Thursday, 26 April 2018

திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது

சபாபதி அளித்த நூற்திரட்டு
~~~~~~~~~~~~~~~~~~~~~
.
சிவபெருமான் பல நூறு ஓலைகளில் தன் கைப்பட எழுதிய திருவாசகம் எப்படி இருக்கும் என்று நாம் நினைப்போம். தில்லையில் சிவத்தொண்டு புரிந்து கொண்டு வாழ்ந்தார் திருவாதவூரார் (எ) மாணிக்கவாசகர். அங்கே தினமும் சொற்பொழிவு கேட்கவரும் முதியவர் ஒருவர் கேட்டுக்கொள்ள திருக்கோவைப்பதிகம் பாடினார். அதையெல்லாம் முதியவராக வந்த ஈசனே எதிரில் அமர்ந்து எழுதியது என்பது மறுநாள் கருவறைமுன் படியில் இருந்த ஓலைகட்டைப் பிரிக்கும்போது தான் தெரிந்தது. அதில் 'திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது' என்று ஈசனே கையொப்பமிட்டதை அனைவரும் படித்தனர். 

நன்றி:-  அருள்மிகு ஆத்மனாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில், திருப்பெருந்துறை.
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை