Thursday, 19 April 2018

சில இயற்கை முறை தீர்வுகள்

#திராவகமும்
#தெளிந்தநீரும்

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

சில நாட்களுக்கு முன் ஒரு அலோபதி மருத்துவர் என்னை கைப்பேசியில் அழைத்து;" வீட்டிற்கு வந்து யோகா கற்றுத்தர முடியுமா? " என்று; கேட்டிருந்தார். சரி என்று அவர் கொடுத்த விலாசத்திற்கு போய்ப் பார்த்தேன் …

உண்மையில் அது ஒரு வீடு போல இல்லை. அவர் மருத்துவ ஆலோசனை வழங்கும் இடம் போல் இருந்தது.
அவருக்கு ஒரு 50 வயதிருக்கும், நல்ல சிகப்பு நிறம், இருந்த கொஞ்சம் முடியை  பக்கவாட்டில்  வகுடெடுத்து சீவி இருந்தார், கணத்த சரீரம், கண்களை சுற்றி கருவளையமும் தடிப்புமாக சற்று வீங்கி இருந்தது. அந்த அறை முதல் மாடியில்  இருந்தது. உடலியல் படங்கள்,குழந்தைகள் படங்கள்,மருந்து கம்பெனிகளின் படங்கள் பலதும் சுவரை நிறைத்திருந்தது. மருத்துவர் தலைக்கு மேலிருந்த சுவரில்  இயேசு கிழிந்த அங்கியோடு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

டாக்டர்: " வாங்க இடத்தை கண்டுப்பிடிக்க சிரமப்பட்டீர்களா?

நான்: 'இல்லை எளிதாக வந்துவிட்டேன், இது வீடு போல இல்லையே? '

 "ஆமா,இது கிளினிக். வீடு மேலே இருக்கிறது.
எனக்கு கொஞ்சம் தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி போன்ற சில கோளாறுகள் உள்ளது. யோகாவில் சரியாகுமா?"

 'நிச்சயமா,நாம சில பயிற்சிகளையும்,வாழ்க்கை முறையையும் கற்றுத் தருவோம். அதிலேயே உங்கள் பிரச்சனைகள் சரியாகி விடும்.'

"எப்படி என்று, கொஞ்சம் விளக்க முடியுமா?"

'நிச்சயமா,யோகாவை பொறுத்தவரை தூக்கமின்மைக்குக் காரணம் ஓயாத எண்ணங்கள் தான். மனதை காலி செய்து விட்டால் தேவையற்ற  எண்ணங்களே வராது. அதற்கு ஜானுசீராசனம்,அதோமுகாசனம்,விபரீதகரணி ஆசனம், நாடிசுத்தி மூச்சுப்பயிற்சி,மந்திர மூச்சு,தாரணை தியானம் போன்றவற்றை கற்றுத்தருவோம் அதிலேயே நரம்புகளுக்கும் தேவையான ஓய்வு கிடைக்கும். பயிற்சியை ஆரம்பிக்கலாமா?'

"இல்லை,இன்னும் கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா? "

'விரிவா சொல்லணும்னா,  ஒரு மணி நேரம் போதாது. நாம பயிற்சியை ஆரம்பித்து விடுவோம். பிறகு பயிற்சியே உங்களுக்கு பல விசயங்களை விரிவா சொல்லும்'
இப்படி; நான் கூறியதும் அவர் என்னை நோக்கி அடுத்தக் கேள்வியை தொடுத்தார்.

"யோகானா என்ன" என்பதே அவருடைய அடுத்தக் கேள்வியாய் இருந்தது. இதைக் கேட்டதும் எனக்கு  இது போன்ற அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்ளவா? நம்மை அழைத்தார். கூகுளில் அடித்தாலே யோகானா என்ன, அது எப்படி வேலை செய்யும், அதற்கு அப்பன் யாரு என்பதெல்லாம் இருக்குமே.! என்று எண்ணியபடியே …

' முதலில் பயிற்சியை ஆரம்பித்து விடுவோம் சார். நான் 'மஹாயோகா,இயற்கை வழிகாட்டி,ஆதிமருத்துவம்' அப்படின்னு சில புத்தகங்களையும் எழுதிருக்கேன். அதுல யோகானா என்ன,இயற்கைனா என்ன,அலோபதினா என்ன என்பது பற்றியெல்லாம் எழுதி இருக்கேன்.'

"என்னது … அலோபதி மருத்துவம் பற்றியும்  எழுதி உள்ளீர்களா, நீங்க டாக்டரா? "

'இல்லீங்க,யோகா தெரபிஸ்ட் '

"அப்ப அலோபதி பற்றி எப்படி எழுதுனீங்க?"

'அய்யா, உடலில் உள்ளவை அத்தனையும் செல்கள்தான், செல்களைப் பலப்படுத்தவும் இறந்த செல்கள் முறையாக வெளியேறவும் வழியை ஏற்படுத்திவிட்டு,மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் எல்லா வியாதிகளையும் உடல் தானே குணப்படுத்தும். என்பதே இயற்கை. உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளது,அதில் ஆயிரக்கணக்கான நரம்புகள் உள்ளன,உடலில் கெட்டக்கிருமிகள்,வைரஸ்கள் புகுவதாலேயே பெரும்பாலான நோய்கள் உருவாகிறது. அதனால் ஆன்ட்டி பயாடிக்,ஆன்ட்டி பாக்டீரியா,இரசாயண மாத்திரை,மருந்துகளை கொடுத்தால் மட்டுமே குணம் கிடைக்கும்  என்பது.அலோபதி முறை'

"உடலில் செல்கள் மட்டுமே உள்ளதா? அப்ப இதயம்,கிட்னி,நுரையீரல்,குடல் இதெல்லாம் இல்லையா?"

'அதெல்லாம் இருக்கு ஆனா இல்ல.முதலில் தந்தையின் விந்தணுவில் உள்ள செல்களும் தாயின் கரு முட்டையில் உள்ள செல்களும் சேர்ந்து அதற்கு கிடைத்த ஊட்டம்,பாதுகாப்பு,மாற்றம் என்று  ஒவ்வென்றாக பெருகி பல உறுப்புகளாக மாறி பிறகு மனிதனாக பிறந்தோம். கிட்னி,நுரையீரல்,உடல் எல்லாமே செல்கள் மட்டுமே அதனால் செல்லுக்கு ஊட்டமும் பாதுகாப்பும் கிடைத்தால் அது தானே வளரும், அப்படி கிடைக்காவிட்டால் அது தானே அழியும். அதனால்,எந்த உறுப்பிலும் நோயில்லை. செல்லைப் புதுப்பிக்கும் ஆற்றல் உள்ளவரை உடல் இயங்கும். அந்த ஆற்றல் இல்லாத போது மரணம் வரும்.'

" நீங்க சொல்றது இல்ல,
செல்கள் பல உறுப்புகளாய் மாறியாச்சி,அதற்கென தனித்தனி உள்ளீடுகள் உண்டு. அந்தந்த இடத்தைத் தாக்கும் வைரஸ்களும் நோய்களும் உண்டு.அதைத் தடுக்கவே மருந்து,மாத்திரை,ஊசி எல்லாம் போடுகிறோம். அப்படி செய்யாவிட்டால் கருப்பிடித்த சில நாட்களிலேயே அது சிதைந்து வெளியேறி விடும் வாய்ப்பு உண்டு. வளர்ந்த மனிதனுக்கு வரும் நோய்களிலும் கூட, அந்தந்த உறுப்புகளில் உள்ள வைரஸ்தொற்று,பலவீனம்,நரம்புக்கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய பல்வேறு ஆராய்ச்சியும்,ஆன்ட்டி பாக்டீரியாக்களும் மருந்தும் தேவை.  இல்லாவிட்டால், பிறந்து வளர்ந்த மனிதனின் ஆயுள் 30 வயதுக்குள் முடிந்து விடும். "

'ஓ.! அப்போ,அலோபதி மருத்துவ முறை எல்லாம் இங்கு வராத நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவங்க எல்லாம் பொய்னு சொல்லுவீங்களோ,இன்னும் நாங்கதான் போலியோவை ஒழிச்சோம்,தொழுநோயை ஒழிச்சோம்,நாங்கதான் மக்களை ஆரோக்கியமா வழவைக்கிறோம்னு;
அலோபதி முறையினர் வழக்கமா சொல்வதை நீங்களும் சொல்வீங்க போல.! ஹ ஹ்ஹா.! '

