவே வெளியேறி விடுகின்றன. இதற்கு எந்த மருந்து மாத்திரையும் தேவையில்லை.
அப்படியே உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் உடலில் புகுந்து விட்டால் கூட உடலில் உள்ள நோயெதிர்ப்பு கருவிகளான மண்ணீரல்,தைமஸ்,பித்தநீர் போன்றவை அவற்றை உடனே முனைந்து அழித்து விடும்.'
"அப்டின்னா,எந்த நோயும் மனிதனை தாக்காது. இதுவரை செய்த ஆராய்ச்சிகள்,தடுப்பூசிகள் அத்தனையும் வீண்,பன்றிகளைப் போல மனிதன் குளிக்காம, சுத்தமில்லாம இருந்தாலும் நோய் வராது அப்படின்னு சொல்றீங்க?"
'நிச்சயமா, ஒரு குறிப்பிட்ட அளவு வரை மனிதன் சுத்தமில்லாமல்,சரியான உணவில்லாமல், இருப்பதோடு தினமும் பல மில்லியன் கிருமிகளையும் ஊசிமூலம் மனிதனின் உள்ளே செலுத்தினாலும் உடனே மரணமோ நோயோ ஏற்படாது. ஏன்னா,மனித உடலியக்கம் தனது புதுப்பிக்கும் ஆற்றலால் எல்லாக் கழிவுகளையும் தொடர்ந்து சுத்திகரித்துக் கொண்டே இருக்கிறது. அதோடு உடலில் நோய்த்தன்மை அதிகரிக்கும் போது உடல் அதிலிருந்து மீள தானே உள்ளிருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.என்பதே உண்மை.! இந்த உண்மையின் அடிப்படையிலேயேபிறந்தது முதலே குழந்தைகளின் உடலில் பல்வேறு நோய்க்கிருமிகளை செலுத்தியும், பெரும்பாலான குழந்தைகள் மரணமடையாமல்இருக்கிறது. ஆனால்,தேவையில்லாமல் உடல் நோயெதிர்ப்பு ஆற்றலோடு விளையாடும் இந்தப்போக்கு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளை வாழ்நாள் நோயாளிகளாக, நோஞ்சான்களாக மாற்றுகிறது. சீசனில் பரவும் வைரஸ் நோய்,தொற்று நோய் போன்றவை மரபியல் காரணமாக பலவீனமாக இருக்கும் லட்சத்தில் ஒருவரையே பிடிக்கும். அந்த ஒருத்தரை கண்டுப்பிடிக்கத் திராணி இல்லாமல் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் நோய்க்கிருமி களையே தடுப்பூசியாகப் போட்டு விடுவது தேவையில்லாத வேலை. இப்படி செய்வதால் குழந்தையின் இயல்பான நோயெதிர்ப்பு ஆற்றல் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு சொல்லனும்னா - "இந்த உலகத்தில் நிறைய கெட்டவர்கள் இருக்கிறார்கள்,அவர்களால் எனது பிள்ளை எதிர்காலத்தில் அடித்து,உதைத்து,துன்புறுத்தப்படும்; ஏன், அவர்களால் என் குழந்தை, உயிரையே கூட இழக்க நேரிடலாம். அதனால்,நானே நாள்தோறும் கம்பு,கம்பி,கட்டை, சவுக்கு,கத்தி போன்ற ஆயுதங்களால் என் பிள்ளையை தினமும் அடித்து,துன்புறுத்தி,சித்ரவதை செய்து பழக்கிவிட்டால், என் குழந்தைக்கு இவற்றில் இப்பொழுதே நல்ல பரிச்சயம் வந்து விடுவதால், எதிர்காலத்தில் எந்த கொலைகாரனின்,கொள்ளைக்காரனின் தாக்குதலுக்கும் என் பிள்ளை அஞ்சியோ,அடிபட்டோ சாகவே மாட்டான்".என்று; ஒரு பெற்றோர் நினைத்தால்;அது எப்படி ஒரு பெரிய மனவியாதியாய் இருக்குமோ - அதே போன்ற ஒரு வியாபார மனவியாதியே தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களுக்கும், அலோபதி மருத்துவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.'
இப்படி நான் கூறியதும்; வாய்விட்டு பத்து பதினைந்து விநாடிகள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார். பிறகு …
"அப்ப நீங்க ஊசி,மாத்திரை,மினரல் வாட்டர் எதுவும் எடுக்கவும் மாட்டீங்க, யாருக்கும் பரிந்துரை செய்யவும் மாட்டீங்க இல்லையா?"
'நிச்சயமா.! நானாவது பரவாயில்ல என்னோட குரு ஒருத்தரிடம் உங்களைப் போல அறிவாளிகள் சிலர்; "உங்கள் சீடர்கள் பலரும் கையைக் கழுவாமல் உணவு உண்கிறார்களே, இது அவர்களை அசுத்தப்படுத்தாதா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவரோ; மனிதனின் உள்ளிருந்து வரும் களவு,விபச்சாரம்,பொறாமை போன்ற தீய எண்ணங்களே அவனை அசுத்தப்படுத்தும்.,கை கழுவாமல் உணவு உண்பதால் எந்த அசுத்தமும் ஏற்படாது" என்றிருக்கிறார். இப்படி நான் கூறியதும், அமர்ந்திருந்தவர் எழுந்து எனது கைகளைப் பிடித்து தனது நெற்றியில் வைத்துக் கொண்டு ஒரிரு விநாடிகள் நின்றார்.பிறகு மெலிதாக சிரித்துக்கொண்டே
"உங்கள் குருவின் பெயர் இயேசு நாதரா? இது பைபிள் சம்பவமாயிற்றே.! என்றதோடு,நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. வைரஸ், நோய்கள்,சாதிமதபாகுபாடுகள் என்று மக்களைச்சுற்றி பல பிரச்சனைகளை உருவாக்கி வைத்து, ஒரு சிலர் தங்கள் ராஜ்ஜியத்தை இங்கு நடத்தி வருகிறார்கள். ஆனாலும், இவையெல்லாம் காணாமல் போகும். உண்மை இறைவனான இயற்கையின் ஞானமே என்றும் நிலைக்கும்."
என்று கூறியதோடு, "நாளைக்கு நாம் யோகா பண்ணலாம் "என்று என்னை வழி அனுப்பி வைத்தார்.!
நிறைவில் நான் கூறிய பைபிள் வார்த்தைகள் அவருக்குள் ஒரு புதிய மாற்றத்தை கொடுத்ததை என்னால் உணர முடிந்தது. என்னிடம் யோகா தெரபி பயின்றவர்களில் அலோபதி மருத்துவர்களே அதிகம். நாகர்கோவிலில் உள்ள ஆங்கில மருத்துவர்கள் சங்கத்தில் கூட சில நாட்கள் வகுப்புகளை நடத்தி உள்ளேன். அப்பொழுதெல்லாம் கூட, இது போன்ற கருத்து பரிமாற்றங்கள் நடந்ததில்லை. எளிய மூலிகைகளை பற்றி சிறிதாக சொல்லி கடந்து விடுவேன். அதுதான் நமக்கும்
நல்லது அவர்களுக்கும் நல்லது. அவரவர் ஞானம் அவரவர்களுக்கு உயர்வுதானே? ஆனாலும், இயற்கையை நோக்கி வரும் இரசாயண மருத்துவர்களின் வேகம் இயற்கையின் ஆற்றலை மேலும் அதிகரிக்கிறது. மற்றபடி யாரிடமும் விவாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை.பைபிளில் மட்டுமல்ல கீதையிலும்,குரானிலும் தமிழ் இலக்கியங்களிலும் எவ்வளவோ மருத்துவ உண்மைகளை முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர். ஆனால்,நாம் நவீன ஆராய்ச்சி என்று கூறி அமெரிக்க வியாபாரிகள் கூறும் பொய்களை உலகமெல்லாம் பரப்பிவிட்டு உண்மை ஞானத்தை அழித்து வருகிறோம். லூயி பாயிஸ்டர் என்ற ஆய்வக ஊழியர் கண்டறிந்த கிருமி என்ற ஒற்றைப் பூச்சாண்டியையும் இன்னும் உடல் பருமன்,சக்கரை,இரத்த அழுத்தம்,கொழுப்பு,தைராக்சின் போன்ற குட்டிச் சாத்தான்களையும் தங்களுக்கு துணையாக வைத்துக்கொண்டு அலோபதியும் அதை வழிமொழியும் இந்திய மருத்துவத் துறையும் மக்களை பயம் காட்டி, எப்பொழுதும் தங்கள் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் அடிமையாக வைத்துள்ளனர். இந்த பூதத்தையும் குட்டிச்சாத்தான்களையும் வழிபடும் வரையில் ஆரோக்கிய சாம்ராஜ்யம் இந்த மண்ணில் தோன்றுவதற்கு வழியே இல்லை. மேற்கண்ட சிக்கல்கள் எல்லாம் இல்லையென்று நாம் சொல்லவில்லை. அப்படி சக்கரை,இரத்த அழுத்தம் போன்றவை ஏற்றத்தாழ்வுடன் இருப்பதும் இயல்புதான். அதை அனைவரும் ஒரே நிலையில் வைக்க முயல்வது பைத்தியக்காரத்தனம். மாறாக எப்பொழுதுமே நமது வாழ்க்கை முறையையும் உணவு முறையும் சீராக்கிக் கொண்டால் வாழ்வே ஆரோக்கியமாகி விடும். இந்த உண்மையை அலோபதி மருத்துவ முறையினரே மக்களிடம் பரப்ப வேண்டும்.அதை விடுத்து,நாங்கள் தான் போலியோ உள்ளிட்டவற்றை ஒழித்தோம் என்ற பொய்யை தொடர்ந்து பரப்பினால்,இன்று பெருகி உள்ள கேன்சர்,சக்கரை,இரத்த அழுத்தம்,தைராய்டு போன்ற நோய்களையும் நாங்கள் தான் உருவாக்கினோம்,நாங்கள் தான் அதை இன்னும் ஒழிக்காமல் வைத்துள்ளோம்;"
என்ற உண்மையையும் அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டி வரும்.ஒரு கை நல்ல உணவும்,உடல் உழைப்பும்,ஓய்வும்,பிராண சக்தியும்,சீரான மனநிலையும்,வாழ்க்கை முறையும் உடலில் உள்ள கை,கால், கண்,கிட்னி என்று எந்த தனிப்பட்ட உறுப்பையும் பலப்படுத்தவில்லை. மாறாக அவை ஒட்டுமொத்த செல்களையும் பலப்படுத்தி முழு உயிரையுமே ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கைகால்,கண்,காது,வயிறு என்று தனித்தனி உறுப்புகளுக்கு சிகிட்சை செய்யும் முட்டாள்த் தனத்தையாவது முதலில் நிறுத்த வேண்டும். உறுப்புக்கான சிறப்புக் கல்வி,சக்கரை,இரத்த அழுத்தம் போன்றவை அறுவை சிகிட்சை நேரத்தில் உதவுவதற்காய் கண்டறியப்பட்டவை. மருத்துவருடனான இந்த வகுப்பு நடைபெறா விட்டாலும் கூட, இருவரின் கருத்துகளும் கடினம் இல்லாமல் கடந்து போனதில் ஒரு திருப்தி.!
ஆனால்,அடுத்தநாள் அவரும் என்னை பயிற்சிக்கு அழைக்கவில்லை நானும் அங்கு செல்லவில்லை.!
- ஆதிமருத்துவம்
ஏகப்பிரியன் DYT
(இயற்கை வாழ்வியல் நிபுணர்)
aumherbals.blogspot.com

விதியை மாற்றும் விதி - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார். எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘ நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது வேண்டுமானாலும் செய். ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே ‘ என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு ஒரு மனிதன் வந்துவிட வேண்டும். "வாழ்க்கை நீண்ட காலம் அல்ல. குறைந்த காலம். அதற்குள் எண்ணியது கிடைத்து வாழ்ந்தால்தானே?" என்பது போன்ற விஷயங்கள் கட்டாயம் இறைவனுக்கும் தெரியும். மகான்களுக்கும் தெரியும். ஆனால் எந்த விதி எப்பொழுது மாற்றப்பட வேண்டும்? என்பதும் இறைவனுக்கும் தெரியும். திடும் என ஒரு விதியை மாற்றுவதால், நன்மை நடந்து விட்டால் பாதகமில்லை. அதே சமயம் தீய பக்க விளைவுகள் வந்து, முன்பு இருந்த நிலைமையே மேல் என்கிற ஒரு நிலை வந்துவிடும் என்பதையும் மனிதன் மறந்துவிடக் கூடாது.
இறைவனின் கருணையாலே, ஒவ்வொரு மனிதனும் விதியின் வழியாக வருகின்ற துன்பங்களில் இருந்து விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணுகிறான். யாங்களும் மறுக்கவில்லை. அதே சமயம் ஒரு மகானின் தொடர்பு கிடைத்து வழிமுறைகள் அறிந்தாலும் கூட பல்வேறு தருணங்களில் மனிதனால் விதியை வெல்ல முடிவதில்லை. காரணம், மன சோர்வும், எதிர்மறையான எண்ணங்களும், விதியை எதிர்த்துப் போராட ஒரு வலுவைத் தராமல் அவனை சோர்ந்து அமர வைத்து விடுகிறது.