என்று கூறி நான் சிரித்ததும் … சட்டென்று ஆங்கிலத்தில் இன்னும் "காட்டானாதான் வாழ்றீங்க"
என்று; கூறி மேலும் சில ஆங்கில வாக்கியங்களை உதிர்த்தார். அதாவது நான் ஆபத்தான மனிதன் என்றும், எனக்கு நிறைய அறிவு தேவைப்படுகிறது என்பதாகவும்
அதன் அர்த்தம் இருந்தது. உடனே நானும் ஆங்கிலத்தில் என்னால் உங்கள் உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், தமிழில் பேசினால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்வேன்.என்றதும் சட்டென்று

 "நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்றார்;

'யோகாதெரபி'

"சரி உங்களுக்கு யோகாதெரபியில்
உடலியல் செயல்பாடு,பாக்டீரியா,நரம்பு மண்டலம் பற்றியெல்லாம் பாடங்கள் இருக்கிறதா?"

'ஏங்க,நாங்க நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா?,
அடிப்படை உடலியக்கம்,நோய்களுக்கான காரணங்கள்,அவற்றை குணப்படுத்தும் யோகா,இயற்கை உணவு,மூலிகை உள்ளிட்ட வழிமுறைகளே எங்களுக்கான முக்கிய பாடங்கள். இரசாயண உணவு,இரசாயண மருந்து,தடுப்பூசி போன்றவைகளின் தீங்கு மற்றும் அவைகள் ஏற்படுத்தும் நோய்கள் பற்றியும் உப பாடங்கள் உண்டு'

"மருந்துகளும்,உணவும்,தடுப்பூசியும் நோய்களை உருவாக்கும்; என்றா படித்து தருகிறார்கள்? அது பற்றி இன்னும் தெளிவாக சொல்ல முடியுமா?"

'இல்லீங்க,தற்போது எனக்கு நேரம் இல்லை. உங்களுக்கான ஒரு மணி நேரத்தில் 40 நிமிடங்கள் கழிந்துவிட்டது. அடுத்தது கோட்டாரில் ஒரு பக்கவாத நோயாளிக்கு பயிற்சி கொடுக்கப் போகணும்.,வேண்டுமானால் எனது
நூல்களை தருகிறேன்' என்றபடி எனது கைப்பையைத் திறந்து அதிலிருந்து 'இயற்கை வழிகாட்டி' என்ற, நான் இலவசமாக கொடுக்கும் நூலை எடுத்து ,அவரிடம் கொடுத்து விட்டு கிளம்ப ஆயத்தமானேன். உடனே அவர்  …
 "பக்கவாதம்,இதயநோய்,கேன்சர்,டெங்கு,சிக்கன் குணியா,வைரஸ் நோய்கள் எல்லாத்தையும் யோகா செய்தே சுகமாக்கலாமோ?"

'நிச்சயமா.! உடல்,மனம் சார்ந்த பயிற்சிகள் பாதியும் உணவு,மூலிகை மருந்துகளை மீதியும் கொடுத்து எந்த நோயையும் குணப்படுத்தவோ,கட்டுப்படுத்தவோ செய்வோம்'

"நீங்க ஒரு மருத்துவரோட வேலையை செய்வதாய் சொல்றீங்க?, இது தப்பில்லையா? "

'ஹ ஹ் ஹா.! நான் அலோபதி மருத்துவர் செய்ற எந்த வேலையையும் செய்யல,சித்தா படித்த மருத்துவர் செய்ற வேலையையும் நாம செய்யல.
இயற்கையின் வழி தனியானது.
எங்களுக்கு ரிப்போர்ட்,இரசாயண மருந்து,தடுப்பூசிகள் எதுவும் தேவையே இல்லை. கழிவு வெளியேற்றமும் இயற்கை வாழ்வியலும் எல்லாத்தையும் சீராக்கும். உணவு முறை,வாழ்க்கை முறை சீராக இருப்பவர்களுக்கு எந்த வைரஸ் நோய் உள்ளிட்டவைகளும் வராது.
இந்த அடிப்படை உண்மையை எவ்வளவு லேட்டா புரிஞ்சிகிட்டாலும் பரவாயில்ல. இயற்கை குணப்படுத்தும் நமக்கு நாமே கூட இதை செய்து  குணப்படுத்தலாம்.'