பைரவ முகூர்த்தம்
பைரவ முகூர்த்தம் :
*********************
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.
சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.
அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.
திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.
இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.
உதாரணமாக,பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.
கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.
பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.
நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.
பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.
இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.
வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

Wednesday, 18 April 2018
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலம், நலம், நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே, மனிதர்களின் வாழ்விலே பின்னிப்படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள், பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று, அறியாத நிலையிலும், அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அஃதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப்பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும், பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது? அஃதோடு உணர்ச்சி நிலை, மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல், தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும், இன்றும், என்றும். எனவேதான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைபக்தியோடு சத்தியத்தை விடாது, மனசாட்சியோடு, தொடர்ந்து தர்மசிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல, மெல்ல விலகும். அறியாமை விலக, விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அஃதொப்ப நிலையிலே மனிதன் தன்னையும், தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாசவலைக்குள் வைத்து பார்க்கும்பொழுதுதான் "என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே, என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே" என்றெல்லாம் எண்ணி, எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக்கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அஃதே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கிவிழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும்பொழுது, இரத்த சம்பந்தமில்லாத, நட்போ, உறவோ இல்லாத மனிதனிடம் பார்க்கும்பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால், அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப்பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும், சொந்த நட்புகளுக்கும், பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்தப் பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற்கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும், ஆசையும், அறியாமையும் வைத்துக்கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப்பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக்கொண்டால் வாழ்வு நலமாகும், சுகமாகும், சாந்தியாகும்.

நோக்குவர்மம்
நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...
********************************************
{இந்த பதிவை படிக்கும் முன் செய்ய
வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு
நிலையில் இருக்க வேண்டும் மற்றும்
உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை
சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த
மன நிலையில் படியுங்கள்}
நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம்
கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும்
தன் வசபடுத்துதல் என்பது பொருள்.
இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு
மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை.
இந்த பூமியின் உயிரினங்களினுடைய
பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித
உடம்புதான்.
மனிதன் மிருகமாகவும் வாழலாம்
தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக
நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை
வந்த கலை.
நான் தலைப்பில் எழுதியதை போல
நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம்.
நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது.
அது ஒரு நிலை அவ்வளவுதான்.
அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு
தேவை தெளிவு.
தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள்
சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை
என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும்
எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை
மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.
இதுக்கு ஒரு குட்டி உதாரணம். உங்கள்
அருகில் இப்போது இருக்கும் பொருளை
கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து
பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து
போய்விடும் பின் வலி தான் மிச்சம். இதே
தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ
இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும்
சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து
விட செய்கிறீர்கள்.
உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான்
இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே
இருக்கும்பொது வாழ்க்கை இனிப்பாக மாறும்.
அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில்
எடுத்து செல்லும்.
நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும்போது
உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள்
தெளிவுடன் பார்க்கும் பொது வெற்றியின்
வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து
வைப்பீர்கள்.
அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை
உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை
விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற
குறுகிய எல்லையை கடந்து உயிர் தான்
நிரந்திரமானது என்ற உண்மையை
உங்களுக்குள் நிலைநிறுத்துவீர்கள்
(அனுபவபூர்வமாக).
பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள்
கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள்
சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும்.
இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.
புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர்
நோக்கு வர்மத்தில் வல்லவர்.
உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர
தொடுங்கும்போது. நீங்கள் எந்த உயிர் முன்
சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு
தெரிந்துவிடும். அவர் உங்களுக்கு என்ன
செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.
நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள்
கட்டுபாட்டுக்குள் வருவார்கள். அந்த தெளிவு
உங்களை கூட்டிசெல்லும் இடமும்
அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு
முற்றிலும் குறையும்.
புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது.
த்யானம் தானாகவே உங்கள் அங்கமாகிவிடும்.
நீங்கள் இந்த நிலையில் வாழும்போது உங்கள்
முன் வரும் அணைத்து உயிரின் என்ன
ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.
இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல
மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும்
அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள்
காணமல் போய்விடும் நோக்கம்(இலக்கு)
மட்டும் தான்.
பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன்
மூலம் விளைவுகளை உண்டாக்குவதே
நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம
முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும்
அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி
அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும்
உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.
இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான
வர்மப் புள்ளிகளையும் விரிவாக
பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...
தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப்
புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப்
புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப்
புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப்
புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.. .போதிதர்மர்
தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென்
சீனப்பகுதியை அடைகிறார்.அங்கு அவரது
போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது.
அதனால் அவர் வடசீனப்பகுதி ராஜதானியான
"வேயி" னை அடைந்து அங்குள்ள புத்த
விகாரத்தினை அடைகிறார். திரவிடப்பிக்குவான
இவரை அந்தஆலயத்தினுள் செல்ல விடாமல்
தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள
குகையினுள்சென்று அந்த குகையின்
சுவரினைக் கண்ணினால் உற்று
நோக்கியவண்ணம் ஒன்பதுவருடம்
தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
இந்த பயிற்சியின் போது கண்மூடுவதைத்
தவிர்ப்பதற்காகத் தனது கண்ணிமைகளை
வெட்டி எறிந்ததாகவும், அந்த இமைகள்
நிலத்தின் மீது விழுந்தபோது உருவான
தாவரம் தான் "தேயிலை" எனவும் அவரது
வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன்
உண்மைத்தன்மை என்னவெனில் தேயிலை
மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும்
என்பதுதான். அதனால் தான் இன்றும் ஜென்
கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு
முக்கியமான ஒரு விழிப்புணர்வு
விழாவாகக்கொண்டாடப்படுகிறது.
இதன் பின் அவர் புத்த குருமார்களால்
வரவேற்கப்பட்டார், ஷாவலின் ஆலயத்
துறவிகள் உடல் வலுவற்று இருப்பது கண்டு
உடல் நலத்திற்காக அவர்களுக்குப் பகிரங்க
யோகப்பயிற்சியான ஆசனப்பயிற்சிகளையும்,
மனநலத்திற்காக அந்தரங்க யோகப்பயிற்சிகளா
னப் பிராணயாம, பிரத்தியாகாரத், தாரணைப்
பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார்.
சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும்
என்ன சம்பந்தம்?
போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம
சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான்
இந்தக்கதை. அதாவது குகைச் சுவரை உற்று
நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள்
தவமிருந்தார் என்பதுதான் இதில்
முக்கியச்செய்தி.
இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது
பற்றி அறிய வேண்டுமானால் நாம்திரும்பவும்
இந்திய யோகிகளிடம் வரவேண்டும். ஆம்
யோகக்கலையின் அடிப்படைதெரியவேண்டும்.
அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான
"தாரணை" பற்றித் தெரியவேண்டும்.
அட்டாங்கயோகத்தின் இறுதி நிலையான
சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி
மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை
அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின்
உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த
நிலைச் சித்தியினைப் பெறுவதற்காகத்தான்
ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச்
சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம்
"திராடகச்"சாதனையிலிருந்தார். திருமூலரது
திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர்
பாடல்கள்,பதஞ்சலி முனிவரது யோக
சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள்
என்பவற்றில் தாரணையைப் பற்றியக்
குறிப்புகள் உள்ளன.
மகரிஷிபதஞ்சலியின் உபதேசப்படிக்
"கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும்
சித்தமே தாரணை" எனப்படும், அதாவது
மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும்
மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும்
சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில்
நிலைகொள்ளச்செய்யும் செயல் முறைதான்
"தாரணை" எனப்படும்.12 வினாடிகள் சித்தம்
செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை
எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு
தியானம் எனப்படுகிறது.
யோகத்தின் ஆறாவது நிலையான
"தாரணை"யே, நோக்கு வர்மத்தின் அடிப்படை ,
"தாரணா" சித்தியின் ஒரு பிரயோகம்தான்
நோக்குவர்மமே ஒழிய அது தனியாக
பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின்
படிநிலையில் அடையப்படுகின்ற ஒரு உப
அன்பளிப்புதான் நோக்குவர்மம். இயமம்,
நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது
நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து
கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி,
எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை
மற்றவரைத் தாக்குவதற்கு
உபயோகிப்பதில்லை. மாறாகத் தன்னைத்
தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான்
பெற்ற தனதுப் பிராண சக்தியை,
அறிவாற்றலைத், தகுதி வாய்ந்த
மாணவர்களுக்குப் பரிசாகப் பகிர்ந்து
கொடுக்கவும், நோயால் அவதிப்படும்
மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத்
தாரணசித்தி இன்றளவும் யோகியரால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தென்பொதிகைச் சித்தர்களால்
யோகத்தாரணப்பயிற்சி சில தகுதிவாய்ந்த
போர்வீரர்களுக்கும், ராஜாக்களுக்கும்,
நல்லெண்ணம் கருதி கற்பிக்கப்பட்டது என்பதையும், சில சித்தர்குறிப்புகளில்
காணமுடிகிறது. குறிப்பாகத் தென்காசிக்
கோவிலைக் கட்டிய மன்னன் பராக்கிரமபாண்டி
யனுக்கு சில ஒழுக்க நிபந்தனைகளுக்குப்
பிறகு அஸ்வினியாத்தேவர் எனும்
சித்தகுருவால் நோக்குவர்மம் பயிற்றுவிக்கப்
பட்டிருக்கிறது. இந்த சித்தகுருவின் ஜீவசமாதி
இன்றும் தென்காசிக் கோவிலினுள் யோக
அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த
ஜீவசமாதியில் ஒரு தூணில் பராக்கிரமபாண்டி
யன் சித்தகுருவை வணங்கியவண்ணம் நிற்கும்
உருவம் செதுக்குச் சிற்பமாகப்
பொறிக்கப்பட்டுள்ளதை இன்றளவும்
காணமுடிகிறது. இந்த சமாதியில் தியானம்
செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை
என்றுமே மறக்கமுடியாது.
அஷ்டாங்க யோகம் என்பது ஒருவர் ஆதியுடன்
கலக்கும் சமாதி எனும் நிலைக்கு
செல்வதற்கான மிகச்சரியான வழியில்,
ஒழுங்கு படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட
ஒரு பயிற்சி முறையாகும். பதஞ்சலியார்,
திருமூலர் ஆகிய சித்தர்கள் இதனை தெளிவாக
விரிவாக முறைப்படுத்தி வைத்தனர். இந்தப்
பயிற்சி முறையின்படி ஒரு யோகசாதகன் தன்
உடலையும், உள்ளத்தையும் இயம,
நியமங்களால் சுத்தி செய்து, பின் சூஷ்ம
ஸ்தூல உடலை ஆசன, பிராணாயாமங்களால்
பக்குவப்படுத்தி, பின் மனதை பிரத்தியாகாரத்த
ினால் புறப்பொருட்களில் இருந்து
பிரித்தெடுத்து, குறித்த ஒரு இலக்கில்
தாரணை எனும் பயிற்சியால் ஒருமுகப்படுத்தி,
பின் ஒருமைப்படுத்திய வஸ்துவில் மனதை
கரைத்து (தியானம்), மனமற்ற நிலையுடன்,
ஆதியான பரம்பொருளுடன் ஒன்றாதல்
(சமாதியாகும)
ஒருவன் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க
தியானம், சமாதி ஆகிய இருநிலைகளை
மட்டும் தவிர்த்து அஷ்டாங்க யோகத்தின் மற்ற
ஆறு படிமுறைகள் அனைத்தையும்
அறிந்திருத்தல் அவசியம்.
இயம, நியமம் அவனது மனம் தவறு செய்ய
தூண்டாமல் வைத்திருக்கும்.
ஆசனம் -
-------------
உடலைப் பக்குவப் படுத்தி, அதனைப்
பிராணனைத் தேக்கி வைத்துக் கொள்ளும்
கொள் களமாக மாற்றும்.
பிரணாயாமம் -
----------------------
பிராண சக்தியினைச் சீர் செய்யும். பிராண
சக்தியினைக் கட்டுப்படுத்தும்
பிரத்தியாகாரம் -
------------------------
உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல்
இருக்க மனதை பண்படுத்தும்.
தாரணை -
---------------
நோக்கு வர்ம தாக்குதல் நடத்தும் முறை.
மனிதமனம் மேல்மனம், ஆழ்மனம், மறைமனம்
என்ற மூன்று அடுக்குகளை உடையது.
சாதரணமாகப் பெரும்பாலானோர்க்கு மேல்மனம்
மாத்திரமே உபயோகத்தில் இருக்கும்,
எப்படியென்றால் கேள்வி கேட்டுத் தர்க்கத்தின்
மூலம் அறிதல் மேல் மனத்தின் செயல்முறை,
சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள், கலைஞர்கள்,
எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு ஆழ்மனம்
செயல்பாட்டில் இருக்கும், இதைத்தான்
பதஞ்சலி முனிவர் சித்தம் என்று கூறுகிறார்.
இந்த சித்தம்தான் மனதில் வரும்
எண்ணங்களுக்குத் தூண்டுகோல், சக்தியின்
இருப்பிடம், இந்த சித்தத்தினை ஒரு
நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி
பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும்.