"இல்லை நீங்க தவறான நம்பிக்கைல இருக்கீங்க,உடலில் தீமை செய்கிற பாக்டீரியாக்கள் கோடிகோடியாய் பெருகி மனிதனின் உள்ளுறுப்புகளை செயலிக்க செய்து மரணத்தை ஏற்படுத்திவிடும். அதை தடுக்கவே ஊசி,மருந்து எல்லாம் தேவைப்படுகிறது"

'நீங்க கூறுவது சரியில்லிங்க, மனிதனின் உடலில் பெருகும்,கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் உடல் தனது தேவையின் பொருட்டு தானே உருவாக்குகிறது.பிறகு தனது தேவை முடிந்ததும் அவற்றை உடல் தானே அழித்து விடும். ஒவ்வெரு நாளும் உடலில் பல கோடி இறந்த செல்கள் உடலை விட்டு சுயமாகவே வெளியேறி விடுகின்றன. இதற்கு எந்த மருந்து மாத்திரையும் தேவையில்லை.
அப்படியே உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் உடலில் புகுந்து விட்டால் கூட உடலில் உள்ள நோயெதிர்ப்பு கருவிகளான மண்ணீரல்,தைமஸ்,பித்தநீர் போன்றவை அவற்றை உடனே முனைந்து அழித்து  விடும்.'

"அப்டின்னா,எந்த நோயும் மனிதனை தாக்காது. இதுவரை செய்த ஆராய்ச்சிகள்,தடுப்பூசிகள் அத்தனையும் வீண்,பன்றிகளைப் போல மனிதன் குளிக்காம, சுத்தமில்லாம இருந்தாலும் நோய் வராது அப்படின்னு சொல்றீங்க?"

'நிச்சயமா, ஒரு குறிப்பிட்ட அளவு வரை மனிதன் சுத்தமில்லாமல்,சரியான உணவில்லாமல், இருப்பதோடு தினமும் பல மில்லியன் கிருமிகளையும் ஊசிமூலம் மனிதனின்  உள்ளே செலுத்தினாலும் உடனே மரணமோ நோயோ ஏற்படாது. ஏன்னா,மனித உடலியக்கம் தனது புதுப்பிக்கும் ஆற்றலால் எல்லாக் கழிவுகளையும் தொடர்ந்து சுத்திகரித்துக் கொண்டே இருக்கிறது. அதோடு உடலில் நோய்த்தன்மை அதிகரிக்கும் போது உடல் அதிலிருந்து மீள தானே உள்ளிருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.என்பதே உண்மை.! இந்த உண்மையின் அடிப்படையிலேயேபிறந்தது முதலே குழந்தைகளின் உடலில்  பல்வேறு நோய்க்கிருமிகளை செலுத்தியும், பெரும்பாலான குழந்தைகள் மரணமடையாமல்இருக்கிறது. ஆனால்,தேவையில்லாமல் உடல் நோயெதிர்ப்பு ஆற்றலோடு விளையாடும் இந்தப்போக்கு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளை வாழ்நாள் நோயாளிகளாக, நோஞ்சான்களாக  மாற்றுகிறது. சீசனில் பரவும் வைரஸ் நோய்,தொற்று நோய் போன்றவை மரபியல் காரணமாக  பலவீனமாக இருக்கும் லட்சத்தில் ஒருவரையே பிடிக்கும். அந்த ஒருத்தரை கண்டுப்பிடிக்கத் திராணி இல்லாமல் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் நோய்க்கிருமி களையே தடுப்பூசியாகப் போட்டு விடுவது தேவையில்லாத வேலை. இப்படி செய்வதால் குழந்தையின் இயல்பான நோயெதிர்ப்பு ஆற்றல் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு சொல்லனும்னா - "இந்த உலகத்தில் நிறைய கெட்டவர்கள் இருக்கிறார்கள்,அவர்களால் எனது பிள்ளை எதிர்காலத்தில் அடித்து,உதைத்து,துன்புறுத்தப்படும்; ஏன், அவர்களால் என் குழந்தை, உயிரையே கூட இழக்க நேரிடலாம். அதனால்,நானே நாள்தோறும்  கம்பு,கம்பி,கட்டை, சவுக்கு,கத்தி போன்ற ஆயுதங்களால் என் பிள்ளையை தினமும் அடித்து,துன்புறுத்தி,சித்ரவதை செய்து பழக்கிவிட்டால், என் குழந்தைக்கு இவற்றில் இப்பொழுதே நல்ல பரிச்சயம் வந்து விடுவதால், எதிர்காலத்தில் எந்த கொலைகாரனின்,கொள்ளைக்காரனின் தாக்குதலுக்கும் என் பிள்ளை அஞ்சியோ,அடிபட்டோ சாகவே மாட்டான்".என்று; ஒரு பெற்றோர் நினைத்தால்;அது எப்படி ஒரு பெரிய மனவியாதியாய் இருக்குமோ - அதே போன்ற ஒரு வியாபார மனவியாதியே தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களுக்கும், அலோபதி மருத்துவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.'
இப்படி நான் கூறியதும்; வாய்விட்டு பத்து பதினைந்து விநாடிகள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார். பிறகு …