இதனைப் பொதுவாக தாரணா சக்தி/ஏகாக்ர
சக்தி எனக் கூறலாம்.
நோக்குவர்மத்தைப் பிரயோகப் படுத்தத்
தாரணாசக்தி மட்டும் போதுமா? ஆண்டெனா
இருந்தால் மட்டும் போதுமா, மின்சாரமும்
வேண்டுமல்லவா! ஆதாலால் இதனைச்
சாதிப்பதற்குப் பிராணசக்தியும் அவசியம்.
அதற்கு பிராணாயாம பயிற்சி கட்டாயம்
சித்தியாகியிருக்க வேண்டும். தாரணா
சித்தியுடன் பிராண சக்தியும் கலக்கும் போது
மட்டுமே நோக்கு வர்மம் சாத்தியம்.
நோக்குவர்மத்தைச் சாதிப்பதற்கான
பயிற்சிமுறை "யோகத்திராடகம்" எனப்படும்.
இதனை (அந்தர்)அகத்திராடகம்,
(பாஹ்ய)புறத்திராடகம் என
இருவகைப்படுத்தலாம். நோக்கு வர்மத்திற்கு
தேவையானது புறத்திராடகம். அதாவது
கண்களால் சித்த சக்தியினையும்,
பிராணசக்தியினையும் செலுத்தும்
ஆற்றலைப்பெறுவது. இப்படி கண்களால்
பிராண, சித்த சக்திகளை செலுத்தும்
ஆற்றலைப்பெற்ற ஒரு தகுதி வாய்ந்த
யோகியே நோக்கு வர்மத்தினைப்
பிரயோகப்படுத்தமுடியும்.
"திராடகம்" என்ன என்பது பற்றி ஒரு நல்ல
குருவிடம் பயிற்சி பெறுதலே சித்தியைத்
தரும், முறையானப் பயிற்சி இல்லாமலும்,
தேர்ந்த வழிகாட்டுதல் இல்லாமலும் இதனை
செய்தால் கண்கள் பழுதாகும் அபாயம் உண்டு,
ஆதலால் இங்கு அதன் செயல்முறை பற்றி
விளக்கம் தரவில்லை. முறையானத் திராடகப்
பயிற்சியினால் மட்டுமே தாரணையில் திடம்
பெறுவது சாத்தியம்.
"பிராண சக்தி", தமிழில் "வாசி" எனவும், சீன
மொழியில் "Chi- சீ" எனவும்,ஜப்பானிய
மொழியில் "Ki-கீ" எனவும் அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஆக்ஸிஜன்
வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச சக்தி,
அதனது ஓட்டம் மூச்சுடன்
தொடர்புடையதேதே அன்றி உட்சுவாசிக்கும்
மூச்சு பிராணன் அல்ல, பிராணனைக்
கட்டுப்படுத்தும் இலகுவான வழி
மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே
வேளையில் பிராணனைக் கட்டுப்படுத்தும்
வேறு பயிற்சி முறைகள் இருக்கிறதா?
எனக்கேட்டால் மற்றைய சாதனைகளான
மந்திரம், முத்திரைகள், சிலவகையான
மூலிகை மருந்துகள் போன்றவற்றாலும்
பிராணணைக் கட்டுப்படுத்தமுடியும்.
இந்த பிராணன், உடலிலுள்ள சூட்சும
பஞ்சபூத குழிகளின் மூலமாக ஈர்க்கப்பட்டு(ப
ஞ்சபூத சங்கமம்) பின் ஆறாதாரங்களில்
சேமிக்கப்பட்டு(நாத சங்கமம்), பின்
எழுபத்தீராயிரம் நாடிகளின் வழியாக தச
வாயுக்களாக(பிராண சங்கமம்) உடல்
முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம்,
குறிபிட்ட நாழிகைகளுக்கு ஒருமுறை
வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த
ஓட்டத்தின் படியே உடலியக்கம், மனவியக்கம்
என்பன ஆளப்படுகின்றன என்பதுவே
சித்தர்களது யோகமருத்துவ சாஸ்திர
அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர்,
அக்குபஞ்சர் என்பவற்றின் அடிப்படையும்
இதுவே.
நோக்கு வர்மத்தில் ஒரு யோகி தன்னுடைய
தாரணா சக்தியையும், பிராணசக்தியையும்
ஒன்று திரட்டி, தீட்சண்யப் பார்வை மூலமாக
பிறிதொரு மனித உடம்பிலுள்ள 72000
நாடிகளில் மூன்று விதங்களில் தாக்கத்தை
உண்டாக்க முடியும்..
1. நாடிகளில் அதிக பிராணனை உட்
செலுத்துதல்.
2. நாடிகளில் பிராண ஓட்டத்தினை
தடைப்படுத்துதல்
3. நாடிகளிளுள்ளப் பிராணணை உறிஞ்சுதல்
அதிக பிராணனை உட் செலுத்தும் இந்த முறை
பாதிப்பில்லாதது, இதனால் பிராணனைச்
செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிகப்
பிராணனைப் பெற்று அதனைத் தாங்க
முடியாமல் மயங்கி, நிலை குலைந்து போவர்.
அல்லது ஆரோக்கியம், அமைதி பெறுவார்.
பிராணனைச் செலுத்தும் யோகியின்
நோக்கத்தினைப் பொறுத்து விளைவுகள்
வேறுபடும். உயிர் போய்விடும்
நிலையிலுள்ள ஒரு நோயாளியைக்கூட இந்த
முறையினால் இன்னும் கொஞ்சநாள் உயிருடன்
வாழவைக்கமுடியும். அங்குலிமாலன் போன்ற
மிகப்பெரிய கொலைகாரனைக்கூட
புத்தபெருமான் அமைதியடையச் செய்தது
இந்த முறையினால்தான்.
பிராண ஓட்டத்தினைத் தடைப்படுத்தும் முறை
ஆபத்தானது, மரணத்தினை ஏற்படுத்தவோ,
அல்லது பஞ்சபூத உள்ளுறுப்புகளைச்
செயலிழக்கச் செய்யவோ வல்லது. மறுபடி
சரியான நேரத்தில் பிராண சக்தி
கொடுக்கப்படாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்.
பிராணனை உறிஞ்சும் முறை ,அதி ஆபத்தான
முறை, இதனைத்தான் மெய்தீண்டாகாலம்
என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல்
பிறிதொரு மனிதனிடம் உள்ள பிராண சக்தியை
யோகி கிரகித்துக் கொள்ளும் முறை. இதனை
ஒரு பக்குவப்பட்ட யோகி செய்யமாட்டார்.