 "அப்ப நீங்க ஊசி,மாத்திரை,மினரல் வாட்டர் எதுவும் எடுக்கவும் மாட்டீங்க, யாருக்கும் பரிந்துரை செய்யவும் மாட்டீங்க இல்லையா?"

'நிச்சயமா.! நானாவது பரவாயில்ல என்னோட குரு ஒருத்தரிடம் உங்களைப் போல அறிவாளிகள் சிலர்; "உங்கள் சீடர்கள் பலரும் கையைக் கழுவாமல் உணவு உண்கிறார்களே, இது அவர்களை அசுத்தப்படுத்தாதா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவரோ; மனிதனின் உள்ளிருந்து வரும் களவு,விபச்சாரம்,பொறாமை போன்ற தீய எண்ணங்களே அவனை அசுத்தப்படுத்தும்.,கை கழுவாமல் உணவு உண்பதால் எந்த அசுத்தமும் ஏற்படாது" என்றிருக்கிறார். இப்படி நான் கூறியதும், அமர்ந்திருந்தவர் எழுந்து எனது கைகளைப் பிடித்து தனது நெற்றியில் வைத்துக் கொண்டு ஒரிரு விநாடிகள் நின்றார்.பிறகு மெலிதாக சிரித்துக்கொண்டே
"உங்கள் குருவின் பெயர் இயேசு நாதரா? இது பைபிள் சம்பவமாயிற்றே.! என்றதோடு,நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. வைரஸ், நோய்கள்,சாதிமதபாகுபாடுகள் என்று மக்களைச்சுற்றி பல பிரச்சனைகளை உருவாக்கி வைத்து, ஒரு சிலர் தங்கள் ராஜ்ஜியத்தை இங்கு நடத்தி வருகிறார்கள். ஆனாலும், இவையெல்லாம் காணாமல் போகும். உண்மை இறைவனான இயற்கையின் ஞானமே என்றும் நிலைக்கும்."
என்று கூறியதோடு, "நாளைக்கு  நாம் யோகா பண்ணலாம் "என்று என்னை வழி அனுப்பி வைத்தார்.!
நிறைவில் நான் கூறிய பைபிள் வார்த்தைகள் அவருக்குள் ஒரு புதிய மாற்றத்தை கொடுத்ததை என்னால் உணர முடிந்தது. என்னிடம் யோகா தெரபி பயின்றவர்களில்  அலோபதி மருத்துவர்களே அதிகம். நாகர்கோவிலில்  உள்ள ஆங்கில மருத்துவர்கள் சங்கத்தில் கூட சில நாட்கள் வகுப்புகளை நடத்தி உள்ளேன். அப்பொழுதெல்லாம் கூட, இது போன்ற கருத்து பரிமாற்றங்கள் நடந்ததில்லை. எளிய மூலிகைகளை பற்றி சிறிதாக சொல்லி கடந்து விடுவேன். அதுதான் நமக்கும்
நல்லது அவர்களுக்கும் நல்லது. அவரவர் ஞானம் அவரவர்களுக்கு உயர்வுதானே? ஆனாலும், இயற்கையை நோக்கி வரும் இரசாயண மருத்துவர்களின் வேகம் இயற்கையின் ஆற்றலை மேலும் அதிகரிக்கிறது. மற்றபடி யாரிடமும் விவாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை.பைபிளில் மட்டுமல்ல கீதையிலும்,குரானிலும் தமிழ் இலக்கியங்களிலும் எவ்வளவோ மருத்துவ  உண்மைகளை முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர். ஆனால்,நாம் நவீன ஆராய்ச்சி என்று கூறி அமெரிக்க வியாபாரிகள் கூறும் பொய்களை உலகமெல்லாம் பரப்பிவிட்டு உண்மை ஞானத்தை அழித்து  வருகிறோம்.  