உயிர் பிரிய முடியாமல் வலியினால்
வேதனைப் படும் நோயாளிக்கு இந்த முறை
பயன்பட்டதாகச் சித்தர் குறிப்புகள்
காணப்படுகிறது.
நோக்குவர்மா சாதனையில் சித்த
சக்தியினையும் பிராணசக்தியினையும்
செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது.
எனவே கண்களைப் பலப்படுத்தும்
பயிற்சிகளையும், சில மருத்துவ
வழிமுறைகளையும் சாதகன்
பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.
இவைதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை,
நோக்குவர்ம பயிற்சியைக் குருவில்லாமல்
கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை
விளைவிக்க வல்லது, ஏனெனில் தமது
உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம்
மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான
முறையில் அணுகவில்லையானால் தாக்க
விளைபவரையே பாதிப்புறச் செய்யும்.
வள்ளல்பெருமான் தாரணைத் தவத்தாலேயே
ஜோதியுடன் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்
தக்கது.பகவான் ஓஷோவின் வழியிலுள்ள
"சுரக்க்ஷா"தியானமும், பிரம்மராஜகுமாரி
களின் ராஜயோக வழிமுறையும்
தாரணத்திராடகாவை மையப்படுத்திய பயிற்சி
முறைகளே.
பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி அதன்
மூலம் விளைவுகளை உண்டாக்குவதே
“நோக்கு வர்மம்” (NOKKU VARMAM)
எனப்படும். இந்த வர்ம முறையை ஆபத்தானது
என குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்மத்தில்
தேற்ச்சி பெற்ற ஒருவருக்கு நிகரானவர்கள்
உலகத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் எனக்
கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் ஹிப்னாடிசம் (HYPNOTISM)
என்பதையே தமிழில் நோக்கு வர்மம் என
கூறுவார்கள். ஹிப்னாடிசம் ஒரு கடல்
அதற்குள் முழுமையாக நீந்தி வந்தவர்கள்
யாரும் கிடையாது. ஹிப்னாடிசத்தின்
அடிப்படையை தெரிந்து கொண்டால் நாம்
அதன் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதர்களிடம் உள்மனம்,
வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது.
வெளிமனம் நம்முடைய அன்றாட செயல்களில்
துணைபுரிகின்றது. நம் அன்றாட வாழ்கையில்
நடைபெறுகின்ற செயல்களை சேமித்து
வைகின்றது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு
நிலைத்து வைத்திருக்காது.தனக்கு
தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில்
மறந்து விடும்.வெளிமனம் என்று ஒன்று
இருப்பதால் தான் நாம் நமது வாழ்கையில்
நடந்த துக்கமான நிகழ்வுகளையும்
,அவமானங்களயும் மறந்து சகஜமாக
வாழமுடிகின்றது.
உள்மனம் அபார சக்தி வாய்ந்தது.பிரபஞ்ச
சக்தியுடன் தொடர்புடையது. ஒருவருக்கு
ஏதேனும் ஒரு விபத்தினால் பழைய ஞாபகங்கள்
மறந்து போனாலும், பேசுகின்ற மொழி,
எழுதுவது போன்றவை மறக்காது. ஏனெனில்
அவை எல்லாம் உள்மனதில் பதிந்திருக்கும்.
உள் மனதின் ஆற்றல் இத்தோடு நிற்கவில்லை.
நம்முடைய எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தோடு
தொடர்பு கொண்டது. நமது உள் மனதை நமது
கட்டுபாட்டில் கொண்டுவருவதன் மூலம்
நாமும் இந்த பிரபஞ்சத்தின் சக்தியை உள்
வாங்கி கொள்கின்றோம்.மேலும் நம்முடைய
கட்டுபாட்டில் உள்ள உள் மன சக்தியின் மூலம்
பிறருடைய மனதிலும் மாற்றத்தை கொண்டு
வரமுடியும். இதை அடிப்படையாக கொண்டு
தான் ஏழாம் அறிவு படத்தில் முருகதாஸ்
காட்டியுள்ளார். ஆனால் படத்தில் வருவது
போல், பார்த்த வினாடியிலேயே அடுத்தவர்
மனதை கட்டுப்படுத்துவதும், தான் பல
வருடங்கள் கற்ற கலையை, அடுத்தவர் மூலம்
செயல்படுத்துவதும், படத்திற்காக
புனயப்பட்டதே.
ஹிப்னாடிசத்தில் ஒருவனுடைய வெளிமனதை
உறங்க செய்து உள் மனதுடன் நேரடியாக
தொடர்புகொண்டு அவனது உள்மனதில் உள்ள
விரும்பதகாத நினவுகளை கலைந்து அவனது
உள் மனதில் தன் நம்பிக்கையை வார்தைகளை
விதைப்பதன் மூலம் அவனை தன்னம்பிகை
மிகுந்த மனிதனாக மற்றலாம்.அதே போல்
அவனை தீவிர வாதியாகவும், தற்கொலை
படையாகவும் கூட மாற்ற முடியும்.
ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை
வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை
மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு
உண்மையாகிறது என்பதைப் பல விஞ்ஞான
ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard)
1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக்
காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை
ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள்
கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று
அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின்
அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில்
இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை
உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும்
இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட
சத்தங்கள் கூட அவனை எதுவும்
செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே
அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து
வெளிவரும் வரை அவன் இருந்தான்.
ஹிப்னாடிசம் நம் அன்றாட வாழ்க்கையில்
எதேசையாகவும் நிகழ்கின்றது. நம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக்
கூடியதே. நாம் மற்றவர்கள் கருத்து
மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல்
மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான
அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால்
அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும்.
“நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு
நல்லது எதுவும் அமையாது” என்று
ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள்
துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை
இருந்து விடுகிறார்கள். “நான்
பலவீனமானவன்”, “என்னால் இது முடியாது”,
“எனக்கு ஆரோக்கியம் சரியில்லை” என்ற
ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும்,
இயலாதவர்களையும், நோயாளிகளையுமே
கண்டிப்பாக உருவாக்கும்.
ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே
எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக்
கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி
இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக்
கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும்,
புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு
எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும்
உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது.
தொடர்ந்து அதே போல் எண்ணங்கள்
ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும்
தகவல்களில் மிக கவனமாக இருங்கள்.
மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து
பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை
கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை
பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை
மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில்
கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக
தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி,
உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம்
உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும்
அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும்
என்பது உறுதி. நம் ஆழ்மனதில் முன்பே
ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ,
நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்க
ோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம்
மூலமாக செயல்படுத்தி விட முடியாது.
ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ,
நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில்
இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க
வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால்
அதற்கு எதிர்மாறான பண்புகளையும்,
நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக்
கொள்ளுங்கள். அதற்குத் தேவையான
நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற
அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள்.
அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள்.
சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.
இந்தப்பதிவின் நோக்கமே ஆர்வமுள்ள இளைஞர்கள் உண்மையினை உணர்ந்து விஞ்ஞான பார்வையுடன் இக்கலைகளைக் கற்க முற்பட வேண்டும்.

Tuesday, 17 April 2018
சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:
நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!
சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:
காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.
இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்.
கோவிலை தற்போது பூஜித்தும்,பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி நமக்குதெரிவித்தார். அவர் கூறியமகத்துவங்கள் இதோ :
- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி.பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .
- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.
-இங்குள்ள தக்ஷிணாமூர்த்திரொம்பவும் மஹிமை பெற்றவர்.அம்பிகை தன்னுள் பாதியாக உள்ளதைஅறிவிக்க, ஒரு காதில் மகரக்குழையும்,மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார்.தொண்டர் தம் பெருமையைசொல்லவும் பெரிதே என்றவாக்கிற்கிணங்க, இவ்வாலயத்தில்அறுபத்து மூவரும் இல்லை. மாறாக,அறுபத்து மூவரும்,தக்ஷிணாமூர்த்தியுடைய தலைசடையில் 63 லிங்கங்களாக காட்சிதருகிறார்கள்.
அதாவது, சிவனை வழிபட்டுசிவமாகவே ஆனதால் லிங்கமாகவும்,அடியார்களை இறைவன் தலை மீதுவைத்து பிள்ளை போல்கொண்டாடுவார் என்பது போல், அவர்தலையிலும் இருப்பது, பக்திக்குமரியாதை.
கோவிலில் ஓரிடத்தில் வில்வமும்வேம்பும் ஒன்றாய்வளர்ந்திருக்கின்றன. வேப்ப மரம்தனது கிளையை வில்வத்தின் மீதுபோட்டவாறு வளர்ந்திருக்கிறது.அம்பாள் சிவனுடைய தோள் மீதுகைபோட்டவாறு இருப்பது போல்இருக்கும். வில்வ மரம் மூன்றுகிளைகள் விட்டு சூல வடிவில்வளர்ந்திருக்கிறது. அடியில் ஒரு பெரியசிவலிங்கமும் அம்பாளும் உண்டு.
- தவிர அழகு வாய்ந்த விநாயகர்,சண்முகர், நவகிரஹங்கள் சந்நிதிகள்உண்டு.
- ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல்திருப்பணி. விமானம் தவிர.அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும்பச்சைக்கல் கொண்டு சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது.
- பச்சைக்கல்லுடைய மகிமையால்,அம்பாள் சந்நிதியில் உஷ்ணம்நிரம்புவதில்லை. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.
- அந்நியர்களின் படையெடுப்புக்குஅஞ்சி, முற்காலத்தில் எல்லாவிக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில்வைக்கப்பட்டும், பூமியில்புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.கோவில் இருக்குமிடம் தெரியாமல்,மண்மேடு அமைத்து கோவிலைமூடிவிட்டனர். காலப்போக்கில் இங்குகோவில் இருந்ததே தெரியாமல்போனது.
- பிற்காலத்தில்(1954), காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள்,இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு,மண்மேட்டுக்குள் இருந்த சந்நிதியைகண்டுபிடித்தார்.
- அருகே இருந்த அம்பாள் சந்நிதிவெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள்விளையாட சென்றார்களாம், ஆனால்எப்போது போனாலும் ஒரு சர்ப்பம்சீறிக்கொண்டு அவர்களைவிரட்டியதாம். கோவில்கண்டுபிடிக்கப்பட்டதையும், சர்ப்பத்தின்சீற்றத்தையும் குறித்து, காஞ்சிமஹாபெரியவாளிடம் தெரிவித்ததைஅடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம்.
- அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர் (17-04-1978), விக்ரஹம் இல்லாதபோதும்சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம்யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாகஅறிந்தார். அதே போல், அங்கே ஒருஅழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது,கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது. இதைக்கண்டபெரியவாள், அங்கிருந்தநெருஞ்சிமுட்களின் ஊடே, தர்ப்பைபாயை விரித்து, அமர்ந்துவிட்டார். 3நாட்களுக்கு அங்கிருந்துவிலகவில்லை. பின்பு, உடனேதிருப்பணி துவங்க அனுக்கிரஹம்தந்தார். காஞ்சியை சேர்ந்த சுப்பையா ஸ்தபதி இதைமேற்கொண்டு செய்தார்.
- திருப்பணி நிறைவடையும் நேரம்,தரைத்தளம் போட தரையை தோண்டியபொழுது, மேலும் ஒரு அம்பாள்சிலையும், அம்பாள் சந்நிதிவிமானத்திற்கும் சுவருக்கும் இடையேவர வேண்டிய மேல் வரிசைசிற்பக்கற்களும் கிடைத்தன.கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும்தந்தையும் சிசுவோடு இருத்தல் எனபலவித சிற்பங்களை கொண்டஅக்கற்களை இன்றும் பிரகாரத்தில்காணலாம். விமானம் எழுப்பப்பட்டகாரணத்தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை.
புதிதாக கிடைத்த அம்பாள்திரிபுரசுந்தரி என்றும், அவள்தான்த்ரிபுராந்தகேஸ்வரஸ்வாமியின் போகசக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்திஐக்கியமான ராஜராஜேஸ்வரிஅம்சமென்றும் பெரியவாளால்தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே சுவாமிசந்நிதிக்குள்ளேயே தெற்கு நோக்கிதிரிபுரசுந்தரி அம்பாளும், தனிபச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடுசுந்தரகாமாக்ஷி அம்பாளும்அருள்கின்றனர். 1984ல் கும்பாபிஷேகம் காஞ்சி புதுப்பெரியவர்கள், கிருபானந்த வாரியார் ஆகியோர் முன்னிலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அம்பாள் ஐக்கிய ரூபத்தில்ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும்கோவில்களில் ( திருவாரூர்,திருநாகேஸ்வரம், சிதம்பரம்)கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம்உண்டு. சாஸ்தா, பைரவர், வீரபத்ரர்என யாராவது இருப்பர்.
- இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத்தலைதந்து, அனுக்கிரஹம் செய்தகோலத்தில் அனுகிரஹ வீரபத்ரர்அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர்சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறுகாணப்படுகிறார்.
- ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும்நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண் ஒருபுறம் தீபம்காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம்காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன.
- சுந்தரகாமாக்ஷி அம்பாள், கிட்டத்தட்ட 6அடி உயரம். கைகளில் பாசாங்குசம்அபய வரதத்தோடு கூடிய பேருக்கேற்றஅழகு சொட்டும் திருமேனி.
- முன்னே லிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம்.அம்பாளுக்கு கால்களுக்கு இடையேத்வாரமும், அதன் மூலம் கொலுசுசார்த்தும் வழியும் உள்ளது.
- அம்பாளுடைய முகலாவண்யம்சொல்லில் அடங்காதது. அங்கேசென்று நின்றுஅனுபவிப்பவர்களுக்கே அதன்உள்ளர்த்தம் புரியும். அபிஷேகத்தில்தலையில் ஜலம் விடும்போது,கண்களை மூடிக்கொள்வது போலவும்,ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களைதிறந்துகொள்வது போலும் காட்டி,அம்பாள் ஜாலம் பண்ணிக்கொண்டேஇருக்கிறாள்.
- அம்பாள் பராசக்தியாக,ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால்,வாசலில் சுவர்களிலும் தூண்களிலும்,கணபதி, ஸ்கந்தர், லட்சுமி, சரஸ்வதி,இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும்அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடுசாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடைசம்பத்கரி என்றும் கொள்ளலாம்)ஆகியவர்கள் காட்சி தருகின்றனர்.சுவர்களின் இடையே ஒரு மாடத்தில்வாழைப்பழம் உரித்துசாப்பிட்டுக்கொண்டு, அம்பாளைநோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்திருக்கும் கோலத்தில்,அமர்ந்திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர்கூட அழகு தான்.
தற்போது பூஜிக்கும் நவீன்குருக்களுடைய தந்தை, சந்திரசேகரகுருக்கள் 10 வயது சிறுபிள்ளையாகஇருந்தபோது, மஹாபெரியவாளிடம், "இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னுபேர்? #காமாக்ஷி #காஞ்சிலேஉக்கார்ந்துண்டு #தானே #இருப்பா? "என்று கேட்டுள்ளார். அவருக்குபெரியவாள் அளித்த பதில்:
"இப்போ, உன் அம்மா எங்கயோஉக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய்தூத்தமோ #காபியோ கேக்கறே... என்னபண்ணுவோ.. #பொறுமையா #இதோ #வரேன்னு சொல்லிட்டு, #எழுந்துவந்துபோட்டுத்தருவோ... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாதுகேட்டுண்டு வர்ற #கொழந்தேளுக்கு,உடனே கொடுத்துடணும் னு #ஆசையாம். அதாவது, #உக்கார்ந்துண்டு #இருக்கறவ #எழுந்துவர்ற #கொஞ்ச #காலதாமதம் #கூடஅவளுக்கு பண்ண #விருப்பம்இல்லையாம். #அதான் #நின்னுண்டுஇருக்கா" .
கேட்டதை கொடுக்க காத்திருக்கும்காமாக்ஷி அம்பிகையை,த்ரிபுராந்தகரை, த்ரிபுரஸுந்தரியைகாண சென்று வாருங்கள். முடிந்த வரைஆலயத்தின் பாதுகாப்புக்கும்,அபிஷேக அலங்காரங்களுக்கும்பொருட்களை தந்து,பணி செய்யுங்கள்.
ஆலயத்தில், நித்யபூஜை, தீபம் ஏற்ற எண்ணெய், சந்தனம் குங்குமம் மற்றும் அபிஷேகப்பொருட்கள் ஆகியவை உள்பட, பல்வேறு கைங்கர்யங்களில் உதவி தேவைப்படுகிறது. செய்ய சக்தியும், மனமும் விருப்பமும் உடைய அன்பர்கள், கீழே தந்துள்ள ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு, அல்லது நேரில் சென்றோ முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
காலம் காலமாக கருணை பொழியும் காமாக்ஷி அம்மை, நம்மை நிச்சயம் கடைத்தேற்றுவாள், வேண்டிய வரம் தருவாள். #காமாக்ஷியைநம்பினோர் #கைவிடப்படார். காப்பது #அவள்கடன்.சுந்தர காமாக்ஷி #சுபிக்ஷம் தரட்டும்!
தொடர்பு விவரங்கள் : ஆலய அர்ச்சகர் நவீன் சுந்தர் குருக்கள் - 9791505077, 9486060120, 9486370223
ஆலயம் தரிசனம் செய்ய செல்லுவோர் அர்ச்சகருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துவிட்டு செல்லவும்.

திருவண்ணாமலை சித்தர்கள்
திருவண்ணாமலை சித்தர்கள்
தெய்வீக சிந்தனை:
திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.
கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது.
அவர் வடிவம் எடுத்தோ அல்லது வடிவம் எடுக்காமல் அரூபமாக கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது.
கார்த்திகை தீபம் நாளன்று அவர் சிலருக்கு காட்சிக் கொடுத்ததாக கூட கூறப்படுவது உண்டு.
அந்த சித்த புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டாலே போதும், நம் பாவங்கள் விலகி, நம் ஆத்மா தூய்மைப் பெற்றுவிடும்.
அது மட்டுமல்ல அந்த சித்தரின் தரிசனப் பாக்கியம் பெற்றவர்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும்.
எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது இடைக்காடர் பற்றி நினைத்தப்படி செல்லுங்கள்.
அவர் ஆசி வேண்டும் என்று கேளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால், நிச்சயமாக இடைக்காடர் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.
இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணா மலையில் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள்.
வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.
எனவே கிரிவலம் செல்லும் போது ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரையும் நினைத்துக் கொண்டே நடந்தால் நல்லது நடக்கும்.
சீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணாமலையில் வாழ்கிறார்.
யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை. கிரிவலம் செல்லும் போது, “ஸ்ரீ உண்ணாமலை சமேத ஸ்ரீ அண்ணாமலை ஈசனே போற்றி” என்று வணங்கி விட்டு “ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம்” என்று சொல்லி பூக்களைத் தூவி வழிபட வேண்டும்.
கிரிவல பக்தர்களின் காலில் அந்த பூக்கள் படாதபடி சாலையோரமாக நன்கு உள்ளே தள்ளி பூக்களை தூவி அந்த சித்தரை நினைத்து வழிபட வேண்டும்.
இப்படி வழிபாடு செய்தால் ஸ்ரீபெத்த நாராயண சித்தர் ஏராளமான நற்பலன்களை அள்ளித்தருவார் என்கிறார்கள். அதுபோல சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார்.
மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும். திருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார்.
மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும்.
மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும்.
இவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும்.
அடுத்த தடவை நீங்கள் கிரிவலம் செல்லும் போது யாராவது ஒரு சித்தர் பற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்து பாருங்கள்.
அடுத்த பவுர்ணமி கிரிவலத்துக்கு நீங்கள் செல்லும் முன்பு நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்து இருக்கும்.
#ஸ்ரீராமஜயம்