லூயி பாயிஸ்டர் என்ற ஆய்வக ஊழியர் கண்டறிந்த  கிருமி  என்ற ஒற்றைப் பூச்சாண்டியையும் இன்னும் உடல் பருமன்,சக்கரை,இரத்த அழுத்தம்,கொழுப்பு,தைராக்சின் போன்ற குட்டிச் சாத்தான்களையும் தங்களுக்கு துணையாக வைத்துக்கொண்டு அலோபதியும் அதை வழிமொழியும்  இந்திய மருத்துவத் துறையும் மக்களை பயம் காட்டி, எப்பொழுதும் தங்கள் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் அடிமையாக வைத்துள்ளனர். இந்த பூதத்தையும் குட்டிச்சாத்தான்களையும் வழிபடும் வரையில் ஆரோக்கிய சாம்ராஜ்யம் இந்த மண்ணில் தோன்றுவதற்கு வழியே இல்லை. மேற்கண்ட சிக்கல்கள் எல்லாம் இல்லையென்று நாம் சொல்லவில்லை. அப்படி சக்கரை,இரத்த அழுத்தம் போன்றவை ஏற்றத்தாழ்வுடன் இருப்பதும்  இயல்புதான். அதை அனைவரும் ஒரே நிலையில் வைக்க முயல்வது பைத்தியக்காரத்தனம். மாறாக எப்பொழுதுமே நமது வாழ்க்கை முறையையும் உணவு முறையும் சீராக்கிக் கொண்டால் வாழ்வே ஆரோக்கியமாகி விடும். இந்த உண்மையை அலோபதி மருத்துவ முறையினரே  மக்களிடம் பரப்ப வேண்டும்.அதை விடுத்து,நாங்கள் தான் போலியோ உள்ளிட்டவற்றை ஒழித்தோம் என்ற பொய்யை தொடர்ந்து பரப்பினால்,இன்று பெருகி உள்ள கேன்சர்,சக்கரை,இரத்த அழுத்தம்,தைராய்டு போன்ற நோய்களையும் நாங்கள் தான் உருவாக்கினோம்,நாங்கள் தான் அதை இன்னும் ஒழிக்காமல் வைத்துள்ளோம்;"
என்ற உண்மையையும் அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டி வரும்.ஒரு கை நல்ல உணவும்,உடல் உழைப்பும்,ஓய்வும்,பிராண சக்தியும்,சீரான மனநிலையும்,வாழ்க்கை முறையும் உடலில் உள்ள கை,கால், கண்,கிட்னி  என்று எந்த தனிப்பட்ட உறுப்பையும் பலப்படுத்தவில்லை. மாறாக அவை ஒட்டுமொத்த செல்களையும் பலப்படுத்தி முழு உயிரையுமே  ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கைகால்,கண்,காது,வயிறு என்று தனித்தனி உறுப்புகளுக்கு சிகிட்சை செய்யும் முட்டாள்த் தனத்தையாவது முதலில் நிறுத்த வேண்டும். உறுப்புக்கான சிறப்புக் கல்வி,சக்கரை,இரத்த அழுத்தம் போன்றவை அறுவை சிகிட்சை நேரத்தில் உதவுவதற்காய் கண்டறியப்பட்டவை. மருத்துவருடனான இந்த வகுப்பு நடைபெறா விட்டாலும் கூட, இருவரின் கருத்துகளும் கடினம் இல்லாமல் கடந்து போனதில் ஒரு திருப்தி.!
ஆனால்,அடுத்தநாள் அவரும் என்னை பயிற்சிக்கு அழைக்கவில்லை நானும் அங்கு செல்லவில்லை.!

- ஆதிமருத்துவம்
ஏகப்பிரியன் DYT
(இயற்கை வாழ்வியல் நிபுணர்)

aumherbals.blogspot.com